புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எடை குறைக்கும் உணவுகள் ! Poll_c10எடை குறைக்கும் உணவுகள் ! Poll_m10எடை குறைக்கும் உணவுகள் ! Poll_c10 
21 Posts - 66%
heezulia
எடை குறைக்கும் உணவுகள் ! Poll_c10எடை குறைக்கும் உணவுகள் ! Poll_m10எடை குறைக்கும் உணவுகள் ! Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எடை குறைக்கும் உணவுகள் ! Poll_c10எடை குறைக்கும் உணவுகள் ! Poll_m10எடை குறைக்கும் உணவுகள் ! Poll_c10 
63 Posts - 64%
heezulia
எடை குறைக்கும் உணவுகள் ! Poll_c10எடை குறைக்கும் உணவுகள் ! Poll_m10எடை குறைக்கும் உணவுகள் ! Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
எடை குறைக்கும் உணவுகள் ! Poll_c10எடை குறைக்கும் உணவுகள் ! Poll_m10எடை குறைக்கும் உணவுகள் ! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
எடை குறைக்கும் உணவுகள் ! Poll_c10எடை குறைக்கும் உணவுகள் ! Poll_m10எடை குறைக்கும் உணவுகள் ! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எடை குறைக்கும் உணவுகள் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 03, 2020 7:50 pm

எடை குறைக்கும் உணவுகள் !

உள்ளத்தால் சிறப்பாக வாழ நினைக்கும் குண்டுடம்புகாரர்களே! நீங்கள் உடலாலும் சுகமாக வாழ செய்ய வேண்டியதெல்லாம் சரியான உணவுத் தெரிவே ஆகும். கெட்டக் கொழுப்பை உண்டாக்கும் உணவுகளை தவிர்த்து நல்லக் கொழுப்பைத் தரும் உணவுகளைத் தெரிவு செய்தால் உடல் எடை கூடாமல், குறைவதை நாம் கண்கூடாக பார்க்க முடியும். இப்பொழுது நல்லக் கொழுப்பைத் தரும் நல்ல உணவுகள் பற்றி பார்ப்போம்.

உடல் எடையைக் குறைக்கும் நல்லக் கொழுப்பு உணவுகள்:

1. ஆறு மணி நேரம் ஊறிய நிலக்கடலை: ஆறு மணி நேரம் நீரில் ஊறிய நிலக்கடலையானது நச்சுத் தன்மை நீக்கப்பட்டு, உயிர்ப்புத் தன்மை அதிகரிக்கப்பட்டு முழுமைத் தன்மை அடைகிறது. இதை அப்படியே பச்சையாக எடுத்துக் கொள்ளும் போது இதில் உள்ள கொழுப்பு செரிக்கத் தேவையான உயிர்ச் சத்துக்களும் (Vitamins), நொதிகள் (Enzymes) உருவாகத் தேவையான புரதமும் (Protein) கொண்டுள்ளது. நிலக்கடலையை வறுத்து அல்லது சமைத்து உண்டால் கண்டிப்பாக கெட்டக்கொழுப்புச் சேரும்.

2. இயற்கை இனிப்பு உணவுகள்: இயற்கை இனிப்புகளான தேன், கருப்புச் சாறு, இயற்கை வெல்லம், உளர் திராட்சை, பேரீச்சை, மற்றும் இனிக்கும் பழச்சாறுகள் யாவும் கொழுப்புச் செரிமானத்தை திறம்பட நடத்த உதவியாக இருக்கும். இதில் பி-உயிர்ச் சத்துகள் மாவுச் சத்துடன் முழுமையாக இருப்பதால் இவை உடனடிச் சக்க்தியாக மாறி கொழுப்புச் சத்தை செரிக்க மிகவும் உதவியாக இருக்கிறது. சான்றாக கடலை மிட்டாய் செரிக்க அதனுடன் கலக்கப்பட்ட வெல்லம் உதவுகின்றது.

தொடரும்...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 03, 2020 7:50 pm

3. மிளகு: எந்த ஒரு அசைவ உணவோடும் மிளகுத் தூளை கனிசமாகச் சேர்த்துக் கொள்ளும் போது மிகச் சுலபமாகக் கொழுப்புச் செரித்து விடுகிறது.மிளகில் இருக்கும் பி-உயிர்ச் சத்துக்களும் தாதுச் (Minerals) சத்துக்களும் கொழுப்புச் செரிமானத்திற்கு வழி செய்கின்றன. மிளகில் உள்ள தாவரச் சத்துக்கள் (Phytofactors) அசைவ உணவின் விஷத்தன்மையை வெளியேற்ற உதவுகின்றன. பச்சை மிளகாய் உள்ளிட்ட மசாலா அதிகம் சேர்த்த அசைவ உணவுகள் செரிக்க சற்று கடிணமாக இருக்கும்.

4. மீன்கள்: குளத்து மீன்களைவிட கடல் மீன்கள் நல்லவை. கடல் மீன்களில் சிறிய அளவு உள்ளவையும் தோல் மென்மையாகவும் உள்ளவையும் சிறந்தவையாகும். வாலை மீன் உள்ளிட்ட மீன் வகைகளில் பாதரசம் உள்ளிட்ட உயர் அடர்த்தி உலோகங்கள் (Heavy metals) தோலில் படிந்துள்ளதால் அவைகளை தவிர்ப்பது நல்லது. மீன் கொழுப்பு சுலபமாக செரிக்கக்கூடியதாகவும் மூளைக்கு உணவாகவும் திகழ்கிறது.

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 03, 2020 7:51 pm

5. மாமிசம்: பொதுவாக மாமிச உணவுகள் செரிக்க குறைந்தபட்சம் 12 மணி நேரமும், அவை செரித்தபின் அதன் கழிவுகள் வெளியேர மூன்று நாட்களும் ஆகும். அன்றாடம் மாமிச உணவு எடுத்துக் கொள்பவர்கள் தினமும் மலம் கழித்தாலும், உண்மையில் அது மூன்று நாட்களுக்கு முந்தய மலமேயாகும். அதே போல், மாமிச உணவில் 1/3 பங்கு மட்டுமே சக்தியும் 2/3 பங்கு கழிவையும் கொண்டுள்ளது. மாமிசம் மூலம் கிடைக்கும் சக்தியானது அதன் கழிவை வெளியேற்றவே போதாது ஆகையால், மாமிச உணவை தவிர்ப்பது நல்லதுதான்.

அதே சமயம், மாமிச புரதத்தில் சில அத்தியாவச அமினோஅமிலங்களைக் கொண்டுள்ளன. அவைகள் தாவர உணவுகளில் கிடைக்காது. அந்த விதத்தில் மாமிச உணவு தேவைதான். ஆக, மாமிச உணவு தேவையென்றால், குறைவான அளவுகளில், அதுவும் மிளகு சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். மாமிசக் கொழுப்புகளில் சதை தனி கொழுப்பு தனி என்று இருக்கும் பறவை இறச்சி நல்லது. அதுவே சதையும் கொழுப்பும் இரண்டரக்கலந்து இருக்கும் பாலூட்டிகள் (ஆடு, மாடு மற்றும் பன்றி) மாமிசம் கெட்டக் கொழுப்பை அதிகரிக்கச் செய்யும்.

அதே போல் இரசாயனங்கள் மற்றும் ஹார்மோன்கள் அதிகம் கொடுத்து வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகள் நம்மை குண்டாக்கும் தன்மை கொண்டது. இவைகள் வேகமாக வளரக் கொடுக்கப்படும் எஸ்ட்ரோஜன் ஹார்மோன் ஆண்களுக்கு பெண்தன்மையையும், பெண்களுக்கு மாதவிடாய் சிக்கல்கள் மற்றும் உடல் பருமனாவது அதிகரிக்கின்றது. பிராய்லர் கோழிகளை அதிகம் எடுத்துக்கொண்டால் ஹார்மோன் சமன்பாடு குலைந்து மன உளைச்சல் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. இதற்கு பதிலாக நாட்டுக்கோழி சாப்பிடலாம்.

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 03, 2020 7:52 pm

6. எண்ணைகள்: அசைவ உணவைவிட எண்ணைதான் அதிக ஆபத்தானது. அசைவ உணவை எண்ணையில் பொறித்து சாப்பிடும் போது மிகக் கெட்டக் கொழுப்பாகிவிடுகிறது. அதே போல் ஒரு முறை பயன் படுத்திய எண்ணையை மீண்டும் சுடவைத்து பயன்ப்டுத்தும் போது அது மிகக் கொட்டக் கொழுப்பாக மாறி விடுகிறது. எண்ணைகளில் மிகவும் சிறந்தது ஆலிவ் எண்ணையாகும். இதை இரண்டு அல்லது மூன்று முறை சுடவைத்தாலும் கெட்டக் கொழுப்பாக மாறுவதில்லை.

ஆலிவ் எண்ணையில் உள்ள ஒமேகா-9 வகைக் கொழுப்பானது நோய் எதிர்ப்பு சக்தியையும் தோல் ஆரோக்கியத்தையும் தரக்கூடியது. இந்த எண்ணையானது மற்ற எண்ணைகளைவிட மூன்று மடங்கு அடர்த்தியானது. இதன் விலை அதிகம்தான், ஆனால் உங்கள் இதயம் அதைவிட அதிகம்தானே. ஆலிவ் எண்ணைக்கு அடுத்து சிறந்த எண்ணை தேங்காய் எண்ணையாகும். இதுவும் ஓரிரு முறை சுட வைத்தாலும் கெட்டுப் போவதில்லை. மூன்றாவது சிறந்த எண்ணை நல்லெண்ணையாகும்.

ஆலிவ் எண்ணையும் தேங்காய் எண்ணையும் பித்தத்தையும் கபத்தையும் போக்கும் தன்மையுடையன. நல்லெண்ணை வாய்வையும் உடல் உஷ்ணத்தையும் நீக்க வல்லது. நல்லெண்ணை சமையல் அரோக்கியத்திற்கு நல்லது எனபதால்தான் அதை நல்லெண்ணை என்று பெயர் வைத்துள்ளனர். இந்த மூன்று எண்ணைகளைத் தவிர மற்ற எண்ணைகளெல்லாம் அரோக்கியத்திற்கு சுமார்தான். இதயத்திற்கு நல்லது என்று மற்ற எண்ணைகளைக் குறிப்பிடுவதெல்லாம் டூப்பு. உண்மையில் சூரியகாந்தி, நிலக்கடலை மற்றும் சோயா எண்ணையெல்லாம் மித வெப்ப நாடுகளுக்கு (Temperate countries) ஏற்றதாகும். நம்மைப்போல் வெப்ப நாடுகளுக்கு மிகவும் ஏற்ற எண்ணை நல்லெண்ணையேயாகும்.

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 03, 2020 7:52 pm

7. தேங்காய்: தேங்காய் என்பது ஒரு முழுமைப் பொருள். இதில் எல்லாவித அத்தியாவச அமினோ அமிலங்கள் மற்றும் உயர் கொழுப்புகளையும், இவைகளைச் செரிக்கத் தேவையான உயிர்ச் சத்துக்கள், மற்றும் தாதுச் சத்துக்களை உள்ளடக்கிய ஒரு அற்புத உணவாகும். தேங்காயை சமையலில் பயன் படுத்தும் விதத்தில்தான் நல்லதாகவும் கெட்டதாகவும் மாறி விடுகிறது. தேங்காயை அதிகம் வேகவிடாமல் மேலோட்டமாக வதக்கிய நிலையில் எடுத்துக் கொண்டால் சுலபமாகச் செரித்துவிடும், இல்லையேல் செரிப்பதற்கு சற்று கடினமாக இருக்கும்.

கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் தேங்காய் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று பரிந்துரை அளிக்கப்படுகிறது. இவர்களின் செரிமானத்தை அதிகரிக்க வழி தெரியாததால் இப்படி பரிந்துரை செய்ய்கின்றனர். இவர்களின் பரிந்துரையால் இப்போதெல்லாம் அதிகமாக வெங்காயச் சட்னி அல்லது தக்காளிச் சட்னியே அதிகமாக சாப்பிடுகிறார்கள். வெங்காயத்தை அரைப்பதால் நரம்பு பாழ்பட்டுப்போகிறது.

தக்காளியை அரைப்பதால் சிறுநீரக கற்கள் உருவாக வழியாகி விடுகிறது. ஐய்யோ! பாவம், நல்லதை விட்டு கெட்டதற்கு மாறுகிறார்கள். தேங்காயோடு மிளகு அல்லது இயற்கை வெல்லம் சேர்த்து எடுத்துக் கொண்டால் தேங்காய் சுலபமாக செரித்துவிடும். தேங்காய் அரோக்கியத்திற்கு கேடு என்பவர்கள் மலையாளிகளைப் பார்த்தாவது திருந்த வேண்டும்.

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 03, 2020 7:52 pm

8. முட்டை: முட்டையும் ஒரு முழுமை உணவேயாகும். முட்டையை அவித்து சாப்பிட்டால் அத்தனையும் வாய்வாகிவிடும். அதே முட்டையை சிறிதளவு எண்ணையில் மிளகு சேர்த்த ஆம்லெட் செய்து சாப்பிட்டால் அத்தனையும் செரித்தும் கெட்டக் கொழுப்பு ஒட்டாமலும் பார்த்துக் கொள்ளும். கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்குமுட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிட பரிந்துரைக்கின்றனர்.

முழுமையற்றதை எடுத்துக்கொள்ளும் போது செரிமானச் சிக்கல்தான் ஏற்படுகிறது. முட்டையின் வெள்ளைக் கருவில் உயிர்ச் சத்துக்களும், தாதுக்களும் உள்ளன. மஞ்சள் கருவில் அத்திவாவசிய அமினோ அமிலங்கள் மற்றும் அத்தியாவசிய கொழுப்புகளும் கொண்டுள்ளன. இவையிரண்டும் சேர்ந்தால் தான் நல்லது நடக்கும்.

9. பாதாம் மற்றும் பிஸ்தா பருப்புகள்: பாதாம் மற்றும் பிஸ்தா பருப்புகளில் ஒமேகா-3 வகை கொழுப்பு ஓரளவுக்கு இருக்கிறது. இது கொலஸ்ட்ராலைக் குறைக்கும் தன்மை கொண்டுள்ளது. இவ்வகைப் பருப்புகள் செரிக்க சற்று கடிணமாக இருக்கும் ஆதலால் கொஞ்சமாக எடுத்துக்கொள்ளலாம். இவைகளைத் தேனுடன் சேர்த்து எடுத்துக்கொள்ளும் போது சுலபமாக செரிக்கும்.

தொடரும்...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 03, 2020 7:53 pm

10. வெண்ணைப்பழம்: ஆல்பகடா பழம் என்று அழைக்கப்படும் வெண்ணைப் பழம் ஒமேகா-3 வகை கொழுப்பை ஓரளவுக்கு கொண்டு இருக்கிறது. நோய்வாய் படும் நேரத்திலும் இப்பழம் சுலபமாக செரித்து சக்தி அளிக்கவல்லது.

நண்பர்களே! நல்ல கொழுப்பைக் கொடுக்கும் உணவுகளைத் தெரிவு செய்து உடல் பருமனைத் தவிர்த்து, இலகுவான இரத்தக் குழாய், மென்மையான நரம்பு மற்றும் பலபலப்பான தோல் ஆகியவற்றை பெற்று அரோக்கியமாய் வாழுங்கள்.

நல்லதுக்கு நீங்கள் மாறாவிட்டால்

கெட்டது உங்களை கெடுத்துவிடும்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக