புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 9:22 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கொள்கை நெஞ்சம் Poll_c10கொள்கை நெஞ்சம் Poll_m10கொள்கை நெஞ்சம் Poll_c10 
30 Posts - 54%
ayyasamy ram
கொள்கை நெஞ்சம் Poll_c10கொள்கை நெஞ்சம் Poll_m10கொள்கை நெஞ்சம் Poll_c10 
13 Posts - 23%
mohamed nizamudeen
கொள்கை நெஞ்சம் Poll_c10கொள்கை நெஞ்சம் Poll_m10கொள்கை நெஞ்சம் Poll_c10 
3 Posts - 5%
prajai
கொள்கை நெஞ்சம் Poll_c10கொள்கை நெஞ்சம் Poll_m10கொள்கை நெஞ்சம் Poll_c10 
2 Posts - 4%
Baarushree
கொள்கை நெஞ்சம் Poll_c10கொள்கை நெஞ்சம் Poll_m10கொள்கை நெஞ்சம் Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
கொள்கை நெஞ்சம் Poll_c10கொள்கை நெஞ்சம் Poll_m10கொள்கை நெஞ்சம் Poll_c10 
2 Posts - 4%
viyasan
கொள்கை நெஞ்சம் Poll_c10கொள்கை நெஞ்சம் Poll_m10கொள்கை நெஞ்சம் Poll_c10 
1 Post - 2%
manikavi
கொள்கை நெஞ்சம் Poll_c10கொள்கை நெஞ்சம் Poll_m10கொள்கை நெஞ்சம் Poll_c10 
1 Post - 2%
Rutu
கொள்கை நெஞ்சம் Poll_c10கொள்கை நெஞ்சம் Poll_m10கொள்கை நெஞ்சம் Poll_c10 
1 Post - 2%
சிவா
கொள்கை நெஞ்சம் Poll_c10கொள்கை நெஞ்சம் Poll_m10கொள்கை நெஞ்சம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொள்கை நெஞ்சம் Poll_c10கொள்கை நெஞ்சம் Poll_m10கொள்கை நெஞ்சம் Poll_c10 
10 Posts - 63%
ரா.ரமேஷ்குமார்
கொள்கை நெஞ்சம் Poll_c10கொள்கை நெஞ்சம் Poll_m10கொள்கை நெஞ்சம் Poll_c10 
2 Posts - 13%
mohamed nizamudeen
கொள்கை நெஞ்சம் Poll_c10கொள்கை நெஞ்சம் Poll_m10கொள்கை நெஞ்சம் Poll_c10 
2 Posts - 13%
manikavi
கொள்கை நெஞ்சம் Poll_c10கொள்கை நெஞ்சம் Poll_m10கொள்கை நெஞ்சம் Poll_c10 
1 Post - 6%
Rutu
கொள்கை நெஞ்சம் Poll_c10கொள்கை நெஞ்சம் Poll_m10கொள்கை நெஞ்சம் Poll_c10 
1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொள்கை நெஞ்சம்

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Oct 25, 2008 3:01 am

-கௌதம நீலாம்பரன்

முக்தா நதிக்கரையில் நின்றவாறு, முகில் தவழும் சஹ்யாத்ரி மலைத்தொடர் மீது பார்வையை லயிக்கவிட்டிருந்தார் தாதாஜி கொண்ட தேவர்.

ஆகிருதியான உடற்கட்டும் ஆஜானுபாகுவான தோற்றமும், பஞ்ச கச்ச ஆடையும், தலைப் பாகையும், காதில் ஆடும் வளையங்களுமாக அடித்து வைத்த சிலைபோல் நிற்கும் தாதாஜி, அப்படி என்ன ஆராய் கிறார் அந்த மலைகளில்?

ஒருவேளை, மலையழகில் மலைத்து நிற்கிறாரோ?

இல்லை, தாதாஜி எதைக் கண்டும் மலைத்து நிற்பவரல்லர். அந்த செந்நீல மலத் தொடரே அவரைக் கண்டு மலைத்துப் போகிற அளவு சாதனை படைத்திருப்பவராயிற்றே அவர். பின் அந்த இரும்பு மனிதர், சஹ்யாத்ரி மலைகளில் தம் தீட்சண்யம் மிக்க பார்வையால் எதைத்தான் துழாவுகிறார்?

பின்னாளில் அதே மலைத் தொடர் மீது எண்ணற்ற கோட்டைகளின் நாயகனாக சிவாஜி எழுச்சி பெறப்போகிறார் என்னும் ராஜ ரகசியம், அப்போதே அவருக்குப் புலப்பட்டு விட் டதோ சிவாஜியின் சாம்ராஜ்யக் கனவுகள் அப்போது செயல் வடிவம் பெற்றுவிடவில்லை. எழுச்சிச் சிந்தனைகள் மட்டுமே அரும்பியிருந்தன. தந்தைக்கே அடங்காத முரட்டுப்பிள்ளை அவர். உறவில் விரிசல் விழுந்திருந்தபோதும்கூட, தம் குடும்பத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை ஷாஜிதான் தாதாஜி கொண்ட தேவரிடம் ஒப்படைத்திருந்தார்.

தாதாஜி, மகா கண்டிப் பானவர். கடுமையான கட்டுத் திட்டங்கள்.

அவற்றை மீறினால், யாராயினும் சரி, தண்டனை நிச்சயம். சிவாஜி என்ற காட்டாற்று வெள்ளம், தாதாஜியின் கூர்மையான பார்வையில் அப்படியே அடங்கி நின்றுவிடும். கல்விக் கண் திறந்து வைக்கும் குருதேவராகவும், குடும்பத்தின் பாதுகாவலராகவும் திகழும் அந்த மகத்தான மனிதரைக் கண்டாலே போதும், யாராலும் அடக்க முடியாத, பயம் என்பதே அறியாத சிவாஜி என்ற காட்டுக் குதிரை தாமே அஞ்சி, அடங்கி நிற்கும்.

அப்படிப் பிறரை அடக்கி, அடி பணிய வைக்கிற கண்டிப்பும்-

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Oct 25, 2008 3:01 am

கட்டுப்பாடுகளும்தான் இப்போது அவர் எதிரே மலையாக எழுந்து நின்று மருட்டு கிறது. அந்த விண்முட்டும் சஹ்யாத்ரி மலைகள், கொண்ட தேவ் ப்பூ... இவ்வளவுதானா உன்னுடைய அறிவு, நீதி, நேர்மையெல்லாம்... இல்லாவிடில் பிறருக்குத்தானா உன் கண்டிப்பும்- கட்டுப்பாடுகளும். நீ வகுத்த கொள்கை சட்ட திட்டங்களுக்கு நீ மட்டும் கட்டுப்பட வேண்டிய அவசியமில்லையோ? என்று கெக்கலி கொட்டிச் சிரித்தபடி ஏளனக் குரலை எதிரொலிப்பது போன்றிருந்தது அவருக்கு. ஆம் அந்தக் குரல் அவர் மனத்திலிருந்து எழுவதால்தான் மலைகளினின்று எதிரொலிக்கிறது. நடந்தது இதுதான்-

அந்த முக்தா நதியின் உயர்ந்த கரையின் சரிவிலுள்ள மாந்தோப்புக்குச் சென்றிருந்தார் தாதாஜி கொண்டதேவ். அது, சிவாஜிக்கு உரிய தோப்பு. அந்தத் தோப்பும், பிற சொத்துக்களும், அப்போது தாதாஜியின் மேற்பார்வை யில்தான் இருந்தன. கொளுத்தும் கோடை வெயிலில் சிறிது நேரம் தோப்பைச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்த தாதாஜிக்கு தாகமாக இருந்தது. கண்ணெதிரே, தாழப் படர்ந்திருந்த மாங்கிளையொன்றிலிருந்து செவ்விய மாங்கனிகள் நாலைந்து கொத்தாகத் தொங்கிக் கொண்டி ருந்தன. அது மிக உயர்ந்த ஜாதி மாமரம். கனிகளில் நார் என்பதே சிறிதும் இருக்காது. தோலும் மெல்லியது. மெல்ல அதைப் பல்லால் கடித்து உறிஞ்சினால் போதும் நாவில் தேன் வெள்ளம் பாயும். நாவறட்சியைப் போக்க எண்ணிய தாதாஜி சட்டென்று ஒரு மாங்கனியைப் பறித்தார். அவ்வளவுதான்... ஐயையோ என்று ஒரு குரல்.

தாதாஜி திரும்பிப் பார்த்தார். மற்றொரு மாமரத்தினடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களில் ஒருவன், ஐயா பெரியவரே... பெரியவரே... என்று கத்தியபடி ஓடி வந்தான்.

என்னப்பா... என்ன வேண்டும் உனக்கு? என்று வினவினார் தாதாஜி.

நீங்கள்? இப்படி மாங்கனியைப் பறித்து விட்டீர்களே...? என்றான் சிறுவன்-அவன் குரலில் பதற்றமிருந்தது.

ஏனப்பா பறிக்கக் கூடாதா?

கூடாதாவா... உங்களுக்கு விஷயமே தெரியாதா? இந்தத் தோப்பில் மாங்கனி பறித்தால் கையை வெட்டி விடுவார்கள்...

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Oct 25, 2008 3:02 am

இதை அந்தச் சிறுவன் கூறியபோது, இன் னொரு சிறுவன் ஓடி வந்து அவன் தோளைப் பற்றி அழுத்தியபடி, டேய்... அவர் யாரென்று தெரியுமா உனக்கு அவர்தானடா இந்தத் தோப்பின் பாதுகாவலர்.. என்றான். பிறகு தாதாஜியை நோக்கி, சாமி நீங்க ஒன்றும் தப்பா நினைச்சுக்காதீங்க. இவன் எங்க உறவுக்காரப் பையன். ஊருக்குப் புதுசு... என்று கூறினான்.

தாதாஜி கொண்டதேவ் ஊருக்குப் புதிதான அந்தச் சிறுவனைப் பார்த்து மெல்ல நகைத் தவாறே அங்கிருந்து நகரத் துவங்கினார். அவர் பத்தடி தூரம் நடந்ததும், அந்தப் புதிய சிறுவன் கூறினான். என்னடா இது நியாயம்? சட்டம் என்றால் எல்லாருக்கும் பொதுதானே... மாமரத்தின் மீது கல்லெறிந்தால், கடுமையான தண்டனை கிடைக்கும்... கையை வெட்டி விடுவார்கள் என்றெல்லாம் கூறி, என்னை அச்சுறுத்தினாய்? இப்போது அந்தப் பெரியவர் மட்டும் ஒரு மாம்பழத்தைப் பறித்துக் கொண்டு போகிறார். பாதுகாப்பாளரே இப்படி சட்டத்தை மீறினால் என்ன அர்த்தம்? அவர் வெறும் பாது காப்பாளர்தானே. தோட்டத்தின் சொந்தக்காரர் இல்லையே...?

காதில் விழுந்த அந்த நியாயத்தின் குரல்தான் தாதாஜியை இப்போது முக்தா நதிக்கரை மீது திகைத்து நிற்க வைத்திருக்கிறது. செவி வழியே புகுந்து சிந்தனையைக் குலுக்கிய அந்தக்குரல் இப்போது அவருள் ஒரு தெளிவைத் தோற்றுவித்திருந்தது. அவர் சரசரவென்று கரைச் சரிவில் இறங்கி மாந்தோப்பை நோக்கி நடக்கத் துவங்கினார். தோப்பு முகப்பில் ஒருவன் வேலியின் முட்களை ஒழுங்கு செய்து கொண்டிருந்தான். அவனிடம் இருந்த கொடுவாளை வாங்கிக் கொண்டு அவர், அந்தச் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த மாமரத்தினடிக்குச் சென்றார். அவரைக் கண்டதும் சிறுவர்கள் நடுங்கினர். கோபத்தோடு வந்திருக்கிறாரோ-நம்மை ஏதும் தண்டித்து விடுவாரோ என்பது அவர்களின் அச்சமாயிருந்தது. கையில் வேறு கொடுவாளுடன் நிற்கிறாரே

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Oct 25, 2008 3:02 am

ஆனால், தாதாஜி கொண்ட தேவ் அவர்களது அச்சத்தைப் போக்க மிகவும் கனிவான குரலில் பேசி, தம்பி இங்கு என் அருகில் வா... என்று, தம்மைக் குற்றம் சாட்டிய சிறுவனை அழைத்தார்.

அவன் அச்சம் முழுதும் விலகாத நிலையிலேயே அவரருகே வந்தான்.

நீ கெட்டிக்காரன். நியாயத்தையே சுட்டிக் காட்டினாய். மறுபடியும் ஒருமுறை சொல். அனுமதியின்றி இங்கே பழத்தைப் பறிப்பவனுக்கு என்ன தண்டனை என்று கூறினார்கள் உன்னிடம்...? என்று வினவினார் தாதாஜி.

கையை வெட்டி விடுவார்கள் என்று கேள்விப் பட்டேன். ஆனால், அது உங்களுக்கல்ல... என்றான் சிறுவன்.

தவறப்பா. சட்டம் என்றால் எல்லாருக்கும் ஒன்று தான். நான் இந்தத் தோட்டத்தின் சொந்தக்காரனல்ல. ஒரு வகையில் நானும் ஊழியனே. எனவே அந்தச் சட்டம் என்னையும் கட்டுப்படுத்தும். தெரியாமல் தவறிழைத்து விட்டேன். நல்ல வேளை நீ அதைச் சுட்டிக் காட்டினாய். இப்போது நீயே எனக்கு நீதிபதியாக இருந்து அந்த தண்டனையை வழங்கலாம். இதோ இந்தக் கொடுவாளை நான் எனது வலது கையின் மேல் வைத்து அழுத்திப் பிடித்துக் கொள்கிறேன். நீ அதோ கிடக்கும் அந்தக் குருங்கல்லைத் தூக்கி இந்தக் கொடுவாளின் மீது போட்டால் போதும். என் கை துண்டாகி விடும். எங்கே தண்டனையை நிறைவேற்று பார்ப்போம்... என்றவாறே தம் வலக்கரத்தை நீட்டி, அதன் மீது இடக்கரத்திலிருந்த கொடுவாளை வைத்து அழுத்தினார். அந்த அழுத்தலிலேயே குருதி பீறிட்டது.

சிறுவர்கள் பதறினர். குற்றம் சாட்டிய சிறுவனோ, ஐயோ என்னை மன்னித்து விடுங்கள். நான் நீங்கள் யாரென்று தெரியாமல் ஏதோ தவறாகக் கூறி விட்டேன் என்று திரும்பத் திரும்பக் கூறினான். வேலியோரம் இருந்தவனும் தாதாஜி கொடுவாளைப் பிடுங்கிக் கொண்டு போகிறாரே, என்ன ஆகுமோ என்ற அச்சத்துடன் மேலும் நாலைந்து பேரைக் கூவி அழைத்தபடி அங்கே ஓடி வந்திருந்தான்.

இன்னும் ஒரு கணம் தாமதித்திருந்தாலும் அந்த அசம்பா விதம் நிகழ்ந்திருக்கும். நல்ல வேளை, யாருமே சற்றும் எதிர்பாராத விதமாக அங்கே சிவாஜி பிரசன்னமானார். புல்மண்டிய தரையில் அவரது புரவி வந்ததால் குளம்படி ஒலி எழவில்லை. கூட்டத்தைப் பார்த்ததும் பத்தடி தூரத்துக்கு அப்பால் புரவியை நிறுத்திவிட்டு, குதித்தோடி வந்த இளைஞன் சிவாஜி, என்ன இங்கே கூட்டம்...? என்றபடியே இரண்டொரு வரை இழுத்துத் தள்ளி அந்த வியூகத்தை விலக்கியவாறே பிரவேசித்திருந்தார்.

கண்ணெதிரே தாதாஜி இடக்கையில் கொடுவாளை ஓங்கிய பயங்கரக் கோலத்தில், வலக்கரத்திலோ குருதிக் கீறல். மேலும் விளக்கம் எதையும் எதிர்பாராமல் சட்டென்று பாய்ந்து தாதாஜியின் கரத்திலிருந்த கொடு வாளைப் பற்றிப் பிடுங்கி யெறிந்தார் சிவாஜி. பின், எதற்காக இப்படிச் செய்யத் துணிந்தீர்கள் தாதாஜி? என்று வினவினார். நான் போட்ட சட்டத்தை நானே மதிக்கத் தவறி விட் டேன் சிவா. உன்னுடைய இந்தப் பழத்தோட்டத்தி லிருந்து ஒரு மாங்கனியை நான் இன்று திருடி விட்டேன். என் தவறை ஒரு சிறுவன் எனக்குச் சுட்டிக் காட்டினான். உடனே தவறை உணர்ந்து தண்டனையை எனக்கு நானே விதித்துக் கொண்டேன். அதை நிறைவேற்ற விடாமல் நீ வந்து தடுத்து விட்டாய். இப்போது கூட நீ எனக்கு செய்கிற பெரிய உதவி, உன் வாளை உருவி இந்தக் கரத்தை வெட்டுவது தான்...ம்... தண்ட னையை உடன் நிறைவேற்று... என்ற தாதாஜி, வலக்கரத்தை சிவாஜி முன் நீட்டினார்.

சத்திய ஆவேசம் கனல, தனக்குத்தானே தண்டனை வழங்கித் தம் கரத்தையே வெட்டியெறியத் துணிந்து நிற்கும் அந்த மகத்தான மனிதரைப் பார்த்து, சித்தம் சிலிர்த்து, மெய் விதிர்த்து நின்றார் சிவாஜி. அவர் சிந்தையில் ஆயிரம் மின்னல்கள்...

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Oct 25, 2008 3:03 am

தாதாஜி கொண்டதேவர் அவரை முதன் முதலாகச் சந்தித்தபோது சிவாஜிக்கு பதின் மூன்று வயது. அதற்கு முன்பே தாதாஜி சிறுவன் சிவாவை அறிவார். ஆனால் சிவாவின் நினைவிலே தாதாஜி பதியத் துவங்கிய சந்திப்பாக அமைந்தது அவனது பதின்மூன்றாவது வயதிலே தான். அது சாதாரண சந்திப்பா என்ன...?

தந்தைக்கும், தாய்க்கும் பெரும் பிணக்கு. அதைப் பற்றியெல்லாம் மேல் விவரங்கள் எதுவும் அறிய முடியாத, உணர முடியாத வயது அவனுக்கு. பீஜபூர் மாளிகையிலே கணவரோடு வாழ முடியாதென்று கூறி வெளியேறி விட்டார், ஜிஜா பாய்-சிறுவன் சிவாவை அழைத்துக் கொண்டு. பிணக்கும், பிரிவும் தவிர்க்க இயலாதது என்ற அந்த நிலையிலும் ஷாஜி தன் குடும்பத்தை நிர்க்கதியாக விட்டுவிட விரும்பாது தமது காரியஸ்தரான தாதாஜி கொண்ட தேவ ரைக் கூப்பிட்டு ஜிஜா பாய்க்கு ஆதரவாக இருந்து, அவசியமான உதவிகளைச் செய்யுமாறு உத்தர விட்டார்.

சஹ்யாத்ரி மலைக்காட்டில், முக்தா நதிக்கரையில் புனே கிராமத்தில் ஷாஜிக்குச் சொந்தமான நிலபுலன்கள் இருந்தன. தாதாஜி கொண்ட தேவர், ஜிஜாபாயையும், சிவாவையும் அழைத்துக் கொண்டு அங்கே வந்தபோது, அந்தப் புனே கிராமமே பாழடைந்து கிடந்தது. அந்த நிலபுலன்களும் நெடுங்காலமாகப் பயிரிடப்படாமல் கள்ளியும், கத்தாழையும் மண்டிக் கிடந்தன.

அந்த மலைப் பிரதேசம், பீஜப்பூர் ராஜ்யத்துக்கும், மொகலாயப் பேரரசுக்கும் இடைப்பட்ட எல்லைப் பகுதியில் அமைந்திருந்ததால், அப்பகுதி கிராமங்கள் எண்ணற்ற படையெடுப் புகளில் சிக்கிச் சேதமடைந்திருந்தன. சூறையாடப்பட்ட கிராமங்களை விட்டு மக்கள் மலைக்காடுகளில் ஓடி ஒளிந்து வாழ்ந்தனர். விவசாயம் மறந்து வழிப்பறிக் கொள்ளையராகியிருந்தனர்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Oct 25, 2008 3:03 am

புனே கிராமத்தில் ஒரு மொகலாய சேனாதிபதி, வீடுகளை இடித்துத் தள்ளி, கோயில்களை நொறுக்கி, இனி இந்தக் கிராமத்தில் மனிதர்களே வாழாது ஒழிக என்று சபிக்கப்பட்ட மந்திரத் தூண் ஒன்றை நட்டுவிட்டுச் சென்றிருந்தான். சாத்தானுக்குத் தரப்பட்ட கிராமம் அது என்றனர் மக்கள்.

பேய்கள் குடியிருக்கும் அந்த மயான பூமிக்குள் தாதாஜி கால் வைத்தார். ஷாஜியின் பாழடைந்த வீட்டிலே சிவாவும், ஜிஜாபாயும் குடியிருக்க அவர் ஏற்பாடுகள் செய்த போது, முக்தா நதிக்கரையில் இருந்த சில செம்படவர்கள் ஓடிவந்து ஐயா உங்களுக்கு என்ன கிறுக்கா புடிச்சிருக்கு... மனுசங்க இங்க ஒரு ராத்திரி கூட தங்க முடியாது. ரத்தம் கக்கிச்சாக வேண்டியதுதான். உடனே புறப் படுங்க... என்றனர்.

தாதாஜி சிறிதும் அவர்கள் பேச்சுக்கு செவி சாய்க்கவில்லை. நிலை குலையாத நெஞ்சுரத்தோடு நின்ற அவரைப் பார்த்து சிவாகூட, கிறுக்குதானோ இவர் என்றெண்ணினான். ஆனால், மனத்திறன் மிக்க அந்த மாமனிதர் தான் ஒரு நம்பிக்கை நாயகன் என்பதை அப்போது சிவாவுக்கு உணர்த்தினார்.

ஓ எத்தனை கம்பீரமான வார்த்தைகளை அன்று மந்திரம் போல் முழங்கினார் தாதாஜி

சிவா பயப்படுகிறாயா நீ? அச்சம் கூடாது இளைஞனே இதோ பார். இது உன் மூதாதையர் வாழ்ந்த பூமி. இன்று அது பாழடைந்து கிடக்கலாம். ஆனால் இதை இப்போது நான் ஆசீர்வதிக்கிறேன். ஒரு காலத்தில் இது மாபெரும் நகரமாக ஜொலிக்கும். பிரம்மாண்டமான அந்த நகரை உலகமே கொண்டாடும். (இன்றைய பூனா நகரம் பற்றி உங்களுக்குச் சொல்ல வேண்டுமா என்ன?)

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Oct 25, 2008 3:03 am

இங்கே மிலேச்சர்களால் சபிக்கப்பட்டு நடப்பட்டிருக்கும் சாபத்தூணை நான் பிடுங்கி யெறிகிறேன். நாளையே இந்த மண்ணில் பொன்னேர் பூட்டி நான் உழுகிறேன். நான் சத்திய சந்தன் என்பது உண்மையானால் இந்த சபிக்கப்பட்ட மண்ணிலே என் ஆசீர் வாதம் பொன் பூக்கச் செய்யட்டும். இங்கே ஒரு மாபெரும் சாம்ராஜ்யம் தோன்றட்டும். சிவா இவை சத்தியமான வார்த்தைகள்.

இங்கே இடிந்து கிடக்கும் உன் பழைய வீட்டை மாளிகையாக எழுப்பப் போகிறேன் நான். ஆனால், நீயோ எதிர்காலத்தில் இங்கே ஒரு சாம் ராஜ்யத்தையே தோற்றுவிக்கப் போகிறாய். எனவே துணிவோடு இரு. அச்சத்தின் நிழல் கூட உன் மீது படியக் கூடாது...

தாதாஜியின் இந்த மந்திரச் சொற்களில் அன்று கட்டுண்டு நின்றான் சிவா. அவர் வெற்றுப் பேச்சென்று எதுவுமே பேசியதில்லை. அவரது புயல் வேகச் செயல் வேகம் கண்டு ஒவ்வொரு நாளும் சிவாஜி வியந்து விழி விரித்ததுண்டு. சபிக்கப்பட்ட தூணை உடைத்து நொறுக்கினார். இடிந்த வீடு ரங்க மஹால் என்ற மாளிகையாக உருப்பெற்று எழுந்தது. குடியானவர்களை அவர் கூவியழைத்த சொற்கள் அனைத்தும் மந்திரங்களாகத் தொகுக்கத் தக்க மகா கவிதைகள். வெற்று நிலங்களெல்லாம் விளை நிலங்களாயின. வீதிகளும் அவர் விரல் நீட்டிய இடமெல்லாம் எழுந்தன. கோவில் எழுந்தது. கோபுரம் எழுந்தது.

மலைக்காடுகளில் ஒளிந்து கிடந்த மக்களை அழைத்து, எந்த தேசம் உங்களுடை யதோ -எந்த தேசத்தில் வீரம் செறிந்த இளஞ்சிங்கங்களாக உலவ வேண்டியவர்களோ அந்த தேசத்திலேயே நீங்கள் கள்வர்களாக ஒளிந்தும், மறைந்தும் உலவுகிறீர்களே, உங்களுக்கு வெட்கமாக இல்லை? இந்த நிலை உங் களுக்கு எதனால் வந்தது என்று ஒரு நாளாவது சிந்தித்தீர்களா நீங்கள்? இதோ நானழைக்கிறேன். என் பின்னே வாருங்கள். உங்களுக்காக ஒரு சொர்க்கத்தையே நான் சிருஷ்டிக்கிறேன். அந்த உன்னத ராஜ்யத்தில் நீங்கள் திருட ஒன்றுமில்லை. எல்லாமே உங்களுக்கு உரிமை என்று சாசனம் செய்கிறேன். எங்கும் கம்பீர மாக நீங்கள் உலவலாம் என்று முழங்கினார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Oct 25, 2008 3:03 am

தாதாஜியின் மந்திரச் சொற்களை மீற வல்லவர் யார்? அந்த மக்கள் தங்கள் அவல நிலையை மாற்றிக் கொள்ளவே விரும்பினர். சிவாஜியின் பின்னே அணி அணியாகத் திரண்டனர். அந்த வீரர் பட்டாளத்துக்குத் தலைமை ஏற்ற சிவாவுக்கு தாதாஜி இட்ட முதற்கட்டளை, விளை நிலங்களை உருவாக்கும் விவசாயக்குடி மக்களை அச்சுறுத்தும் மலைக்காட்டு ஓநாய்களை வேட்டையாடி ஒழிக்க வேண்டும் என்பதுதான். நிலம் விளைய உழைத்த உழைப்பில்தான் சிவாஜியின் நெஞ்சிலே வீரம் விளைந்தது. அந்த மலைக்காடு முழுவதும் அவருடைய பயிற்சிக் களமாயிற்று.

தாதாஜி செய்த பசுமைப் புரட்சி மகத்தானது. வறண்ட மண் மாதாவை வளமாக்கி, வண்ணம் வனைந்தார். வயல்களும், வாய்க்கால்களும் பழந்தோட்டங்களுமாக அவர் தொட்ட இடமெல்லாம் பொன் கொழித்தது. ஒரு பொற்காலம் பூத்தது. எப்பேர்ப்பட்ட நெஞ்சுரம் கொண்ட மகத்தான மனிதர் அவர். அந்த மாமனிதனின் கரமா ஒரு மாங்கனிக்காக வெட்டப்படுவது?

சிவாஜியின் நெஞ்சிலே ஆவேசம் புயலுருக் கொண்டது. கர்ஜித்தது அந்த இளஞ்சிங்கம் -தாதாஜி என்னை சத்தியத்தின் காவலன் என்றீர்கள். நன்று. முன்னம் பலமுறை நாளை உருவாகப் போகும் இந்த மராட்டிய சாம்ராஜ்யத்தின் மாமன்னன் நான் என்று என்னை ஆசீர்வதித்திருக்கிறீர்கள். அதெல்லாம் உண்மையெனில், இதோ நான் கூறுகிறேன். சத்ரபதியாக வரப்போகிற சிவாஜி கூறுகிறேன். இங்கே நீதி பரிபாலனம் செய்ய வேண்டியவனும், குற்றவாளிக்குத் தண்டனை எதுவென்று தீர்மானிக்க வேண்டியவனும் நான்தானே தவிர, நீங்களல்ல. சட்டத்தை நீங்கள் கையில் எடுத்துக் கொள்வதை நான் அனுமதிக்க முடியாது...

சிவா என்று உரத்த குரல் எழுப்பிய தாதாஜி, நீ அன்பினால் தடுமாறி, என்னை தண்டிக்க அஞ்சுகிறாய்... என்றார்.

PostAdmin Sat Oct 25, 2008 3:04 am

இல்லை தாதாஜி. நான் தடுமாற வில்லை. உண்மையைச் சொல்லப் போனால் இந்த நிலம், இந்தப் பழத் தோட்டம், இந்த புனே பாளையம் எதுவுமே எனக்குச் சொந்தமான தல்ல. இவை தாதாஜி கொண்ட தேவருக்குச் சொந்தமானவை. அவருக்குச் சொந்தமான நிலத்தில் விளைவது எல்லாமே அவருக்கு உரியது. எனவே உரிமையாளன் அனுபவிப்பதை எவ்வகையிலும் தவறாக, தண்டனைக்குரியதாக எண்ணு மளவு தாதாஜி கொண்ட தேவரின் மாணவனான சிவாஜி சிறு மதியாளனல்ல. அத்துடன் சிவாஜியின் குருதேவருடைய கையை வெட்டும் உரிமை யாருக்கும் அளிக்கப்பட வில்லை. அதை நான் ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன்... என்று உறுதிப் புலப்படக் கூறினார் சிவாஜி.

அன்று அதற்கு மேல் சிவாஜியின் குரலுக்கு மறுகுரல் எதுவும் எழுப்ப வில்லை தாதாஜி. ஆனால், அந்த சம்பவத்தின் அடையாளமாகத் தம் வாழ்நாள் முழுவதும் தாதாஜி, வலக்கை இல்லாத சட்டையையே அணிந்தார். அவர்தான் கொள்கை எனும் ஆடையை அணிந்திருக்கிறாரே கண்டிப்பும், கட்டுப்பாடும் நிறைந்த தாதாஜியை சிவாஜி எவ்வளவு மரியாதைக்குரியவராகவும், வணக்கத்திற்குரிய வராகவும் கொண்டாடினார் என்பதைத்தான் வரலாறு வியந்து வியந்து போற்றுகிறதே..

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக