புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காமராஜர் காரின் பரிதாப நிலை Poll_c10காமராஜர் காரின் பரிதாப நிலை Poll_m10காமராஜர் காரின் பரிதாப நிலை Poll_c10 
21 Posts - 66%
heezulia
காமராஜர் காரின் பரிதாப நிலை Poll_c10காமராஜர் காரின் பரிதாப நிலை Poll_m10காமராஜர் காரின் பரிதாப நிலை Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காமராஜர் காரின் பரிதாப நிலை Poll_c10காமராஜர் காரின் பரிதாப நிலை Poll_m10காமராஜர் காரின் பரிதாப நிலை Poll_c10 
63 Posts - 64%
heezulia
காமராஜர் காரின் பரிதாப நிலை Poll_c10காமராஜர் காரின் பரிதாப நிலை Poll_m10காமராஜர் காரின் பரிதாப நிலை Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
காமராஜர் காரின் பரிதாப நிலை Poll_c10காமராஜர் காரின் பரிதாப நிலை Poll_m10காமராஜர் காரின் பரிதாப நிலை Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
காமராஜர் காரின் பரிதாப நிலை Poll_c10காமராஜர் காரின் பரிதாப நிலை Poll_m10காமராஜர் காரின் பரிதாப நிலை Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காமராஜர் காரின் பரிதாப நிலை


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 15, 2010 10:36 am

தமிழக முதல்வராக 9 ஆண்டுகள் இருந்தவர் "கறை' படியாத "கை'க்கு சொந்தக்காரரான காமராஜர். ஆனால், அவர் பயன்படுத்திய கார் "கறை' படிந்து, பார்வையாளர்களைக் கண்ணீர் சிந்த வைக்கும் நிலையில் பரிதாபமாக காணப்படுகிறது.

÷"எம்.டி.டி. 2727' என்ற எண் கொண்ட இந்த கறுப்பு நிற "செவர்லட்' கார், தொழிலதிபர் டி.வி.சுந்தரம் அய்யங்காரால் அன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த காமராஜருக்கு வழங்கப்பட்டது. இந்தக் காரில்தான் தமிழகம் முழுவதும் சுற்றி வந்து கட்சிப் பணியாற்றினார் காமராஜர்.

÷கார் பயணத்தில் காமராஜரின் சாதனை: 1954}ல் தமிழக முதல்வரான பிறகும், அரசால் வழங்கப்படும் காரை பயன்படுத்தாமல் தனது செவர்லட் காரிலேயே தமிழகம் முழுவதும் பயணித்தார்.

÷பாமர மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்த காமராஜர், தான் பெறாத கல்வியறிவை தமது மக்கள் பெறவேண்டும் என்று எண்ணினார். அதன் விளைவாக தோன்றியதுதான் இலவசக் கல்வி, மதிய உணவு மற்றும் சீருடைத் திட்டங்கள். இலவசக் கல்வியும், உணவும் மட்டுமே போதாது என்று நினைத்த காமராஜர், கிராமம்தோறும் பள்ளிக்கூடங்களை நிறுவி, மக்களிடையே கல்வியை வளர்த்தார்.

÷விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் ஏராளமான அணைகளை ஏற்படுத்தினார். தொழிற்சாலைகள், சிமென்ட் சாலைகள் என பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தனது 9 ஆண்டுகால ஆட்சியின் போது செயல்படுத்தி வெற்றி கண்டார்.

÷1963}ம் ஆண்டு முதல்வர் பதவியில் இருந்து விலகி கட்சிப் பணியில் ஈடுபட்டபோதும் இதே காரில்தான் தமிழகத்தை வலம் வந்தார் காமராஜர்.

÷பின்பு இந்திரா காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஸ்தாபன காங்கிரûஸ ஏற்படுத்தி, அதை வலுப்படுத்த அவர் எடுத்துக் கொண்ட முயற்சியின்போதும் இந்தக் காரில்தான் தமிழகம் முழுவதும் பயணம் செய்துள்ளார்.

÷கார் விற்பனை: அதன்பின்பு பல்வேறு இன்னல்களைச் சந்தித்த காமராஜர், 1975 அக்டோபர் 2-ம் தேதி இவ்வுலக வாழ்வில் இருந்து விடை பெற்றார். அவருக்கு பிறகு பி. ராமச்சந்திரன் தலைமையில் குமரி அனந்தன் உள்ளிட்டோர் ஸ்தாபன காங்கிரûஸ நிர்வகித்தனர்.

÷அப்போது கட்சியை நடத்த பணம் இல்லாமல் காமராஜர் தனது வாழ்நாளில் சேகரித்து வைத்திருந்த செய்தித்தாள்கள் உள்ளிட்ட பல்வேறு வரலாற்று பொக்கிஷங்கள் விற்பனை செய்யப்பட்டன.

÷இறுதியில் காமராஜர் பயன்படுத்திய காரை, சென்னையைச் சேர்ந்த காப்பித் தூள் வியாபாரி சோமசுந்தர நாடாரிடம் விலை பேசி, ரூ.2 ஆயிரத்தை முன் பணமாகவும் பெற்றனர்.

÷கண்ணதாசன் குமுறல்: முன் பணத்தைப் பெற்றுக் கொண்டு ராமச்சந்திரன், குமரி அனந்தன் உள்ளிட்டோர் கட்சி வளர்ச்சிப் பணிக்காக சேலம் சென்றிருந்தனர். இதற்கிடையில் காமராஜர் கார் விற்கப்பட்டதைக் கேள்விப்பட்ட கவிஞர் கண்ணதாசன், "கார்முகில் வண்ணன் கண்ணபிரான் ஏறிய தேரில், காப்பித் தூள் கடைக்காரரா..!' என்று தான் நடத்தி வந்த தென்றல் பத்திரிகையில் கவிதை ஒன்றை தீட்டினார்.

÷கார் மீட்பு: சேலத்தில் கட்சிப் பணியில் ஈடுபட்டிருந்த ராமச்சந்திரன், குமரி அனந்தன் ஆகியோர் கண்ணதாசனின் கவிதையை பத்திரிகையில் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே, சோமசுந்தர நாடாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, "காரை சத்தியமூர்த்தி பவனில் கொண்டுபோய் நிறுத்திவிடுங்கள்; நாங்கள் சென்னை வந்ததும் நீங்கள் கொடுத்த முன்பணத்தை திருப்பி தந்துவிடுகிறோம்' என்று தெரிவித்தனர்.

÷இதைத் தொடர்ந்து சோமசுந்தர நாடாரும், அவர்கள் கூறியபடியே காரை சத்தியமூர்த்தி பவனில் ஒப்படைத்தார். அன்றைய தினம் சேலத்தில் நடந்த கட்சிக் கூட்டத்தில் காரை மீட்க தொண்டர்களிடம் துண்டு ஏந்தி நிதி திரட்டப்பட்டது. அவ்வாறு திரட்டப்பட்ட நிதியில் இருந்து ரூ.2 ஆயிரம் பணத்தை சென்னை திரும்பியதும் சோமசுந்தர நாடாரிடம் ஒப்படைத்தனர்.

÷பாழடைந்த கூண்டுக்குள்: கட்சியை நடத்த நிதியில்லாமல் காப்பித் தூள் கடைக்காரர் வரை சென்று பல இன்னல்களை சந்தித்த கர்ம வீரரின் கார் இன்றும் அவரது நினைவாக சென்னை காமராஜர் அரங்கத்தின் பின் பக்க நுழைவாயில் அருகே பரிதாபமான நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

÷காரை நிறுத்துவதற்காக கட்டப்பட்டுள்ள அறை (கூண்டு) முழுவதும் பாழடைந்து, தூசி படிந்து பார்வையாளர்களை மிரட்டுகிறது. காரின் நிலை இன்னும் மோசமாக உள்ளது. காரில் கை வைத்தால் விரல் அப்படியே பதியும் அளவுக்கு தூசி படிந்து, நூலாம்படை போர்த்தப்பட்ட நிலையில் உள்ளது. சக்கரங்கள் பராமரிப்பின்றி உள்ளதால் கட்டைகளை வைத்து முட்டு கொடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

÷நிதி பற்றாக்குறையா? வருடம் முழுவதும் பல பிரபலங்களின் நிகழ்ச்சிகள் காமராஜர் அரங்கில் நடைபெறுவதால், காரை பராமரிக்க நிதி இல்லை என்று சொல்வதற்கு இடமே இல்லை. காரை பராமரித்து பழமை மாறாமல் பாதுகாக்க தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதாக ஒரு அறிக்கை விட்டால், பலர் நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டு முன் வருவார்கள்.

÷இதையெல்லாம் விடுத்து காரை காயலான் கடைப் பொருளை விட மோசமான நிலையில் நிறுத்தி வைத்திருப்பது சரியா என்பது காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கே வெளிச்சம். காரை பராமரிப்பது எப்படி என்று சென்னை தியாகராய நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லம் சென்று அவரது காரை ஒரு முறையாவது பார்த்து வந்தால் விடை கிடைக்கும்.

÷காமராஜரின் 108-வது பிறந்தநாளை வியாழக்கிழமை (ஜூலை 15) கொண்டாடும் கட்சியினர் காரை பராமரிப்பது குறித்து சிந்திப்பதுடன், அரங்குக்குள் நுழைந்ததும் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் காரை நிறுத்த மாற்று இடம் ஒதுக்குவது குறித்தும் சிந்திப்பார்களா?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Jul 15, 2010 10:50 am

அயராது, உண்மையய் உழைத்து, 'உயர்ந்த' மனிதர்க்கு தலை வணக்குவோம். காமராஜர் காரின் பரிதாப நிலை 678642 காமராஜர் காரின் பரிதாப நிலை 678642

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Jul 15, 2010 11:19 am

காமராஜர் காரின் பரிதாப நிலை 678642

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jul 15, 2010 12:10 pm

V.Annasamy wrote:அயராது, உண்மையய் உழைத்து, 'உயர்ந்த' மனிதர்க்கு தலை வணக்குவோம். காமராஜர் காரின் பரிதாப நிலை 678642 காமராஜர் காரின் பரிதாப நிலை 678642

காமராஜர் காரின் பரிதாப நிலை 678642 காமராஜர் காரின் பரிதாப நிலை 678642 காமராஜர் காரின் பரிதாப நிலை 678642 காமராஜர் காரின் பரிதாப நிலை 154550




காமராஜர் காரின் பரிதாப நிலை Power-Star-Srinivasan
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010
http://www.doctorrajmohan.blogspot.com

Postdrrajmohan Thu Jul 15, 2010 12:14 pm

நானும் பார்த்தேன் . மிக மோசமானநிலையில் தான் உள்ளது . அவரின் கருத்துகளும் காற்றில் கரைந்து போய் விட்டது



!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Jul 15, 2010 12:22 pm

பிளேடு பக்கிரி wrote:
V.Annasamy wrote:அயராது, உண்மையய் உழைத்து, 'உயர்ந்த' மனிதர்க்கு தலை வணக்குவோம். காமராஜர் காரின் பரிதாப நிலை 678642 காமராஜர் காரின் பரிதாப நிலை 678642

காமராஜர் காரின் பரிதாப நிலை 678642 காமராஜர் காரின் பரிதாப நிலை 678642 காமராஜர் காரின் பரிதாப நிலை 678642 காமராஜர் காரின் பரிதாப நிலை 154550

காமராஜர் காரின் பரிதாப நிலை 678642 நண்பா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக