புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலிப்பு நோய் Poll_c10வலிப்பு நோய் Poll_m10வலிப்பு நோய் Poll_c10 
21 Posts - 66%
heezulia
வலிப்பு நோய் Poll_c10வலிப்பு நோய் Poll_m10வலிப்பு நோய் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலிப்பு நோய் Poll_c10வலிப்பு நோய் Poll_m10வலிப்பு நோய் Poll_c10 
63 Posts - 64%
heezulia
வலிப்பு நோய் Poll_c10வலிப்பு நோய் Poll_m10வலிப்பு நோய் Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
வலிப்பு நோய் Poll_c10வலிப்பு நோய் Poll_m10வலிப்பு நோய் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
வலிப்பு நோய் Poll_c10வலிப்பு நோய் Poll_m10வலிப்பு நோய் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வலிப்பு நோய்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 15, 2010 1:21 am

வலிப்பு நோய் பற்றிய மனோபாவம்

வலிப்புநோய் நோய்நிர்ணயம் செய்யப்பட்டதும் அதனை ஏற்றுக் கொள்ளும் மனோநிலை சிரமமான விடயமாகும். காரணம் வலிப்பு நோய் பற்றிய தவறான அல்லது பிற்போக்கான அபிப்பிராயங்களாகும். சில பெற்றோர்கள் வலிப்பு நோயுடைய சிறுவர்கள் மீது அளவுக்கதிகமான அக்கறைகாட்டிவதற்கு ஆரம்பித்து விடுவார்கள். இது புரிந்து கொள்ளக் கூடிய விடயம். ஆயினும் சிறுவர்களின் விருப்புகளுக்கு இடமளித்தலும் அவசியமாகும்.

வேறு பலவகையான நோய்களைப் போன்றே இந்நோய் பற்றிய மனோபாவமானது இந் நோயினை விட மிகவும் கடினமானது ஆகும். வலிப்பு நோய் காரணமாக அளவுக்கதிகமான மனப் பதட்டத்துக்கோ மன இறுக்கத்துக்கோ உள்ளாகி இருப்பின் உளவள ஆலோசனை பெறுவது உகந்தது. தங்களது வைத்தியரிடம் இது பற்றி ஆலோசனை பெற முடியும்.

ஒன்று சேரப் பார்க்கும் போது பலரும் கருதுவதை விட சிறந்த பெறு பேறுகளே கிடைக்கின்றன. மருந்துகள் மூலம் வலிப்பினை கட்டுப் படுத்துகின்றதன் / தடுப்பதன் வெற்றி வலிப்பு நோயின் வகையிலேயே தங்கி உள்ளது அநேகமான வலிப்பு நோயுடையவர்கள் முழுமையான, துடிப்பான வாழ்க்கையினை வாழக்கூடியதாக இருக்கும். மிக மிகச் சிறிதளவு நோயாளிகள் திடீர் மரணங்களை சம்பவித்துள்ளனர். ஆயின் அவர்கள் தமது வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டி இருக்கும். உ-ம். குறிப்பிட்ட காலப்பகுதிக்கு வாகனங்களை ஓட்டுதல் தடை செய்யப் பட்டுள்ளது

வலிப்பு மருந்துகளை நிறுத்துவதற்கு உத்தேசிக்கும் போது முதலில் தற்காலிகமாக மருந்துகளை நிறுத்திப் பரீட்சிக்கப்பட்டு பின்னரே நிறுத்தப்படும். ஒருபோதும் சடுதியாக நிறுத்தக் கூடாது.

வலிப்பு நோயின் நீண்ட கால விளைவுகள்

மருந்துகள் மூலம் வலிப்பினை கட்டுப்படுத்துவதன் அல்லது தடுப்பதன் வெற்றி வலிப்பு நோயின் வகையிலேயே தங்கியுள்ளது. உ-ம். வலிப்பு உருவாகுவதற்கு காரணம் எதுவும் கண்டறியப்பட முடியாத வலிப்பு நோயானது மாத்திரைகள் மூலம் முற்றாக நன்கு கட்டுப்படுத்தப்படுகிறது. ஆயின் வேறு அறியப்பட்ட மூளைப்பாதிப்புக்கள் காரணமாக உருவாகும் வலிப்பினைக் கட்டுப்படுத்துவது சிரமமான காரியமாகும்.

ஒன்றுசேரப் பார்க்கும் போது பலரும் கருதுவதை விட சிறந்த பெறுபேறுகளே கிடைக்கின்றன. கீழே குறிப்பிடப்படும் தரவுகள் ஐந்து வருடகாலமாக வலிப்பு நோயுடையவர்களைத் தொடர்ந்து ஆராய்வதன் மூலம் இங்கிலாந்திலே பெறப்பட்ட தகவல்களாகும்.

* ஏறத்தாள வலிப்பு நோயுள்ள 10பேரில் ஐவரில் ஐந்துவருடங்களாக மீண்டும் வலிப்பு ஏற்படவில்லை. அநேகமானோர் தொடர்ந்து வலிப்பு மருந்துகளை உபயோகித்து வந்தனர். சிலர் இரண்டு/ இரண்டுக்கு மேற்பட்ட வருடங்கள் தொடர்ந்து மருந்துகளை பாவித்து வரும் போது வலிப்பு ஏற்படாமையால் நிறுத்தி இருந்தனர்.

* ஏறத்தாள 10 பேரில் 3வரில் ஐந்துவருட காலத்தினுள் சில வலிப்புகள் ஏற்பட்டிருந்தன. ஆயின் வலிப்பு மருந்துகளை உட்கொள்ளாதவர்களுடன் ஒப்பிடுகையில் மிக அரிதாகவே ஆகும்.

* ஆகவே கூட்டாகப் பார்க்கும் போது வலிப்பு மருந்துகளை பாவிக்கும்போது 10 பேரில் 8வரில் வலிப்பு நோயானது நன்கு கட்டுப்படுத்தப்படுகிறது.

* மீதமுள்ள 10 பேரில் இருவரில் வலிப்பு மருந்தினைப் பயன்படுத்தும் போதும் தொடர்ச்சியாக வலிப்பு ஏற்படுகிறது.

* மிகமிகச் சிறிதளவு நோயாளிகள் திடீர் மரணங்களை சம்பவித்துள்ளனர். இதற்குரிய சரியான காரணம் அறியப்படவில்லை. ஆயினும் வலிப்பின் போது சுவாசத்தில் ஏற்பட்ட தடங்கல்/ இதயத்துடிப்பில் ஏற்பட்ட சந்தக்குழப்பம் காரணமாக இருக்க வேண்டும். ஆயின் இது மிக அரிதாகும், அநேகமாக பெரும்பாலானோர் வலிப்பின் பின்னர் முற்றாக சாதாரண நிலைக்குத் திரும்புவார்கள்.

வலிப்பு மருந்துகளை நிறுத்துவதற்கு உத்தேசிக்கும் போது முதலில் தற்காலிகமாக மருந்துகளை நிறுத்திப் பரீட்சிக்கப்படும். இது வலிப்பானது 2-3 வருடங்களுக்கு தொடர்ச்சியாக ஏற்படாதவிடத்து மாத்திரமே முயற்சிக்கப்படலாம்.

இவ்வாறு மருந்தினை நிறுத்துவதற்கு தீர்மானிக்கும் போது படிப்படியாக சில மாதங்களிலேயே மருந்தின் அளவைக் குறைத்துச் செல்ல வேண்டும். ஒருபோதும் வைத்திய ஆலோசனை இன்றி மருந்தினை நிறுத்தக்கூடாது.

அநேகமான வலிப்பு நோயுடையவர்கள் முழுமையான, சுறுசுறுப்பான வாழ்க்கையினை வாழக்கூடியதாக இருக்கும். ஆயின் அவர்கள் தமது வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டி இருக்கும். உ-ம். குறிப்பிட்ட காலப்பகுதிக்கு வாகனங்களை ஓட்டுதல் தடைசெய்யப்பட்டுள்ளது.


சிறுவர்களுக்குரிய அறிவுறுத்தல்கள்


மருந்து வகைகள்

வலிப்பினை மிகச் சிறந்த முறையில் கட்டுப்படுத்திக் கொள்வதற்கு வைத்திய ஆலோசனைக்கு இணங்க ஒழுங்கான முறையில் மருந்துகளை உள்ளெடுத்தல் வேண்டும். இதனை தினசரி வழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும். ஒருதடவை மறந்து விடுவது சிலரில் சிக்கல்களை ஏற்படுத்தாத போதும் வேறு சிலரில் சடுதியாக வலிப்பினை ஏற்படுத்தக் கூடும்

பாடசாலை

அநேக வலிப்பு நோயுடைய சிறுவர்கள் சாதாரண பாடசாலைகளிலேயே கல்வி கற்பர். அநேகரில் வேறு விதமான குறைபாடுகள் ஏதும் காணப்படுவதில்லை.

ஆசிரியர்கள் இச் சிறுவர்கள் பற்றி அறிந்திருப்பதும் மருந்துகளின் உபயோகம் பற்றி விளங்கி இருப்பதும் வலிப்பு ஏற்படும் போது கையாளும் முறையினை அறிந்திருப்பதும் அவசியம். சில சிறுவர்களில் வலிப்பு நோயுடன் வேறு சில குறைபாடுகளும் காணப்படலாம். அத்துடன் அவர்களுக்கு விசேட பாடசாலைகளும் அவசியப்படலாம்.

விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு

அநேக விளையாட்டுக்களில் பங்குபற்றலாம். ஆயின் தகுந்த அறிந்த மேற்பார்வை அவசியம். முன்னெச்சரிக்கை எடுத்தல் வேண்டும்.

பயணங்கள்

போதுமான மருந்தினை எடுத்துச் செல்லல் அவசியம். நீண்ட தூர பயணம் மற்றும் விமான சத்தம் போன்றவை களைப்படைய செய்வதுடன் வலிப்பினை ஏற்படுத்தக் கூடும்.

மற்றையவர்களுக்கு தெரிவித்தல்

வலிப்பின் வகை பற்றி ஏனையவர்களுக்கு அறிவுறுத்தல் உசிதமானது. நண்பர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள் போன்றோர்களுக்கு வலிப்பு எவ்விதமாக ஏற்படுகிறது என்பதை தெரிவிக்க முடியும். அவர்களுக்கு மயக்கம் ஏற்படின் மீள்தல் நிலையில் நோயாளியை வைத்திருப்பது பற்றி விளக்கமளித்தல் உகந்தது. வலிப்பின் வகையினைப் பொறுத்து நோயாளியின் நடத்தையின் மாற்றங்கள் ஏற்படுமாயின் (சிக்கலான பகுதியான வலிப்பு) இது பற்றி ஏனையவர்கள் அறிந்திருப்பதன் மூலம் அவர்கள் உதவிகளை மேற்கொள்ள முடியும்.

பாதுகாப்பு நடவடிக்கைகள். அதாவது ஆபத்தான காயங்கள் ஏற்படாது தவிர்ப்பதற்கான விபரம்.


* தீக்காயம் – நேரடித் தீயினைத் தவிர்த்தல் வேண்டும். சமையலறை, அடுப்புகள் போன்றவற்றை பாதுகாப்பான முறையில் அமைத்தல் வேண்டும்.

* நீர் – குளிக்கச் செல்லுமுன் யாரிடமாவது தெரிவித்து விட்டுச் செல்ல வேண்டும். கதவுகளை தாளிடாது விடுதல் வேண்டும். நீந்த செல்லும் போது வேறு யாருடனாவது சேர்ந்து செல்ல வேண்டும். ஆழமற்ற பிரதேசங்களிலேயே நீந்த வேண்டும்.

* உயரங்கள் – போதுமான பாதுகாப்பு வேலிகள் அமைந்திருக்க வேண்டும்.

* மின்சாரம் – இவை மிகச் சரியான பாதுகாப்பான முறையில் அமைக்கப் பட்டிருத்தல் அவசியம்.

* கூர்மையான தளபாடங்கள் – கூரிய மூலைகளை மூடுதல் மற்றும் மென்மையான தளபாடங்களை உபயோகித்தல்.

வலிப்பு நோயாளிகளுக்குரிய அறிவுறுத்தல்கள்

ஆயத்தமாக இருத்தல்

அநேகமானவர்களில் மருந்துகள் மூலம் வலிப்பு நோய் நன்கு கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். ஆயின் வலிப்பினை எதிர் கொள்ள ஆயத்தமாக இருத்தல் சிறந்தது.

மற்றையவர்களுக்கு தெரிவித்தல். வலிப்பின் வகை பற்றி ஏனையவர்களுக்கு அறிவுறுத்தல் உசிதமானது. நண்பர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள் போன்றோர்களுக்கு வலிப்பு எவ்விதமாக ஏற்படுகிறது என்பதை தெரிவிக்க முடியும். அவர்களுக்கு மயக்கம் ஏற்படின் மீள்தல் நிலையில் நோயாளியை வைத்திருப்பது பற்றி விளக்கமளித்தல் உகந்தது. வலிப்பின் வகையினைப் பொறுத்து நோயாளியின் நடத்தையின் மாற்றங்கள் ஏற்படுமாயின் (சிக்கலான பகுதியான வலிப்பு) இது பற்றி ஏனையவர்கள் அறிந்திருப்பதன் மூலம் அவர்கள் உதவிகளை மேற்கொள்ள முடியும்.


பாதுகாப்பு நடவடிக்கைகள். அதாவது ஆபத்தான காயங்கள் ஏற்படாது தவிர்ப்பதற்கான விபரம்.


* தீக்காயம் – நேரடித் தீயினைத் தவிர்த்தல் வேண்டும். சமையலறை, அடுப்புகள் போன்றவற்றை பாதுகாப்பான முறையில் அமைத்தல் வேண்டும்.

* நீர் – குளிக்கச் செல்லுமுன் யாரிடமாவது தெரிவித்து விட்டுச் செல்ல வேண்டும். கதவுகளை தாளிடாது விடுதல் வேண்டும். நீந்துவதற்குச் செல்லும் போது வேறு ஒருவருடன் சேர்ந்து செல்ல வேண்டும். ஆழமற்ற பிரதேசங்களிலேயே நீந்த வேண்டும்.

* உயரங்கள் – போதுமான பாதுகாப்பு வேலிகள் அமைந்திருக்க வேண்டும்.

* மின்சாரம் – இவை மிகச்சரியான பாதுகாப்பான முறையில் அமைக்கப் பட்டிருத்தல் அவசியம்.

* கூர்மையான தளபாடங்கள் – கூரிய மூலைகளை மூடுதல் மற்றும் மென்மையான தளபாடங்களை உபயோகித்தல்.

வலிப்பு நோயானது உங்களை வெளியே சென்று சுறுசுறுப்பான வாழ்க்கை வாழ்வதை தடுப்பதற்கு இடமளிக்கக் கூடாது. ஆபத்துக்கள் யாவற்றையும் தவிர்க்க முடியாது ஆயின் பொதுவான அவதானங்கள் மூலம் அவற்றிலிருந்து பாதுகாக்கலாம்.

வலிப்பு நோயாளிகளுக்குரிய அறிவுறுத்தல்கள்

மருந்து வகைகள்

வலிப்பினை மிகச் சிறந்த முறையில் கட்டுப்படுத்திக் கொள்வதற்கு வைத்திய ஆலோசனைக்கு இணங்க ஒழுங்கான முறையில் மருந்துகளை உள்ளெடுத்தல் வேண்டும். இதனை தினசரி வழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு தடவை மறந்து விடுவது சிலரில் சிக்கல்களை ஏற்படுத்தாத போதும் வேறு சிலரில் சடுதியாக வலிப்பினை ஏற்படுத்தக் கூடும்.

வாகனங்களை ஓட்டுதல்

சட்ட திட்டங்களுக்கு அமைய வலிப்பு நோய் உடையவர்கள் வாகனங்கள் ஓட்டுவதை நிறுத்த வேண்டும். உங்களிடம் சாரதி அனுமதிப் பத்திரம் இருப்பின் தங்களுக்கு வலிப்பு நோய் ஏற்படுவதை சாரதி அனுமதிப்பத்திர வழங்குனர்களிடம் தெரியப்படுத்தல் வேண்டும். அவர்கள் மீண்டும் எச்சந்தர்ப்பத்தில் சாரதி அனுமதி பத்திரம் பெறக்கூடியதாக இருக்குமென ஆலோசனை வழங்குவர். இது பொதுவாக ஒருவருடம் முற்றாக வலிப்பு இன்றி காணப்பட்ட பின்னராகும். பாரிய வாகனங்களை ஓட்டுவதற்கு இது மிகவும் இறுக்கமான சட்டதிட்டமாகும். சட்டங்கள் மற்றவர்களை பாதுகாப்பதையே குறிக்கோளாகக் கொண்டவை.

வாகனம் ஓட்டுதல் மருந்துச் சிகிச்சையினை தொடர்வதையும் நிறுத்துவதையும் தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றாகும். இரண்டு வருடங்களுக்கு மேல் வலிப்பு வராதவிடத்து மருந்து சிகிச்சையினை நிறுத்துவதற்கு பயிற்சிக்கப் படலாம். ஆயின் இதன் பின் வலிப்பு ஏற்படின் வாகனம் ஓட்டுவது குறைந்தது ஒரு வருடம் ஆயினும் நிறுத்துதல் வேண்டும். அதனுடன் மருந்துகளை நிறுத்துவதற்கு தீர்மானிக்கும் போது இவ்வாறு படிப்படியாக நிறுத்தி வரும் காலப்பகுதியில் (சில மாதங்கள்) மற்றும் மேலும் 6 மாதங்களுக்கு வாகனங்கள் ஓட்டுவதை நிறுத்த வேண்டும்.

வேலை

மிகச் சில வேலைகளிலேயே வலிப்பு நோயுடையவர்கள் இணைக்கப்படுவதில்லை. ஆயின் அவர்களால் மேற்கொள்ளக் கூடிய வேலைகள் பல உள்ளன. சில சந்தர்ப்பங்களில் வேலைகளை இழப்பதற்கு காரணம் சக தொழிலாளர்களின் வலிப்பு நோய் பற்றிய தவறான மனோபாவமாகும்.

பயணங்கள்


போதுமான மருந்தினை எடுத்துச் செல்லல் அவசியம். நீண்ட தூர பயணம் மற்றும் விமான சத்தம் போன்றவை களைப்படைய செய்வதுடன் வலிப்பினை ஏற்படுத்தக் கூடும்.

கருத்தடை மருந்துகள்

வலிப்பு மருந்துகள் இவற்றுக்கிடையே தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடும். எனவே கருத்தடையினை மேற்கொள்ள உயர்ந்தளவிலான கருத்தடை மருந்துகள் தேவைப்படும். வைத்தியர் ஆலோசனை அவசியம்.

கர்ப்பம் தரித்தல்

கர்ப்பமடைதல் வலிப்பு ஏற்படுவதினை அதிகரிக்கவோ குறைக்கவோ மாட்டாது. ஆயின் வலிப்பு மருந்துகள் சில சிசுவினைப் பாதிக்கக் கூடிய தன்மை கொண்டவை. எனவே கருத்தரிக்க முன்னர் வைத்திய ஆலோசனை பெற்றுக் கொள்வது மிக அவசியம். ஒரு முக்கிய விடயம் யாதெனில் கூடியளவில் போலிக் அமிலம் உட்கொள்ளல் வேண்டும். அதனை கருத்தரிக்க முன்னர் ஆரம்பித்து தொடர்ந்து தொடர்ந்து கர்ப்ப காலத்தில் பயன்படுத்த வேண்டும். இது சில குறைபாடுகள் ஏற்படுவதை தடுக்கிறது. திட்டமிடப்படாத கர்ப்பம் எனில் வலிப்பு மருந்துகளை நிறுத்தல் கூடாது. அதன் மூலம் வலிப்பு ஏற்பட ஆரம்பிக்கலாம். உடனடியாக வைத்தியரின் ஆலோசனை பெறுதல் வேண்டும்.



வலிப்பு நோய் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 15, 2010 1:23 am

வலிப்பினை தடுத்தலும் ஏனைய சிகிச்சைகளும்


வலிப்பினை தடுத்தல்

தூண்டல்க் காரணிகளைத் தவிர்த்தல்

சிலரில் குறிப்பிட்ட வகையான தூண்டல் காரணிகள் வலிப்பினை அதிகமாக ஏற்படுத்தக் கூடியன. இவை வலிப்பு நோய்க்குரிய காரணங்கள் அல்ல ஆயின் இவை சில சந்தர்ப்பங்களில் வலிப்பினை தூண்டக் கூடியன.

அவையாவன

* மனஉளைச்சல், பதற்றம்

* மிதமிஞ்சிய மதுப்பாவனை

* போதை மருந்துகள்

* சில மருந்துகள் உ-ம். மனஇறுக்கத்துக்கு எதிரான மற்றும் மனநோய்க்குரிய மருந்துகள்

* போதுமான நித்திரை இன்மை, உடல் களைப்படைதல்

* ஒழுங்கற்ற உணவுப்பழக்கம் – குருதி குளுக்கோஸ் குறைதல்

* ஒளிரும் வெளிச்சங்கள்

* மாதவிடாய்

* நோய்கள் – காய்ச்சல், தடிமல் போன்றன

வலிப்பு நாட் காட்டியைப் பேணுவது இவற்றை அடையாளம் காண உதவிகரமாக இருக்கும். அத்துடன் இவற்றை தவிர்க்கக்கூடியதாக இருக்கும். ஆரோக்கியமான வாழ்க்கை முறை, சமச்சீரான உணவு, ஒழுங்கான உணவுப் பழக்கங்கள், அளவுக்கதிகமான களைப்பினைத் தவிர்த்தல் போன்றன வலிப்பினை தவிர்க்கவும் ஆரோக்கியமாக இருக்கவும் உதவும்.

ஏனைய சிகிச்சை முறைகள்

* சத்திர சிகிச்சை - இதன் மூலம் வலிப்பினை ஏற்படுத்துகின்ற மூளையின் பாதிப்புக்குள்ளான பகுதியை அகற்ற முடியும். மருந்து வகைகள் மூலம் வலிப்பினைக் கட்டுப்படுத்த முடியாத நிலையை அடையும் போது சத்திரசிகிச்சையினைப் பயன்படுத்த உத்தேசிக்கலாம். இது சில வகையான மூளைப் பாதிப்புகளுக்கும், மூளையின் சில குறிப்பிட்ட பகுதிகளுக்கும் மட்டுமே பயன்படுத்தக்கூடியது. எனவே குறிப்பிட்ட மிகச்சில நோயாளிகளே சத்திர சிகிச்சைக்குப் பொருத்தமானவர்களாக இருப்பர். அத்துடன் மூளையில் சத்திரசிகிச்சையானது ஆபத்தினை கொண்டுள்ளதும் ஆகும். ஆயின் சத்திர சிகிச்சை நுட்பங்கள் முன்னேறி வருவதனால் எதிர்காலங்களில் பல நோயாளிகளில் சத்திர சிகிச்சை முறை உபயோகிக்கப்படலாம்.

* (Vagal) நரம்பு தூண்டுதல் – சிலரில் பயன்படுத்தக்கூடும்.

* கீற்றோன்கள் எனப்படும் பதார்த்தங்களைக் கொண்டுள்ள உணவுப்பொருட்கள். இது அனுபவம் வாய்ந்த போசணை தொடர்பான நிபுணரின் மேற் பார்வையின் கீழ் சில சிறுவர்களிலும் பெரியவர்களிலும் குறிப்பிட்ட வகையான வலிப்பு நோய்களுக்கு வழங்கப்படலாம்.

* அத்துடன் ஒத்திசைவுச் சிகிச்சைகள். உ-ம். சுவாசப்பயிற்சி, மனதையும் உடலையும் தளர்த்தும் பயிற்சி, மனஉளைச்சலை குறைத்தல் போன்றன.



வலிப்பு நோய் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 15, 2010 1:26 am

வலிப்பு மாத்திரைகள் பற்றிய சில தகவல்கள்

* எவ்வளவு காலப்பகுதிக்கு வலிப்பு மாத்திரைகளை உட்கொள்ள வேண்டுமென வைத்தியர்களால் ஆலோசனை வழங்கப்படுகிறது. இது நோயாளிகளுக்கேற்ப வேறுபடுகிறது. மிக நீண்ட காலத்திற்கு வலிப்பு ஏற்படாத போது நீங்கள் மருந்தினை நிறுத்துவதற்கு விரும்புவீர்கள். ஆயின் இது உங்களுக்கு ஏற்பட்ட வலிப்பு நோயின் வகையில் தங்கியுள்ளது. பல்வேறு வகையான வலிப்பு நோய்கள் காணப்படுகின்றன. சில வயதாகும் போது நிறுத்தப்படுகின்றன ஆயின் சிலவற்றுக்கு வாழ்நாள் முழுவதும் மருந்து சிகிச்சை தேவைப்படுகிறது. உங்களிடைய வாழ்க்கை சூழல் மருந்தினை நிறுத்துவதில் செல்வாக்கு செலுத்துகிறது. உ-ம். மிக அண்மையில் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் மீளப்பெற்றிருப்பின் வலிப்பு ஏற்படின் அதனை மீண்டும் இழக்க வேண்டி இருக்கும்.

* ஏற்படக்கூடிய பக்கவிளைவுகளின் பட்டியல் மிக நீண்டதாக இருப்பினும் நடைமுறையில் அநேகமான நோயாளிகளில் சில பக்க விளைவுகளோ/ பக்க விளைவுகள் இன்றியோ காணப்படுகிறது. எனவே வைத்தியரிடம் எவ்வாறான பக்க விளைவுகள் பற்றி அவதானமாக இருக்கவேண்டுமென கேட்டறிந்து கொள்ள வேண்டும். பிரச்சனைக்குரிய பக்கவிளைவு ஏதும் ஏற்படின் அது எடுக்கும் மருந்தின் அளவினை பொறுத்து இருக்கலாம், அல்லது தானாகவே மறைந்து விடலாம். சிலவேளை வேறுவகையான மருந்தொன்றுக்கு மாறவேண்டி ஏற்படலாம்.

* ஏனைய சுகயீனங்களுக்குப் பயன்படுத்துகின்ற மருந்துகள் வலிப்பு நோய் மருந்துகளின் செயற்பாட்டை பாதிக்ககூடியன. எனவே வேறு மருந்துகளைப் பயன்படுத்தும் போது அல்லது வைத்தியர் ஒருவரால் வழங்கப்படும் போது வைத்தியர்களிடம் தாங்கள் வலிப்பு நோய் மருந்துகள் பயன்படுத்துவது பற்றி அவசியம் தெரிவிக்க வேண்டும்.

* சில வலிப்பு நோய்க்குரிய மாத்திரைகள் கருத்தடை மாத்திரைகளின் தொழிற்பாட்டைப் பாதிக்கக்கூடியன. எனவே தேவையான கருத்தடை தொழிற்பாட்டைப் பெறுவதற்கு உயர்ந்த அளவிலான கருத்தடை மாத்திரைகளை உட்கொள்ள வேண்டி இருக்கும்.

* நீங்கள்/ நோயாளி கர்ப்பமடைவதற்குத் திட்டமிருப்பின் உங்கள் வைத்தியரிடம் அது பற்றி கூறுவது மிக அவசியம். வலிப்பு நோய் உடையவர்களுக்கு கர்ப்பமடைவதற்கு முன்னான ஆலோசனை மிக அவசியமாகும்.

வலிப்பு நோய்க்குரிய சிகிச்சை முறைகள்.

மருந்துகள் மூலமான சிகிச்சை.

வலிப்பு நோயினை மாத்திரைகள் மூலம் குணப்படுத்த முடியாது. ஆயின் பல்வேறு வகையான மருந்துகள் மூலம் வலிப்பு ஏற்படுவதை கட்டுப்படுத்த அல்லது தடுக்க முடியும். இவை மூளையின் மின்கணத்தாக்க செயற்பாடுகளை சீராகப் பேணுவதன் மூலம்/ நிலைப்படுத்துவதன் மூலம் தொழிற்படுகின்றன. வலிப்பு உருவாவதைத் தடுப்பதற்கு தினமும் இம்மருந்துகளை உட்கொள்ள வேண்டும். 80% ஆனோரில் இம்மருந்துகள் மூலம் வலிப்பானது நன்கு கட்டுப்படுத்தப்படுகிறது. எம்மருந்துகளை எவ்வெவ் நோயாளிகளில் பயன்படுத்துவது என்பதைத் தீர்மானிக்கும் காரணிகள் சில காணப்படுகின்றன. அவையாவன வலிப்பு நோயின் வகை, நோயாளியின் வயது, வேறு பிரச்சனைகளுக்காக பயன்படுத்தும் ஏனைய மருந்துகள் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள், கர்ப்பமுற்றிருத்தல் போன்றவை.

அநேகமானோரில் ஒருவகையான மாத்திரையால் மட்டுமே வலிப்பினை கட்டுப்படுத்த முடியும். முதலில் இயலுமான மிகக்குறைந்த அளவிலான மாத்திரைகளிலேயே ஆரம்பிக்கப்படும். இவ்வாறான அளவிலான மருந்துகள் வலிப்பினைக் கட்டுப்படுத்தாதவிடத்து மருந்தின் அளவு அதிகரிக்கப்படும். சில நோயாளிகளில் வலிப்பு நோயினைக் கட்டுப்படுத்துவதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட/ இருவகையான மாத்திரைகள் தேவைப்படுகின்றன.

வலிப்பு நோய்க்குரிய மருந்துகளை எப்பொழுது ஆரம்பிப்பது என தீர்மானிப்பது கடினமான விடயமாகும். முதன்முதலாக ஏற்படும் வலிப்பானது வலிப்பு நோய் காரணமானது எனக்கூற முடியாது ஏனெனில் மீண்டும் வலிப்பு ஏற்படாதுவிடலாம் அல்லது பல ஆண்டுகளின் பின்னரே ஏற்படலாம். எனவே மாத்திரைகளை வழங்க ஆரம்பிப்பதால் அல்லது ஆரம்பிக்காது விடுவதால் ஏற்படும் நன்மை தீமைகளை ஆரய்ந்த பின்னரே தீர்மானிக்கப்படும்.

பொதுவான வழக்கம் யாதெனில் முதலாவது வலிப்பு ஏற்பட்ட பின் சற்றுப்பொறுத்திருந்து மீண்டும் வலிப்பு ஏற்படுகிறதா என அவதானிக்கப்படும். இரண்டாவது தடவையாக சில மாதங்களுக்குள் வலிப்பு ஏற்படின் மீண்டும் மீண்டும் ஏற்படும் சந்தர்ப்பம் அதிகமாகும். எனவே இரண்டாவது வலிப்பின் பின் அதாவது முதலாவது ஏற்பட்டு 12 மாதங்களுக்குள் ஏற்படின் பொதுவாக மருந்துச்சிகிச்சை ஆரம்பிக்கப்படும். ஆயின் இது ஒரு இறுக்கமான சட்டமல்ல, நோயாளி வைத்தியரிடம் கலந்தாலோசித்து மருந்து சிகிச்சையினை பொருத்தமான சந்தர்ப்பங்களில் ஆரம்பிக்க முடியும்.



வலிப்பு நோய் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 15, 2010 1:27 am


வலிப்பு நோய் – முதலுதவி


* வலிப்பு ஏற்பட்ட நேரத்தை அவதானித்து கொள்ளலாம்.

* நோயாளியை சூழ்ந்து கூட்டமாக நிற்பதை தவிர்க்க வேண்டும்.

* வலிப்பு ஏற்பட்டிருக்கும் போது அந்நபரை இறுகப் பிடிக்க முயற்சிக்க வேண்டாம்.

* வலிப்புக்கு முன்னரான குணங்குறிகள்/ எச்சரிக்கைகள் தென்படின் நபரை பாதுகாப்பான இடத்தில் அமர்த்துதல் அல்லது நகர்த்தல் வேண்டும்.

* வலிப்பு ஏற்பட்டவுடன் நோயாளியை நேரான நிலையில் பற்றிப்பிடித்து வைத்திருக்க முயற்சிக்க கூடாது ஆயின் அவர் சாய்ந்து கொள்ள இடமளிக்க வேண்டும்.

* வலிப்பு ஏற்பட்டவுடன் நோயாளி ஆபத்தான இடமொன்றில் காணப்பட்டாலன்றி அவரை நகர்த்தக் கூடாது. (உ-ம். வீதி, தீயிற்கு அருகில்) முடியுமாயின் ஆபத்தான பொருட்களை சூழலிலிருந்து அகற்றவும்.

* நோயாளியின் வாயினுள் ஏதாவது பொருட்களை உட்செலுத்தவோ அல்லது நாக்கினை பிடித்துக் கொள்ளவோ கூடாது.

* வலிப்பு நிறுத்தப்பட்ட பின், நோயாளியை ஒரு பக்கமாக திருப்பி “மீள்தல் நிலை” இல் வைத்திருத்தல் வேண்டும்.

* சுவாசம் சாதாரண நிலைக்கு திரும்பியதை உறுதிப்படுத்துதல் அவசியம். வலிப்பின் போது சுவாச செயற்பாடு ஒழுங்கற்றதாகவும் சில சந்தர்ப்பங்களில் சில விநாடிகள் நிறுத்தப்படவும் கூடும். வலிப்பு நிறுத்தப்பட்டவுடன் சுவாசம் சாதாரண நிலைக்குத் திரும்பும். இவ்வாறு ஏற்படாதவிடத்து ஏதாவது பொருட்களால் சுவாசப்பாதை தடைப்பட்டுள்ளதா என பரிசோதிக்க வேண்டும். உ-ம். உணவுப் பொருட்கள், பொய்ப்பற்கள் போன்றன. ”மீள்தல் நிலை”யானது உமிழ்நீர் மற்றும் வாயினுள் காணப்படும் பொருட்கள் (உணவு/ வாந்தி) தொண்டையினுள் செல்லாது வாயிலிருந்து வடிந்து வெளியேற உதவுகிறது.

* நோயாளியுடன் கூட இருப்பதும் அளவளாவுவதும் அவசியம். பூரண குணமடையும் வரை நம்பிக்கையூட்ட வேண்டும். பூரணமாக எழுந்து நடமாட சிலமணி நேரம் செல்லக்கூடும். மயக்கமான மற்றும் குழப்பமடைந்த நிலையிலிருக்கும் நோயாளியை தனியே விட்டுச் செல்லக் கூடாது.

* பூரணமாக வலிப்பிலிருந்து மீண்டு வருவதை உறுதிப்படுத்தும் வரை ஆகார பானங்கள் வழங்க வேண்டாம்.

* பின்வருவனவற்றில் ஏதாவது காணப்பட்டாலன்றி உடனடியாக வைத்தியரை அழைக்கவோ/ அம்புலன்ஸ் வண்டியை அழைக்கவோ வேண்டிய அவசியமில்லை.

* முதன்முறையாக வலிப்பு ஏற்படும் போது

* காயம் ஏற்பட்டு அதற்கு சிகிச்சை அளிக்க முடியாதவிடத்து

* சில விநாடிகளில் வலிப்பு நிறுத்தப்படாத போது அல்லது மீண்டும் மீண்டும் தொடர்ந்து ஏற்படும் போது இது ஒரு அவசர நிலையாகும். இந்நிலையில் வலிப்பினை அவசரமாக நிறுத்த வேண்டியது அவசியம்.

* சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும் போது

வலிப்பு நோய்க்குரிய பரிசோதனைகள்

* மூளையின் ஸ்கான் பரிசோதனை – பொதுவாக MRI அல்லது CT ஸ்கான் பரிசோதனைகள் மூலம் மூளையின் வெவ்வேறு பகுதிகளின் கட்டமைப்புக்களை அவதானிக்க முடியும். ஸ்கான் பரிசோதனை எல்லோரிற்கும் அவசியமன்று.

* EEG எனும் மூளையின் மின்கணத்தாக்கங்கள் பற்றிய சோதனை தலையில் வெவ்வேறு இடங்களில் விசேட மின்வாய்களைப் பொருத்துவதன் மூலம் அவை இயந்திரம் ஒன்றுக்கு இணக்கப்பட்டு சிறிய மின்கணத்தாக்க மாற்றங்கள் பெருப்பிக்கப்பட்டு வரைதாளில்/ கணணியில் வரைபடமாக வரையப்படும். இது வலியை ஏற்படுத்தாத சோதனை ஆகும். சில வகையான வலிப்புகள் குறிப்பிட்ட விதமான EEG வரைபடங்களை உருவாக்குகின்றன. ஆயின் அசாதாரணமற்ற வரைபடமானது வலிப்பு நோயினை விலக்காது. அத்துடன் எல்லா EEG வரைபட மாற்றங்களும் வலிப்பு நோயன்று.

* இரத்தப்பரிசோதனைகள்

ஏனைய காரணிகளை ஆரய்வதற்கும் மற்றும் பொதுவான உடல் ஆரோக்கியத்தினை ஆராய்வதற்கும் உதவுகின்றன.

இச்சோதனைகள் உதவிகரமானவையாக இருப்பினும் சாதாரண சோதனை முடிவுகளுடன் வலிப்பு நோய் உருவாகக்கூடும். அத்துடன் மூளை ஸ்கான் பரிசோதனையில் பெறப்படும் அசாதாரண நிலைமைகள் அவை காரணமாகவே வலிப்பு நோய் உண்டாகின்றதென உறுதிப்படுத்தமாட்டா. ஆயின் இவை வலிப்போ அன்றி வேறு ஏதாவது ஒன்றோ எனக் கூறக்கூடியன. முதன்முறையாக வலிப்பு ஒன்று ஏற்பட்டவுடன் வலிப்பு நோய்/ காக்காய் வலிப்பு என நோய் நிர்ணயம் செய்யப்படுவதில்லை. காரணம் வலிப்பு நோய்/ காக்காய் வலிப்பு என்பது மீண்டும் மீண்டும் ஏற்படும் வலிப்பென வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக வைத்தியர் வலிப்பு நோய்/ காக்காய் வலிப்பு என நோய் நிர்ணயம் செய்ய முன் சற்று அவதானித்து மீண்டும் வலிப்பு ஏற்படுகின்றதா என பார்க்க வேண்டி இருப்பதாக கூறுவர்.



வலிப்பு நோய் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 15, 2010 1:30 am


வலிப்பு நோய்/காக்காய் வலிப்பினை நோய் நிர்ணயம் செய்தல்


இது பிரதானமாக நோய்ச் சரிதையை அடிப்படையாகக் கொண்டது. வலிப்பைப் போன்ற ஒன்றோ / வலிப்போ முதன் முதலில் உருவாகும் போது வைத்தியரை நாடி பரிசோதனை மேற் கொள்ளுவது அவசியம். சில வேளைகளில் திட்டமாக ஏற்பட்டிருப்பது வலிப்பு என வைத்தியரால் உறுதிப்படுத்த முடியாதிருக்கும். வலிப்பினை உறுதியாக நோய் நிர்ணயம் செய்வதற்கு மிக முக்கியமான பங்கினை வகிப்பது நோயாளியினால் / நோயாளியுடன் கூட இருந்தவர்களால் வழங்கப்படும் வலிப்பு உருவான விதம் பற்றிய விபரிப்பாகும். வேறுசில நிலைமைகளும் வலிப்புப் போன்று காட்சி தரலாம். உ-ம். மயக்கம், திடீர் பதற்ற நிலைகள், இருதய நோய்கள் காரணமான திடீர்மூர்ச்சை இழப்பு, சிறுவர்களில் மூச்சடக்கம் மற்றும் ஏனையவை.

ஆகவே வலிப்புப் போன்ற நிலமை உருவான விதம் மற்றும் அதன் போக்குப் பற்றிய மிகத் தெளிவான விபரிப்பு வைத்தியர்களுக்கு மிக அவசியமாகும். நோயாளியிடமிருந்தோ அல்லது இந் நிலைமை உருவாவதை நேரில் கண்ட ஒருவரிட மிருந்தோ பெறுவது மிகச் சிறந்ததாகும். விபரிப்பு சரியாக வலிப்பிற்குரியதாக இருக்கலாம்.

* உடல் முழுவதுமான வலிப்பிலே சுயநினையு குறைவடையும் அல்லது இழக்கப்படும்

* வலிப்பின் போது நாக்கினைக்கடித்தல், தன்னைச்சையாக சிறுநீர் வெளியேறல், வாய் மூலமாக நுரை போன்ற பதார்த்தம் வெளியேறல் போன்றன ஏற்படலாம்.

* வலிப்பின் பின் தலைவலி, நித்திரை வருவது போன்ற உணர்வு போன்றன காணப்படும்

* வலிப்பின் பின்னர் வலிப்பின் போது நடைபெற்ற விடையங்கள், அதன் சூழ்நிலை என்பவை பற்றிய ஞாபக மறதி காணப்படும்

* அநேகரில் வலிப்பின் போது முதலில் உடல் இறுக்கமடைந்து பின்னர் நடுக்கங்கள் உருவாகின்ற தன்மை காணப்படுகிறது

ஆயின் சில சந்தர்ப்பங்களில் வைத்தியர்களால் திட்டமாக நோய் நிர்ணயம் செய்ய முடியாது இருக்கும். இவ் வேளைகளில் மூளையினை ஸ்கான் பரிசோதனை செய்தல், EEG மற்றும் இரத்தப் பரிசோதனை போன்றன உதவுகின்றன.

வலிப்பு நோயின் குணங்குறிகள்

* வலிப்பு ஏற்படும் போது அதனை அவதானித்த நபரிடமிருந்து நோய்ச்சரிதை பெற்றுக்கொள்ளப்படும்.

* உடல் முழுவதுமான வலிப்பிலே சுயநினைவு குறைவடையும் அல்லது இழக்கப்படும்

* வலிப்பின் போது நாக்கினைக்கடித்தல், தன்னைச்சையாக சிறுநீர் வெளியேறல், வாய் மூலமாக நுரை போன்ற பதார்த்தம் வெளியேறல் போன்றன ஏற்படலாம்.

* வலிப்பின் பின் தலைவலி, தூக்கம் ஏற்படுவது போன்ற உணர்வு போன்றன காணப்படும்

* வலிப்பின் பின்னர் வலிப்பின் போது நடைபெற்ற விடையங்கள், அதன் சூழ்நிலை என்பவை பற்றிய ஞாபக மறதி காணப்படும்

* அநேகரில் வலிப்பின் போது முதலில் உடல் இறுக்கமடைந்து பின்னர் நடுக்கங்கள் உருவாகின்ற போதிலும் வலிப்பனது பல்வேறு விதமாக உருவாகலாம். உ-ம் இயங்கிக் கொண்டிருக்கும் நபர் சடுதியாக கணப்பொழுதிற்கு தமது செயற்பாடுகளை நிறுத்தி பின்னர் மீண்டும் அவற்றை தொடர்ந்து செல்வார்

* சிக்கலான பகுதிக்குரிய வலிப்பு – கை கால்களில் அசாதாரண அசைவுகள், நாக்கு, வாய் என்பவற்றை அசாதாரணமாக அசைத்தல், புலனங்கங்களில் அசாதாரண உணர்ச்சிகள் உணரப்படல் போன்றவை காணப்படும்.

* மனநோய்க் குணங்குறிகள் - சுயநினைவிழத்தல், அசாதாரண பயம் போன்றவை காணப்படலாம்

* குடும்பச்சரிதையிலே வலிப்பு நோய் காணப்படலாம்.

* சில சந்தர்ப்பங்களில் வலிப்பனது சில காரணிகளால் தூண்டப்படலாம் - நித்திரையின்மை, மிதமிஞ்சிய ம்துப்பாவனை, மருந்து வகைகள் சில போன்றன.

* ஏனைய வலிப்பு நோயாக இருக்கக் கூடிய குணங்குறிகள்

* சடுதியாக விழுதல்

* கை கால்களில் அசாதாரன இயக்கங்கள்

* சடுதியாக எற்படும் சிந்தனை வெற்றிடங்கள்

* காரணமறியப்படாத சடுதியாக ஏற்படும் தன்னிச்சையாக சிறுநீர் கழிக்கும் பழக்கம்

* தூக்கத்தின் போது மேற்கொள்ளும் அசாதாரண நடவடிக்கைகள்

* நடத்தை மாற்றங்கள், சிந்தனைக்குழப்பம், சுயநினைவிழத்தல் போன்றன.



வலிப்பு நோய் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 15, 2010 1:30 am

வலிப்பு நோயிற்குரிய காரணங்கள்

* அநேகமானவை காரணம் கண்டறியப்படாதவை

* ஏனைய குணங்குறிகளுடன்கூடிய வலிப்புநோய்.

சில நோயாளிகளில் வேறு மூளைப்பாதிப்புகள் வலிப்பு நோயினை ஏற்படுத்துகின்றன. இவற்றில் சில பிறக்கும்போதே காணப்படுகின்றன. சில பின்னர் உருவாகின்றன. இவ்வாறான பல அசாதாரண நிலைகள் உள்ளன.

* மூளையின் குருதிச் சுற்றோட்டம் தொடர்பானவை - குருதிக்கலன்களினுள் குருதி உறைதல் அல்லது குருதிக்கலன்களின் சுவரினூடான இரத்தக் கசிவு

* தலையில் தீவிரகாயம் - 30 நிமிடங்களுக்கு மேலாக சுயநினைவிழத்தல், ஞாபகமறதி, பகுதிக்குரிய நரம்பியல் குணங்குறிகள்

* மூளை தொடர்பான சத்திரசிகிச்சைகளின் பின்னர்

* வயது முதிர்ச்சி காரணமாக ஏற்படும் மூளைப்பாதிப்பு - அல்ஸைமர் நோய், பல நுண்ணிய குருதுக்கலன்களினுள் ஏற்படும் குருதிஉறைதல்கள்

* தன்நிர்ப்பீடனத்தாக்க நோய்கள்

* மூளைப்புற்று நோய்

* சில பாரம்பரியநோய்கள்

* சில மருந்து வகைகள், மிதமிஞ்சிய மதுப்பாவனை, போதைப் பொருட்கள், சடுதியாக மதுபானத்தை நிறுத்துதல்

* அநுசேப நோய்கள் - சிறுநீரக செயலிழப்பு, குருதி குளுக்கோஸ் மட்டம் குறைவடைதல், குருதி சோடியம் அதிகரித்தல், கல்சியம் அதிகரித்தல் அல்லது குறைதல்

* சில மூளை தொடர்பான இவ்வாறான பாதிப்புகள் வலிப்பினை மட்டும் உருவாக்கலாம். ஏனையவை வலிப்புடன் ஏனைய குணங்குறிகளையும் உருவாக்கலாம்.

* தற்காலத்தில் நவீன ஸ்கான் பரிசோதனைகள் மற்றும் ஏனைய சோதனைகள் மூலம் இம் மூளை தொடர்பான பாதிப்புக்களை அறியக்கூடியதாக உள்ளது. உ-ம். சிறிய காயத் தழும்பு அல்லது குருதிக் குழாய்களில் சிறு மாற்றங்கள்.



வலிப்பு நோய் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 15, 2010 1:33 am

வலிப்பின் பிரிவுகள்



வலிப்புகளைப் பிரதானமாக இரு வகைப்படுத்தலாம்.

· உடல் முழுவதுமான வலிப்பு

· பகுதியான வலிப்பு.

காக்காய் வலிப்பின் போது ஒரே வகையான வலிப்புகள் மீண்டும் மீண்டும் உருவாகும். ஆயின் சிலரில் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு வகையான வலிப்புகள் உருவாகின்றன.

உடல் முழுவதுமான வலிப்பின் வகைகள்

உடல் விறைப்பு நடுக்கத்துடன் கூடிய வலிப்பு (Tonit clonic seizure)

மிக அதிகமானோரில் காணப்படும் உடல் முழுவதுமான வலிப்பு ஆகும். வலிப்பின் போது உடல் விறைப்படைகிறது, மூர்ச்சை இழக்கப்படுகிறது, தசைச் சுருக்கங்கள் காரணமாகப் உடல் நடுக்கங்கள் ஏற்பட ஆரம்பிக்கின்றன.

சடுதியான மூர்ச்சை இழப்புடன் கூடிய வலிப்பு (Absense seizure)

மற்றுமொரு வகையான உடல் முழுதுமான வலிப்பாகும். இதன் போது மிகச்சொற்ப நேரத்துக்கு மூர்ச்சை இழத்தல் ஏற்படுகிறது. ஆயின் தசைச் சுருக்கங்கள் காரணமான உடல் நடுக்கங்கள் காணப்படாது. இது பொதுவாக சில செக்கன்களே நீடிக்கும். இது பிரதானமாக சிறிவர்களிலேயே ஏற்படுகிறது.

தசைச் சுருக்கத்துடனான வலிப்பு. (Myoclonic seizure)

சடுதியாக ஏற்படும் தசைச் சுருக்கங்கள் காரணமாக ஏற்படும் திடீர் அங்க அசைவுகளாகும். இது முழு உடலையும் பாதிக்கலாம். ஆயின் பொதுவாக ஒருபக்கத்திற்குரிய கைகளிலோ இரு கைகளிலுமோ ஏற்படுகிறது.

விறைப்படைகின்ற வலிப்பு (Tonic seizure)

இது சொற்ப நேர மூர்ச்சை இழப்பினை ஏற்படுத்தும். அத்துடன் அந்நபரில் உடல் விறப்படைந்து கீழே விழக்கூடும்.

சடுதியான நிறுத்த வலிப்பு (Atonic seizure)

இது தொடர்ந்து நடக்க முடியாத நிலையினையும் மயக்க நிலையினையும் ஏற்படுத்தும். பொதுவாக சொற்ப நேர மூர்ச்சை இழப்பினையே ஏற்படுத்தும்.

மூலம்: http://wedananasala.org/



வலிப்பு நோய் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Nov 15, 2010 1:35 am

மிக மிகப் பயனுள்ள கட்டுரை.. பதிவுக்கு நன்றி சிவா.



வலிப்பு நோய் Aவலிப்பு நோய் Aவலிப்பு நோய் Tவலிப்பு நோய் Hவலிப்பு நோய் Iவலிப்பு நோய் Rவலிப்பு நோய் Aவலிப்பு நோய் Empty
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக