புதிய பதிவுகள்
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிரிட்டிஷ் முத்த அதிர்ச்சியிலிருந்தே தமிழனால் இன்னும் மீள முடியவில்லை Poll_c10பிரிட்டிஷ் முத்த அதிர்ச்சியிலிருந்தே தமிழனால் இன்னும் மீள முடியவில்லை Poll_m10பிரிட்டிஷ் முத்த அதிர்ச்சியிலிருந்தே தமிழனால் இன்னும் மீள முடியவில்லை Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram

60 Posts - 42%
mohamed nizamudeen

6 Posts - 4%
ஜாஹீதாபானு

4 Posts - 3%
bala_t

1 Post - 1%
prajai

rajuselvam

Kavithas

இந்த மாத அதிக பதிவர்கள்

291 Posts - 42%

287 Posts - 41%
Dr.S.Soundarapandian
பிரிட்டிஷ் முத்த அதிர்ச்சியிலிருந்தே தமிழனால் இன்னும் மீள முடியவில்லை Poll_c10பிரிட்டிஷ் முத்த அதிர்ச்சியிலிருந்தே தமிழனால் இன்னும் மீள முடியவில்லை Poll_m10பிரிட்டிஷ் முத்த அதிர்ச்சியிலிருந்தே தமிழனால் இன்னும் மீள முடியவில்லை Poll_c10 
52 Posts - 7%

26 Posts - 4%
sugumaran

16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பிரிட்டிஷ் முத்த அதிர்ச்சியிலிருந்தே தமிழனால் இன்னும் மீள முடியவில்லை Poll_c10பிரிட்டிஷ் முத்த அதிர்ச்சியிலிருந்தே தமிழனால் இன்னும் மீள முடியவில்லை Poll_m10பிரிட்டிஷ் முத்த அதிர்ச்சியிலிருந்தே தமிழனால் இன்னும் மீள முடியவில்லை Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%
manikavi

4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரிட்டிஷ் முத்த அதிர்ச்சியிலிருந்தே தமிழனால் இன்னும் மீள முடியவில்லை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 06, 2018 8:24 pm

பிரிட்டிஷ் முத்த அதிர்ச்சியிலிருந்தே தமிழனால் இன்னும் மீள முடியவில்லை Yg9gU978S5C7ZOD09JpJ+brjpg
பிரிட்டனில் தமிழர் வாழ்க்கை என்னவாக இருக்கிறது? பலருடன் உரையாடினேன் என்றாலும், ஒரு பேட்டி விசேஷமாக எனக்குத் தோன்றியது. கவிஞர், சிறுகதையாசிரியர், ஊடகவியலாளர் எனப் பன்முக ஆளுமையான இளைய அப்துல்லாஹ்வுடனான உரையாடல்தான் அது.
முல்லைத்தீவில் பிறந்த ஸ்ரீபாலமுருகன் பின்னாளில் எப்படி இளைய அப்துல்லாஹ் ஆனார் என்ற அவருடைய இளமைக் கால இலங்கைக் கதையே ஒரு நாவலுக்கான களம். அவர் ஐரோப்பா வந்து சேர்ந்தது, பிரிட்டனைத் தன்னுடைய நாடாக்கிக்கொண்டது, இங்கு தன்னை நிலைநிறுத்திக்கொள்ள இன்றளவும் அவர் பட்டுக்கொண்டிருக்கும் பாடுகள் யாவையும் அவர் வாய்வழி கேட்கும்போது சுவாரஸ்யமாக்கிவிடுவது அவருடைய கதையாடல் திறன் என்றாலும், முதுகுத்தண்டைச் சில்லிடவைக்கும் வலி மிகுந்தவை அவை. ‘லண்டன் உங்களை வரவேற்பதில்லை’ என்ற இவருடைய கட்டுரை நூல் பிரிட்டனின் இன்னொரு முகத்தைச் சொல்வது.

நன்றி
இந்து தமிழ்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 06, 2018 8:27 pm

ஒருநாள் தொலைக்காட்சி அறிவிப்பாளர், மறுநாள் டாக்ஸி ஓட்டுநர்... வாழ்க்கை எப்படி இருக்கிறது?

பிரிட்டன் வந்து இருபது வருஷம் ஆகிறது. ஒரு கன்டெய்னரில் வந்து லண்டனில் இறங்கினேன். டெலிபோன் காட் விற்றேன். ஊருக்கு அப்போதெல்லாம் தொலைபேசி அட்டை மூலம்தான் போன் பேச முடியும். அதில் வாரத்துக்கு 200 பவுண்டு சம்பாதித்தேன். பிறகு, உருளைக்கிழங்கு ஆலையில் வேலை செய்தேன். அடுத்து, பெட்ரோல் நிலையம். பிறகு, ‘தீபம் தொலைக்காட்சி’. 12 வருஷங்களுக்குப் பிறகு ‘தீபம் தொலைக்காட்சி’யைப் புதிய நிறுவனம் ஒன்றுக்கு அதன் உரிமையாளர்கள் விற்றார்கள். அதற்குப் பிறகு வேலை நெருக்கடி ஏற்பட்டது. பழைய வேலையாட்களை நீக்கினார்கள். நான் விமான நிலையத்துக்கு ஆட்களை ஏற்றி இறக்கும் டாக்ஸி ஓட்ட ஆரம்பித்தேன். இப்போது ஐபிசி தொலைக்காட்சியில் வேலை பார்த்தபடி டாக்ஸியும் ஓட்டுகிறேன். இது நல்ல வித்தியாசமான அனுபவம். எவ்வளவோ கஷ்டங்களைப் பார்த்துவிட்டபடியால் இதில் கஷ்டம் ஏதும் தெரியவில்லை

உருளைக்கிழங்கு ஆலையில் இருந்தேனே, அங்கு எனக்கு என்ன வேலை தெரியுமா? இயந்திரத்திலிருந்து தோல் உரித்து வரும் உருளைக்கிழங்கில் இருக்கும் கறுப்புப் புள்ளிகளை அகற்றும் வேலை. சின்ன கூரான கத்தி கொடுப்பார்கள். கத்தி கையில் வெட்டும். ரத்தம் கொட்டும். கை குளிர் தண்ணீரில் எரியும். கிழங்குகளை வெட்ட வேண்டும். வெட்டி வெட்டி கைகள் குளிரில் விறைத்துப்போகும். அந்த வட இந்திய முதலாளி பதினைந்து வினாடிகள்கூடச் சும்மா இருக்க விடமாட்டார். ஒரு மணி நேரத்துக்கு இரண்டு பவுண்டுதான் சம்பளம். நான் வேலைக்குப் புதிது என்பதால், இந்த நாட்டின் குறைந்தபட்சக் கூலிச் சட்டவுரிமை இதெல்லாம் எதுவும் அப்போது தெரியாது

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 06, 2018 8:34 pm

அந்த வேலையோடு ஒப்பிட இதுவெல்லாம் ஒன்றுமே இல்லை. ஒரு எழுத்தாளனால் சும்மா இருக்க இயலாது. இந்த அனுபவங்கள் எல்லாம் அதற்கு நன்றாகவே தீனி போடுகின்றன. அனுபவங்களைச் சொல்ல இந்தப் பேட்டியில் இடம்போதாது. அனலைத்தீவுக் கடலில் மீன் பிடித்திருக்கிறேன், மாத்தளையில் பாமஸி வேலை, உடுப்பிட்டியில் தச்சு வேலை, வல்வெட்டித்துறையில் கொத்து வேலை, ‘சிந்தாமணி’ பத்திரிகையில் எழுத்து வேலை, இலங்கை வானொலியில் நிகழ்ச்சி வேலை… இந்த இடத்துக்கு வந்து சேர எவ்வளவு நீண்ட பயணம்… அப்பாடா!

பிரிட்டனுக்கு கன்டெய்னரில் தமிழர்கள் வந்து சேரும் கொடுமை இன்னமும் நீடிக்கிறதா?

கன்டெய்னர் பயணம் என்ற வார்த்தைகளைக் கேட்கும் மாத்திரத்தில் என் முதுகு இப்போதும் வலிக்கிறது. ஒவ்வொரு எலும்பு மூட்டுக்குள்ளாலும் வேதனை பீறிடுகிறது. கொடுமைதான் அது... பெருங்கொடுமை. சாமான்கள் கொண்டுவரும் கன்டெய்னருக்குள் மறைந்து பெட்டிபோலச் செய்து ஆட்கள் உட்கார்ந்துவருவது லேசு அல்ல. கன்டெய்னருக்குள்ளேயே சிக்கி செத்துப்போனவர்கள் கதையெல்லாம் நான் கேட்டிருக்கிறேன். பலருக்கு இந்த அனுபவம் எப்படி இருக்கும் என்றே தெரியாது.

நானும் அப்படித்தான் வந்தேன். இலங்கையிலிருந்து ஒரு இலக்கியச் சந்திப்புக்காக ஜெர்மனி வந்திருந்தேன். நண்பர்கள், “இங்கேயே நில்லுங்கோ” எண்டு சொன்னார்கள். “அகதி அந்தஸ்தோடு இங்கேயே தங்கிவிடலாம்” என்று அதற்கு அர்த்தம். ஜெர்மனியிலோ பிரான்ஸிலோ அகதி அந்தஸ்து கோரினால் கிடைக்காது என்பதால், லண்டன் போகச் சொன்னார்கள். அப்படித்தான் லண்டனுக்கு வந்தேன். ஹாலந்திலிருந்து பெல்ஜியத்துக்கு காரில் கொண்டுவந்தான் எனது நண்பனொருவன். பெல்ஜியத்தில் ஒரு வீட்டில் இருக்கச் சொன்னார்கள். இருந்தேன். நான்கு தமிழர்கள் அங்கே ஏற்கெனவே இருந்தார்கள். பிறகு, அங்கிருந்து அவர்களோடு காரில் ஏற்றி இன்னொருவன் கொண்டுபோனான். கார் போகிறது புகைபோல. ஓரிடத்தில் காரை நிறுத்தி, “இறங்கி ஓடுங்கோ” என்று சொன்னான். இறங்கி ஓடினோம். “பற்றைக்குள் படுங்கோ”... படுத்தோம். அங்கிருந்து லண்டனுக்கு சரக்கு கன்டெயினரில் கொண்டுவரப்பட்டோம். லண்டனுக்கு கன்டெய்னரில் வருவது பெரும் ஆபத்து. இப்படி வருவது குற்றம், பிடிபட்டால் கடும் தண்டனை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 06, 2018 8:35 pm

தெரிந்தேதான் ஆட்களைக் கடத்துகிறார்கள். எல்லையில் பொலிஸ்காரர்கள் நிற்பார்கள். எக்ஸ்ரே கருவிகள், மோப்ப நாய்கள், உள்ளே ஆட்கள் இருந்தால் அவர்களுடைய மூச்சுக்காற்றைக் காட்டிக்கொடுக்கும் கருவி இவ்வளவோடும் பொலிஸார் நிற்பார்கள். இத்தனையும் தெரிந்தே கன்டெய்னர் சாரதிகள் அகதிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு இங்கே கொண்டுவந்துவிடுகிறார்கள். ஆனால், இப்போது இந்தப் பாதையில் வர முடியாது. எல்லா எல்லைப் பகுதிகளிலும் கடும் காவல். பயங்கரவாதிகள் உள்ளே வந்துவிடுவார்கள் என்ற அச்சம் எல்லா நாடுகளுக்கும் இருக்கிறது. ஆகவே, எல்லைப் பகுதிகள் எல்லாம் கடும் காவல் போட்டுவிட்டார்கள்.

ஏனைய சமூகங்களுடன் ஒப்பிட தமிழ்ச் சமூகம் பொருளாதாரரீதியாகக் கீழ்நிலையில் இருப்பதை இங்கே காண முடிகிறது. என்ன காரணம்?

உண்மைதான், ஊரில் யாழ்ப்பாணத்தில் மட்டக்களப்பில் கல்விச் சமூகமாக வாழ்ந்தோம். அங்கு கல்விதான் மூலதனம். இங்கு அப்படி அல்ல. நான் கண்டேன் உணவு விடுதி ஒன்றில் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்துப் பேராசிரியர் ஒருவர் வரவேற்பு மேஜையில் நின்றார். நாம் பெரிய வாணிபச் சமூகம் இல்லை. போரால் புலம்பெயர்ந்து இங்கு வந்தவர்கள்தான் நம்மில் அதிகம். ஒற்றுமையும் இல்லை. தமிழர்கள் என்று ஒரே சொல்லால் நீங்கள் குறித்தாலும் இங்கே பிரிவினை இருக்கிறது. ஈழத்திலிருந்து அகதிகளாக வந்தவர்கள் வாழ்க்கை பெரிய சோபிதமாய் இல்லை. இலங்கையில் உள்ளவர்களைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு ஈழத் தமிழர்களின் தலையில் இருக்கிறது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 06, 2018 8:36 pm

இலங்கையிலிருந்து ‘காசு... காசு’ என்று தொலைபேசி அழைப்புகள் வந்துகொண்டே இருக்கும். உடனே, இவர்கள் கிரிடிட் கார்டில் லோன் எடுத்து அனுப்பிப்போட்டு, படுக்கக்கூட இடமில்லாமல் ஓட்டாண்டியாகத் திரிவார்கள். ஒரு அறைக்குள் நான்கு இளைஞர்கள் படுத்திருப்பார்கள். தமிழ்நாட்டுத் தமிழர்கள் வேலை சார்ந்து இங்கே வருவதால், கொஞ்சம் வசதியாக இருப்பார்கள். ஆனால், ஈழத் தமிழரையும் தமிழகத் தமிழர்களையும் இணைக்கிற புள்ளிகள் குறைவு. இருவருக்குமான உணவுப் பழக்கம், வாழ்க்கைமுறை, கலாச்சாரம் வேறாக இருப்பதால் இருவரும் பிரிந்துதான் வாழ்கிறார்கள். இருவருக்கும் தொப்புள்கொடி உறவென்றாலும்கூட பேச்சுவழக்கைக்கூடப் புரிந்துகொள்ள முடியாத சிக்கல் இருக்கிறது. தமிழ்ச் சங்கங்கள், கோயில்கள் என எல்லாமும் இருவருக்கும் தனித்தனியாக இருக்கின்றன. இது தவிர, நமக்கே உரிய சாதிப் பாகுபாடு இருக்கிறது. எங்கே வந்தாலும், இந்த மூட்டையையும் தூக்கிக்கொண்டு வந்துவிடுகிறார்கள்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 06, 2018 8:37 pm

சாதி வெறியானது சமூகப் பொருளாதாரத் தளத்தில் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தையும் எவ்வளவு கீழே வைத்திருக்கிறது என்பதை இப்படிப் புலம்பெயர்ந்து வெளியே வந்த பிறகும்கூட நம்மாட்கள் உணரவில்லையா?

எங்கே உணர்கிறார்கள்.. ஒரு தமிழன் இருக்கிற பகுதியில் இன்னொரு தமிழன் வீடு வாங்க யோசிக்கிறான்; தொல்லை என்று நினைக்கிறான். பிரான்ஸில் இருக்கும் தமிழ்ப் பையன் ஒருவன், தமிழ்நாட்டில் உள்ள ஒரு பெண்ணைக் காதலித்து, கல்யாணம் முடித்து இங்கே அழைத்துவந்துவிட்டான். இருவரும் வேறுவேறு சாதி. “அந்தப் பெண்ணை விவாகரத்து செய்து ஊருக்கு அனுப்பாவிட்டால், ஊரில் உள்ள பெண்ணுடைய அப்பா - அம்மாவை வெட்டிப்போடுவோம்” என்று அந்தப் பையனைப் பயமுறுத்தி, ஊருக்குப் பெண்ணைத் திரும்ப அனுப்பவைத்தார்கள் அவனுடைய பெற்றவர்கள். இத்தனைக்கும் அந்தப் பையன் பிரான்ஸில் டொக்டர். இலங்கையில் தாழ்த்தப்பட்ட சாதியாகப் பார்க்கப்படும் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பையன் -

அவன் இங்கே நல்ல வேலையில் இருக்கிறான் - அவனோடு வேலைசெய்யும் தமிழ்ப் பெண் - அவளும் இலங்கையைச் சேர்ந்தவள், உயர்ந்த சாதியாகப் பார்க்கப்படும் சமூகத்தைச் சேர்ந்தவள் - கல்யாணம் முடித்தாள். இருவரும் வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள். பெற்றோருக்கு முன்னறிமுகமே கிடையாது. கல்யாணத்தைக் கேள்விப்பட்டதும் பெண் வீட்டு ஆட்கள், அந்தப் பையன் ஊருக்குத் தேடிச் சென்று மிரட்டுகிறார்கள்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 06, 2018 8:38 pm

தங்கள் பிள்ளைகள் ஆஃப்கன், ஆப்பிரிக்கப் பிள்ளைகளைக் கல்யாணம் முடித்தால்கூடத் தமிழர்களுக்குப் பிரச்சினை இல்லை. ஆனால், சாதிக்கு வெளியே சக தமிழ்ப் பிள்ளையைக் கல்யாணம் முடிப்பது அவமானமாகிவிடுகிறது. இதையடுத்து, வர்க்கப் பிரிவினை வேறு. மருத்துவர்கள், பொறியாளர்களாக இங்கே உத்தியோகம் கிடைத்து வருபவர்களுக்கு தாங்கள் என்னமோ வானத்திலிருந்து குதித்தது போன்ற எண்ணம் இருக்கிறது. அகதிகளாக வந்த தமிழர்களை அருவருப்பாகப் பார்க்கும் போக்கு இவர்களிடம் இருக்கிறது. வெட்கத்தைவிட்டுப் பேச வேண்டும் என்றால், ‘‘நீங்கள் யார்?” என்று கேட்டுப் பழகும் அவல நிலை தமிழர்களிடையே இருக்கிறது. இப்படி இருந்தால், எப்படி இந்தத் தமிழ் இனம் முன்னேறும்? குஜராத்திகள், பஞ்சாபிகள் எல்லாம் இங்கே குழுமங்களாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். தமிழர்கள் தங்கள் குடும்பத்துக்குள் உழன்றுகொண்டிருக்கிறார்கள்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 06, 2018 8:41 pm

இங்குள்ள மேற்கத்தியக் கலாச்சாரம் இங்கு வருபவர்களிடம் நிறைய மாற்றங்களை உண்டாக்கும் இல்லையா?

நீங்கள் நினைப்பதுபோல ஆக்கபூர்வமாகச் சொல்ல நிறைய இல்லை. பிரிட்டனுக்கு வந்ததும் ஒரு தமிழனுக்கு முதலில் ஏற்படுவது கலாச்சார அதிர்ச்சி. மிக அடிப்படையானது ஆண் - பெண் உறவுமுறை. பொதுவெளியில் பிரிட்டிஷார் நீண்ட நேரம் உதட்டில் அழுத்திக் கொடுத்துக்கொள்ளும் முத்தம் உண்டாக்கும் அதிர்ச்சியிலிருந்தே ஒரு தமிழனால் விடுபட முடிவதில்லை. இங்குள்ள பையன்கள் இந்தியாவிலிருந்தோ, இலங்கையிலிருந்தோதான் பெண் தேடுகிறார்கள். பலர் சீதனம் பேசுவதில் அக்கறை காட்டுவதில்லை என்று சொன்னாலும், அதற்குப் பதிலாக அவர்கள் எதிர்பார்ப்பது என்ன தெரியுமா? ‘கன்னிகழியாத பெண்கள்’ வேண்டும். இதற்கு அவர்கள் பிரயோகிக்கும் வார்த்தை ‘குடும்பப் பாங்கான பெண்’. அப்படியென்றால், இங்கேயுள்ள பெண்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்ற பெருங்கேள்வி எழுகிறது. இங்கே உள்ள தமிழ்ப் பெண்களையே இப்படிப் பார்க்கிறார்கள் என்றால், ‘கே’, ‘லெஸ்பியன்’ போன்ற தன்பாலின உறவாளர்களை ஒரு தமிழ் மூளை எப்படிப் பார்க்கும்? இங்கே தன் பாலின உறவாளர்கள் இயல்பான வாழ்க்கை வாழ்கிறார்கள். அவர்கள் குழந்தைகளை எடுத்து வளர்ப்பார்கள். ‘‘எனக்கு இரண்டு அம்மா அல்லது இரண்டு அப்பா’’ என்று அந்தப் பிள்ளைகள் சொல்லும். ஒரு தமிழ் மூளைக்குள் இதெல்லாம் நுழைவதே இல்லை. அதேநேரத்தில், கோளாறாக நிறைய நுழைகிறது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 06, 2018 8:43 pm

வெள்ளைக்காரர்களிடம் தவறாக உள்வாங்கிக்கொள்வது நடக்கிறது. குடும்ப உறவுகள் உடைகின்றன. நிறைய விவாகரத்து நடக்கிறது. கணவன் மனைவியை மதிப்பதில்லை. மனைவி கணவனை மதிப்பதில்லை. இங்கே ஒரு சின்ன குடும்பத்தை நடத்தக் குறைந்தது 1,200 பவுண்டுகள் வேண்டும். இந்த அடிப்படைத் தேவைக்காகவே கடினமாக உழைக்க வேண்டிய தேவை இருக்கிறது. ஆண், பெண் இருவரும் வேலைக்குப் போவதால், இருவர் இடையேயான பிணைப்பில் பெரிய இடைவெளி உண்டாகிறது - அதேசமயம், இருவர் மத்தியிலும் பொருளாதாரச் சுதந்திரமும் உண்டாகிறது. தனி வாழ்க்கை சுகம் தரும் என்ற மனநிலை பலரிடமும் ஏக்கமாக வெளிப்படுவதைப் பார்க்க முடிகிறது. இவையெல்லாமும் தடித்த கட்டுப்பெட்டித்தன மூளைக்குள்ளேயேதான் நடக்கிறது. நாங்கள் மனப் பிரச்சினை தொடர்பாகத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நடாத்தினால், தொலைபேசி அழைப்புகள் வந்து குவியும். தமிழர்கள் மத்தியில் அவ்வளவு மனச் சிக்கல் இருக்கிறது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 06, 2018 8:46 pm

புலம்பெயர் தமிழர்கள் வீடுகளில் தமிழ் என்னவாக இருக்கிறது? இளைய தலைமுறையினர் தமிழை எப்படிப் பார்க்கிறார்கள்?

சிக்கலான கேள்வி. தமிழ்தான் இங்கே அடையாளம். ஆனால், வீட்டுப் பயன்பாட்டில்கூட தமிழ் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. கொஞ்சம் படிப்பு வந்துவிட்டது, வசதி வந்துவிட்டது என்றால், அந்தக் குடும்பங்களில் முதலில் நடப்பது தங்கள் பிள்ளைகளைத் தமிழ் பேச விடாமல் பெற்றோர்கள் திசைதிருப்புவதுதான். ‘‘நான் பிரிட்டிஷ்” என்று பிள்ளைகள் சொல்வதைத் தமிழர்கள் பெருமையாக வெளியே சொல்லிக்கொள்கிறார்கள். வெள்ளைத்தோல் அல்லாத ஐரோப்பியர் என்று தங்களை எங்களுடைய மூன்றாம் தலைமுறை நினைக்கிறது. தமிழ் மொழி தொடர்பான எவ்விதக் கரிசனமும் அவர்களுக்கு இல்லை. தமிழ் மொழி தேவையில்லை என்றே நினைக்கிறார்கள்.

என்னதான் இந்த ஊரோடு நாம் கலந்தாலும், நம்முடைய கறுப்புத் தோல் ஐரோப்பிய சமூகத்தோடு ஒட்டவே விடாது. அப்போது தமிழ் வேரையும் அவர்கள் இழந்திருப்பார்கள். எப்படியும் இது வருங்கால சந்ததிக்குப் பிரச்சினையாகத்தான் இருக்கப்போகிறது.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக