புதிய பதிவுகள்
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரண குறிப்புகள் - அ. முத்துலிங்கம்  Poll_c10மரண குறிப்புகள் - அ. முத்துலிங்கம்  Poll_m10மரண குறிப்புகள் - அ. முத்துலிங்கம்  Poll_c10 
73 Posts - 46%
heezulia
மரண குறிப்புகள் - அ. முத்துலிங்கம்  Poll_c10மரண குறிப்புகள் - அ. முத்துலிங்கம்  Poll_m10மரண குறிப்புகள் - அ. முத்துலிங்கம்  Poll_c10 
70 Posts - 44%
mohamed nizamudeen
மரண குறிப்புகள் - அ. முத்துலிங்கம்  Poll_c10மரண குறிப்புகள் - அ. முத்துலிங்கம்  Poll_m10மரண குறிப்புகள் - அ. முத்துலிங்கம்  Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
மரண குறிப்புகள் - அ. முத்துலிங்கம்  Poll_c10மரண குறிப்புகள் - அ. முத்துலிங்கம்  Poll_m10மரண குறிப்புகள் - அ. முத்துலிங்கம்  Poll_c10 
4 Posts - 3%
M. Priya
மரண குறிப்புகள் - அ. முத்துலிங்கம்  Poll_c10மரண குறிப்புகள் - அ. முத்துலிங்கம்  Poll_m10மரண குறிப்புகள் - அ. முத்துலிங்கம்  Poll_c10 
1 Post - 1%
eraeravi
மரண குறிப்புகள் - அ. முத்துலிங்கம்  Poll_c10மரண குறிப்புகள் - அ. முத்துலிங்கம்  Poll_m10மரண குறிப்புகள் - அ. முத்துலிங்கம்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மரண குறிப்புகள் - அ. முத்துலிங்கம்  Poll_c10மரண குறிப்புகள் - அ. முத்துலிங்கம்  Poll_m10மரண குறிப்புகள் - அ. முத்துலிங்கம்  Poll_c10 
1 Post - 1%
Kavithas
மரண குறிப்புகள் - அ. முத்துலிங்கம்  Poll_c10மரண குறிப்புகள் - அ. முத்துலிங்கம்  Poll_m10மரண குறிப்புகள் - அ. முத்துலிங்கம்  Poll_c10 
1 Post - 1%
சிவா
மரண குறிப்புகள் - அ. முத்துலிங்கம்  Poll_c10மரண குறிப்புகள் - அ. முத்துலிங்கம்  Poll_m10மரண குறிப்புகள் - அ. முத்துலிங்கம்  Poll_c10 
1 Post - 1%
bala_t
மரண குறிப்புகள் - அ. முத்துலிங்கம்  Poll_c10மரண குறிப்புகள் - அ. முத்துலிங்கம்  Poll_m10மரண குறிப்புகள் - அ. முத்துலிங்கம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரண குறிப்புகள் - அ. முத்துலிங்கம்  Poll_c10மரண குறிப்புகள் - அ. முத்துலிங்கம்  Poll_m10மரண குறிப்புகள் - அ. முத்துலிங்கம்  Poll_c10 
304 Posts - 43%
heezulia
மரண குறிப்புகள் - அ. முத்துலிங்கம்  Poll_c10மரண குறிப்புகள் - அ. முத்துலிங்கம்  Poll_m10மரண குறிப்புகள் - அ. முத்துலிங்கம்  Poll_c10 
287 Posts - 40%
Dr.S.Soundarapandian
மரண குறிப்புகள் - அ. முத்துலிங்கம்  Poll_c10மரண குறிப்புகள் - அ. முத்துலிங்கம்  Poll_m10மரண குறிப்புகள் - அ. முத்துலிங்கம்  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
மரண குறிப்புகள் - அ. முத்துலிங்கம்  Poll_c10மரண குறிப்புகள் - அ. முத்துலிங்கம்  Poll_m10மரண குறிப்புகள் - அ. முத்துலிங்கம்  Poll_c10 
27 Posts - 4%
sugumaran
மரண குறிப்புகள் - அ. முத்துலிங்கம்  Poll_c10மரண குறிப்புகள் - அ. முத்துலிங்கம்  Poll_m10மரண குறிப்புகள் - அ. முத்துலிங்கம்  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மரண குறிப்புகள் - அ. முத்துலிங்கம்  Poll_c10மரண குறிப்புகள் - அ. முத்துலிங்கம்  Poll_m10மரண குறிப்புகள் - அ. முத்துலிங்கம்  Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
மரண குறிப்புகள் - அ. முத்துலிங்கம்  Poll_c10மரண குறிப்புகள் - அ. முத்துலிங்கம்  Poll_m10மரண குறிப்புகள் - அ. முத்துலிங்கம்  Poll_c10 
6 Posts - 1%
prajai
மரண குறிப்புகள் - அ. முத்துலிங்கம்  Poll_c10மரண குறிப்புகள் - அ. முத்துலிங்கம்  Poll_m10மரண குறிப்புகள் - அ. முத்துலிங்கம்  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
மரண குறிப்புகள் - அ. முத்துலிங்கம்  Poll_c10மரண குறிப்புகள் - அ. முத்துலிங்கம்  Poll_m10மரண குறிப்புகள் - அ. முத்துலிங்கம்  Poll_c10 
4 Posts - 1%
manikavi
மரண குறிப்புகள் - அ. முத்துலிங்கம்  Poll_c10மரண குறிப்புகள் - அ. முத்துலிங்கம்  Poll_m10மரண குறிப்புகள் - அ. முத்துலிங்கம்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரண குறிப்புகள் - அ. முத்துலிங்கம்


   
   
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue May 17, 2011 9:38 am

Book of Obituaries - என்ற புத்தகம் பற்றி அ. முத்து லிங்கத்தின் கட்டுரை. நன்றி : உயிர்மை .

என் நண்பருக்கும் அவர் மனைவிக்கும் இடையில் என்னால் சண்டை மூண்டது. விசயம் சின்னதுதான். புது வருடம் பிறந்தபோது நண்பர் எனக்கொரு புத்தகம் பரிசு தர விரும்பினார். அவரும் மனைவியும் புத்தகக் கடைக்குப் போனார்கள். நண்பர் தெரிவு செய்த புத்தகம் மனைவிக்குப் பிடிக்கவில்லை, மனைவி தெரிவு செய்தது நண்பருக்குப் பிடிக்கவில்லை. நண்பர் தன்னுடைய தெரிவைத்தான் கொடுக்கவேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார். மனைவி அது தக்க புத்தகம் அல்ல, அதுவும் பரிசுக்கு நிச்சயம் ஏற்றதல்ல என்று சொல்லியும் அவர் கேட்கவில்லை. இறுதியில் நண்பர் புத்தகத்தை வாங்கி எனக்குத் தந்துவிட்டார்.

புத்தகத்தைப் பிரித்தபோது எனக்கு அதிர்ச்சியாகவே இருந்தது. நான் ஒரு புத்தகக் கடையில் அந்தப் புத்தகத்தைப் பார்க்க நேர்ந்தால் அதைச் சீக்கிரமாகத் தாண்டிப் போவேன்; வாங்கமாட்டேன். நிச்சயமாக அதை இன்னொருவருக்குப் பரிசாக அளிக்கப்போவதில்லை. அந்தப் புத்தகத்தின் பெயர்: ‘Book of Obituaries’. இங்கிலாந்தின் ‘எக்கனாமிஸ்ட்’ வார இதழ் கடந்த 12 வருடங்களாக அந்த இதழில் வந்த மரண அஞ்சலிக் கட்டுரைகளைத் தொகுப்பாக வெளியிட்டிருந்தது. முதலில் இந்தத் தொகுப்புக்கு வேறு பெயர் சூட்டுவதாக இருந்தது. 1300 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த பீட் என்ற கவிஞர் ஒரு கவிதை எழுதினார். இருட்டிலே சிட்டுக் குருவி ஒன்று பறந்து வழிதவறி யன்னல் வழியாக ஒளிமயமான விருந்து மண்டபத்துக்குள் நுழைந்துவிடுகிறது. சிறிது நேரம் அங்குமிங்கும் பறந்து தத்தளித்து இன்னொரு யன்னல் வழியாக வெளியேறுகிறது. மனித வாழ்க்கையை சிட்டுக்குருவி ஒளி வெள்ளத்தில் பறந்து திரிந்த அந்த சொற்ப நேரத்துக்கு ஒப்பிடுகிறார் கவி. 'சிட்டுக் குருவியின் பறப்பு' என்று முதலில் யோசித்த தலைப்பை பின்னர் ‘Book of Obituaries’ என்று மாற்றி நூலை வெளியிட்டிருந்தார்கள்.

புத்தகம் 408 பக்கங்கள் கொண்டது. 200 பேரின் மரணக் குறிப்புகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. உலகத்தின் எந்த ஒரு பகுதியில் மரணம் சம்பவித்தாலும் அது முக்கியமானதாக இருந்தால் அந்த வார ‘எக்கனாமிஸ்ட்’ இதழில் இடம் பெற்றுவிடும். பிரபலமானவர்களுக்குத்தான் மரணக் குறிப்புகள் வெளியிடுவார்கள் என்று சொல்ல முடியாது. இறந்தவர்களின் வாழ்க்கை ஏதோ ஒரு விதத்தில் வித்தியாசமாக, அவர்கள் வாழ்ந்ததற்கான ஒரு அர்த்தத்துடன் இருக்கவேண்டும். உலகப் பிரபலமான சிலரின் குறிப்புகள் இடம் பெறவில்லை. மாறாக, நாங்கள் கேள்விப்பட்டிராத இன்னொருவரின் குறிப்பு இடம் பெற்றிருக்கும். உதாரணமாக, அமெரிக்க ஜானாதிபதி ரேகனின் மரணக் குறிப்பு இல்லை. ஆனால் நகைச்சுவை நடிகர் பொப் ஹோப்பின் குறிப்பு வெளிவந்திருந்தது. இந்தியாவில் அன்னை தெரேஸா இறந்தபோது அவர்கள் எழுதவில்லை. ஆனால் வீரப்பன் இறந்தபோது எழுதினார்கள். நரசிம்மராவ் இறந்தபோது ஒன்றுமே எழுதாதவர்கள் 300 படம் நடித்துப் புகழ் பெற்ற ராமாராவ் இறந்தபோது அதைப் பதிவு செய்தார்கள். அந்த வாரத்தில் எது முக்கியமாகப்பட்டதோ அதையே பத்திரிகை எழுதியது.

‘எக்கனாமிஸ்ட்’ இதழ் தொடங்கி முதல் 150 வருடங்களுக்கு மரணக் குறிப்புகள் இடம் பெறவில்லை. அதன் பின்னரே 1995களில் வாரம் ஒரு மரணக் குறிப்பு எழுதுவதென தீர்மானித்து, அந்தப் பகுதியை நடத்துவதற்காக ஒரு முழுநேர ஆசிரியரையும் நியமித்தார்கள். இது மரண அஞ்சலி அல்ல, மரணக் குறிப்புகள்தான். இறந்தவரைப்பற்றி மிகையான புகழ்மாலைகள் இரா. ‘உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்’, ‘இறந்தவரின் ஆத்மா சாந்தியடையட்டும்' போன்ற வரிகளைக் காணமுடியாது. இறந்தவரின் வாழ்க்கை சாரத்தை அப்படியே காய்தல் உவத்தல் இன்றி அளிப்பதே கடமை என எண்ணினார்கள். அதனால் ஒரு மரணக் குறிப்பு எப்படியும் ‘எக்கனாமிஸ்ட்’ இதழில் வரவேண்டும் என்பதே இறக்கப்போகும் ஒவ்வொருவரின் கடைசிக் கனவாக இருந்தது. சிலபேர் அதற்காக நல்ல தருணத்தில் இறந்து போவதற்கும் சித்தமாக இருந்தார்கள்.

சில வேளைகளில் ஒரு பிரபலம் இறக்கும்போது அவருடைய நண்பர்களோ, உறவினர்களோ ஆசிரியருக்கு அவரைப் பற்றிய குறிப்புகளையும் விவரங்களையும் சமர்ப்பித்து மறைமுகமாக மரணக் குறிப்பு எழுதுமாறு தூண்டுவதுண்டு. அப்படியான சந்தர்ப்பங்களில் நிச்சயமாக அந்த மரணக் குறிப்பு வெளிவராது. ஆசிரியரின் வேலை ஒரு வாரம் முழுவதும் 1000 வார்த்தைகள் எழுதுவதுதான். திடீரென்று வாரம் முடிவுக்கு வரும்போது பிரபலர் ஒருவர் இறந்து போனால் 24 மணி நேரத்தில் தகவல்களைத் திரட்டி இதழ் அச்சுக்குப் போகு முன்னர் மரணக் குறிப்பு எழுதிவிட வேண்டும். இதற்காகவே உலகத்துப் பிரபலங்களின் தகவல் வங்கி ஒன்றை ஆசிரியர் எப்போதும் தயாராகவே வைத்திருப்பார். பெண்களுக்கும் இறப்பின்போது சமஉரிமை கொடுக்கவேண்டும் என்பது ஆசிரியரின் எண்ணம். ஆனால் அது பெருமளவு கைகூடவில்லை. போதிய பெண்கள் சாகவில்லையோ அல்லது அவர்கள் போதிய பிரபலமாகவில்லையோ, மிகக்குறைந்த அளவிலேயே அவர்களின் மரணக் குறிப்புகள் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கின்றன.

ஆயிரம் வார்த்தைகள்தான் என்றாலும் ஒவ்வொரு மரணக் குறிப்பும் இலக்கியத் தன்மையுடன் எழுதப்பட்டிருக்கும். வாசிப்பு இன்பம் கிடைக்கிறது. நல்ல எழுத்து என்றால் மரணக் குறிப்பை வாசித்தும் இன்பம் பெறமுடியும் என்பது ஆச்சரியமானதுதான். சில மரணக் குறிப்புகள் சிட்டுக்குருவியின் பறப்புபோல சீராகவும் கவர்ச்சியாகவும் செதுக்கப்பட்டிருக்கின்றன. நேர்த்தியும் கலையம்சமும் அமையாத ஒரு வசனம்கூட நூலில் கிடையாது. அத்துடன் நிறைய தகவல்களும் சுவாரஸ்யமான சம்பவங்களும் வாசிப்புக்கு சுவை கூட்டின. என் நண்பர் புத்தகப் பரிசை வாங்கும்போது என்னை சரியாகத்தான் கணித்திருக்கிறார்.

பொபி ரிக்ஸ் என்பவர் ஒரு காலத்தில் வெற்றிகளைக் குவித்த உலக டென்னிஸ் சாம்பியன். அவர் ஓய்வு பெற்ற பின்னரும் தொடர்ந்து விளையாடி வந்தார். திடீரென்று என்ன ஆனதோ, பெண்களுக்கு எதிராகப் பேச ஆரம்பித்தார். பெண்ணியக்காரர்களை அவருக்குப் பிடிக்கவில்லை. அவர்களை வெறுத்தார்; வசைபாடினார். ‘பெண்களுடைய வேலை வெறும் காலுடன் சமையலறையில் சமைப்பது. கர்ப்பமாவது. டென்னிஸ் விளையாயாடுவது அல்ல’ என்று கூறியதுடன் ஒரு சவால் விட்டார். 'எனக்கு 55 வயது ஆகிறது. எனினும் இன்று டென்னிஸ் சாம்பியனாக இருக்கும் எந்தப் பெண்ணுடனும் விளையாடி அவரைத் தோற்கடிக்க நான் தயார்' என்று சொன்னார். ஒரு பெண் அந்த சவாலை ஏற்றார். பெயர் பில்லிஜீன் கிங். பெண்கள் டென்னிஸ் உலகத்தில் இரண்டாவது இடத்தில் இருந்தார். அமெரிக்கா முழுவதும் பரபரப்பானது. 1973ல் நடந்த போட்டியின்போது ஆறு பெண்கள் பொபி ரிக்ஸை ஒரு ரிக்சாவில் உட்கார்த்தி மைதானத்துக்கு இழுத்து வந்தார்கள். அன்று ரஸ்யா அமெரிக்காவுடன் யுத்தம் தொடுத்திருந்தாலும் ஒருத்தரும் அதைக் கவனித்திருக்கமாட்டார்கள் என்று மரணக் குறிப்பில் ஆசிரியர் எழுதுகிறார். அமெரிக்கா அவ்வளவு பரபரப்பாக இருந்தது. நிறையப் பேசிய பொபி ரிக்ஸ் அன்றைய போட்டியில் தோற்று அமெரிக்கா முழுவதும் கொண்டாட்டம் நடந்தது. இன்றும் பொபி ரிக்ஸ் மக்களின் நினைவில் நிற்பதற்குக் காரணம், அவர் பெற்றுக் குவித்த வெற்றிகள் அல்ல, அந்த ஒரேயொரு தோல்விதான்.

இலங்கை ஜனாதிபதியாகப் பதவி வகித்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனா பற்றியும் சுவாரஸ்யமான குறிப்பு உண்டு. இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் 1951ல் கலிபோர்னியாவில் நடந்த ஒரு மாநாட்டில் அப்பொழுது பிரபலமாகாத 45 வயது ஜே.ஆர். கலந்துகொண்டு பேசினார். 'யப்பானியர்கள் மீது அமெரிக்கா விரோதம் பாராட்டக்கூடாது. அவர்களை அரவணைத்துச் செல்லவேண்டும்' என்பதுதான் அவர் பேசிய உரையின் சாராம்சம். பேச்சை நேரில் கேட்ட யப்பானியப் பிரதமர் யோசிடா அந்தச் சமயம் கண்ணீர் உகுத்தாராம் (அப்படி சமாதானத்துக்காகப் பேசிய ஜே.ஆர்.தான் பின்னாளில் தமிழர் உரிமைகளைப் பறித்து அவர்களை இரண்டாம் தரமாக்கினார் என்பது உலகறிந்த விசயம்). இவருடைய வீட்டின் பெயர் பிரேமர். அந்த விநோதமான பெயர் எப்படி சூட்டப்பட்டது என்ற ரகஸ்யம் பலருக்குத் தெரியாது. இவர் சிறுவயதாக இருந்தபோது இவரை ஒரு ஜெர்மன் தாதி பார்த்துக்கொண்டார். அந்தத் தாதி பிறந்த ஊரின் பெயர் பிரேமர். அவர் ஞாபகார்த்தமாகத்தான் தன்னுடைய வீட்டுக்கு அப்படிப் பெயர் சூட்டியிருந்தார்.

விமானப் பயணத்தைப் பாதுகாப்பாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர் எல்ரே ஜெப்பெஸன் என்ற அமெரிக்கர். விமானங்கள் பறக்கத் தொடங்கிய ஆரம்ப காலங்களில் பல ஆபத்துக்களை எதிர்கோள்ள வேண்டியிருந்தது. இவர் தபால் காவும் விமானத்தை அமெரிக்காவின் பல மாநிலங்களுக்கும் ஓட்டினார். விமானிகளின் பாதுகாப்பான பயணத்துக்குப் பல குறிப்புகள் எழுதி வைத்துக்கொண்டார். பயணத்துக்கு முன்னர் வழியில் உள்ள கிராமத்து விவசாயிகளை டெலிபோனில் அழைத்துக் காலநிலையைக் கேட்டறிந்து அதற்கேற்றவாறு பிரயாணத்தை திட்டமிடும் பழக்கத்தை இவர்தான் முதலில் ஆரம்பித்தவர். விமானத்தின் திசைகாட்டி வேலை செய்யாதபோது தாழப் பறப்பார். கிராமத்து வீடுகளின் கழிவறைக் கதவுகள் எப்போதும் தெற்குத் திசையைப் பார்த்தபடி இருக்கும். அப்படித் திசை கண்டுபிடித்து விமானத்தை சரியான வழியில் செலுத்துவார். இவர்தான் 1933 ல் முதன்முதல் விமான ஓட்டிகளுக்கு வழிகாட்டி நூல் ஒன்றைத் தயாரித்து வெளியிட்டார். அதன் பின்னர் படிப்படியாக விமானப் பிரயாணம் பாதுகாப்பானதாக மாறியது.

மனிதர்களுக்கு மாத்திரமல்ல, மரணக் குறிப்பு ஒரு சாம்பல் கிளிக்கும் இருக்கிறது. விஞ்ஞானிகள் சோதனைக்காக வளர்த்த அசாதாரணக் கிளி அது. கிளி என்றால் சொன்னதைத் திருப்பிச் சொல்லும் என்பது நாங்கள் அறிந்தது. ஆனால் இந்தக் கிளி அப்படியானதல்ல. நீங்கள் கேட்பதைக் கிரகித்து அதற்கான பதிலைச் சொல்லும். உங்களிடம் கேள்வி கேட்கும், நீங்கள் சொல்லும் பதிலைப் புரிந்துகொள்ளும். என்ன சந்தர்ப்பத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதும் அதற்குத் தெரியும். ஒரு ஐந்து வயதுப் பிள்ளையின் மூளைத் திறன் அந்தக் கிளிக்கு இருப்பதாக விஞ்ஞானிகள் அனுமானித்தார்கள். அதன் சொல்வங்கியில் 150 வார்த்தைகள் இருந்தன. ஆறு வரைக்கும் எண்ணப் பழகிய கிளி ஏழாவது இலக்கத்தைக் கற்றுக் கொண்டிருந்தபோது இறந்துவிட்டது.

கொடுங்கோல் மன்னன் பொக்காஸோ பற்றிய குறிப்பும் வருகிறது. அவர் ஒரு சிங்கம் வளர்த்தார். சிங்கத்துக்குக் கொடுக்க வேண்டிய உணவை ஒரு நாள் அதன் பாராமரிப்பாளன் களவாடி உண்டுவிட்டான். இது எப்படியோ பொக்காஸோவுக்குத் தெரியவந்தது. அவர் கடுங்கோபம் கொண்டு பராமரிப்பாளனையே சிங்கத்துக்கு உணவாக எறிந்துவிடவேண்டும் என கட்டளையிட்டார். கட்டளை நிறைவேற்றப்பட்டது. ஆனால் சிங்கம் விசுவாசமானது, தன் பராமரிப்பாளனை உண்ண மறுத்துவிட்டது. பொக்காஸோ பின்வாங்காமல் பராமரிப்பாளனைத் தூக்கி முதலைகளுக்கு வீசி தண்டனையை நிறைவேற்றினார்.

இன்னும் பல சுவையான சம்பவங்கள் நூலில் இருக்கின்றன. பிரபல இயக்குனர் ஸ்டான்லி குப்ரிக் கார் கதவைச் சாத்தும் காட்சி ஒன்றை 70 தடவை படம் பிடித்தாராம். எஸ்ரெலோடர் பெண்மணி (ஒப்பனைப் பொருள் தயாரிப்பு நிறுவனத்தின் அரசி) எப்பொழுதும் இளமையாகவே தோற்றமளிக்க விரும்பினார். அவருடைய உடம்பில் மூப்பு வந்தது தெரிந்தால் மக்கள் அவர் தயாரிக்கும் ஒப்பனைப் பொருள்களில் நம்பிக்கை இழப்பார்கள். அவருடைய மகனின் தலைமுடி நரைக்கத் தொடங்கியபோது அவர் மகனைக் கூப்பிட்டு கட்டளையிட்டார். ‘நீ உன் தலைக்கு சாயம் பூசு. உன்னுடைய தோற்றம் என்னை வயசாளியாகக் காட்டுகிறது.’

பியரி ரூடோ கனடாவின் பிரதம மந்திரியாக 16 வருடங்கள் கடமையாற்றினார். இவர் இளவயதில் பெரும் சாகசக்காரர், வேடிக்கை புத்தியுள்ளவர். ஒருமுறை ஈராக் நாட்டுக்கு சுற்றுலா போனபோது இவரை மூன்று கொள்ளைக்காரர்கள் சூழ்ந்துகொண்டார்கள். இவர் தன்னுடைய கிழிந்த சர்ட்டையும் ஊத்தை உடுப்பையும் காட்டி அவர்களிடமே பணம் யாசகம் செய்யத் தொடங்கினார். அவர்கள் இவரை இழுத்துச் சென்றபோது ஓயாமல் கவிதைகள் சொன்னார். நடித்துக் காட்டினார். முடிவில்லாத பேருரை ஒன்றை ஆரம்பித்தார். இவருக்கு மூளை சரியில்லை என்று தீர்மானித்து கொள்ளைக்காரர்கள் இவரை விட்டுவிட்டு ஓடினார்கள்.

இந்தியாவின் விவசாய மந்திரியாக இருந்த சி.சுப்பிரமணியம் பற்றி '4000 வருடங்கள் சாதிக்க முடியாத பசுமைப் புரட்சியை நாலே வருடங்களில் சாதித்துக் காட்டியவர்' என்று எழுதினார்கள். 'உட்கார்ந்துகொண்டே போரிட்டவர்' என்று கறுப்பினப் பெண்மணி ரோஸா பார்க்ஸை சொல்வார்கள். அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் 1955ம் ஆண்டு இந்தப் பெண் பஸ்ஸில் பயணித்தபோது அவர் தன் இருக்கையை ஒரு வெள்ளைக்காரருக்கு விட்டுக்கொடுக்க மறுத்துவிட்டார். நகர விதிகளை மீறியதால் அவர் குற்றவாளியாகக் கருதப்பட்டார். அந்தத் தீர்ப்பு பெரும் போராட்டமாக வெடித்து 382 நாட்கள் தொடர்ந்தது. இறுதியில் சுப்ரீம் கோர்ட்டு கறுப்பின மக்கள் சார்பாக தீர்ப்பு வழங்கியதில் அவர்களுக்கு சம உரிமை கிடைத்தது. அமெரிக்காவில் நிகழ்ந்த இந்த மாபெரும் மாற்றம், கூலிக்குத் தையல் வேலை செய்த ஒரு சாதாரண பெண்ணால் ஏற்பட்டது என்பதுதான் அதிசயம்.

இரண்டாம் உலகப் போர் முடிந்தது தெரியாமல் 27 வருடங்கள் காட்டிலே தனியாக வாழ்ந்த யப்பானிய போர்வீரர் சோயிச்சி யோக்கோய் பற்றிய குறிப்பும் நூலில் இடம் பெறுகிறது. 50 மொழிகள் பேசத் தெரிந்தவர் பேராசிரியர் கென்னத் ஹேல். இவர் ஒரு மொழியின் அடிப்படை இலக்கணத்தை நிமிடத்தில் புரிந்து கொண்டு பதினைந்து நிமிடத்தில் ஒரு புது மொழியைப் பேசக் கற்றுக்கொண்டு விடுவாராம். ஆங்கிலத்தில் எழுதியவர்களில் மலிவு நாவல்களின் அரசி என அறியப்பட்டவர் பார்பரா கார்ட்லண்ட். 723 நாவல்கள் எழுதிய அவர் ஆரம்பத்தில் ஒரு நாவல் எழுத ஒரு வருடம் எடுத்துக் கொண்டார். இறுதி வருடங்களில் வாரத்துக்கு ஒரு நாவல் என்று எழுதித் தள்ளினாராம். இவருடைய மகள்தான் இளவரசிடயானாவின் தகப்பனை மணமுடித்தவர். 98 வயதில் இறந்த பார்பரா எப்பொழுதும் இளமையாகத் தோற்றமளிக்கவே விரும்பினார். ஒருமுறை புகைப்படக்காரரிடம் 'என் உடம்பு இளம்பெண்ணின் உடம்புபோல சுருக்கமில்லாமல் இருக்கும். என்னை நிர்வாணமாகப் படம் எடுக்கலாம்' என்று சொல்ல, புகைப்படக்காரர் நடுங்கி தப்பி வெளியேறவேண்டி நேர்ந்தது. இம்மாதிரி நிறைய விவரங்கள் கிடைக்கின்றன.

இந்தப் புத்தகத்தை வாங்கியபோது நண்பர் என்ன நினைத்தாரோ தெரியாது. ஆனால் அவர் என் வாசிப்பு ரசிப்புத் தன்மையை எப்படியோ சரியாக அளந்து வைத்திருந்தார். சமீபத்தில் இவ்வளவுதூரம் ஆழ்ந்துபோய் வேறு ஒரு புத்தகத்தையும் நான் படித்ததில்லை. ஒவ்வொரு பக்கமும் ஏதோ ஒரு சுவாரஸ்யமான விசயத்தை சொன்னது. புத்தகத்தின் முன்னுரையில் இன்னொரு முக்கியமான விசயமும் குறிப்பிடப்பட்டிருந்தது. மரணக் குறிப்பு ஆசிரியரின் வேலையை இலகுவாக்குவதற்கு உலகத்தின் பிரபலமான 10 பேரின் மரணக் குறிப்புகளை முன்கூட்டியே தயாரித்து மிகப் பாதுகாப்பான இடத்தில் வைத்திருக்கிறார்கள். திடீரென்று அவர்களில் ஒருவர் இறந்துபோனால் உடனுக்குடன் அந்தக் குறிப்புகள் பயன்படும் என்ற எண்ணம்தான் காரணம். ஆனால் அவர்களில் ஒருவர்கூட சாகாததால் அந்தக் குறிப்புகள் அப்படியே பிரயோசனம் இல்லாமல் இரும்புப் பெட்டகத்தில் நீண்டகாலம் பூட்டிக் கிடக்கின்றன.

உலகத்தில் அதிக நாட்கள் உயிர் வாழ்ந்து இறந்துபோன மூதாட்டி ஒருவரின் மரணக் குறிப்பும் தொகுப்பில் இருக்கிறது. அவருடைய பெயர் ஜீன் கல்மன்ற். அவர் தனது 122 வது வயதில் மரணமடைந்தார். அவரைப்பற்றி எழுதும்போது அவருடைய வாழ்க்கையில் முதல் 100 வருடங்கள் ஒன்றுமே குறிப்பிடத்தக்கதாக நிகழவில்லை என்று ஆசிரியர் சொல்கிறார். அதற்குப் பிறகு மூதாட்டியார் வாழ்ந்த ஒவ்வொரு வருடமும் அவர் புகழ் கூடியது. அவர் தன்னை ஒரு முதியவர் என்றே நினைக்கவில்லை. அவருக்கு எந்த வயதாயிருந்தபோதும், தன்னிலும் பார்க்க 15 வயது கூடிய ஒருவரே முதியவர் என்று நம்பினார். ஒருமுறை அவர் தன்னைக் கடவுள் திரும்ப அழைப்பதற்கு மறந்துவிட்டாரோ தெரியாது என்று அங்கலாய்த்தார். அவருடைய நீண்ட ஆயுளின் ரகஸ்யம் என்னவென்று கேட்டபோது தினமும் ஆலிவ் எண்ணெயும் வைனும் அருந்தவேண்டும் என்று அறிவுரை வழங்கினார். இந்த மூதாட்டியைப் பொறுத்தவரை ஒரு யன்னல் வழியாகப் பறந்து வந்த சிட்டுக்குருவி மறுயன்னலைக் கண்டுபிடிக்க நீண்ட நேரம் அவதிப்பட்டிருக்கிறது.

மூதாட்டி அறிவுறுத்தியபடி வாழ்ந்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அதற்குக் குறுக்கு வழி ஒன்றும் இருக்கிறது. எப்படியாவது உங்களது பிரபல்யம் எக்கனாமிஸ்ட் மரணக்குறிப்பு ஆசிரியரின் காதுகளை எட்டவேண்டும். அவர் உங்களைப்பற்றி ஒரு மரணக் குறிப்பு தயாரித்து, அதை இரும்புப் பெட்டகத்தில் பூட்டிவைத்துப் பாதுகாப்பாரேயானால் நிச்சயம் உங்கள் ஆயுள் பல ஆண்டுகள் நீடிக்கும் என்பது உறுதி.



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக