புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கம்பீரம் - ர.கிருஷ்ணவேணி Poll_c10கம்பீரம் - ர.கிருஷ்ணவேணி Poll_m10கம்பீரம் - ர.கிருஷ்ணவேணி Poll_c10 
69 Posts - 52%
heezulia
கம்பீரம் - ர.கிருஷ்ணவேணி Poll_c10கம்பீரம் - ர.கிருஷ்ணவேணி Poll_m10கம்பீரம் - ர.கிருஷ்ணவேணி Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
கம்பீரம் - ர.கிருஷ்ணவேணி Poll_c10கம்பீரம் - ர.கிருஷ்ணவேணி Poll_m10கம்பீரம் - ர.கிருஷ்ணவேணி Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கம்பீரம் - ர.கிருஷ்ணவேணி Poll_c10கம்பீரம் - ர.கிருஷ்ணவேணி Poll_m10கம்பீரம் - ர.கிருஷ்ணவேணி Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கம்பீரம் - ர.கிருஷ்ணவேணி Poll_c10கம்பீரம் - ர.கிருஷ்ணவேணி Poll_m10கம்பீரம் - ர.கிருஷ்ணவேணி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கம்பீரம் - ர.கிருஷ்ணவேணி Poll_c10கம்பீரம் - ர.கிருஷ்ணவேணி Poll_m10கம்பீரம் - ர.கிருஷ்ணவேணி Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கம்பீரம் - ர.கிருஷ்ணவேணி Poll_c10கம்பீரம் - ர.கிருஷ்ணவேணி Poll_m10கம்பீரம் - ர.கிருஷ்ணவேணி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கம்பீரம் - ர.கிருஷ்ணவேணி Poll_c10கம்பீரம் - ர.கிருஷ்ணவேணி Poll_m10கம்பீரம் - ர.கிருஷ்ணவேணி Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கம்பீரம் - ர.கிருஷ்ணவேணி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 06, 2011 6:48 pm

கனத்தமழைக்குப் பின்னும் இலேசாக தூறிக் கொண்டிருந்தது. பெரிய விசாரிப்புக்கெல்லாம் தேவையிருக்கவில்லை. சற்றே பெரிய அளவிலான வீடுதான். ஆளுக்கொரு கட்டிலும், சாமான்களை வைத்துக் கொள்ள தனித்தனியே சின்ன அலமாரிகளும் மட்டுமே அதிகபட்ச கவனிப்பாக தெரிந்தது. குளிருக்கு பயந்து, ஜன்னல்கள் மூடப்பட்டிருந்ததால், இலேசாக ஈரவாடை அறையெங்கும் பரவி இருந்தது. உணவு வேளை போலும்! ஒவ்வொரு முதியவருக்கு எதிரிலும் சின்ன ஸ்டூல், அதன் மேல் சாப்பாடு வைக்கப்பட்டிருந்தது. கொட்டை கொட்டையாக பழுப்பு நிறத்தில் சாதம், ஒரு கிண்ணத்தில் சேர்ந்தும் சேராமலும் கீரை. மற்றொரு கிண்ணத்தில், சிவப்பு நிறத்தில் திரவம் (சாம்பார்). பக்கத்தில் இலேசான வெள்ளை நிறத்தில் மோர். சிறு துண்டு ஊறுகாய். இதைத்தான் திலகா அம்மா தினமும் சாப்பிடுகிறாரா என்ற கேள்வி காதம்பரிக்கு எழுந்தது. இதுதான் நிஜம் என்று கண்கள் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளாமல் மனம் கலங்கியது.

திலகா அம்மா, பெரிய எழுத்தாளர். பரம்பரைப்பணக்காரி. எழுத்துலகில் காதம்பரி காலடி எடுத்து வைத்திருந்த நேரம் அது. நடக்கத்தெரியாத குழந்தையைக் கைபிடித்து அழைத்துச் செல்வதைப் போல நடத்திச் சென்றிருக்கிறார் திலகா அம்மா. பேட்டி என்று வீட்டுக்கு போனால் சுடச்சுட உணவு வகைகளால் தட்டை நிரப்பி எடுத்து வருவார்.

"இதை சாப்பிட்டுப் பாரும்மா. முப்பருப்பு போண்டா பண்ணியிருக்கேன்' என்ற உபசரிப்பு வரும். பாதி இரவில் சென்றாலும், பிரியாத தலையும், பளிச்சென்ற புடவையுமாக இருக்கும் திலகாம்மா, முதியோர் இல்லத்திலா? காதம்பரியின் மனம் கனத்தது.

அன்றும் வழக்கம் போல் தன் பத்திரிகை வேலையில் மூழ்கியிருந்தாள் காதம்பரி, பிரபல "மங்கையர் பூங்கா' பத்திரிகையின் ஆசிரியர்.

"வணக்கம். மங்கையர் பூங்கா பத்திரிகையா?'

"ஆமா.'

"நான் காதம்பரி மேடம் கிட்ட பேசணும்.'

"நான்தாம்மா காதம்பரி பேசறேன். என்ன விஷயம் சொல்லுங்க?'

"மேடம் என்பேர் வத்சலா. நான் திலகா அம்மாவை புனிதா முதியோர் இல்லத்துல பார்த்தேன்.'

"திலகா... திலகாம்மாவா! நிஜமாத்தான் சொல்றீங்களா?'

"நிஜமாத்தான் மேடம்! எனக்கு தெரிஞ்சவங்க அங்க இருக்காங்க. அவங்களைப் பார்க்கப் போனப்ப, திலகாம்மாவைப் பார்த்தேன். மனசு பதறிப்போச்சு. எத்தனை பெரியவங்க. வயசானகாலத்துல இப்படித் தனிமையில பார்த்தப்போ தாங்கவே முடியலை. நாம ஏதாவது செய்யணும் மேடம். அதுக்குத் தான உங்களுக்கு ஃபோன் செஞ்சேன்' அந்த ஃபோன் வந்த நிமிடத்திலிருந்து, நினைவலைகள் பின் நோக்கி சுழன்று கொண்டேயிருந்தன.

கணவர் பெரிய தொழிலதிபர்; பல கோடி ரூபாய்களுக்குச் சொந்தக்காரர் என்ற கர்வம் துளியுமின்றிப் பழகிய திலகாம்மா; எழுத்துப்பணியை சமூக பொறுப்பாக, பக்தியுடன் செய்து வந்த திலகாம்மாவுக்கு குழந்தை இல்லையென்பதால் அண்ணன் மகளையும், அக்காள் மகனையும் ஊட்டி வளர்த்தார். கேட்டவர்க்கு இல்லை என்று சொல்லாமல் தானமும், தர்மமும் வாரி வழங்கியவர்.

சாதாரண எழுத்தாளராக இருந்த தன்னை, இத்தனைப் பெரிய பத்திரிகைக்கு ஆசிரியராக ஏற்றிவிட்டதும் ஒரு வகையில் திலகாம்மாதான்.

இப்போது முதியோர் இல்லத்தில்.. ஒற்றைக்கட்டிலில்... தன்னந்தனிமையில்.

காதம்பரியின் மனம் பதறியது.

"யாரும்மா! என்னை பார்க்க வந்திருக்கீங்களா?' கைகளால் கண்ணுக்கு மறைவு கட்டி நிமிர்ந்து பார்த்தார் திலகா.

சட்டென பேச வாய் வரவில்லை காதம்பரிக்கு.

"அம்மா, நான்தான் காதம்பரி. "மங்கையர் பூங்கா' பத்திரிகையில ஆசிரியரா இருக்கேன். நீங்கத் தொடர்கதை எழுதினப்ப, உங்களை நிறைய தடவை சந்திச்சிருக்கேன். நிறைய பேட்டிகள் எடுத்திருக்கேன். உங்க வீட்டுக்குக் கூட வந்திருக்கேம்மா. நினைவிருக்கா?'

"ஓ! இப்ப நினைவுக்கு வருது. கண்ணு கொஞ்சம் மறைச்சாப்புல இருக்கு. அதான் சட்டுனு புரியலை. குரலைக் கேட்டதும் புரிஞ்சு போச்சு... உட்காரு.'

எளிய கைத்தறிப் புடைவை என்றாலும், கசங்காமல், நறுக்கென்று உடுத்தியிருந்தார். முடியை இழுத்து வாரி முடிச்சிட்டு இருந்தது. நெற்றியில் சின்னதாக விபூதிக்கீற்று. மாறாத புன்னகை. கொண்டு வந்திருந்த பழ வகைகளை திலகாம்மாவின் கைகளில் தந்து வணங்கினாள் காதம்பரி.

"இத்தனை பழம் எதுக்குடாம்மா! சரி, இதை இங்க இருக்கற எல்லாருக்கும் குடுத்துட்டு வா. அந்த ஓரத்து கட்டில்ல படுத்திருக்காங்களே, அவங்க பேரு கனகா. அவங்களுக்கு அல்சராம். டாக்டர் நிறைய பழம் சாப்பிடச் சொல்லியிருக்கார். அவங்களால பணம் கொடுத்து வாங்கிச் சாப்பிட முடியாது. இந்த முதியோர் இல்லத்துல அதுக்கெல்லாம் வசதி கிடையாது.இரண்டு வேளை சாப்பாடு போட்டுடுவாங்க' சிரித்தார் திலகாம்மா.

நிஜத்தின் சூடு, சுரீரென உறைத்தது காதம்பரிக்கு. நல்லதோர் வீணையை, நலம்கெட புழுதியில் எறிந்தால் எப்படி இருக்கும் என்பது புரிந்தது.

"இந்தாம்மா காதம்பரி. எடுத்துக்கோ. நீ வாங்கிட்டு வந்த பழம்தான். இப்ப இது தான் என்கிட்ட இருக்கு. சாப்பிடு' சிரித்துக் கொண்டே சொன்னார்.

"என்னம்மா! இந்த நிலையில் கூட எனக்கு உபசாரம் செய்றீங்க?'

"இதுவும் ஒரு அனுபவம். அவ்வளவுதான்.'

"நீங்க சுலபமா சொல்லீட்டீங்கம்மா. எனக்கு மனசு ஆறவே இல்லை. உங்க அண்ணன், அக்கா குழந்தைகளுக்கும், சொந்த பந்தங்களுக்கும் எவ்வளவு செஞ்சீங்க! நன்றிகெட்டவங்க. ஒத்தருக்குக் கூடவா நியாய அநியாயம் புரியல?'

"விடேன். இதோ இந்த ஆரஞ்சுப்பழத்துல சுளை இனிப்பா இருந்தா சாப்பிடறோம். நடுவுல கசப்பான கொட்டை வந்தா? உடனே துப்பிடறோம் இல்லையா! அதை சாப்பிட்டுட்டு, இருக்கற இனிப்பையும் கசப்பா ஆக்கிக்க கூடாது.'

இதற்கு என்ன பதில் சொல்வது?

"சரிம்மா. அதைப்பத்தி பேசல. இப்ப நீங்க கிளம்புங்க.'

"இப்ப எங்கம்மா என்னைக் கூப்பிடற?'

"என்னோட, எங்க வீட்டுக்கு வந்துடுங்கம்மா. நான் எல்லா ஏற்பாடுகளையும் செய்து வெச்சுட்டுதான் வந்திருக்கேன். உங்களை இந்த நிலையில பார்க்க என்னால முடியலை. வாங்க. மீதிக் காலத்தை நிம்மதியா கழிக்கலாம்.'

சிரிப்புதான் பதிலாக வந்தது.

"இப்ப நான் நிம்மதியா இல்லைன்னு உனக்கு யார் சொன்னா? நான் ஒரு காலத்துல, பிரபல எழுத்தாளரா, இருந்தேன். அப்ப, உன்னை மாதிரி இயல்பான ஆர்வம் இருந்தவங்களுக்கு, மேலே வரத் துடிச்சவங்களுக்கு, சில சந்தர்பங்கள்ல, உதவிகள் பண்ணியிருக்கலாம். அதுக்கு பதில் உதவி செய்யணும்னு நான் எதிர் பார்க்க ஆரம்பிச்சா, அப்ப நான் செஞ்ச உதவிகளுக்கு அர்த்தமே இல்லாம போயிடும். நான் உன்னையும் சேர்த்துதான் சொல்றேன்.

இங்க இருக்கற யாருக்கும் என்னோட பழைய வாழ்க்கை தெரியாது. நான் வாழ்வாங்கு வாழ்ந்த கதையும், கணவர் இறந்த பிறகு சொந்த பந்தங்கள், என்னை ஏமாத்தி, சொத்துக்களைப் பறிச்சுக்கிட்டு, நான் எழுதிய புத்தகங்களை எரிச்சு, என்னை வீட்டை விட்டு துரத்தின கதையும் தெரியாது. அதையெல்லாம் சொல்லி சுயபச்சாதாபம் சம்பாதிக்க எனக்குப் பிடிக்கவில்லை. நான் பாட்டுக்கு இவங்களோட கலகலன்னு இருந்துடுவேன். என் காலம் கழிஞ்சிடும். என்னை திடீர்னு பிரபலமாக்கிடாதே. என்னோட இந்த நிலைக்கு, எந்த விதத்திலும் நான் காரணமில்லைன்னு எனக்குத் தெளிவா தெரியும். அதனால எனக்கு வருத்தமே இல்லை. இது வாழ்க்கையோட ஒரு பகுதி.'

கை கூப்பியபடி எழுந்தாள் காதம்பரி.

"எனக்கு ஒரு உதவி பண்ண முடியுமாம்மா காதம்பரி?'

"சொல்லுங்கம்மா.'

"என்னை அடிச்சு வெளிய அனுப்பும் போது என்னோட கண்ணாடி உடைஞ்சுப் போயிடுச்சு. படிக்காம, எழுதாம இருக்க முடியலை. அதனால, எனக்கு, புதுசா ஒரு கண்ணாடி வாங்கித்தர முடியுமா காதம்பரி? எனக்கு அவசரமில்லை.'

உடனே செய்வதாக வாக்களித்துக் கிளம்பினாள் காதம்பரி. படிகளில் இறங்கும் போது, திலகாம்மாவை நினைத்து மனம் கனக்கவில்லை. மாறாக பெருமிதத்தில் விம்மியது.

வாழ்க்கையின் உயர்நிலையில் இருந்தபோது, துளியும் கர்வமேயின்றி இருந்த திலகாம்மாவின் முகமும், இவ்வளவு சிரமங்களுக்கிடையேயும் யாரிடமும் யாசிக்க விரும்பாத திலகாம்மாவின் முகமும் ஒன்றே என்பது புரிந்தது. அது கம்பீரத்தால் நிறைந்திருந்தது. "கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே' என்று நினைத்துக்கொண்டே கார் எறினாள்.

மங்கையர் மலர்



கம்பீரம் - ர.கிருஷ்ணவேணி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக