புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமயத் தமிழை ஒதுக்கியது காலக் கட்டாயமா கழகக் கட்டாயமா Poll_c10சமயத் தமிழை ஒதுக்கியது காலக் கட்டாயமா கழகக் கட்டாயமா Poll_m10சமயத் தமிழை ஒதுக்கியது காலக் கட்டாயமா கழகக் கட்டாயமா Poll_c10 
21 Posts - 66%
heezulia
சமயத் தமிழை ஒதுக்கியது காலக் கட்டாயமா கழகக் கட்டாயமா Poll_c10சமயத் தமிழை ஒதுக்கியது காலக் கட்டாயமா கழகக் கட்டாயமா Poll_m10சமயத் தமிழை ஒதுக்கியது காலக் கட்டாயமா கழகக் கட்டாயமா Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமயத் தமிழை ஒதுக்கியது காலக் கட்டாயமா கழகக் கட்டாயமா Poll_c10சமயத் தமிழை ஒதுக்கியது காலக் கட்டாயமா கழகக் கட்டாயமா Poll_m10சமயத் தமிழை ஒதுக்கியது காலக் கட்டாயமா கழகக் கட்டாயமா Poll_c10 
63 Posts - 64%
heezulia
சமயத் தமிழை ஒதுக்கியது காலக் கட்டாயமா கழகக் கட்டாயமா Poll_c10சமயத் தமிழை ஒதுக்கியது காலக் கட்டாயமா கழகக் கட்டாயமா Poll_m10சமயத் தமிழை ஒதுக்கியது காலக் கட்டாயமா கழகக் கட்டாயமா Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
சமயத் தமிழை ஒதுக்கியது காலக் கட்டாயமா கழகக் கட்டாயமா Poll_c10சமயத் தமிழை ஒதுக்கியது காலக் கட்டாயமா கழகக் கட்டாயமா Poll_m10சமயத் தமிழை ஒதுக்கியது காலக் கட்டாயமா கழகக் கட்டாயமா Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
சமயத் தமிழை ஒதுக்கியது காலக் கட்டாயமா கழகக் கட்டாயமா Poll_c10சமயத் தமிழை ஒதுக்கியது காலக் கட்டாயமா கழகக் கட்டாயமா Poll_m10சமயத் தமிழை ஒதுக்கியது காலக் கட்டாயமா கழகக் கட்டாயமா Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமயத் தமிழை ஒதுக்கியது காலக் கட்டாயமா கழகக் கட்டாயமா


   
   
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Mar 14, 2010 5:30 pm

சமயத் தமிழை ஒதுக்கியது காலக் கட்டாயமா
கழகக் கட்டாயமா
பேராசிரியர் முனைவர் சாமி தியாகராசன்

பேராசிரியர் முனைவர் சாமி தியாகராசன்
Thuglak – Mar 14’2010


சமயத் தமிழை ஒதுக்கியதுகாலக் கட்டாயமா ? கழகக் கட்டாயமா ?
பேராசிரியர் முனைவர் சாமி தியாகராசன்


உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு :

பாண்டித்துரை தேவர் என்னும் பேரருளாளரால் நிறுவப்பட்டமதுரைத் தமிழ் சங்கத்துச் செந்தமிழ்இதழில், 1902-ஆம் ஆண்டில் பரிதிமாற் கலைஞர் என்னும் சூரிய நாராயண சாஸ்திரியார் அவர்கள்தமிழ் உயர் தனிச் செம்மொழியேஎனப் பல சான்றுகள் காட்டி எழுதி நிறுவினார். சமயத் தமிழை ஒதுக்கியது காலக் கட்டாயமா கழகக் கட்டாயமா Caamithiyagarajan
பேராசிரியர் முனைவர் சாமி தியாகராசன்

1918-ஆம் ஆண்டில் ஜே.எம். நல்லுசாமி பிள்ளை அவர்களும், நாவலர் .மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களும், திருச்சியில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில்தமிழ் செம்மொழியேஎனத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினர்.


1919, 1920, 1922, 1923 மற்றும் 1938-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கக்
கூட்டங்களில்சென்னைப் பல்கலைக்கழகம், தமிழைச் செம்மொழி என அறிந்தேற்க வேண்டும்என வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றியவர் தமிழவேள் .வே. உமாமகேசுவரம் பிள்ளை ஆவர். அயோத்தி அரண்மனையில் தமிழ் பேசப்பட்டது என வால்மீகி ராமாயணச் செய்தி கொண்டு எழுதி, தமிழின் தொன்மையை எடுத்துக் காட்டினார் செந்தமிழ் இதழாசிரியர் நாராயண ஐயங்கார்.


இந்தப் பெருமக்கள் தமிழை எந்த அளவுக்கு நேசித்தார்களோ, அந்த அளவுக்குத் தங்கள் சமயத்தை நேசித்தார்கள். சமயத் தமிழை நேசித்தார்கள். தேவாரமும், திருவாசகமும், நாலாயிரமும், கம்பனின் ராமகாதையும், சேக்கிழாரின் பெரிய புராணமும் அவர்கள் வாழ்க்கை நெறியை வகுத்தன. அவற்றையே அவர்கள் தங்கள் வாழ்முதலாகக் கொண்டனர்.

அந்தப் பெரியோர்கள் போற்றிக் கொண்டாடிய சமயத் தமிழ், செம்மொழி அன்று என்றும், அவர்கள் வாழ்க்கை நெறியாகக் கொண்டாடிய சமய நூல்கள் ஆய்வுக்குக் கொள்ளும் அளவிற்கு அறிவு சார்ந்தவை அல்ல என்றும் செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் முடிவு செய்துள்ளது. இன்று அந்தச் சான்றோர்கள் இருந்தால், உதிரக் கண்ணீர் உகுத்து நின்று வருந்துவார்கள் என்பது திண்ணம்.


கி.பி. 6-ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட காலமே செம்மொழித் தமிழின் பொற்காலம் எனச் செம்மொழிச் செய்தி மடல் கூறுகிறது. இது ஒரு வேடிக்கையான விந்தையான கூற்று. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பல கி.பி. 8, 9-ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவையே என இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.


குறிப்பாகஆசாரக் கோவையைச் சான்றுக்குக் கொள்வோம். தலைப்பே தமிழன்று. இந்நூல் சுக்கிர ஸ்மிருதி, மனு ஸ்மிருதி, ஸங்க ஸ்மிருதி, லகுஹரித ஸ்மிருதி எனப்படும் வடமொழி ஸ்மிருதி நூல்களின் செய்திகளைக் கொண்டு, வட சொற்கள் பல நிரவி எழுதப்பட்டுள்ளது. காலம் கி.பி. 9-ஆம் நூற்றாண்டு. இந்த நூலைச் செம்மொழித் தமிழ் நூல் எனக் கொள்ளும் ஆய்வு மையம், நமது சமயச் சான்றோர்களால் கொழுத்த தமிழில் அருளிச் செய்யப்பட்டவற்றைச் செம்மொழித் தமிழ் நூல்கள் அல்ல என முடிவு செய்துள்ளதை என்னென்று சொல்வது? எங்கே போய் முட்டிக் கொள்வது?

எங்கள் ஆய்விற்கு 6-ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட காலக் கணக்கீடே கொள்ளப்படுகிறது என்று ஆய்வு மையம் வாதிடுமேயானால், திருவாசகத்தின் காலம் கி.பி. முதல் நூற்றாண்டென திருமலைக் கொழுந்து பிள்ளையும், கி.பி. 2-ஆம் நூற்றாண்டென பொன்னம்பலப் பிள்ளையும், மூன்றாம் நூற்றாண்டென மறைமலை அடிகளாரும், மூவர் முதலிகள் காலத்திற்கு முற்பட்டதென சிவக்கவிமணியும் சொல்லும் முடிவுகளையே நாம் முன்னிறுத்த வேண்டிவரும்.

ஏதோ ஒரு நோக்கத்தில் செம்மொழித் தமிழ்ச் சமய நூல்களை ஆய்வு மையம் ஒதுக்கி விட்டது. அதன் நோக்கம் எதுவேயாயினும் ஆகுக. அது பற்றிய ஆய்வில் நாம் இறங்கப் போவதில்லை. செம்மொழித் தமிழாய்வு மையத்தின் நிலைப்பாட்டைக் கொண்டுச் சிந்திக்கும்போது, நடைபெறப் போகின்ற செம்மொழித் தமிழ் உலக மாநாட்டில், சமயத் தமிழ் இடம் பெறவில்லை; இடம் பெறாது என உறுதியாகத் தெரிகிறது.


கி.பி. 6-ஆம் நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்கள், இப்போது பேசப்படுகின்ற அறிவியல் தமிழை அறியாதவர்கள். ஆனால், அந்த அறிவியல் தமிழ் செம்மொழித் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அதற்கான அறிஞர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர்.


இமயம்முதல் குமரிவரை பரவிநிற்கும் இந்தியத்தின் வாழ்வியலில் இலக்கியத்தில் சமயமெனும் சிந்தனையில் தத்துவத்தில் தமிழ்மொழியின் பங்குண்டு சாற்றவேண்டும்.

- குலோத்துங்கன்

எவ்வளவு அருமையான அர்த்தமுள்ள கவிதை.

அசோக வனத்தில் சீதையைக் கண்ட அனுமன் அவளிடத்தில் வடமொழியில் பேசினால், சிறிது நேரத்துக்கு முன் வடமொழியே பேசிய ராவணன், வேற்றுருக் கொண்டு வந்து பேசுகின்றான் எனப் பயம் கொள்ளுவாள் எனச் சிந்தித்து, மக்கள் மொழியே பேச வேண்டும் என்று முடிவு செய்து, மதுரமான மொழியைத் தேர்ந்தெடுத்துப் பேசினான் என்கிறார் வால்மீகி.

வடமொழி தேவர்களுக்கான மொழியென்றும், மதுரமான (இனிமையான) தமிழ், மக்கள் மொழி என்றும் வால்மீகியார் குறிக்கின்றார் என வடமொழி, தமிழ்மொழி ஆகிய இரு மொழிகளிலும் வல்லவர்களான, மதுரைத் தமிழ்ச் சங்கத்து இதழான செந்தமிழ் ஆசிரியர் திரு. நாராயண அய்யங்காரும்; பேராசிரியர் ரா.இராகவையங்காரும் சொல்லுகின்றனர்.


மேலே குலோத்துங்கன் கவிதையின் சொல்லப்படும் குமரியையும் கடந்து தென்னிலங்கையிலும், வடபுலத்துக் கங்கை, யமுனைக் கரைகளிலும் தமிழ்அதுவும் மதுரத் தமிழ் செல்வாக்குடன் பங்கு பெற்று விளங்கியது என்பது மகிழ்ச்சிதானே!

இனிமையும் நீர்மையும் தமிழெனலாகும்எனப் பிங்கல நிகண்டு கூறும். இனிமை மட்டும் அன்றி ஒழுங்கையும் கொண்டது தமிழ் என்பது இந்தத் தொடருக்கான பொருளாகும்.

எந்த ஒரு மொழி, நேர்த்தியையும் இனிமையையும் பெற்று விளங்குகிறதோ அதுசெம்மொழிஎனப்படும். இதுபற்றியே ஈட்டுரைகாரர்சர்வாதிகாரம் படைத்த திராவிட பாஷைஎனத் தமிழைப் போற்றுகின்றார். வேதாந்த தேசிகரோ தமிழைஸ்வைர பாஷாஎன்றே வருணிக்கின்றார். இதற்கான பொருள்ஒரு தனிச் செம்மொழிஎன்பதாகும்.

திருவரங்கத்தில் பெருமாளை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு செல்லும்போது, திராவிட வேதம் எனச் சொல்லப்படும்நாலாயிரம்முன்னே செல்ல; வடமொழி வேதம் பின்னே செல்வது பற்றி, பெருமாள் தன் அடியவர்களின் தமிழில் மனத்தைப் பறி கொடுத்து, ரசித்துக் கொண்டு பின்னே செல்கின்றான் என்பதாகப் பெரியவர்கள் சொல்வார்கள்.

தமிழின் நீர்மை பேசிஎன்பார் திருஞான சம்பந்தர். திருஞான சம்பந்தரைச் சைவ உலகம்தமிழ் ஞானசம்பந்தன்என்றே குறிப்பிடும். தமிழே அவர். அவரே தமிழ். “நாளும்
இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்எனச் சுந்தரர் அவரைப் பற்றிப் புகழுகின்றார். திருஞான சம்பந்தர் புராணத்தைச் சொல்ல வந்த சேக்கிழார், 155 இடங்களில் ஞானசம்பந்தரைத் தமிழோடு தொடர்பு படுத்திப் பேசுகின்றார் என்றால், தமிழிற்கும் அவருக்குமான தொடர்பை நாம் நன்கறியலாம்.

எனதுரை தனதுரைஎன்பது ஞானசம்பந்தர் வாக்கு. இதற்கு என்ன பொருள்? நான் சொல்வது இறைவன் சொல்வதேயாகும் என்பதாகும். அப்படியாயின் இறைவனும் அவரும் ஒன்றே. ஈசன்தான் அவர். அவர்தான் ஈசன். சிவபெருமான்தான் தமிழை அகத்தியருக்குத் தந்தவன் என்பதைத்தழற்புரை சுடர்க்கடவுள் தந்ததமிழ் தந்தான்எனக் கம்பன் மிக அழகாகச் சொல்கின்றான். ஆகத்தமிழ்த் தலைவன் ஞானசம்பந்தன்எனப் பெரியோர் கூறுவது எவ்வளவு பொருள் பொதிந்த ஒன்று என்பதை உணரலாம்.

சைவம் வைணவம் எனப்படும் தமிழ்ச் சமயங்களோடு தமிழிற்கான தொடர்பைப் பார்த்த நாம், அந்தத் தமிழ்ச் சமயம், வாழ்க்கையை எவ்வாறு செம்மைப்படுத்துகிறது என்பதைச் சிறிது பார்ப்போம்.

தாழ்ந்த குலத்தினர் எனப்படும் திருநீலகண்ட யாழ்ப்பாணரை, உயர்ந்த குலத்தினர் எனப்படும் ஞானசம்பந்தர் எதிரே சென்று வரவேற்று; “ஐயரே!” என அழைத்துக் கோயிலுக்குக் கொண்டுபோய் இறைவனைக் கும்பிடச் செய்து, “உங்கள் இறைவருக்கு பொருந்தும் யாழிசை கொண்டு பாடும்எனச் சொன்னது, தமிழ்ச் சமயத்தில் ஜாதிப் பாகுபாடு கிடையாது என்பதைப் பறைசாற்றவில்லையா?

உங்கள் இறைவருக்குஎன்னும் தொடர் உரிமையை உறுதி செய்வதாகும். இந்த அருமைப் பாட்டை எண்ணிப் பார்க்க வேண்டும்.

தான் பெற்ற புதல்வர்களுக்காகத் தரணியையே நாசப்படுத்தும் ஜனநாயகத் தலைவர்கள் இருக்கும் நமது நாட்டில்; ‘ஒரு குலத்துக்கு ஒரு மைந்தன்தான் உள்ளான், வேறு வாரிசு இல்லைஎன்ற நிலையிலும், தனது மகனைத் தேர்க்காலில் இட்டுக் கொன்று, நீதியை வீதியிலேயே வழங்கிய மனுநீதிச் சோழனின் வரலாறு, தமிழ்ச் சமய வாழ்வியலுக்கு ஒப்பற்ற ஓர் எடுத்துக் காட்டில்லையா?

பறையரான நந்தனையும், பார்ப்பனரான மாணிக்கவாசகரையும் ஒன்றுபோல் தனது திருவடிக் கீழ் ஒடுக்கிக் கொண்ட தில்லைக் கூத்தனின் செயல்பாடு, எதனைக் காட்டுகின்றது? ஆண்டவன் முன் அனைவரும் சமம் என்பதைக் காட்டவில்லையா?

63 நாயன்மார்கள் சிலை வரிசையைப் பாருங்கள். எல்லாரும் நிற்கின்ற இடத்தில், காரைக்கால் அம்மையார் மட்டும் உட்கார்ந்த கோலத்தில் இருப்பார். பேய் உருக்கொண்ட அம்மையார் நியாயமாக யார் கண்ணிலும் படக்கூடாது. அந்தப் பேய் நிற்பதால் அதற்கும் சங்கடமில்லை. நமக்கும் சங்கடமில்லை. இருப்பினும் தாய்மையைப் போற்றும் தமிழ்ச் சமயப் பண்பாடு, அவரை அமர வைத்து அழகு பார்க்கின்றது.

(கட்டுரையாளர், கும்பகோணம் அரசு கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றியவர். திராவிடச் சான்றோர் பேரவைத் தலைவராக இருப்பவர்.)

நந்திதா குறிப்பு
சமஸ்கிருதம் தேவ மொழி என்பதை என்னால் ஒப்ப முடியவில்லை, காரணம் சமஸ்கிருதம் என்ற சொல் சம்ஸ்காரேண க்ருதம் ( பண்படுத்தப் பட்டது) என்ற பொருளைத் தரும், துவைக்கப் பட்ட துணி என்றால் அது துவைக்கப் படாத நிலையில் இருந்தது என்பது அருத்தா பத்தி, ஆக சமஸ்கிருதம் என்பது பண்படா நிலையிலிருந்து பண்பட்ட நிலைக்கு வந்தது என்று தேறும், பாணினி என்பார் சமஸ்கிருதத்துக்கு அஷ்டாத்யாயி என்ற இலக்கணம் வகுத்தார், அதற்கு முன்பு இலக்கணம் இருந்திருந்தால் முதல் இலக்கணத்தைக் குறிப்பிட்டிருப்பார், பதஞ்சலி முனிவர் தாம் எழுதிய யோக சாத்திரத்தை வழி நூல் என்றே கூறுகின்றார், ( அத யோக அனுசாசனம்) இதற்கு முதல் நூல் ஹிரண்ய கர்பர் என்பவர் எழுதிய நூலாகும்,சான்று (ஹிரண்யகர்போ யோகஸ்ய வக்தா நான்ய: புராதன) பொருள் ஹிரண்ய கர்பர் என்பவர் தான் முதலில் யோக நூலை இயற்றினார் அதற்கு முன் எவரும் இயற்றவில்லை என்பது ஆம். கம்பனும் கூட தான் எழுதிய இராம காதைக்கு முதல் நூல் வான்மீகியார் எழுதிய இராமாயணம் என்கிறார் (நாரணன் விளையாட்டெல்லாம் நாரத முனிவன் கூற ஆரணக் கவிதை செய்தான் அறிந்த வான்மீகி என்பான் )
பாணினி முனிவருக்கு முன்னால் தேவர்கள் பண்படா மொழியைப் பேசி வந்தனர் என்றும் அவர்கள் பேசி வந்த பண்படாமொழிக்கு இலக்கணம் வகுக்க ஒரு மானிட ரிஷி தேவைப் பட்டது என்பது பொருந்தாக் கூற்று, வட மொழி தேவ மொழியானால் தமிழ் இறை மொழி, திருமூலர் தன்னைப் பிறப்பித்த காரணத்தைச் சொல்லுங்கால்
என்னை நன்றாய் இறைவன் படைத்தான்
தன்னை நன்றாய்த் தமிழ் செய்யுமாறே
என்கிறார், தன்னைத் தமிழில் பாடச் சொல்லவில்லை இறைவன் தன்னைத் தமிழாகவே ஆக்குமாறு கூறினான் என்கிறார், ஈகரையின் அன்பர்களின் பொறுமையைச் சோதிக்கக் கூடாது என்ற எண்ணத்தில் முடித்து அமைவுறுகிறேன்
அன்புடன்
நந்திதா.


சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Mar 14, 2010 5:45 pm

அருமையான கட்டுரை. தங்கள் விளக்கமும் அருமை.
கோவில்களில் அர்ச்சனை செய்யும் மொழி சமஸக்ரிதம், அதற்க்கு அவர்கள் கூறும்
காரணம் சமஸ்க்ரிதம் ஒருவித அதிர்வை உண்டுக்குவதாக, ஒப்புக்கொள்கிறேன்.

தமிழிலும் சமஸ்க்ரிதத்திற்கு இணையான மந்திரங்கள்/பாடல்கள் உள்ளது (எ.கா திருவாசகம், திருமூலரின் திருமந்திரம் போன்ற பல).
ஏன் தமிழை பயன்படுத்தக்கூடாது. யாருக்கும் புரியாத ஏன் அர்ச்சகருக்கே
புரியாமல் மனப்பாடம் செய்து சில வேளைகளில் தவராகாவும்(யாருக்கு
தெரியப்போவுது என்ற மனப்பான்மை) அர்ச்சனை செய்கின்றனர்.

அதற்க்கு பதிலாக எல்லாருக்கும் புரியும் தமிழில் (திருமந்திரம்,
திருவாசகம் சாமான்ய மக்களுக்கு புரிவது சிறிது கடினம் தான் என்றாலும் "something is better than nothing") அர்ச்சனை
செய்தால் நன்றாக இருக்கும் என்பது என் ஆசை.

நன்றி
சரண்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Sun Mar 14, 2010 7:06 pm

எல்லாக்கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யலாம். நம் மக்கள் சமஸ்கிரித அர்ச்சனையையே பெரும்பாலும் விரும்புகின்றனர்.

jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Sun Mar 14, 2010 7:21 pm

அருமையான கட்டுரை

avatar
Raja2009
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 25/07/2009

PostRaja2009 Sun Mar 14, 2010 9:24 pm

அரிய செய்திகள் அடங்கிய கட்டுரை. இங்கே பதிப்பித்ததற்கு நந்திதாவுக்கு நன்றி. நந்திதாவின் ஸம்ஸ்க்ருதம் என்ற சொல் விளக்கம் அருமை. தமிழும், ஸம்ஸ்க்ருதமும் இரு கண்கள். இரண்டும் செம்மொழிகள் தான். ஒரே கலாசாரத்தை, அறத்தை பறைசாற்ற வந்தவை தான்.

ராவணன் ஸாம வேதத்திலும், இசையிலும் வல்லவன் என்று படித்திருக்கிறேன். அவன் ஸம்ஸ்க்ருதத்தில் பேசினான் என்பது புதிய செய்தி.

6ஆம் நூற்றாண்டுக்கு முன் என்றால் எந்தந்த இலக்கியங்களை எடுத்துக் கொள்ள போகிறார்கள்? நாத்திகத்திற்கு அவைகள் உதவாதே. திருக்குறள் என்றால் அதில் கடவுள் வாழ்த்து இருக்கிறது. தொல்காப்பியம் என்றால் அதில் வேதத்தை ஒட்டிய மண முறைகளை கற்பியலில் கூறப்பட்டுள்ளது. சிலப்பதிகாரம் என்றால் அதிலும் ஆய்ச்சியர் குரவை முதலியவைகளில் ராமனைப் பற்றியும், கண்ணனைப் பற்றியும் வருகிறதே...!! எதை ஒதுக்கப் போகிறார்கள்? எதை எடுத்துக் கொள்ளப் போகிறார்கள்?
கட்டுரை ஆசிரியர் கூறியது போல் சமய தமிழை விடுத்து தமிழ் மாநாடு நடத்துவது கண்ணை பிடுங்கி எடுத்து விட்டு ஓவியம் கற்க முனைவது போல் தான் இருக்கும்.

ராஜா

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Mar 14, 2010 9:43 pm

அருமையான கட்டுரை...பகிர்வுகளுக்கு நன்றி.. தமிழ் பற்றி அரிய கொடுத்தமைக்கு எனது இனிய வாழ்த்துக்கள் சமயத் தமிழை ஒதுக்கியது காலக் கட்டாயமா கழகக் கட்டாயமா 154550 சமயத் தமிழை ஒதுக்கியது காலக் கட்டாயமா கழகக் கட்டாயமா 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சமயத் தமிழை ஒதுக்கியது காலக் கட்டாயமா கழகக் கட்டாயமா Ila
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 14, 2010 10:19 pm

அசோக வனத்தில் சீதையைக் கண்ட அனுமன் அவளிடத்தில் வடமொழியில் பேசினால், சிறிது நேரத்துக்கு முன் வடமொழியே பேசிய ராவணன், வேற்றுருக் கொண்டு வந்து பேசுகின்றான் எனப் பயம் கொள்ளுவாள் எனச் சிந்தித்து, மக்கள் மொழியே பேச வேண்டும் என்று முடிவு செய்து, மதுரமான மொழியைத் தேர்ந்தெடுத்துப் பேசினான் என்கிறார் வால்மீகி.

சமஸ்கிருதம் தழைத்தோங்கிய காலத்தில் இங்கே தமிழ் கொடிகட்டிப்பறந்தது. நிறைய சொற்கள் தமிழிலிருந்து வடபுலத்தில் வழ்ங்கப்பட்டது என்பதற்கும் சான்று உண்டு.

அன்னதொரு பெருமையுடைய தமிழில் இறைவன் அர்ச்சணை ஏற்கமாட்டான் என்று சிதம்பர புல்லுருவிப்பண்டிதர்கள் பிடிவாதமாக இருப்பது தவறான செயலாகும்.

அருமையான கட்டுரையைப் பிரசுரித்த நந்திதா அவர்களுக்கு நன்றி.

கட்டுரை ஆசிரியர் முனைவர் தியாகராஜன் எனக்கு தமிழ்ப்பயிற்றுவித்தவர் என்பதை பெருமையுடன் நினைவு கூறுகிறேன்.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Mar 14, 2010 10:50 pm

வணக்கம்
முனைவர் திரு சாமி தியாகராசன் அவர்களிடம் தாங்கள் தமிழ் படித்தீர்கள் என்பது மகிச்சிகரமான செய்தி. அவர் ஒரு சிறந்த தமிழ்ப் பற்றாளர். தூய தமிழ் வல்லுநர். அவரிடம் படித்த தங்கள் தமிழ் மிளிர்கிறது, ஒரு விடயம், என் கருத்தில் ஏதாவது பிழை இருக்கிறதா என்பதை அறிய விரும்புகிறேன்
அன்புடன்
நந்திதா

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 14, 2010 11:33 pm

nandhtiha wrote:வணக்கம்
முனைவர் திரு சாமி தியாகராசன் அவர்களிடம் தாங்கள் தமிழ் படித்தீர்கள் என்பது மகிச்சிகரமான செய்தி. அவர் ஒரு சிறந்த தமிழ்ப் பற்றாளர். தூய தமிழ் வல்லுநர். அவரிடம் படித்த தங்கள் தமிழ் மிளிர்கிறது, ஒரு விடயம், என் கருத்தில் ஏதாவது பிழை இருக்கிறதா என்பதை அறிய விரும்புகிறேன்
அன்புடன்
நந்திதா

என்னிலும் நிறைய தாங்கள் அறிந்தவர். உங்கள் கருத்தில் பிழை ஏதும் கண்டறிய இயலவில்லை.

நான் கும்பகோணம் கல்லூரியில் தமிழ் இளங்கலைப் பட்டமும் முதுகலைப் பட்டமும் பயின்ற போது முனைவர் தியாகராசன் முனைவர் எழில்முதல்வன் ( மா.இராமலிங்கம்) ஆகியோரின் செல்லப்பிள்ளையாக இருந்து அவர்களிடம் பணிவுடன் தமிழ் கற்றுள்ளேன்.

ஆனாலும் பொருளாதாரச்சந்தையில் புது தில்லியில் வந்து ஆங்கில ஆசிரியராகப்பணியாற்றி வரும் இன்னாளில் ( ஆங்கில முதுகலைப்பட்டமும் பெற்றுள்ளேன் ) தமிழில் என்னால் அதிகப்புழக்கம் இல்லாமல் போய்விட்டது.

ஈகரை முத்தமிழ் மன்றம் தமிழ்மன்றம் ஆகிய தளங்கள் என்னை ஊக்குவித்து என் தமிழைப் புதுப்பித்து இப்போது உங்கள் முன் நான்...

உங்கள் திறம் கண்டு அதிசயித்து நின்றுள்ளேன் பல சமயம்.

வாழ்க நந்திதா...வளர்க உங்கள் தமிழ்த்தொண்டு...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Mar 15, 2010 12:46 am

கலை wrote:
nandhtiha wrote:வணக்கம்
முனைவர் திரு சாமி தியாகராசன் அவர்களிடம் தாங்கள் தமிழ் படித்தீர்கள் என்பது மகிச்சிகரமான செய்தி. அவர் ஒரு சிறந்த தமிழ்ப் பற்றாளர். தூய தமிழ் வல்லுநர். அவரிடம் படித்த தங்கள் தமிழ் மிளிர்கிறது, ஒரு விடயம், என் கருத்தில் ஏதாவது பிழை இருக்கிறதா என்பதை அறிய விரும்புகிறேன்
அன்புடன்
நந்திதா

என்னிலும் நிறைய தாங்கள் அறிந்தவர். உங்கள் கருத்தில் பிழை ஏதும் கண்டறிய இயலவில்லை.

நான் கும்பகோணம் கல்லூரியில் தமிழ் இளங்கலைப் பட்டமும் முதுகலைப் பட்டமும் பயின்ற போது முனைவர் தியாகராசன் முனைவர் எழில்முதல்வன் ( மா.இராமலிங்கம்) ஆகியோரின் செல்லப்பிள்ளையாக இருந்து அவர்களிடம் பணிவுடன் தமிழ் கற்றுள்ளேன்.

ஆனாலும் பொருளாதாரச்சந்தையில் புது தில்லியில் வந்து ஆங்கில ஆசிரியராகப்பணியாற்றி வரும் இன்னாளில் ( ஆங்கில முதுகலைப்பட்டமும் பெற்றுள்ளேன் ) தமிழில் என்னால் அதிகப்புழக்கம் இல்லாமல் போய்விட்டது.

ஈகரை முத்தமிழ் மன்றம் தமிழ்மன்றம் ஆகிய தளங்கள் என்னை ஊக்குவித்து என் தமிழைப் புதுப்பித்து இப்போது உங்கள் முன் நான்...

உங்கள் திறம் கண்டு அதிசயித்து நின்றுள்ளேன் பல சமயம்.

வாழ்க நந்திதா...வளர்க உங்கள் தமிழ்த்தொண்டு...!
சமயத் தமிழை ஒதுக்கியது காலக் கட்டாயமா கழகக் கட்டாயமா 359383

சமயத் தமிழை ஒதுக்கியது காலக் கட்டாயமா கழகக் கட்டாயமா 678642 சமயத் தமிழை ஒதுக்கியது காலக் கட்டாயமா கழகக் கட்டாயமா 678642 சமயத் தமிழை ஒதுக்கியது காலக் கட்டாயமா கழகக் கட்டாயமா 678642



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக