புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - இணையதளத்தில்!!!  Poll_c10கணவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - இணையதளத்தில்!!!  Poll_m10கணவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - இணையதளத்தில்!!!  Poll_c10 
32 Posts - 51%
heezulia
கணவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - இணையதளத்தில்!!!  Poll_c10கணவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - இணையதளத்தில்!!!  Poll_m10கணவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - இணையதளத்தில்!!!  Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
கணவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - இணையதளத்தில்!!!  Poll_c10கணவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - இணையதளத்தில்!!!  Poll_m10கணவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - இணையதளத்தில்!!!  Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - இணையதளத்தில்!!!  Poll_c10கணவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - இணையதளத்தில்!!!  Poll_m10கணவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - இணையதளத்தில்!!!  Poll_c10 
74 Posts - 57%
heezulia
கணவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - இணையதளத்தில்!!!  Poll_c10கணவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - இணையதளத்தில்!!!  Poll_m10கணவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - இணையதளத்தில்!!!  Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
கணவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - இணையதளத்தில்!!!  Poll_c10கணவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - இணையதளத்தில்!!!  Poll_m10கணவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - இணையதளத்தில்!!!  Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
கணவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - இணையதளத்தில்!!!  Poll_c10கணவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - இணையதளத்தில்!!!  Poll_m10கணவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - இணையதளத்தில்!!!  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - இணையதளத்தில்!!!


   
   

Page 1 of 2 1, 2  Next

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Jan 12, 2011 3:21 pm

எச்சரிக்கை 100 முறை!
சகோதர சகோதரிகளே!

கணவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - இணையதளத்தில்!!!  -%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%2001%200--932

நாம் நம் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கக்கூடிய நிலை ஏற்பட்டால் உணர்ச்சி மிகுதியால் சில நேரம் நம்முடைய துணையிடம் / நிச்சயம் முடிக்கப்பட்ட பெண்ணிடம் தொலைபேசியில் / கைப்பேசியில் / இணை தொலைபேசி என்று சொல்லக்கூடிய வாய்ப் பேசிகளில் (Voip Phones) பேசும் போது எல்லை மீறி அந்தரங்க விஷயங்களை பேசி விடுகிறோம்.

இது யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்றோ அல்லது யாரும் இந்த பேச்சுகளை ஒட்டு கேட்க முடியாது என்றோ நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அப்படி நீங்கள் யாரேனும் நினைத்திருந்தால் தயவு செய்து அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.

"நெட்மூலம் பகிரங்கமாகிக்கிட்டு இருக்கும் என் மானத்தை நீங்கதான் காப்பாத்தணும்'’ என்றபடி நம்மிடம் கண்ணீருடன் வந்தார் அந்த இளம் குடும்பத்தலைவி.

"முதல்ல கவலையை விடுங்க. என்ன பிரச்சினை? உங்க படத்தை யாராவது...?'’ என நாம் முடிக்கும் முன்பே...

"இல்லைங்க. எனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம்தான் ஆகுது. கல்யாணமான நாலாவது மாசமே என் கணவர் குவைத் போயிட்டார். என் மேல் அளவுகடந்த காதல் அவருக்கு. அதனால் இரவு நேரங்கள்ல எங்கிட்டே ரொமாண்டிக்கா பேசுவார். என்னையும் அவர் அளவுக்கு பேசவைப் பார்..'' சொல்லும்போதே அவர் கண்கள் சங்கடம் கலந்த பயத்தில் தவித்தது.

"சரி விடுங்க. இது பல இடங்களில் நடக்குறதுதானே... இதில் என்ன பிரச்சினை?'’
அந்த குடும்பத் தலைவி, அடுத்து சொன்ன தகவல் நம்மை ஏகத்துக்கும் அதிரவைத்தது.

"அவரும் நானும் ரொமாண்டிக் மூடில் எல்லை மீறி பேசிய அந்தரங்கப் பேச்சுக்கள்... இப்ப இண்டர் நெட்டில் வருதாம். யாரோ ஒரு கிரிமினல் பேர்வழி... எங்களுக்கே தெரியாமல்... எங்க பேச்சை ரெக்கார்டு பண்ணி... இப்படிப் பண்ணியிருக் கான். இதை என் வீட்டுக்காரர்தான் பார்த்துட்டு... அதிர்ந்துபோய்... எனக்குத் தகவல் சொன்னார்.
அவருக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்த நாம்... அவர் சொன்ன விவகாரமான இணையதளத்தை கவனித்தோம்.

கணவன்- மனைவிகள், .... ஜோடிகள், என பலதரப்பட்ட ஆண்-பெண்களின் அப்பட்டமான உரையாடல்கள்... அங்கே பதியப்பட்டிருந்தன. காதுகள் கூசும் அளவிற்கு... பலரும் தங்களது அந்தரங்க உணர்வுகளை யார் கவனிக்கப்போகிறார்கள் என்ற தைரியத்தில்.. தங்கள் பார்ட்னர்களிடம் பகிர்ந்துகொண்ட விஷயங்கள்... அங்கே தோரணம் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தன.
நமக்குத் தெரியாமல் நாம் செல்போனில் பேசுவதை தனி நபர் ஒருவரால் ரெக்கார்டு செய்யமுடியுமா? என விசாரிக்க ஆரம்பித்தோம்.

பிரபல மொபைல் கம்பெனியில் டெக்னிக்கல் பிரிவு உயர் அதிகாரியாகப் பணிபுரியும் அவரைத் தொடர்புகொண்டோம். அந்த அதிகாரியோ... ஒரு குபீர்ச் சிரிப்பை உதிர்த்துவிட்டு... "இந்த மாதிரியான பேச்சுக்கள் 3 விதமா பதிவாக வாய்ப்பிருக்கு.

முதல் வகை... நீங்களோ, நானோ மொபைல்ல ரெக்கார்டிங் வாய்ஸ் சாஃப்ட்வேர்கள இன்ஸ்டால் பண்ணிக்கிட்டோம்ன்னா நமக்கு வர்ற இன்கம்மிங், அவுட்கோயிங் கால்கள் தானா துல்லியமா பதிவாயிடும். இதில் பெரிய பிரச்சினை இல்லை.

இரண்டாவது, எங்களை மாதிரியான செல்போன் நிறுவனங்கள் கஸ்டமர்களின் பிரச்சினைகள தீர்த்து வைக்க 24 மணி நேரமும் இயங்கும் கால்சென்டர்கள உருவாக்கி வச்சிருக்கு. இந்த கால்சென்டர்கள்ல பணிபுரியும் ஒருத்தர் நினைச்சா... யார் பேச்சை வேணும்னாலும் ரெக்கார்ட் பண்ணமுடியும்.

பொதுவா நைட் ஷிப்டில் அதிக வேலையிருக்காது. அப்ப டூட்டியில் இருக்கறவங்க... நீண்ட நேரமா ஒரு கால் பேசப்படுதுன்னா அவுங்க என்ன பேசறாங்கன்னு ஒட்டு கேட்க முடியும். நைட்ல கணவன்-மனைவி, உணர்ச்சியோட பேசுவாங்கங்கற ரகசியம் எல்லோருக்கும் தெரிஞ்சதுதானே. இந்த மாதிரி பேச்சுக்களை கேட்டுக்கேட்டு மயங்குற சிலர் இருக்கத்தான் செய்றாங்க. அப்படி ரெக்கார்ட் பண்ணியது அப்படியே பரவி நெட் வரைக்கும் வர வாய்ப்பிருக்கு.
மூன்றாவதாக, சில குறிப்பிட்ட இணையதளங்கள், "உங்களுக்காக எங்களது பெண்கள் காத்திருக்கிறார்கள். அவர்களிடம் நீங்கள் எதைப்பற்றி வேண்டுமானாலும் கேட்கலாம், செக்ஸ் பற்றி மற்றவர்களிடம் பேச தயங்குவதை இவர்களிடம் பேசலாம்'னு குறிப்பிட்டு 12 இலக்க எண் தந்திருப்பாங்க. அதுல ஏதாவது ஒரு நம்பர காண்டக்ட் பண்ணி பேசனிங்கன்னா நீங்க பேசற பேச்சை உங்களுக்கே தெரியாம ரெக்கார்ட் பண்ணி நெட்ல போட்டுடுவாங்க. இது காசு கொடுத்து நமக்கு நாமே சூன்யம் வச்சிக்கறதுக்கு சமம்'' என்றார் விரிவாக.

பெண்களுடன் மோசமான உரையாடல்களுக்கு அழைப்பு விடுக்கும் அந்த இணையதளங்கள் குறித்தும் விசாரித்தோம். அதில் கையைச் சுட்டுக்கொண்ட ஒரு நண்பர் தன் அனுபவங்களை சங்கோஜத்துடனே சொல்ல ஆரம்பித்தார். "பொதுவா ...இந்த மாதிரியான வெப்ஸைட்டுகளில் நான் உலவிக்கிட்டு இருந்தபோது... "எந்த நேரத்திலும் மனதில் இருக்கும் ஆசைகளை உரையாடல் மூலம் இந்தப் பெண்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்'னு ஒரு வெப்ஸைட் கூவியழைத்தது.

அவங்க கொடுத்திருந்த ஐ.எஸ்.ஐ. எண்ணில் தொடர்பு கொண்டேன்.எடுத்த எடுப்பிலே "என் பேரு லதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), மும்பையிலுள்ள காலேஜ்ல படிக்கறேன். என் சொந்தவூர் சென்னைதான். உங்களோட பேசணும்னு ஆசையா இருக்கு' என்றவள், இனிமையாக பேசி மயக்கினாள். இப்படி அவளோடு 22 நிமிடம் உரையாடல் நீண்டது.

அந்த மாத பில் வந்தபோது மயக்கம் வந்துவிட்டது. காரணம் அந்த 22 நிமிட பேச்சுக்கு 3,050 ரூபாய் சார்ஜ் ஆகியிருந்தது. நொந்துபோய் இதுபற்றி விசாரித்த போது இணையதளத்தரப்பும் தொலை பேசித்தரப்பும் கூட்டு சேர்ந்து என்னை மாதிரியான சபல பார்ட்டிகள்கிட்ட பணம் புடுங்க இந்த மாதிரி பண்ணிக்கிட்டிருக்காங்கன்னு தெரிஞ்சிது. லோக்கல் கால்களை ஐ.எஸ்.டி கால்களா மாத்தித்தான் பணம் பறிக்கிறார்கள்'' என்றார் எரிச்சலாக. வழக்கறிஞரான ஒருவர் நம்மிடம் "சென்னையிலுள்ள பிரபலமான கடைவீதி ஒன்றில்

குளோனிங் செல்லை உருவாக்கித்தர்றாங்க. இது எதுக்குன்னா கணவன் மீது மனைவிக்கோ... அல்லது மனைவி மீது கணவனுக்கோ சந்தேகம் இருந்தா... அவங்க சிம் கார்டைக் கொடுத்து அதே நம்பருக்கான குளோனிங் சிம்கார்டை வாங்கிக்கலாம். சம்பந்தப்பட்டவங்க எவரிடம் பேசினாலும் இந்த குளோனிங் சிம் போட்ட செல்போனிலும் கேட்கும்.
இப்படி ஒரு வியாபாரம் அங்க நடக்குது. அதேபோல்... இன்னொரு விஷேச ஆண்டனாவையும் அங்க விக்கிறாங்க. அந்த மினி சைஸ் ஆண்டனாவை வீட்டு மொட்டை மாடியில பொருத்திட்டா போதும்... அக்கம் பக்கத்தலயிருக்கற செல்போன் லைன்களுக்கு வர்ற அத்தனை கால்களையும் ஒட்டுக்கேட்டு.. ரெக்கார்டும் பண்ணமுடியும். இதன் மூலம் சின்னஞ்சிறிய ஜோடிகள், தம்பதிகள், இவங்க அந்தரங்க உரையாடல்கள் கொள்ளையடிக்கப்படுது.

இந்த குளோனிங் செல்போனை அவங்க 20 நிமிசத்தில் ரெடிபண்ணிக் கொடுக்குறாங்க. இதுக்கு சார்ஜ் 3,500 ரூபாயாம். நாடு எங்கேயோ போய்க்கிட்டு இருக்கு. இந்த மாதிரியான டேஞ்சரஸ் விவகாரங்களை உடனே அரசாங்கம் தடுக்கணும்'' என்றார்.

சென்னையில் உள்ள ஒரு, சைபர் க்ரைம் பிரிவு ஏ.சி. யிடம் இதுபற்றி நாம் கேட்டபோது..."மொபைல்ல சாஃப்ட்வேர்ஸ் இன்ஸ்டால் பண்ணி ரெக்கார்ட் பண்ணிக்கறது அவுங்களோட தனிப்பட்ட விருப்பம். ஆனா அத வச்சி மிரட்டறது, வெளியிடறது குற்றம். இதுக்கு கடுமையான தண்டனையுண்டு. நம் பேச்ச மொபைல் கம்பெனிங்க ரெக்கார்ட் பண்ண வாய்ப்பு குறைவு. குளோனிங் சிம், மினி ஆண்டனாவெல்லாம் புது விவகாரமாயிருக்கு. இதனால பெரிய பிரச்சினைகள் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. நாங்க இத தீவிரமா கண்காணிக்கிறோம்''’ என்றார் உறுதியான குரலில்.
மொபைல் போனில் பேசும் முன் யோசித்து பேசுங்கள். இல்லையேல்.... உங்கள் அந்தரங்கமும் நாளை உலகமெங்கும் உலா வரலாம்.

இது சம்பந்தமாக சைபர் க்ரைம் ஸ்பெஷலிஸ்ட்டான அட்வ கேட் ஒருவர், "வெளிநாட்டிலுள்ள கணவனிடம் மனைவி தன் ஆசைகளையும், ஏக்கம் விருப்பங்களையும் வெளிப்படுத்தி சந்தோஷமாகப் பேசுவது உண்டு. இளம் பெண்கள் அப்பா, அம்மாவிடம் பகிர்ந்து கொள்ளாத விஷயங்களைக் கூட தோழிகளிடம் பகிர்ந்து கொண்டு பேசுவதுண்டு.
சிலர் கொஞ்சிக் குலவுவது மட்டுமில்லாமல், உணர்ச்சியை தூண்டும் விதமாக ஃபோனில் பேசுவது உண்டு. இதையெல்லாம் ஒருவன் ஒட்டுக் கேட்டு அதை ரெக்கார்டும் செய்கிறான் என்றால் என்ன நடக்கும்? ஆண்களிடம் ப்ளாக்மெயில் செய்து பணமும், பெண்களிடம் கற்பையும் சில கில்லாடிகள் களவாட வாய்ப்பிருக்கிறது. இதைவிட டேஞ்சரஸ் என்னன்னா... டெரரிஸ்ட்டுகள் நம்ம சிம்கார்டை குளோனிங் சிம்கார்டாக்கி விட்டால் அவ்வளவுதான். போலீஸிடம் நாம்தான் மாட்டிக்கொள்ள வேண்டிய சூழல். ஆக,

ஒவ்வொரு மாதமும் பில்தொகை எவ்வளவு வருது என்பதை "செக்' பண்ணணும்.

நமக்கு அறிமுகமே இல்லாத செல் நம்பருக்கு கால் போயிருந்தாலோ, ராங்-கால் வந்து நாம் கட் பண்ணியிருப்போம்... ஆனாலும் தொடர்ந்து பேசியதுபோல பில் வந்திருந்தாலோ,

நாம் எந்த நம்பருக்கும் எஸ்.எம்.எஸ். அனுப் பாமலேயே "டெலிவர்டு' ஆனது போல ரிப்ளை வந்தாலோ அலட்சியப்படுத்த வேண்டாம்.

உடனடியாக காவல் துறையில் புகார் கொடுத்து கண்காணிக்க வேண்டும்.

சிம்கார்டை யாரிடமும் கொடுக்காமல் கேர்ஃபுல்லாக இருக்க வேண்டும். ஒருவேளை சிம்கார்டு தொலைந்து போனாலும் புகார் கொடுத்து "லாக்' பண்ணிவிட வேண்டும்.'' என்று உஷார்படுத்துகிறார் அவர். (நன்றி: நக்கீரன்)

சகோதர சகோதரிகளே, நம்மில் பலரும் இது போன்ற செயல்களை தினமும் செய்து கொண்டிருக்கிறோம். இது எங்கோ நடக்கிறது, நமக்கேன் கவலை என்று இருந்து விடாதீர்கள். இதை எச்சரிக்கையாக எடுத்து உங்கள் வாழ்க்கையில் முதலில் கடைபிடியுங்கள்.

தொலைபேசியில் / கைப்பேசியில் / இணை தொலைபேசி என்று சொல்லக்கூடிய வாய்ப் பேசிகளில் (Voip Phones) எல்லை மீறி நிதானம் இழந்து மனைவி தானே என்றி நினைத்து அந்தரங்க விஷயங்களை எக்காரணம் கொண்டும் பேசாதீர்கள், அப்படி பேசுமாறு உங்கள் மனைவியோ / நிச்சயமுடிக்கப்பட்ட பெண்ணோ உங்களை வற்புறுத்தினால் விஷயத்தின் விபரீதத்தை சொல்லி புரிய வையுங்கள்.

இதை உங்கள் நண்பர்களுக்கும், நல விரும்பிகளுக்கும் சொல்லி புரிய வையுங்கள். திருமணமான புதிதில் எல்லோருக்கும் இருக்கும் பிரச்சனை தான், ஆனால் நாம் உஷாராக இல்லாது போனால் நம்முடைய அந்தரங்கமும் இணையதளத்தில் வெளிவந்து அதன் பின் வருத்தப்பட நேரிடும்.






சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 12, 2011 3:26 pm

///ஒவ்வொரு மாதமும் பில்தொகை எவ்வளவு வருது என்பதை "செக்' பண்ணணும்.

நமக்கு
அறிமுகமே இல்லாத செல் நம்பருக்கு கால் போயிருந்தாலோ, ராங்-கால் வந்து நாம்
கட் பண்ணியிருப்போம்... ஆனாலும் தொடர்ந்து பேசியதுபோல பில் வந்திருந்தாலோ,


நாம் எந்த நம்பருக்கும் எஸ்.எம்.எஸ். அனுப் பாமலேயே "டெலிவர்டு' ஆனது போல ரிப்ளை வந்தாலோ அலட்சியப்படுத்த வேண்டாம்.

உடனடியாக காவல் துறையில் புகார் கொடுத்து கண்காணிக்க வேண்டும்///


பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி செந்தில்குமார்!



கணவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - இணையதளத்தில்!!!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Jan 12, 2011 3:39 pm

சிவா wrote:///ஒவ்வொரு மாதமும் பில்தொகை எவ்வளவு வருது என்பதை "செக்' பண்ணணும்.

நமக்கு
அறிமுகமே இல்லாத செல் நம்பருக்கு கால் போயிருந்தாலோ, ராங்-கால் வந்து நாம்
கட் பண்ணியிருப்போம்... ஆனாலும் தொடர்ந்து பேசியதுபோல பில் வந்திருந்தாலோ,


நாம் எந்த நம்பருக்கும் எஸ்.எம்.எஸ். அனுப் பாமலேயே "டெலிவர்டு' ஆனது போல ரிப்ளை வந்தாலோ அலட்சியப்படுத்த வேண்டாம்.

உடனடியாக காவல் துறையில் புகார் கொடுத்து கண்காணிக்க வேண்டும்///


பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி செந்தில்குமார்!

சரியாக சொன்னீர்கள்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jan 12, 2011 5:15 pm

அருமையான அதே சமயம் பயனுள்ள பகிர்வு செந்தில்குமார்
நன்றி

உதயசுதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உதயசுதா



கணவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - இணையதளத்தில்!!!  Uகணவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - இணையதளத்தில்!!!  Dகணவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - இணையதளத்தில்!!!  Aகணவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - இணையதளத்தில்!!!  Yகணவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - இணையதளத்தில்!!!  Aகணவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - இணையதளத்தில்!!!  Sகணவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - இணையதளத்தில்!!!  Uகணவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - இணையதளத்தில்!!!  Dகணவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - இணையதளத்தில்!!!  Hகணவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - இணையதளத்தில்!!!  A
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Jan 12, 2011 5:55 pm

நன்றி சகோதிரி



arsad
arsad
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Postarsad Wed Jan 12, 2011 6:57 pm

பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி செந்தில்குமார்............. கணவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - இணையதளத்தில்!!!  678642

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jan 13, 2011 5:25 am

பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி செந்தில்குமார் கணவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - இணையதளத்தில்!!!  677196 கணவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - இணையதளத்தில்!!!  677196 கணவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - இணையதளத்தில்!!!  677196 கணவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - இணையதளத்தில்!!!  678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jan 13, 2011 5:25 am

பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி செந்தில்குமார் கணவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - இணையதளத்தில்!!!  677196 கணவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - இணையதளத்தில்!!!  677196 கணவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - இணையதளத்தில்!!!  677196 கணவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - இணையதளத்தில்!!!  678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Jan 13, 2011 5:52 am

பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி செந்தில் ....

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Jan 13, 2011 10:06 am

பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி நண்பா



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கணவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - இணையதளத்தில்!!!  Logo12
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக