புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed May 01, 2024 7:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கொண்டத்துக் காளியம்மன் Poll_c10கொண்டத்துக் காளியம்மன் Poll_m10கொண்டத்துக் காளியம்மன் Poll_c10 
40 Posts - 60%
ayyasamy ram
கொண்டத்துக் காளியம்மன் Poll_c10கொண்டத்துக் காளியம்மன் Poll_m10கொண்டத்துக் காளியம்மன் Poll_c10 
13 Posts - 19%
mohamed nizamudeen
கொண்டத்துக் காளியம்மன் Poll_c10கொண்டத்துக் காளியம்மன் Poll_m10கொண்டத்துக் காளியம்மன் Poll_c10 
3 Posts - 4%
viyasan
கொண்டத்துக் காளியம்மன் Poll_c10கொண்டத்துக் காளியம்மன் Poll_m10கொண்டத்துக் காளியம்மன் Poll_c10 
2 Posts - 3%
prajai
கொண்டத்துக் காளியம்மன் Poll_c10கொண்டத்துக் காளியம்மன் Poll_m10கொண்டத்துக் காளியம்மன் Poll_c10 
2 Posts - 3%
Baarushree
கொண்டத்துக் காளியம்மன் Poll_c10கொண்டத்துக் காளியம்மன் Poll_m10கொண்டத்துக் காளியம்மன் Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
கொண்டத்துக் காளியம்மன் Poll_c10கொண்டத்துக் காளியம்மன் Poll_m10கொண்டத்துக் காளியம்மன் Poll_c10 
2 Posts - 3%
manikavi
கொண்டத்துக் காளியம்மன் Poll_c10கொண்டத்துக் காளியம்மன் Poll_m10கொண்டத்துக் காளியம்மன் Poll_c10 
1 Post - 1%
Rutu
கொண்டத்துக் காளியம்மன் Poll_c10கொண்டத்துக் காளியம்மன் Poll_m10கொண்டத்துக் காளியம்மன் Poll_c10 
1 Post - 1%
சிவா
கொண்டத்துக் காளியம்மன் Poll_c10கொண்டத்துக் காளியம்மன் Poll_m10கொண்டத்துக் காளியம்மன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொண்டத்துக் காளியம்மன் Poll_c10கொண்டத்துக் காளியம்மன் Poll_m10கொண்டத்துக் காளியம்மன் Poll_c10 
20 Posts - 74%
ரா.ரமேஷ்குமார்
கொண்டத்துக் காளியம்மன் Poll_c10கொண்டத்துக் காளியம்மன் Poll_m10கொண்டத்துக் காளியம்மன் Poll_c10 
2 Posts - 7%
mohamed nizamudeen
கொண்டத்துக் காளியம்மன் Poll_c10கொண்டத்துக் காளியம்மன் Poll_m10கொண்டத்துக் காளியம்மன் Poll_c10 
2 Posts - 7%
manikavi
கொண்டத்துக் காளியம்மன் Poll_c10கொண்டத்துக் காளியம்மன் Poll_m10கொண்டத்துக் காளியம்மன் Poll_c10 
1 Post - 4%
viyasan
கொண்டத்துக் காளியம்மன் Poll_c10கொண்டத்துக் காளியம்மன் Poll_m10கொண்டத்துக் காளியம்மன் Poll_c10 
1 Post - 4%
Rutu
கொண்டத்துக் காளியம்மன் Poll_c10கொண்டத்துக் காளியம்மன் Poll_m10கொண்டத்துக் காளியம்மன் Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொண்டத்துக் காளியம்மன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 28, 2009 9:44 am

கொண்டத்துக் காளியம்மன் 215

பக்தர்கள் அனைவராலும் ‘பாரியூர் அம்மன்’ என்று பெருமிதத்தோடு அழைக்கப்படும் கொண்டத்துக் காளியம்மன் குடிகொண்டிருக்கும் கோயில் பழமையானது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மை வாய்ந்த கோயில் இது. காளியம்மன் திருக்கோயில் ராஜகோபுரத்தின் வாயிலாக உள்ளே சென்றால், நான்கு பக்கங்களிலும் உயர்ந்த மதில்கள் சூழ்ந்த பரந்தவெளி காணப்படுகின்றது. இதன் மையப் பகுதியில் அம்மனின் கற்கோயில் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தின் உள்ளே வழவழப்பான கரும் பளிங்குக் கற்களினாலான அழகே உருவான கருவறையில் அம்மை அருள் வடிவாக கொலுவிருந்து அல்லும் பகலும் தன் பக்த கோடிகளுக்கு அருளை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறாள்.

இந்த அம்மையின் அருட்பார்வை படும்படியாக மண்டபத்தின் முன்பகுதியில் 50 அடி நீளமுள்ள திருக்கொண்டமும், கொண்டத்தின் தொடக்கத்தில் நெடிதுயர்ந்த விளக்குக் கம்பமும் உள்ளன. அதனை அடுத்து நேரே ஒரு மண்டபமும், வடக்கு வாயிலும் உள்ளன. மேற்கே கல்யாண விநாயகர் எழுந்தருளி கன்னியர்க்கும், காளையர்க்கும் திருமணம் கைகூட அருள் பாலிக்கின்றார். பாரியூர் கொண்டத்துக் காளியம்மனை வழிபடுவோர் பில்லி, சூன்யம், பேய், பிசாசுத் தொல்லைகளில் இருந்து விடுபடுவர். இந்த அன்னையின் பொற்பாதங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட யந்திரங்கள், மஞ்சள் கயிறு போன்றவை தீராத நோய்களையும் குணப்படுத்தும் சக்தி கொண்டவை என்று நம்பப்படுகிறது. இந்த அம்பாள் கோயிலின் வடக்கு வாயிலுக்கு முன்பகுதியில் பேரழகோடு காட்சி தருகின்றன காவல் தெய்வங்கள். உள்ளே நுழைந்தால் அர்த்த மண்டபம். இதன் முன்பகுதியில் எதிர் எதிராக நான்கு கல்தூண்கள் பொலிவோடு விளங்குகின்றன. அத்தூண்களில் மேற்கு பார்த்த மகாலட்சுமி, சரஸ்வதி சிலைகளும், கிழக்குப் பார்த்த ராஜராஜேஸ்வரி, பத்ரகாளி சிலைகளும் கண்ணைக் கவர்கின்றன.

கருவறையின் முன்பகுதியில் வடக்கு நோக்கியபடி பிராம்மி, சாமுண்டி சிலைகள் அற்புதப் பொலிவுடன் திகழ்கின்றன. கருவறையின் கிழக்குச் சுவரில் மாகேஸ்வரி, கௌமாரி; தெற்குச் சுவரில் வாராகி, மேற்குச் சுவரில் வைஷ்ணவி, இந்திராணி ஆகியோர் சுதைச் சிற்பங்களாக அருள் பாலிக்கிறார்கள். அதன் முன்புற வாயிலின் மேல்பகுதியில் கஜலட்சுமியும், அதற்கு மேலே கொண்டத்துக் காளியம்மனும் சுதை வடிவில் வீற்றிருக்கிறார்கள். கருவறையில் கிழக்கு பார்த்தபடி விநாயகர் எழுந்தருளியிருக்கிறார்.
அதனை அடுத்து, கொண்டத்துக் காளியம்மன், கருவறையில் ஆயிரங்கோடி சூர்யப் பிரகாச ஒளியாக எழுந்தருளியிருக்கிறாள். அன்னையை வணங்கி வலம் வந்து இடப்பக்கம் ஐம்பொன்னால் ஆன உற்சவ மூர்த்தியான சின்னம்மனை தரிசிக்கிறோம். கிழக்கு வாயில் வழியாக வெளியே வந்து வெளிமண்டபத்தில் அம்பாளின் அருட்பிரசாதம் பெறலாம். எதிரே வாகனச் சாவடி, மடப்பள்ளி, திருக்கோயில் அலுவலகம் ஆகியவை காணப்படுகின்றன.

பல ஆண்டுகளுக்கு முன்பு சூரராச சித்தர் என்ற ஞானி பாரியூர் பகுதியில் வாழ்ந்து வந்தார். இவர் பாரியூர் அம்மனின் அருள் பெற்றிருந்தார். அதோடு மந்திர சக்தியும், அன்னை மீது அளவு கடந்த பக்தியும் படைத்தவராக விளங்கினார் என்பதைப் பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் ஆற்றுப்படை என்ற பழங்கால நூல் விவரிக்கின்றது. இவர் தம் மந்திர சக்தியின் திறனால் அன்னை கொண்டத்துக் காளியம்மனை வேண்டி நிற்க, அன்னை இவருக்குக் காட்சி கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த சூரராச சித்தர் அக்காலத்தில் பக்தர்களின் மன மயக்கத்தையும், சஞ்சலத்தையும் போக்கும் பணியை அன்னை பாரியூர் அம்மனின் சந்நதியில் வெகு காலத்திற்கு மேற்கொண்டிருந்திருக்கிறார். அம்மனின் திருக்கோயிலின் கீழ்ப்புறத்தில் பட்டாரி என்னும் கோயில் உள்ளது. இதற்கருகில் இன்றும் சமாதி நிலையில் சூரராச சித்தர் இருப்பதாக ஐதீகம்.

கொங்கு நாட்டில் வாழ்ந்திருந்த மிகச் சிறந்த கொடை வள்ளல்களில் கோபிச்செட்டிப் பிள்ளான் என்பவர் முக்கியமானவர். தன்னை நாடி வந்தவர் யாருக்கும் எப்பொழுதும் இல்லை என்று கூறாது வாரி வழங்கியே ஏழையானவர். ஒரு சமயம் இந்த வள்ளலிடம் ஒரு புலவர் வந்தார். தமது தமிழ்ப் புலமையைப் பாடல்களால் வெளிப்படுத்தி, வள்ளலைப் புகழ்ந்து பாடி, ஏதாவது பொருள் தந்து தனது வறுமையைப் போக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். கோபிச்செட்டிப் பிள்ளான் தன் அவல நிலை எண்ணி மனம் வருந்தி, ஒன்றும் கொடுக்க இயலாத தான் இருந்தென்ன பயன் என்று வேதனையுற்றார். உடனே பாரியூர் பகுதியிலிருந்த புலிப்புதர் ஒன்றுக்குச் சென்றார். பாரியூர் அன்னையை மனதில் இருத்தி வழிபட்டவாறு புலியை எதிர்நோக்கினார். ஆனால் புலி வரவில்லை. மிகவும் வருந்தி அவர் சோர்ந்தபோது, அந்தப் புதரில் திருடர்கள் விட்டுச் சென்ற பொற்குவியல் ஒன்றைக் கண்டார். தன் வள்ளல் தன்மைக்கு பங்கம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பாரியூர் அம்மன் நிகழ்த்தும் திருவிளையாடலே இது என்று கருதிய அவர், அந்தப் பொக்கிஷத்தை புலவர்க்கும் மற்றும் தன்னை நாடி வந்து உதவி கேட்ட அனைவருக்கும் தந்து இன்புற்றார் என்கிறது தலவரலாறு. அந்தப் பகுதிக்கு கோபி செட்டி பாளையம் என்ற பெயர் இந்த வள்ளலின் பெயரால்தான் இன்றும் வழங்கப்பட்டு வருகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 28, 2009 9:45 am

ஆடி மாதம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் அன்னைக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு வாரமும் அன்னைக்கு ஒவ்வொரு விதமாக அலங்காரம் செய்விக்கப்படுகிறது. மூன்றாவது ஆடி வெள்ளிக்கிழமை அழகிய ஊஞ்சலில் இந்த அம்பாளை உட்கார வைத்து பக்தி இசைப் பாடல்களைப் பாடி, ஊஞ்சல் ஆட்டி மகிழ்ந்து வணங்குவார்கள். ஐந்தாவது வெள்ளிக்கிழமையில் பூப் பல்லக்கில் அன்னையை அமர வைத்துத் திருக்கோயிலை வலம் வந்து வணங்கி இந்த மாகாளியின் அருள் பெறுவர். ஆடி வெள்ளிக்கிழமைகளில் இங்கே நடைபெறும் மாவிளக்குப் பூஜை மிகப் பிரபலமானது. புரட்டாசி மாதத்தில் அமாவாசையை அடுத்த ஒன்பது நாட்களும் நவராத்திரி விழா நடைபெறும். இந்த ஒன்பது நாட்களும் ஒன்பது வகையான அலங்காரங்களை செய்வர்.

அம்மன் கோயில்களில் ‘பூ மிதித்தல்’ என்ற தீமிதி திருவிழா, கொங்கு நாட்டில் பல திருத்தலங்களில் வழி வழியாக நடந்து வரும் அதிசய நிகழ்ச்சியாகும். பண்ணாரி மாரியம்மன் குண்டம், அந்தியூர் பத்ரகாளியம்மன் குண்டம், கணக்கம்பாளையம் பகவதியம்மன் குண்டம், பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் குண்டம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. அவற்றுள் பாரியூர் கொண்டத்து காளியம்மன் குண்டம் தனிச்சிறப்பு மிக்கது. அக்குண்டத்தின் பெயரே அம்மனுக்கு அடைமொழியாக நின்று ‘பாரியூர் கொண்டத்துக் காளியம்மன்’ என வழங்கப்படுகிறது. குண்டம்&என்பது பேச்சு வழக்கில் ‘கொண்டம்’ ஆகிவிட்டது. இந்தக் கொண்டத்துக் காளியம்மன் குழந்தைகளின் உடல்நலத்தைப் பாதுகாக்கின்றாள். இதனால் ‘பின்பும் காக்கும் கொண்டம் காளி’ என்ற பெயரும் இவளுக்கு உண்டு. மணமாகாத பெண்களுக்குத் தாலி பாக்கியம் தருகின்றாள். மணமான பெண்களுக்கு குழந்தை வரம் அருள்கின்றாள். குழந்தை வரம் கேட்டுத்தான் நிறைய பெண்கள் இங்கே வருகின்றார்கள். இதற்கு ஒரு கதையும் சொல்லப்படுகிறது.

ஒரு பெண் சிறு வயது முதலே கொண்டத்துக் காளியை வணங்கி வழிபட்டு வந்தாள். அவளுக்கு வெகு நாட்களாகத் திருமணம் நடக்கவில்லை. வேண்டிக்கொண்டு பூக்குழி இறங்கினாள். திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு பல ஆண்டுகள் ஓடியும் குழந்தை பிறக்கவில்லை. “அம்மா, உன் பக்தையை ஏன் இப்படிச் சோதிக்கிறாய்?” என்று அந்தப் பெண் இரவும், பகலும் கண்ணீர் விட்டுக் கதறி அழுதாள். ஊரார் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானாள். கணவனோ சிறிதும் இரக்கமில்லாமல் இன்னொரு திருமணத்துக்குத் தயாரானான். இதனால் அந்தப் பெண் மனம் உடைந்தாள். பாரியூர் வந்தாள். காளி கோயில் முன் அவளே தீமூட்டினாள். “இனி நான் வாழ்ந்து பயனில்லை” என்று வேதனையோடு கதறியவள் நெருப்பில் குதித்தாள்.

குண்டத்தின் நடுவே காளி தோன்றி அவளைத் தடுத்து ஆட்கொண்டாள். “மகளே!.... உனக்கு நாகதோஷம் இருக்கிறது. ஒன்பது வெள்ளிக்கிழமைகள் என் கோயிலுக்கு வந்து, பாலபிஷேகம் செய். குழந்தை பிறக்கும்’’ என்று அருள்பாலித்தாள். அதன்படி அந்தப் பெண்ணும் ஒன்பது வெள்ளிக்கிழமை கோயிலுக்கு வந்து காளியம்மைக்குப் பாலபிஷேகம் செய்து வழிபட்டாள். அதன் பலனாக ஒரு அழகான ஆண் குழந்தையும் பெற்றெடுத்தாள்.
பாரியூரில் உள்ள கல்வெட்டுகளில் ‘ஸ்வஸ்திஸ்ரீ’ என்ற சொல்லைக் காணலாம். இதற்கு மங்களம் உண்டாகட்டும் என்று பொருள். இந்த அன்னையை வணங்கினால் மங்களம் யாவும் கிட்டும் என்பது நம்பிக்கை.
ஈரோட்டிற்கு வடமேற்கில் 34 கி.மீ. தொலைவிலும், கோபிக்கு வடக்கில் 3 கி.மீ. தொலைவிலும் ‘பாரியூர் கொண்டத்துக் காளியம்மன்’ திருக்கோயில் அமைந்துள்ளது. கோபியிலிருந்து அந்தியூர் செல்லும் பேருந்துகள் எல்லாம் பாரியூர் வழியே செல்கின்றன.

avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Postசரண்.தி.வீ Fri Aug 28, 2009 9:52 am

அருமையான தகவல்கள்..!! ‘பாரியூர் அம்மன்’ கோவிலுக்கு நான் சென்றிருக்கிறேன்..
அவ்வளவு அருமையான இடம் அது..இயற்கை அங்கே கொஞ்சி விளையாடுகிறது..!!
அதுமட்டுமல்லாது, சின்ன தம்பி முதலான நிறைய தமிழ் திரைப்படங்கள் அந்த கோவிலில் எடுத்து உள்ளனர்...அனைவரும் தரிசிக்க வேண்டிய இயற்கையே அன்னையாக இருக்கும் இடமது..!!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக