புதிய பதிவுகள்
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:16

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 10:13

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 10:08

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 10:06

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 10:05

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 10:04

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Today at 0:06

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 18:43

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:30

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 18:29

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 17:16

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 8:43

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 8:38

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 22:59

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:21

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:19

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:16

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:14

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:12

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:08

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu 6 Jun 2024 - 18:28

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu 6 Jun 2024 - 18:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu 6 Jun 2024 - 18:10

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu 6 Jun 2024 - 17:53

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu 6 Jun 2024 - 17:46

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu 6 Jun 2024 - 17:41

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu 6 Jun 2024 - 16:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu 6 Jun 2024 - 16:47

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu 6 Jun 2024 - 16:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu 6 Jun 2024 - 16:25

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu 6 Jun 2024 - 16:05

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu 6 Jun 2024 - 15:49

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 14:42

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 11:23

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 11:16

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 10:56

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 10:53

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 10:52

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed 5 Jun 2024 - 22:15

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed 5 Jun 2024 - 8:52

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed 5 Jun 2024 - 8:48

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed 5 Jun 2024 - 8:44

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 19:01

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:28

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:27

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:04

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து தேர்தல்கள்  Poll_c10மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து தேர்தல்கள்  Poll_m10மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து தேர்தல்கள்  Poll_c10 
74 Posts - 59%
heezulia
மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து தேர்தல்கள்  Poll_c10மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து தேர்தல்கள்  Poll_m10மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து தேர்தல்கள்  Poll_c10 
41 Posts - 33%
T.N.Balasubramanian
மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து தேர்தல்கள்  Poll_c10மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து தேர்தல்கள்  Poll_m10மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து தேர்தல்கள்  Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து தேர்தல்கள்  Poll_c10மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து தேர்தல்கள்  Poll_m10மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து தேர்தல்கள்  Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து தேர்தல்கள்  Poll_c10மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து தேர்தல்கள்  Poll_m10மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து தேர்தல்கள்  Poll_c10 
116 Posts - 60%
heezulia
மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து தேர்தல்கள்  Poll_c10மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து தேர்தல்கள்  Poll_m10மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து தேர்தல்கள்  Poll_c10 
62 Posts - 32%
T.N.Balasubramanian
மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து தேர்தல்கள்  Poll_c10மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து தேர்தல்கள்  Poll_m10மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து தேர்தல்கள்  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து தேர்தல்கள்  Poll_c10மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து தேர்தல்கள்  Poll_m10மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து தேர்தல்கள்  Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து தேர்தல்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 2 Mar 2023 - 17:05

திரிபுரா, நாகாலாந்தில் பா.ஜ.,வுக்கு., வெற்றி !


மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து தேர்தல்கள்  Tamil_News_large_325493220230302133952.jpg?w=640&dpr=1

சமீபத்தில் நடந்து முடிந்த 3 மாநில தேர்தலில் நாகலாந்து, திரிபுராவில் பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சி மீண்டும் ஆட்சியை அமைக்கிறது. அதே நேரத்தில் மேகாலயாவில் உள்ளூரில் செல்வாக்கு பெற்ற தேசிய மக்கள் கட்சியே அதிக இடங்களை பெற்றுள்ளது. ஏற்கனவே கூட்டணியில் உள்ள இந்த கட்சி பா.ஜ., ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது.



திரிபுராவில் இடதுசாரி கட்சியினர் 15 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. 3 மாநில தேர்தலில் காங்கிரஸ் மிக சொற்ப இடங்களையே பெற்றுள்ளது. திரிபுராவில் காங்கிரசுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. ஈரோடு இடைத்தேர்தலில் காங்., வேட்பாளர் இளங்கோவன் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,வாக பொறுப்பேற்க உள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு, பிப்., 27ல் இடைத்தேர்தல் நடந்தது. தி.மு.க., கூட்டணி சார்பில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இளங்கோவன் போட்டியிட்டார்.பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., சார்பில் தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா, தே.மு.தி.க., சார்பில் ஆனந்த் என, மொத்தம், 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

74.79 சதவீதம்



அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்டச் செயலர்கள் மற்றும் நிர்வாகிகள், ஒரு மாதமாக தொகுதியில் முகாமிட்டு, காங்கிரசுக்கு ஆதரவாக தேர்தல் பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில், அ.தி.மு.க.,விலும் ஆட்கள் இறக்கப்பட்டனர்.

அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில், வாக்காளர்களை கவர, ஓட்டுக்கு 3,000 ரூபாய், 'ஸ்மார்ட் வாட்ச்' மற்றும் வெள்ளி பொருட்கள் என வாரி வழங்கினர்.

அ.தி.மு.க., தரப்பில், ஓட்டுக்கு 2,000 ரூபாய், வெள்ளி விளக்கு உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.இதுவரை நடந்த இடைத்தேர்தல்களை மிஞ்சும் வகையில், ஈரோடு தொகுதியில் பணம், பரிசு மழை பலமாக பொழிந்தது. தேர்தல் கமிஷன் எதையும் கண்டுகொள்ளவில்லை.

கடந்த மாதம் 27ம் தேதி நடந்த தேர்தலில், ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் ஓட்டளித்தனர்; இது, 74.79 சதவீதம்.ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், சித்தோடு ஐ.ஆர்.டி.டி., பொறியியல் கல்லுாரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன; ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

சட்டசபை பொதுத் தேர்தலை சந்தித்த, வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, திரிபுரா மற்றும் நாகாலாந்து மாநிலங்களிலும், இன்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது. .

கடும் போட்டி



மேகாலயாவில், முதல்வர் கான்ராட் சங்மா தலைமையில், தேசிய மக்கள் கட்சி கூட்டணி ஆட்சி நடக்கிறது.நாகாலாந்தில், முதல்வர் நெய்பியு ரியோ தலைமையில், தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. திரிபுராவில் முதல்வர் மாணிக் சஹா தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

இந்த மூன்று மாநிலங்களிலும், தலா, 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. நாகாலாந்தில், ஒரு தொகுதியில், பா.ஜ., வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேகாலயாவில், ஒரு தொகுதி வேட்பாளர் இறந்ததால், அங்கு தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.

அடுத்தாண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலுக்கான முன்னோட்டமாக, இந்த மூன்று வடகிழக்கு மாநில தேர்தல் முடிவுகள் பார்க்கப்படுகின்றன. இதனால், இந்த சட்டசபை தேர்தல் முடிவுகள், தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

தினமலர்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 2 Mar 2023 - 17:08

நாகாலாந்தில் வரலாற்று சாதனை புரிந்த முதல் பெண் எம்.எல்.ஏ.


மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து தேர்தல்கள்  Hekani_Jakhalu

நாகாலாந்து சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறையாக பெண் ஒருவர் எம்.எல்.ஏ. வாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நாகாலாந்தில் ஆளும் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி)-பாஜக கூட்டணி முறையே 40, 19 தொகுதிகளில் களமிறங்கின. நாகா மக்கள் முன்னணி (என்பிஎஃப்) 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் 23 தொகுதிகளிலும் போட்டியிட்டன. தேசிய மக்கள் கட்சி, தேசியவாத காங்கிரஸ் ஆகியவை தலா 12 வேட்பாளா்களை களமிறக்கின.

நான்கு பெண் வேட்பாளர்கள்: நாகாலாந்தில் ஹெக்கானி ஜக்காலு, சால்ஹூட்டூ க்ரூஸ், ஹுகாலி செமா மற்றும் ரோஸி தாம்சன் ஆகிய 4 பெண் வேட்பாளர்கள் களமிறங்கினர்.

இதில், திமாபூர்-3 தொகுதியில் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி(என்டிபிபி) கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஹேக்கானி ஜக்காலு வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட எல்.ஜே.பி (ராம் விலாஸ்) வேட்பாளர் அஸெட்டோ ஜிமோமியைவிட 1,536 வாக்குகள் அதிகம் பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நாகாலாந்து சட்டப்பேரவை வரலாற்றில் பெண் ஒருவர் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.

ஹேக்கானி ஜக்காலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

47 வயதான ஹேக்கானி ஜக்காலு, சான் பிரான்சிஸ்கோ பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றுள்ளார். தொழிலதிபராகவும், சமூக செயற்பாட்டாளராகவும் இருந்து வருகிறார்.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 3 Mar 2023 - 14:01

மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து தேர்தல்கள்  PjgQ576


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 3 Mar 2023 - 14:05

``தேர்தல் தோல்வியைச் சாதனையாகப் பேசும் காங்கிரஸை பாராட்டத்தான் வேண்டும்" - அஸ்ஸாம் முதல்வர் கிண்டல்


நடந்து முடிந்த மூன்று மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜக வெற்றிபெற்ற நிலையில், காங்கிரஸைக் கிண்டல் செய்திருக்கிறார் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா!

இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஒன்பது மாநில சட்டமன்றத் தேர்தல்களில், வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிந்து, முடிவுகளும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. திரிபுராவில் பா.ஜ.க 32 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடனும், நாகாலாந்தில் கூட்டணி முறையிலும் ஆட்சியமைக்கிறது. மேகாலயாவில் இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்றிருக்கிறது.

இந்த நிலையில், காங்கிரஸின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், தனது ட்விட்டர் பதிவில்,"நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் 33 ஆண்டுகளுக்குப் பிறகு மகாராஷ்டிராவில் கஸ்பா பெத்தை வென்றது. 51 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கு வங்காளத்தில் சாகர்திகி (Sagardighi) தொகுதியை வென்றது, திரிபுராவில் 0 இடத்திலிருந்து 5-ஆகவும், மேகாலயாவில் 21 சிட்டிங் எம்எல்ஏ-க்கள் கடத்தப்பட்டபோதிலும் 5 இடங்களையும், தமிழ்நாடு இடைத்தேர்தலிலும் வென்றிருக்கிறது" என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்திருந்த அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா," மூன்று மாநிலங்களில் பெற்ற தோல்வியை ஒரு சாதனையாக மாற்றுவதன் மூலம் காங்கிரஸின் திறனை பாராட்டத்தான் வேண்டும்" எனத் தெரிவித்திருக்கிறார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 3 Mar 2023 - 16:25

மேகாலயத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினார் கான்ராட் சங்மா!


மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து தேர்தல்கள்  Meghalaya_CM_Conrad_Sangma_edi.jpg?w=640&dpr=1

மேகாலயத்தில் தேசிய மக்கள் கட்சி தலைவரும், மாநில முதல்வருமான கான்ராட் சங்மா ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமைகோரினார்.

முதல்வர் பதவிக்கான ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் பாகு செளஹானிடம் கான்ராட் சங்மா வழங்கினார்.

மேகாலயத்தில் 59 தொகுதிகளில் பதிவான வாக்குகள் நேற்று (மார்ச் 2) காலைமுதல் எண்ணப்பட்டன. இதில், தேசிய மக்கள் கட்சி 26 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனநாயகக் கட்சி 11 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 5 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் 5 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

ஆட்சி அமைக்க 30 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

மேகாலயத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அங்கு தொங்கு பேரவை உருவாகியுள்ளது.

பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் ஆதரவுடன் ஆட்சியமைக்க ஆளும் தேசிய மக்கள் கட்சி முயற்சித்துள்ளது.

மேகாலயத்தில் தேசிய மக்கள் கட்சி (என்பிபி)-பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், தோ்தலுக்கு முன்பாக கூட்டணியை முறித்த பாஜக, அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துக் களமிறங்கியது. ஆனால் வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே பாஜக வென்றது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 7 Mar 2023 - 4:07

நாகாலாந்தில் எதிர்க்கட்சிகளே இல்லாத ஆட்சி


கொஹிமா :நாகாலாந்து சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து கட்சிகளும், என்.டி.பி.பி., - பா.ஜ., கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்து இருப்பதால், அங்கு எதிர்க்கட்சியே இல்லாத அரசு அமைய உள்ளது.

முதல்முறை



வடகிழக்கு மாநிலமான நாகாலாந்து சட்டசபைக்கு சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில், மொத்தமுள்ள 60 தொகுதிகளில், என்.டி.பி.பி., எனப்படும், தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி 25 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான பா.ஜ., 12 இடங்களிலும் வெற்றி பெற்றன.

பிற கட்சிகளான தேசியவாத காங்கிரஸ் ஏழு இடங்களிலும், நாகாலாந்து மக்கள் கட்சி ஐந்து இடங்களிலும், ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி, நாகா மக்கள் முன்னணி, ராம்தாஸ் அதவாலேவின் இந்திய குடியரசு கட்சி, ஐக்கிய ஜனதா தளம் தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.

சுயேச்சைகள் நான்கு இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

நாகாலாந்து அரசியல் வரலாற்றில், இத்தனை கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறுவது இதுவே முதல்முறை.என்.டி.பி.பி., - பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ள நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற பிற கட்சிகள், என்.டி.பி.பி., - பா.ஜ., கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவுஅளிக்க உள்ளதாக அறிவித்துள்ளன.

ஆதரவு கடிதம்



ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி, அதவாலேவின் இந்திய குடியரசு கட்சி, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தங்கள் ஆதரவு கடிதங்களை ஏற்கனவே அளித்துவிட்டன.

மூன்றாவது பெரிய கட்சியான தேசியவாத காங்.,கும், பா.ஜ., கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக கடிதம் அளித்துள்ளது.

இதன் வாயிலாக, என்.டி.பி.பி., கட்சியைச் சேர்ந்த முதல்வர் நெய்பியு ரியோ தலைமையில், எதிர்க்கட்சிகளே இல்லாத கூட்டணி அரசு நாகாலந்தில் ஆட்சி அமைக்க உள்ளது.

சங்மாவுக்கு 45 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு!

மேகாலயாவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 60 தொகுதிகளில், முதல்வர் கான்ராட் சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி 26 இடங்களில் வெற்றி பெற்றது.அதன் கூட்டணி கட்சியான பா.ஜ., மற்றும் மலைப்பிரதேச மக்கள் ஜனநாயக கட்சி தலா இரண்டு இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. மேலும் இரண்டு சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள், சங்மாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், 11 இடங்களில் வெற்றி பெற்றுள்ள ஐக்கிய ஜனநாயக கட்சி மற்றும் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றுள்ளமக்கள் ஜனநாயக முன்னணிஆகிய கட்சிகள், சங்மா அரசுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துஉள்ளன.இதன் வாயிலாக, 45எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன் கான்ராட் சங்மா தலைமையிலான மேகாலயா ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கிறது.தேர்தலில் வெற்றி பெற்றஎம்.எல்.ஏ.,க்கள் 59 பேர் நேற்று பதவி ஏற்றனர்.


மாணிக் சாஹாவுக்கு மீண்டும் வாய்ப்பு


திரிபுராவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில், பா.ஜ., 32 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி ஒரு இடத்திலும் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளது.இந்நிலையில், பா.ஜ.,வில் புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதில் மாணிக் சாஹா மற்றும் முன்னாள் முதல்வர் பிப்லப் குமார் தேவ் ஆதரவாளர்கள் இடையே கோஷ்டி பூசல் நிலவியது. இதையடுத்து, திரிபுராவில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்தில், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நேற்று நடந்தது.இதில், மாணிக் சாஹா மீண்டும் பா.ஜ., சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து மீண்டும் அவர் முதல்வராக பதவியேற்க உள்ளார்.


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக