புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாமான்யர்கள் சமைக்கும் சர்வாதிகாரச் சமாதிகள்.......  Poll_c10சாமான்யர்கள் சமைக்கும் சர்வாதிகாரச் சமாதிகள்.......  Poll_m10சாமான்யர்கள் சமைக்கும் சர்வாதிகாரச் சமாதிகள்.......  Poll_c10 
68 Posts - 53%
heezulia
சாமான்யர்கள் சமைக்கும் சர்வாதிகாரச் சமாதிகள்.......  Poll_c10சாமான்யர்கள் சமைக்கும் சர்வாதிகாரச் சமாதிகள்.......  Poll_m10சாமான்யர்கள் சமைக்கும் சர்வாதிகாரச் சமாதிகள்.......  Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
சாமான்யர்கள் சமைக்கும் சர்வாதிகாரச் சமாதிகள்.......  Poll_c10சாமான்யர்கள் சமைக்கும் சர்வாதிகாரச் சமாதிகள்.......  Poll_m10சாமான்யர்கள் சமைக்கும் சர்வாதிகாரச் சமாதிகள்.......  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
சாமான்யர்கள் சமைக்கும் சர்வாதிகாரச் சமாதிகள்.......  Poll_c10சாமான்யர்கள் சமைக்கும் சர்வாதிகாரச் சமாதிகள்.......  Poll_m10சாமான்யர்கள் சமைக்கும் சர்வாதிகாரச் சமாதிகள்.......  Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
சாமான்யர்கள் சமைக்கும் சர்வாதிகாரச் சமாதிகள்.......  Poll_c10சாமான்யர்கள் சமைக்கும் சர்வாதிகாரச் சமாதிகள்.......  Poll_m10சாமான்யர்கள் சமைக்கும் சர்வாதிகாரச் சமாதிகள்.......  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
சாமான்யர்கள் சமைக்கும் சர்வாதிகாரச் சமாதிகள்.......  Poll_c10சாமான்யர்கள் சமைக்கும் சர்வாதிகாரச் சமாதிகள்.......  Poll_m10சாமான்யர்கள் சமைக்கும் சர்வாதிகாரச் சமாதிகள்.......  Poll_c10 
1 Post - 1%
Guna.D
சாமான்யர்கள் சமைக்கும் சர்வாதிகாரச் சமாதிகள்.......  Poll_c10சாமான்யர்கள் சமைக்கும் சர்வாதிகாரச் சமாதிகள்.......  Poll_m10சாமான்யர்கள் சமைக்கும் சர்வாதிகாரச் சமாதிகள்.......  Poll_c10 
1 Post - 1%
Shivanya
சாமான்யர்கள் சமைக்கும் சர்வாதிகாரச் சமாதிகள்.......  Poll_c10சாமான்யர்கள் சமைக்கும் சர்வாதிகாரச் சமாதிகள்.......  Poll_m10சாமான்யர்கள் சமைக்கும் சர்வாதிகாரச் சமாதிகள்.......  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சாமான்யர்கள் சமைக்கும் சர்வாதிகாரச் சமாதிகள்.......  Poll_c10சாமான்யர்கள் சமைக்கும் சர்வாதிகாரச் சமாதிகள்.......  Poll_m10சாமான்யர்கள் சமைக்கும் சர்வாதிகாரச் சமாதிகள்.......  Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
சாமான்யர்கள் சமைக்கும் சர்வாதிகாரச் சமாதிகள்.......  Poll_c10சாமான்யர்கள் சமைக்கும் சர்வாதிகாரச் சமாதிகள்.......  Poll_m10சாமான்யர்கள் சமைக்கும் சர்வாதிகாரச் சமாதிகள்.......  Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
சாமான்யர்கள் சமைக்கும் சர்வாதிகாரச் சமாதிகள்.......  Poll_c10சாமான்யர்கள் சமைக்கும் சர்வாதிகாரச் சமாதிகள்.......  Poll_m10சாமான்யர்கள் சமைக்கும் சர்வாதிகாரச் சமாதிகள்.......  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சாமான்யர்கள் சமைக்கும் சர்வாதிகாரச் சமாதிகள்.......  Poll_c10சாமான்யர்கள் சமைக்கும் சர்வாதிகாரச் சமாதிகள்.......  Poll_m10சாமான்யர்கள் சமைக்கும் சர்வாதிகாரச் சமாதிகள்.......  Poll_c10 
15 Posts - 3%
prajai
சாமான்யர்கள் சமைக்கும் சர்வாதிகாரச் சமாதிகள்.......  Poll_c10சாமான்யர்கள் சமைக்கும் சர்வாதிகாரச் சமாதிகள்.......  Poll_m10சாமான்யர்கள் சமைக்கும் சர்வாதிகாரச் சமாதிகள்.......  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சாமான்யர்கள் சமைக்கும் சர்வாதிகாரச் சமாதிகள்.......  Poll_c10சாமான்யர்கள் சமைக்கும் சர்வாதிகாரச் சமாதிகள்.......  Poll_m10சாமான்யர்கள் சமைக்கும் சர்வாதிகாரச் சமாதிகள்.......  Poll_c10 
9 Posts - 2%
jairam
சாமான்யர்கள் சமைக்கும் சர்வாதிகாரச் சமாதிகள்.......  Poll_c10சாமான்யர்கள் சமைக்கும் சர்வாதிகாரச் சமாதிகள்.......  Poll_m10சாமான்யர்கள் சமைக்கும் சர்வாதிகாரச் சமாதிகள்.......  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சாமான்யர்கள் சமைக்கும் சர்வாதிகாரச் சமாதிகள்.......  Poll_c10சாமான்யர்கள் சமைக்கும் சர்வாதிகாரச் சமாதிகள்.......  Poll_m10சாமான்யர்கள் சமைக்கும் சர்வாதிகாரச் சமாதிகள்.......  Poll_c10 
4 Posts - 1%
Jenila
சாமான்யர்கள் சமைக்கும் சர்வாதிகாரச் சமாதிகள்.......  Poll_c10சாமான்யர்கள் சமைக்கும் சர்வாதிகாரச் சமாதிகள்.......  Poll_m10சாமான்யர்கள் சமைக்கும் சர்வாதிகாரச் சமாதிகள்.......  Poll_c10 
4 Posts - 1%
Rutu
சாமான்யர்கள் சமைக்கும் சர்வாதிகாரச் சமாதிகள்.......  Poll_c10சாமான்யர்கள் சமைக்கும் சர்வாதிகாரச் சமாதிகள்.......  Poll_m10சாமான்யர்கள் சமைக்கும் சர்வாதிகாரச் சமாதிகள்.......  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாமான்யர்கள் சமைக்கும் சர்வாதிகாரச் சமாதிகள்.......


   
   
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Thu Mar 10, 2011 6:07 pm


கோவை.நந்தன்

சில வரலாற்று நிகழ்வுகள் எப்படி நடக்கும்......? எப்போது நடக்கும்......? எங்கே நடக்கும்......? என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் அதன் தாக்கம் பூமி முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தும். அதுதான் புரட்சியின் சிறப்பு.

உலக சமூகத்திற்கு முதன் முதலில் நாகரிகத்தைக் கற்றுக் கொடுத்த நைல் நதிக் கரையெங்கும் இன்று சர்வாதிகார ஆட்சிகளுக்கு எதிரான மக்கள் புரட்சி, அலை அலையாய்...சுழன்று அடிக்கும் சுனாமியாய்... வெகுண்டெழுகிறது. அதிகாரவர்கத்தின் அடக்கு முறைகளுக்கு எதிராக ஒன்றுபட்டு திரளும் மக்களுக்கு முன், ஆயுதங்களும் ராணுவமும் பொம்மைகளாகிவிட மணிமகுடம் தரித்தவர்கள் இன்று மண்ணைக் கவ்வி வருகிறார்கள். ஆட்டம் காணத் தொடங்கி உள்ள அதிகாரப் போதைமன்னர்களை, உயிர் தப்பினால் போதும் என்ற நிலைக்கு தள்ளியுள்ளது எரிமலையை விடப் பெரிய சக்தியான ஏழை - நடுத்தர மக்களின் கோபம். பெரும் நெருப்பில் பிழைப்பவர் எவர் என்பர்.

பிரெஞ்சு புரட்சி - சோவியத் புரட்சி - மாவோவின் செஞ்சீனப் புரட்சி - லத்தீன் அமெரிக்க நாடுகளில் சேகுவரா - பிடல் காஸ்ட்ரோ முன்னெடுத்த பாட்டாளி வர்க்கப் புரட்சி - வியட்நாமியர்களின் வீரப்புரட்சி இப்படி மக்கள் புரட்சியை இந்த மண் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சந்தித்துள்ளது. நீண்ட வருடங்களின் பின்னர் கடந்த சில மாதங்களாக மத்திய கிழக்கு, ஆப்பிரிக்க நாடுகளின் தெருக்களில் அணி அணியாய் திரண்டெளும் மக்கள் கூட்டமும், அதன் தொடர்ச்சியாய் அரபு நாடுகள் ஒவ்வொன்றிலும் சர்வாதிகாரத்துக்கு எதிராகப் பற்றி எரியத் தொடங்கி உள்ள மக்கள் எழிற்ச்சியும், நிகழ்காலப் புரட்சியின் நிதர்சன நெருப்புக்கள்...!

நீண்ட வருடங்களாக ஜனநாயக உணர்வற்று உறக்கத்தில் கிடந்த ஆப்பிரிக்க, அரபு தேச மக்கள் திடீரென கொந்தளித்தது எப்படி...? என்பதை உலகம் இமைக்காமல் பார்த்து வருகிறது. உறங்கிக் கிடந்த எரிமலைகளை பற்ற வைத்தது எது...? அரபு மண்ணும் ஏன் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகமும் கூட ஆச்சரியம் விலகாத அதிர்ச்சியில் பார்க்கிறது.

ஆபிரிக்க நாடான துனிசியாவில் வேலைகிடைக்காத ஓர் படித்த பாமர இளைஞன் தன்னைத்தானே தீ வைத்து மாய்த்துக் கொண்டு பற்ற வைத்த புரட்சித் தீ தான் இன்றைய புரட்சியின் முதல் துளி. அது எகிப்தையும் எரிமலை ஆக்கி 23 வருட கால துனிசியாவின் சர்வாதிகார ஆட்சிக்கும் சமாதி கட்டியது. அந்நாட்டு அதிபர் பின் அலியை நாட்டை விட்டே ஓட்டம் பிடிக்க வைத்த அந்தப்புரடசிக் கனலின் எல்லை லிபியா,அல்ஜீரியா,மொராக்கோ, ஜோர்டான், சிரியா,சவுதி, ஏமன், பாஹ்ரேய்ன் என விரிந்து கொண்டே போகிறது. எல்லை விரியம் இந்த மக்கள் எழிற்ச்சி ஒரு வெற்றிப்பரட்சியாக சரித்திரம் படைக்குமா...? கேள்வியுடன் கூடிய ஒரு சிறிய ஆய்வே இது.

எரிமலையான எகிப்து

அதிபர் ஹோஸ்னி முபாரக்கின கடந்;த 30 ஆண்டுகளுக்கு மேற்பட்ட ஆட்சிக்காலத்தின் துயரத்தை அனுபவித்த,சகித்துக் கொண்டு அவல நிலையில் வாழ்ந்த, மக்கள் ஆட்சி என்றால் இதுதானா...? என வேதனையின் விளிம்பில் நின்ற எகிப்தியர்களுக்கு புரட்சி அவசியமானதுதான். அவர்களுக்கு ஆறுதல் வழங்கிய அந்த நாட்டின் பிரதான எதிர் கட்சியான இஹ்வான்களோ வெஞ்சிறையில் அடைக்கப்பட பொறுத்துப் பொறுத்துப் பார்த்து வெறுத்துப் போயிருந்தனர் மக்கள். சொந்த நாட்டின் முடிவை தீர்மானிக்கும், மக்களின் உரிமைகளை நீண்டகாலமாக மறுத்து வந்த அதிபர் முபாரக் ஆயுதங்களை மட்டும் நம்பியே எகிப்தை ஆட்சி புரிந்தார். இவற்றிற்கெதிராக எழுச்சிப் பெற்ற எகிப்து நாட்டு மக்கள் இந்த சர்வாதிகாரியை ஆட்சியை விட்டு அகற்றாமல் அடங்கப்போவதில்லை என்பதை தமது நடவடிக்கை மூலம் தெரிவித்துள்ளனர். ஒரு தனிமனிதரையும் அவருடைய குடும்பத்தினரையும் எதிர்த்து நடந்த எகிப்தின் மக்கள் போராட்டத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டு ஆயிரத்திற்கு மேற்பட்டோர் காயமடைந்து கோடிக்கணக்கான மதிப்புடைய சொத்துக்கள் கொள்ளையடிக்கப் பட்டுமுள்ளன. எகிப்தின் வீதிகளில் நடைபெற்ற - நடைபெறும் மக்கள் புரட்சி திடீரென உருவானது அல்ல. நாட்டிற்கு நல்லதை நாடியவர்களால் பலமுறை எச்சரிக்கப்ட்ட முபாரக், அவற்றை யெல்லாம் செவிசாய்க்க மறுத்த நிலையிலேயே பேராட்டம் வெடித்தது, மக்கள் வீதிக்கு வந்தனர்.

இசுலாமிய அடிப்படை வாதிகள் ஆட்சிக்கு வந்துவிடுவார்கள் என பிரச்சாரம் செய்து எகிப்தில் ஏகாதிபத்திய ஆட்சியை நிலைநாட்ட மேற்கத்திய நாடுகள் முயற்சி செய்யக்கூடும் என்ற அச்சத்தில் ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிரான போராட்டத்தில் எதிர்கட்சியான

இஹ்வான்கள் மிக சாதுர்யத்துடன் காய்களை நகர்த்திவருகிறார்கள். கடுமையான அடக்குமுறைகளை சந்தித்த இஹ்வானுல் முஸ்லிமீன் என்கின்ற இயக்கத்தின் உள்கட்டமைப்பு மற்றும் போராட்ட வீரியம் வலுவாக உள்ளது. தேர்தல் நடந்தால் இவர்களுக்கே மக்கள் ஆதரவு கிடைக்கும் என கருதப்படும் நிலையில், தங்களது விருப்பத்திற்கு ஏற்ப தலை அசைக்கும் ஹோஸ்னி முபாரக் ஆட்சி கவிழ்ந்துவிட்டால் என்ன நிகழும்...? இது குறித்த அச்சத்தின் உச்சத்தில் இருக்கம் அமெரிக்காவும், இஸ்ரேலும் எப்படி காய் நகர்தப் போகின்றன...? அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, ஹோஸ்னி முபாரக்கை விமர்சித்தது ஏதோ ஜனநாயகம் மற்றும் மக்கள் உரிமை குறித்த கவலையினால் அல்ல என்பதும் தவிர்க முடியாத மக்கள் எழிற்சியை சந்திக்கும், 82 வயதான அவரை பதவியிறக்கிவிட்டு, அவர் போன்ற ஏகாதிபத்திய இளம் அடிவருடி ஒருவரிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் தான் என்பதும் ஏகாதிபத்தியத்தின் குணாம்சங்களை நன்றாக அறிந்தவர்களுக்கு புரியும்.

எகிப்து நாட்டு சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக் ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டுமெனக் கோரி அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டம் வலுவடைந்த வேளையில் மொரோக்கோ, அல்ஜீரியா போன்ற மத்தியக் கிழக்கு நாடுகளிலிருந்தும் இது போன்று மக்கள் கிளர்ச்சி இயக்கங்கள் வெடித்ததாக செய்திகள் வெளியாகின. இவற்றை எல்லாம் வெளி உலகுக்கு கொண்டுவந்த அல்ஜசீரா தொலைக்காட்சி எகிப்தில் தடை செய்யப்பட்டு அதன் செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டனர். மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மக்கள் பல ஆண்டுகளாக அங்குள்ள எதேச்சதிகார, ஏகாதிபத்திய பிரதிநிதி ஆட்சியாளர்களால் துன்பத்திற்கு ஆளாகியிருந்தபோதிலும், கடந்த இரு ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள உலகப் பொருளாதார நெருக்கடி அந்த மக்களையும் மேலும் பாதிப்புக்குள்ளாக்கியது. சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் பொருளாதாரச் சீர்திருத்தங்களைப் பின்பற்றும்,பிரியமுள்ள நாடுகளாக இருந்த எண்ணை வளம் மிக்க எகிப்தும்,ஜோர்டானும் உலகப் பொருளாதாரத்துடன் தங்களை ஆழமாகப் பிணைத்துக் கொண்டிருந்ததும் மக்கள் பாதிப்புக்கு மற்றொரு காரணம் எனலாம்.

சூயஸ் கால்வாய், சுற்றுலாத்துறை மற்றும் ஏற்றுமதிகள் மூலம் ஈட்டப்பட்டு வந்த எகிப்தின் வருவாயும் கடுமையாகப் பாதித்து, அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியையும் கடும் வீழ்ச்சிக்குள்ளாக்கியது. எகிப்தில் 2005இல் 34விழுக்காடாக இருந்த இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டம் மேலும் அதிகரித்தது. இத்தகைய கடும் துன்ப துயரங்களின் தாக்கம்தான், இத்தகைய மக்கள் எழுச்சிக்கான உடனடிக் காரணங்களாகும். பனிப்போர் காலத்திற்குப் பின் அமெரிக்கா கொண்டுவர எத்தனித்த புதிய உலக ஒழுங்கு திட்டம்,தொடர்ந்து நொருங்கிக் கொண்டிருக்கிறது என்பதையும் உலக நிகழ்வுகளைத் தீர்மானிப்பதில் அமெரிக்காவிற்கு இருந்து வந்த திறன் கணிசமாக நலிவடைந்து வருகிறது என்பதையுமே இந்நிகழ்ச்சிப் போக்குகள் காட்டுகின்றன என்பது மிகவும் முக்கியமாகும்.

கடந்த காலங்களில் ஏகாதிபத்தியம், பல நாடுகளில் குறிப்பாக மத்தியக் கிழக்கு நாடுகளில் தன் உலகமய நலன்களைப் பாதுகாத்திடுவதற்காக மிகவும் கொடூர நிகழ்வுகளை நிகழ்த்தியது. 1953இல் ஈரானில் எண்ணெய் வளங்கள் தேசியமயமாக்கப்பட்டபோது அங்கே ஆட்சியிலிருந்த மொசாடேக், சிஐஏ-தலைமையில் நடைபெற்ற ராணுவ சதி மூலமாகத் தூக்கி எறியப்பட்டது, 1956இல் அதிபர் நாசர் சூயஸ் கால்வாய் போக்குவரத்தை தேசிய மயமாக்கியதை அடுத்து எகிப்துக்குள் ஆங்கிலோ பிரெஞ்சு ஊடுருவலை மேற்கொண்டது, எண்ணெய் வளங்கள் மீதான கட்டுப்பாடு, சூயஸ் கால்வாய் போக்குவரத்தில் கட்டுப்பாடுகளை விதித்தது, மற்றும் ஏகாதிபத்தியத்தின் நலன்களைப் பாதுகாத்திடுவதற்கு ஒத்துழைப்பு நல்கும் அமெரிக்க ஆதரவு ஆட்சிகளை இந்த நாடுகளில் நிறுவ வைத்தது, இப்பிராந்தியத்தில் இஸரேல் ராணுவத்தின் மேலாதிக்கத்தை ஏற்படுத்தியது. இபபடியான அமெரிக்கா, ஜனநாயகம், மனித மாண்புகள்-மனித உரிமைகள் காவலர் என்று தன்னைத்தானே பிரகடனம் செய்து கொள்ளும் அமெரிக்கா, எகிப்துப் போன்ற நிகழ்ச்சிப் போக்குகள் தொடர்பாக மிகவும் எச்சரிக்கையாகவே காயை நகர்த்தும் என்பதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. துனீசியா, ஏமன் மற்றும் ஜோர்டான் - ஆகிய நாடுகளிலும் தற்போது அமெரிக்க ஆதரவு ஆட்சிகள்தான்.

எகிப்தில் தொடர்ந்தும் தன் பிடியை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்கிறது. தன்னிடம் வெகு காலம் வேலை பார்த்த உளவுத் துறைத் தலைவர் உமர் சுலைமான் என்பவரை துணை ஜனாதிபதியாக முபாரக் நியமித்ததன் மூலம் ராணுவத்தினரின் எதிர்ப்பைச் சமாளித்திடலாம் என்றும் அடுத்த தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும், முபாரக் அறிவித்ததும் மக்களால் உருப்படியான சீர்திருத்த நடவடிக்கைகளாகப் பார்க்கப்படவில்லை. இப்போது அனைவரின் கவனமும் வெகுகாலம் வெளி நாடுகளிலேயே இருந்து விட்டு தற்போது நாடு திரும்பி இருக்கக் கூடிய, மாற்றத்திற்கான தேசிய சங்கம் என்று அழைக்கப்படக்கூடிய அமைப்புக்குத் தலைமை தாங்கும்,முன்னாள் சர்வதேச அணுசக்தி முகமை தலைவர் எல்பாரடே மீது திரும்பியிருக்கின்றன. சர்வதேச அணுசக்தி முகமையில் அவர் தலைவராக இருந்த சமயத்தில் இராக் ராணுவ நடவடிக்கைகளின்போது அமெரிக்கா தனக்கு ஆதரவாக அவரைப் பயன் படுத்திக் கொண்டதுபோல் இப்போதும் முயற்சிக்கும் என்று சொல்லத் தேவையில்லை.

பல தலைமுறைகளாக, அரபு நாடுகளில் உள்ள மக்கள், அளப்பரிய தியாகங்களும் போராட்டங்களும் நடத்தியிருந்த போதிலும், அவை அனைத்தும் தலைவர்களின் சந்தர்ப்பவாதம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் பசப்புவார்த்தைகள் ஆகியவற்றால் புரட்சிகர மாற்றங்கள் அங்கே ஏற்படாதவாறு சிதறடிக்கப்பட்டிருக்கின்றன. இப்போது எகிப்தில் நடைபெறும் மக்கள் எழுச்சியும் அதேபோன்று முடிவுக்கு வந்துவிடுமோ...? என்கிற நியாயமான அச்சம் எழவே செய்கிறது... இப்போது ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சி, நிச்சயமாக எதேச்சதிகார அடிப்படை இஸ்லாமிய ஆட்சியைக் கொண்டுவராது என்பது நிச்சயம்.

புதிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முற்போக்குத் துனிசீயன் கட்சியைப் பிரதி நிதித்துவப்படுத்தும் எட்டாஜ்டிட என்பவர்;, 'நாம் புரட்சியைப் பாதுகாக்க வேண்டும், அதேசமயத்தில் பெண்கள் உரிமைகள் மற்றும் மதச்சார்பின்மை தொடர்பாக அடைந்திட்ட ஆதாயங்களையும் பாது காத்திட வேண்டும்' என்று குறிப்பிட்டிருக்கிறார். எகிப்தின் மக்கள் எழிற்சியும் அதனூடான இழப்புகளும் மக்களுக்கு பயனளிக்குமா....? வழமை போல பொறுக்கதத்தான் வேண்டும்......

புரட்சிக்கு வித்திட்ட துனீசியா

26 வயதேயான வேலையற்ற பட்டதாரி இளைஞன் முஹமத்தின் தற்கொலை மரணம்,ஒரு மக்கள் புரட்சியாக மாறும் என்று எவரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்.ஆனால் அது சாத்தியமாகி இருக்கிறது-துனீசியா தேசத்தில். பட்டப் படிப்பு முடித்தும் வேலை வாய்ப்பு இல்லாத நிலையில் ஜீவனத்திற்காக நடைபாதையோரமாக காய்கறி விற்றுக் கொண்டிருந்த முஹமத்தை அந்தநாட்டுக் காவல் துறையினர் கடைக்கு உரிமம் கேட்டு தொந்தரவு செய்தனர். எங்கு முறையிட்டும் பலனற்ற நிலையில் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டான் அந்தப் படித்த இளைஞன். ஊர், பேர் தெரியாத அந்த இளைஞனின் மரணச் சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அவனது இறப்பும் அந்த மரணச்சடங்கும் தான் மக்களை சீற்றமடைய வைத்து அதிகார வர்கத்திற்கு எதிரான எழிற்சிசயாக அங்கே உருப்பெற்றது. அரச நிறுவனங்கள் தாக்கப்பட்டன,கடைகள் சூறையாடப்பட்டன. 23 வருடங்களாக துனீசியாவின் சர்வாதிகார ஆட்சி நடத்த உறுதுணையாக இருந்ததெனச் கருதப்படும் பிரெஞ்சு தூதரகம் கூட சுற்றி வளைக்கப்பட்டது. வேலையற்ற இளைஞர்களின் கலகமாக ஆரம்பித்த போராட்டம், வழக்கறிஞர்களும், தொழிற்சங்கங்களும் தமது ஆதரவை தெரிவிக்கும் வகையில் பெரும் போராட்டமாக மாறியது. உழைக்கும் வர்க்கமும், இழப்பதற்கு எதுவுமற்ற பாமர மக்களும் ஒன்று சேர்ந்து போராடினால் புரட்சி நிச்சயம் என்பதை துனீசியா மக்கள் சாதித்துக் காட்டியுள்ளனர்.

அரபுலகில் முதன் முதலாக இணையம் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட புரட்சியும் இதுவாகும். ஒருபுறம் துனீசிய கொடுங்கோல் அரசின் இணையத் தடையை மீறி, டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலையமைப்புகள் எதிர்ப்பு நடவடிக்கைகளை உடனுக்குடன் அறிவித்துக் கொண்டிருந்தன. மறுபுறம் அரசின் அடக்குமுறைகளை காட்டும் வீடியோக்களை, இணையத்தின் வழி பரவ விடாமல் அரச விற்பன்னர்கள் உடனுக்குடன் அழித்துக் கொண்டிருந்தார்கள். கலகத்தை அடக்க அனுப்பப்பட்ட காவல் படையினர், வழமையான துப்பாக்கிச் சூடு, கைதுகள், என்று மக்கள் எழுச்சியை அடக்கும் பணியில் ஈடுபபட்டனர். ஆனால் அனைத்துத் தடைகளையையும் மீறி, இறுதியில் மக்கள் சக்தி வென்றது.
துனிசியாவின் சர்வாதிகாரி பென் அலியே மக்கள் முன் வந்து கைது செய்த போராட்டக்காரர்களை விடுதலை செய்து ஏதோ திடீரென்று உறக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டவர் போல, வேலையற்ற மக்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தப் போவதாக விடுத்த அறிவிப்பை யாரும் பொருட்படுத்தவில்லை. இறுதியில் நாட்டை விட்டு வெளியேறி, சவூதி அரேபியாவில் அகதித் தஞ்சம் கோர வேண்டிய அவல நிலை அவருக்கு ஏற்பட்டது.

மேற்கத்திய நாடுகளால் ஆதரவளிக்கப்படும் சர்வாதிகாரிகள், மக்களின் ஜனநாயக சுதந்திரத்தை மறுப்பதுடன் அரச அடக்குமுறைகளை கண்டு கொள்வதில்லை. அதேவேளை சாதாரண மக்களை பாதிக்கும் வேலைவாய்ப்பின்மை, வறுமை, போன்ற பிரச்சினைகளால் விரக்தியுறும் இளைஞர்கள் பட்டப் படிப்பு படித்தாலும் வேலையின்றி, வெளிநாடுகளுக்கு ஓடிக் கொண்டிருக்கிறார்கள். வெளிநாடு போக வசதியற்றவர்கள்,வழி தெரியாதவர்கள் தீவிரவாதிகளாக மாறுகிறார்கள். மேற்கத்தைய நாடுகளும், உள்நாட்டு சர்வாதிகார ஆட்சியும் அவர்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி அடக்கி ஆழ முனைகின்றன. துனிசியாவிலும் கலகம் செய்த இளைஞர்களையும் அவர்களுக்கு ஆதரவாக வெகுண்டெழுந்த மக்கள் கூட்டத்தையும், பென் அலி, அல்கய்டா பயங்கரவாதிகள் என முத்திரையிட முனைந்தார். எதுவும் மக்கள் சகதியின் முன் எடுபடாமல் போய் மக்கள் போராட்டம் மகத்தானது. மக்கள் போராட்த்திற்கு கிடைத்த இந்த முதல் வெற்றியை அடுத்துத்தான் மேற்காசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் மக்கள் எழிற்ச்சி புரட்சியாகிக் கொண்டிருக்கிறது.

லிபியா.........

மக்கள் புரட்சியில் வட ஆப்பிரிக்க நாடான லிபியாவும் இப்போது இணைந்து கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. 42 வருடங்களாக அங்கே அதிபராக இருக்கும் முஆம்மர் கடாபிக்கு எதிராக மக்கள் நடத்தும் புரட்சி தீவிரமடைந்து அங்கே போர் மேகங்கள் சூழ்கின்றன. எந்த நேரமும் கடாபி கைது செய்யப்படலாம் அல்லது நாட்டை விட்டு தப்பிக்கலாம் என்கின்ற நிலை. கடாபி உடனே பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தொடரும் மக்கள் போராட்டத்தில் வன்முறைகளும் பரவலாகி அங்கு தொழில் புரிந்த பல நாட்டவரும் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

கடாபி பதவியை விட்டு விலகாவிட்டால் நாட்டைவிட்டு துரத்தப்படுவார் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவரின் அரச படைகள் மக்கள் எழுச்சியை இரும்புக்கரம் கொண்டு அடக்க முயற்சி செய்வதாகவும் பல்லாயிரக் கணக்கான மக்களை கடாபியின் ராணுவம் குண்டு வீசி கொலை செய்வதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. கடாபியின் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவை முற்றுகையிட்டுள்ளன. இருந்தும் கடாபியின் சர்வாதிகாரத் தொனியும், மக்கள் விரோதப் போக்கும் இன்றுவரை குறையவேயில்லை. ஆனால் கட்டுக்கடங்காமல் கொந்தளிக்கத் தொடங்கியுள்ள லிபிய மக்களின் நீண்ட கால கோபத்தின் முன் இது தொடர்ந்தும் எடுபடுமா.....?

லிபியாவை குருதிக் காடாக மாற்றி சொந்த நாட்டுமக்களை ஒட்டுமொத்தமாக கொன்றொழிக்கும் கடாபியின் பல்முனை நடவடிக்கைகளையும் துணிவுடன் எதிர்கொண்டு போராடி வரும் ஆயிரக்கணக்கான மக்கள் போராளிகள் இதுவரை இரத்த சாட்சிகளாக மாறிய பொழுதும் கடாபியும் அவரது மகன்களும் அடங்குவதாகவோ, இறங்குவதாவோ தெரியவில்லை. அதே வேளை எண்ணெய் வளமிக்க பகுதிகள் உள்பட லிபியாவின் முக்கிய பிரதேசங்களையெல்லாம் கைப்பற்றியுள்ள போராளிகள் தலைநகர் திரிபோலிக்கு 50 கி.மீ தொலைவிலுள்ள ஸாவியாவையும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டதாத் தெரிவிக்கப்படுகிறது. தனக்கு ஆதரவான ராணுவத்தின் பின்னடைவால் கொதிப்படைந்த கடாபி அயல் நாடுகளிலுருந்து கூலிப் படைகளை இறக்குமதிச் செய்து ஆட்சியை காப்பாற்றுவதற்கான இறுதிப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார்.

கடாபி பதவி விலகவோ அல்லது கொல்லப்படவோ செய்தால் அடுத்த தலைமைக்கான பணிகளும் திரைமறைவில நகர்ந்து கொண்டு இருக்கின்றன. கடாபியின் வீழ்ச்சியும், மக்கள் எழுச்சியும் நிதர்சனமாகும் என்பதை அறிந்துக்கொண்ட அமெரிக்கா, புரட்சியை முறியடிக்கவும், அதன் வெற்றியை தட்டிச் செல்லவும் முயன்று வருகிறது. கடாபியை வீழ்த்த ஆயுதம் தருகிறோம் என்ற அமெரிக்காவின் வாக்குறுதி இதனை நிரூபிக்கிறது. எல்லாவித உதவிக்கும் நாங்கள் தயார் என்பதை ஹிலாரி கிளிண்டன் அறிவித்துள்ளார். லிபியாவின் கடற்பகுதிக்கு போர் கப்பல்களையும், போர் விமானங்களையும் அனுப்பியுள்ளன அமெரிக்காவும் சில மேற்கத்திய நாடுகளும். ஆனால், அமெரிக்காவின் சதிவலையை அடையாளங்கண்ட தேசிய தற்காலிக ஆட்சிமாற்றக் குழு அனைத்து வெளிநாட்டு தலையீட்டையும், படை வரவுகளையும் தாங்கள் எதிர்ப்பதாக உறுதியாக தெரிவித்துள்ளது. இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பும் அமெரிக்கா போன்ற வெளிநாட்டுத் தலையீட்டை கண்டித்துள்ளது.

தினமும் ஏறத்தாழ 10 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை உற்பத்திச் செய்யும் லிபியாவின் எண்ணெய் வளத்தின் மீதுதான் மேற்கத்திய நாடுகள் நோட்டம் இருக்கும் என்பது தெரியாததல்ல. ஈராக், ஆப்கானிஸ்தான் இன்னும் பல நாடுகளைப் போல் லிபியாவிலும் ஒரு கைப்பாவை அரசை உருவாக்குவதுதான் அமெரிக்காவின் லட்சியம். தம்மை ஆதரிக்கும் சர்வாதிகார ஆட்சியாளர்கள் அவர்கள் எவ்வளவு கொடூரங்களை புரிந்த பிறகும் இறுதிவரை ஆதரிப்பதும், கடைசியில் அவர்கள் மக்கள் எழுச்சியினால் பதவி விலக நேரும் வேளையில், தாம் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவளிக்கிறோம் எனக் கூறிக்கொண்டு ஆட்சியை தட்டிப்பறிப்பது அமெரிக்க ஏகாதிபத்தியம் இதுநாள் வரை கடைப்பிடித்துவரும் தந்திரமாகும். சில நாடுகளில் அவர்களின் லட்சியம் நிறைவேறாமல் தந்திரங்கள் பலிக்காமல் போயுள்ளதையும் காண்கின்றோம்.

லிபியா மக்களின் எழுச்சியும், சுதந்திரத்திற்கான போராட்டமும் எவ்வித வெளிநாட்டு சக்திகளின் தலையீடின்றி உருவானதாகும். ராட்சசனாக மாறியுள்ள கடாபிக்கு எதிரான ஐ.நா-அமெரிக்க-ஐரோப்பிய யூனியனின் தடைகள் தற்காலிக நியாயமாக இருந்தாலும், அவை ஒருபோதும் லிபியாவின் மக்களை தண்டிப்பதாக இருக்கக் கூடாது. அதை;தையும் உடைத்த லிபிய மக்கள் எழிற்சியின் வெற்றியே புரட்சியாகும்.

அல்ஜீரியா.......

அல்ஜீரியாவும் மக்கள் புரட்சியை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளது. தலைநகரான அல்ஜீர்யஸில் ஏராளமானோர் பங்கேற்ற போராட்டத்தை பாதுகாப்பு படைகள் கடுமையாக அடக்கியது. பொதுக் கூட்டங்களை தடைச் செய்யும் புதிய சட்டத்தை திரும்ப பெற வேண்டுமென்பது மக்களின் முக்கிய கோரிக்கையாகும். மக்கள் எழுச்சி கண்டு செய்வதறியாது தவிக்கிறது அல்ஜிரிய அதிகார வர்க்கம்.. இங்கும் வேலையில்லாத திண்டாட்டம் வறுமை என்பன அந்நாட்டு மக்களை ஆத்திர அமிலத்தில் ஆழ்த்தியது. துனீசியாவில் நடைபெற்றதை நிகழ்த்த விரும்புகிறோம் என வெளிப்படையாகவே தெரிவிக்கின்றனர் புரட்சியாளர்கள்.

அரசுக்கெதிரான போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த RALLY FOR CULTURE என்ற அமைப்பின் ஏராளமான தலைவர்கள் கைதுச் செய்யப்பட்டு மக்கள் போராட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி 1992 ஆம் ஆண்டு முதல்

அல்ஜீரியாவில் அமுலில் உள்ள அவசர காலச்சட்டத்தை எதிர்த்தும் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை போன்றனவிற்கு எதிராகவும் பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட ஆரம்பித்துள்ளனர். போராட்டத்திற்கு பல்வேறு மாணவர் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன

ஜோர்டான்..........

ஜோர்டான் அரசை தூக்கியெறிவோம் என அந்நாட்டு மக்களும் புரட்சியாளர்களாக உருவெடுத்ததையடுத்து விலைவாசியை குறைக்கவும் வேலையின்மையை போக்கவும் ஒரு புதிய நிதி திட்டத்தை அந்த நாட்டு அரசு அறிவித்தது. அது வெறும் கண்துடைப்பே எனக்கூறி மக்கள் திரள் வீதிக்கு வந்து தொடர்ந்தும் நீதி கேட்டு போராடியது.

பிரதமர் ஸாமிர் ரிஃபாயீ பதவியை விட்டு ஓடும் வரை போராடுவோம் என மக்கள் ஆவேசமாக தெரிவிக்கின்றனர். துனீசியாவின், பின் அலீ ஜெயினுல் ஆபிதீனை போல் நம் மன்னரும் அடைக்கலம் தேடி வெளியே ஓட வேண்டும் என போராட்டக்காரர்கள் தங்கள் விருப்பத்தினை தெரிவித்தனர். ஜோர்டானில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ரிஃபாயீ, நடைமுறைப்படுத்திய பொருளாதார சீர்திருத்தங்கள் மக்களின் ஆத்திர அணையை உடைத்தது. அத்தியாவசியப் பொருட்களுக்கு அளிக்கப்படும் வரி சலுகை நீக்கப்பட்டது மக்களை அதிருப்தியுற செய்தது.

நாட்டின் பிரதமரை மன்னர் அப்துல்லாஹ் நேரடியாக நியமிப்பதை கைவிட்டுவிட்டு ஜனநாயக ரீதியாக பிரதமரை தேர்வு செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் போராட்டக்காரர்கள். மன்னர் வழிகாட்டியாக மட்டும் இருந்தால்போதும். நாட்டின் நிர்வாக விஜயங்களைச் செயல் படுத்த முனையக்கூடாது என போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்..

ஏமன்.............

ஊழல் ஆட்சியாளர்களை எதிர்த்து ஏமன் நாட்டிலும் மக்கள், போராட்டத்தில் குதித்தனர். அங்கும் அதிபர் அலீ அப்துல்லாஹ் ஸாலிஹ் பதவி விலக வேண்டும் என்கோரியே அந்நாட்டுமக்கள் திரள் போராட்டங்களை தொடர்கின்றனர். ஸன்ஆ என்கின்ற பல்கலைக்கழகத்தில் நடந்த கண்டனப் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

ஏமன் நாட்டில் மாணவர்கள், சமூகசேவகர்கள், எதிர்கட்சியினர் என ஏராளமாளோர் கலந்துக்கொண்ட, மன்னர் அப்துல்லாஹ் ஸாலிஹிற்கு எதிரான பிரமாண்டமான கண்டனப் போராட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. துறைமுக நகரமான ஏதனிலும் நடந்த போராட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடாத்தி 22 பேரைக் கைதுச் செய்தது. நாட்டின் அதிபர் ஆயுள் முடியும்வரை ஆட்சிபுரிய வழிவகைச் செய்யும் வகையிலான சட்டமும் மக்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்கா,பிரிட்டன்,பிரான்சு போன்ற ஏகாதிபத்தியங்களின் ஆதரவுடன் அந்நாடுகளில் வாழும் அப்பாவி மக்களின் ஜனநாயக உரிமைகளை எவ்வளவு காலம் வேண்டுமானாலும் காலில் போட்டு மிதித்தாலும், அவர்கள், வறுமையில் வாடினாலும் அவர்களை தொடர்ந்தும் அடக்கி ஒடுக்கி ஆளலாம் எனக் கருதி சுகபோக வாழ்வில் மூழ்கியிருந்த சர்வாதிகாரிகளின் கனவு தகர்ந்து போனதன் காட்சிகளைத்தான் துனீஸ், கெய்ரோ, திரிபோலி,ஸன்ஆ, அம்மான், அல்ஜீர்யஸ் நகர வீதிகளில் மக்களின் போராட்டங்களாக நாம் காண்கிறோம்.

அரபுலக வீதிகளில் திரளும் இந்த மக்கள் சக்தியை, ஆதிக்க சக்திகளுக்கு விடுக்கப்படும் ஒரு எச்சரிக்கையாகவே பார்கவேண்டும். புதியதொரு சமத்துவ சமுதாயத்தைக் கட்டி எழுப்க்கூடிய ஜனநாயக அமைப்பொன்றின் மூலமாகவே அமெரிக்காவின் கட்டளைகளுக்கு அடிபணிந்து ஆட்சி நடத்தும் சர்வாதிகார ஆட்சிகழை வீழ்த்திடவும், அடிப்படைவாத இஸ்லாமிய ஆட்சிகள் அமைவதைத் தடுத்திடவும் முடியும்.

மொசாடேக் தூக்கி எறியப்பட்ட சமயத்தில் நடைபெற்ற சம்பவங்கள் அதன் தொடராக அமெரிக்காவால் மன்னர் ஜா ஆட்சி நிறுவப்பட்டமை, ஈரானில் இஸ்லாமிய புரட்சி உருவாவதற்கு இட்டுச் சென்றன. இவை மத்தியக் கிழக்கு நாடுகளின் வேதனைமிகுந்த வரலாற்று நிகழ்வுகளாக இன்னமும் மக்களால் பார்க்கப்படுகின்றன.

இத்தகைய பின்னணியில், தங்கள் பிராந்தியத்தில் புதியதொரு வரலாற்றை உருவாக்கிட முயற்சிகள் மேற்கொண்டுள்ள அரபு மற்றும் ஆப்பிரிக்க மக்களின் போராட்டம் ஓர் சமுதாயப் புரட்சியாக மாற்றமடைய உலகம் முழுவதுமுள்ள நடுநிலையாளர்களின் முழுமையான ஆதரவு அவசியமதகிறது.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக