புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறதி பலமா? பலவீனமா? Poll_c10மறதி பலமா? பலவீனமா? Poll_m10மறதி பலமா? பலவீனமா? Poll_c10 
30 Posts - 65%
heezulia
மறதி பலமா? பலவீனமா? Poll_c10மறதி பலமா? பலவீனமா? Poll_m10மறதி பலமா? பலவீனமா? Poll_c10 
15 Posts - 33%
mohamed nizamudeen
மறதி பலமா? பலவீனமா? Poll_c10மறதி பலமா? பலவீனமா? Poll_m10மறதி பலமா? பலவீனமா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறதி பலமா? பலவீனமா? Poll_c10மறதி பலமா? பலவீனமா? Poll_m10மறதி பலமா? பலவீனமா? Poll_c10 
72 Posts - 64%
heezulia
மறதி பலமா? பலவீனமா? Poll_c10மறதி பலமா? பலவீனமா? Poll_m10மறதி பலமா? பலவீனமா? Poll_c10 
36 Posts - 32%
mohamed nizamudeen
மறதி பலமா? பலவீனமா? Poll_c10மறதி பலமா? பலவீனமா? Poll_m10மறதி பலமா? பலவீனமா? Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
மறதி பலமா? பலவீனமா? Poll_c10மறதி பலமா? பலவீனமா? Poll_m10மறதி பலமா? பலவீனமா? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறதி பலமா? பலவீனமா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 10, 2021 6:23 pm

.நெடுநீர், மறவி, மடி, துயில் நான்கும் கெடுநீரார் காமக்கலன்.

மறதிக்கு காமமே காரணமானது. காமமே துன்பங்களுக்கும் காரணம்..

மறதியால் ஒருவருக்கு ஏற்படும் பலம் எது ?? பலவீனம் எது தெரியுமா ??

மறதி என்பது தேவையான நேரத்தில் ஏற்பட்டால் அது பலமாகும், அதே மறதி தேவையில்லாத நேரத்தில் ஏற்பட்டால் பலவீனமாவதும் உண்டு.

மறதி எப்போது பலமாகும் தெரியுமா?

இறைவனை வழிபடும் போது, சொந்தம் பந்தம் இவ்வுலகம் அனைத்தையும் மறந்து ஒரே சிந்தனையுடன் தனக்குள்ளே இருக்கும் இறைவனைத்தேட வேண்டும்.

அப்போது மறதி என்பது மாபெரும் பலமாக அமையும். அத்துடன் நமக்கு யாரும் கெடுதல் செய்தாலும், அதை மறந்து அவர்களுக்கு மறுபடியும் கெடுதல் செய்யாமல், இறைவா அவர்கள் எனக்கு கெடுதல் செய்ததைப்போல் வேறு யாருக்கும் கெடுதல் செய்யாமல் அவர்களை நல்வழிப்படுத்து என இறைவனை வேண்டும் போது, அடுத்தவர்கள் செய்த கெடுதலை மறக்க வேண்டும்.

மேலும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என நினைப்பவர்கள், கடந்த காலத்தில் நடந்த தேவையற்ற மற்றும் மன்னிக்கவே முடியாத செயல்கள், மற்றும் மறக்கவே முடியாத சோகங்கள் ஆகியவற்றை அவசியம் மறந்தே ஆக வேண்டும்.

அப்போது தான் மறதி நமக்கு பெரும் பலமாக, வாழ்க்கையின் பாலமாக அமையும்.

ஆனால், அவசியமான காரியங்களில் மறதி ஏற்பட்டுவிட்டால், அதுவே நம்மை அழிப்பதாகவும் அமைந்துவிடுகிறது.

நெடுநீர், மறவி, மடி, துயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன். எதையும் காலம் தாழ்த்திச் செய்தல், மறதி, சோம்பல், தூக்கம் ஆகிய நான்கும் கெட்டு அழிபவர்கள் விரும்பும் அணிகலன்கள் என்று கூறுகிறது உலகப் பொதுமறையாம் திருக்குறள்.

ஊழ்வினைப் பயன் நன்கு அமையுமானால் தக்க தருணத்தில் மறதி நீங்கிவிடும். நல்நினைவு தோன்றிவிடும்.

இராவணன் சிவபெருமானுக்கு விருப்ப மான சாமகானம் இசைத்தான்.

கலை வல்லானாகிய அவன் எப்படியும் சிவனின் பெரும் பாராட்டைப் பெற்றுவிட வேண்டும் என்று பேராசை கொண்டான்.

தனது உடல் நரம்பையே எடுத்து யாழில் பூட்டி இசைத்தான். அந்த தேவகானத்தில் மகாதேவன் மனம் மகிழ்ச்சியில் மிதந்தது.

இராவணன் கேட்கும் முன்னாலேயே, முப்பத்து முக்கோடி வாழ்நாள் பெறுவாய்; எத்திக்கிலும் யாவராலும் வெலப்படாய். இதோ இந்த சந்திர ஹாசம் என்ற வாளையும் பெற்றுக்கொள்.

ஆனால் ஒன்று எக்காரணம் கொண்டும் நீ இதனை நிராயுதபாணிமேல் பயன்படுத்தக் கூடாது. அப்படிச் செய்தால் அப்பொழுதே அது எம்மிடம் திரும்பி வந்துவிடும் என்றார்.

இந்த வரத்தை இராவணன் எப்படி எப்பொழுது மறந்தான்? சீதையைக் கவர்ந்து வந்து அசோக வனத்தில் சிறை வைத்துவிட்டான்.

அவளை தன் விருப்பத்துக்கு இசைவிக்கும்படி அரக்கியர்க்கு உத்தரவிட்டான். கலக்கத்துடன் மண்டோதரி யின் அந்தப்புரத்துள் நுழைகிறான்.

வருகிற கணவனின் நடை தளர்ந்திருக்கிறது.
தலை குனிந்திருக்கிறது. முகம் வாடியிருக்கிறது. சுவாமி, தங்கள் முகம் ஏன் வாட்டமுற்றுள்ளது?

வந்ததும் நேரே பூஜை அறைக்குச் சென்று சந்திரஹாச வாளை வைத்துவிட்டு வருவீர்களே. அது எங்கே? என்று பதட்டத் துடன் கேட்டாள் பத்தினி.

இராவணன், அந்த வாள் எங்கே போயிற்று என்று தெரியவில்லை தேவி என்றான். என்ன சுவாமி இது? நிராயுதபாணி யார் மீதாவது பயன்படுத்தினால் அதைக் கொடுத்த சிவனிடமே திரும்பிவிடும் என்று சிவனார் அன்று சொன்னதை என்னிடம் சொல்லி இருக்கிறீர்களே.

இப்பொழுது எந்த நிராயுத பாணிமீதாவது பயன்படுத்தினீர்களா? என்று கவலையுடன் கேட்டாள் மண்டோதரி.

இராவணன் மண்டோதரி முகத்தைப் பார்க்காமலே சொன்னான். ஆம் தேவி. இப்பொழுது தான் நினைவு வருகிறது. சீதையை புஷ்பக விமானத்தில் கொண்டு வரும்பொழுது ஒரு பெருங்கழுகு என்னைத் தடுத்தது. அதன் அலகால் என்னை பயங்கரமாய் தாக்கியது.

அப்பொழுது ஆத்திரமடைந்த நான் அந்தக் கழுகின் சிறகுகளை அந்த வாளால் வெட்டி கழுகை வீழ்த்தினேன்.

அந்தக் கழுகிடம் ஆயுதம் ஏதும் இல்லையா? அதன் அலகுதான் ஆயுதமாகப் பயன்பட்டது. வேறெதுவும் இல்லை.

சுவாமி, அலகு ஓர் உறுப்பல்லவா? அது எப்படி ஆயுதமாகும்? அப்படியானால் அந்தக் கழுகு நிராயுதபாணி தான். வாள் சிவனிடம் திரும்பிச் சென்றிருக்கும். பெற்ற வரத்தை மறந்து விட்டீர்களே சுவாமி!

ஆத்திரத்தில் அறிவிழந்துவிட்டேன் தேவி.

ஆத்திரம் மட்டுமல்ல; மாற்றான் மனைவி யாகிய சீதைமீது கொண்ட காமம்தான் அறிவு மயங்கச் செய்துள்ளது என்பதை மண்டோதரி தன் மனத்துக்குள் நினைத்து வருத்தினாள்.

இராவணனின் மறதிக்கு காமமே காரணமானது. காமமே துன்பங்களுக்குக் காரணம் என்கிறார் திருவள்ளுவர்.

காமம், வெகுளி, மயக்கம் இம்மூன்றன் நாமம்கெடக் கெடும் நோய்.
அதேபோல் பெற்றோர், செய்நன்றி, வாழ்க்கையின் முக்கியமானவர்கள், நமது கடமை ஆகியவற்றை எப்போதும் மறக்கக்கூடாது.

அப்படி வரக்கூடிய மறதியானது மிகவும் கெடுதலாக அமையும்.

ஆன்மீக வாழ்க்கைக்கு புராணங்கள் பற்றிய விழிப்புணர்வு அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்...!

Dr.S.Soundarapandian and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Jul 10, 2021 8:01 pm

அருமையான பதிவு அண்ணா…🙏🏽💐🙏🏽

இராவணர் காமத்தில் மதியிழக்கும் மாந்தர்களுக்கு மத்தியில் கண்ணியத்துடன் இருந்திருக்கிறார்..😊



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை

சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 10, 2021 8:06 pm

மிக அருமையான பகிர்வு சிவா...நன்றி ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 11, 2021 6:54 pm

மறதி என்பது தேவையான நேரத்தில் ஏற்பட்டால் அது பலமாகும், அதே மறதி தேவையில்லாத நேரத்தில் ஏற்பட்டால் பலவீனமாவதும் உண்டு.

அழகான எடுத்துக்காட்டு.
காமம் கூடாது
தற்காலங்களில் காமத்தால்,அநேக அரசியல்வாதிகள்  தங்கள் சந்திரஹாசத்தை (அமைச்சர் பதவிகளை ) இழக்கின்றனர். அநேக பெண்களும் தங்கள் மந்தஹாஸத்தால் சந்திரஹாஸங்களை வெல்கிறார்கள்.
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jul 11, 2021 9:01 pm

நல்ல பதிவு சிவா அவர்களே!

தாங்கள் , நான் படங்களைப் பதிவேற்ற வசதி தந்தீர்கள்; நன்றி ! ஆனால், இது சற்றுச் சுற்று வழியாக உள்ளதே; முன் இருந்தது போல வராதா? பாருங்கள்.



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
aanmeegam
aanmeegam
பண்பாளர்

பதிவுகள் : 97
இணைந்தது : 05/06/2021
https://www.aanmeegam.in/

Postaanmeegam Sun Jul 11, 2021 9:14 pm

மறதி பலமா? பலவீனமா? 363536751045211

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக