புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 5:06 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 4:48 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 1:57 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 10:52 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:01 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 9:51 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 8:11 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:36 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 3:21 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 1:11 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 12:30 pm

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 8:48 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 8:34 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 6:09 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 12:01 pm

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 10:18 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:48 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:41 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:38 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:36 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:34 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 3:04 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 3:02 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 9:43 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 9:37 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 9:35 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 8:41 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 8:40 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:56 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:43 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:28 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 2:03 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:57 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வலிமையான பெட்டி Poll_c10வலிமையான பெட்டி Poll_m10வலிமையான பெட்டி Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
வலிமையான பெட்டி Poll_c10வலிமையான பெட்டி Poll_m10வலிமையான பெட்டி Poll_c10 
66 Posts - 43%
mohamed nizamudeen
வலிமையான பெட்டி Poll_c10வலிமையான பெட்டி Poll_m10வலிமையான பெட்டி Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
வலிமையான பெட்டி Poll_c10வலிமையான பெட்டி Poll_m10வலிமையான பெட்டி Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
வலிமையான பெட்டி Poll_c10வலிமையான பெட்டி Poll_m10வலிமையான பெட்டி Poll_c10 
1 Post - 1%
Kavithas
வலிமையான பெட்டி Poll_c10வலிமையான பெட்டி Poll_m10வலிமையான பெட்டி Poll_c10 
1 Post - 1%
சிவா
வலிமையான பெட்டி Poll_c10வலிமையான பெட்டி Poll_m10வலிமையான பெட்டி Poll_c10 
1 Post - 1%
bala_t
வலிமையான பெட்டி Poll_c10வலிமையான பெட்டி Poll_m10வலிமையான பெட்டி Poll_c10 
1 Post - 1%
prajai
வலிமையான பெட்டி Poll_c10வலிமையான பெட்டி Poll_m10வலிமையான பெட்டி Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
வலிமையான பெட்டி Poll_c10வலிமையான பெட்டி Poll_m10வலிமையான பெட்டி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலிமையான பெட்டி Poll_c10வலிமையான பெட்டி Poll_m10வலிமையான பெட்டி Poll_c10 
297 Posts - 42%
heezulia
வலிமையான பெட்டி Poll_c10வலிமையான பெட்டி Poll_m10வலிமையான பெட்டி Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
வலிமையான பெட்டி Poll_c10வலிமையான பெட்டி Poll_m10வலிமையான பெட்டி Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
வலிமையான பெட்டி Poll_c10வலிமையான பெட்டி Poll_m10வலிமையான பெட்டி Poll_c10 
27 Posts - 4%
sugumaran
வலிமையான பெட்டி Poll_c10வலிமையான பெட்டி Poll_m10வலிமையான பெட்டி Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
வலிமையான பெட்டி Poll_c10வலிமையான பெட்டி Poll_m10வலிமையான பெட்டி Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வலிமையான பெட்டி Poll_c10வலிமையான பெட்டி Poll_m10வலிமையான பெட்டி Poll_c10 
6 Posts - 1%
prajai
வலிமையான பெட்டி Poll_c10வலிமையான பெட்டி Poll_m10வலிமையான பெட்டி Poll_c10 
5 Posts - 1%
Kavithas
வலிமையான பெட்டி Poll_c10வலிமையான பெட்டி Poll_m10வலிமையான பெட்டி Poll_c10 
4 Posts - 1%
manikavi
வலிமையான பெட்டி Poll_c10வலிமையான பெட்டி Poll_m10வலிமையான பெட்டி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வலிமையான பெட்டி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 26, 2009 7:35 pm

வலிமையான பெட்டி
----------------------------------------------------------------
ஹலஸ் மாரிஸ்
தமிழில்:ஜெய்

ஹலஸ் மாரிஸ் (Hyllus Marris)

சாப்பர்மன் என்ற நகரில் போர்தா போர்தா என்ற அபார்ஜினியப் பழங்குடியில் பிறந்த இவர் தன்னுடைய வாழ்நாள் இறுதிவரை விக்டோரியா நகரில் பணி புரிந்து வந்தார். அபார்ஜினப் பழங்குடியினருக்கென்று (Worawa College) வொராவா கல்லூரி என்ற கல்லூரி ஒன்றை நிறுவினார். கவிதைகள், சிறுகதைகள் தவிர, ஆஸ்திரேலியாவில் உள்ள கறுப்பர்கள் அங்கு இருக்கிற வெள்ளையரோடு கொண்டுள்ள உறவைப் பற்றி சோனியா போர்க் என்ற பெண்மணியுடன் இணைந்து தொலைக்காட்சித் தொடர் ஒன்றையும் உருவாக்கியுள்ளார். இதனையே தற்போது ஒரு புதின வடிவில் 'Women of the sun' என்ற நூலாக மாற்றிக் கொண்டிருக்கிறார்.



--------------------------------------------------------------------------------

அது சாவிக் கொத்துக்கள் அடங்கிய ஒரு சிறிய குன்று. அதன் மீதுதான் நாங்கள் நின்று கொண்டிருக்கிறோம். அந்த மலைக்குக் கொஞ்சம் மேலே 'கறுப்பர்கள்' என்று குறிக்கப்பட்ட பெரிய பெட்டி ஒன்று இருக்கிறது. அந்தப் பெட்டியினுள் நகர்ந்து கொண்டிருக்கும் அனைவரும் 'இங்கே ஒரே இருட்டா இருக்கே', 'ஐயோ எங்களுக்குப் பசிக்கிறதே!' என்று கூச்சலிடுவதை என்னால் கேட்க முடிகிறது. அந்தப் பெட்டியினுள் உணவேதும் இல்லை. அவர்களில் பலர் நோய்வாய்ப் பட்டுள்ளார்கள். அவர்களிடம் துணிமணி கிடையாது. செருப்பு கிடையாது. குழந்தைகள் பலர் இறந்து கொண்டிருக்கின்றனர்.

அந்தப் பெட்டியில் கம்பி போட்ட ஜன்னல் ஒன்று உள்ளது. உள்ளே இருப்பவர்கள் இந்த ஜன்னல் வழியே கைகளை வெளியே நீட்ட முடியும். சில சமயம் அவர்களுக்கு உணவு கிடைக்கும் ஆனால் போதுமான உணவோ, தேவையான துணிமணியோ எல்லோருக்கும் கிடைக்காது. சில சமயம் பீரும் ஒயினும்கூட கிடைக்கும்.

ஆனால் வெளிச்சம் என்பதே கிடையாது. ஒரே கும்மிருட்டு. அவர்கள் எல்லோரும் இருட்டில் முட்டி மோதிக் கொள்கிறார்கள். அவர்கள் ஒரே கும்பலாக இருக்கிறார்கள். போதிய படுக்கைகள் இல்லாததால், அதிலுள்ள பெரியவர்களும் குழந்தைகளும் கண்ட இடங்களில் படுத்துக் கிடக்கின்றனர்.

அந்தச் சாவிக் கொத்தில் ஒன்று மட்டும்தான் அந்தப் பெட்டியின் பூட்டைத் திறக்கும். அது ஒன்றுமட்டும்தான் அவர்களுக்குச் சுதந்திரத்தையும், மன நிம்மதியையும் உடல் நலனையும் கொடுக்கும். திறவுகோலாக பெட்டியினுள் உள்ள அபார்ஜினர்கள் இந்தச் சாவியைத்தான் தேடிக் கொண்டிருக்கின்றனர். அங்கும் இங்கும் ஓடி ஓடி ஒவ்வொரு சாவியாக எடுத்து அந்தப் பூட்டை திறக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். பலபேர் அந்தப் பூட்டைத் திறக்க முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். பின் கொஞ்சம் கொஞ்சமாய் தங்கள் முயற்சியைக் கைவிட்டு விட்டார்கள். இப்போது ஒரு சிலர் மட்டுமே முயன்று கொண்டிருக்கின்றனர்.

அந்தப் பெட்டியின் மேல்தளத்தின் மீதுதான் இந்த வெள்ளையன் அமர்ந்திருக்கிறான். அவனுக்குத்தான் சரியான சாவி எதுவெனத் தெரியும். ஏனென்றால் அவன்தான் இவர்களை அந்தப் பெட்டியினுள் அடைத்து, சாவியை மறைத்து வைத்தவன். ஒவ்வொரு முறையும் இந்த வெள்ளையன் தனது வேஷத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறான். சில சமயம் அக்கறை உள்ளவன் மாதிரியும் சில சமயம் அநியாயத்திற்குக் குரல் கொடுப்பவன் மாதிரியும் வேஷம் போடுகிறான். அவன் எத்தனை தடவை வேஷத்தை மாற்றினாலும், பெட்டியினுள் இருப்பவர்களின் நிலைமை அதே மாதிரிதான் இருக்கிறது.

அந்தப் பெட்டியினுள் உள்ளவர்கள் இடிபட்டு முனகுவதை அவனால் கேட்க முடிகிறது. அந்த வெள்ளையன் வெகு காலமாக அந்தப் பெட்டியின் மீது அமர்ந்திருப்பதாலும், அவன் மீது கொண்ட பயத்தாலும், அவனைக் கூப்பிடவோ அவனிடம் உரக்கப் பேசவோ அவர்கள் பயந்தார்கள். தாங்கள் உதவி கேட்டுக் கதறுவதை அவன் கேட்டுவிடக் கூடுமோ என அவர்கள் அஞ்சினார்கள். எப்போதெல்லாம் அவர்கள் கதறுகிறார்களோ அப்போதெல்லாம் அவர்களுக்கெதிராக அவன் ஏதாவதொரு ஆயுதத்தைப் பயன்படுத்துகிறான்.

அவனுக்கு வேண்டிய ஆயுதங்களையே அவன் கண்டுபிடிக்கிறான். அந்த ஆயுதங்கள் யாவும் பண வடிவிலேயே இருக்கும். அந்தப் பெட்டியின் தலைப் பகுதியில் உள்ள ஒரு சிறிய ஓட்டையின் வழியாக அவன் நாணயத்தைப் போடுவான். ( பண ரூபத்தில் ஒளி வருவதாக நினைத்து பெட்டியினுள் விழும் அந்த நாணயத்தைப் பிடிக்க அவர்கள் முயல்வார்கள்) ஆனால் அது அவர்களில் கைப்பட்டு நழுவி பெட்டியின் கீழ்ப்பாகத்தில் உள்ள ஏதாவது ஒரு ஓட்டையின் வழியே வெளியே விழுந்து விடும். அந்த வெள்ளையனுக்கும் இது நன்றாகவே தெரியும். ஏனென்றால் யார் கைக்கும் கிடைக்காமல் அது நேராகக் கீழே போய் விழுமாறு அந்தப் பெட்டியை வடிவமைத்ததே அவன்தான்.

சாவிக் கொத்தை வைத்துப் போராடிக் கொண்டிருந்த அந்தக் கூலி இனத்தவர் சில சமயம் அதிலுள்ள தாழ்பாளைக் கழற்றி, மற்றவர் வெளியே வர உதவும் பொருட்டு, தங்கள் கைகளை வெளியே நீட்டுவார்கள். ஆனால் அந்த வெள்ளையன் கதவுகளை அடைப்பதுடன் அவர்களின் விரல்களையும் துண்டிக்க முயற்சிக்கிறான். தங்கள் விரல்களும் துண்டிக்கப்பட்டு விடுமோ என்ற பயத்தில் பெட்டியினுள் இருப்பவர்கள் தங்கள் கைகளை வெளியே நீட்ட மாட்டார்கள்.

வெளியே இருக்கிற மற்ற கூலி இனத்தவர்கள் அந்தச் சாவிக் கொத்தில் சரியான சாவியைத் தேடிக் கொண்டிருப்பார்கள். அந்தப் பெட்டியின் மீது உட்கார்ந்திருக்கும் அந்த வெள்ளையன் புன்னகைத்துக் கொண்டிருப்பான். ஏனென்றால் அந்தச் சாவி எங்கிருக்கிறது என்பது அவனுக்கு மட்டுமே தெரியும்.

என்றாவது ஒருநாள் அவர்கள் எல்லா சாவிகளையும் போட்டுப் பார்த்து சரியான சாவியைக் கண்டுபிடித்து அந்தப் பெட்டியைத் திறந்து விடுவார்கள். அப்போது சுதந்திரமடைவார்கள்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jul 26, 2009 8:46 pm

இது கதை தானா இல்லை உண்மையா நம்ப முடியாத அளவிற்கு இருக்கிறது.......... இப்படி 1 வெள்ளையனா ....

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக