புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்த ஆளுநர் Poll_c10அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்த ஆளுநர் Poll_m10அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்த ஆளுநர் Poll_c10 
30 Posts - 50%
heezulia
அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்த ஆளுநர் Poll_c10அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்த ஆளுநர் Poll_m10அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்த ஆளுநர் Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்த ஆளுநர் Poll_c10அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்த ஆளுநர் Poll_m10அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்த ஆளுநர் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்த ஆளுநர் Poll_c10அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்த ஆளுநர் Poll_m10அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்த ஆளுநர் Poll_c10 
72 Posts - 57%
heezulia
அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்த ஆளுநர் Poll_c10அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்த ஆளுநர் Poll_m10அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்த ஆளுநர் Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்த ஆளுநர் Poll_c10அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்த ஆளுநர் Poll_m10அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்த ஆளுநர் Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்த ஆளுநர் Poll_c10அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்த ஆளுநர் Poll_m10அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்த ஆளுநர் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்த ஆளுநர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 29, 2023 8:00 pm

அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்த ஆளுநர் A6da74f99ffa23c45c4ababff61843951688047305454333_original

அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி, கவர்னர் மாளிகை, அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வேலை வாங்கி தருவதாக கூறி பநணம் வாங்கியது உள்ளிட்ட, குற்ற வழக்குகள், செந்தில் பாலாஜி மீது நிலுவையில் உள்ளன.

இதனால், செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது, அவர் மீதான வழக்குளை விசாரிக்க இடையூறாக இருக்கும்.

அவர், தொடர்ந்து பதவியில், நீடிப்பது அரசியலமைப்புக்கு எதிரானது.

அமைச்சரவையில் செந்தில் பாலாஜி நீடித்தால், அவர், மீதான வழக்கு விசாரணை பாதிக்கப்படும்.

அமைச்சர் பதவியை பயன்படுத்தி, தன் மீதான விசாரணைக்கு தடையை ஏற்படுத்தி வருகிறார்.

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என, தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், கவர்னர் அவரை, நீக்கி உத்தரவிட்டுள்ளார். இந்த பதவி நீக்க உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் கவர்னர் தனது உத்தரவில் தெரிவித்து உள்ளார்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

கவர்னர் ரவி, சமீபத்தில் டில்லி சென்று, மத்திய அமைச்சர்களை சந்தித்து திரும்பி நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது, குறி்பபிடத்தக்கது.

மேலும், மத்திய அரசின் சட்ட ஆலோசர்களுடன் கலந்தாலோசித்து, கவர்னர் ரவி, இந்த முடிவை எடுத்திருக்கலாம் எனவும், கூறப்படுகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 29, 2023 8:29 pm

அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை; சட்டரீதியாக எதிர்கொள்வோம்: முதல்வர்



அமைச்சர் பதவியிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்க ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அதிகாரமில்லை என முதல்வர் மு.க. ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் ஆளுநர் நடவடிக்கையை சட்டரீதியாக எதிர்கொள்வோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜி நீக்கப்பட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை திமுக நாடவுள்ளதாகத் தெரிகிறது.

தமிழக அமைச்சரவையிலிருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் நீடித்தால் ஊழல் வழக்கு தொடர்பான விசாரணை பாதிக்கப்படும் என்பதால் அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்குவதாக அறிக்கை மூலம் ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 01, 2023 8:15 am

கைதி எண் வழங்கப்பட்டவர் எப்படி அமைச்சராக நீடிக்க முடியும்? ஜெயக்குமார் கேள்வி



சட்டப்படி செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்குகுறித்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதைப்பற்றி சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர்:

“செந்தில் பாலாஜியை நீக்கும் விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி சமயோஜித புத்தியோடு செயல்பட்டுள்ளார்.

அமலாக்கத்துறை கைது செய்து, கைதி எண் கொடுக்கப்பட்டவர் எப்படி அமைச்சராக தொடர முடியும். அமைச்சராக இருக்கும்போது செந்தில்பாலாஜி விசாரணைக்கு எப்படி ஒத்துழைப்பார்”, என்று கேள்வி எழுப்பினார்.

அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜியை நீக்க வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு. அதற்காக ஆளுநரை சந்தித்து மனு அளித்தோம். அமைச்சராக இருந்தால் பல உண்மைகள் வெளிவராமல் போக நேரிடும்”, என்று கூறினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 01, 2023 8:27 am

அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்த ஆளுநர் Gallerye_061940691_3363241

'ஆத்திரம், நிதானம் இன்மை வெறுப்பூட்டும் வார்த்தைகள்'


அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கம் செய்து, நேற்று முன்தினம் கவர்னர்ரவி உத்தரவிட்டார். அதன்பின், தன் உத்தரவை நிறுத்தி வைத்தார். முன்னதாக, அமைச்சர் செந்தில் பாலாஜியை, 'டிஸ்மிஸ்' செய்வது தொடர்பாக, முதல்வருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக, ஊழல், வேலை வாங்கி தருவதாக பணம் பெற்றது, சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பான வழக்குகள் உள்ளன. உச்ச நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி, அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க பரிந்துரை செய்து, மே 31ம் தேதி கடிதம் எழுதினேன்.

ஏமாற்றம்


நியாயமான முறையில்நான் தெரிவித்த அறிவுரையை ஏற்காமல், ஆத்திரம் ஏற்படுத்தும்வகையில், கடந்த மாதம் 1ம் தேதி கடிதம் அனுப்பினீர்கள். அதில், நிதானம் இல்லாத வார்த்தைகளை பயன்படுத்தி, நான் அரசியல் அமைப்பு வரம்புகளை மீறுவதாக குற்றம்சாட்டி இருந்தீர்கள். உங்கள் பதில் எனக்கு, ஏமாற்றத்தை அளித்தது. நீங்கள் கடிதம் எழுதிய,இரண்டு வாரங்களுக்கு பிறகு, ஜூன் 15ம் தேதி, செந்தில் பாலாஜி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவர் வசமிருந்த துறைகளை, மற்ற அமைச்சர்களுக்கு ஒதுக்க பரிந்துரை செய்து, கடிதம் அனுப்பினீர்கள்.

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்றும் தெரிவித்திருந்தீர்கள். ஆனால், கடந்த 14ம் தேதி, அமலாக்க துறையினர் அவரை கைது செய்ததையும், அவர் நீதிமன்ற காவலில், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதையும் குறிப்பிடவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜி வசமிருந்த துறைகள் மாற்றப்படுவதற்கான, உண்மையான காரணம் மற்றும் சூழ்நிலைகளை தெரிவிக்கவில்லை.

முழு உண்மைகளை கேட்டு, கடந்த 15ம் தேதி கடிதம் எழுதினேன். நான் கேட்ட விபரங்களை தர மறுத்து, அதற்கு மறுநாளே வெறுப்பூட்டும் வார்த்தைகளால், பதில் கடிதம் எழுதி இருந்தீர்கள். அதில் ஏற்கனவே தாங்கள் அனுப்பிய கடிதம் மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி இருந்தீர்கள்.

அமைச்சர் செந்தில் பாலாஜி வசமிருந்த துறைகளை, மற்ற இரண்டு அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்யும்படி, தாங்கள் செய்த பரிந்துரையை ஏற்றுக் கொண்டேன். நேர்மையான விசாரணை நடக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதை ஏற்கவில்லை.

அரசாணை


நீங்கள் என் கோரிக்கையை ஏற்காமல், செந்தில பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்காமல், அவர் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என, அரசாணை வெளியிட்டீர்கள். அவர் மீதான குற்றச்சாட்டுகள், அவர் வேறொரு ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது முன்வைக்கப்பட்டவை. இதை அரசியல் பழிவாங்கல் என்று கூற இயலாது.

அவர் புதிய அமைச்சரவையில், மீண்டும் அமைச்சராகவில்லை என்றால், அவர் மீது புகார் அளித்தவர்கள், 2021 ஜூலை மாதம் சமரசம் செய்திருப்பரா என்பது, எங்களுக்கு தெரியாது. நேர்மையான விசாரணைக்கு, அவர் இடையூறுவிளைவிப்பதாக, உச்ச நீதிமன்றம் கூறிய பிறகும், அவரை அமைச்சராக வைத்திருந்தீர்கள்.

இது, மத்திய குற்ற புலனாய்வுத் துறை மற்றும்வருமான வரித்துறை அதிகாரிகளை மிரட்டி தடுக்கும் தைரியத்தை அளித்தது. வருமான வரித்துறை அதிகாரிகள், மே 28ம் தேதி செந்தில் பாலாஜியுடன் தொடர்புடையவர்கள்வீடுகளில் சோதனை நடத்தியபோது, அவரது ஆதரவாளர்கள், அவர்களை தாக்கி ஆவணங்களை பறித்து சென்றனர்.

வருமான வரித்துறை அதிகாரிகள், மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பை நாட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஏனெனில் உள்ளூர் போலீசார், போதுமான அளவில் ஒத்துழைக்கவில்லை. என் அறிவுரையை ஏற்காமல், அவரை அமைச்சராக நீடிக்க வைப்பது, உங்களின் பாரபட்சத்தை காட்டுகிறது.

சீர்குலையும்


செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதால், சட்ட நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டு, அரசியலமைப்பின் போக்கை சீர்குலைத்து விடுமோ என்ற நியாயமான அச்சம் நிலவுகிறது. இத்தகைய நிலை, இறுதியில் அரசு இயந்திரத்தை சீர்குலைக்க வழிவகுக்கும். எனவே, இந்திய அரசியல் சட்டத்தின், 154, 163, 164வது சட்டப்பிரிவின் கீழ், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குகிறேன். இவ்வாறு கவர்னர் தன் கடிதத்தில் எழுதி இருந்தார்.

பின், இக்கடிதத்தின் இறுதியாகக் குறிப்பிட்டிருந்த, செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்த அறிவிப்பை, நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 01, 2023 8:30 am

அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்த ஆளுநர் Gallerye_06194932_3363241

'கவர்னர் போன்ற அதிகாரிகள் கண்ணியத்துடன் நடக்க வேண்டும்!'


'செந்தில் பாலாஜியையோ, என் அமைச்சர்களையோ நீக்க வேண்டும் என உத்தரவிடுவதற்கு, உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இது முழுக்க முழுக்க தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரின் சிறப்பு உரிமை' என, கவர்னர் ரவிக்கு எழுதியுள்ள கடிதத்தில், முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

கடித விபரம்:


நீங்கள் முதலில் எழுதிய கடிதத்தில், மிகவும் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தீர்கள். அடுத்த கடிதத்தில், அட்டர்னி ஜெனரல் கருத்தை பெற உள்ளதால், முந்தைய உத்தரவை வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளீர்கள்.

மக்களின் நம்பிக்கை:


மிக முக்கியமான முடிவை, சட்ட ஆலோசனை கேட்காமலேயே எடுத்துள்ளதும், அவசர கதியில் செயல்பட்டதையும், அரசியல் சாசன சட்டங்களை, போதிய அளவு பின்பற்றாததையும், உங்கள் கடிதம் காட்டுகிறது.

என் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளனர். கவர்னர் போன்ற அதிகாரிகள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுடன், கண்ணியத்துடன் தேவையற்ற அச்சுறுத்தல்களை செய்யாமல் நடந்து கொள்ள வேண்டும். அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வது தொடர்பாக, கடந்த மாதம் 1ம் தேதி தங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், விசாரணையை எதிர்கொள்ளும் ஒருவருக்கும், குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட ஒருவருக்கும், நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கும் இடையிலான வித்தியாசங்களை தெரிவித்திருந்தேன்.

ஆதாரமற்றது:


நீதிமன்றத்தால் தண்டனை விதிக்க ப்பட்ட ஒருவரைத் தான், அமைச்சர் அல்லது மக்கள் பிரதிநிதி பதவியில் இருந்து தகுதி இழப்பு செய்ய முடியும். இதை ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தெளிவுப்படுத்தி உள்ளது. செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது; இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.

'குற்ற வழக்கை எதிர்கொள்ளும் ஒருவர், அமைச்சரவையில் இருக்க வேண்டுமா அல்லது நீக்கப்பட வேண்டுமா என்பது, பிரதமர் அல்லது முதல்வர் முடிவு செய்ய வேண்டிய விஷயம்' என, உச்ச நீதிமன்றம், ஒரு வழக்கில் தெரிவித்துள்ளது. எனவே, ஒருவர் மீது வழக்கு தொடர்ந்திருப்பதால் மட்டுமே, அவர் சட்டப்படி அமைச்சராக தொடர முடியாது என்று கூறி விட முடியாது.

வருமான வரித் துறை அதிகாரிகளின் சோதனையின்போது, சிலர் தாக்கியதாக கூறியுள்ள சம்பவத்தில், வழக்குப் பதிவு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசாரணையில், செந்தில் பாலாஜி தலையிட்டிருப்பதாக, நீங்கள் கூறும் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது.

செந்தில் பாலாஜி விவகாரத்தில், ஐந்து பக்க கடிதம் எழுதி உள்ளீர்கள். அதேநேரம், முந்தைய அ.தி.மு.க. அமைச்சர்கள், அதிகாரிகள் செய்த குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க அனுமதி அளிக்கும்படி, என் அரசு வைத்துள்ள கோரிக்கைகளை கிடப்பில் போட்டு, மவுனத்தில் இருக்கிறீர்கள். பல மாதங்களாக, அந்த கோரிக்கைகள் கிடப்பில் உள்ளன.


மரியாதை தருகிறோம்

:

குற்ற வழக்கில் நடவடிக்கைகளுக்கு அனுமதி கேட்டு, சி.பி.ஐ., வைத்த கோரிக்கை மீது கூட, எந்த நடவடிக்கையும் இல்லை. இதுபோன்ற பாரபட்ச நடவடிக்கைகள், உங்களது ஒருதலைப்பட்ச செயல்பாட்டை காட்டுவதோடு, நீங்கள் எடுத்துள்ள இரட்டை நடவடிக்கையின் உள்நோக்கத்தையும் வெளிப்படுத்துகிறது. நான் வரம்பு கடந்த வார்த்தைகளை பயன்படுத்தியதாக, குற்றம் சாட்டி இருக்கிறீர்கள்.

தமிழக அரசு எப்போதுமே உங்களுக்கும், உங்கள் அலுவலகத்துக்கும் உள்ள மரியாதையை தந்திருக்கிறது. அதனால், உங்களால் எங்களுக்கு அளிக்கப்படும் சட்டவிரோத உத்தரவுகளுக்கு, நாங்கள் பணிவதாக நினைத்து விடக் கூடாது.


அதிகாரமில்லை

:

அரசியல் சாசனத்தின்படி, ஒரு அமைச்சரை நியமிக்கவோ அல்லது நீக்கவோ, முதல்வரின் ஆலோசனைப்படி தான் கவர்னர் செயல்பட முடியும். அமைச்சரவையில் யார் அமைச்சராக இருக்க வேண்டும்; யார் நீக்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்ய, கவர்னருக்கு அதிகாரம் இல்லை. அது முழுக்க முழுக்க முதல்வரின் தனிப்பட்ட சிறப்பு உரிமை.

எனவே செந்தில் பாலாஜியையோ, என் அமைச்சர்களையோ, 'டிஸ்மிஸ்' செய்து உத்தரவிடுவதற்கு, உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. என் ஆலோசனை இல்லாமல், செந்தில் பாலாஜியை நீக்குவதாக, நீங்கள் அளித்துள்ள தகவல், சட்டப்படி செல்லாதது. இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 01, 2023 8:34 am

கவர்னருக்கு அப்போ இருந்த அதிகாரம் இப்போ இல்லையா?... ஸ்டாலினுக்கு கேள்வி: சமூக வலைதளத்தில் இன்று!



அமலாக்கத் துறை விசாரணை வளையத்தில் இருக்கும் இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கி கவர்னர் உத்தரவிட்டதும், அதனைத் தொடர்ந்து அவ்வுத்தரவை நிறுத்தி வைத்ததும் இன்று தமிழக அரசியல் களத்தை உஷ்ணமாக்கியுள்ளது. கவர்னரின் செயல்பாடு சமூக வலைதளத்தில் இன்று ஹாட் டாபிக் ஆக ஓடிக்கொண்டிருக்கிறது.

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி கவர்னர் உத்தரவிட்ட சில மணி நேரத்தில், மற்றொரு கடிதத்தை முதல்வருக்கு எழுதினார். அதில் உள்துறை அமைச்சர் அறிவுறுத்தலின் படி மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் இவ்விஷயத்தில் கருத்து கேட்க உள்ளதாகவும். அதுவரை அமைச்சரின் பதவி நீக்க உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கவர்னர் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு சமூக வலைதளத்தில் தி.மு.க., பா.ஜ.க., அ.தி.மு.க., தரப்பில் இருந்து வரும் எதிர்வினைகள் வருகின்றன. “அமைச்சராக யாரை நீக்க வேண்டும், சேர்க்க வேண்டும் என்ற அதிகாரம் முதல்வருக்கு தான் இருக்கிறது. ஒரு அமைச்சரை நீக்கிய கவர்னரால் இன்னொருவரை சேர்க்க முடியுமா. அமைச்சரவைக்கு கட்டுப்பட்டவர் கவர்னர் என நீதிமன்றம் கூறியுள்ளது.” என்று தி.மு.க.,வினர் வாதத்தை முன் வைக்கின்றனர்.

“கடந்த ஆட்சியில் குட்கா வழக்கில் குற்றச்சாட்டுக்குள்ளான அப்போதைய அமைச்சர் விஜயபாஸ்கரை பதவிநீக்கம் செய்ய வேண்டும், ராஜேந்திர பாலாஜி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசுகிறார் எனவே அவரையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கவர்னரை கேட்டுக்கொண்டவர் அப்போதைய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின். அப்போது கவர்னருக்கு இருந்த அதிகாரம் இப்போது இல்லையா” என ஸ்டாலினின் பழைய சமூக வலைதள பதிவை தூசித் தட்டி கொண்டு வருகின்றனர் பா.ஜ.க.,வினர்.

“சிறைக் கைதியாக இருப்பதால் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்கக் கூடாது. கவர்னரின் உத்தரவு சரி தான்.” என முன்னாள் சபாநாயகர் செம்மலை கூறியுள்ளார்.

தி.மு.க., ராஜ்யசபா எம்.பி.,யும், வழக்கறிஞருமான வில்சன் வெளியிட்டுள்ள பதிவில், “மத்திய அமைச்சரவையில் 33 அமைச்சர்கள் மீது வழக்கு உள்ளது. அவர்களை நீக்கச் சொல்லி பிரதமர் மோடிக்கு கவர்னர் கடிதம் எழுதுவாரா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் “கைதி எண் பெறப்பட்ட ஒருவர் எப்படி அமைச்சராக தொடர முடியும்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்வாறு தி.மு.க., வட்டாரம் செந்தில் பாலாஜி விவகாரத்தில் சிக்கி அழுத்தத்தை சந்தித்துக் கொண்டுள்ளது.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jul 01, 2023 11:42 am

செந்தில் பாலாஜி - ஆளுநரின் பதவிநீக்க உத்தரவைவிட அவர் தன் உத்தரவை அதே வேகத்தில் திரும்பப் பெற்றதுதான் இன்று விறுவிறுப்பு!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 01, 2023 1:30 pm

Dr.S.Soundarapandian wrote:செந்தில் பாலாஜி - ஆளுநரின் பதவிநீக்க உத்தரவைவிட அவர் தன் உத்தரவை அதே வேகத்தில் திரும்பப் பெற்றதுதான் இன்று விறுவிறுப்பு!

சட்ட ரீதியாக எதிர்கொள்ள பதவி நீக்க உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

சட்ட ரீதியாக செந்தில் பாலாஜி பதவி நீக்கம் செய்யப்பட்டால் அது திமுகவுக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமையும்...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 01, 2023 11:16 pm

ஆளுநரின் உத்தரவை நிறுத்தி வைத்ததற்கு எதிராக வழக்கு: அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தை நீதிமன்றம் விசாரணை



செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க ஆளுநர் உத்தரவிட்டிருந்ததை தொடர்ந்து, அது நிறுத்தி வைக்கப்பட்டது. ஆளுநரின் உத்தரவை மீறி, செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வார் என தமிழக அரசு அறிவித்தது.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரில் அமலாக்கத்துறை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளது. இதை தொடர்ந்து, நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருக்கு 2வது முறையாக நீதிமன்ற காவல் விதித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், செந்தில் பாலாஜி பொறுப்பு வகித்து வந்த மின்சார துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை ஆகிய இரண்டு துறைகளையும் அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், அமைச்சர் முத்துசாமிக்கும் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

இந்நிலையில், செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய ஆளுநரின் உத்தரவுக்கு, அமைச்சரவை நியமிப்பது, நீக்குவது என எந்த முடிவை எடுப்பதற்கு, முதலமைச்சரான தனக்கு மட்டுமே உரிமை உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் அனுப்பினார்.

இதனால், தனது உத்தரவை நிறுத்தி வைத்ததற்காக ஆளுநர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கறிஞர் எம்.எல்.ரவி தாக்கல் செய்த இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக