புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிங்கம்புணரி வரலாறு Poll_c10சிங்கம்புணரி வரலாறு Poll_m10சிங்கம்புணரி வரலாறு Poll_c10 
78 Posts - 49%
heezulia
சிங்கம்புணரி வரலாறு Poll_c10சிங்கம்புணரி வரலாறு Poll_m10சிங்கம்புணரி வரலாறு Poll_c10 
62 Posts - 39%
T.N.Balasubramanian
சிங்கம்புணரி வரலாறு Poll_c10சிங்கம்புணரி வரலாறு Poll_m10சிங்கம்புணரி வரலாறு Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
சிங்கம்புணரி வரலாறு Poll_c10சிங்கம்புணரி வரலாறு Poll_m10சிங்கம்புணரி வரலாறு Poll_c10 
6 Posts - 4%
prajai
சிங்கம்புணரி வரலாறு Poll_c10சிங்கம்புணரி வரலாறு Poll_m10சிங்கம்புணரி வரலாறு Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
சிங்கம்புணரி வரலாறு Poll_c10சிங்கம்புணரி வரலாறு Poll_m10சிங்கம்புணரி வரலாறு Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சிங்கம்புணரி வரலாறு Poll_c10சிங்கம்புணரி வரலாறு Poll_m10சிங்கம்புணரி வரலாறு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிங்கம்புணரி வரலாறு Poll_c10சிங்கம்புணரி வரலாறு Poll_m10சிங்கம்புணரி வரலாறு Poll_c10 
120 Posts - 53%
heezulia
சிங்கம்புணரி வரலாறு Poll_c10சிங்கம்புணரி வரலாறு Poll_m10சிங்கம்புணரி வரலாறு Poll_c10 
83 Posts - 37%
T.N.Balasubramanian
சிங்கம்புணரி வரலாறு Poll_c10சிங்கம்புணரி வரலாறு Poll_m10சிங்கம்புணரி வரலாறு Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
சிங்கம்புணரி வரலாறு Poll_c10சிங்கம்புணரி வரலாறு Poll_m10சிங்கம்புணரி வரலாறு Poll_c10 
8 Posts - 4%
prajai
சிங்கம்புணரி வரலாறு Poll_c10சிங்கம்புணரி வரலாறு Poll_m10சிங்கம்புணரி வரலாறு Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
சிங்கம்புணரி வரலாறு Poll_c10சிங்கம்புணரி வரலாறு Poll_m10சிங்கம்புணரி வரலாறு Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சிங்கம்புணரி வரலாறு Poll_c10சிங்கம்புணரி வரலாறு Poll_m10சிங்கம்புணரி வரலாறு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கம்புணரி வரலாறு


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jul 05, 2009 6:55 pm

சிங்கம்புணரி

மதுரை, சிவகங்கை அருகே உள்ள ஓர் அழகிய நகரம் சிங்கம்புணரி. இங்கு 25,000 மக்கள் வசிக்கின்றனர்.

பிசினஸ்

இங்கு கயிறு அதாவது கொச்சை கயிறு ரொம்ப பேமஸ், அது இங்கு தான் தயாரிக்கப் படுகிறது. தென்னை மட்டையில் இருந்து நார் எடுத்து அதிலிருந்து இந்த கயிறு தயாரிக்கப்படுகிறது. இதனை பல நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்கிறார்கள். இதனை நம்பி இங்கு பல குடும்பங்கள் வாழ்கின்றன.

அடுத்து இங்கு Madras Foregings Ltd , Tamilnadu Gears, kannan industrials என பல மோட்டார் சம்பந்தப்பட்ட உதிரி பாகங்கள் தயாரிக்க கூடிய பேக்டரிகளும் உள்ளன.

இங்கு முன் Enfiled என்ற ஒரு புல்லட் பேக்டரியும் இருந்தது. நீங்கள் அதனை அறிந்திருப்பீர்கள்

கோவில்

இங்கு வாத்தியார் அய்யா கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. சன் டிவி மற்றும் பல நாளிதல்களில் வலம் வந்துள்ளார் வாத்தியார் அய்யா...... இவர் ஒரு சித்தர் . உயிரோடு இருக்கும் போதே ஜீவ சமாதியாக இருந்து விட்டார் அதன் பின் ஒரு ஆலயமாக எழுப்பி இவரை வணங்கி வருகின்றனர்.

அடுத்து சேவுகமூர்த்தி அய்யனார் கோவில் மிகவும் பிரபலம். இங்கு வைகாசித் திருவிழா 10 நாள் நடக்கும் . அனைத்து தினங்களும் மிகவும் பிரசித்தி பெற்றதாகும் அதிலூம் 9ம் திருவிழா அன்று தேர்த்திருவிழா நடக்கும். 10ம் திருவிழா அன்று பூப்பல்லாக்கு நடக்கும். அன்று 3 பாட்டுக்கச்சேரி 3 ஆடல்பாடல், என திருவிழா ஜெக ஜோதியாய் இருக்கும்.

பக்கத்து ஊரில் சிவபெருமான் ஆலயம் உள்ளது . மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த ஆலயம்.

Fun

இங்கிருந்து 8 கி.மீ தொலைவில் பிரான்மலை உள்ளது. இங்கு மலை ஏறலாம் மலை மீது மங்கை பாகர் கோவில் உண்டு. மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு தான் முல்லைக்கு தேர் கொடுத்தார் பாரி.

அடுத்து 30 கி.மீ தொலைவில் வேட்டங்குடி என்ற இடத்தில் பறவைகள் சரணாலயம் உள்ளது.

அடுத்து 30 கி.மீ தொலைவில் அய்யனார் அருவி உள்ளது. எந்நேரமும் அருவியில் தண்ணீர் விழுந்து கொண்டே இருக்கும்.

அடுத்து 30 கி.மீ தொலைவில் கரந்தமலை அருவி உள்ளது. இது மிகவும் பிரசித்தி பெற்ற அருவி.

இன்னும் நிறைய இருக்கிறது........ தகவலை சேகரித்து கொண்டு விரவில் உங்களுக்கு அளிக்கிறேன்.

என்றும் அன்புடன்
உங்கள் மானிக் நன்றி நன்றி

sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Postsudhakaran Sun Jul 05, 2009 10:04 pm

மனிகண்டன்.....சிங்கம்புனரி என்று ஏன் பெயர் வந்தது...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 06, 2009 12:02 am

"சிங்கம்புணரி" எனும் ஊர் மதுரை சிவகங்கை அருகே உள்ளது.

முந்நாள் தி.மு.க மந்திரி மாதவன் பிறந்த ஊர்.


அளக்கர், வேலை, பௌவம், முந்நீர், புணரி போன்ற சொற்கள் அனைத்துமே கடலைக் குறிக்கிறது.

எனவே சிங்கம்புணரி என்பது சிம்மக்கடல் என்று பொருள்படும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 06, 2009 12:58 am

"1801-இல் மருது பாண்டியருக்கும் இங்கிலீஸ் கும்பினியார்க்கு நடைபெற்ற போரின் உக்கிரமான சண்டைகள் இந்த வட்டாரத்தில் நடைபெற்றிருக்கின்றன.

மைசூர் திப்பு சுல்தானிடமிருந்து வாங்கிய ராக்கெட்டுகளை சிங்கம்புணரிக் காட்டில் நடைபெற்ற போரின்போதுதான் மருதுபாண்டியர் பயன்படுத்தினர்.

மிலிட்டரி ராக்கெட்டுகள் பயன்படுத்தப்படுவது உலகிலேயே அதுதான் முதல்தடவை என்று இங்கிலீஸ் போர்நடவடிக்கைக்குறிப்புகள் தெரிவிக்கின்றன.

கும்பினிப்படை தங்கியிருந்த இடம், போர் நடந்த இடம் முதலியவற்றை இன்னும் காணலாம். ஏனோ அந்த இடம் பொட்டலாக இருந்து வந்தது. இப்போது எப்படியிருக்கிறது என்பது தெரியவில்லை.

கட்டபொம்மு பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து தப்பி வந்த போது சிங்கம்புணரி அருகில்தான் பிடிபட்டார். புதுக்கோட்டையின் படைத் தலைவராகிய 'திருக்குளம்பூர் சேர்வைக்காரர்' என்பவர்தான் பிடித்தவர்.

கும்பினியாரிடம் ஒப்படைக்கப்படும்போது சிங்கம்புணரியில் உள்ள சேவுகப்பெருமாள் கோயிலில் அவரைக் கனத்த சங்கிலிகளால் பிணைத்துத் தூணில் கட்டிவைத்திருந்தார்களாம். ஊர்மக்கள் அங்கு சென்று பார்த்தார்களாம். அடுத்தநாள் வண்டியில் வைத்துக்கொண்டு கும்பினியார் சென்றுவிட்டார்களாம்."



மேலே உள்ள குறிப்புக்களை வைத்துப் பார்க்கும்பொழுது சிங்கம்புணரி ஒரு காலத்தில் செறிவு நிறைந்த காடுகள் அடங்கிய பகுதியெனவும் அங்கு சிங்கங்கள் கடல்போல் வாழ்ந்து வந்திருக்கலாம் எனவும் நம்பலாம்.

இதுவே சிங்கம்புணரியின் உண்மையான பெயர்க்காரணம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 06, 2009 1:06 am

மேலும் தமிழறிஞர் ஜெயபாரதி ஐயா அவர்கள் சிங்கம்புணரி பற்றி என்ன குறிப்பிட்டுள்ளார்கள் என்பது பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்!

சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிங்கம்புணரி சில அரிய பழைய மரபுகளை வைத்திருக்கிறது. வேறு ஊர்களில் அவை இல்லை. சில மரபுகள் மற்ற சில ஊர்களிலும் இருந்து, பின்னர் வழக்கிழந்து போயின. பாரி வேட்டை, புரவியெடுப்பு, கழுவன் திருவிழா போன்ற சில மரபுகள் சிங்கம்புணரியில் விமரிசையாக இருந்தன. மற்ற ஊர்களில் அவ்வளாக இல்லை. மாட்டுப்பொங்கல், மஞ்சிவிரட்டு சம்பந்தமாக சிங்கம்புணரியில் சில பழைய மரபுகள் இருந்தன. முப்பதாண்டுகளுக்கு முன்புவரைக்கும் அவை இருந்தன. இப்போது அவை இருக்கின்றனவா என்பது தெரிய வில்லை.

எனக்கு Martial Arts-இல் ஈடுபாடு உண்டு. அவற்றைப் பற்றி அவ்வப்போது எழுதியும் வந்திருக்கிறேன். சிங்கம்புணரி வட்டாரத்திலுள்ள சில கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களிலும் ரொம்பவும் ஈடுபாடு உண்டு. ஒரு முறை சிங்கம்புணரி திருவிழாவில் நடைபெற்ற கரகாட்டத்தில் இரண்டு புகழ் பெற்ற கரகாட்டப் பெண்மணிகள் ஆடினர். அவர்களிடையே ஒரு Unofficial போட்டி. அதில் நான் தீர்ப்புச் சொல்லியிருக்கிறேன். என்னைப் போன்ற ஓர் ஆசாமி பொன்னமராவதி கல்யாணி மேட்டுப்பட்டி செல்லம்மாள் கரகாட்டத்தில் தீர்ப்புச் சொல்ல அழைக்கப்பட்டேன் என்பதேகூட விசித்திரமாகத்தான் இருக்கும்.
Its all part of the Game. இதெல்லாம் 1973-க்கு முன்னால் நடந்த சங்கதிகள்.



தமிழறிஞர் ஜெயபாரதி பற்றி அறிய இங்கு செல்லுங்கள்


http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF._%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 06, 2009 1:12 am

சிங்கம்புணரி வரலாறு Muthuv10
சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 06, 2009 1:17 am

சிங்கம்புணரி வரலாறு Sastha10

சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் இவர். இவருடைய ஆயுதம் செண்டாயுதம். வலக்கையில் வளைந்திருக்கும் ஆயுதமே செண்டாயுதம். இவரைச் 'செண்டாயுதன்' என்றும் வழங்குவர். 'சிங்காபுரிப் பள்ளு' என்னும் நூலில் இப்பெயர் காணப்படுகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 06, 2009 1:49 am

மதுரையிலிருந்து திருச்சி போகும் பாதையில் நாற்பதாவது கீலோமீட்டரில் கிழக்கே சென்றால் சிங்கம்புணரி என்னும் ஊர் இருக்கும். இப்போது அது சிவகங்கை மாவட்டத்தில் இருக்கிறது. பாண்டிநாட்டுக்கும் சோழநாட்டுக்கும் உரிய எல்லைப்பகுதியாக சிங்கம்புணரி விளங்கும். சங்ககாலத்தில் பாரியின் பறம்புநாட்டின் ஊர்களில் ஒன்றாக இருந்தது. பிற்காலத்தில் அது 'கேரளசிங்கவளநாடு' என்னும் மாகாணத்தில் 'ஐந்துநிலைநாடு' என்னும் பெயரில் உட்பிரிவாக இருந்தது. 'ஐந்துமங்கலம்' அல்லது 'அஞ்சுமங்கலம்', 'அஞ்சாமங்கலம்' என்றும் அந்நாட்டை அழைத்தார்கள். பிற்காலத்தில் அது 'அஞ்சல்நாடு' என்றும் 'அஞ்சலநாடு' என்றும் மருவிவிட்டது. 'கண்ணமங்கலம்' என்னும் பகுதியில்தான் சிங்கம்புணரி இருக்கிறது.

அந்த ஐந்து நாட்டுப் பிரிவுகளிலும் 'நிலைப்புறம்' எனப்படும் படைநிலைகள் - படைத்தளங்கள் இருந்தன. பரம்பரை பரம்பரையாகப் போர்புரிவதையே தொழிலாகக்கொண்ட குடியினர் அந்த நிலைப்புறங்களில் வசிப்பார்கள். ஒவ்வொரு நிலைப்புறத்திலும் கோட்டைகள் இருக்கும். மிக அடர்த்தியாகக் கோட்டைகளை நெருக்கி நெருக்கி இந்தப் பிரதேசத்தில் அமைத்திருக்கிறார்கள். காட்டரண்கள் முக்கிய பங்கெடுத்திருக்கின்றன. அந்தக் காடுகளைப் பற்றி ஏற்கனவே சொல்லப் பட்டிருக்கிறது. போர்க்குடியினர் போர்ப்பயிற்சியை எப்போதும் செய்து கொண்டு தயார்நிலையிலேயே இருப்பார்கள். சிங்கம்புணரி, ஒருகாலத்தில் வேள்குலராமநிலை' என்றும் 'வீரபாண்டியநல்லூர்' என்றும் பெயர் பெற்றிருந்தது.

தமிழகத்தின் வெறெந்த பகுதிகளிலும் இல்லாத சில குடியினர் இங்கு இருக்கிறார்கள். ஐந்துநிலைநாட்டின் முக்கியக்குடிகளாக விளங்குபவர்கள் 'இளமகர்' என்னும் குடியினர். இவர்களும் ஒருவகை முக்குலத்தோர்தாம். இவர்களுக்கு 'அம்பலம்', 'அம்பலக்காரர்' என்ற பட்டம் உண்டு. 'அம்ப்லார்' என்று சுருக்கிக் குறிப்பிடுவார்கள். 'அரளிப்பாறை' என்றொரு பாறைக்குன்று இருக்கிறது அருகில் இருக்கிறது. அதன்மேல் ஒரு முருகன் கோயில் இப்போது இருக்கிறது. யாரோ ஒருகாலத்தில் அந்த குன்றின் சரிவில் ஒரு குடைவரைக் கோயிலைக் கட்ட ஆரம்பித்துவிட்டுப் பாதியில் நிறுத்திவிட்டிருக்கின்றனர். இந்த இடத்தில் மாசிமகத்தன்று 'மஞ்சிவிரட்டு' என்னும் ஜல்லிக்கட்டு நடைபெறும். அந்தச் சமயத்தில் ஐந்து நாடுகளிலிருந்தும் இந்தக் குடியினர் புறப்பட்டு வந்து ஓரிடத்தில் கூடுவார்கள். மதியத்தில் மஞ்சிவிரட்டு நடைபெறும். இந்த வட்டாரத்தின் இன்னொரு குடியினர் அருவியூர் நகரத்தார்.

பாண்டிநாட்டின் வடபகுதி கட்ற்கோளால் பாதிக்கப்பட்டு பாழாகியபின்னர், மீண்டும் இந்த பிரதேசத்தில் மக்களைக் குடியேற்றி அதனை வளப்படுத்துவதற்காக பாண்டியமன்னன் தம் நாட்டுக்காக சோழ மன்னனிடமிருந்து பெற்றுக்கொண்ட நற்குடி நாலாயிரவரில் இவர்களும் முக்கியமான குடியினர். 'ரத்தின மகுட தனவைசியர்' என்று பெயர் பெற்ற இவர்கள், சோழமன்னனுக்கு முடி சூட்டும்போது முடியை எடுத்துக்கொடுக்கும் சிறப்புரிமையைப் பெற்றவர்கள். அதே உரிமையைப் பாண்டிய மன்னனிடமும் சிறப்புரிமையாகப் பெற்றுக்கொண்டு பாண்டிநாட்டுக்கு வந்தவர்கள். அவர்களின் முக்கிய நகராக மறைந்துபோன வணிக நகரமாகிய 'அருவியூர் குலசேகரப் பட்டினம்' விளங்கியது. அந்த ஊரின் பெயரையே தம் குடிக்கும் வைத்துக் கொண்டுவிட்டனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 06, 2009 2:51 am

மற்ற இடங்களில் காணப்படாத மரபுகள் சிங்கம்புணரியில் இன்றும் உண்டு. சமணர்களைக் கழுவேற்றிய நிகழ்ச்சி இப்போது 'கழுவன் திருவிழா' என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. சேவுகமூர்த்தி ஐயனார் கோயிலின் பத்துநாள் உற்சவத்தில் ஆறாம் திருநாளாக அது விளங்குகிறது.

சேவுகமூர்த்தி ஐயனாருக்கும் சமணர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இந்த ஊர் முஸ்லிம் மக்களும் தொடர்பு கொண்டாடினார்கள். சேவுகப்பெருமாளை 'ஷேக் இப்ராஹீம்' என்ற பெயரில் அழைக்கிறார்கள். ஒரு காலத்தில் சேவுகப்பெருமாள் ஐயனாரின் தேர்த்திருவிழாவின்போது அவர்களும் ஒருபக்கத்தில் ·பாத்திஹா ஓதிக்கொண்டிருப்பார்கள்.பொங்கலிட்டதும் உண்டு.

சேவுகப்பெருமாள் ஐயனார், மீசையேதும் இல்லாமல் மிகவும் சௌமியமாக சாந்தமூர்த்தியாகத் தன் தேவியர் பூரணை புட்கலை ஆகியோருடன் சூரிய சந்திரகலைகளைத் தரித்தவாறு அமர்ந்திருக்கிறார். இடது காலைச் சற்றுத் தூக்கிவைத்திருக்கிறார். இடக்கையை இடது முழங்காலின்மீது நீட்டிவைத்திருக்கிறார். வலக்கையில் செண்டாயுதம் என்னும் ஆயுதத்தை வைத்திருக்கிறார். மகாசாஸ்தா என்ற பெயரும் பழைய ஓலைச்சுவடிகளில் காணப்படுகிறது. தர்மசாஸ்தா என்னும் பெயரும் ஐயனாருக்கு உண்டு. யானை வாகனம். குதிரையும் உண்டு.

'புரவியெடுப்பு' என்னும் விழா ஒன்று சிங்கம்புணரியில் கொண்டாடப் படுகிறது. அடைக்கலம் காத்த ஐயனாருக்கும் கறுப்பண்ணசாமிகளுக்கும் சன்னிதிகள் உண்டு. வேளார்கள்தாம் பரம்பரைப் பூசகர்கள். இக்கோயிலில் சுயம்பு மூர்த்தியும் இருக்கிறார். சுயம்ப்ரகாசர் என்று சொல்வார்கள். 'சேம்ப்ராசு' என்ற பெயரை இங்குள்ளவர்களுக்கு வைக்கிறார்கள். அது மருவிவந்த பெயர். வேட்டுவன் ஒருவன் வள்ளிக்கிழங்கு தோண்டும்போது அவனுடைய தோண்டுகோல்பட்டு இரத்தம் வந்தது என்றும், அந்த இடத்தில் சுயம்பு இருந்ததாகவும் சொல்வார்கள். சுயம்புவின் உச்சியில் ஆழமாக ஏதோ ஒரு கூரிய கருவி பாய்ந்த வடு இருக்கிறது. சேவுகமூர்த்தி கோயிலுக்கு மாடு நேர்ந்து விடும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்துவருகிறது.

ஒரு காலத்தில் சிங்கம்புணரியில் எங்கும் கோயில்மாடுகள் திரிந்துகொண்டேயிருக்கும். அததுபாட்டுக்கு போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருக்கும். அந்த வட்டாரத்தில் நடக்கும் மஞ்சிவிரட்டுகளில் சேவுகப்பெருமாள் ஐயனாரின் காளைகள் வந்துசேர்ந்தபின்னரே முதல்மரியாதை செய்து, அதன்பின்னர் தொழுவைத் திறந்துவிடுவார்கள். வேறெந்த ஊரிலும் இல்லாத சிறப்பாக ஏன் இத்தனை கோயில் மாடுகள்? எப்படி எங்கிருந்து மாடுகள் முதன்முதலில் வந்தன? இதற்கு உரிய காரணத்தை சிங்கம்புணரியையே பூர்வீகமாகக் கொண்ட முஸ்லிம் ஒருவர் சொன்னார். ஷேக் இப்ராஹிம் என்னும் புனிதர் பொதிமாட்டின்மீது பொருள்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்தபோது தொழுகைக்கு நேரம் ஆகிவிட்டதால் ஓரிடத்தில் நிறுத்தி, முறைப்படி நமாஸ் செய்தார். அவர் மண்டியிட்டு நெற்றியால் பூமியைத் தொட்டவாறு அடங்கிவிட்டார். அவர் அடங்கிய இடம் என்று சேவுகமூர்த்தி கோயிலில் சுயம்பிரகாசர் சன்னிதிக்குப் பின்புறமாக ஒரு மேடையைக் குறிப்பிடுவார்கள்.

மர்மங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

அவருடைய அன்புக்குரிய பொதிமாடு அங்கேயே சுற்றிக் கொண்டிருந்ததாம். அதன்பின்னரே மாடுகள் நேர்ந்துவிடும் வழக்கம் ஏற்பட்டது என்று அக்காலத்தில் சொல்வார்கள்.

இந்த வட்டாரத்தில் ஒவ்வோர் ஆண்டும் 'பாரி வேட்டை' என்றொரு வேட்டை நிகழ்த்துவார்கள். அன்றுதான் அவரவர் வீடுகளில் வைத்திருக்கும் ஈட்டி, வேல்கம்பு போன்ற ஆயுதங்கள் வெளியே வரும். தாரை தப்பட்டை முழங்க காடுகளாக ஒருகாலத்தில் இருந்து இப்போது கொஞ்சம் கொஞ்சம் புதராக இருக்கக்கூடிய இடங்களுக்குச் செல்வார்கள். அங்கு இப்போது இருக்கும் சிறிய பிராணிகளை வேட்டையாடிவிட்டு, மாலையில் மீண்டும் தாரை தப்பட்டை முழங்க ஊருக்குள் ஊர்வலமாக வருவார்கள். அவர்களில் சிலர் கையில் அரிவாள், வேல்கம்பு முதலியவற்றைத் தாங்கி ஒரு வகையாக அடியெடுத்துவைத்து கைகளை மடக்கியவாறு முன்னும் பின்னும் செலுத்தி ஆடியவாறு வீரநடைபோட்டு வருவார்கள். சிலர் கால்களில் சலங்கை கட்டியிருப்பார்கள். சிலர் கைகளில் சிலம்பு போன்ற கருவிகளைப் பிட்த்துத் தாளக்கட்டுடன் குலுக்கிக்கொண்டு ; அதற்கேற்ப ஆடிக்கொண்டே வருவார்கள். இந்தக் காட்சியை நினைத்துப் பார்த்து ஞாபகப்படுத்திக்கொண்டு, மனக்கண்களால் பார்த்து, மனத்திரையில் ஓடவிட்டுக்கொண்டு எழுதும்போது, எழுந்து நின்று அதே தாளகதியுடன் வீரநடை போட்டவாறு ஆடிவரவேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் அப்போதிருந்த உடல்வாகும் முறுக்கும் வேறு.
இந்த மரபும் வழக்கமும் மற்ற இடங்களில் இருப்பதாகத் தெரியவில்லை.

மாட்டுப்பொங்கலன்றும் சில விசேஷ வழக்கங்கள் இருந்தன. சித்திரைமாதம் பிறந்ததும் அந்த ஆண்டின் முதல் மழை பெய்ததும் 'ஏரிடுதல்' என்னும் விழா நடக்கும். ஒவ்வோர் ஆண்டும் அவரவருடைய நிலங்களில் ஏதேனும் ராசியான இடமாகப் பார்த்து, அங்கு சாமி கும்பிட்டுவிட்டு, ஏர்களைப் பூட்டி உழுவார்கள். குடும்பத்தைச் சேர்ந்த
ஆண்கள் அனைவரும் ஏர் பிடித்து ஒரு சாலாவது உழவேண்டும். பெண்கள் கொட்டான்கள் என்று சொல்லப்படும் கூடைகளில் காய்ந்த மாட்டுச்சாணம் கலந்த 'குப்பை' எனப்படும் உரத்தை எடுத்துவந்து, அந்த இடத்தில் கொட்டுவார்கள். இந்த வழக்கமும் வேறெங்கும் இருப்பதாகத் தெரியவில்லை.

சிங்கம்புணரியின் பேச்சுவழக்குகூட ஒருமாதிரியாகத்தான் இருக்கும்.



ஜெயபாரதி

avatar
Guest
Guest

PostGuest Mon Jul 06, 2009 7:51 am

அருமையான அரிய தகவல்கள் அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக