புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காற்றினிலே... வரும்...தீங்கும் -‍ தீர்வும் Poll_c10காற்றினிலே... வரும்...தீங்கும் -‍ தீர்வும் Poll_m10காற்றினிலே... வரும்...தீங்கும் -‍ தீர்வும் Poll_c10 
19 Posts - 49%
heezulia
காற்றினிலே... வரும்...தீங்கும் -‍ தீர்வும் Poll_c10காற்றினிலே... வரும்...தீங்கும் -‍ தீர்வும் Poll_m10காற்றினிலே... வரும்...தீங்கும் -‍ தீர்வும் Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
காற்றினிலே... வரும்...தீங்கும் -‍ தீர்வும் Poll_c10காற்றினிலே... வரும்...தீங்கும் -‍ தீர்வும் Poll_m10காற்றினிலே... வரும்...தீங்கும் -‍ தீர்வும் Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
காற்றினிலே... வரும்...தீங்கும் -‍ தீர்வும் Poll_c10காற்றினிலே... வரும்...தீங்கும் -‍ தீர்வும் Poll_m10காற்றினிலே... வரும்...தீங்கும் -‍ தீர்வும் Poll_c10 
1 Post - 3%
Guna.D
காற்றினிலே... வரும்...தீங்கும் -‍ தீர்வும் Poll_c10காற்றினிலே... வரும்...தீங்கும் -‍ தீர்வும் Poll_m10காற்றினிலே... வரும்...தீங்கும் -‍ தீர்வும் Poll_c10 
1 Post - 3%
Shivanya
காற்றினிலே... வரும்...தீங்கும் -‍ தீர்வும் Poll_c10காற்றினிலே... வரும்...தீங்கும் -‍ தீர்வும் Poll_m10காற்றினிலே... வரும்...தீங்கும் -‍ தீர்வும் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காற்றினிலே... வரும்...தீங்கும் -‍ தீர்வும் Poll_c10காற்றினிலே... வரும்...தீங்கும் -‍ தீர்வும் Poll_m10காற்றினிலே... வரும்...தீங்கும் -‍ தீர்வும் Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
காற்றினிலே... வரும்...தீங்கும் -‍ தீர்வும் Poll_c10காற்றினிலே... வரும்...தீங்கும் -‍ தீர்வும் Poll_m10காற்றினிலே... வரும்...தீங்கும் -‍ தீர்வும் Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
காற்றினிலே... வரும்...தீங்கும் -‍ தீர்வும் Poll_c10காற்றினிலே... வரும்...தீங்கும் -‍ தீர்வும் Poll_m10காற்றினிலே... வரும்...தீங்கும் -‍ தீர்வும் Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
காற்றினிலே... வரும்...தீங்கும் -‍ தீர்வும் Poll_c10காற்றினிலே... வரும்...தீங்கும் -‍ தீர்வும் Poll_m10காற்றினிலே... வரும்...தீங்கும் -‍ தீர்வும் Poll_c10 
10 Posts - 2%
prajai
காற்றினிலே... வரும்...தீங்கும் -‍ தீர்வும் Poll_c10காற்றினிலே... வரும்...தீங்கும் -‍ தீர்வும் Poll_m10காற்றினிலே... வரும்...தீங்கும் -‍ தீர்வும் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
காற்றினிலே... வரும்...தீங்கும் -‍ தீர்வும் Poll_c10காற்றினிலே... வரும்...தீங்கும் -‍ தீர்வும் Poll_m10காற்றினிலே... வரும்...தீங்கும் -‍ தீர்வும் Poll_c10 
9 Posts - 2%
jairam
காற்றினிலே... வரும்...தீங்கும் -‍ தீர்வும் Poll_c10காற்றினிலே... வரும்...தீங்கும் -‍ தீர்வும் Poll_m10காற்றினிலே... வரும்...தீங்கும் -‍ தீர்வும் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
காற்றினிலே... வரும்...தீங்கும் -‍ தீர்வும் Poll_c10காற்றினிலே... வரும்...தீங்கும் -‍ தீர்வும் Poll_m10காற்றினிலே... வரும்...தீங்கும் -‍ தீர்வும் Poll_c10 
4 Posts - 1%
Jenila
காற்றினிலே... வரும்...தீங்கும் -‍ தீர்வும் Poll_c10காற்றினிலே... வரும்...தீங்கும் -‍ தீர்வும் Poll_m10காற்றினிலே... வரும்...தீங்கும் -‍ தீர்வும் Poll_c10 
4 Posts - 1%
Rutu
காற்றினிலே... வரும்...தீங்கும் -‍ தீர்வும் Poll_c10காற்றினிலே... வரும்...தீங்கும் -‍ தீர்வும் Poll_m10காற்றினிலே... வரும்...தீங்கும் -‍ தீர்வும் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காற்றினிலே... வரும்...தீங்கும் -‍ தீர்வும்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Mar 15, 2010 6:07 am

நம் முன்னோர்கள் இயற்கையையே தெய்வமாக எண்ணி வணங்கினர். பஞ்ச பூதங்களானகாற்று, நீர், நிலம், ஆகாயம், நெருப்பு இவற்றின் தொகுப்புதான் உலகமாகும்.மனித நாகரீகம் வளர வளர இயற்கையும் சீர்கேடு அடைய ஆரம்பித்துள்ளது.இயற்கையை சீரழித்தது, உயிரினங்களில் மனிதன் மட்டும்தான். மனிதன் தன்தேவைக்காக இயற்கையை அழித்தான். மரங்களை வெட்டி காடுகளை அழித்து மனைநிலங்களாக மாற்றினான். நிலத்தைத் தோண்டி நிலக்கரி பெட்ரோல் எடுத்துஇயற்கையை நாசப்படுத்தினான். நிலத்தடி நீரை உறிஞ்சி நீர் இல்லாமல் வறண்டபிரதேசமாக மாற்றினான். மனிதன் ஐம்பூதங்களையும் பாழாக்கியதன் விளைவுதான்பூமி வெப்பம், பூகம்பம், சுனாமி, வறட்சி, புயல் போன்ற இயற்கை சீற்றங்கள்.

இந்த பஞ்ச பூதங்களின் பாதிப்பு தான் மனிதனை பல நோய்களுக்குஆளாக்கியுள்ளது. இயற்கையை நாம் எந்தளவுக்கு மாசு படுத்தியுள்ளோம்என்பதையும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் அறிந்து கொள்வோம்.

உலகில் உயிர்கள் வாழ இன்றியமையாதது காற்றுதான். காற்று எங்கும் நிறைந்தபொருள். இதனை கண்ணினால் பார்க்க முடியாவிடினும், இதன் செயலால் இதனைஉணர்ந்து கொள்கிறோம். ஆறு அறிவுடைய மனிதன் முதல் ஓரறிவுடைய தாவரம் வரைஉள்ள ஒவ்வோர் உயிருக்கும் காற்று இன்றியமையாததாகும். இக்காற்று இல்லையென்றால் எந்த உயிரும் வாழ முடியாது.

காற்றோட்டமில்லாத இடத்திலும், மக்கள் நிறைந்த இடத்திலும் நச்சுக்காற்றுமிகுந்திருக்கும் ஆதலால் அங்கு அதிக நேரம் தங்குவதற்கு சிரமமாக இருக்கும்.ஒருவேளை தங்க நேரிட்டால் தூய காற்றை சுவாசிக்க முடியாமல் மூச்சு திணறும்.

உயிர்கள் வாழ்வதற்கு உணவு, நீர், காற்று ஆகிய மூன்றும் அவசியம்வேண்டியவைதான். ஆனாலும் உணவின்றி சில நாட்களும், நீரின்றி சிலமணிநேரங்களும் உயிர்வாழ நம்மால் முடியும். ஆனால் தூய காற்று இல்லையென்றால்சில வினாடிகளுக்கு மேல் உயிர்வாழ முடியாது. எனவே உயிர் வாழ்க்கைக்கு தூயகாற்று இன்றியமையாதது.

உயிரினங்கள் தாவரங்களுக்கு காற்றில் உள்ள ஆக்ஸிஜன், கார்பன்-டை-ஆக்ஸைடுமிகவும் முக்கியமாகும். தாவரங்கள் உணவு தயாரிக்க கார்பன்-டை-ஆக்ஸைடு என்றகரியமில வாயுவை எடுத்துக்கொண்டு பிராண வாயுவான ஆக்ஸிஜனை வெளிவிடுகிறது.உயிரினங்கள் பிராண வாயுவை உள்வாங்கி கரியமில வாயுவை வெளிவிடுகின்றன.

பிராண வாயுவை உற்பத்தி செய்யும் தொழிற் சாலையாக இருந்த காடுகளை அழித்ததன்விளைவுதான் காற்றில் கரியமில வாயுவின் ஆதிக்கம் அதிகரித்தது. மேலும்எண்ணற்ற தொழிற் சாலைகளின் புகை, வாகன புகை என பல வகைகளில் காற்றுமாசடைந்து வருவதால் இயற்கை சீர்கெட்டு, மனித இனமும் ஆரோக்கியமின்றிஅலைந்து கொண்டிருக்கிறது.

நெருங்கிய வீடுகள், பிளாஸ்டிக் குப்பைகளை எரித்தல், செங்கல் சூளைகள்,சுண்ணாம்புக் காளவாய்கள், இரசாயன தொழிற்சாலைகள், புகையை ஏற்படுத்தும்காட்டுத்தீ போன்றவற்றால் வரும் புகையால் காற்று மண்டலம் மாசடைந்துள்ளது.

அதிகளவு வாயுக்களும், துகள்களும் (ஏரோசால்) மனிதர்களால் காற்றில் அதிகம்கலக்கப்படுகின்றன. உதாரணமாக காற்றை மாசுபடுத்தும் வாயுக்களைப் பற்றிபார்ப்போம்.

கார்பன் மோனாக்ஸைடு

பெட்ரோலியம், இரும்பு, பிளாஸ்டிக், காகித தொழிற்சாலைகளாலும் வாகனபுகைகளாலும் கார்பன் மோனாக்ஸைடு காற்றில் அதிகம் கலக்கிறது. இதனால்மனிதனுக்கு சரும பாதிப்பு, அலர்ஜி போன்றவை ஏற்படுகிறது. இந்த கார்பன்மோனாக்ஸைடால் மனிதனுக்கு மட்டுமின்றி நினைவுச் சின்னமான பளிங்கு மாளிகைதாஜ்மஹாலுக்கும் இந்த அசுத்த புகை பாதிப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.

கந்தக ஆக்ஸைடு

நிலக்கரியை எரிப்பதால் கந்தக ஆக்ஸைடு உருவாகிறது. மேலும் தொழிற்சாலைகள்,அனல் மின் நிலையங்கள், வாகனங்கள் ஆகிவற்றால் ஏற்படும் புகைகளில் உள்ளகந்தக ஆக்ஸைடு காற்றில் கலக்கிறது. இதனால் மரங்கள் பட்டுப் போகின்றன.மூச்சுக் குழல் சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்குகின்றன. கண்களில்எரிச்சல், வாந்தி, மயக்கம், அடிவயிறு வலி, தொண்டைப்புண், இருமல், ஆஸ்துமாபோன்ற நோய்களுக்கு அடித்தளமாகி அமைகிறது.

நைட்ரஜன் ஆக்ஸைடு

நிலக்கரி, எண்ணெய், பூமிக்கடியில் உள்ள இயற்கை எரிவாயு போன்றவற்றைஎரிப்பதால் இந்த வாயு அதிகம் காற்றில் கலக்கிறது. இந்த நைட்ரஜன் புகையைசுவாசித்தால் மூச்சு திணறல் உண்டாகி சில சமயங்களில் உயிரைக்கூட காவுவாங்கிவிடும்.

நுண் துகள்கள்

காட்டுத்தீ, நிலக்கரி, குப்பைக் கழிவு , பயன்பாடு இல்லாத எலக்ட்ரானிக்கருவிகள், போன்றவற்றை எரிக்கும்போது காற்றில் நுண் துகள்கள் கலக்கின்றன.இதனால் காற்றில் மிதந்து வரும் இலேசான துகள்களான கல்நார் (ஆஸ்பெஸ்டாஸ்)மற்றும் நச்சுத் தன்மையுள்ள வேதிப் பொருட்கள் நுரையீரல் தந்துகிகளில்ஒருவித எரிச்சலை ஏற்படுத்தி அடைப்பை உண்டாக்கி, நுரையீரலை பாதிக்கின்றன.

மேலும் 1984-ம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் போபாலில் அமைந்துள்ள யூனியன்கார்பைடு தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயுக் கசிவினால் (மித்தைல்ஐசோசையனைட்) 20,000 பேர் இறந்து போனார்கள். 50,000 பேர் அதிகம்பாதிப்படைந்தனர். 1,50,000 பேர் பாதிக்கப் பட்டனர். இந்த கசிவானது தொழிற்சாலையை சுற்றி 100 கி.மீ. சுற்றளவுக்கு மண் பரப்பு முழுவதும் அடர்த்தியானதுகள்களால் மூடப்பட்டது. இதனால் 10 ஆண்டுகளாக எந்தவித விவசாய உற்பத்தியும்செய்ய முடியாமல் போய்விட்டது. இன்றும் அங்குள்ள மக்கள் பலவகையான நோயின்தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். அங்கு குறையுள்ள குழந்தைகளே பிறக்கின்றன.

1942ம் ஆண்டு ஜப்பானில் உள்ள ஹிரோசிமா, நாகசாகி நகரங்களில் அமெரிக்காவீசிய அணுகுண்டுக்கு அடுத்து மாபெரும் பேரழிவை ஏற்படுத்திய சம்பவம் இந்தபோபால் விஷவாயுக் கசிவுதான். இதுபோல் 1952ம் ஆண்டு இலண்டன் நகரில்ஏற்பட்ட புகை மண்டலம் காரணமாக 6 நாட்களில் 4000 முதல் 8000 பேர் வரைஇறந்துள்ளனர்.

பழைய சோவியத் யூனியனில் 1979ம் ஆண்டு உயிர் வேதியல் சோதனைக் கூடத்தில் ஏற்பட்ட வாயுக் கசிவினால் பல நூறு மக்கள் இறந்தனர்.

ஓசோன் மண்டலம்

ஓசோன் என்பது பூமிப் பரப்பளவிற்கு மேல் 30 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளகாற்று மண்டலமாகும். சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக் கதிர்களை தடுக்கும்திரையாகவும் இருந்து வருகிறது. இந்த புற ஊதாக் கதிர்கள் மனிதன் மேல்பட்டால் சருமம் பாதிப்படையும். ஓசோன் மண்டலத்தின் மூலம் புற ஊதாக்கதிர்கள் தடுக்கப் படுவதால் மனிதனுக்கு இதன் பாதிப்பு இல்லை.

தற்போது மனிதன் வெளிப்படுத்துகின்ற குளோரின் சேர்மங்கள் குறிப்பாககுளிர் சாதன பெட்டியில் இருந்து வெளிவரும் குளோரோ ஃபுளோரோ கார்பன்கள்தான் ஓசோன் படலத்தை ஓட்டையாக்குகின்றன. மேலும் பிளாஸ்டிக் குப்பைகளின்புகையும் ஓசோன் மண்டலத்தை பாதிப்படையச் செய்கிறது.

ஓசோன் படலத்தில் ஏற்படும் மாற்றங்கள் மனித குலத்திற்கு மிக மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

· சூரியனிடமிருந்து வருகின்ற புற ஊதாக் கதிர்கள் ஓசோன் ஓட்டைகள் வழியாகபூமியைத் தாக்கி சூரிய வெப்பத்தின் தாக்கம், கண் புரையோடுதல், தோல்வறட்சியடைதல் சுருங்குதல் மற்றும் தோல் நோய்கள் போன்ற நோய்களைஏற்படுத்தும்.

· நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப் படுத்துகிறது. இதனால் தொற்றுநோய்களான தட்டம்மை, சின்னம்மை போன்ற வைரஸ் நோய்களையும் மலேரியாநோயையும், தோல் மூலம் பரவுகின்ற ஒட்டுண்ணி நோய்களையும் தடுக்கின்றநோய் தடுப்பாற்றலை நம் உடல் இழக்க நேரிடுகிறது.

பூமி வெப்பமுறுதலின் விளைவு

· பூமி வெப்பமடைவதால் துருவங்களில் பனிக்கட்டிகள் உருகி கடல் மட்டம்உயர்தல், மற்றும் அனைத்து நாடுகளின் கடற்கரைப் பகுதி வெள்ளத்தால் சூழ்தல்ஆகியவை ஏற்படக்கூடும் என விஞ்ஞானிகள் அறிவுறுத்துகின்றனர்.

· விவசாய விளைபொருளின் உற்பத்தியைக் குறைக்கும்.

· வறட்சி, இயற்கையான தாவரங்கள், பூச்சிகள், உயிரினங்கள், கால்நடைகள் மற்றும் விவசாய பயிர் வகைகளில் மாற்றம் ஏற்படுத்துகிறது.

அமில மழை

மனித செயல்பாடுகளினாலும், தொழிற் சாலைகளினாலும் சில வாயுக்கள் சேர்ந்துமழை நீரில் தேவைக்கு அதிகமாக அமிலம் சேர்வதையே அமில மழை என்கிறோம்.

நைட்ரஜன் ஆக்ø--ஸடு மற்றும் கந்தக ஆக்ஸைடு வளி மண்டலத்தில் நீராவியுடன்கலக்கின்றன. நீராவி குளிரும் போது ஆக்ஸைடுகள் முறையே நைட்ரிக் அமிலம்மற்றும் கந்தக அமிலமாக மாறி மழை துளிகளுடன் கீழே விழுகின்றன. இதுவே அமிலமழை எனப்படுகிறது.

அமில மழை ஏற்படக் காரணங்கள்

· தொல்லுயிர் எரிபொருட்களான நிலக்கரி, போன்றவை எரிதல்.

· ஊர்திகளினின்று வெளிப்படும் கழிவுப்புகை.

· காடுகள் மற்றும் புல்வெளிகள் எரிக்கப் படுவதால் ஏற்படும் புகை.

· வேதி தொழிற்சாலைகளிலிருந்து வெளி யேறும் வாயுக்கள்.

பாதிப்பு

· மண்ணின் அமிலத்தன்மை அதிகரிக்கிறது. தாவரங்கள் உயிர்வாழ முடிவதில்லை.

· மனிதர்களையும், நீர் வாழினங்களையும் அச்சுறுத்துகின்றது. காடுகள், பயிர்களை அழிக்கிறது.

· விவசாய உற்பத்தித் திறன் குறைகிறது.

· கட்டிடங்கள், நினைவு சின்னங்கள், சிலைகள், மேம்பாலங்கள், வேலிகள்மற்றும் இரயில் தண்டவாளங்கள் அரிக்கப்படுகின்றன. இந்த மாசுக் காற்றால்வருடத்திற்கு 2.4 மில்லியன் மக்கள் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம்தெரிவித்துள்ளது. இதில் 1.5 மில்லியன் மக்கள் தூசுகளால் இறந்துள்ளனர். இதுஉலகில் வாகன விபத்திற்கு அடுத்த இடத்தில் உள்ளது.

இத்தகைய பாதிப்புகள் இன்னும் தொடராமல் இருக்க நாம் செய்யவேண்டியது என்ன....

· மலைகளையும், காடு களையும் அழிக்காமல் பாதுகாக்க வேண்டும்.

· நிலத்தையும், காற்றையும் நீரையும் மாசுபடுத்தும் வேலிக்கருவை, யூகாலிப்டஸ் போன்றவற்றை வளர்ப்பதற்கு தடைவிதிக்க வேண்டும்.

· நன்கு பசுமையான அடர்ந்து வளரும் மரங்களை நட வேண்டும். மரங்களை வெட்டக் கூடாது.

· தொழிற்சாலைகளிலிருந்து வெளிப்படும் விஷ வாயுக்களான மித்தைல்ஐசோசயனைட், கார்பன் மோனாக்ஸைடு, கந்தக ஆக்ஸைடு, நுண் துகள்கள் போன்றவைகட்டுப்படுத்த வேண்டும். இதற்கு இப்பகுதியில் அதிக மரங்களை நட வேண்டும்.

· ஈயமில்லாத பெட்ரோலை வாகனங்களுக்கு பயன்படுத்த வேண்டும்.

· மரபுசாரா எரிசக்தி அதாவது காற்று, சூரிய ஒளியின் மூலம் தயாரிக்கும் மின்சாரத் தொழிற்சாலைகளை அதிகம் அமைக்க வேண்டும்.

· பிளாஸ்டிக் பயன்பாடுகளை மறு சுழற்சி செய்யும் முறையை ஊக்குவிக்க வேண்டும்.

· அரசு கடுமையான சட்டங்களை நடைமுறைப் படுத்தினால் தான் காற்று மாசுபாட்டைக் குறைக்க முடியும்.

· காற்றின் அவசியம் பற்றி மக்களுக்கு போதிய விழிப்புணர்வு வேண்டும்.

எதிர்கால சந்ததியினர் இன்று கேன்களில் தூய்மையான தண்ணீர் (மினரல் வாட்டர்)வாங்கி அருந்துவது போல் பிராண வாயுவையும் பைகளில் விலைக்கு வாங்கிசுவாசிக்கும் நிலைக்கு தள்ள வேண்டுமா ..? சற்று சிந்தியுங்கள். இயற்கையின்பொக்கிஷங்கள் தான் எதிர்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்லும்செல்வங்களாகும். நம்மால் முடிந்தவரை காற்றை மாசுபடுத்தக் கூடாது எனஒவ்வொருவரும் சபதம் மேற்கொண்டால் மாசில்லா காற்றை சுவாசித்துஆரோக்கியமாக வாழலாம் அல்லவா !

வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என்ற வாசகத்திற்கு ஏற்ப அனைவருக்கும்விழிப்புணர்வை உண்டாக்கும் முயற்சியாக அண்மையில் சென்னை மாநகர மேயர்தன்னுடைய இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஒருமரக்கன்று பரிசளித்துள்ளார். இது மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்று. இதுபோல்சென்னை நகரின் முன்னாள் மேயரும் தமிழகத்தின் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் செல்லும் இடமெல்லாம் மரக்கன்று நட்டு வருகிறார்.மேலும் மத்திய ரசாயனத்துறை அமைச்சர் தன்னுடைய பிறந்த நாள் விழாவில் மதுரைநகர் முழுவதும் மரக்கன்றுகளை நட்டு அதை வளர்ப்பவர்களுக்கு சிறப்பு பரிசுஅளிப்பதாகவும் அறிவித்துள்ளார். இதுபோல் அனைவரும் மரம் வளர்ப்பதில்ஆர்வம் காட்டினால் காற்று மாசுபாட்டைத் தடுக்கலாம்.


nakkheeran காற்றினிலே... வரும்...தீங்கும் -‍ தீர்வும் 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Mon Mar 15, 2010 9:27 am

காற்றினிலே... வரும்...தீங்கும் -‍ தீர்வும் 677196 காற்றினிலே... வரும்...தீங்கும் -‍ தீர்வும் 677196



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Mar 16, 2010 4:07 pm

காற்றினிலே... வரும்...தீங்கும் -‍ தீர்வும் 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Mar 16, 2010 5:25 pm

காற்றினிலே... வரும்...தீங்கும் -‍ தீர்வும் 677196 காற்றினிலே... வரும்...தீங்கும் -‍ தீர்வும் 677196

இது வேதத்தில் குருப்பிடப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன்
{கலியுகத்தில் பருவம் மாறி மழைபொழியும், அதுவும் தொடர்ச்சியாக. உலகமே நீரில் மூழ்கிடும் பிறகு புது யுகம் "சத்ய யுகம்" பிறக்கும்}.

ஆக மனிதனே தனக்கு தானே ஆப்பு வைத்துக்கொள்கிறான். புவி வெப்பமாவதால் பனிப்பாறைகள் உருகி உலகம் ஆழிந்துவிடும் போலிருக்கிறது மேலே குருப்பிட்டுள்ள படி .


மரம் வளர்ப்போம்!
நல்ல காற்றும் மழையும் பெறுவோம்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக