புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கொம்பு முளைத்த எம்.எல்.ஏ Poll_c10கொம்பு முளைத்த எம்.எல்.ஏ Poll_m10கொம்பு முளைத்த எம்.எல்.ஏ Poll_c10 
11 Posts - 52%
ayyasamy ram
கொம்பு முளைத்த எம்.எல்.ஏ Poll_c10கொம்பு முளைத்த எம்.எல்.ஏ Poll_m10கொம்பு முளைத்த எம்.எல்.ஏ Poll_c10 
10 Posts - 48%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொம்பு முளைத்த எம்.எல்.ஏ Poll_c10கொம்பு முளைத்த எம்.எல்.ஏ Poll_m10கொம்பு முளைத்த எம்.எல்.ஏ Poll_c10 
52 Posts - 59%
heezulia
கொம்பு முளைத்த எம்.எல்.ஏ Poll_c10கொம்பு முளைத்த எம்.எல்.ஏ Poll_m10கொம்பு முளைத்த எம்.எல்.ஏ Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
கொம்பு முளைத்த எம்.எல்.ஏ Poll_c10கொம்பு முளைத்த எம்.எல்.ஏ Poll_m10கொம்பு முளைத்த எம்.எல்.ஏ Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
கொம்பு முளைத்த எம்.எல்.ஏ Poll_c10கொம்பு முளைத்த எம்.எல்.ஏ Poll_m10கொம்பு முளைத்த எம்.எல்.ஏ Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொம்பு முளைத்த எம்.எல்.ஏ


   
   
avatar
Guest
Guest

PostGuest Tue May 18, 2021 2:21 pm

கடமையை செய்.. அவமானப்படு.. திமுக எம்எல்ஏவால் மிரட்டப்பட்ட அசிஸ்டென்ட் கமிஷ்னர்..!

சென்னை தலைமைச் செயலகத்தில இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வீட்டிற்கு புறப்பட தயாராக இருந்தார். இதனை அடுத்து அவரது பாதுகாப்பு வாகனங்கள் அடங்கிய கான்வாய் அலெர்ட் செய்யப்பட்டது. பொதுவாக முதலமைச்சரின் கான்வாய் இருக்கும் பகுதிக்குள் யாருக்கும் அனுமதி வழங்கப்படுவது இல்லை. ஆனால் திமுக எம்எல்ஏ எழிலன் திடீரென கான்வாய் இருக்கும் பகுதிக்குள் நுழைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு பணியில் இருந்த உதவி ஆணையர் கொடிலிங்கம், நீ யாரு, எங்கே உள்ளே போற? என்று கேட்டுள்ளார்.

அதற்கு டென்சன் ஆன எம்எல்ஏ எழிலன், முறைத்துக் கொண்டே இந்த இடத்தில் இருந்து நேராக முதலமைச்சர் கான்வாய்க்குள் நுழைந்துவிட்டார். பிறகு முதலமைச்சர் சென்ற பிறகு திரும்பி வந்த எழிலன், மறுபடியும் காவல் பணியில் இருந்த காவலர்கள் பகுதிக்கு வந்து யார் அது, என்னை பார்த்து யார் நீ என்று கேட்டது என்று சலம்பியுள்ளார். ஆனால் சிறிதும் அச்சம் இல்லாமல் அங்கு வந்த உதவி ஆணையர் கொடிலிங்கம், தான் தான் என்று கூறியுள்ளார். ஒரு எம்எல்ஏவை பார்த்தே யார் என்று கேட்பீர்களா? என்று பதிலுக்கு எழிலன் குரலை உயர்த்த, எனக்கு நீங்கள் எம்எல்ஏ என்று தெரியாது என்று கொடிலிங்கம் ஒரே போடாய் போட்டார்.

பாதுகாப்பு பணியில் இருந்தால் யார் யார் எம்எல்ஏ என்றெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று உதவி ஆணையர் கொடிலிங்கத்தை மிரட்டும் தொனியில் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார் எழிலன். ஆனால் தான் தனது கடமையை மட்டுமே செய்ததாக பதில் அளித்துவிட்டு சென்றார் கொடிலிங்கம். இதனிடையே முதலமைச்சரின் பாதுகாப்பின் போது ஒரு புரட்டகால் மிக கண்டிப்புடன் பின்பற்றப்படும். அது அவரது வாகன அணிவகுப்பில் அனுமதிக்கப்பட்டவர்களை தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை. இந்த அடிப்படையில் தான் ஒருவர் கான்வாய்க்குள் செல்லும் போது உதவி ஆணையர் கொடிலிங்கம் தடுத்து நிறுத்தியுள்ளார்.

பாதுகாப்பு நடைமுறைகளை மீறி முதலமைச்சர் அருகே செல்வது எம்எல்ஏவாக இருந்தாலும் சரி, அமைச்சராக இருந்தாலும் சரி அது மிகப்பெரிய தவறு. இதற்காக எழிலன் மீது போலீசார் வழக்கே பதிவு செய்யலாம். ஆனால் நடைமுறை இப்படி இருக்க, பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றாமல் அடாவடியாக முதலமைச்சர் அருகே சென்றதோடு எம்எல்ஏக்களை எல்லாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று உதவி ஆணையரை எழிலன் மிரட்டுவது தான் சமூகநீதியா? என்று அவரை ஆதரிப்பவர்கள் விளக்க வேண்டும்.(ttn/ann)

(சிலருக்கு பதவி வந்ததும் கொம்பு முளைக்கிறதாம்.பல சமயங்களில் தலைமை எல்லா செயற்பாடுகளையும் கண்காணித்து செயல்பட முடியாது.அந்த சமயங்களில் உண்மையான தொண்டர்கள்/உறுப்பினர்கள்/எம்.எல்.ஏ தலைமைக்கு கெட்ட பெயர் வராமல் சாதுரியமாக செயல்பட வேண்டும்.அப்படிச் செய்யா விட்டால் கொம்பு முளைப்பதை தவிர்க்க முடியாது. ஆட்சி மாறினும் காட்சி மாறாக் காட்சிகள்.இப்படியான முறையற்ற செயல்கள் சமயம் கிடைக்கும் போதாவது முதல்வர்-கட்சியின் தலைவருக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்)


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue May 18, 2021 4:08 pm

இதுமாதிரி விதிமீறல் செய்வதற்கு அனுமதி உண்டா?
இதற்கு முடிவு கட்டவேண்டியது ---முதலமைச்சர் மட்டுமே.
குஷ்புவிற்கு எதிராக நின்று ஜெயித்த மருத்துவர் எழிலனா ?

செய்திக்கு ஆதாரம் எந்த செய்தித்தாள் சக்தி?

@சக்தி18



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Tue May 18, 2021 5:15 pm

The Times of India

இது தொடர்பாக தமிழ் சமயத்தில் வந்த தொடர் செய்தி……...

முதலமைச்சருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு வந்த பிறகு, தன்னை ஒருமையில் அழைத்தது யார் என்று அங்கிருந்தவர்களை எழிலன் கேட்டுள்ளார். இதையடுத்து, சட்டமன்ற உறுப்பினர் என்று தெரியாமல் அழைத்து விட்டதாக அந்த போலீஸ் அதிகாரி கொடிலிங்கம் பதிலளித்துள்ளார்.

அதற்கு சாந்தமே உருவான சமூக நீதி மருத்துவரான எழிலன் சற்றும் கோபப்படாமல், “சட்டமன்ற உறுப்பினர் என்றில்லை யாராக இருந்தாலும் மரியாதையாக அழைத்து பழகுங்கள், அதுமட்டுமின்றி தலைமைச் செயலகத்தில் பணியில் இருப்பதால் சட்டமன்ற உறுப்பினர்களை அறிந்து வைத்திருப்பது அவசியம்” என்று அறிவுரை வழங்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.

கொரோனா காலத்தில் கடந்த ஓராண்டுக்கு மேலாக ஏராளமான கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தவர் மருத்துவர் எழிலன். அவர் சற்று பிரபலமானவரும் கூட. நடைபெற்று முடிந்த தேர்தலில் பாஜக வேட்பாளரான நடிகை குஷ்புவை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார். எனவே, உதவி ஆணையர் பொறுப்பில் இருக்கும் காவல் அதிகாரிக்கு அவரை தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஆனாலும், அதிமுக, பாஜக ஆதரவு மனப்பான்மை கொண்ட போலீசார் இதுபோன்று தரக்குறைவாக நடந்து கொள்கின்றனர் என்கிறார்கள் உடன் பிறப்புகள்.

பொது மக்களிடம் போலீசார் அராஜகப் போக்குடன் நடந்து கொள்பவர்களாக இருக்கிறார்கள் என்பது பொதுவான குற்றச்சாட்டாகவே இருக்கிறது. பொதுவெளியில் சில போலீசார் மிகவும் கன்னியக்குறைவாக நடந்து கொள்வதும், அவர்கள் போட்டிருக்கும் காக்கிச்சட்டைக்கு மட்டுமே மதிப்பு கொடுத்து பொது மக்கள் அங்கிருந்து கடந்து செல்பவர்களாகவுமே இருக்கிறார்கள். எனவே, போலீசார் தங்களது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். இந்த ஆட்சியிலாவது போலீசாரின் போக்கு மாற்றப்பட வேண்டும் என்பதும் பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

அத்துடன், ஆட்சிக்கு வந்ததும் திமுகவினர் அராஜமாக செயல்படுவார்கள் என்று பொதுவாக பேசப்பட்டது. ஆனால், தற்போது நடக்கும் சம்பவங்கள் திமுகவினர் கட்டுக் கோப்புடன், கண்ணியமாக நடந்து கொள்கிறார்கள். அதிகார மட்டத்தில் இருக்கும் அரசு அதிகாரிகள்தான் அராஜகப் போக்குடன் நடந்து கொள்கிறார்களோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.
(சமயம்)



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue May 18, 2021 6:16 pm

விரிவான தகவலுக்கு நன்றி சக்தி.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82361
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 18, 2021 6:20 pm

பிரபலமானவர்கள் செய்யும் செயல் பரபரப்ப
செய்தியாக ஊடகங்கள் வெளியிடும்...
-
எனவே எம்.எல்.ஏ பதிவியிலுள்ளவர்கள் கவனமாக
நடந்துகொள்ள வேண்டும்...

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

avatar
Guest
Guest

PostGuest Tue May 18, 2021 8:43 pm

ayyasamy ram wrote:பிரபலமானவர்கள் செய்யும் செயல் பரபரப்ப
செய்தியாக ஊடகங்கள் வெளியிடும்...
-
எனவே எம்.எல்.ஏ பதிவியிலுள்ளவர்கள் கவனமாக
நடந்துகொள்ள வேண்டும்...
மேற்கோள் செய்த பதிவு: 1345815

நிச்சயமாக,செய்திக்கு கை-கால் வைத்து வெளியிட ஊடகங்கள் எப்போதும் தயாராக இருக்கின்றன.

எம்.எல்.ஏ. யை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.நாகரீகமாக அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளலாம்.

இங்கே ஒருமுறை, மத்திய தொழில்துறை அமைச்சர், வழக்கமாக ஓட்டுனருடன் செல்பவர்,தனியாக மனைவியுடன் சென்றார்.காவல்துறை மாநில எல்லையில் அவர் சென்ற காரை மறித்தது.அடையாள அட்டை அவரிடம் இருக்கவில்லை.ஓட்டுனர் உரிமம் மட்டுமே இருந்தது.அதை சரி பார்க்க அரை மணி நேரம் காத்திருக்க வேண்டி வந்ததாக, அவர் ஒரு தொலைக்காட்சிப் (ஆர்டிஎல்) பேட்டியில் நகைச்சுவையாக சொல்லி, அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டார்.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed May 19, 2021 12:31 pm

கொம்பு முளைத்த எம்.எல்.ஏ 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக