புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊடலுக்கு பின் கூடல்....(மனம் உருகுகிறார் அரங்கன்) Poll_c10ஊடலுக்கு பின் கூடல்....(மனம் உருகுகிறார் அரங்கன்) Poll_m10ஊடலுக்கு பின் கூடல்....(மனம் உருகுகிறார் அரங்கன்) Poll_c10 
34 Posts - 52%
heezulia
ஊடலுக்கு பின் கூடல்....(மனம் உருகுகிறார் அரங்கன்) Poll_c10ஊடலுக்கு பின் கூடல்....(மனம் உருகுகிறார் அரங்கன்) Poll_m10ஊடலுக்கு பின் கூடல்....(மனம் உருகுகிறார் அரங்கன்) Poll_c10 
28 Posts - 43%
T.N.Balasubramanian
ஊடலுக்கு பின் கூடல்....(மனம் உருகுகிறார் அரங்கன்) Poll_c10ஊடலுக்கு பின் கூடல்....(மனம் உருகுகிறார் அரங்கன்) Poll_m10ஊடலுக்கு பின் கூடல்....(மனம் உருகுகிறார் அரங்கன்) Poll_c10 
1 Post - 2%
rajuselvam
ஊடலுக்கு பின் கூடல்....(மனம் உருகுகிறார் அரங்கன்) Poll_c10ஊடலுக்கு பின் கூடல்....(மனம் உருகுகிறார் அரங்கன்) Poll_m10ஊடலுக்கு பின் கூடல்....(மனம் உருகுகிறார் அரங்கன்) Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஊடலுக்கு பின் கூடல்....(மனம் உருகுகிறார் அரங்கன்) Poll_c10ஊடலுக்கு பின் கூடல்....(மனம் உருகுகிறார் அரங்கன்) Poll_m10ஊடலுக்கு பின் கூடல்....(மனம் உருகுகிறார் அரங்கன்) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஊடலுக்கு பின் கூடல்....(மனம் உருகுகிறார் அரங்கன்) Poll_c10ஊடலுக்கு பின் கூடல்....(மனம் உருகுகிறார் அரங்கன்) Poll_m10ஊடலுக்கு பின் கூடல்....(மனம் உருகுகிறார் அரங்கன்) Poll_c10 
311 Posts - 46%
ayyasamy ram
ஊடலுக்கு பின் கூடல்....(மனம் உருகுகிறார் அரங்கன்) Poll_c10ஊடலுக்கு பின் கூடல்....(மனம் உருகுகிறார் அரங்கன்) Poll_m10ஊடலுக்கு பின் கூடல்....(மனம் உருகுகிறார் அரங்கன்) Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
ஊடலுக்கு பின் கூடல்....(மனம் உருகுகிறார் அரங்கன்) Poll_c10ஊடலுக்கு பின் கூடல்....(மனம் உருகுகிறார் அரங்கன்) Poll_m10ஊடலுக்கு பின் கூடல்....(மனம் உருகுகிறார் அரங்கன்) Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
ஊடலுக்கு பின் கூடல்....(மனம் உருகுகிறார் அரங்கன்) Poll_c10ஊடலுக்கு பின் கூடல்....(மனம் உருகுகிறார் அரங்கன்) Poll_m10ஊடலுக்கு பின் கூடல்....(மனம் உருகுகிறார் அரங்கன்) Poll_c10 
17 Posts - 2%
prajai
ஊடலுக்கு பின் கூடல்....(மனம் உருகுகிறார் அரங்கன்) Poll_c10ஊடலுக்கு பின் கூடல்....(மனம் உருகுகிறார் அரங்கன்) Poll_m10ஊடலுக்கு பின் கூடல்....(மனம் உருகுகிறார் அரங்கன்) Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
ஊடலுக்கு பின் கூடல்....(மனம் உருகுகிறார் அரங்கன்) Poll_c10ஊடலுக்கு பின் கூடல்....(மனம் உருகுகிறார் அரங்கன்) Poll_m10ஊடலுக்கு பின் கூடல்....(மனம் உருகுகிறார் அரங்கன்) Poll_c10 
9 Posts - 1%
jairam
ஊடலுக்கு பின் கூடல்....(மனம் உருகுகிறார் அரங்கன்) Poll_c10ஊடலுக்கு பின் கூடல்....(மனம் உருகுகிறார் அரங்கன்) Poll_m10ஊடலுக்கு பின் கூடல்....(மனம் உருகுகிறார் அரங்கன்) Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஊடலுக்கு பின் கூடல்....(மனம் உருகுகிறார் அரங்கன்) Poll_c10ஊடலுக்கு பின் கூடல்....(மனம் உருகுகிறார் அரங்கன்) Poll_m10ஊடலுக்கு பின் கூடல்....(மனம் உருகுகிறார் அரங்கன்) Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஊடலுக்கு பின் கூடல்....(மனம் உருகுகிறார் அரங்கன்) Poll_c10ஊடலுக்கு பின் கூடல்....(மனம் உருகுகிறார் அரங்கன்) Poll_m10ஊடலுக்கு பின் கூடல்....(மனம் உருகுகிறார் அரங்கன்) Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ஊடலுக்கு பின் கூடல்....(மனம் உருகுகிறார் அரங்கன்) Poll_c10ஊடலுக்கு பின் கூடல்....(மனம் உருகுகிறார் அரங்கன்) Poll_m10ஊடலுக்கு பின் கூடல்....(மனம் உருகுகிறார் அரங்கன்) Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊடலுக்கு பின் கூடல்....(மனம் உருகுகிறார் அரங்கன்)

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 12:03 am

வெண்ணெய் வீசுகிறாள் தாயார்... மனம் உருகுகிறார் அரங்கன்!
ஊடலுக்குப் பின் கூடல்!
வருடத்தின் 365 நாட்களில், 322 நாட்களும் உத்ஸவம் காணும் பெருமாள், ஸ்ரீரங்கத்து அரங்கன்தான்! காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றுக்கு நடுவே பிரமாண்டமான ஆலயத்தில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீஅரங்கனுக்கு விழாக்களும் பிரமாண்டமாக நடைபெறுகின்றன.

அவற்றில் மிக முக்கியமான பெருவிழா, பங்குனி உத்திரத் திருவிழாதான்!

அட... வைகுண்ட ஏகாதசி முதலான எண்ணற்ற விழாக்கள் சிறப்புற நடைபெறும் ஸ்ரீரங்கம் ஆலயத்தில், பங்குனி உத்திர நன்னாள்தான் முத்தாய்ப்பான விழாவா என ஆச்சரியம் மேலிடுகிறதுதானே?!

ஸ்ரீபிரம்மாவே கொண்டாடிய முதல் உத்ஸவம், பங்குனி உத்திரத் திருவிழா என்கிறது ஸ்தல புராணம். அதனால்தான், இந்த விழாவை, ஆதிபிரம்மோத்ஸவம் எனப் பூரிப்புடன் தெரிவிக்கின்றனர், ஸ்ரீரங்கம் வாழ் பக்தர்கள்.

பங்குனி உத்திர விழாவின் இன்னொரு சிறப்பு என்ன தெரியுமா? பெருமாளுக்கும் தாயாருக்கும் இடையே ஊடல் நிகழ்ந்து, பிறகு இருவரும் இணைந்தது ஒரு பங்குனி உத்திர நன்னாளில்தான்! அதுமட்டுமா? ஸ்ரீராமானுஜர், பெருமாளின் திருவடியை அடைவதற்காகத் தேர்வு செய்ததும் இந்தப் புண்ணிய நாளைத்தான்.

பெருமாளுக்கும் தாயாருக்கும் ஊடல் என்பதை ஏதோ கணவன்-மனைவி சண்டையாகப் பார்க்கக்கூடாது. அது, ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடையே நடைபெறுகிற பாசப் போராட்டம் என்பார்கள், ஆன்மிகச் சான்றோர். அதாவது, மனைவி என்பவள் ஜீவாத்மா. ஜீவாத்மாவைத் திருப்திப்படுத்துதல் என்பது இயலாத காரியம். எனவே, ஜீவாத்மாவான மனைவியும், பரமாத்மாவான கணவனும் தங்களுக்குள் நிகழ்கிற ஊடல்களைப் பெரிதுபடுத்தாமல், அனைத்தையும் மறந்து, அனுசரித்து இணைந்து வாழ்ந்தால்தான் பேரின்பத்தை அடைய முடியும் எனும் உயரிய தத்துவத்தை விளக்குகிறது இது.

இந்த அரியதொரு கருத்தை உலக மக்களுக்கு உணர்த்தும் வகையில், பங்குனி உத்திர நன்னாளில் ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் மட்டையடி உத்ஸவம் எனும் பிரளயகலச வைபவம் நடைபெறுகிறது.

சரி... பெருமாளுக்கும் தாயாருக்கும் என்ன பிரச்னை? ஏன் ஊடல்?

திருச்சியில் உள்ள உறையூர் நகரைத் தலைமை யிடமாகக் கொண்டு ஆட்சி செய்தான் சோழ மன்னன் ஒருவன். அவனுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. அந்தக் குறையைப் போக்க, ஸ்ரீமகாலட்சுமி கமல மலரில் அவதரித்த தலம், உறையூர் திருத்தலம்.

இங்கே உறையூரில், கமலவல்லி நாச்சியார் எனும் திருநாமத்தில் அவளுக்குக் கோயிலே அமைந்துள்ளது. தாயாரின் திருநட்சத்திரம்- ஆயில்யம். எனவே, பங்குனியின் ஆயில்ய நட்சத்திர நன்னாளில், ஸ்ரீரங்கநாதர் உறையூ ருக்கு வருவார்; அவருடன் கமலவல்லி நாச்சியார், ஏக சிம்மாசனத்தில் திருக்காட்சி தருவதைக் காணக் கண் கோடி வேண்டும்!

உறையூரில் நாச்சியாருடன் திருவீதியுலா வந்துவிட்டு, பின்பு ஸ்ரீரங்கத்தின் சித்திரை மற்றும் உத்திர வீதிகளில் திருவலம் வந்து, ஆர்யபட்டா நுழைவாயிலின் வழியே ஆலயத்துக்கு வருவார் அரங்கன். 'பெருமாளைக் காணோமே...’ என்று வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கும் ஸ்ரீரங்கநாயகித் தாயார், இவரின் வருகையைப் பார்க்காமல் விடுவாளா?!

எங்கு சென்றுவிட்டு வருகிறார் என்பதை அறிந்து, கடும் ஆத்திரமானாள், தாயார். கண்கள் சிவக்க, தோள்கள் புடைக்க, புருவம் நெளிய, மொத்தக் கோபமும் தலைக்கேறியபடி, புளித்த தயிர், வெண்ணெய், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை அள்ளி யெடுத்துப் பெருமாளின் மீது வீசியெறிந்தாள்.

அதையடுத்து நிகழ்கிற அவர்களின் சம்பாஷணைகள்தான், சுவாரஸ்யம்! 'உமது ஆடைகள் கசங்கியிருக்கின்றன; உங்களின் திருவாபரணங்கள் கலைந்து கிடக்கின்றன; உடலெங்கும் இப்படி வியர்த்துக் கொட்டுகிறதே!’ என்று அரங்கனை அணுஅணுவாக அளந்து, ஆராய்ந்து, கோபக் கணைகளை கேள்விக்கணைகளாக்கினாள், தாயார்.

வீடுகளில் ஏதேனும் பிரச்னை என்றால், 'உனக்காக என் உயிரை யும் தரச் சித்தமாக உள்ளேன்’ என்போம், அல்லவா?! இதை நமக்குச் சொல்லிக் கொடுத்த குருநாதரே அரங்கன்தான்! 'என்ன... என்னையா சந்தேகப்படு கிறாய்? உனக்காக, சமுத்திரத்திலே மூழ்கிவிடட்டுமா? எரிகின்ற தீயில் குதித்துவிடட்டுமா? அல்லது, பாம்புக் குடத்தில் கையை விடட்டுமா?'' என, தன் இனிய மனைவியைச் சமாதானப்படுத்தும் நோக்கில் ஏதேதோ சொன்னார் ஸ்ரீஅரங்கன். பிறகென்ன... புயலுக்குப் பின் அமைதி; ஊடலுக்குப் பின் கூடல் என்பதற்கேற்ப, முட்டிக்கொண்ட பெருமாளும் தாயாரும் ஒட்டிக்கொண்டனர். தாயாரும் கோபத்தை மறந்தாள்; வெள்ளைக் கொடி காட்டிப் புன்னகைத்தாள். இந்த நன்னாள்... பங்குனி உத்திரத் திருநாள்!

பங்குனி உத்திரப் பெருவிழாவன்று காலையில் நடைபெறும் இந்த வைபவத்தைக் கண்ணாரத் தரிசித்தால், பிரிந்த தம்பதி ஒன்று சேருவர் என்பது ஐதீகம்! இணைந்து வாழ்ந்து வருகிற தம்பதி, மேலும் ஒருவரையருவர் நன்கு புரிந்துகொண்டு, கருத்தொற்றுமையுடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.

ஸ்ரீரங்கம் கோயிலில், பங்குனி உத்திர மண்டபம் என்றே உள்ளது. இந்த நாளில், பெருமாளும் தாயாரும் திருக்காட்சி தருவது இந்த மண்டபத்தில்தான். எனவே, மண்டபத்துக்கு இந்தத் திருநாமம் உண்டான தாம். மண்டபத் தூண்களில் ஸ்ரீராமர், ஸ்ரீலட்சுமணர், விபீஷணன், சுக்ரீவன், ஜாம்பவான் ஆகியோரின் திருவுருவங்கள் அமைந்துள்ளன.

இந்த நாளில், சிறப்பு பூஜைகள் விமரிசையாக நடைபெறும். அதேபோல், ஸ்ரீஅரங்கனுக்கு, ஸ்ரீராமானுஜர் அருளிய 'சரணாகதி ஸ்ரீவைகுண்ட கத்யங்கள்’ சொல்லி ஸேவிக்கப்படுவதும் வழக்கத்தில் உள்ளது! அன்று இரவில், பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் நடைபெறுகிறது.

பங்குனி உத்திர நாளில், ஸ்ரீஅரங்கனையும் ஸ்ரீரங்கநாச்சியாரையும் தரிசிப்போம்; பூமியில் வாழ்கிற தம்பதியர் யாவரும் கருத்தொருமித்து, ஒரு குறையுமின்றி வாழ்வோம்!

நன்றி விகடன்...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஊடலுக்கு பின் கூடல்....(மனம் உருகுகிறார் அரங்கன்) 47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக