புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா Poll_c10இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா Poll_m10இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா Poll_c10இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா Poll_m10இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா Poll_c10இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா Poll_m10இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா Poll_c10 
3 Posts - 4%
Baarushree
இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா Poll_c10இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா Poll_m10இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா Poll_c10இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா Poll_m10இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா Poll_c10 
2 Posts - 3%
viyasan
இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா Poll_c10இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா Poll_m10இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா Poll_c10 
2 Posts - 3%
prajai
இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா Poll_c10இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா Poll_m10இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா Poll_c10 
2 Posts - 3%
சிவா
இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா Poll_c10இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா Poll_m10இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா Poll_c10 
1 Post - 1%
manikavi
இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா Poll_c10இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா Poll_m10இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா Poll_c10 
1 Post - 1%
Rutu
இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா Poll_c10இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா Poll_m10இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா Poll_c10இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா Poll_m10இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா Poll_c10 
24 Posts - 77%
ரா.ரமேஷ்குமார்
இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா Poll_c10இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா Poll_m10இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா Poll_c10இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா Poll_m10இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா Poll_c10 
2 Posts - 6%
viyasan
இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா Poll_c10இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா Poll_m10இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா Poll_c10 
1 Post - 3%
Rutu
இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா Poll_c10இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா Poll_m10இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா Poll_c10 
1 Post - 3%
manikavi
இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா Poll_c10இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா Poll_m10இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா


   
   

Page 1 of 2 1, 2  Next

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Sep 25, 2010 2:51 pm

நூலின் பெயர் : மனதில் ஹைக்கூ
நூலின் ஆசிரியர் : இரா.இரவி
நூல் விமர்சனம் :முனைவர் ச.சந்திரா
கோபுர நுழைவாயில் :
உலகம் மூன்று ; கணிக்கும் காலம் மூன்று; ;சுவையூட்டும் கனி மூன்று ;உலகப்பொதுமறையின் பால் மூன்று ;அரும்பெருந் தமிழ் மூன்று ; ஆற்றல்சால் வேந்தன் மூன்று என புகழின் உச்சத்தை எட்டிய அனைத்துமே ' மூன்று' எனும் உயரிய எண்ணாக வடிவெடுக்க,அதில் துளிப்பா மட்டும் விதிவிலக்கா என்ன ? மூன்றே வரிகளில் முத்தான கருத்துக்களை வாசகர் மனதிற்குள் புகுத்தும் சக்தி கவிஞர் இரா.இரவி அவர்களுக்கு உண்டு என்பதனை நிரூபணம்செய்ய வந்த நூலே 'மனதில் ஹைக்கூ'
ஆதியோடு அந்தமும் :
கடிகாரம் முதல் கணினி வரை ,பூசணிக்காயிலிருந்து பொக்ரான் வரை ,சம்மட்டி தொடங்கி சந்திராயன் வரை,காந்திதாசன் முதல் கண்ணதாசன் வரை, வாடும் ரோஜாமுதல் வாடாமல்லி வரை,அரேபியா முதல் ஆகாயம் வரை அலசி ஆராய்கிறது 64 பக்கங்களையுடைய மனதில் ஹைக்கூ எனும் அற்புத நூல்.
இதயப்பகுதி :
ஹைக்கூ திலகம் இரா.இரவியின் இந்நூலில் சமூக அத்துமீறல்கள் அப்பட்டமாக வெளிச்சமிட்டு காட்டப்பட்டிருக்கின்றது.மூடநம்பிக்கைகளின் ஆணிவேர் கிள்ளி எறியப்படுகின்றது.தகவல் தொழில்நுட்ப சாதனங்களின் வரைமுறையற்ற ஆதிக்கம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இயற்கை இடையிடையே வந்து நலம்விசாரித்து விட்டு போகின்றது.பாசமும்நேசமும் பாங்காய் பண் பாடுகிறது. தன்னம்பிக்கை ஆங்காங்கே
பளிச்சிடுகின்றது.ஒரு சமூக சீர்திருத்தவாதியின் ஒட்டுமொத்த பணியை செய்வதற்கு ' ஹைக்கூ' எனும் அஸ்திரத்தை கவிஞர் இந்நூலில் பயன்படுத்தியுள்ளார

இரத்த ஓட்டம் :
இந்த கவிதை தொகுப்பில் அஞ்சல் பெட்டி அழுகின்றது.தொலைக்காட்சிப்பெட்டி தொற்று நோய் பரப்புகின்றது.கைபேசி கதற வைக்கின்றது.அல்லி கூம்புகின்றது.பட்டாசு பற்றி வெடிக்கின்றது.பாம்பு இரை தேடுகின்றது.குப்பை கூட தத்துவம் பேசிச்செல்கின்றது.மொத்தத்தில் கற்கால கோடாரி முதல் தற்கால கணினி வரை கருவாக உருமாற்றியிருக்கிறார் கவிஞர்.
நவரத்தின குவியல் :
பழமொழியை காலத்திற்கு ஏற்றாற் போல் புதுமொழியாக மாற்றுவது என்பது கவிஞர் இரா.இரவி அவர்களுக்கு கை வந்த கலை.
குஞ்சுகள் மிதித்து
கோழிகளுக்கு காயம்
முதியோர் இல்லம்.
நகைச்சுவை கவிதை :
மேலிருந்து குதித்தான்
மரணம் இல்லை
நீச்சல் குளம்.
'நச்'-என்று ஒரு கவிதை:
பாஸ் மார்க் வாங்கியும்
கிளாஸ் பாட்டிலுடன் வேலை
டாஸ்மாக் .

இளைஞர்களுக்கு ஓர் இலவசக்கவிதை :
மூளைப்புற்று நோய்
முற்றிலும் இலவசம்
செல்பேசியுடன் !
சொல் விளையாடல் கவிதை :
காசு கரியானது தீபாவளி
கரி காசானது
நெய்வேலி.
சமூகத்தை படம்பிடித்து காட்டும் கவிதை :
உலகெல்லாம் உறவு
பக்கத்து வீடு பகை
மனிதன்.

மனதார ...
ஒன்பதாவது மைல்கல்லை எட்டி, ஹைக்கூ இலக்கிய உலகிற்கு 'மனதில் ஹைக்கூ' எனும் ஒப்பற்ற நூலை வழங்கியிருக்கும் கவி சூரியன் இரா.இரவியின் பெயரும் புகழும் அலைகடல் தாண்டி அகிலம் முழுவதும் ஒலிக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Sep 25, 2010 5:09 pm

வாழ்த்துக்கள் கவியே ,,,,,



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 25, 2010 5:25 pm

நல்லதொரு விமர்சனம் ,மனிதனும் , நீச்சல் குளமும், டாஸ்மாற்கும் மிக அருமையான நச் கவிதைகள், தொடரட்டும் இதுபோன்ற விமர்சனங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Dec 09, 2010 10:26 pm

நூலாசிரியர் :இரா.இரவி
நூலின் பெயர் :ஹைக்கூ ஆற்றுப்படை
நூல் விமர்சனம் :ச.சந்திரா
ஹைக்கூ சாலை :
பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறுத்துவதே ஆற்றுப்படை என்பர்.துளிப்பாஎன்றால் என்னவென்றே அறியாதோரை அறியச் செய்வதோடு அவர்களை ஹைக்கூ சாலையில்நிரந்தரமாக பயணிக்க வைக்கும் வல்லமை இரா.இரவியின் ஹைக்கூ ஆற்றுப்படை எனும்நூலுக்கு உண்டு. எனவே இப்பெயர் இந்நூலுக்குப் பொருத்தமான ஒன்றே !
தமிழன்னைக்கு மாலை :
அமுதபாரதி முதலாக தேவகிமைந்தன் ஈறாக உருவாக்கிய முத்துக்களை , கவிஞர்இரா.இரவி தன் சொல்லிழைகளால் திறனாய்வு மாலையாகத் தொடுத்து தமிழன்னைக்குச்சூட்டி அழகு பார்த்திருக்கிறார்.துளிப்பா என்பது இரா.இரவியின் இரத்தத்தில்கலந்த ஒன்றாக இருக்குமோ என்று எண்ணி அதிசயிக்கும் அளவிற்கு அவர் இந்தமூன்று வரிகளுக்குள் மோகம் வைத்திருப்பதை இந்நூலின் வழி உய்த்துணரமுடிகிறது.அவர்தம் இலக்கிய பயணத்தில் அதிகம் பயன்படுத்திய சொல்ஹைக்கூவாகத்தான் இருக்க வேண்டும் என்பது என் போன்றோரின் கணிப்பு.
நதியோட்டம் :
கோவிலுக்குள்நுழையும் கோபுர வாயிலாய் நூலாசிரியரைப் பற்றியும் ,நூலின் தன்மைகுறித்தும் சொல்லிக்கொண்டே ,திறனாய்வுக் கோட்டைக்குள் நுழையும் இலாவகம்கவிஞர் இரா.ரவிக்கே உரியது.இலக்கியம் ந்ன்கு கற்றோர் பயன்படுத்தும்செந்தமிழ் வார்த்தை களை தம் திறனாய்வின்போது அவர் உபயோகிப்படுத்தும்விதம்நம்மையெல்லாம் ஆச்சிரியப்படவைக்கும்.இந்நூலில் வாசித்துணர்ந்தவிமர்சனங்கள் ,சுட்டிக்காட்டிய மேற்கோள்கள் திறனாய்வாளரின் சமூக அக்கறையை,மூட நம்பிக்கை எதிர்ப்பை ,சாதி மத இன மொழி பேத மறுப்பைவெளிப்படுத்தும்விதமாக உள்ளன.
உதாரணத்திற்கு ஒன்றிரண்டு :
" கொடி கொடுத்தீர் !
குண்டூசி தந்தீர் !
சட்டை ?" (புதுவைத் தமிழ்நெஞ்சன் )
ம.ஞான சேகரன் கவிதை :
" தேள் கொட்டியது
கணியனை
குறி சொன்ன நேரம் !"
தீண்டாமையை மறுக்கும் ஒரு கவிதை :
" தொடருது மனக்கவலை
அறுபதாம் ஆண்டு விடுதலை நாளிலும்
தொங்குவது இரட்டைகுவளை "
அகலமா ? ஆழமா ?
இலக்கியத்தின்உட்புகுந்து அதனை முழுமையாய் அனுபவிக்கும் உணர்வு உடையவரும் ,நுண்மாண்நுழைபுலம் மிக்கவரும் மட்டுமே ஒரு சிறந்த திறனாய்வாளராக இருக்கமுடியும்.மேற்கூறிய கூற்றிற்கு இரா.இரவிபொருத்தமானவர்தான் என்பதை இந்தஹைக்கூ ஆற்றுப்படை நூல் நன்றாகவே நிரூபணம் செய்கின்றது.சமூக நல்லெண்ணமும்,அழகியல் உணர்வும் ,மரபு போற்றும் தன்மையும் திறனாய்வாளருக்கு வேண்டியஇன்றியமையாத பண்புகளாகும்.இவையும் இரவி அவர்களுக்கு பொருந்திவருகிறது.இவரது விமர்சன நோக்கு சமுத்திரம் போல் ஆழ்ந்தும் ,மைதானத்தைப்போல் படர்ந்தும் ,அம்பைப் போல் கூர்மையாகவும் இருப்பதை நூல் முழுமையும்வாசித்துப் பார்த்தால் உணர முடியும்.
அறிவியலா ? இலக்கியமா ?
ரோஜாவைஇதழ் இதழாய்ப் பிரித்துப் பார்த்துச் செய்யும் ஆய்விற்கு அறிவியல்ஆராய்ச்சி எனப் பெயர். அதுவே ஒற்றை ரோஜாவை உற்றுநோக்கி அதில் இலயித்துஅதனைக் குறித்து உணர்வுப்பூர்வமாக எழுதினால் அதற்கு இலக்கிய ஆராய்ச்சிஎனப் பெயர்.ஹைக்கூ குளத்தில் மலர்ந்த தாமரை, அல்லி ,குவளை போன்ற பல்வேறுபூக்களை கவிஞர் இரா.இரவிஉற்றுநோக்கி உணர்ந்ததன் விளைவுதான் இந்தஆற்றுப்படை நூல் .படைப்பாளி எவ்விதமாக உணர்ந்து எழுதினானோ அதுசிதையாமல்,அதன் வெளிப்பாடாக விமர்சனம் இருப்பின் அதுவே சிறந்ததிறனாய்வு.இவ்விதமாய் எழுதுவது கவிஞர் இரா.இரவிக்கு கை வந்த கலையாகஇருக்கிறது.
அதிசயமும் ஆச்சர்யமும் :
ஒரேவாசிப்பில் ஒப்பற்ற 26 நூல்களின் உணர்வோட்டத்தைச் சொல்லிவிடுகின்றார் இரவிஅவர்கள். திறனாய்வின்போது சுட்டிக்காட்டியிருக்கும் ஹைக்கூ கவிதைகளும்,அவற்றிற்கு அவர் தந்துள்ள விளக்கங்களும் அருமை.சின்னஞ்சிறுவாக்கியங்களாக மொழிநடை இருப்பதனால் வாசிப்போர்க்கு விமர்சனம் எளிதில்புரிந்தும் விடுகிறது.இலக்கியத்தை முழுமையாக கற்றறிந்தவரும் இப்படிதிறனாய்வு செய்ய இயலுமா என அதிசயவைக்கிறது இவரது ஜப்பானிய-தமிழ் ஹைக்கூநூல் விமர்சனம் (முனைவர் பட்ட ஆய்வேடு)
மனதார......
இடைவிடாது இயங்கிக் கொண்டிருக்கும் ஹைக்கூ திலகம் இரா.இரவியின் பத்தாவதுமைல்கல்லான ஹைக்கூ ஆற்றுப்படை நூல் அவரை கவிதை உலகிலிருந்து திறனாய்வுஉலகத்திற்கு இட்டுச் சென்றிருக்கின்றது.இந்த மாற்றம் கவிஞர் இரா.இரவிஇலக்கிய வானில் மென்மேலும் சுடர்விடுவதற்கு உறுதுணை புரியும்.படிப்பாளியைபடைப்பாளியாக்கும் இந்த ஆற்றுப்படை நூல் இன்னும் பல துளிப்பா கவிஞர்களைஇலக்கிய உலகிற்கு தரும் என்பதில் எவ்வித ஐயமும் உண்டோ ?கவி சூரியன்இரா.இரவி அவர்களுக்கு என்போன்ற ஹைக்கூ பிரியர்களின் மனமார்ந்தவாழ்த்துக்கள்.



--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி




eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Jan 08, 2011 4:22 pm

நூல் விமர்சனம்
நூலின் பெயர்:சாகாவரம் (நாவல்)
நூலாசிரியர் :முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப.
திறனாய்வாளர் :முனைவர்.ச.சந்திரா
கோபுர நுழைவாயில் :

நாவலாசிரியர் வெ.இறையன்பு அவர்கள் தான் பார்த்த, கேள்விப்பட்ட,உணர்ந்த
செய்திகளோடு கற்பனையையும் வெகுவாக ஏற்றி 'சாகாவரம்' எனும் நூலை இலக்கிய
உலகிற்குப் படைத்து அளித்துள்ளார்.இப்புதினத்தில் சொல்லப்பட்டிருக்கும்
நிகழ்வுகள் அனைத்தும் தலைமை கதாமாந்தரின் மனதைப் பாதித்த ,உருக்கிய,
நெஞ்சைவிட்டு அகலாத மறக்க இயலாத நிகழ்வுகளின் தொகுப்பாக உள்ளது.நாவலின்
மையக்கரு உண்மையும் கற்பனையும் கலந்த கலவையாக இருக்கிறது.நாவல் ஓட்டத்தில்
நிகழ்வுகள் மிகுதியாக இருப்பினும் சீரான சங்கிலிக் கோர்வையாய் ஆசிரியர்
தொடுத்திருப்பதால் நூலை வாசிப்போர் கதையை நன்கு உணர முடிகின்றது.

அகமும் புறமும் :

' தனிமை கொடுமையல்ல :அது இனிமையே '- என்பதைச் சமூகத்திற்குச் சொல்ல வந்ததே
இந்த சாகாவரம் நாவல்.ஆசிரியப் பணியில் இருக்கும் நாவலின் தலைமைக் கதாப்
பாத்திரம் வகுப்பறையை கருவறையாக எண்ணி போதனை புரிய ,புற உலகில் உலவும்
அவன் அக உலகிற்குள் அடியெடுத்து வைப்பதை மையமாகக் கொண்டு இந்த புதினமானது
உருவாக்கப்பட்டுள்ளது.கற்பனை,உணர்வு,கருத்து,வடிவம் என்ற நாவலின் இலக்கியக் கூறுகள் அனைத்தும் உள்ளடக்கிய உன்னத நூல் இது எனலாம்.

கனியும் சாறும் :

மனித மனத்திற்கு பாடம் புகட்டுவது,தடம் மாறுகின்றவனை திசை திருப்புவது
,இயற்கையோடு இயைந்து வாழ்வது ,யதார்த்தத்தை நிலை நிறுத்துவது , துயரங்களை
அலுக்காமல்,சலிக்காமல் உணர்வோடு துல்லியமாய் எடுத்துரைப்பது எனப் பல்வேறு
நிலைக் களன்களோடு பயணிக்கிறது இந்த சாகாவரம் நாவல்.மிக நெருங்கிய
நண்பர்களின் அடுக்கடுக்கான மரணம் கதைத்தலைவன் நசிகேதனை அயரவைக்க ,அதன்
காரணமாய் அவன் மனநிலை தடுமாற ,ஆசிரியப் பணி விடுத்து கொல்லி மலை நோக்கி
நகர்கிறான்.ஞானி ஒருவரின் உறுதுணையுடன் ,ஓலைச்சுவடிகள் அவனுக்கு கிட்ட
,அவை நிதானமாய் அவனால் படிக்கப்பட்டு ,மனதில் பதித்து வைக்கப்பட்டு ,அந்த
சொல்வடிவம் செயல்வடிவம் ஆக்கப்படுவதுதான் நாவலின் உள்ளடக்கம்.

முடிவில்லா பயணம் :

புதினத்தின் கதையை வாசிப்போரும் கதைத்தலைவன் நசிகேதனுடன் விடாமல்
பயணிக்கிறோம்.அவன் மேட்டில் ஏறும்பொழுது நாமும் ஏறுகின்றோம் ;அவன்
பள்ளத்தில் இறங்கும்பொழுது நாமும் இறங்குகிறோம் !ஆம் !ஆசிரியர் தம்
மொழிநடைச் சிறப்பால் தலைவனோடு நம்மையும் பயணிக்க வைக்கிறார்.மரணத்தைக்
கண்டு நடுநடுங்கும் இந்த கதாப்பாத்திரம் போகப் போக மரணமில்லா பெருவெளியை
எவ்விதம் அடைகின்றது என்பதைப் படிப்படியாகச் சொல்வதே நாவலின்
கதைஓட்டம்.இந்த வித்தியாசமான பயணத்தில் அவன் சந்திக்கும் ஒவ்வொரு
கதாப்பாத்திரமும் சின்னஞ்சிறு பாத்திரங்களாக இருப்பினும் கூட அவை
வாசிப்போர் மனதில் தங்கிவிடுகின்றன.

இரத்த ஓட்டம் :

நாவலின் கதாநாயகன் நூலின் பிற்பகுதியில் கற்பனை உலகை நோக்கி நகர்கின்ற
வேளையில் ஒலைச் சுவடியில் கூறியுள்ளபடி அமிழ்ந்து,தவழ்ந்து,கடந்து,தாண்டி
-என மேடு பள்ளம் ஏறி,இறங்கி பெருவெளியை அடையும் பொழுது வாசிப்போரும்
அவ்வுணர்வைப் பெறுகிறோம்.நாவலில் கொதிநீர் குளிர்கின்றது;முள்வேலி
புல்வெளியாகின்றது;கனி கசக்கின்றது;புதைகுழி மெத்தையாகின்றது;இருள் வழி
காட்டுகின்றது;வெளிச்சம் தடுமாற வைக்கின்றது;மறதி மன்றாடுகின்றது;தலைவனின்
மிக நீண்ட பயணத்தின் போதான இந்நிகழ்வுகளனைத்தும் தத்துவங்கள் பலவற்றை
உதிர்த்துச் செல்கின்றன.காதல்,களிப்பு,காமம் -என எவ்வித
ஆட்டபாட்டமுமின்றி, மருந்துக்கு கூட ஓர் இளம்பெண் இல்லாமல் நாவலை நயமுடன்
நகர்த்திச் செல்லும் ஆசிரியரின் சாமர்த்தியம் வியக்கத்தக்க ஒன்று.
கல்வெட்டுத்தொடர்கள் :
* காடுகளைக்காட்டிலும் இருண்மையானது மனித மனம்
*இருத்தலின் இயல்பான நிகழ்வுகளில் தலையிடாமல் இருப்பதே கருணை.
*எல்லோருமே பிச்சைக்காரர்கள்தான்.பிச்சை கேட்கிற நபர்கள் மட்டுமே மாறுகின்றனர்.


*அழகாக இருக்க வேண்டும் என்கிற பிரச்சனை இல்லாமல் எதைச் செய்தாலும் அது அழகாகி விடுகின்றது.
அஞ்சுக! அஞ்சற்க!:

ஆசிரியர் வெ.இறையன்பு நாவலில் குறிப்பிட்டிருக்கும் தேவபவளபுஷ்பம்
உடற்பிணியைப் போக்குவது போல , சாகாவரம் நாவலில் சொல்லவந்த கருத்துக்கள்
உள்ளப் பிணியைப் போக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.'எதையும்
இழக்கக்கூடாது எனவந்து, அனைத்தையும் இழந்துவிட்டோமே' என்று இந்நாவலின்
கதைத்தலைவன் போல் புலம்பாது ,அஞ்சுவதற்கு அஞ்சி,அஞ்ச வேண்டாததற்கு
அஞ்சாமல் வாழ இந்த சாகாவரம் நூல் வழிவகுக்கும்..பாரத தேசத்து மொழிகள்
மட்டுமல்லாது பன்னாட்டு மொழிகளிலும் மொழிஆக்கம் செய்யப்பெறுவதற்கான
தகுதியை உடைய வெ.இறையன்பு அவர்களின் படைப்புக்கள் அனைத்தும் அலைகடல்
தாண்டி அகிலம் முழுதும் வாழ்வோரின் மனதில் நிலைபெற மனமார்ந்த
வாழ்த்துக்கள். இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா 677196

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Apr 01, 2011 9:11 pm

முனைவர் வெ .இறைஅன்பு இ. ஆ .ப அவர்களின் தன்னம்பிக்கை சிந்தனைகள் தொகுப்பு கவிஞர் இரா .இரவி
முனைவர் சுந்தர ஆவுடையப்பன் தொகுத்த
இறைஅன்புவின் சிந்தனை வானம் நூலில் இருந்து
தொகுப்பு கவிஞர் இரா .இரவி

நாம் கல்லாகப் படைக்கப் பட்டோம் .நம்மை நாம்தான் சிற்பமாக


மாற்றிக்கொள்ள வேண்டும் .இதில் நாமே கல் நாமே உளி நாமே சுத்தியல்
நாமே சிற்பியும் கூட.

நம் திறமையும் தனித் தன்மையும் நேர்மையும் மட்டுமே
நமக்கு சிபாரிசு சான்றிதழ் தரவேண்டும் .

எவன் சோம்பலோடு இருக்கிறானோ
அவனுக்கு வறுமைதான் வரமாக அளிக்கப்படுகிறது



தான் இன்னும் பயல வேண்டி உள்ளது எனத் தன்
வெறுமையை உணர்பவனே பண்டிதனாக முடியும் .

தலைகனம் இழப்பவர்களே தலை நிமிரவும் முடியும் .

வார்த்தைகளால் ஒருவரை குணப் படுத்தவும் முடியும்
ரணப் படுத்தவும் முடியும் .

புல்லாங்குழல்கள் எப்போதும் காலியாக கிடக்கின்றன
குப்பைத்தொட்டிகள் நிறைந்து இருப்பதாக குதூகலிக்கின்றன .

பிரச்சனைகளை எதிர் கொள்வதன் மூலம்தான்
தீர்வு காண முடியுமே தவிர அவற்றிலிருந்து
ஓடி ஒதுங்குவதால் தப்பிக்க முடியாது .

பெண்கள் துணிவு கொண்டால் அது ஆண்களைக் காட்டிலும்
பல மடங்கு தீவிரமாக இருக்கும் .

நமது தோல்விகள் நமக்கு கல்விச் சாலைகளாக இருக்கின்றன
வாழ்க்கை நம்பிக்கையிலும் அழகுணர்விலும் அடங்கி இருக்கிறது .

நம்பிக்கையுள்ளவன் கண்களில் இருள் கூட விளக்குகளாகி
எதிர்காலத்தை வெளிச்சமாக்குகிறது .

ஆதிக்கம் செலுத்தாமல் நடத்திக் காட்டுவதே சிறந்த நிர்வாகம் .

அயர்ச்சியும் அலுப்பும் ஏற்படாமல் வாழ நாம் நேரத்தை சரியாகப்
பயன்படுத்த கற்று இருக்க வேண்டும் .

கடிகாரத்தில் இருப்பவற்றை முள் என்று சொல்வது
சற்று ஏமாந்தால் அவை குத்திவிடும் .

நாம் எந்தப் பணிக்காக முயற்சி செய்கிறோமோ அதில் முழுமையும்
தீவிரமும் வேண்டும் .

வாழ்க்கை உழைப்பை நேசிக்காததால்தான் புளித்துப் போய் விடுகிறது .

வலியைப் பொறுத்துக் கொள்ளாத மூங்கில் எப்படி புல்லாங்குழல் ஆகமுடியும் .

மனிதன் எப்போது தேங்குகின்றானோ அப்போது அவன் நதியாக இல்லாமல் குட்டை யாகி விடுகிறான் .

முயற்சி முழுமையாக இருக்குமேயானால் விதி என்று சொல்லப்
படுபவற்றை மாற்றி அமைக்க முடியும் .

காலைக் கடனைப் போல வியர்வையும் கட்டாயமாக்கப்படும் சமூகத்தில்தான் சாதனைகள் பூத்துக் குலுங்கும் .

நாம் நேசிக்காவிட்டால் உழைப்பு வெறும் பிழைப்பு நோக்கி நடத்தப் படுகிற சாதாரண செயல்பாடு .
.
மகுடதிற்காகக் குனிவதும் தலைகுனிவுதானே

பதற்றம் இருந்தாலே மூளையின் செயல்பாடு பாதியாகக் குறைந்து விடும் .

பதற்றம் ஏன் ?ஏற்படுகிறது என்று ஆராய்ந்தால் அதற்கு முக்கியக் காரணம் திட்டமிடாமைதான் .

நாம் எதைக் கண்டு அஞ்சி ஓடுகிறோமோ அது நம்மைப் பயமுறுத்துகிறது
மனிதனை பின்னுக்குத் தள்ளும் அசுரபலம் பயத்திற்கு உண்டு .
சத்தியத்துடன் நிமிர்ந்து நிற்கிறவன் பயம் கொள்ளத் தேவையில்லை .
பயம் கொள்ள ஆரம்பித்தால் அது விஸ்வரூபம் எடுத்து படாதபாடு

படுத்துகிறது

புத்திசாலிகள் பாம்புகளைக் கூட மாலையாக்கிக் கொள்கிறார்கள் .

வாழ்க்கை என்பது அடுத்தவர்களிடமிருந்து கற்றுக்கொள்வது
அவர்கள் அனுபவங்களிலிருந்து நம்மை உருவாக்கிக்கொள்வது.

அன்பு விதையைப் போல மென்மையாகவும்
கோபம் கல்லைப் போல கடினமாகவும் இருக்கின்றன .

தொடர்ந்து மாணவனாக இருக்கச் சம்மதிப்பவர்கள்
சிறந்த ஆசிரியர்களாகத் திகழ முடியும் .

நமக்குள் இருக்கும் சக்தி வெளிப்பட வேண்டும் என்றால் நம்மைப்
போராடச் செய்கின்ற சுழல் நிலவ வேண்டும் .சில நேரங்களில்
நாமே சுழலை உருவாக்க வேண்டும் .

.
ஒவ்வொரு கண்டுபிடிப்பும் ஏன்? முடியாது என்று
கேட்டவர்களால் உருவானது .

மோசமான துணையைக் காட்டிலும்
அமைதியான தனிமை அழகானது .

ஆன்மிகம் என்பது சாமி கும்பிடுவதில் இல்லை .எந்த உயிரையும்
துன்புறுத்தாமல் இருப்பதுதான் உண்மையான ஆன்மிகம்.

கடவுள் நம்மைக் காப்பற்றட்டும் .நாம் கடவுளைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லை
.
நாம் இறைமையை வழிபடுவதுகூட நம்பிக்கையினால் அல்ல
சந்தேகத்தினால்தான் .

இயல்பாகப் பூக்கிறபோது புன்னகையும் பூவாகிவிடுகின்றது .

இயற்கையின் ஒவ்வொரு செயலும் நன்றிஅறிதலினால் நிகழ்கிறது.
.
உணராத ஆற்றலும் ஊறாத நீரும் தாகத்தைத் தணிக்க முடியாது.
.
புதிதாகப் பிறப்பது என்பது ஒவ்வொரு நாளும் நடக்க வேண்டும் .
இன்னும் சொல்லப் போனால் ஒவ்வொரு நொடியும் அது நிகழ வேண்டும் .

எல்லோரும் உயர்ந்த குறிக்கோளுடன்தான் பயணத்தை ஆரம்பிகிறார்கள்.ஆனால்அதில் விடாப் பிடியுடன் வைராக்கியமாக
இருப்பவர்கள் ஒரு சிலர்தான் .அவர்கள்தான் நீடித்து நிற்பவர்கள் .
பலர் குறிக்கோளை வரையறுக்கிறார்கள்.ஆனால் சிலர் மட்டுமே
அதில் உறுதியாக இருக்கிறார்கள் .

உண்மையாய் இருப்பவர்கள் தமக்குள் மலர்ச்சியைப் பெற்று இருப்பவர்கள் .ஜீவித்து இருப்பவர்கள்.கொஞ்ச காலம் வாழ்ந்தாலும்
தங்களைச் சுற்றிப் பல எண்ணஅலைகளை எழுப்பிக் கொண்டேஇருக்கிறார்கள்

--
--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி




eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Apr 04, 2011 10:00 pm

இணையத்தில் இரவி
கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா

சாதனமா?சீதனமா?

அன்று தமிழ் வளர்க்க, அதியமான் தனக்கு கிடைத்த அரிய
நெல்லிக்கனியை ஔவைக்கு வழங்கி கடையெழுவள்ளல்களுள் ஒருவனானான்.இன்றோ இலக்கிய
ஆர்வலர்களுக்கு இல்லம் தேடிவந்து தமிழ் இணையதளங்கள் கனியை வழங்கிச்
செல்கின்றன. இளைய தலைமுறையினருக்கு அறிவியல் தந்திருக்கும் அதிசய சாதனமே
இணையம்.இயந்திரயுகத்தில் இலக்கியவாதிகளுக்கும் இலக்கியரசனை
மிக்கவர்களுக்கும் கால இடைவெளி மற்றும் தூர இடைவெளியைக் குறைக்க வந்த தகவல்
தொடர்பு சாதனமே தமிழ் இணையம் எனலாம்.

ஆறிலிருந்து அறுபதுவரை :


!ஏட்டில் படித்த நாளும் போய்,புத்தகத்தைப் புரட்டிய காலமும்
படிப்படியாய் மாறி,இன்று ஆறிலிருந்து அறுபதுவரை இணையத்தை நாடுவது
நடைமுறையாகிவிட்டது.காலத்தின் ஓட்டத்தில் தமிழின் அவசியத்தை வளரும்
தலைமுறையினர் புரிந்துகொள்ள,உலகின் பிறமொழிகளோடு தமிழ்மொழியும் ஈடுகொடுத்து
நடைபோட,மொழிப்பற்றைப் பெருக்க-என பல்வேறு நற்பணிகளைச் செய்துவரும் ஒரு
வியத்தகு சாதனமே இணையம்

கவிக் களஞ்சியம்:.

அன்றாடப் பணிகளால் மனம் அயர்ந்து, சற்றே இளைப்பாற எண்ணி தமிழ்
இணையத்திற்குள் புகுந்தேன்.கண்ணிற்பட்டது கவிமலர்.காம். அத்தளத்தில் புதுக்
கவிதை,ஹைக்கூ,நகைச்சுவைத் துணுக்குகள் என எண்ணற்ற படைப்புக்கள்.கவிமலரை
உருவாக்கிய பிரம்மா யாரென உற்றுநோக்கினேன்.அம்மூலவர் யாரெனில் மதுரைக்
கவிஞர் இரா.இரவி.தமிழக அரசின் சுற்றுலாத்துறையின் மதுரைப் பிரிவின்
துணைஅதிகாரியாகப் பணியாற்றிவரும் இவர் இலக்கிய ஆர்வலர்களின் உள்ளங்களிலும்
உலா வருவதை அறிந்தேன்.கவிமலரோடு மேலும் மூன்று வலைதளங்கள் இவருக்கு
இருப்பதும் தெரியவந்தது.இந்த நான்கு தளங்களும் முப்பத்தி நான்கு
வலைதளங்களோடு இணைக்கப் பட்டிருப்பது வியக்கத்தக்க ஒன்றே.
இன்னும் ஒரு
ஆச்சிரியப்படத்தக்கச் செய்தி என்னவெனில், கவிஞர் இரா.இரவியின்
கவிமலர்.காமைப் பார்வையிட்டவர்கள் நான்கு இலட்சத்திற்கும் மேலான இலக்கிய
பிரியர்கள் என்பதே.இவையெல்லாம் ஒருபுறமிருக்க,தற்செயலாக தமிழ்த்தோட்டம்
எனும் இணையத்தைப் பார்க்க நேர்ந்தது.அதில் பெரும்பான்மையான இலக்கியப்
பதிவுகளைச் செய்தமைக்காக செவ்வந்தி எனும் சிறப்புப் பட்டம் பெற்றிருக்கும்
செய்தியும் அறியமுடிந்தது.ஈகரை களஞ்சியம் எனும் தமிழ் இணையத்திலோ இவரது
படைப்புக்கள் நிரம்பி வழிகின்றன.

எங்கும் எதிலும்:


எழுத்து.காமில் இவரது கவிதைகள் சிறப்புத்தேர்வு செய்யப்பட்டு
வெளியிடப்பட்டிருப்பதைக் காண முடிந்தது.தாளம்.நியூஸ்.காமிலோ இரா.இரவியின்
நூல் விமர்சனங்களை வாசிக்க நேர்ந்தது.தான் ஒரு படைப்பாளியாக இருந்து
பத்துக்கும் மேலான கவிதை நூல்களை வெளியிட்டதோடு மட்டுமல்லாமல் பிறரது
சிறந்த நூல்களுக்கான விமர்சனங்களையும் வாசகர் என்ற நிலைக்கு மாறி
, எழுதி
இணையத்தில் பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்றாகும்.இவரது ஒவ்வொரு
விமர்சனமும் உணர்ந்து வாசிக்கப்பட்டு படைக்கப்பட்ட உன்னத
விமர்சனமாகும்.படைப்பாளி தரமான நூலைப் படைக்க வேண்டும் என்ற
நல்லெண்ணத்துடன் நிறைகளோடு நூலில் குறையிருந்தாலும் அவற்றைச் சுட்டிக்
காட்டவும் இரா.இரவி தவறுவதில்லை.

மதிப்புரையும் தொகுப்புரையும்:

இவரது படைப்புக்கள் நான் வாசித்தறிந்த வரையில்
முப்பதுக்கும் மேலான தமிழ் இணையங்களில் பதிவு செய்யபட்டிருக்கின்றது.கவிதை,
திறனாய்வு மட்டுமல்லாது தான் நேரில் சென்று கேட்டறிந்த பிரபலமானவர்களின்
சொற்பொழிவின் தொகுப்புரையும் தமிழ் இணையங்கள் பலவற்றிலும் இவரால் பதிவு
செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.மேலும் இலக்கிய ஆர்வலர்களின் வசதிக்காக
இலக்கியக் கூட்டங்களுக்கான அழைப்பிதழ்களின் வழி தமிழ்.ஆத்தர்ஸ்.காமில்
தவறாது அழைப்பு விடுப்பது குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒரு
செய்தியாகும்.இதுபோல் நடந்து முடிந்த இலக்கியம் சார்ந்த கூட்டங்களின்
முக்கிய நிகழ்வின் புகைப்படங்களும் கவிஞர் இரா.இரவியால் பல்வேறு தமிழ்
வலைதளங்களில் பொருத்தப்பட்டிருப்பதும் அவரது தமிழியல் ஆர்வத்தை
புலப்படுத்துகிறது.


ஈடு இணையுண்டோ?

. கவிஞர் இரா.இரவியின் கவிதைகள்
மூடத்தனத்தின் முதுகெலும்பை முறிக்க வருவன,பழமை மரபைச்
சாடுவன,புதுமையைப்புகுத்துவன,
தமிழின உணர்வை வெளிப்படுத்துவன,பெண்மையைப்
போற்றுவன,இயற்கையை வியந்து பாடுவன,சமூக இழிநிலையைச் சுட்டிக்காட்டுவன-என
சொல்லிக்கொண்டே போகலாம்.தேசத்தலைவர்களின் பிறந்த நாள்,நினைவு
நாள்,நடப்புச்செய்தி இவற்றையெல்லாம் மனதில் வைத்து
அவ்வப்பொழுதில்
இணையத்தில் கவிதைகளை மறவாது பதிவு செய்வதில் கவிஞர் இரா.இரவிக்கு ஈடு இணை
வேறு எவருமில்லை.

உதாரணத்திற்கு ஒன்றிரண்டு ஹைக்கூ:

"தாயிருக்க சேய்

சேயிருக்க தாய்

சுனாமி!"

இயற்கையை வியத்தல்:

"இயற்கை எனும் கவிஞன்

வானம் எனும் தாளில்

எழுதிய கவிதை வானவில்!"

ஆங்கிலத்திலும்துளிப்பாக்கள்:

Rainbow:

"sweet verse

written on skypaper

By nature poet"(kavimalar.com)

அன்று முதல் இன்றுவரை கவிஞர்கள்:

திருவள்ளுவர்:

"தமிழ் என்ற சொல்லைப் பயன்படுத்தாமலேயே

தமிழுக்கு மகுடம் சூட்டிய மாண்பாளன்" தாளம்.நியூஸ்.காம்

கவி சுரதா:

"இவர் பாடாத உவமை இல்லை!

இவர் பாடாத உவமை உவமையே இல்லை!"

அப்துல்கலாம்;

"செய்தித்தாள் விற்றுப் படித்து

தலைப்புச் செய்தி ஆனவரே"

என்று மேனாள் குடியரசுத் தலைவரைப் பாடியதோடு அவரின் அழைப்பின்பேரில்
கலாமைச் சந்தித்து அவரின் பாராட்டுதல்களைப் பெற்ற பெருமை கவி இரவிக்கு
உண்டு.கவிமலர்.காம் இதனை புகைப்படத்துடன் நிரூபணம் செய்கின்றது.


கவி இரவி காலத்தோடு கைகோர்க்கும் திறம்:

அணுகுண்டு போட்டனர்!

புல்பூண்டு கருகியது!

உயிர்கள் ஒழிந்தன!

ஓய்வின்றி உழைத்தனர்.

உச்சம் தொட்டனர்!

சுனாமி வந்தது!

சும்மா புரட்டிப் போட்டது!

அணு உலை வெடித்தது!

ஆருயிர்கள் மடிந்தன!

இனியும் உழைப்பர்!

உலகின் உச்சம் தொடுவர்!

விதியை நினைத்து

வீழமாட்டார் ஜப்பானியர்! (எழுத்து.காம்)

பெண்மைகுறித்த கவிதை:

"பெண்ணைக் குறை சொன்னால் பொறுத்துக் கொள்வாள்!

பெற்றோரைக் குறை சொன்னால் கொதித்து எழுவாள்!
" " (தன்னம்பிக்கை.காம்)

மனதார...

தமிழ் இணையத்தின் எந்தவொரு வலைதளத்தில் புகுந்தாலும் கவி
இரா.இரவியின் படைப்புக்களைப் பார்க்க இயலும்.பெரும்பாலோர்க்கு வீடே உலகமாக
இருக்க கவிக்கோ இணையமே உலகமாக இருப்பது தெள்ளத்தெளிந்த உண்மை.
பதினாறு
விருதுகளைப் பெற்ற பெருமையினை உடைய இவருக்கு இணையம் சார்பான விருதினை
வழங்காமல் இருப்பது ஏனோ? என்ற ஆதங்கம் என்போன்ற இணையதள வாசகர்க்கு
உண்டு.கவி இரவியின் பேரும் புகழும் அலைகடல் தாண்டி அகிலம் முழுதும் பரவ
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
--
--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி




avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 04, 2011 10:13 pm

எனக்கு ஒரு கேள்விக்கு விடை தருவீர்களா ...? இது வரை உங்கள் புராணம் உங்கள் கவிதைகள் உங்கள் பெருமைகள் தவிர எதையுமே வேறு பதிவுகளே நீங்கள் பதிவதில்லையே..?

என்னவோ எங்களுக்கு உங்கள் கவிதைகள் என்னும் வரப்பிரசாதம் அளித்துவிட்டு வரம் தந்த கடவுள் உடன் மறைவது போல மறைந்து விடுகிறீர்கள்... இதனை வெகுநாட்களாக கவனித்துவிட்டு இன்று ஆற்ற முடியாமல் கேட்கிறேன்.

ஒரு கருத்துக்களம் என்றால் அதில் பல்வேறு விதமான விவாதங்கள் கவிதை விமர்சனம் என்றெல்லாம் இருக்கும். அதைப்போல நீங்கள் வேறெந்த கவிதைக்காவது ஒரு அருமை என்ற் சொல்லாவது இட்டு இருக்கிறீர்களா..? வருகிறீர்கள் .. உங்கள் கவிதைகளைப் பதிகிறீர்கள்...
சென்றுவிடுகிறீர்கள்...வேறெந்த பங்கெடுப்பும் ஏன் செய்வதில்லை...?

ஈகரை உங்களுக்கு விளம்பரத்தளமாக இருக்கவேண்டும் என்பதை நான் அனுமதிக்க முடியாது...

விரைவில் உங்கள் நிலையில் மாற்றம் இல்லை எனில் வேறுவிதமான நடவடிக்கை எடுக்கவேண்டிய நிலைக்கு நிர்வாகம் தள்ளப்பட்டு விடும்..!





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Apr 04, 2011 10:35 pm

கலை -ன்னாலே ரெட்டு!

சொல்வதை கேட்'கலை'ன்னா கட்டு!

இதுதான் ரைட்டு!!


சூப்பருங்க சூப்பருங்க





இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Apr 04, 2011 10:38 pm

நான் கூட இதைப்பற்றி சொல்ல நினைத்தேன் கலை....

நம் படைப்புகள் படைத்தாலும் மற்றவர் படைப்புகளுக்கும் முக்கியத்துவம் தந்து விமர்சனங்களோ பின்னூட்டங்களோ இடுவது படைப்பாளிகளுக்கு எத்தனை சந்தோஷத்தை கொடுக்கும் என்பதை நாலு பேருடைய கவிதைகள் படித்து பின்னூட்டம் இட்டு பாருங்க ரவி......உங்களுக்கே தெரியவரும்....

கலை சொன்னது சரியே..... சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக