புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_c10 
21 Posts - 66%
heezulia
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_c10 
63 Posts - 64%
heezulia
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’


   
   
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jun 12, 2022 5:56 pm

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’

1 . முதலாழ்வார்கள் அன்று திருக்கோவிலூரில் திரிவிக்ரமனைக் கண்டு கும்பிட்டது போல , அநாதையாக இருக்கும் முத்துப்பிள்ளைக்கும் ஒரு காட்சி கிடைத்ததாம்! இதுவே ‘தரிசனம்’! அப்படி என்ன காட்சி அது?

2 . தொடர்ந்து அடைமழை பெய்ததால் பறவை ஒன்று குஞ்சுகளுக்கு உணவு தர முடியாமல் தவித்ததாம்! அதைப் பார்த்த முத்துப்பிள்ளை , தான் சாப்பிடவிருந்த சாப்பாட்டில் சிறுபகுதியை ஒரு காகிதத்தில் சுருட்டிக் கொண்டுவந்து , அத் தாய்ப்பறவை கண்ணில் படுமாறு வைக்கிறார்; தாய்ப்பறவையும் அந்த உணவைக் கொத்திக்கொண்டுபோய்த் தன் குஞ்சுகளுக்கு ஊட்டிற்றாம். இதுதான் அந்தக்காட்சி! அந்தத் ‘தரிசனம்’!

3 . அந்தத் ‘தரிசனம்’ கிடைத்ததும் , முத்துப்பிள்ள, கைகூப்பி ‘முருகா! முருகா!’ என்று சத்தத்துடன் கண்ணீர் மல்கக் கும்பிட்டார்! அப்போது , அவரோடு அண்டிப் படுத்திருந்த ஆண்டியப்பன் , தன்னை அறியாமலேயே, முத்துப்பிள்ளையைக் கும்பிட்டான்! இதனை ஆசிரியர் விளக்கப் படியுங்கள்:
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ 8Xm4FJf
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ 0kB5tGx


4 . முத்துப்பிள்ளையும் ஆண்டியப்பனும் மனிதர்கள்; ஆனால் கேட்பாரில்லை! அதே நேரத்தில், ஒரு பறவை , மனதில் ஈரமும் பாசமும் கொண்டு , தன் குஞ்சுகளுக்கு, அந்த மழை நேரத்திலும், உணவைத் தேடிக்கொண்டுவந்து, ஊட்டுகிறது! இந்த ஒப்பீட்டை நாம் உணருமாறு செய்கிறார் ஆசிரியர்! கதையில் இதுதான் உச்சம்(climax)!
கதையின் உச்சம் இதுவாக இருந்தாலும், கதையைத் தொடக்கத்திலிருந்து எப்படி நகர்த்திக்கொண்டு வருகிறார் என்பதில்தான் ஆசிரியர் திறமை உள்ளது!

5 . முத்துப்பிள்ளை , தனது சிறு ஓலை வீட்டையும் , தன் உறவுக்காரரான ஆறுமுகம்பிள்ளையிடம் கொடுத்துவிட்டதோடு அமையாமல், தானும் அவ்வப்போது , சிறுசிறு வேலைகளைச் செய்து, அந்த ஊதியத்தையும் ஆறுமுகம்பிள்ளையிடமே கொடுத்துவருகிறார்! அப்படி இருந்தும் ஆறுமுகம் பிள்ளையும் அவரின் மனைவியும் முத்துப்பிள்ளையை அவமானப் படுத்துகின்றனர்! இந்த நிலையை வெகு அற்புதமாகத் தன் எழுத்தில் கொண்டுவருகிறார் அழகிரிசாமி!:
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ QBsLcPm

பாருங்கள்! இதைவிட ஒரு மனிதனின் அவலத்தை யாரால் சித்திரிக்க முடியும்?
‘தன் உறவினர் வீடு’ என்ற அடிமனதுக் கருத்து ஒரு புறம், இழிவாக நடத்தப்படுவதால் ஏற்படும் கலக்கம் மறுபுறம், வசவுகள் இன்னொரு புறம் , எல்லாமாகச் சேர்ந்து அவரைப் பைத்தியக் காரனாக ஆக்கிவிட்டனவாம்! அப்படி ஆனதால், விளக்கைத் தேடிவந்து விழுந்து சாகும் விட்டில் பூச்சிபோல் ஆனாராம்! :
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ 6841Dd7

6 . இதைவிட இன்னொரு அவல நுட்பம்! ஆறுமுகம் பிள்ளையும் அவரின் மனைவியும் சற்று அன்பாகப் பேசிவிட்டால், முத்துப்பிள்ளைக்குச் சுவாதீனம் வந்துவிடுமாம்; வந்தால், முத்துப்பிள்ளை கொடுக்கும் சிறு பணமும் அவர்களுக்குக் கிடைக்காமல் போய்விடுமாம்! இந்த் நுணுக்கத்தை உணர்ந்தே ,இதற்காகவென்றே, முத்துப்பிள்ளையை அவமானப் படுத்திக்கொண்டே இருக்கிறார்களாம்! படியுங்கள்:
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ WQg5wGg

7 . தொடரும் அடைமழை, குளிர் காற்று! ஒட்டுத்திண்ணையில் படுத்திருக்கிறார் முத்துப்பிள்ளை! அவ்வப்போது ஆறுமுகம்பிள்ளையின் மனைவியின் வசவுகள் வாட்டி எடுத்ததால் முத்துப்பிள்ளை உணர்வு இழந்த நிலையில் ! மழையையும் காற்றையும் எதிர்கொள்ள , அந்த உணர்வற்ற நிலை முத்துப்பிள்ளைக்கு உதவியதாம்!:
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ B818L3s

ஒருவன் மோசமான உணர்வுகளை அடைந்தாலும் , போகப்போக , அந்த உணர்வுகளே வேறு ஒரு மோசத்தைத் தாங்கும் கேடயமாக ஆகும்! – இது கு.அழகிரிசாமி , முத்துப்பிள்ளைப் பாத்திரம் மூலம் வெளிப்படுத்தும் மாபெரும் மனிதத் தத்துவமாகும்! ஆனால் , இதை அவர் தானே வெளிவந்து சுழன்று அடிக்கிறாரே அல்லாமல் நாம் ஆராய்ந்து கண்டுபிடிக்கவேண்டும் என்று நமக்கு வேலை எதையும் வைக்கவில்லை!

8 . முத்துப்பிள்ளை நெஞ்சில் ஈரமுள்ளவர் , ‘மனிதம்’ அவருள் உள்ளது என்று காண்பிக்கவே ஆண்டியப்பன் பாத்திரத்தைக் கொண்டுவருகிறார் ஆசிரியர்!ஆண்டியப்பனுக்கு அடைக்கலம் கொடுப்பதன் மூலமும், அவனுக்குப் போர்த்திக்கொள்ளத் துணி கொடுப்பதன் மூலமும் இதைக் காட்டுகிறார் ஆசீரியர்.

9 . முத்துப்பிள்ளை நன்றாக வாழ்ந்த காலம் ஒன்று இருந்தது! ஆனால் இப்போதைய ஆட்களுக்கு அது தெரியாது! இப்போதுள்ள பழைய ஆட்களும் அதை மறந்துவிட்டார்கள்! அதனால், இப்போது மற்றவர்களின் நினைப்பு :
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ UT5S2Mk

மனிதன் , கெட்டுப்போனால், அவனுடைய பழைய நல்வாழ்வும் மக்களுக்கு மறந்துபோகும்!இது ஒரு சமுதாய மனவரலாறு ! இதைத்தான் காட்டுகிறார் இங்கே ஆசிரியர்!
கெட்டுப்போன நிலையில் முத்துப்பிள்ளையைப் பார்ப்பவர்கள் எப்படி நினைக்கிறார்கள் என்று ஒரு நகைச்சுவையைக் கதைக்குக் கொடுத்ததையும் நாம் பார்க்கவேண்டும்!
உண்மையில் , கு.அழகிரிசாமி அவர்கள் நல்ல நகைச்சுவையாளர்!
அழகிரிசாமியின் தம்பியோடு எனக்குச் சிறிது பழக்கம் உண்டு! எனது ஆய்வு நூற்கள் திருவல்லிக்கேணி ஸ்டார் பிரசுரத்தில் வெளியாகிக் கொண்டிருந்த காலத்தில், அவர் சந்திப்பு ஏற்பட்டது! அப்போது அவர் , ‘அண்ணனுக்கு நகைச்சுவை உணர்ச்சி அதிகம்! பேசும்போது நகைச்சுவை இல்லாமல் பேசமாட்டார்! ’ எனச் சொல்லியுள்ளார்!
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக