புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனம் எனும் மாயக்கண்ணாடி Poll_c10மனம் எனும் மாயக்கண்ணாடி Poll_m10மனம் எனும் மாயக்கண்ணாடி Poll_c10 
52 Posts - 46%
ayyasamy ram
மனம் எனும் மாயக்கண்ணாடி Poll_c10மனம் எனும் மாயக்கண்ணாடி Poll_m10மனம் எனும் மாயக்கண்ணாடி Poll_c10 
46 Posts - 41%
mohamed nizamudeen
மனம் எனும் மாயக்கண்ணாடி Poll_c10மனம் எனும் மாயக்கண்ணாடி Poll_m10மனம் எனும் மாயக்கண்ணாடி Poll_c10 
4 Posts - 4%
prajai
மனம் எனும் மாயக்கண்ணாடி Poll_c10மனம் எனும் மாயக்கண்ணாடி Poll_m10மனம் எனும் மாயக்கண்ணாடி Poll_c10 
4 Posts - 4%
Jenila
மனம் எனும் மாயக்கண்ணாடி Poll_c10மனம் எனும் மாயக்கண்ணாடி Poll_m10மனம் எனும் மாயக்கண்ணாடி Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
மனம் எனும் மாயக்கண்ணாடி Poll_c10மனம் எனும் மாயக்கண்ணாடி Poll_m10மனம் எனும் மாயக்கண்ணாடி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மனம் எனும் மாயக்கண்ணாடி Poll_c10மனம் எனும் மாயக்கண்ணாடி Poll_m10மனம் எனும் மாயக்கண்ணாடி Poll_c10 
1 Post - 1%
M. Priya
மனம் எனும் மாயக்கண்ணாடி Poll_c10மனம் எனும் மாயக்கண்ணாடி Poll_m10மனம் எனும் மாயக்கண்ணாடி Poll_c10 
1 Post - 1%
kargan86
மனம் எனும் மாயக்கண்ணாடி Poll_c10மனம் எனும் மாயக்கண்ணாடி Poll_m10மனம் எனும் மாயக்கண்ணாடி Poll_c10 
1 Post - 1%
jairam
மனம் எனும் மாயக்கண்ணாடி Poll_c10மனம் எனும் மாயக்கண்ணாடி Poll_m10மனம் எனும் மாயக்கண்ணாடி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனம் எனும் மாயக்கண்ணாடி Poll_c10மனம் எனும் மாயக்கண்ணாடி Poll_m10மனம் எனும் மாயக்கண்ணாடி Poll_c10 
95 Posts - 57%
ayyasamy ram
மனம் எனும் மாயக்கண்ணாடி Poll_c10மனம் எனும் மாயக்கண்ணாடி Poll_m10மனம் எனும் மாயக்கண்ணாடி Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
மனம் எனும் மாயக்கண்ணாடி Poll_c10மனம் எனும் மாயக்கண்ணாடி Poll_m10மனம் எனும் மாயக்கண்ணாடி Poll_c10 
8 Posts - 5%
prajai
மனம் எனும் மாயக்கண்ணாடி Poll_c10மனம் எனும் மாயக்கண்ணாடி Poll_m10மனம் எனும் மாயக்கண்ணாடி Poll_c10 
6 Posts - 4%
Jenila
மனம் எனும் மாயக்கண்ணாடி Poll_c10மனம் எனும் மாயக்கண்ணாடி Poll_m10மனம் எனும் மாயக்கண்ணாடி Poll_c10 
4 Posts - 2%
Rutu
மனம் எனும் மாயக்கண்ணாடி Poll_c10மனம் எனும் மாயக்கண்ணாடி Poll_m10மனம் எனும் மாயக்கண்ணாடி Poll_c10 
3 Posts - 2%
Baarushree
மனம் எனும் மாயக்கண்ணாடி Poll_c10மனம் எனும் மாயக்கண்ணாடி Poll_m10மனம் எனும் மாயக்கண்ணாடி Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மனம் எனும் மாயக்கண்ணாடி Poll_c10மனம் எனும் மாயக்கண்ணாடி Poll_m10மனம் எனும் மாயக்கண்ணாடி Poll_c10 
2 Posts - 1%
viyasan
மனம் எனும் மாயக்கண்ணாடி Poll_c10மனம் எனும் மாயக்கண்ணாடி Poll_m10மனம் எனும் மாயக்கண்ணாடி Poll_c10 
1 Post - 1%
M. Priya
மனம் எனும் மாயக்கண்ணாடி Poll_c10மனம் எனும் மாயக்கண்ணாடி Poll_m10மனம் எனும் மாயக்கண்ணாடி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனம் எனும் மாயக்கண்ணாடி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 15, 2010 10:07 pm

மனம் எனும் சொல் தமிழ் இலக்கியங்களில் நீண்டகாலமாகவே பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு சொல்லாகும். மனித மனங்களின் உயிரோட்டங்களை முதன் முதலில் படம்பிடித்து காட்டியதும் இலக்கியங்களே! தலைவர் தலைவி உரையாடல்கள், உயிரூட்டமான உணர்வு பரிமாற்றங்கள், உன்னதமான எதிர்பார்ப்புகள், நலிவுகள், மெலிவுகள், சிலிப்புகள், சிந்தனைப் பெருமிதங்கள், சோர்வுகள், சோம்பல்கள், கிளர்ச்சிகள், தளர்ச்சிகள், தாழ்ச்சிகள், உயர்ச்சிகள், குழப்பங்கள், குதர்க்கங்கள், என எத்தனை எத்தனையோ மன நிலைகளை கண்ணாடி போல் கலங்கரை விளக்கம் போல் நம் பழைய இலக்கியங்கள் படம்பிடித்து காட்டுகின்றன.

மனத்தின் உயர்வான எண்ணங்களும் சிந்தனைகளும் வாழ்வில் எத்தனை வெற்றிகளுக்கு வழிகோலுகின்றன என்பதனை திருவள்ளுவர் தனது நூலிலே எடுத்துரைக்கின்றார்.

சீத்தலை சாத்தனார் தான் எழுதிய மணிமேகலையில் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவனின் செயல்பாடுகளை சிறப்புடன் சித்தரிக்கின்றார்.

சித்தமருத்துவம் கிரிகை நிதானம் என்ற நூலில் பதினெட்டு வகையான மனச்சிதைவுளையும் அதன் குறிகுணங்களையும் தெளிவாக எடுத்துரைக்கின்றது. இன்றைய நவீன மருத்துவம் உரைக்கும் சிதைவு குறிகளும் இவைகளும் மிகவும் ஒத்துக் காணப்படுகின்றன.

இங்ஙனம் மனதின் பண்புகளும், சிதைவுகளும் நம் பண்டைய தமிழர்களாலும் சிறப்புடன் ஆய்வு செய்யப்பட்டு வரைமுறை செய்யப்பட்டும் உள்ளன என்பதனை காணமடிகிறது.

இது போன்றே ஐரோப்பிய நாடுகளிலும், கிரேக்க நாடுகளிலும் மனசிதைவு நோய்கள் உடல் நோய்களை போன்று மனதில் இயற்கையாக தோன்றும் நோய்களே என விவாதித்து வந்துள்ளனர் சாக்ரட்டீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில், ஹிப்போ கிராட்டஸ் போன்றவர்கள். ஆனால், எத்துணை உரமிக்க, வளமிக்க அறிவார்ந்த கருத்துக்களை முன்வைத்தபோதும் அன்றைய மூடபழக்க வழக்கங்களும் முட்டாள் தளங்களும் மதம் சார்ந்தும் அரசு சார்ந்தும் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டேயிருந்தன.

மனச்சிதைவு நோயாளிகள் பேய், பிசாசு பிடித்தவர்கள் என கருதப்பட்டு மந்திரம் மாயாஜாலங்கள் என சின்னா பின்னமாக்கப்பட்டனர். அதிகார ஆதிக்கத்திற்குள் அகப்பட்ட அகதிகள் போல் அத்தகைய நோயாளிகள் அன்றைய மதவாதிகளின் பேச்சுக்களினால் உயிர் மெலிந்து, உடல் மெலிந்து துன்புற்றனர். அக்காலத்து மன நோயாளிகளுக்கு கீழ்கண்ட கொடுமையான சிகிட்சை முறைகள் செய்யப்பட்டன.

1. திமிங்கல தோலினால் செய்யப்பட்ட சாட்டையினால் உயிர்போகும் அளவுக்கு அடித்து துன்புறுத்தப்பட்டனர்.

2. மண்டை ஓட்டுக்குள் ஆவி புகுந்துவிட்டதால் அது நாட்டுக்கும், வீட்டுக்கும் தீங்குவிளைவிக்கும் என, மூடத்தனமான கட்டுக்கதைகளை அவிழ்த்தவிட்டு அதுபோன்றோர் மண்டை ஓட்டை துளைத்து ஆவியை வெளியேற்றும் சிகிட்சைகள் செய்யப்பட்டன.

3. பேய் பிடித்ததாக கருதப்பட்டவர் தனக்கு பேய் பிடித்திருக்கிறது என ஒப்புக்கொள்ளும் வரை வேகமாக சுழலும் எந்திரத்தில் சுழல விடப்பட்டனர்.

4. தலைகீழாக கட்டி தொங்கவிடப்பட்டனர்.

5. தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டனர்.

6. கல்லால் அடிக்கப்பட்டனர்.

7. சுண்ணாம்பு காளவாயில் நீற்றபட்டனர்.

8. சங்கிலியால் பிணைக்கப்பட்டு தீயில் போடப்பட்டனர்.

9. தலையை வெட்டி கொலை செய்யப்பட்டனர்.

(தனக்கெதிராக வரும் அறிவார்ந்த சொல்வன்மைமிக்க அறிவாளிகளும் பேய் பிடித்தவன் எனக்கூறி இதுபோன்று சூட்ஷ§மமாக பழிவாங்கப்பட்டனர்). இன்னும் என்னென்ன கொடுமைகள் அப்பப்பா நெஞ்சே வெடித்துவிடும்.

இதில் ஆண், பெண் குழந்தைகள் என்ற பாகுபாடுகளும் காட்டப்படவில்லை. அத்தனை கொடுபாதகங்கள், கொலை பாதகங்கள் இவையெல்லாம் ஐரோப்பாவில் உச்சக்கட்டத்தை எட்டியது. கி.பி. 10 -ம் நூற்றாண்டில் தான் என அறிவியல் வரலாறு எடுத்துரைக்கின்றன.

இத்தகைய செயல்கள் ஓரளவேனும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. மருத்துவ பேரறிஞர் சிக்மண்ட் பிராய்டின் மனநிலை பகுப்பாய்வுகளுக்கு பின்னர் தான். அவர் சிறந்த மனயியல் மாமேதையாக விளங்கியவர். இலக்கியம், புராணங்களிலிருந்து கூட மனநல பகுப்பாய்வுக்கான சான்றுகளை எடுத்துக் கூறியவர். இவருக்கு பின் வந்த குஸ்தவ்புங், ஆட்லர், எரிக் எரிக்ஷன், எரிஃபுரோம், சலீவான், லக்கான் போன்ற பேரறிஞர்களும் இலக்கியங்களை மன இயல் ஆய்வுகளுக்கு சான்று காட்டி உள்ளனர்.

சிக்மண்ட் பிராய்டின் மனிதமனமானது மூன்று விதபடி நிலைகளைக் கொண்டதாக பகுப்பாய்வு செய்துள்ளார். அதன்படி,

1. வெளிமனம்
2. நடுமனம்
3. ஆழ்மனம்

என்ற மூன்றாக விளக்கினார். வெளிமனமானது எப்போது புற உலகோடு தொடர்புடையதாகும். மனிதனின் பல்வேறு செயல்களையும் கட்டுபடுத்துவதோடு, மனதின் ஆற்றலையும் அதன்பால் தோன்றும் சிந்தனைகளையும் தனக்குத்தானே கட்டுப்படுத்தி ஒரு சீரான நிலைக்கு கொண்டு வருகிறது.

இடைமனமானது மிக முந்தைய குழந்தை வளர்ச்சிப் பருவத்திலிருந்தே உருவாகிறது. இது வெளிப்புறமனதிற்கும், அகமனதிற்கும் இடையில் இனம்புரியா நிலையில் காணப்படும். எனினும் ஆழ்மனதைக் கட்டுப்படுத்தும் தன்மையுடையதாக காணப்படும்.

அகமனம் என்பது ஆயிரமாயிரம் எண்ண அலைகளின் சங்கமமாக திகழ்கிறது. நிறைவேறாத நினைவுகள், அடக்கி வைக்கப்பட்ட ஆசைகள், உணர்வுகள் அனைத்தும் வெளிமனதிற்கு வராமலேயே இங்கு தான் தங்கிக் கிடக்கின்றன. இயல்பான உணர்வுகள் கூட இங்கு தான் அடக்கி வைக்கப்பட்டுள்ளன. இம்மனதில் அடக்கி வைக்கப்பட்ட ஆதங்கமிக்க உணர்ச்சிகளும், பாலுணர்வும், பகைமை எண்ணங்களும் தான், பின்னர் பல்வேறு மன நோய்களுக்கும் காரணமாக அமைகின்றன என்பது தான் பிராடின் ஆய்வுகளின் முடிவாகும்.

மனநிலை பாதிப்பிற்கான அறிகுறிகளாக பல்வேறு பிரதிபலிப்புகள் நம்மிடம் தோன்றுகின்றன. அவைகளை கட்டுப்படுத்துவதன் மூலம் நாம் இயல்பு நிலைக்கு திரும்பிவிடலாம். ஒருவேளை நம்மிடம் தோன்றும் பிரதிபலிப்புகளை கட்டுப்படுத்த இயலாமல் நீண்ட நாட்களுக்கு தொடர்ந்து சென்றுவிட்டால் அது மனநிலையை பாதித்து நம்மை மனநோயாளி ஆக்கி விடுகிறது.

ஆவேச உணர்ச்சிகள், அளவிற்கு அதிகமான சிந்தனைக்குழப்பங்கள் பிடிவாத உணர்வுகள், நினைவு தடுமாற்றங்கள், பண்புமாற்றங்கள், செயல்மாற்றங்கள், மித மிஞ்சிய கோபம், மவுனம் போன்றவைகள் மனநிலையை பாதிப்பதற்கு முன்னேயே கட்டுப்படுத்தப்படாமல் செல்லுமானால் இதுவே மன நோயாளியாக மாறுவதற்கு வழி வகுத்துவிடுகிறது.

நமது மூளையில் தோன்றும் அதில்வுகளுக்கும், மனநிலைக்கும் நெருங்கிய தொடர்புகள் உள்ளதனை அறிவியல் ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன. இந்த அதிர்வுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் அவைகளை ஆல்பா, பீட்டா, தீட்டா, டெல்டா நிலைகளாக பகுத்துள்ளனர். ஆல்பா நிலையில் மூளையின் அதிர்வுகள் வினாடிக்கு 8 - லிருந்து 14 வரை இருக்கும். பீட்டா நிலையில் 10-லிருந்து 30 வரை இருக்கும். தீட்டா நிலையில் 4-லிருந்து 7 வரை இருக்கும். டெல்டா நிலையில் 1 முதல் 2 வரை இருக்கும். இந்த அதிர்வுகளின் நிலைகள் மனதின் வெவ்வேறு நிலைகளையும் அதற்கேற்ப உடற் வெளிப்பாடுகளையும் காட்டுகின்றன.

இசையைக் கேட்டு ரசிக்கின்ற போதும், ஏதாவது ஒரு வேலையை அமைதியாக செய்து கொண்டிருக்கும் போதும் மூளையின் அதிர்வு குறைந்து ஆல்பா நிலையில் காணப்படும்.

ஆவேச உணர்ச்சிகள், சண்டை சச்சரவுகள், நடுக்கங்கள், உரத்த சத்தத்துடன் பேசுகின்ற போதெல்லாம் மூளையின் அதிர்வலைகள் மிஞ்சி பீட்டா நிலையிலிருக்கும்.

தீட்டா நிலையில் ஆழ் மனதின் பிரகாசம் அதிகரிக்கும். மூளை செயல்பாடு அதிகரிக்கும். வலது பக்கமூளை பெருகும். ஆழமான சிந்தனைகளும் உடலின் நேய் எதிர்ப்பு தன்மையும் அதிகரிக்கும். இந்நிலை தூக்கத்தில் தான் அதிகமாக கிடைக்கிறது. எனவே தூக்கம் மிக மிக முக்கியம் என்று அறிவியல் வலியுறுத்துகிறது.

டெல்டா நிலையில் மூளையின் அதிர்வானது வினாடிக்கு 1 - லிருந்து 2 வரை இருக்கும். இந்நிலையை தான் கோமா நிலை அல்லது கனவு நிலை என்று அறிவியலறிஞர்கள் கூறுகின்றனர். ஐம்புலன்களையும் அடக்கிய சமாதிநிலை என்று யோகநிலை வல்லுநர்கள் கூறுவதும் இந்த நிலையே ஆகும். இந்நிலையில் வெளியில் நடக்கும் எந்த செயல்பாடுகளும் மனதை பாதிப்பதில்லை, ஆழ்மனதின் ஆட்சியில் தூக்கத்தின் கடைசி நிலையில் இருப்பர். உடல் செயல்பாடு அடங்கி உயிர் இயக்கங்கள் மட்டும் நடந்துகொண்டேயிருக்கும்.

உடல், மனம் இவைகளில் தோன்றும் நோய்கள் உடலமைப்பு, மரபணுச் செயல்பாடுகள், குடும்ப சூழ்நிலை, சமூக கலாச்சார சூழ்நிலை, பொருளாதார நிலைகள், கல்வி நிலைகள் போன்றவைகளை சார்ந்தே தோன்றுகின்றன என்பதனை பல்வேறு அறிவியல் ஆய்வுகள் நிரூபித்துள்ளது. இக்கருத்துக்களை தேரையர், அகத்தியர், ஹிப்போ கிரட்டஸ், க்கேலன் போன்றோர்களும் குறிப்பிட்டுள்ளனர்.

அறிவியலின் தெளிவான ஆய்வுகள் படி மன நோய்கள் தோன்றும் விதங்களை

உணர்ச்சி சார்ந்த மனநோய்கள்
எண்ணம் சார்ந்த மனநோய்கள்
நரம்பு தளர்ச்சி சார்ந்த மனநோய்கள்
உடல்நோய் சார்ந்த மனநோய்கள்
மூளை பாதிப்பு சார்ந்த மனநோய்கள்
வளர்ச்சி சார்ந்த மனநோய்கள்
முதுமை சார்ந்த மனநோய்கள்
பாலுணர்வு சார்ந்த மனநோய்கள்
பழக்க வழக்கங்கள் சார்ந்த மனநோய்கள்

என பலவகையாக பகுத்துள்ளனர்.

மனதில் எழும் இன்ப துன்ப நுகர்ச்சிகள் எல்லோருக்கும் இயல்பானவை. ஆனால், அவைகள் எல்லை மீறி நீண்ட நாட்கள் தொடர்வதும், திடீரென வீறிட்டெழுவதும், இயல்புக்கு மாறானநிலை ஆகும். இதனை உணர்ச்சி சார்ந்த முதிர் மனநேய் என்பர். இந்நிலையில் சிலருக்கு மன மகிழ்ச்சிக்களிப்பின் காரணமான மன எழுச்சிநோயும், அதுபோன்றே மன கவலை சார்ந்த மன சோர்வு நோயும் தோன்றுவது உண்டு. ஒருசிலரிடம் இரண்டும் சேர்ந்தே தோன்றுவதும் உண்டு. இதனை இருதுருவ உணர்ச்சி சார்ந்த மனநோய்கள் என்பர்.

மருத்துவர் த. இராஜேந்திரன்



மனம் எனும் மாயக்கண்ணாடி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Feb 15, 2010 10:20 pm

பயனுள்ள கட்டுரை நன்றி!
மனச்சிதைவு நோயாளிகள் பேய், பிசாசு பிடித்தவர்கள் என கருதப்பட்டு மந்திரம்
மாயாஜாலங்கள் என சின்னா பின்னமாக்கப்பட்டனர்...

இன்னமும் இது தொடர்கிறது....இது போக மஞ்சள் காமாலை வந்தால் சூடு வைக்கணும்
..அம்மை நோய் வந்து ஊசி போட்டா சாமிகுத்தம் ஆகிடும் ,சர்க்கரை நோய் வந்தா
ஏதோ மலைய பாத்து விஷம்னு சொல்லிட்டு திரும்பி பாக்காம வந்திடனும் ..நாய்
கடிச்சா மானம் சென்று செருப்பால சூடு வைக்கணும் .
இன்னமும் மன அழுத்தம் மன பிசகு வந்தால் மருத்துவரை அணுகாமல் மந்திரம்
மாந்திரிகம் என்று திரியும் கூட்டமும் இருக்கிறது.....

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Feb 15, 2010 10:27 pm

பயனுள்ள பதிவு சிவா....

மனவியல் படித்துள்ளேன் எனினும் மறந்து போனவை நினைவுக்கு வந்தன...

அருமை. நன்றி சிவா...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Feb 15, 2010 10:53 pm

இக்காலத்திற்கு ஏற்ற கட்டுரை...நம்மை போன்றவர்கள் வேலைக்காக வீட்டை விட்டு
வரவேண்டிய நிலை.இந்த கட்டுரை விடை தரும்.என் வாழ்வில் மனநோய் கொண்டவர்களை
பார்த்தது உண்டு.இந்த கட்டுரை மேலும் நான் அறிய வாய்ப்பாக அமைந்து இருக்கு
.நன்றி தோழர் சிவா!



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Feb 15, 2010 10:59 pm

மனம் எனும் மாயக்கண்ணாடி 677196 மனம் எனும் மாயக்கண்ணாடி 677196

மனசிதைவு - depression??



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மனம் எனும் மாயக்கண்ணாடி Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக