புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூக்கம் விற்ற காசுகள் Poll_c10தூக்கம் விற்ற காசுகள் Poll_m10தூக்கம் விற்ற காசுகள் Poll_c10 
64 Posts - 50%
heezulia
தூக்கம் விற்ற காசுகள் Poll_c10தூக்கம் விற்ற காசுகள் Poll_m10தூக்கம் விற்ற காசுகள் Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
தூக்கம் விற்ற காசுகள் Poll_c10தூக்கம் விற்ற காசுகள் Poll_m10தூக்கம் விற்ற காசுகள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தூக்கம் விற்ற காசுகள் Poll_c10தூக்கம் விற்ற காசுகள் Poll_m10தூக்கம் விற்ற காசுகள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தூக்கம் விற்ற காசுகள் Poll_c10தூக்கம் விற்ற காசுகள் Poll_m10தூக்கம் விற்ற காசுகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தூக்கம் விற்ற காசுகள் Poll_c10தூக்கம் விற்ற காசுகள் Poll_m10தூக்கம் விற்ற காசுகள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தூக்கம் விற்ற காசுகள் Poll_c10தூக்கம் விற்ற காசுகள் Poll_m10தூக்கம் விற்ற காசுகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூக்கம் விற்ற காசுகள் Poll_c10தூக்கம் விற்ற காசுகள் Poll_m10தூக்கம் விற்ற காசுகள் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூக்கம் விற்ற காசுகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu May 19, 2011 3:40 pm

இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை
வந்தவனுக்கோ சென்று விட ஆசை
இதோ அயல்தேசத்து ஏழைகளின்
கண்ணீர் அழைப்பிதழ்!

விசாரிப்புகளோடும்
விசா அரிப்புகளோடும் வருகின்ற
கடிதங்களை நினைத்து நினைத்து
பரிதாபப்படத்தான் முடிகிறது!

நாங்கள் பூசிக்கொள்ளும்
சென்டில் வேண்டுமானால்…
வாசனைகள் இருக்கலாம்!
ஆனால் வாழ்க்கையில்…?

தூக்கம் விற்ற காசில்தான்…
துக்கம் அழிக்கின்றோம்!
ஏக்கம் என்ற நிலையிலேயே…
இளமை கழிக்கின்றோம்!

எங்களின் நிலாக்கால
நினைவுகளையெல்லாம்…
ஒரு விமானப்பயணத்தூனூடே
விற்றுவிட்டு கனவுகள்
புதைந்துவிடுமெனத் தெரிந்தே
கடல் தாண்டி வந்திருக்கிறோம்!

மரஉச்சியில் நின்று
ஒரு தேன் கூட்டை கலைப்பவன் போல!
வாரவிடுமுறையில்தான்..
பார்க்க முடிகிறது
இயந்திரமில்லாத மனிதர்களை!

அம்மாவின் ஸ்பரிசம்
தொட்டு எழுந்த நாட்கள்
கடந்து விட்டன!
இங்கே அலாரத்தின் எரிச்சல் கேட்டு
எழும் நாட்கள் கசந்து விட்டன!

பழகிய வீதிகள் பழகிய நண்பர்கள்
கல்லூரி நாட்கள் தினமும் ஒரு இரவு
நேர கனவுக்குள் வந்து வந்து
காணாமல் போய்விடுகிறது!

நண்பர்களோடு ஆற்றில்
விறால் பாய்ச்சல்
மாட்டுவண்டிப் பயணம்
கண்ணாமூச்சி – பம்பரம் – கோலி – பட்டம் என
சீசன் விளையாட்டுக்கள்!

ஒவ்வொரு
ஞாயிற்றுக்கிழமையாய் எதிர்பார்த்து…
விளையாடி மகிழ்ந்த உள்ளுர்
உலககோப்பை கிரிக்கெட்!

இவைகளை
நினைத்துப்பார்க்கும்போதெல்லாம் …
விசாவும் பாஸ்போட்டும் வந்து…
விழிகளை நனைத்து விடுகிறது.!

வீதிகளில் ஒன்றாய்
வளர்ந்த நண்பர்களின் திருமணத்தில்!
மாப்பிள்ளை அலங்காரம்!
கூடிநின்று கிண்டலடித்தல்!
கல்யாணநேரத்து பரபரப்பு!

பழையசடங்குகள்
மறுத்து போராட்டம்!
பெண்வீட்டார் மதிக்கவில்லை
எனகூறி வறட்டு பிடிவாதங்கள்!

சாப்பாடு பரிமாறும் நேரம்…
எனக்கு நிச்சயித்தவளின் ஓரப்பார்வை!
மறுவீடு சாப்பாட்டில்
மணமகளின் ஜன்னல் பார்வை!

இவையெதுவுமே கிடைக்காமல்
“கண்டிப்பாய் வரவேண்டும்”
என்ற சம்பிரதாய அழைப்பிதழுக்காக…
சங்கடத்தோடு
ஒரு தொலைபேசி வாழ்த்தூனூடே…
தொலைந்துவிடுகிறது
எங்களின் நீ..ண்ட நட்பு!

எவ்வளவு சம்பாதித்தும் என்ன?
நாங்கள் அயல்தேசத்து ஏழைகள்தான்!

காற்றிலும் கடிதத்திலும்
வருகின்ற சொந்தங்களின்…
நண்பர்களின் மரணச்செய்திக்கெல்லாம்
அரபிக்கடல் மட்டும்தான்…
ஆறுதல் தருகிறது!

ஆம்
இதயம் தாண்டி
பழகியவர்களெல்லாம்…
ஒரு கடலைத்தாண்டிய
கண்ணீரிலையே…
கரைந்துவிடுகிறார்கள்;!

“இறுதிநாள்” நம்பிக்கையில்தான்…
இதயம் சமாதானப்படுகிறது!
இருப்பையும் இழப்பையும்
கணக்கிட்டுப் பார்த்தால்
எஞ்சி நிற்பது இழப்பு மட்டும்தான்…

பெற்ற குழந்தையின்
முதல் ஸ்பரிசம் முதல் பேச்சு…..
முதல் பார்வை… முதல் கழிவு…
இவற்றின் பாக்கியத்தை
தினாரும் – திர்ஹமும்
தந்துவிடுமா?

கிள்ளச்சொல்லி
குழந்தை அழும் சப்தத்தை…
தொலைபேசியில் கேட்கிறோம்!

கிள்ளாமலையே
நாங்கள் தொலைவில் அழும் சப்தம்
யாருக்குக் கேட்குமோ?

ஒவ்வொருமுறை ஊருக்கு
வரும்பொழுதும்…
பெற்ற குழந்தையின்
வித்தியாச பார்வை…
நெருங்கியவர்களின் திடீர்மறைவு

இப்படி புதிய முகங்களின்
எதிர்நோக்குதலையும்…
பழையமுகங்களின்
மறைதலையும் கண்டு…
மீண்டும்

அயல்தேசம் செல்லமறுத்து
அடம்பிடிக்கும் மனசிடம்…..
தங்கையின் திருமணமும்…
தந்தையின் கடனும்…
பொருளாதாரமும் வந்து…
சமாதானம் சொல்லி அனுப்பிவிடுகிறது
மீண்டும் அயல்தேசத்திற்கு!

சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா…
இப்படிக்கு துக்கங்களை தொலைக்க முயற்சிக்கும்


அன்புடையீர் இக்கவிதை நான் பல தளங்களில் வாசித்துவிட்டேன்
இதன் தலைப்பு பெற்றுள்ள வீரியம் கவிதையை படிக்கும் பொது கொஞ்சம் கூட குறையவில்லை.
இக்கவிதை எழுதியவர் ரசிகவ் ஞானியார் என்பவர்.
படிக்கும்போது மனதை என்னவோ செய்கிறது.
பகிர்வதில் பெருமைப்படுகிறேன்.



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தூக்கம் விற்ற காசுகள் Aதூக்கம் விற்ற காசுகள் Bதூக்கம் விற்ற காசுகள் Dதூக்கம் விற்ற காசுகள் Uதூக்கம் விற்ற காசுகள் Lதூக்கம் விற்ற காசுகள் Lதூக்கம் விற்ற காசுகள் Aதூக்கம் விற்ற காசுகள் H
vvijayarani
vvijayarani
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 17/05/2011

Postvvijayarani Thu May 19, 2011 4:16 pm

அருமையான வரிகள்! இதயத்தை ஒன்றுசேர்த்து பிழிகின்றது! வாழ்த்துக்கள் தூக்கம் விற்ற காசுகள் 224747944

Thiraviamurugan
Thiraviamurugan
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011

PostThiraviamurugan Thu May 19, 2011 4:21 pm

நல்ல பகிர்வு.உள்ளத்தின் உண்மையான வெளிப்பாடு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 19, 2011 4:25 pm

தூக்கம் விற்ற காசுகள்

http://www.eegarai.net/t8854-topic
http://www.eegarai.net/t8858-topic
http://www.eegarai.net/t55018-topic
http://www.eegarai.net/t32127-topic
http://www.eegarai.net/t4320-topic
http://www.eegarai.net/t11384-topic
http://www.eegarai.net/t7780-topic
http://www.eegarai.net/t7060-topic
http://www.eegarai.net/t41160-topic

மீண்டும் பகிர்ந்தமைக்கு நன்றி!



தூக்கம் விற்ற காசுகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu May 19, 2011 5:12 pm

அருமையான வரிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu May 19, 2011 9:15 pm

அடேயப்பா இத்தனை பதிவுகளா!
சுட்டிக்காட்டியமைக்கு நன்றி சிவா.
நான் புதியவன் தானே
படித்தவுடன் பகிர்ந்து விட்டேன் பரிசீலிக்கவில்லை



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தூக்கம் விற்ற காசுகள் Aதூக்கம் விற்ற காசுகள் Bதூக்கம் விற்ற காசுகள் Dதூக்கம் விற்ற காசுகள் Uதூக்கம் விற்ற காசுகள் Lதூக்கம் விற்ற காசுகள் Lதூக்கம் விற்ற காசுகள் Aதூக்கம் விற்ற காசுகள் H
avatar
Guest
Guest

PostGuest Thu May 19, 2011 9:23 pm

அருமை., நலம் அறிய ஆவல் அண்ணா தூக்கம் விற்ற காசுகள் 677196

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 19, 2011 9:25 pm

கரெக்ட் நானே இதை சொல்ல நினைத்தேன்...
சமர்த்து சிவா புன்னகை டாபிக் டைட்டில் கொடுத்தாச்சு.....
இந்த கவிதையை பலமுறைநான் இங்கயே வாசிச்சிட்டேன்

அருமையான வரிகள்...

எழுதியவர் ஈகரையை பார்த்தாரா? பார்த்தால் நலம்..... அவருடைய வரிகள் இன்னும் காணலாம்.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தூக்கம் விற்ற காசுகள் 47
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu May 19, 2011 9:27 pm

நலமே தங்களின் பின்னூட்டத்திற்க்கு நன்றி தங்களை அறிமுகம் செய்யுங்கள் தங்களை அறிய விரும்புகிறேன்.



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தூக்கம் விற்ற காசுகள் Aதூக்கம் விற்ற காசுகள் Bதூக்கம் விற்ற காசுகள் Dதூக்கம் விற்ற காசுகள் Uதூக்கம் விற்ற காசுகள் Lதூக்கம் விற்ற காசுகள் Lதூக்கம் விற்ற காசுகள் Aதூக்கம் விற்ற காசுகள் H
avatar
Guest
Guest

PostGuest Thu May 19, 2011 9:29 pm

நான் கருப்பமூப்பன் உதுமான் .,கல்வத்து நாயகம் தெரு அண்ணா.,

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக