புதிய பதிவுகள்
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவியைத் தண்டித்தல் ஷரீஆவின் கண்ணோட்டத்தில்.. Poll_c10மனைவியைத் தண்டித்தல் ஷரீஆவின் கண்ணோட்டத்தில்.. Poll_m10மனைவியைத் தண்டித்தல் ஷரீஆவின் கண்ணோட்டத்தில்.. Poll_c10 
69 Posts - 58%
heezulia
மனைவியைத் தண்டித்தல் ஷரீஆவின் கண்ணோட்டத்தில்.. Poll_c10மனைவியைத் தண்டித்தல் ஷரீஆவின் கண்ணோட்டத்தில்.. Poll_m10மனைவியைத் தண்டித்தல் ஷரீஆவின் கண்ணோட்டத்தில்.. Poll_c10 
41 Posts - 34%
T.N.Balasubramanian
மனைவியைத் தண்டித்தல் ஷரீஆவின் கண்ணோட்டத்தில்.. Poll_c10மனைவியைத் தண்டித்தல் ஷரீஆவின் கண்ணோட்டத்தில்.. Poll_m10மனைவியைத் தண்டித்தல் ஷரீஆவின் கண்ணோட்டத்தில்.. Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
மனைவியைத் தண்டித்தல் ஷரீஆவின் கண்ணோட்டத்தில்.. Poll_c10மனைவியைத் தண்டித்தல் ஷரீஆவின் கண்ணோட்டத்தில்.. Poll_m10மனைவியைத் தண்டித்தல் ஷரீஆவின் கண்ணோட்டத்தில்.. Poll_c10 
4 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவியைத் தண்டித்தல் ஷரீஆவின் கண்ணோட்டத்தில்.. Poll_c10மனைவியைத் தண்டித்தல் ஷரீஆவின் கண்ணோட்டத்தில்.. Poll_m10மனைவியைத் தண்டித்தல் ஷரீஆவின் கண்ணோட்டத்தில்.. Poll_c10 
111 Posts - 60%
heezulia
மனைவியைத் தண்டித்தல் ஷரீஆவின் கண்ணோட்டத்தில்.. Poll_c10மனைவியைத் தண்டித்தல் ஷரீஆவின் கண்ணோட்டத்தில்.. Poll_m10மனைவியைத் தண்டித்தல் ஷரீஆவின் கண்ணோட்டத்தில்.. Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
மனைவியைத் தண்டித்தல் ஷரீஆவின் கண்ணோட்டத்தில்.. Poll_c10மனைவியைத் தண்டித்தல் ஷரீஆவின் கண்ணோட்டத்தில்.. Poll_m10மனைவியைத் தண்டித்தல் ஷரீஆவின் கண்ணோட்டத்தில்.. Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
மனைவியைத் தண்டித்தல் ஷரீஆவின் கண்ணோட்டத்தில்.. Poll_c10மனைவியைத் தண்டித்தல் ஷரீஆவின் கண்ணோட்டத்தில்.. Poll_m10மனைவியைத் தண்டித்தல் ஷரீஆவின் கண்ணோட்டத்தில்.. Poll_c10 
6 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியைத் தண்டித்தல் ஷரீஆவின் கண்ணோட்டத்தில்..


   
   
avatar
hajasharif
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 06/12/2009

Posthajasharif Fri Dec 24, 2010 9:18 pm

பெண்கள் பாரிய குடும்ப வன்முறைகளைச் சந்தித்து வருகின்றனர். அறிவியலிலும், நாகரிகத்திலும்(?) முன்னேற்றம் கண்ட நாடுகளில் கூட பெண்கள் தமது கணவர்களினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு வன்முறைக்குள்ளாக்கப்படுகின்றனர். சில ஆய்வுகள் 80 வீதமான பெண்கள் தமது கணவர்களினால் பெரியளவோ, சிரியளவோ வன்முறைக்குள்ளப்படுவதாகக் கூறுகின்றது. குடிகாரக் கணவர்களினால் மட்டுமன்றிப் படித்தவர்கள், பண்பட்டவர்கள், உயர் அரச உத்தியோகத்தினரால் கூட மனைவியர் மாடுகளைப் போன்று தண்டிக்கப்படுகின்றனர். இது குறித்த இஸ்லாத்தின் நிலைப்பாட்டை இவ்வாக்கத்தினூடாகத் தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.

மனைவிக்குச் சிறந்தவரே மனிதர்களில் சிறந்தவர்:

ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; ‘தன் மனைவிக்கு யார் நல்லவராக இருக்கின்றாரோ அவரே உங்களில் சிறந்தவர். நான் என் மனைவியருக்குச் சிறந்தவனாக நடந்துகொள்கின்றேன்’ என நபி(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். (இப்னுமாஜா, தாரமி, பைஹகீ)

எனவே, ஒருவர் நல்லவர் எனச் சாட்சி பகர வேண்டுமென்றால் அவர் அவரது மனைவியிடம் நல்லவர் என்ற பெயர் எடுத்திருக்க வேண்டும்.

‘அவர்களுடன் நல்ல முறையில் வாழ்க்கை நடத்துங்கள். நீங்கள் அவர்களை வெறுத்தாலும் (பொறுத்துக்கொள்ளுங்கள்.) ஏனெனில், நீங்கள் ஒன்றை வெறுக்க, அல்லாஹ் அதில் அதிகமான நன்மைகளை வைத்திருக்கக் கூடும்.’ (அல் குர்ஆன்4:19)

மேற்படி வசனம் மனைவியருடன் நல்ல முறையில் நடந்துகொள்ளுமாறு பணிக்கின்றது.

நபி(ஸல்) அவர்கள் கூடத் தமது இறுதி ஹஜ் உரையில்; ‘பெண்கள் விடயத்தில் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள்!’ என உபதேசித்துள்ளார்கள் என அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி)

அலட்டிக்கொள்ளக் கூடாது:

பெண்களிடம் சில நாணல்-கோணல்கள் இருக்கும். அவற்றை அலட்டிக்கொள்ளக் கூடாது என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

பெண்கள் வளைந்த எலும்புகளால் படைக்கப்பட்டவர்கள். அவர்களை ஒரேயடியாக நிமிர்த்த முயன்றால் முறித்து விடுவீர்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நிறைகண்டு நிம்மதி பெறுங்கள்!

மனைவியிடம் குறை தேடாமல் நிறைகண்டு நிம்மதி பெறவேண்டும்.

அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; ‘முஃமினான் ஆண் தனது முஃமினான மனைவியை விட்டும் பிரிந்து விடவேண்டாம்! அவளிடத்தில் ஒரு விடயத்தில் குறைகண்டால் அவளிடத்தில் காணப்படும் நல்ல விடயத்தை நினைத்துத் திருப்தி கொள்ளுங்கள்!’ என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (சுனனுல் குப்ரா)

தண்டிக்கும் அனுமதி:

நன்மை செய்பவர்களுக்கு நற்கூலியும், தவறு செய்பவர்களுக்குத் தண்டனையும் வழங்குவது அல்லாஹ்வின் வழிமுறையாகும். இந்த அடிப்படையில் மனைவியின் நற்பண்புகளைப் பாராட்டி, தீமைகளைச் சுட்டிக்காட்டித் திருத்துவதற்கு முற்பட்டு, இறுதிக் கட்டமாக தண்டிக்க அனுமதி உள்ளது. இந்த அனுமதி அளவோடும், நிதானமாகவும் தேவைப்படும் சந்தர்ப்பத்தில் மட்டும் பயன்படுத்துவதற்குரியதாகும் என்பது கவனிக்கத்தக்கதாகும்.

தண்டனை என்பது மருந்து போன்றதாகும். நோய் தீர்ந்த பின்னர் மருந்து தேவைப்படாது. எனவே உரிய பிரச்சினைக்கு மட்டுமே அதனைப் பயன்படுத்த வேண்டும்.

அடுத்தது, ‘தண்டித்தல்’ என்பது திருத்துவதற்கான ஆரம்ப விதிமுறையல்ல. திருத்துவதற்கான இறுதி வழிமுறை என்பதும் கவனிக்கத்தக்கதாகும். மனைவி விடயத்தில் தவறான போக்கைக் காணும் போது பண்பாக எடுத்துச் சொல்ல வேண்டும். மாற்றம் இல்லையென்றால் படுக்கையை விட்டும் பிரிந்து உளவியல் ரீதியில் அவளிடம் மாற்றத்தைக் கொண்டுவர முயலவேண்டும். அறிவு ரீதியான முயற்சியும், உளவியல் ரீதியான வழிமுறையும் பயனளிக்காத போது இறுதிக்கட்டமாக உடல் ரீதியான அணுகுமுறையை இஸ்லாம் அனுமதிக்கின்றது.

இது குறித்துக் குர்ஆன் கூறும் போது; பெண்களை நிர்வகிக்க ஆண்கள் தகுதியுடையோராவர். அவர்களில் சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், (ஆண்களாகிய) அவர்கள் தமது செல்வங்களிலிருந்து செலவழிப்பதாலும் ஆகும். எனவே, நல்லொழுக்கமுள்ள பெண்கள் கட்டுப்பட்டு நடப்போராகவும், (கணவனில்லாது) மறைவாக இருக்கும் சமயத்தில் அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு தம்மைப் பாதுகாத்துக் கொள்வோராகவும் இருப்பர். எவர்கள் கணவருக்கு மாறுசெய்வார்கள் என்று நீங்கள் அஞ்சுகின்றீர்களோ, அவர்களுக்கு உபதேசம் செய்யுங்கள். (திருந்தா விட்டால்) படுக்கைகளில் அவர்களை வெறுத்து விடுங்கள். (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களுக்கு (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உயர்ந்தவனும், பெரியவனுமாக இருக்கின்றான்.(அல் குர்ஆன்4:34)

‘அவர்களுக்குக் காயம் வராத முறையில் கடுமை இல்லாத விதத்தில் மென்மையாக அடியுங்கள்!’ என நபி(ஸல்) அவர்களும் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்)

‘முறையற்ற தண்டித்தல்’ குடும்பத்தில் குழப்பத்தை அதிகரிக்கச் செய்யுமே தவிர குறைக்காது. மனைவியின் மனதில் கணவன் மீது வெறுப்பை விதைக்கும். இதனால் சில பெண்கள் கணவனைப் பழிவாங்க நினைத்துக் கொலை கூடச் செய்கின்றனர். சிலர் தன் மீது அன்பில்லாதவனைத் வஞ்சம் தீர்ப்பதற்காக கள்ளக் காதலர்களை நாடுகின்றனர். இதற்கும் துணியாத சில மனைவியர் எதற்கெடுத்தாலும் முரண்பட்டுக் கணவனின் நிம்மதியையும், கண்ணியத்தையும் குறைக்க முற்படுகின்றனர்.

மற்றும் சிலர் தற்கொலை செய்து தாம் பிரச்சினையிலிருந்து தப்பி விடுகின்ற அதேவேளை கணவனுக்குக் கேவலத்தையும், தண்டனையையும் கொடுக்க முற்படுகின்றனர்.

எனவே, பிரச்சினையைத் தீர்ப்பதற்காகத் தேர்ந்தெடுக்கும் வழி பிரச்சினையைத் தீர்ப்பதாக அல்லது குறைப்பதாக இருக்க வேண்டுமே தவிர குழப்பத்தைக் கூட்டுவதாக இருக்கக் கூடாது.

ஷரீஆவின் வரையறைகள்:

அபூதுபாப்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; பெண்கள் என்ன செய்தாலும் அவர்களைத் தண்டிக்கக் கூடாது என ஆரம்பத்தில் தடை விதித்திருந்தார்கள். அதனால் பெண்கள் ஆண்களை மிகைக்கும் வண்ணம் நடந்து கொண்டார்கள். அப்போது ஆண்கள் மனைவியருக்கு அடிக்கும் அனுமதியைக் கேட்டார்கள். நபி(ஸல்) அவர்களும் அனுமதியளித்தார்கள். அன்று இரவே பல மனைவியர்கள் தமது கணவர்களினால் தாக்கப்பட்டார்கள். இது குறித்து நபி(ஸல்) அவர்களிடம் முறையிடப்பட்ட போது அவ்வாறு தாக்கியவர்களைக் கண்டித்ததுடன் அவர்கள் (தாக்கியவர்கள்) நல்லவர்கள் அல்ல என்றும் கூறினார்கள். (அல்முஸ்தத்ரக்)

எனவே, மனைவியருக்கு அடிக்கும் அதிகாரம் என்பது விருப்பத்திற்குரிய ஒன்று அல்ல. ‘தவிர்த்தால் நல்லது; தவிர்க்க முடியாது’ என்ற அளவுக்குத் தலைக்கு மேல் வெள்ளம் என்ற நிலை ஏற்பட்டால், சில வரையறைகளுடன் அனுமதிக்கப்பட்ட ஒன்று என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

அப்படி மனைவியைத் தண்டிப்பது என்றால் பின்வரும் நிபந்தனைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்:

(1) முகத்தில் அறையக் கூடாது:

முகம் கண்ணியத்திற்குரிய உறுப்பு. அதன் மூலந்தான் அல்லாஹ்வுக்கு ஸுஜூது செய்யப்படுகின்றது. ‘முகத்தில் அறைய வேண்டாம்!’ என நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். (அபூதாவூத்)

(2) பெண்மையின் தனிப்பட்ட உறுப்புக்களில் தாக்கக் கூடாது:

சில வக்கிரம் கொண்ட ஆண்கள் பெண்களின் மார்பகங்களில் சிகரட்டால் சுடுவது, பிறப்பு உறுப்பில் தாக்குவது போன்ற கொடூரங்களைச் செய்து வருகின்றனர். இஸ்லாம் இவற்றை வன்மையாகக் கண்டிக்கின்றது.

(3) கடுமையான அடியாக இருக்கக் கூடாது:

நாம் ஏற்கனவே குறிப்பிட்ட (4:34) வசனமும், ஸஹீஹ் முஸ்லிமின் ஹதீஸும் இதைத்தான் உணர்த்துகின்றன. இது குறித்து இப்னு அப்பாஸ்(ரலி) கூறும் போது, ‘பாதிப்பு ஏற்படுத்தாத அடியாக இருக்க வேண்டும்!’ எனக் குறிப்பிடுகின்றார்கள்.

இஸ்லாமியச் சட்டத்துறை அறிஞர்கள் இது பற்றிக் கூறும் போது, ‘அடி ஒரு உறுப்பை முறிப்பதாகவோ, அதில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவோ இருக்கக் கூடாது!’ என்று குறிப்பிடுகின்றனர். இந்த வகையில் மனைவியின் கண்கள் சிவக்கும் அளவுக்கோ, உதடுகள் வெடிக்கும் விதத்திலோ, பல்லு உடையும் விதத்திலோ, தோல் வீங்கும் விதத்திலோ அடிப்பவர்கள் தெளிவாக இஸ்லாத்திற்கு முரண்படுகின்றனர். இவர்கள் தமது மனைவியைத் திருத்த முன்னர் தம்மைத் திருத்திக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளனர்.

(4) பிறர் முன்னிலையில் தாக்கக் கூடாது:

மனைவி மீது பிறர் முன்னிலையில் வெறுப்பை வெளிப்படுத்துவதைக் கூட இஸ்லாம் விரும்பவில்லை. ‘வீட்டைத் தவிர வேறு இடத்தில் அவள் மீது வெறுப்பை வெளிப்படுத்தாதே!’ நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். சில ஆண்கள் மனைவியின் குடும்பத்தினர் முன்னிலையில் அவளைத் தாக்கி அதன் மூலம் முழுக் குடும்பத்தையும் அவமானத்துக்கும், அவஸ்தைக்கும் உள்ளாக்க விரும்புகின்றனர். இது தவறாகும்.

(5) தவறுக்குத் தக்கதாக இருக்க வேண்டும்:

தவறுக்காகத் தண்டிக்கும் போது அந்தத் தவறுக்குத் தக்கவாறே தண்டிக்க வேண்டும். சின்னக் குற்றம் செய்தவளுக்குப் பெரிய தண்டனையளித்தால் அது குற்றவாளியைத் திருத்தாது. அவளைக் குமுறச் செய்து மீண்டும் வெறியுடன் தவறு செய்யத் தூண்டும்.

(போர் செய்யத் தடுக்கப்பட்ட) புனித மாதத்திற்குப் புனித மாதமே நிகராகும். புனிதப்படுத்தப்பட்டவை (அவற்றின் புனிதம் மீறப்பட்டால் அவை)களுக்கும் பழிவாங்குதல் உண்டு! ஆகவே, எவரேனும் உங்கள் மீது வரம்பு மீறினால் அவர் உங்கள் மீது வரம்பு மீறியது போன்று நீங்களும் அவர் மீது வரம்பு மீறுங்கள்! மேலும், அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியாளர்களுடன் இருக்கின்றான் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்! (அல் குர்ஆன் 2:194)

நீங்கள் தண்டிப்பதாயின் நீங்கள் துன்புறுத்தப்பட்ட அளவுக்கே தண்டியுங்கள். நீங்கள் பொறுமையுடனிருந்தால் பொறுமையாளர்களுக்கு அதுவே மிகச் சிறந்ததாகும். (அல் குர்ஆன் 16:126)

மேற்படி வசனம், எமது எதிரி எம்மைத் தாக்கினால் கூட அவனைப் பதிலுக்குத் தாக்கும் போது வரம்பு மீறி நடக்கக் கூடாது. அவன் தாக்கிய அளவே பதில் தாக்குதல் கொடுக்க வேண்டும் என எமக்குக் கட்டளை இடுகின்றது. எதிரி விடயத்திலேயே இவ்வளவு நேர்மையை இஸ்லாம் வலியுறுத்தும் போது எமது வாழ்க்கைத் துணைவியின் தவறுக்காகக் கண்-மண் தெரியாது கொடூரமாக நடந்துகொள்வதை இஸ்லாம் எப்படி அங்கீகரிக்கும்!?

மனைவியைத் தண்டிக்கும் கணவன் தனது நோக்கம் மனைவியை சீர்திருத்துவது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பழிதீர்ப்பதோ, வஞ்சம் தீர்ப்பதோ தனது இலக்கு அல்ல என்பதில் அவன் அவதானமாக இருக்க வேண்டும். அதற்கு மாற்றமாகத் தனது கோபத்தை அவள் மீது கொட்டித் தீர்க்க முடியாது. சில கணவர்கள் தன்னை மறந்து மனைவியைத் தாக்குகின்றனர். அப்போது அவர்களது புலன்கள் அனைத்தும் மரணித்து விடுகின்றன.

அவன் அடிக்கின்றான்; தனது கை அவளது உடலில் எந்த இடத்தில் விழுகின்றது என்பது அவனுக்குத் தெரியாது. உதைகின்றான்; தனது கால் எங்கே படுகின்றது என்பது அவனால் புரிந்துகொள்ள முடிவதில்லை. திட்டுகின்றான்; தனது வாய் பேசியது என்ன என்பது அவனுக்குத் தெரியாது. அடிப்பதை நிறுத்துமாறு அவள் கெஞ்சுகின்றாள்; அந்த வார்த்தைகள் அவனது செவிகளில் விழுவதில்லை. அவள் பாதுகாப்புக் கோறுகிறாள்; இவன் பாதுகாப்பளிப்பதில்லை. அவள் அழுகிறாள்; கத்துகிறாள்; இவனது உள்ளம் இரங்குவதில்லை. சிலபோது அவளது ஆடைகள் களைந்து, கிழிந்து, உடல் இரத்தம் வழிந்தால் கூட இவனது கண்களுக்கு அவை புலப்படுவதில்லை.

இந்த நிலையில் இல்லறத்தைத் தொடர்பவன் தனது மனைவியைத் திருத்தி விட முடியாது. எதற்கும் ஒரு எதிர்வினை உண்டு. இது நல்ல எதிர்வினையை உண்டுபண்ணாது.

எனவேதான் மனைவியைத் தண்டிக்க அனுமதிக்கும் வசனத்தை அல்லாஹ் முடிக்கும் போது; ‘அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால், அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள். அல்லாஹ் உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கின்றான்’ (அல் குர்ஆன் 3:34) என்று முடிக்கின்றான். தான் தனது தவறுக்கு வருந்துவதாகவோ அல்லது தான் தனது தவறுக்குக் கட்டுப்படுவதாகவோ வார்த்தை மூலமோ, செயல் மூலமோ மனைவி உணர்த்தினால் அதன் பின் அவளுக்கு அடிப்பது தடையாகும்.

இது குறித்து இமாம் இப்னு கதீர் அவர்கள் கூறும் போது; ‘அல்லாஹ் அனுமதியளித்த விடயத்தில் மனைவி கணவனுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவளுக்கு அடிக்கவோ, அவளை வெறுக்கவோ கணவனுக்கு உரிமை இல்லை. அல்லாஹ் உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கின்றான் என இந்த வசனத்தை அல்லாஹ் முடித்திருப்பது, காரணமின்றி பெண்கள் விடயத்தில் அத்துமீறும் ஆண்களை அச்சுறுத்துவதற்காகவும், ஆணாதிக்கச் சிந்தனையில் அவர்கள் மீது அத்துமீறும் காஃபிர்களை விட பெரியவனாக அல்லாஹ் இருக்கின்றான் என்பதை இறுதி வார்த்தை உணர்த்துகின்றது.

நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை:

இஸ்லாம் மனைவியரைத் தண்டிக்க அனுமதியளித்துள்ளது. இருப்பினும் அதைப் பயன்படுத்தாதிருப்பதே சிறந்தது என நாம் ஏற்கனவே குறிப்பிட்டோம். இதற்கான அழகான முன்மாதிரியை நாம் நபி(ஸல்) அவர்களின் குடும்ப வாழ்வில் காணலாம். ‘போர்க் களத்தைத் தவிர வேறு எந்தச் சந்தர்ப்பத்திலும் நபி(ஸல்) அவர்கள் எவரையும் அடித்ததில்லை. நபி(ஸல்) அவர்கள் தமது மனைவியரையோ, தமது பணியாளையோ எப்போதும் அடித்ததில்லை’ (முஸ்லிம்) என்ற நபிமொழி நபி(ஸல்) அவர்கள் தமது மனைவியரை அடித்ததில்லை என்று கூறுவதால் நாமும் அந்த வழிமுறையைப் பின்பற்ற முனைய வேண்டும்.

தான் அடிக்காத அதேவேளை அடிப்பவர்களைக் கண்டித்து முள்ளார்கள்.

‘உங்களில் ஒருவர் தனது மனைவியை அடிமையை அடிப்பது போன்று அடித்து விட்டுப் பின்னர் இரவில் அவளுடன் உடலுறவில் ஈடுபடுகின்றீர்களே!’ எனக் கூறி நபி(ஸல்) கண்டித்தார்கள். (புகாரி)

ஃபாதிமா பின்து கைஸ் என்ற பெண்மனி தன்னை இருவர் பெண் பேசுவதாகவும், அவர்களில் எவரை மணப்பது என்பது குறித்தும் நபி(ஸல்) அவர்களுடன் ஆலோசனை செய்த போது, ‘அபூஜஹ்ம் மனைவிக்கு அடிக்கக்கூடியவர்!’ என்று காரணம் கூறி மாற்று ஆலோசனை கூறினார்கள்.

‘உங்களில் மார்க்கமும், நல்ல பண்பும் உள்ளவர்கள் பெண் கேட்டு வந்தால் அவர்களுக்கு மணம் முடித்துக் கொடுங்கள்!’ (திர்மிதி) எனக் கூறிய நபி(ஸல்) அவர்கள் ‘பெண்களை அடிக்கும் இயல்பு உள்ளவர் பெண் கேட்ட போது மாற்று அபிப்பிராயம் கூறியுள்ளார்கள் என்றால் பெண்களை அடிப்பது வரவேற்கத்தக்க அம்சமோ, பண்போ அல்ல என்பதை எடுத்துக் காட்டுகின்றது.

காரணங்களைக் கண்டறிவோம்:

கணவன், மனைவியை அடிப்பது அனுமதிக்கப்பட்ட அதேவேளை தவிர்க்கப்பட வேண்டிய ஒரு அம்சமாகும். இது இல்லற வாழ்வின் இனிமையை ஒழித்து விடும். குடும்பத்தின் அமைதியைக் குலைத்து விடும். குழந்தைகளின் உள்ளங்களில் ரணத்தை ஏற்படுத்தும். அவர்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தும். பிள்ளைகள் தந்தையை வில்லனாகக் காண்பார்கள். எனவே இதைத் தவிர்க்க வேண்டும். இதைத் தவிர்ப்பதாக இருந்தால் இந்தப் பிரச்சினை உருவாகக் காரணமாக இருக்கும் குறைகளைக் களைய வேண்டும்.
மனைவி தரப்பில்:

மனைவி தரப்பில் உள்ள சில குறைகள் அவள் தாக்கப்படக் காரணமாக அமைந்து விடுகின்றன. எனவே, அவள் முதலில் தனது குறைகளை அறிந்து அவற்றைக் களைய முனைய வேண்டும்.

(1) கணவனுக்கு மாறு செய்தல், கட்டுப்பட மறுத்தல், கடமைகளைச் செய்யாதிருத்தல்:

இது மனைவி தரப்பில் ஏற்படும் தவறாகும். இந்தத் தவறை மனைவி களைய வேண்டும். கணவனுக்குக் கட்டுப்படுவதைப் பெண் அடிமைத்துவமாகப் பார்க்காமல் அல்லாஹ்வுக்காகச் செய்யும் இபாதத்தாக அவள் பார்க்க வேண்டும்.

தனது முன்னாள் கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பியதனால் இரண்டாம் கணவருக்குக் கட்டுப்படாமல் அவர் ஆண்மை அற்றவர் எனப் பொய் அவதூறு கூறிய பெண்மணிக்கு ஒரு கணவர் அடித்தார். இது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் முறையிடப்பட்ட போது அந்தப் பெண்ணைத் தண்டித்தவரை நபியவர்கள் கண்டிக்கவில்லை என்பதை புகாரியின் (5825) நீண்ட ஹதீஸ் கூறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

(2) கணவன் மீது சந்தேகங்கொள்ளல்:

கணவனுக்கு ஏனைய பெண்களுடன் தொடர்பிருப்பதாக எண்ணுதல் அல்லது கதைத்தல் அல்லது அது குறித்துக் கணவனுடன் தர்க்கித்தல் என்பவை கணவனுக்குக் கோபத்தை உண்டுபண்ணும் செயல்களாகும். அத்தோடு அது கணவனைத் தவறான பாதைக்கும் இட்டுச் செல்லும். கணவன் குறித்து பிறர் தவறாகப் பேசினாலும் ‘அவர் அப்படிச் செய்ய மாட்டார். அவர் என்னுடன் அன்பாக உள்ளார்!’ என்று மறுக்க வேண்டும். இவ்வாறு நடக்கும் போது ‘தன் மனைவிக்கு நாணயமாக நடக்க வேண்டும். அவள் என் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறாள்’ என்ற எண்ணம் கணவனுக்கு ஏற்படும். வெறுமனே சந்தேகத்தைக் கிளப்பினால் ‘நான் செய்வேன். உன்னால் தடுக்க முடிந்தால் தடு பார்க்கலாம்’ என்ற எண்ணம் ஏற்பட்டு கணவன் தவறக் கூடும். சிலபோது இந்தப் பிரச்சினையால் மன உளைச்சலுக்குள்ளாகும் கணவர்கள் விபச்சார விடுதிகளையும், மதுபானச் சாலைகளையும் நாடலாம். எனவே, கணவன் மீது சந்தேகத்தை வெளிப்படுத்தக் கூடாது. சிலபோது கணவனுடன் அந்நியப் பெண்கள் பேசும் போது கணவன் மீதுள்ள அபரிமிதமான அன்பினாலும், பெண்களிடம் இருக்கும் இயல்பான பொறாமையினாலும் சந்தேகம் வருவதுண்டு. அப்படி இருந்தால் கூட அதைக் கணவனிடம் அவனது ஆண்மைக்கோ, நாணயத்திற்கோ பங்கம் ஏற்படாவண்ணம் முறையாகப் பேசித் தீர்த்துக்கொள்ள முனைய வேண்டும்.

(3) இல்லறத்துக்கு இணங்காதிருத்தல்:

பெண்களுக்கு ரோசம் வரும் போது கணவனுக்கு இணங்கிப் போகாத போக்கைக் கடைபிடிக்கின்றனர். இதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கின்றது. கணவன் தாம்பத்திய உறவுக்கு அழைத்து மனைவி காரணமில்லாமல் மறுத்தால் விடியும் வரை அவளை மலக்குகள் சபிக்கின்றனர் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே மலக்குகளின் சாபத்தை அஞ்சி, பெண்கள் இந்தத் தவறைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறு பெண்களால் பாதிக்கப்படுகின்றவர்கள் சின்னச் சின்னப் பிரச்சினைகளுக்கெல்லாம் மனைவியைத் தாக்கித் தமது ஆத்திரத்தைத் தீர்த்துக்கொள்வதுடன் தவறான தொடர்புகளையும் வளர்த்துக்கொள்கின்றனர். இவ்வாறு பாதிக்கப்படும் சிலர் தன்னினச் சேர்க்கையாளர்களாக மாறுகின்றனர்.

(4) கணவனின் அனுமதி இன்றி வீட்டை விட்டும் வெளியேறுதல்:

மனைவி வீட்டை விட்டு வெளியேறுவதென்றால் கணவனின் அனுமதியைப் பெற வேண்டும். அருகில் உள்ள தனது தாய்-உறவினர் வீட்டுக்குச் செல்வதானால் கூட கணவனிடம் கூறாது செல்லக் கூடாது. குறிப்பாகக் கணவன் வீட்டுக்கு வரும் போது அவனுக்குத் தெரியாமல் உறவினர் வீடுகளுக்குச் சென்று வருவது குடும்ப வன்முறைகள் உருவாகக் காரணமாக அமைகின்றது.

(5) கணவன் இல்லாத போது கணவன் வெறுக்கக் கூடியவர்களுக்கு வீட்டில் இடமளித்தல்:

ஆண்களின் சுபாவங்களை ஆண்களே அதிகம் அறிவர். கணவன் சில ஆண்களைக் குறிப்பிட்டு, ‘அவனுடன் பேச வேண்டாம்! அவன் நான் இல்லாத போது வந்தால் உள்ளே எடுக்க வேண்டாம்!’ என்று கூறியிருந்தால், அதன்படி செயல்படுவது மனைவிக்குக் கடமையாகும். இதற்கு மாறுசெய்யும் போது மனைவி கணவனால் தண்டிக்கப்படும் நிலைக்காளாகின்றான்.

கணவன் தரப்பில் ஏற்படும் தவறுகள்:

பெண்கள் தாக்கப்படுவதற்குப் பெண்களது தவறான போக்குகள் காரணமாக அமைவது போன்றே சில கணவர்களது ஆளுமையற்ற போக்கும் காரணமாக அமைவதுண்டு. அவற்றில் சிலவற்றைப் பின்வருமாறு சுருக்கமாக நோக்குவோம்.

(1) ஆண்களின் அளவுக்கு மீறிய ரோச குணம்:

சில ஆண்கள் அதிக ரோசம் கொண்டவர்களாக இருக்கின்றனர். ஷரீஆ சட்டப்படி மஹ்ரமில்லாத ஆண்களுடன் சகஜமாக உரையாடுவது, சாதாரண ஆடையுடன் அவர்கள் முன்னால் வருவது போன்றவற்றை அவர்கள் தடுக்கும் போது மனைவி அதற்கு உடன்பட வேண்டும். தனது கணவன் தன் மீது சந்தேகம் கொள்கிறான் என்ற தொணியில் பெண்கள் எதிர்த்துப் பேசும் போது சண்டையாக அது மாறுகின்றது. சிலபோது சில ஆண்கள் குடும்ப உறுப்பினர்கள், மஹ்ரமான ஆண்களுடன் உரையாடுவதைக் கூடத் தடுப்பதுண்டு. இது தவறாகும். இந்தத் தவறான போக்கிற்கு மனைவி உடன்படாத போது கண்டிக்கின்றான்.

(2) தாயையும், தாரத்தையும் மதிப்பிடும் மதிநுட்பம்:

மனைவியின் உரிமைகளையும், தாயிக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் ஒருமுகப்படுத்திச் செயல்படும் திறன் கணவனிடம் இல்லாமையும் மனைவி தண்டிக்கப்படக் காரணமாக அமைகின்றது. சில தாய்மார்கள் மருமகள் மீது கொண்ட பொறாமையினால் மூட்டி விடுபவர்களாக இருப்பார்கள். மகன் செத்தாலும் பரவாயில்லை; மருமகள் விதவையாக வேண்டும் என நினைக்கும் தாய்மாரும் உள்ளனர். தான் பெற்றுக் கஷ்டப்பட்டு வளர்த்த மகனுக்கு இவள் முழுமையாக உரிமை கொள்கின்றாளே! என்ற எண்ணத்தால் சில தாய்மார் இவ்வாறு நடந்துகொள்வதுண்டு. சில ஆண்கள் தாயை முழுமையாக நம்பி மனைவியைத் தண்டிக்கின்றனர். சிலர் மனைவியின் வாக்கை வேத வாக்காக ஏற்று பெற்றோரை நோவினை செய்கின்றனர். இரண்டும் தவறானவைகளாகும். இந்தத் தவறான போக்கால் பெற்றோரை நோவினை செய்தல் அல்லது மனைவியின் உரிமையை மறுத்தல் என்ற இரண்டு ஹறாம்களில் ஏதேனும் ஒன்றில் அல்லது சிலபோது இரண்டு ஹறாம்களிலும் சில ஆண்கள் வீழ்ந்து விடுகின்றனர். தாயையும், மனைவியையும் சரியாக மதிப்பிடும் திறனற்ற போக்கு மனைவி கண்டிக்கப்படக் காரணமாக இருப்பதை இது உறுதி செய்கின்றது.

(3) தவறான பிள்ளைப் பாசம்:

ஆரம்ப காலங்களில் குழந்தைகள் தந்தைக்கே அதிகம் அஞ்சுவர். ஆனால் அண்மைக்கால நிகழ்வுகள் மாறி, குழந்தைகளுக்கு அதிகம் அடிப்பவர்களாகத் தாய்மார் மாறியுள்ளனர். குழந்தைகளுடன் அதிக நேரத்தைக் கழிப்பதனாலும், குழந்தைகளின் குறும்புத்தனங்கள் அதிகரித்து விட்டதனாலும் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கலாம். தந்தையர் குழந்தைகளிடம் குறைந்த நேரத்தைச் செலவிடுவதாலும், முற்காலத்தில் தமது தந்தையர் தம்மை தாறு-மாறாகத் தாக்கிய போது தாம் மனமுடைந்தது போன்று தனது பிள்ளைகள் மனமுடையக் கூடாது என எண்ணுவதாலும் தந்தையர் பிள்ளைகளைத் தண்டிப்பது குறைந்திருக்கலாம்.

எனினும், தாய் குழந்தைகளுக்கு அடிக்கும் போது குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்கு அடிக்கும் போது கணவன் கோபப்பட்டு மனைவியைத் தண்டிக்க முற்படுகின்றான். இது தவறாகும்.

இதன் மூலம் தனது தாய் தவறு செய்கிறாள் என்ற எண்ணமும், தாய்க்கு அறிவும் அன்பும் இல்லை என்ற உணர்வும் குழந்தைகள் மனதில் உண்டாகும். மனைவி தவறாகத் தண்டித்தால் கூட பிள்ளைகளின் முன்னால் அவளைக் கண்டிக்கவோ, அதை விமர்சிக்கவோ கூடாது.

பெண் மாதத் தீட்டுடன் இருக்கும் போது அதிக எரிச்சலடைகின்றாள். அந்த எரிச்சலோ அல்லது மன அழுத்தங்களோ கூட அவளது நடத்தைக்குக் காரணமாக இருக்கலாம். இதையும் ஆண் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அடுத்து, குழந்தைகளை நெறிப்படுத்துவதில் மனைவிக்கிருக்கும் உரிமையையும், கடமையையும் இது மறுப்பதாக அமைந்து விடும். அத்துடன் கூட்டமாகக் குதூகலாமாக இருக்க வேண்டிய குடும்பம் தாயைத் தனிமையாகவும், பிள்ளைகள் தந்தையைத் தனி அணியாகவும் ஆக்கி விடும். இது போன்ற சந்தர்ப்பங்களில் மனநிலையில் பாதிப்பு ஏற்பட்டால் குழந்தைகளைத் தன்பால் ஈர்க்க ஒரு பெண் தவறான வழிமுறைகளைக் கைக்கொள்ளவும் தந்தை பற்றிய தப்பெண்ணத்தைத் குழந்தைகளில் சிலரிடமாவது ஏற்படுத்தவும் முனையலாம்.

(4) கணவனின் கேவலமான வார்த்தைகள்:

சில ஆண்கள் பெண்களைச் சீண்டுவதற்காகக் கேலி செய்கின்றனர். கேலி முற்றிச் சண்டையாக மாறுகின்றது. சிலரிடம் பெண்களைப் பற்றிய இழிவான எண்ணங்கள் உண்டு.

பெண் என்பவள் செருப்புப் போன்றவள்; தேவைக்கு அணிந்து விட்டு, தேவையற்ற போது கழற்றி விட வேண்டும் என்றெல்லாம் கூறுவர்.

சிலர் அவளது அழகு, ஆடை, உணவு பற்றியெல்லாம் கேலியாகப் பேசி அவளைச் சீண்டி விட்டு, அவள் ஏதும் பேசி விட்டால் அடிக்க முற்படுகின்றனர். இவை தவறான வழிமுறைகளாகும். இந்தத் தவறுகளைக் களைந்து, வாழ்க்கை வாழ்வதற்கே! என்று எண்ணி, இஸ்லாமிய விதிமுறைகளைப் பேணி இல்லறத்தை நல்லறமாகவும், இனிமையாகவும் மாற்றிக்கொள்ள கணவன்-மனைவி இருவரும் முனைய வேண்டும்.




வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக