புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வித்தியாச(ன்)மான காதல் கதை   Poll_c10வித்தியாச(ன்)மான காதல் கதை   Poll_m10வித்தியாச(ன்)மான காதல் கதை   Poll_c10 
21 Posts - 66%
heezulia
வித்தியாச(ன்)மான காதல் கதை   Poll_c10வித்தியாச(ன்)மான காதல் கதை   Poll_m10வித்தியாச(ன்)மான காதல் கதை   Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வித்தியாச(ன்)மான காதல் கதை   Poll_c10வித்தியாச(ன்)மான காதல் கதை   Poll_m10வித்தியாச(ன்)மான காதல் கதை   Poll_c10 
63 Posts - 64%
heezulia
வித்தியாச(ன்)மான காதல் கதை   Poll_c10வித்தியாச(ன்)மான காதல் கதை   Poll_m10வித்தியாச(ன்)மான காதல் கதை   Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
வித்தியாச(ன்)மான காதல் கதை   Poll_c10வித்தியாச(ன்)மான காதல் கதை   Poll_m10வித்தியாச(ன்)மான காதல் கதை   Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
வித்தியாச(ன்)மான காதல் கதை   Poll_c10வித்தியாச(ன்)மான காதல் கதை   Poll_m10வித்தியாச(ன்)மான காதல் கதை   Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வித்தியாச(ன்)மான காதல் கதை


   
   

Page 1 of 2 1, 2  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 10, 2011 2:33 pm

செய்தாலி wrote:
வித்தியாச(ன்)மான காதல் கதை   9007-68

இங்குதான் வரதாக சொன்னாள்
தன் கவிதை காதலிக்காக
கடல் கரையில் காத்துநிற்கும்
ஆண் கவிதை

ஒரு வழியாய் நீ உன் காதலை கடற்கரையில் என்னிடம் சொல்லிய தினத்தன்றா? இல்லை அன்று நம் கண்கள் மட்டுமே முத்தமிட்டன. அவையெல்லாம் கணக்கில் வராது.

அதற்கடுத்த தினமே நாம் கடற்கரை சென்றோம். என் வலக்கையின் ஐந்து விரல்களை பத்தாய் மாற்றிக் கொன்டிருந்தது உன் இடக்கை.பாறையாய் என்னையும் அலையாய் உன்னையும் உருவகப் படுத்தினேன். அலை என்றால் சென்று விடும். என்றும் உன்னை வருடும் தென்றலாய்தான் நானிருப்பேன் என்றாய். உன் புறங்கையில் மென்மையாய் முத்தமிட்டேன். முழுவதும் முடிக்குமுன் வெடுக்கென பிடிங்கினாய். "வேறு இடமா கிடைக்கல" என்ற உன் வார்த்தையை, கடற்கரையைத்தான் சொல்கிறாய் எனத் தவறாக புரிந்து கொண்டது என் சிற்றறிவு.

மறுநாள் மீண்டும் கடற்கரை வந்தோம். நேற்று நடந்ததற்கு விளக்கம் கொடுத்தாய். அசட்டு சிரிப்பு ஒன்றை சிரித்தேன். ஏனோ அன்று மீண்டும் முயற்சி செய்யவே இல்லை. மூன்றாம் நாளே நாம் நம் முதல் குழந்தைக்கு பெயர் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தோம். முத்ததிற்கே வழியில்லை, இதில் குழந்தையாம் என மனதிற்குள் நீ சிரித்திருக்கலாம். எனக்கு கேட்கவில்லை.

மறுநாள் இல்லை, ஆனால் மீண்டும் ஒரு நாள் கடற்கரை வந்தோம். அன்று எப்படியாவது முத்தமிட வேண்டும் என முடிவு செய்தது நானில்லை. ஆனால் உன் முடிவை நீ என்னிடம் சொல்லவில்லை. தூரத்தில் வானமும் கடலும் முத்தமிட்டு கொண்டிருப்பதாக சொன்னாய். காதல் மொழி புரியவில்லை எனக்கு. பார்ப்பதற்கு அப்படி தெரிந்தாலும் அந்த சங்கமம் எங்கேயும் நடப்பதில்லை என்றேன் நான். ஒரு பார்வை பார்த்தாய்.

மறுநாள் கடற்கரை அழைத்தேன்.செல்லமாய் கோபப்பட்டாய். இந்த முறை முத்தம் உண்டு என்ற உத்தரவாதத்துடன்தான் வர சம்மதித்தாய். ஆண் வர்க்கத்திற்கே தீராத களங்கம் ஏற்படுத்திய கவலை சிறிதும் இல்லாமல் உன்னுடன் நடந்தேன். எப்படி, எங்கே, எப்போது என வீட்டுப்பாடம் எதுவும் செய்யாததால் முழித்துக் கொண்டிருந்தேன். என் காதலி அல்லவா நீ.. என்னைப் போலவே நீயும் பெண் வர்க்கத்திற்கு களங்கம் செய்ய நினைத்தாயோ என்னவோ திடீரென என கன்னத்தில் இச்சென்றாய். முத்தமிட்ட உன்னைப் பார்க்காமால் சுற்றுமுற்றும் பார்த்தேன் நான். என்ன நினைத்தாயோ தெரியவில்லை.

உன்னை பழிதீர்க்க வேண்டாமா? நீ கொடுத்ததை திருப்பித் தர வேண்டாமா என வீராவேச வசனங்கள் பேசி மீண்டும் கடற்கரைக்கு அழைத்தேன். துள்ளி குதித்து வந்தாய். பேச்சின் நடுவே உன்னைப் போல் நீ எதிர்பாராத தருணத்தில் என் கணக்கைத் தீர்த்தேன். நானும் முத்தமிட்டதை போல் உணரவில்லை. நீயும். இப்படி கொடுப்பதெல்லாம் முத்தமல்ல என்றேன் நான். செல்லமாய் அடித்தாய். " நானா வேணான்னு சொல்றேன்" என சிணுங்கினாய்.

நல்லதொரு சந்தர்ப்பத்திற்காக இருவரும் காத்திருந்தோம். தொலைபேசியில் முத்தமிடுவாய். உன் முத்தங்களையெல்லாம் அது எடுத்துக் கொண்டு எனக்கு வெறும் சத்தததையே தரும். கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது தெரியுமா என்பேன் நான். உன்னைப் போல் ஒருவனை காதலித்த பெண்ணின் கண்ணீரால்தான் என வம்படிப்பாய். திரையரங்கில் முத்தம் கேட்டாய். சம்மதமில்லை என்றேன் நான். குழி விழும் உன் மெல்லிய கன்னங்களை என் கைகளில் ஏந்தி, காந்தத்தால் செய்யப்பட்ட உன் கண்களை உற்று நோக்கி, தேன் சுமக்கும் உன் இதழ்களை என் இதழ்களால் வருடி முத்தமிட வேண்டும். அந்த முதல் முத்தம் குறைந்த பட்சம் ஐந்து நிமிடம் நீடிக்க வேண்டும் என்றேன் நான். ஆச்சரியமாய் பார்த்தாய். என்னை விட்டு என் முத்தத்தை காதலிக்க போவதாய் சொன்னாய்.

அதன் பின் நடந்ததெல்லாம் சொல்லும்படி இல்லை. நம் காதல் நம்மைத் தவிர அந்தக் கடலுக்கு மட்டுமே தெரியும் என்றாய். கடல் கூட கண் வைக்குமா என்ன? எல்லாம் சிதறியது. நம் போராட்டம், உன் தந்தையின் மிரட்டல், என் கடமைகள், என எல்லாம் நமக்கெதிராய் சதி செய்தன. பின் ஒரு மழைக்கால மாலையில் வெகுநாட்களுக்கு பிறகு நம் கடற்கரையில் சந்தித்தோம். கடைசி சந்திப்பு என்ற உன் நிபந்தனை பேரில்தான். என்ன வேண்டும் என்றாய். உன் புகைப்படம் என்றேன் நான். முத்தம்? என்றாய். ஏனோ மறுத்து விட்டேன். “ உன் கன்னத்தில் மட்டும் ஏன் குழி என நினைத்திருக்கிறேன். அன்று, ஒரு கண்ணீர்த் துளி கண்களில் பிறந்து உன் கன்னத்தை தடவி, குழியில் இறங்கி உன் உதட்டில் உயிரை விட்டது. கடவுளே!! அந்தக் கண்ணீர்த் துளியாகவவாது நான் பிறந்திருக்க கூடாதா? ’’.. ஏதேதோ பேசி விட்டு புகைப்படமும் தராமால் சென்று விட்டாய்.

இதுவரை நிகழவில்லை நான் கனவு கண்ட அந்த முத்தம். இனி மேல் நிகழ்ந்தாலும் அது முத்தமாக கணக்கிட முடியாது. உனக்காக காத்திருக்கிறேன். ஒரு முடிவுக்காக காத்திருக்கலாம்.. ஆனால் என் கதையில் காத்திருப்பதே முடிவாகிவிட்டது.

குறிப்பு :- நாங்களும் போட்டோ போடுவோமூல, நன்றி செய்தாலி, இந்த பதிவோட மூல பதிவு பார்க்க இங்கே சொடுக்கவும் .

பின் குறிப்பு :- என்ன நம்ம வித்யாசனோட கவிதைகள் நிறையா முத்தத்தபத்தியே இருக்கு, கமல் ரசிகர் போலிருக்கு அதான் அவர பத்தி யோசிச்சா இதுதான் நியாபகம் வருது நான் என்ன பண்ண.

கிளிப் குறிப்பு :- என்ன்டா இங்கே போட்டோ போட்டோமுணு வித்யாசன் நினைச்சாலும் பரவா இல்ல எங்கள விட அழகான பசங்கள பார்ர்த்தா கொஞ்சம் பொறாம இருக்கத்தான் செய்யும் சிரி





ஈகரை தமிழ் களஞ்சியம் வித்தியாச(ன்)மான காதல் கதை   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue May 10, 2011 3:00 pm

கிளிப் குறிப்பு :- என்ன்டா இங்கே போட்டோ
போட்டோமுணு வித்யாசன் நினைச்சாலும் பரவா இல்ல எங்கள விட அழகான பசங்கள
பார்ர்த்தா கொஞ்சம் பொறாம இருக்கத்தான் செய்யும் சிரி

பாலா இன்று தான் உண்மையினை சொன்னீர்கள்....
வித்தியாச(ன்)மான காதல் கதை   224747944 வித்தியாச(ன்)மான காதல் கதை   359383




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்

பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Postசின்றெல்லா Tue May 10, 2011 3:36 pm

மிகவும் நெகில்ச்ச்சியான கதை..
மிகவும் அருமயான சிந்தனை + கதை நடை கார்திக்க் .. மகிழ்ச்சி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue May 10, 2011 3:37 pm

🐰 🐰 🐰

மிக அருமையான கற்பனை திறன் வாழ்த்துக்கள் பாலா ....
தொடருங்கள் இதுபோன்ற கதைகளை
வித்யாசன் நிச்சயம் சிரித்துயிருப்பார்..

🐰 🐰 🐰



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue May 10, 2011 3:40 pm

உமா wrote:
கிளிப் குறிப்பு :- என்ன்டா இங்கே போட்டோ
போட்டோமுணு வித்யாசன் நினைச்சாலும் பரவா இல்ல எங்கள விட அழகான பசங்கள
பார்ர்த்தா கொஞ்சம் பொறாம இருக்கத்தான் செய்யும் சிரி

பாலா இன்று தான் உண்மையினை சொன்னீர்கள்....
வித்தியாச(ன்)மான காதல் கதை   224747944 வித்தியாச(ன்)மான காதல் கதை   359383
ஆண்கள் எப்பொழுதும் உண்மையை ஒத்துக்கொள்வோம்...ஆனால் நீங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 10, 2011 4:39 pm

உமா wrote:
கிளிப் குறிப்பு :- என்ன்டா இங்கே போட்டோ
போட்டோமுணு வித்யாசன் நினைச்சாலும் பரவா இல்ல எங்கள விட அழகான பசங்கள
பார்ர்த்தா கொஞ்சம் பொறாம இருக்கத்தான் செய்யும் சிரி

பாலா இன்று தான் உண்மையினை சொன்னீர்கள்....
வித்தியாச(ன்)மான காதல் கதை   224747944 வித்தியாச(ன்)மான காதல் கதை   359383

இன்னும் பல உண்மைகள் உள்ளுக்குள்ளே கொட்டி கிடக்கிறது எல்லாத்தயும் சொன்னா அப்புறம் வர்சினி வ்வே மா அப்படினு சொல்லக்கூடாதேங்கறதுனாளா சும்மா இருக்கேன் புன்னகை புன்னகை



ஈகரை தமிழ் களஞ்சியம் வித்தியாச(ன்)மான காதல் கதை   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 10, 2011 4:39 pm

சின்றெல்லா wrote:மிகவும் நெகில்ச்ச்சியான கதை..
மிகவும் அருமயான சிந்தனை + கதை நடை கார்திக்க் .. மகிழ்ச்சி

நன்றிங்கோ :வணக்கம்: சிரி



ஈகரை தமிழ் களஞ்சியம் வித்தியாச(ன்)மான காதல் கதை   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 10, 2011 4:41 pm

வை.பாலாஜி wrote:🐰 🐰 🐰

மிக அருமையான கற்பனை திறன் வாழ்த்துக்கள் பாலா ....
தொடருங்கள் இதுபோன்ற கதைகளை
வித்யாசன் நிச்சயம் சிரித்துயிருப்பார்..

🐰 🐰 🐰

சிரிச்சாரோ இல்ல மொரச்சாரோ சம்பந்தபட்டவரு வந்தாத்தான் தெரியும்



ஈகரை தமிழ் களஞ்சியம் வித்தியாச(ன்)மான காதல் கதை   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue May 10, 2011 6:58 pm

கவிஞரின் புகைபடத்திற்கு நான் மூன்று வரிகள்தான் எழுதினேன்
முப்பது வரிகளுக்கு மேல் அழகான கதையையே படைத்து விட்டீர்கள்
சல்யூட் சல்யூட் கார்த்திக்

கதை நல்லா இருக்கு கார்த்திக் பாராட்டுக்கள்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 10, 2011 7:17 pm

செய்தாலி wrote:கவிஞரின் புகைபடத்திற்கு நான் மூன்று வரிகள்தான் எழுதினேன்
முப்பது வரிகளுக்கு மேல் அழகான கதையையே படைத்து விட்டீர்கள்
சல்யூட் சல்யூட் கார்த்திக்

கதை நல்லா இருக்கு கார்த்திக் பாராட்டுக்கள்

எல்லாம் உங்களிடம் குடித்த யானை பால் தான் காரணம் அருமையிருக்கு அருமையிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் வித்தியாச(ன்)மான காதல் கதை   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக