புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_c10நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_m10நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_c10 
20 Posts - 65%
heezulia
நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_c10நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_m10நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_c10நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_m10நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_c10 
62 Posts - 63%
heezulia
நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_c10நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_m10நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_c10நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_m10நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_c10நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_m10நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் பணத்தின் கதை! – வரலாறு!


   
   
avatar
azeezm
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010
http://azeezahmed.wordpress.com/

Postazeezm Mon Jan 31, 2011 1:35 pm

நம் பணத்தின் கதை! – வரலாறு!


நம் பணத்தின் கதை! – வரலாறு! P70



நீண்ட நெடிய இந்திய வரலாறில் பல நூறு ஆண்டுகளாகவே நாணயங்கள் புழங்கி வந்திருக்கின்றன.






ன்றாலும் பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவுக்கு வந்தபிறகே நாணயங்களின் அதிகாரப்பூர்வ மான வரலாறு தொடங்குகிறது.

இந்தியாவில்
பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சி அமைப்பதற்கு முன்பு ஹைதராபாத் நிஜாம், நாணயம்
தயாரிக்கும் ஆலை ஒன்றை நடத்தி வந்தார். 1790-ல் பிரிட்டிஷ் அரசாங்கம் அதன்
அப்போதைய தலைநகரான கொல்கத்தாவில் நாணயம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றைத்
தொடங்கியது. இதற்காக இங்கிலாந்தில் இருந்து இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன.
என்றாலும், நாணயத் தட்டுப்பாடு தொடர்ந்து இருந்ததால், 1815-ல் மும்பை
மாகாண பிரிட்டிஷ் ஆளுநர் ஒருவர் மும்பையில் நாணயம் தயாரிக்கும் ஆலை ஒன்றைத்
தொடங்கினார். 1984-ல் டெல்லி அருகே நொய்டாவில் புதிய நாணய ஆலை ஒன்றும்
தொடங்கப்பட்டது. தற்போது இந்த ஆலைகள் மூலம் ஓர் ஆண்டுக்கு சுமார் அறுபது
லட்சம் நாணயங்கள் உற்பத்தியாகிறது.


நம் பணத்தின் கதை! – வரலாறு! P71aநமது
நாணயத்தின் கதை இப்படி என்றால் பணத்தின் வரலாறு வேறு மாதிரி. ஆரம்ப
காலத்தில் ரூபாய் நோட்டை (1770 – 1832 காலகட்டத்தில்) பேங்க் ஆஃப்
ஹிந்துஸ்தான் வெளியிட்டது. பிறகு இங்கிலாந்திலிருந்து பணத்தை அச்சிட்டு
இங்கே கொண்டு வந்து கொடுத்தது பிரிட்டிஷ் அரசாங்கம். 10, 20, 50, 100,
1,000 ரூபாய் நோட்டுகள் இந்தியாவில் விக்டோரியா மகாராணியின் பெயரில்
வெளியிடப்பட்டன. இந்த ரூபாய் நோட்டுகள் பாதுகாப்பு காரணங்களுக்காக பாதியாக
வெட்டப்பட்டு தபாலில் அனுப்பி வைக்கப்படும். அதைக் கொண்டு போய்
கொடுத்தால், மீதிப் பணத்தை கொடுக்கும் விநோதமான வழக்கம் அப்போது இருந்தது.


நம் பணத்தின் கதை! – வரலாறு! P711917-ல்தான்
முதன் முதலில் ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் நோட்டுகள் தயாரித்து
வெளியிடப்பட்டன. ஆனால் சில காரணங்களால் 1926-ல் ஒரு ரூபாய் மற்றும் இரண்டு
ரூபாய் வெளியிடுவது நிறுத்தப்பட்டது. 1935-ல் கரன்சி பொறுப்பு அனைத்தும்
ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் கைக்கு வந்தது. அதன்பிறகு 500 ரூபாய்
நோட்டு கரன்சியை அறிமுகப்படுத்தியது. 1940-ல் மீண்டும் ஒரு ரூபாய்
நோட்டுகளை வெளியிட்டது. 1947-ம் ஆண்டுவரை ஆறாம் ஜார்ஜின் உருவம்
பொறித்த நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய
அரசால் கரன்சி வெளியிடப்பட்டது.





நோட்டுகள் அச்சாகும் நாசிக்!


நம் பணத்தின் கதை! – வரலாறு! P72
வட இந்தியாவில் நமக்கு எந்த ஊரை பற்றி தெரியுமோ இல்லையோ, நாசிக் பற்றி நிச்சயம் தெரியும்.




காரணம், இங்குதான் நமது ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுகின்றன.
இந்தியாவில்
பிரிட்டிஷ் ஆட்சி நடந்த போது இங்கிலாந்திலிருந்து கரன்சி நோட்டுகள்
அச்சடிக்கப்பட்டு அவை கப்பல் மூலமாக இங்கு கொண்டு வரப்பட்டன. இது நேரம்
பிடிக்கும் விஷயமாக இருந்ததால், 1925-ல் மகாராஷ்ட்டிர மாநிலத்தில் உள்ள
நாசிக்கில் ஒரு பிரின்டிங் பிரஸை அமைத்தது பிரிட்டிஷ் அரசாங்கம். முதலில்
இங்கே தபால்தலைகள் மட்டுமே அச்சடிக் கப்பட்டன. மூன்று ஆண்டுகளுக்குப்
பிறகுதான் கரன்சி நோட்டுகள் அச்சடிக்கும் வேலை தொடங்கியது. இன்று வரை இங்கு
ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுகின்றன.
ஆனால்
இந்தியப் பொருளாதாரம் வளர வளர, பணத்தின் தேவை அதிகரித்ததாலும் வங்கிகளின்
எண்ணிக்கை பெருகியதாலும் மேலும் சில இடங்களில் கரன்சி நோட்டுகளை
அச்சடிக்கும் பிரின்டிங் பிரஸ்களைத் தொடங்கியது நமது மத்திய அரசாங்கம்.
1974-ல் மத்தியப் பிரதேசம் தேவாஸில் ஒரு அச்சகம் தொடங்கப்பட்டது.இந்த
இரண்டு ஆலைகளும் எஸ்.பி.எம்.சி.ஐ.எல். [Security Printing and Minting
Corporation of India Limited] நிறுவனத்தின் கீழ் செயல்படுகிறது.
நம் பணத்தின் கதை! – வரலாறு! P74இவை
தவிர, ஆர்.பி.ஐ. தனியாக பாரதிய ரிசர்வ் பேங்க் நோட் முத்ரன் பிரைவேட்
லிமிடெட் (Bharatiya Reserve Bank Note Mudran Private Limited) என்கிற
பொது நிறுவனத்தை 90-களில் தொடங்கியது. இந்த நிறுவனம் மைசூரிலும் மேற்கு
வங்காளம் சல்பானியிலும் கரன்சி மற்றும் வங்கிகள் சம்பந்தப்பட்ட ஆவணங் களை
அச்சடித்து வருகிறது.
இங்க் பேப்பர் சேஃப்டி
கரன்சி
தயாரிக்கும் பிரின்டிங் பிரஸுக்குத் தேவையான பேப்பர்கள், இங்க் போன்றவை
தயார் செய்ய மத்தியப்பிரதேசத்தில் இரண்டு ஆலைகளை நடத்தி வருகிறது மத்திய
அரசு. ஹோசங்காபாத்தில் பேப்பர் மில், தேவாஸில் சென்சிட்டிவ்வான இங்க்
தயாரிக்கும் ஆலை நடத்தப்பட்டு வருகிறது. கரன்சிகளின் ரகசியங்கள் கருதியே
இப்படி ஒரு ஏற்பாடு.
கரன்சி ஆர்டர்
கரன்சிகளை
எவ்வளவு அச்சடிக்க வேண்டும் என்பதையும், எப்படி பாதுகாப்பாக உரிய
இடங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதையும் ஆர்.பி.ஐ.தான் இந்த
நிறுவனங்களுக்குச் சொல்கிறது. இலங்கை, பூடான், ஈராக், ஆப்பிரிக்கா போன்ற
நாடுகளிலிருந்தும் கரன்சி நோட்டுகளை அச்சடிக்கும் ஆர்டர்கள் இந்த
நிறுவனங்களுக்குக் கிடைக்கின்றன. சுமார் பத்தாயிரம் தொழிலாளர்கள்
பிரின்டிங் பணிகளில் ஈடுபடுகின்றனர்.
நம் பணத்தின் கதை! – வரலாறு! P73பத்தாயிரம்
ரூபாய் நோட்டு வரை அச்சடிக்க ஆர்.பி.ஐ.க்கு அதிகாரம் இருந்தாலும்,
தற்போது அதிகபட்சம் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மட்டுமே அச்சடிக்கிறது.
கரன்சி விநியோகம்
ஆர்.பி.ஐ.
கொச்சி உட்பட பத்தொன்பது இடங்களில் தனது கரன்சி கருவூலங்களை [chest]
வைத்துள்ளது. இங்கிருந்துதான் கரன்சி நோட்டுகள் விநியோகம் செய்யப்படுகிறது.
இது தவிர, எஸ்.பி.ஐ. உள்பட தேசியமயமாக் கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார்
வங்கிகளின் 4,200 கிளைக் கருவூலங்கள் வழியாகவும் கரன்சி நோட்டுகள்
விநியோகம் செய்யப் படுகின்றன. போலியில்லாத ரூபாய் நோட்டுகளை விநியோகம்
செய்ய வேண்டிய பொறுப்பு ஆர்.பி.ஐ.யையே சாரும்.



நம் பணத்தின் கதை! – வரலாறு! End_bar



நன்றி:-- கண்பத், மோ. கிஷோர் குமார்

நன்றி:- நா.வி

http://azeezahmed.wordpress.com/2011/01/31/npk/



நம் பணத்தின் கதை! – வரலாறு! End_bar

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக