புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறளி @ குட்டிச் சாத்தான் Poll_c10குறளி @ குட்டிச் சாத்தான் Poll_m10குறளி @ குட்டிச் சாத்தான் Poll_c10 
16 Posts - 59%
heezulia
குறளி @ குட்டிச் சாத்தான் Poll_c10குறளி @ குட்டிச் சாத்தான் Poll_m10குறளி @ குட்டிச் சாத்தான் Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறளி @ குட்டிச் சாத்தான் Poll_c10குறளி @ குட்டிச் சாத்தான் Poll_m10குறளி @ குட்டிச் சாத்தான் Poll_c10 
58 Posts - 62%
heezulia
குறளி @ குட்டிச் சாத்தான் Poll_c10குறளி @ குட்டிச் சாத்தான் Poll_m10குறளி @ குட்டிச் சாத்தான் Poll_c10 
32 Posts - 34%
mohamed nizamudeen
குறளி @ குட்டிச் சாத்தான் Poll_c10குறளி @ குட்டிச் சாத்தான் Poll_m10குறளி @ குட்டிச் சாத்தான் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
குறளி @ குட்டிச் சாத்தான் Poll_c10குறளி @ குட்டிச் சாத்தான் Poll_m10குறளி @ குட்டிச் சாத்தான் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறளி @ குட்டிச் சாத்தான்


   
   
sanju
sanju
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 04/04/2018

Postsanju Tue Apr 10, 2018 9:20 am



1970களில் சின்னமனூரில் கிருஷ்ணய்யர் ரொம்பப் பிரபலம். கண் கட்டு வித்தையில் கை தேர்ந்தவர். அவர் செய்யும் மந்திர தந்திர வித்தைகளைப் பார்க்க எப்போதுமே குழந்தைகள் பட்டாளம் அவரைச் சூழ்ந்திருக்கும். குழந்தைகளிடம் அவர் வீட்டுக்கு வழி கேட்டால், அவரது வீடு வரை கொண்டுவந்து விட்டுவிட்டுப் போவார்கள். அவருக்கும் அவர் மனைவி கோமளம்மாளுக்கும் குழந்தைகள் என்றால் அத்தனை பிரியம். அவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லததும் அந்தப் பிரியத்திற்க்கு காரணம்.

சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வசதி இல்லையென்றாலும், சந்தோஷமாகவே வாழ்ந்து வந்தனர். பெரும்பாலும் இந்த மாதிரி அருந்தொழில் (கண் கட்டு வித்தை, சித்து வேலை, மந்திர தந்திர வேலைகள்) செய்பவர்களிடத்து, வசதி குறைவாகவே இருக்கும். அவரது எழுதிய புத்தகங்கள் அவருக்கு நல்ல வருமானத்தை ஈட்டித் தந்தன. அவர்கள் இரண்டு பேருக்கு அந்த வருமானமே போதுமானதாக இருந்தது. அவரது "பீதாம்பர ஜாலத் திரட்டு" புத்தகம் ரொம்பப் பிரபலம். அதில், ஆயிரம் கண்கட்டு வித்தைகள் பற்றியும், அதைச் செய்யும் முறைகள் பற்றியும் விளக்கியிருப்பார். செக்கச் சிவந்த, தீயில் சுட்ட இரும்பைக் கையில் பிடிப்பது, தீக் 'கங்கு'களை வாயில் போட்டு மென்று காட்டுவது, சுவற்றில் நெளி நெளியாக நல்ல பாம்பு / பச்சைப் பாம்புகளைத் தோன்றச் செய்வது, இன்னும் இது போன்று நிறைய உண்டு அந்தப் புத்தகத்தில்.

பெரும்பாலான நேரத்தை மந்திர தந்திர புத்தங்கள் படிப்பதிலும், படித்த புதிய வித்தைகளை முயற்சிப்பதிலும், புத்தகங்கள் எழுதுவதிலும் கழித்து வந்தார். எப்படியாவது ஒரு குறளியை வசியம் செய்துவிட வேண்டும் என்பது அவரது நெடுநாள் ஆசை. ஆனால், கோமளம்மாளுக்கோ இதில் இஷ்டமில்லை. "இருக்கற வித்தைகள வெச்சுண்டு காலத்தைக் கழிச்சாலே போறும். குட்டிச் சாத்தானெல்லாம் வேண்டாம்" எனச் சொல்லி, அவரது ஆசைக்கு அணை போட்டு வைத்திருந்தார்.



சுண்டு விரல் உயரமே இருக்கும். வசியம் செய்தவரைத் தவிர வேறு யார் கண்களுக்கும் தெரியாது. வசியம் செய்தவர் காலால் இட்ட பணியைத் தன் தலையால் முடிக்கக் காத்துக் கிடக்கும். ஆனால் பணி கொடுக்கவில்லையேல், அவர் தலையையே வாங்கிவிடும். கொடுத்த பணியை, கடினமாக இருந்தாலும் கூட நொடி நேரத்தில் முடித்து விடும். பிறகெப்படி வேலை கொடுத்துக் கொண்டேயிருப்பது? இந்த மாதிரித் தருணங்களில், கழுதை மயிறைக் கத்தரித்துக் கொடுத்து, எத்தனை மயிர் உள்ளதென எண்ணச் செய்தாலொழிய அவர் தலை தப்பிப்பது கடினம். குறளிக்கு கணக்கு மிகக் குழப்பமான ஒன்று. கொடுத்த ஒரு கத்தைக் கழுதை மயிறை, நாள் பூராவும் எண்ணிக் கொண்டேயிருக்குமே தவிர, பதில் வராது. அதனால் தான் அந்த ஏற்பாடு.

ஒருவரது பணத்தை எடுத்து வரச் சொன்னால், அடுத்த நொடி அவரது பணம் நம் கைகளில் வந்துவிடும். ஒரு பொருளை, பிறர் அறியாதவாறு கவர்ந்து வந்துவிடலாம். எத்தனை சோதனை செய்தாலும் ஒன்றும் கண்டு பிடிக்க முடியாது. எல்லாம் குறளி வசம் தான் இருக்கும், அதுவும் கண்ணுக்குத் தெரியாது. எளிதாகத் தப்பி விடலாம். இத்தனை உபயோகமுள்ள ஒரு குறளியைத் தான் வசியம் செய்ய ஆசைப் பட்டார் கிருஷ்ணய்யர். எங்கே அதனால் கணவருக்கு தீங்கு வந்துவிடுமோ என்றெண்ணித் தான் அவரது ஆசைக்கு அணை போட்டார் கோமளம்மாள்.

ஒரு முறை கிருஷ்ணய்யர் 3 - 4 நாட்கள் வெளியூர் செல்ல வேண்டி வந்தது. கோமளம்மாளுக்கு வீட்டு வேலைகளில் உதவவும், அவர் திரும்பும் வரை துணைக்கு இருக்கவும் யாராவது பெண் பிள்ளைகள் இருந்தால் தேவலாம் என எண்ணினார்.அவருக்குத் தெரிந்த சிலரிடம் வீட்டு வேலைக்கு உதவ யாராவது பெண் பிள்ளைகள் தெரியுமா எனக் கேட்டுப் பார்த்தார். "தெரியாதே" என, எல்லாரிடமும் ஒரே பதில் தான் வந்தது. என்ன செய்வதென்று தீவிரமாக யோசித்தார்.

அவர் கிளம்ப வேண்டிய நாள் நெருங்கிக் கொண்டே இருந்தது. ஆள் கிடைத்த பாடில்லை. குறளி தான் இவருக்கு சரியான முடிவாகப் பட்டது. ஆனால் கோமளம்மாள் நிச்சயம் இதற்கு சம்மதிக்க மாட்டார். அதனால் அவரிடம், "நம்ம சீதாராமனுக்கு தெரிஞ்சவா யாரோ இருக்களாம். அவளை வரச் சொல்றேன்னு சொல்லியிருக்கன் உனக்குத் துணைக்கு" என்றார். கோமளம்மாளும், "சீதாராமனா? அவனே கொஞ்சம் எசகு பிசகான ஆளாச்சே. நீங்களும் ஒரு தடவைக்கு அவன் சொல்ற ஆளைப் பத்தி நன்னா விசாரிச்சுடுங்கோ" என்றார். "சரி சரி, அதெல்லாம் நான் பாத்துக்கறேன்" என்று சொல்லிவைத்தார். கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. இப்போது அவரது மனதெல்லாம், மனைவிக்குத் தெரியாமல் எப்படி குறளி வசியம் செய்வது என்பதைப் பற்றியே இருந்தது.

மறுநாள் மதியம், "ஒரு முக்கியமான ஜோலி இருக்கு. தேனி வரைக்கும் போயிட்டு வந்திடறேன்" எனக் கூறிப் புறப்பட்டார். ஆனால் போனதோ அருகிலிருந்த குட்டிக் கரடுக்கு. குறளி வசியம் செய்யத்தான்.

மேய்ச்சலுக்குப் போய்விட்டுத் திரும்பும் தொழு மாடுகளில் ஒரே ஒரு காளை மாடு மட்டும் துள்ளிக் கொண்டு, எகிறி குதித்துக் கொண்டு வரும். அந்த மாட்டில் தான் குறளி இருக்கும். அதன் இரண்டு கொம்புகளுக்கும் நடுவில் பயணம் செய்யும் அந்தக் குட்டிச் சாத்தான். மிரண்ட காளை, அதைக் கீழே விழச் செய்யத்தான் எகிறிக் குதிக்கும். மாட்டை வேண்டுமானால் அடையாளம் காணலாமே தவிர, குறளியை சாதாரணமாகக் காண முடியாது. அழுகுனித் தேவாங்கு என்று ஒன்று உண்டு. அதன் கண்களில் எப்போதுமே கண்ணீர் வடிந்துகொண்டேயிருக்கும். அதன் கண்களில் இருக்கும் பூளையை (அழுக்கு) எடுத்து, நம் கண் இமைகளில் தடவிக் கொண்டால்தான் குறளியைக் காண முடியும்.

சரியாக மாடுகள் மேய்ச்சலிலிருந்து திரும்பும் வேளை, அங்கு சென்றுவிட்டார் கிருஷ்ணய்யர். துள்ளி வந்த காளையையும் அடையாளம் கண்டுவிட்டார். அழுகுனித் தேவாங்கின் பூளையைக் கண்ணிமைகளில் தடவி கொண்டு பார்த்தார். இரு கொம்புகளுக்கும் நடுவே, சுண்டு விரல் உயரமுள்ள அந்த ஜந்து இவர் கண்களுக்குப் புலப்பட்டது. தயாராக வைத்திருந்த அவல், பொறி, வெல்லம் கலந்த பொட்டலத்தை அதன் முன்னால் போட்டுவிட்டார்.

அவல், பொறி, வெல்லமென்றால் குட்டிச்சாத்தானுக்கு கொள்ளைப் பிரியம். உடனே மாட்டை விடுத்து, அந்தப் பொட்டலத்தில் குதித்து, சாப்பிட ஆரம்பித்தது. அதுவரையிலும் அடங்காமல் குதித்து வந்த மாடு சாதுவாகக் கடந்து சென்றது. சிறிதும் தாமதிக்காமல், வசிய மந்திரத்தை உச்சாடனம் செய்யலானார். பொறியைச் சுவைத்துக் கொண்டிருந்த குறளி, பொறியில் சிக்கியது. முழு உச்சாடனமும் முடிந்தவுடன், குறளி அவர் வசமாகிவிட்டது.

வெகு நாள் கனவு கையில் கிடைத்ததும், உற்சாகம் தொற்றிக் கொண்டது அவருக்கு. அதைச் சோதித்துப் பார்க்கத் துடித்தார். குட்டிச்சாத்தான், இவரது கட்டளைக்குக் காத்திருந்தது. ஆனால் கிருஷ்ணய்யருக்கோ, என்ன வேலை சொல்வதென்றே தெரியவில்லை. "எனக்கு.... எனக்கு ஒரு... மாம்பழம் கொண்டுவா" என்று சொன்னார். அவர் சொல்லி முடித்த மறு நொடி மாம்பழத்துடன் நின்றது குறளி. திக்கு முக்காடிப் போனார். அடுத்த வேலையாக என்ன சொல்லலாம் என யோசித்தார்.

அடுத்த இரண்டே நாட்களில் குட்டிச்சாத்தானை எப்படி முழுமையாக வேலை வாங்குவதென்பதைப் புரிந்து கொண்டார். கழுதை மயிரை எப்போதும் ஒரு கத்தையாகக் கையிலோ சட்டைப் பையிலோ வைத்திருந்தார். அவர் கிளம்ப வேண்டிய நாள் வந்தது. குட்டிச் சாத்தானை, 12 வயது சிறுமியாக உருவகம் செய்து, வீட்டிற்கு அழைத்து வந்தார். வீட்டில் தன் மனைவி என்ன வேலை சொல்கிறாரோ அதை முடித்து, உடனே கழுதை முடியை எண்ண வேண்டும், அதிகம் பேசக் கூடாது. இதுதான் அதற்கு அவரிட்டிருந்த கட்டளை.

கோமளம்மாளிடம், "சீதாராமன் சொன்னது இந்தப் பொண்ணுதான். வேலை எல்லாம் படு சுட்டியாம். அவல், பொறி, வெல்லம்ன்னா ரொம்ப இஷ்டமாம். நான் ஊருக்குப் போயிட்டு வர வரைக்கும் உனக்கு துணைக்கு இருப்பா", என்று சொல்லி முடித்தார். கோமளம்மாளுக்கு அந்தப் பெண்ணைப் பார்த்தவுடன் பிடித்து விட்டது. "கொழந்த, உம்பேர் என்ன?" என்றார். சிறுமி இவரைப் பார்த்தாள்.



எல்லாம் சொல்லிக் கூட்டி வந்தவர், பெயர் விஷயத்தை மறந்து விட்டார். உடனே, "அவ பேர் குட்டி..." என ஆரம்பித்தவர், நாக்கைக் கடித்துக் கொண்டு, "குட்டி. வள்ளிக் குட்டி" என்றார். "வள்ளியா உன் பேர்?" என்றார் கோமளம்மாள். அந்தச் சிறுமியும் ஆமாம் என்பது போல தலையாட்டினாள். "ஏண்டி பேசவே மாட்டேங்கற? உன்னை ஒன்னும் பண்ணிட மாட்டேண்டிம்மா" என்றார். "நான் இப்போ என்ன வேலை செய்யணும்?" எனக் கேட்டாள் சிறுமி. "சரி தான். நீங்க சொன்னது போலவே, வேலைல குட்டி ரொம்பச் சுட்டி தான் போல்ருக்கே" என்றார் கோமளம்மாள் கிருஷ்ணய்யரிடம். அவரும் பெருமிதமாகச் சிரித்துக் கொண்டார்.

கிருஷ்ணய்யர் ஊருக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார். "நாளானிக்கு தீபாவளி. நாளுங்கெழமையுமா நீங்க ஆத்துல இல்லாட்டி நன்னாவா இருக்கும்?" என்றார் கோமளம்மாள். "கண்டிப்பா போயே ஆக வேண்டிய வேலை. நோக்கு தெரியாதா? நானும் எத்தன தரஞ்சொல்றது உனக்கு?" என்று கொஞ்சம் கடுகடுத்தார் கிருஷ்ணய்யர். பிறகு கோமளம்மாள் எதுவும் பேசவே இல்லை. கிளம்பும்போது, "நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கோல்லியோ?" என்றார் கோமளம்மாளிடம். "இருக்கு" என்றார். "திரும்பவும் சொல்றேன், எண்ணை தடவறேன், சிடுக்கெடுக்கறேன், தலை வாரி விடறேன்னு சொல்லி, எக்காரணம் கொண்டும் அவ (வள்ளி) தலைல கையே வெச்சுடாத. புரிஞ்சுதா?" எனக் கேட்டார் அய்யர்.

"தீபாவளியன்னிக்கு தலைக்கு எண்ணை வெச்சுக்கலைன்னா எப்படி?" எனக் கேள்வி எழுந்தாலும், அய்யரின் கோபம் தெரியுமாதலால் எதுவும் பேசவில்லை. எல்லாவற்றிர்க்கும் "சரி" என மட்டும் தலையாட்டினார். அன்றைக்கும், அதற்கு அடுத்த நாளும் வழக்கம் போலவே கழிந்தன. கோமளம்மாளை ஒரு வேலையும் செய்ய விடாமல் தானே எல்லா வேலைகளையும் ஒற்றையாளாக முடித்துவிட்டாள் வள்ளி.

வள்ளியின் சுறுசுறுப்பைக் கண்டு, "இந்த வயசில இத்தன வேலைய நீ ஒருத்தியாப் பண்றியே! நான் கூட உன் வயசில இத்தன வேலை பண்ணதில்லடியம்மா!" என அங்கலாய்த்தார் கோமளம்மாள். அதனாலேயோ என்னவோ, வள்ளி மீது பாசம் கொஞ்சம் அதிகமானது அவருக்கு.

அடுத்த நாள் விடிந்தது. தீபாவளி. கோமளம்மாள் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, ஒன்பது கஜத்தை சுற்றிக் கொண்டு வந்தார். அதற்குள் வள்ளி எழுந்துவிட்டாள். "இன்னும் செத்த நேரத்துக்கெல்லாம் வாண்டுப் பட்டாளம் வந்திடும், பட்டாசு கேட்டுண்டு. அதுக்குள்ள நீ குளிச்சுட்டு வந்துடு. நாம ரெண்டுபேருமா கோவிலுக்குப் போயிட்டு வரலாம்." என்றார்.

தீபாவளிப் பரபரப்பில் கிருஷ்ணய்யர் சொன்னவற்றை மறந்துவிட்டார் கோமளம்மாள். ஏதோ நினைப்பில், "கொழந்த, இரு. உனக்கு தலைக்கு எண்ணை வெச்சு விடறேன்" என்றவாரே எண்ணைக் கிண்ணத்தைக் கையில் எடுத்தார்.

வள்ளி தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டாள். கோமளம்மாள் எண்ணையைக் கையிலெடுத்து, தலையில் வைத்து தேய்க்கலானார். "கொழந்த, இதென்ன உன் தலைல ஆணியாட்டமா தட்டுப்படறது?" எனக் கொஞ்சம் அதிர்ந்தவாரே கேட்டுக்கொண்டு, அதை உருவி எடுத்துவிட்டார்.





அடுத்த கணம், கண்களில் பொறி பறக்க, விட்டதைப் பார்த்தபடி மல்லாந்து கிடந்தார் கோளம்மாள். அவர் ஆணியை உருவவும், குறளி அவரை ஒரே அறை அறைந்துவிட்டு, விர்ர்ரென வின்னில் கிளம்பி மாயமாகிவிட்டது. அக்கம் பக்கமிருந்தவர்கள், வந்து அவரைத் தூக்கி கட்டிலில் கிடத்தி, ஏதேதோ செய்து பார்த்தார்கள். பேச்சு மூச்சில்லை கோமளம்மாளிடம். கண்கள் நிலைகுத்தியபடி இருந்தன. எல்லோரும் அவரவருக்குத் தெரிந்த பாட்டி வைத்தியத்தை இந்தப் பாட்டியிடம் முயற்சி செய்தனர். ஒன்றும் பலனில்லை.

மாலை, கிருஷ்ணய்யர் பஸ்-ஸ்டாண்டில் இறங்கியவுடனே, "என்ன ஓய் நீர்? ஆம்படையாள தனியா விட்டுட்டு எங்க போனீர்?" என்றார் பக்கத்து ஆத்து சாம்பு. "என்ன ஓய், என்னாச்சு?" எனப் பதறியபடி கேட்டார் கிருஷ்ணய்யர். "ஒம்ம ஆம்படையாளுக்கு ஒடம்புக்கு முடியல. என்னன்னே தெரியல. பேயறஞ்சா மாதிரி இருக்கா" என்றார் சாம்பு. கிருஷ்ணய்யருக்கு என்ன விஷயம் என்பது கொஞ்சம் புரிந்தாலும், எதுவும் பேசாமல் விறுவிறுவென வீட்டிற்கு வந்தார்.

கோமளம்மாளைப் பார்த்தவுடனே என்ன நடந்திருக்குமென அவருக்குப் பிடிபட்டுவிட்டது. நேராகப் பூஜையறைக்குச் சென்று தீர்த்த பாத்திரத்தைக் கையிலெடுத்தார். குறளி அறைந்த கட்டிலிருந்து விடுவிக்கும் மந்திர உச்சாடனத்தை முனுமுனுத்தவாறே வந்து கோமளம்மாளின் வாயில் தீர்த்தத்தை மூன்று சொட்டுக்கள் விட்டார். அடுத்த நொடி எழுந்து உட்கார்ந்துவிட்டார் கோமளம்மாள்.

அக்கம் பக்கத்தவர்கள், "அட... பூஜை தீர்த்தம் குடுத்தவுடனே சரியாயிடுத்தே!! நமக்கிது தோனாமப் போயிடுத்தே!" என்றவாறே கிளம்பலானார்கள். "நான் அப்போவே சொன்னேன், அந்த சீதாராமனே ஒரு மாதிரி. அவன் சொல்ற ஆளைப் பத்தி நன்னா விஜாரிச்சுட்டு கூட்டிண்டு வாங்கோன்னு. என்ன ஆச்சு பாத்தேளா இப்போ...!" என ஆரம்பித்தார் கோமளம்மாள். "சரி சரி. அதெல்லாம் நான் பாத்துக்கறேன். சீதாராமன விடு. நீ இப்போ போய்ப் படு. உனக்கே முடியல. வேலையெல்லாம் நான் பாத்துக்கறேன்" என்றார் கிருஷ்ணய்யர்.

வேலைகளை முடித்துவிட்டு வந்து பார்த்தார். நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தார் கோமளம்மாள். "சீதாராமனைப் பார்த்து கொஞ்ச நாளைக்கு ஆத்துப் பக்கமே வராதேன்னு சொல்லி வெக்கணும்", என நினைத்தவாறே அவரும் படுத்து உறங்கலானார்.

மறுநாள் காலை, "அக்கா.. அக்கா! உங்களுக்கு ஒடம்புக்கு முடியலியாமே! என்ன ஆச்சு? ஏதோ பேயடிச்சுடுத்துன்னு சொல்றாளே எல்லாரும். அத்திம்பேர் எங்க?" என்றவாரே உள்ளே வந்தார் சீதாராமன். அய்யரால் வெகு நேரம் தாக்குப் பிடிக்க முடியவில்லை. "வந்தது வள்ளிக் குட்டி இல்ல. குறளி. வேற ஆள் கிடைக்க்கலை. அதான் குட்டிச் சாத்தான அந்த மாதிரி உருவகம் பண்ணிக் கூட்டிண்டு வந்தேன்" என ஆரம்பித்து விவரிக்கலானார் கிருஷ்ணய்யர்......


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Apr 10, 2018 10:03 am

அருமை நண்பரே... தொடர்கதையாக வரும் என நினைத்தேன் முடிந்து விட்டது விரைவில் ...

ஈகரையில் இணைந்தமைக்கும் அருமையான கதையையே பகிர்ந்தமைக்கு நன்றிகள் ... உறுப்பினர் பகுதியில் தங்களை பற்றி அறிமுகம் செய்து கொள்ளுங்கள் சஞ்சு அவர்களே ... அன்பு மலர்

கதைகளை இங்கு http://www.eegarai.net/f19-forum பதிவிடுங்கள் நண்பரே .. போக போக பழகிவிடும் ... புன்னகை
ரா.ரமேஷ்குமார்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரமேஷ்குமார்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82367
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 10, 2018 12:10 pm

குறளி @ குட்டிச் சாத்தான் Kurali+1
-
குறளி @ குட்டிச் சாத்தான் 103459460 குறளி @ குட்டிச் சாத்தான் 3838410834
-
ஆகஸ்ட் 2011 -ல் வந்த கற்பனை கலந்த கதை!

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Apr 11, 2018 2:41 pm

குறளி @ குட்டிச் சாத்தான் 3838410834 குறளி @ குட்டிச் சாத்தான் 3838410834



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக