புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் Poll_c10தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் Poll_m10தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் Poll_c10 
21 Posts - 66%
heezulia
தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் Poll_c10தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் Poll_m10தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் Poll_c10தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் Poll_m10தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் Poll_c10 
63 Posts - 64%
heezulia
தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் Poll_c10தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் Poll_m10தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் Poll_c10தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் Poll_m10தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் Poll_c10தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் Poll_m10தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளி செய்திகள் | கட்டுரைகள்

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 25, 2018 2:55 am

தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f389 தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1e9தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1eaதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1eaதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1f5தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1e6தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1fbதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1e6தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1f1தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1ee தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f4ab

ஐப்பசி மாதம் அடைமழைக் காலம் என்பது பழமொழி. அத்துடன் ஐப்பசி ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் மாதமும் ஆகும். இம்மாதத்திற்கு துலா மாதம் என்ற பெயரும் உண்டு. இம்மாதத்தில் இந்தியாவின் முக்கிய பண்டிகையான தீபாவளி கொண்டாடப்படுகிறது.

கேதார கௌரி விரதம், முருகன் சுக்ரவார விரதம், தனத்திரயோதசி, யமதுவிதியை, கோவத்ச துவாதசி, பாபாங்குசா ஏகாதசி, இந்திர ஏகாதசி போன்ற நிகழ்வுகளும் ஐப்பசியில் நிகழ்கின்றன. இவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

தீபாவளி இந்தியா முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடக்கூடிய பண்டிகையாகும். இது ஆண்டுதோறும் ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசியில் தென்இந்தியாவிலும், ஐப்பசி அமாவாசையில் வடஇந்தியாவிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இப்பண்டிகை இந்துக்கள், சமணர்கள், சீக்கியர்களால் மிகவிமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை வடஇந்தியாவில் லட்சுமி பூஜை என்றும், வங்காளத்தில் காளி பூஜை என்றும் வழங்கப்படுகிறது.

இப்பண்டிகையின்போது நல்லெண்ணெய் தேய்த்து வெந்நீரில் மக்கள் நீராடுகின்றனர். இதற்கு கங்கா ஸ்நானம் என்று பெயர். பின் புதிய ஆடைகள், பட்டாசுகள், இனிப்புக்கள், பட்சணங்கள் வைத்து வீட்டில் வழிபாடு நடத்துகின்றனர்.

புதிய ஆடைகளை அணிந்து கோவில்களில் வழிபாடு நடத்துகின்றனர். உற்றார், உறவினர், நண்பர்களுக்கு இனிப்புகள், பட்டாசுகள்,  பரிசுப்பொருட்கள் வழங்கி மகிழ்கின்றனர்.

புதுமணத் தம்பதியர் தலைதீபாவளியை மணப்பெண்ணின் வீட்டில் கொண்டாடுகின்றனர். அன்பு, அமைதி, ஒற்றுமை ஆகியவற்றின் வெளிபாடாக தீபாவளி கொண்டாட்டம் அமைகிறது.

தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 25, 2018 3:04 am

தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f389 தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1e9தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1eaதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1eaதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1f5தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1e6தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1fbதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1e6தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1f1தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1ee தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f4ab

கிருதயுகத்தில் துர்வாச மஹரிஷியை அவமதித்ததால் அவரின் சாபத்துக்கு ஆளானான் இந்திரன். அதனால் தேவேந்திர பதவி மற்றும் தன் சொத்து சுகம் அனைத்தையும் இழந்து பாவியாகி திரிந்தான் இந்திரன்.

தேவர்களும் லக்ஷ்மி கடாக்ஷத்தை இழந்து இந்திரனோடு திரிந்தனர். இழந்த இராஜ்ஜியத்தையும் லக்ஷ்மி கடாக்ஷத்தை மீண்டும் பெற ஒரு வழி கூறினார் ஸ்ரீமன் நாராயணன்.

“மந்தர மலையை மத்தாக கொண்டு, வாசுகி பாம்பை கயிறாக கொண்டு, ஒரு புறம் தேவர்களின் பரம எதிரிகளான அசுரர்களும் மறு புறம் தேவர்களும் சேர்ந்து திருபார்கடலை கடைய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே தேவர்கள் இழந்த பதவி முதல் அனைத்தையும் மீண்டும் பெறுவர்” என்று கூறி அருளினார்.

அதை போலவே தேவர்களும் திருபார்கடலைக் கடைந்தனர். அப்பொழுது தேவர்கள் இழந்த அமிர்தம், ஐராவதம், கல்பவிருக்ஷம் யாவும் திருபாற்கடலில் தோன்றி அவர்கள் வசமாயின. அதே சமயத்தில், ஆதிசக்தியின் அம்சமான மகாலஷ்மி தோன்றி தேவர்களுக்கு ஆசி வழங்கி பின் திருமாலுடன் சேர்ந்தாள். அவள் அவதாரம் செய்த நாளும் தீபாவளி என்று நம் புராணம் கூறுகிறது.

தீபாவளி அன்று:

காளி பூஜை: ஓடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் கொண்டாடப்படுகிறது.

கோவர்த்தன பூஜை: இந்தியாவின் மத்திய மற்றும் வடக்கு மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.

இந்து புத்தாண்டு: இனிதியாவின் மேற்கு மற்றும் வடக்கு மாநிலங்களில் உள்ள சில இடங்களில் கொண்டாடப்படுகிறது.

கேதார கௌரி விரதம்: சைவர்கள் மேற்கொள்ளும் விரதம்.

இவ்வாறாக இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கக்ளில் தீபாவளியை கொண்டாடுகின்றனர்.

தீபாவளி நாளில் செய்யக்கூடிய லட்சுமி குபேர பூஜையால் நாம் பல்வேறு பலன்கள் எளிதில் பெறமுடியும். தனது தாயிடம் (மஹாலஷ்மி) இருந்து நவநிதியங்களைப் பெற்ற குபேரரை தீபாவளி நாளில் வழிபடுவோருக்கு அவர் சகல செல்வங்களையும் அள்ளித்தருவார். ஸ்ரீலட்சுமி தேவியை பூஜிப்பவர்கள் அனைத்து செல்வங்களையும் அதாவது பொருள் செல்வம் மட்டுமின்றி, வீடு நிறைய தானியங்கள், மக்கட் செல்வம், தைரியம், வீரம், அறிவுச் செல்வம் அனைத்தையும் பெற்று வாழ்வில் பரிபூரண ஆனந்தத்தை அடைய முடியும்.

தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 25, 2018 3:05 am

தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f389 தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1e9தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1eaதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1eaதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1f5தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1e6தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1fbதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1e6தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1f1தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1ee தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f4ab

தீபாவளி திருநாளில் அக இருள் ஒழிந்து போக வேண்டுமென்றும், அக அழுக்கு இல்லாமல் போக வேண்டுமென்றும் நமது முன்னோர்கள் இக் கொண்டாட்டத்தைக் கொண்டாடினார்கள். நரகாசுரன் கண்ணனால் ஆட் கொள்ளப்பட்டபோது தன்னைப்போல் எல்லோரும் கண்ணன் திருவடிகளை அடையவேண்டுமென்று விரும்பினான்.

தெய்வத்தன்மையான சுபிட்சம் உள்ள பகுதிகளை சொர்க்கம் என்றும் அசுரத்தன்மையான அமங்கலம் உள்ள பகுதியை நரகம் என்றும் சொல்லலாம். ஒவ்வொருவர் மனதிலும் இந்த இரண்டு தன்மைகளும் உண்டு. வாழ்வின் நோக்கம் தெய்வத்தன்மையைப் பெறுவதுதான். அதாவது மங்களத்தைப் பெறுவதுதான். மங்களத்தைப் பெற அமங்கலங்கள் போக வேண்டும்.

நரகமாகிய அமங்கல அசுரனை மாய்த்து சொர்க்கமான தெய்வத்தன்மையைப் பெறும் நோக்கில் கொண்டாடப்படுவதுதான் தீபாவளி எனலாம். பெரியாழ்வார் கண்ணனை நரக நாசன் என்று போற்றுகிறார். நரகனை நாசம் செய்யும் கண்ணனை தீபம் ஏற்றிக் கொண்டாடுகிறோம். நரகாசுரன் பகவானின் பிள்ளைதான். தன் புதல்வனை, தானே அழிப்பாரா என்ற கேள்வி எழும். உலகில் நல்லதும் கெட்டதும் இறைவனின் படைப்பு. கெட்டது நல்லவற்றை அழிக்க முற்படும்போது பகவான் கெட்டதை அழிக்கிறார். தன் படைப்புதானே என்று பார்க்க மாட்டார்

அடுத்து ஒரு கேள்வி. நரகனின் தாய் பூமாதேவி. தாயே தன் குழந்தையை அழிப்பாளா? எல்லா வளங்களும் நமக்குத் தரும் தாயான பூமியை அழித்தும் இழித்தும் நாசம் செய்யும் மனிதர்கள் பூமியை நரகமாக்கும்போது அந்த நரகத்தைச் செய்யும் நரகாசுரர்களை பூமியே நாசம் செய்கிறாள். மங்களமாகிய சொர்க்கத்தைத் தனி வாழ்விலும் சமூக வாழ்விலும் போற்ற வேண்டும். அமங்கலமாகிய நரகத்தைத் தனி வாழ்விலும் சமூக வாழ்விலும் அழிக்க வேண்டும். அதற்கான பிரார்த்தனைதான் தீபாவளிப் பண்டிகை.

தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 25, 2018 3:07 am

தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f389 தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1e9தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1eaதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1eaதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1f5தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1e6தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1fbதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1e6தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1f1தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1ee தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f4ab

தீபம் என்றால் ஒளி, விளக்கு. ‘ஆவளி’ என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளிதரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை அகற்ற வேண்டும். ஒரு தீயகுணத்தை எரித்துவிட வேண்டும்.

இந்துக்கள் திபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை, புராணக் கதைகளின்வழியாகக் கூறுகின்றனர். இராமாயண இதிகாசத்தில், இராமர், இராவணனை அழித்து விட்டு, தனது பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை, அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாக கொண்டாடப்படுவதாக கருதப்படுகிறது.

நரகாசுரனின் உண்மைப் பெயர் பவுமன். திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியை துளைத்து அசுரர்களை அழிக்கச்சென்ற போது, அவரின் ஸ்பரிசத்தால் பூமாதேவிக்குப் பிறந்தவன். அசுர வதத்தின் போது பிறந்தவன் என்பதால் அசுர சுபாவம் இவனுக்கு இயல்பாக அமைந்து விட்டது. நரன் என்றால் மனிதன். மனிதனாக இருந்தாலும், துர்க்குணங்கள் நிரம்பியவனாக இருந்ததால் நரகஅசுரன் எனப்பட்டான். அப்பெயரே நரகாசுரன் என்றானது.

இந்த தீபாவளி எப்படி வந்தது என்று பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன. நரகாசுரன் என்ற ஒரு அரக்கன் இருந்தான். அவன் தேவர்களுக்கும் மக்களுக்கும் பல்வேறு துன்பங்களை கொடுத்து வந்தான்.

இதை அறிந்த மகாவிஷ்ணு அவனை கொல்ல நினைத்தார். ஆனால் அவன் பூமி தாய்க்கு பிறந்தவன். அவன் தன் தாயை தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றிருந்தான். எனவே மகா விஷ்ணு ஒரு தந்திரம் செய்தார். நரகாசுரனுடன் போரிட்டார்.

அவன் மகா விஷ்ணு மீது அம்பு எய்தினான். இந்த அம்பு பட்டு அவர் மயக்கம் அடைவது போல் கீழே விழுந்தார். இதை பார்த்த சத்தய பாமா கோபம் அடைந்து நரகாசுரனை போருக்கு அழைத்தார். சத்திய பாமா பூமியின் அவதாரம் என்று உணராமல் அவரோடு போர் செய்தான். அன்னையின் அம்புக்கு பலியாகி விழுந்தான்.

அப்போதுதான் அவனுக்கு சத்யபாமா தனது தாய் என்று தெரிந்தது. அப்போது அவரிடம், அம்மா, நான் மறைந்த இந்நாள் மக்கள் மனதில் நிற்க வேண்டும். என்னுடைய பிடியிலிருந்து விடுபட்ட தேவர்களும் மக்களும் இந்த நாளை இனிப்பு வழங்கி வெடி போட்டு கொண்டாட வேண்டும் என்று வேண்டினான். மகாவிஷ்ணுவும் சத்யபாமாவும் அவனுக்கு வரம் கொடுத்தார்கள்.

இதையொட்டி நரகாசுரன் மறைந்து மகிழ்ச்சி பொங்கிய நாள் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது, வடமாநிலங்களில் ராவணனை வென்று சீதாப்பிராட்டியை மீட்ட ராமர், அயோத்தி திரும்பிய நாள் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது.

தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 25, 2018 3:09 am

தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f389 தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1e9தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1eaதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1eaதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1f5தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1e6தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1fbதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1e6தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1f1தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1ee தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f4ab

மைதா - அரைக் கிலோ
உருக்கின டால்டா - 200 கிராம்
தண்ணீர் - 300 மில்லி
லெமன் சால்ட் - கால் தேக்கரண்டி
சோடா உப்பு - ஒரு சிட்டிகை

சர்க்கரை - அரைக்கிலோ
தண்ணீர் - கால் லிட்டர்

மைதா மாவின் நடுவில் குழி செய்து, அதில் சோடா உப்பு, லெமன் சால்ட், தண்ணீர், டால்டா ஊற்றி மாவினை ஒன்று சேர இரண்டு கைகளாலும் நன்கு பிசையவும். மாவை நன்கு பிசைந்து புரோட்டா மாவு பதத்திற்கு கொண்டு வரவும்.

பிசைந்த மாவினை ஊற விடவேண்டிய அவசியம் இல்லை. பின்னர் அந்த மாவினை உருளையாக உருட்டி, எலுமிச்சையை விட கொஞ்சம் பெரிய அளவிற்கு, பாதுஷா வடிவத்திற்கு அழுத்தி தட்டையாக்கிக் கொள்ளவும். மிகவும் மெல்லிய தட்டையாக இருக்கக் கூடாது.

தேவைப்பட்டால் ஓரங்களில் பின்னுதல் முறையிலு செய்யலாம். பிறகு தட்டிய மாவினை விரல்களில் எடுத்து, ஒரு கையின் கட்டை விரலினால் சற்று குழிவாக கிண்ணம் போல் வருமாறு அழுத்தி விடவும்.

அடுத்து ஜீரா காய்ச்ச வேண்டும். அரைக்கிலோ சர்க்கரைக்கு கால் லிட்டர் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும். முதலில் ஒரு கொதி வந்தவுடன் 100 மில்லி பால் ஊற்றவும். பால் ஊற்றியதும் அழுக்குகள் அனைத்தும் திரண்டு பாகின் மீது மிதக்கும். அவற்றை எடுத்துவிடவும். சுமார் 10 நிமிடங்கள் பாகு கொதிக்கவிட்டு, கையில் ஒட்டும் பதம் வந்தவுடன் இறக்கி, ஆறவிடவும்.

பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். எண்ணெய் காய்ந்ததும் தயார் செய்து வைத்துள்ள பாதுஷாக்களை எண்ணெய் போட்டு பொரிந்து, வெண்ணிறமாகி மேல் நோக்கி வந்து மிதக்கும். பிறகு, தீயை குறைத்து மிதமான சூட்டில் வேகவிடவும். பொன்னிறமாக மாறியதும், எடுத்து, எண்ணெய் வடிகட்டியில் போட்டு எண்ணெய் வடிய விடவும்.

எண்ணெய் முழுவதும் வடிந்தவுடன், சர்க்கரை பாகு சற்று ஆறியதும், பாதுஷாக்கள் அனைத்தையும் சீனிப் பாகில் போட்டு 5 நிமிடங்கள் ஊறவிடவும். சுவையான பாதுஷா தயார்.

தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 25, 2018 3:10 am

தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f389 தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1e9தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1eaதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1eaதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1f5தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1e6தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1fbதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1e6தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1f1தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1ee தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f4ab

பச்சரிசி - 2 கப்
வெல்லம் - 2 கப்
பொடித்த ஏலக்காயம் - கால் டீஸ்பூன்
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - பொறிப்பதற்கு தேவையான அளவு

அரிசியை எடுத்து ஒரு அரைமணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் தண்ணீரை வடிகட்டி எடுத்து விட்டு அரிசியை உலர்த்தி (சற்று ஈரப்பதம் இருக்குமாறு) பின்னர் மிஷினில் கொடுத்து மாவாக அரைத்துக் கொள்ளுங்கள்.

அடிப்பாகம் கனமான பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் வெல்லத்தைப் பொட்டு கால் டம்ளர் தண்ணீரை ஊற்றி காய்ச்சுங்கள். வெல்லம் நன்றாக கரைந்ததும், மண் இல்லாமல் அதை வடிகட்டி எடுக்கவும். பிறகு வெல்லத்தை மீண்டும் காய்ச்சி பாகு எடுக்க வேண்டும்.

சரியாக வந்திருக்கிறதா? என்பதை எப்படி அறிய, ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீர் விட்டு, அதில் சிறிது பாகு வெல்லத்தை விடுங்கள். அது கரையாமல், அப்படியே உருண்டு வந்தால் சரியான பதம் என்று அர்த்தம். சரி, பாகு வந்ததும், இறக்கி விடுங்கள். பிறகு அதில், அரிசி மாவையும், ஏலக்காயையும் போட்டு கிளறி பின்னர் அதில் நெய்யை விடவும். தேவைப்பட்டால் சிறிது சுக்குத்தூள் சேர்த்து கொள்ளலாம்.

சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, தட்டி அதை எண்ணெயில் போட்டு பொறிக்கவும். அவ்வளவுதான் அதிரசம் தயார். சாப்பிட்டுப் பாருங்க, அதிரசம் சுவையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 25, 2018 3:13 am

தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f389 தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1e9தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1eaதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1eaதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1f5தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1e6தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1fbதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1e6தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1f1தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1ee தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f4ab

5 நாள் பண்டிகையாக தீபாவளி ஐந்து நாள் மகோத்சவமாக கொண்டாடப்படுகிறது, அதன் படி,

1. முதல் நாள் திரயோதசி அன்று தனத் திரயோதசி மற்றும் யம தீபம்.
2. இரண்டாம் நாள் சதுர்த்தசி அன்று நரக சதுர்த்தசி தீபாவளி திருநாள்.
3. மூன்றாம் நாள் அமாவாசை அன்று கேதார கௌரி விரதம்
4. நான்காம் நாள் பிரதமை அன்று கார்த்தீக ஸ்நானம்
5. ஐந்தாம் நாள் துவிதியை அன்று யமத் துவிதியை.

யமதீபம்: இன்று மாலை சூரிய அஸ்தமனத்திற்கு முன் வீட்டிற்கு வெளியில் தெற்கு நோக்கி வீட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கைக்கு தக்காவறு ஒரு நபருக்கு ஒரு தீபம் என்ற வகையில் தீபம் வைக்க வேண்டும். குடும்பத்திலுள்ள அனைவரும் ஆரோக்கியத்துடன் வாழும் சூழல் உருவாகும்.

தனத்திரயோதசி: இன்று திரயோதசி திதி இருக்கும் நேரத்தில் சுப ஹோரையில் தங்கம் மற்றும் விலையுயர்ந்த ஆடை ஆபரணங்களை வாங்கி தீபாவளியன்று மாலையில் லட்சுமி குபேர பூஜை செய்வதால் பொன் பொருட்கள் மென் மேலும் சேர்க்கை உண்டாகும்.

நரக சதுர்த்தசி: இன்று தீபாவளி திருநாள் அதிகாலை 03-00 மணி முதல் காலை 06-00 மணிக்குள் எண்ணெய் ஸ்நானம் செய்து வீட்டில் தீபம் ஏற்றி வைத்து கிருஷ்ணரை வழிபட வேண்டும். லட்சுமி பூஜை செய்வதால் வருடம் முழுவதும் நம் வீட்டில் லட்சுமி தங்கியிருந்து அருள் பாலிப்பாள்.

அமாவாசை: இன்று பகல் 01-12 மணி முதல் 03-36 மணிக்குள் உள்ள காலத்தில் தில தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட வேண்டும்.

பிரதமை & கார்த்தீக ஸ்நானம்: இன்று முதல் கார்த்திகை மாத அமாவாசை வரை உள்ள முப்பது நாட்கள் புனித நதி ஸ்நானம் புண்ணிய தீர்த்த ஸ்நானம் சமுத்திர ஸ்நானம் செய்யவும் சகல விதமான தோஷ பரிகாரங்கள் செய்யவும் உகந்த காலமாகும். இந்த ஸ்நானம் சூரிய உதயத்திற்கு முன் செய்வது சிறப்பு.

யமத் துவிதியை: யமத் துவிதியை பகல் 03-00 மணிக்கு மேல் 06-00 மணிக்குள் துவிதியை உள்ள நாள் யமத் துவிதியை ஆகும். இன்று யமதர்மராஜன் தன் சகோதரி வீட்டிற்கு சென்று உணவருந்தி சகோதரியை ஆசீர்வதித்த நாள் ஆகும். இன்று சகோதரன் சகோதரியின் அழைப்பின் பேரில் சகோதரியின் வீட்டிற்கு சென்று எள் இலை அல்லது வாழை இலையில் உணவு அருந்தி பரிசுகளைப் பரிமாறிக் கொண்டு அசீர்வாதம் செய்தால் சகோதர சகோதரிகளின் அன்பு என்றும் நிலைத்திருக்கும். மேலும் சகோதரனுக்கு தீர்க்காயுளும் சகோதரிக்கு தீர்க்காயுளுடன் தீர்க்க சுமங்கலி யோகமும் உண்டாகும் என எமதர்மராஜன் கூறுகிறார்.

நரக சதுர்த்தசி குளியல் நேரம் அதிகாலை 03-00 மணி முதல் 06-00 மணிக்குள் குளிக்க வேண்டும். நல்லெண்ணையை தலை முதல் பாதம் வரை உடல் முழுவதும் தடவி பதினைந்து நிமிடம் ஊறவைத்து கொதிக்கும் வெந்நீரில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அரசம் பட்டை, புரசம் பட்டை, அத்திப் பட்டை, ஆலம் பட்டை, மாவிலிங்கப் பட்டை ஆகிய ஐந்து வகையான மூலிகைப் பட்டைகளை ஊர வைத்து தலைக்கு ஊற்றி குளிக்க வேண்டும். காலை 08-00 மணி முதல் 09-00 மணிக்குள் சுக்கிரன் ஹோரையில் புத்தாடைகள் அணிந்து கிருஷ்ணரையும் லட்சுமியையும் வழிபட வேண்டும்.

தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 25, 2018 3:14 am

தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f389 தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1e9தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1eaதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1eaதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1f5தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1e6தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1fbதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1e6தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1f1தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1ee தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f4ab

லட்சுமி குபேர பூஜை செய்ய தீபாவளி திருநாள் உகந்தது. மேலும் சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, கார்த்திகை மாதங்களில் பூராட்டாதி நட்சத்திரம் வரும் நாளில் பூஜை செய்வது மிகுந்த பலன்களை தரும். ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை குபேர காலமாகும். இந்த நேரத்தில் கடன் தொல்லை, வியாபாரத்தில் நஷ்டமடைந்தோர் 5 வியாழன் மாலை, குபேர தீபம் ஏற்றி லட்சுமி குபேர நாமம் சொல்லி வழிப்பாடு செய்தால் பலன் கிடைக்கும்.

இந்த பூஜை சிறப்பு மிக்கது. குபேரன் தனது செல்வம் அனைத்தையும் இழந்து நின்றபோது லட்சுமி தேவியை வணங்கி எந்திரத்தைப் பெற்றான். அந்த எளிய குபேர பூஜையை விரதமிருந்து செய்தால் நலம் விளையும். இதை செய்வதால் கடன்கள் தீரும். செல்வம் பெருகும். ஆண்டுக்கு 2 முறை செய்தால் பணத்தட்டுப்பாடு இருக்காது.

தீபாவளி அன்று இரவில் குபேரனை விசேஷமாக, தங்க, வெள்ளி நாணயங்களை வைத்து வழிபடும் பழக்கம் உள்ளது.

‘ஓம் ய க்ஷய குபேராய
வைஸ்ரவணாய
தந தா நியாதி பதயே
தந்தாந்ய ஸம்ருத்திம்மே
தேவி தாபய ஸ்வாஹா’ - என்ற குபேரனின் மந்திரத்தை தியானித்து அவனை வழிபட வேண்டும்.

சிவபெருமானின் உற்ற தோழரான குபேரனுக்கு என்று ஒரு மந்திர சதுக்கம் உண்டு. எந்தப்பக்கம் கூட்டினாலும் 72 வரும். குபேர எந்திரபூஜைக்கு ஒரே மாதிரியான நாணயங்களை எடுத்து வைத்து கொள்ள வேண்டும். பூஜை அறையில் கோலம் போட வேண்டும். எண்களை வெள்ளை அரிசி மாவினாலும், கட்டங்களை சிவப்பு குங்குமத்தினாலும், வார்த்தைகளை மஞ்சள் பொடியினாலும் போட வேண்டும். ஒவ்வொரு கட்டத்துக்கும் நாம் ஏற்கனவே சேர்த்து வைத்துள்ள நாணயத்தை வைத்து தொடர்ந்து 9 வெள்ளிக்கிழமைகள் அல்லது 9 பவுர்ணமி என பூஜிக்க வேண்டும். அதே தினங்களில் 9 நாட்கள் தொடர்ந்து பூஜை செய்ய வேண்டும். அந்த எண்களின் பக்கத்தில் எழுத்துகள் அழியாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த நாணயங்களை கட்டத்துக்குள் வைக்க வேண்டும்.

குபேர எந்திர கோலம் போட்டு நாணயங்களை அதில் வைத்து முடித்ததும், எந்திரத்தின் முன் சிறிய விளக்கு ஏற்றி வைத்து பூஜையை தொடங்க வேண்டும். ‘மகாலட்சுமி தாயே! என் கடன்கள் விரைவில் தீர வேண்டும். எனக்கு லாபம் கிடைக்க வேண்டும்’ என கூறிவிட்டு ஒவ்வொரு கட்டத்திலும் உள்ள நாணயத்தின் மீதும், பூக்களை போட வேண்டும். அப்படி பூக்களை போடும் போது எழுத்துக்கள் அழிந்து விடாமல் இருக்குமாறு கட்டத்தில் வைத்துள்ள நாணயம் மீதே பூக்களை போட வேண்டும்.

அப்படி 9 முறை வேண்டிக் கொண்டு ஒவ்வொரு கட்டத்திலும் பூவை வைத்து பின் எந்திரத்துக்கு கற்பூரம் காட்டிய பின் அந்த கோலத்தை வணங்கி விட்டு பூஜையை முடிக்க வேண்டும். பூஜை முடிந்த பின்னர் உடனே கோலத்தை அழித்து விடக்கூடாது. மறுநாள் துணியால் துடைத்து எடுக்க வேண்டும்.

அவ்வாறு சேகரிக்கப்ப்டும் 81 நாணயங்களையும் பத்திரமாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும். அன்று மாலைக்குள் ஒன்பது சுமங்கலி பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழம் தர வேண்டும். 9 நாட்களும் பூஜித்த நாணயங்களை லட்சுமி தேவியின் உண்டியலில் போட வேண்டும். இந்த பூஜையை செய்பவரால் தொடர்ந்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் வீட்டில் உள்ள வாரிசுகள் செய்யலாம். இதை செய்தால் வீட்டில் அமைதி நிலவும். செல்வம் நிலைக்கும்.

தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 25, 2018 3:15 am

தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f389 தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1e9தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1eaதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1eaதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1f5தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1e6தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1fbதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1e6தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1f1தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1ee தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f4ab

நரகாசுரன் என்ற கொடிய அரக்கனைக் கொன்று மக்களுக்கு விடுதலையும், மகிழ்ச்சியும் அளித்தார், மகாவிஷ்ணுவாகிய ஸ்ரீ கிருஷ்ண பகவான். அவனைத் தான் கொல்லாமல், தன் மனைவி சத்தியபாமாவின் கைகளால் அவன் கொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே, போர்க்களத்தில் மயங்கித் தேரில் சரிந்து வீழ்ந்து மாயம் புரிகிறார் கிருஷ்ணன்.

தன் தாயைத்தவிரத் தனக்கு வேறு யாராலும் மரணம் ஏற்படக்கூடாது என்று வரம் பெற்றான், நரகாசுரன். எந்தத் தாயாவது தன் மகனைக் கொல்லுவாளா? ஆனால், சத்தியபாமாவுக்கோ, நரகாசுரன் தன் மகன் என்று தெரியாது. தெரியாதபடி மாயம் செய்து மயக்கியவர் கிருஷ்ணன்.

ஆகவே, கணவனைக் காக்க, தேரோட்டியாகப் போர்க்களத்துக்குச் சென்றிருந்த சத்தியபாமா, தன் வில்லை எடுத்து வளைத்தாள். அடங்காத கோபத்துடன், நரகாசுரனைக் கொன்று வீழ்த்தினாள். உயிர் பிரியும்போது ஞானம் பெற்ற அந்த அரக்கன், ஒரு வரம் கேட்டான்.

”என் மரண தினத்தை மக்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும். என் கொடிய செயல்களால் இருண்டு கிடந்த இல்லங்களில் ஒளி ஏற்ற வேண்டும். மக்கள் நீராடி, புத்தாடை உடுத்தி, விருந்து உண்டு மகிழ்ச்சியாக இப்பண்டிகையைக் கொண்டாட வேண்டும்.” என்று கேட்டுக்கொண்டான்.

நரகாசுரன் கொல்லப்பட்ட அத்தினத்தையே தீபாவளிப்பண்டிகையாகக் கொண்டாடுவதாகப் புராணங்கள் விளக்குகின்றன.அதனால், இத்தினத்தை, நரக சதுர்த்தி என்றும் அழைப்பார்கள்.

பெரியவர்கள் முதல், சிறியவர்கள் வரை, தீபாவளி அன்று பட்டாசுகள் வெடித்து மகிழ்வார்கள். நம்மிடம் உள்ள காமம், குரோதம், லோபம், மோகம், மாச்சரியம் (மூட எண்ணம்) ஆகிய தீய சக்திகளை, இறைவனுடைய திருநாமங்களின் மகிமையால் தூள்தூளாக்க வேண்டும் என்பதற்காகவே, தீபாவளியன்று பட்டாசுகளை வெடித்து மகிழ்கிறோம்.

தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 25, 2018 3:16 am

தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f389 தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1e9தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1eaதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1eaதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1f5தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1e6தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1fbதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1e6தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1f1தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f1ee தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் 1f4ab

விஷ்ணு புராணத்தில் தீபாவளியன்று விடியற்காலையில் நீராடி மகாலட்சுமியை பூஜை செய்து தீபங்களை வீட்டில் பல இடங்களில் வைத்தால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

தீபங்களின் அணிவரிசையாம் தீபாவளி பண்டிகை, பழங்காலம் முதலே கொண்டாடப்பட்டு இருக்கலாம் என வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தெரி்வித்துள்ளனர். தீபாவளி என்றால் நம் நினைவுக்கு வருவது பட்டாசு மற்றும் இனிப்பு வகைகள்தான்.

பகவான் கிருஷ்ணர் நரகாசுரன் என்ற அசுரனை அவனது கொடுமைகள், இம்சைகள் தாங்காது கொன்று அழிக்கின்றான். அத்தருணத்தில் நரகாசுரன் ஒரு வரம் கேட்கின்றான். பல கொடுமைகள் புரிந்த தீயவன் நான் இறந்துபோகும் இந்நாளை மக்கள் என்றென்றும் மகிழ்ச்சிகரமாக கொண்டாடவேண்டும் என்பதே அவ்வரம்.

குஜராத் மக்களுக்கு தீபாவளிதான் வருடப்பிறப்பு. அங்கு இத்திருவிழா லக்ஷ்மி பூஜை, புது கணக்கு ஆரம்பித்தல் என்று வெகு சிறப்பாக அமாவாசை தொடங்கி ஐந்து நாட்கள் நடைபெறுகின்றது. இவர்கள் தீபாவளியன்று தங்கள் இல்லம் முழுவதும் வண்ண வண்ண தீபங்கள் ஏற்றுகின்றனர் தீபாவளி என்றால் தீப+ ஆவளி அதாவது தீப வரிசை என்று பொருள்.

நமது நாட்டின் மேற்குப் பகுதியில் இருந்து கிழக்குப் பகுதிக்கு சென்றால் அங்கே வேறு விதமான கொண்டாட்டம் இவர்கள் தீபாவளியை மஹாநிசா என்று கொண்டாடுகின்றனர். அசுர இரத்தம் குடித்ததால் காளி தேவிக்கு ஏற்பட்ட ஆங்காரத்தை சிவபெருமான் தணித்த தினம் என்பதால் அமாவாசை இரவில் காளி பூஜை பிரபலம். விடிய விடிய வெகு சிரத்தையுடன் சிவபெருமானின் மேல் முண்ட மாலையுடன் நடனமாடும் தக்ஷிண காளி ரூப சிலை பிரதிஷ்டை செய்து வழிபடுகின்றனர் சமஷ்டி பூர்வமாக. இன்று நாம் கார்த்திகை தீபத்தன்று வீடெங்கும் தீபம் ஏற்றுவது போல தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.

ஸ்கந்த புராணத்தின்படி சக்தியின் 21 நாள் கேதார கௌரி விரதம் முடிவுற்றது இந்த நாளில்தான். விரதம் முடிந்த பின்னர் சிவன் சக்தியை தன்னுள் ஒரு பாதியாக ஏற்று அர்த்தநாரீஸ்வராக உருவமெடுத்தார் என்கின்றன புராணங்கள்.

ஜைனர்கள் தீபாவளி நாளை மஹாவீரர் பரிநிர்வாணம்(வீடுபேறு) அடைந்த நாளாக கொண்டாடுகின்றார்கள்.

தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக