புதிய பதிவுகள்
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  Poll_c10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  Poll_m10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  Poll_c10 
60 Posts - 47%
ayyasamy ram
சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  Poll_c10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  Poll_m10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  Poll_c10 
54 Posts - 43%
mohamed nizamudeen
சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  Poll_c10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  Poll_m10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  Poll_c10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  Poll_m10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  Poll_c10 
3 Posts - 2%
prajai
சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  Poll_c10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  Poll_m10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  Poll_c10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  Poll_m10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  Poll_c10 
1 Post - 1%
Kavithas
சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  Poll_c10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  Poll_m10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  Poll_c10 
1 Post - 1%
bala_t
சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  Poll_c10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  Poll_m10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  Poll_c10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  Poll_m10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  Poll_c10 
285 Posts - 42%
heezulia
சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  Poll_c10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  Poll_m10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  Poll_c10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  Poll_m10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  Poll_c10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  Poll_m10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  Poll_c10 
26 Posts - 4%
sugumaran
சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  Poll_c10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  Poll_m10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  Poll_c10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  Poll_m10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  Poll_c10 
6 Posts - 1%
prajai
சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  Poll_c10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  Poll_m10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  Poll_c10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  Poll_m10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  Poll_c10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  Poll_m10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  Poll_c10 
4 Posts - 1%
manikavi
சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  Poll_c10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  Poll_m10சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4141
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Mar 31, 2018 12:01 pm

31.03.2018

கராத்தே ரமேஷ் 

சினிமாவில நடிக்கணும்னு சிலருக்கு ஆசை, டைரக்டணும்னு சிலருக்கு ஆசை இப்படி ஒவ்வொருத்தரும் சினிமாவுக்குள்ள நுழையணும்ங்கற ஆசை சிலருக்கு இருக்கும். ஆனா அப்டி போறவங்க எல்லாரும் நிலைச்சு இருக்காங்களா, புகழ் அடைறாங்களான்னா, இல்ல. அப்டி புகழ் அடையாதவங்கள்ல ஒருத்தர்தான் ரமேஷ். 

மோசஸ் திலக், கராத்தே மணி இவங்ககிட்ட கராத்தே கத்துக்கிட்டவர். அதனால தன் பேரை 'கராத்தே ரமேஷ்'ன்னு வச்சுக்கிட்டார்.  இவருக்கு சொந்த ஊர் வேலூர். பல இடங்கள்ல கராத்தே ஸ்கூல் நடத்திட்டுஇருந்தார். 

நீறு பூத்த நெருப்பு படம். இதை வடலூரான் கம்பைன்ஸ் நிறுவனம் தயாரிச்சுது. K விஜயன் டைரக்ட் செஞ்சார். இந்தப் படத்ல விஜயகாந்த் நடிப்பதாக இருந்துச்சு. அவர் கால்ஷீட்டும் கொடுத்தார். ஆனா, அவர் நடந்துக்கிட்டது வேற மாதிரி. இங்க கால்ஷீட் கொடுத்துட்டு..........................., வேற ஒரு படத்ல நடிக்க போய்ட்டார்.  அதுவும் வெளியூருக்கு. தயாரிப்பாளர் வடலூர் சிதம்பரத்துக்கு பயங்.....................கர எரிச்சல்.

எரிச்சலா? பயங்கர கோபமா இருக்குமோ? 

ஏதோ................ ஒண்ணு. நீ சப்ஜெக்ட்டுக்கு வா.

வடலூரார் கோவத்துல என்ன செஞ்சார்? என்ன செய்ய முடியும்? விஜயகாந்தை தேடி போகவா  முடியும்? வேற ஒரு ஹீரோவை தேடி போகலாம்ல? இதைத்ததான் வடலூராரும் செஞ்சார். 

விஜயகாந்துக்கு சினிமா சண்டை மட்டும்தானே தெரியும். நிஜமாவே கராத்தே, குங்ஃபூ தெரிஞ்சு வச்சிருக்கும் ஒருத்தரை ஹீரோவா நடிக்க வைக்கலாம்னு வடலூரார் நெனச்சார். தேடவும் ஆரம்பிச்சார். 

அப்போ, குமுதம் இதழ்ல, ரமேஷின் போட்டா போட்டு, அவரை பற்றிய தகவலும் வந்திருச்சு. மூணு கராத்தே போட்டிகளில் ஜெயிச்சு, தேசிய விருதாக,  தங்க மெடல்கள் வாங்கியிருந்ததாவும். தைவானின் உலக கராத்தே போட்டி நடந்துச்சு. இந்தியாவின் சார்பில் ரமேஷ் அதுல கலந்துகிட்டதாவும் குமுதத்தில தகவல்  வந்திருந்துச்சு. 

இதை படிச்ச வடலூரார், ஒரு தயாரிப்பாளரை அனுப்பி, ரமேஷை சென்னைக்கு கூட்டியாற சொன்னார். ஆனா, ரமேஷ் தனியா வரல. படை புடை சூ...........ழ வந்தார். அதாவது, தன் கராத்தே மாணவர்களோடு வந்தார். வடலூரார் முன்னால, கராத்தே சண்டைகளை செஞ்சு காட்னார். 

அதுக்குத்தான் மாணவர்களை கூட்டியாந்தாரோ? இருக்கலாம், இருக்கலாம்.

உடனே 'நீறு பூத்த நெருப்பு 1983' படத்துக்கு ஹீரோ ரமேஷ். பாசமலர் படம் மாதிரி இந்தப் படம். அண்ணன் தங்கச்சி படங்க. ஆனா படம் படு flop. ஹீரோவாத்தான் நடிக்க ஆரம்பிச்சுட்டோமே, இனிமே நல்லபடியா வாழலாம்னு, சந்தோஷப்பட்டு ரமேஷுக்கு சர்ர்ரியான அடி. முதல் படமே ஓடாததால், மத்தவங்க அவரை கண்டுக்கல. அவரோட சண்டை காட்சியெல்லாம் நல்லா தான் இருந்துச்சு. ஆனா திரைக்கதை சரியில்லாம போச்சு. 

பெரிய பெரிய டைரக்டர்களை எல்லாம் போய் பார்த்தார். ஆனா வேஸ்ட். கொம்பேறி மூக்கன், வேங்கையின் மைந்தன் ஆகிய படங்கள்ல சின்ன சின்ன ரோல்ல நடிச்சார். இப்டியே......................... மூணு வருஷம் ஆச்சு. 

அண்டா, குண்டா பாத்திரமாவது  வேண்டாம், ஏதாவது டம்ளர்,  டபரா?  எத்துவும் கிடைக்கல. சரி, இதுக்கு மேல சும்மா இருந்தா சரியா வராதுன்னுட்டு, 1986ல, திரைப்பட ஸ்டண்ட் நடிகர் சங்கத்தில் போய் சேர்ந்துட்டார். அதனால, பல படங்கள்ல, சண்டை காட்சிகள்ல வந்துட்டு போனார். அதுவும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்கள். 

விஜயகாந்துக்கு பதில் நடிக்க வந்துட்டு, கேப்டன் பிரபாகரன், கூலிக்காரன் படங்களில், விஜயகாந்திடமே  அடி, உதை வாங்கினார். நீறு பூத்த நெருப்பு படத்ல, விஜயசாந்தியின் அண்ணனாக நடிச்சார். ஆனா விஜயசாந்தி நடிச்ச தெலுங்கு படத்ல, விஜய்சாந்திட்ட அடி, உதை வாங்கினார். 

என்னவோ அவர் தலையெழுத்து. என்ன செய்ய முடியும்? 

சரி, சரி, அவர் தலையெழுத்தை பத்தி நீ ஏன் கவலைப்பட்ற?  நீ ஓம்பாட்டுக்கு சொல்லு. 

அப்டி நடிக்கும்போது அவர் கண்ல கண்ணீரே வந்துருச்சாம். பின்ன அவருக்கு மனசு கஷ்டப்படத்தானே செய்யும். 

சரத்குமார், கார்த்திக், மோகன்லால், மம்முட்டி, சிரஞ்சீவி, விஷ்ணுவர்த்தன் இவங்களுக்கெல்லாம் டூப்பு போட்டிருக்காராமே. விஜய், அஜீத், மாதவன், ஆர்யா இவங்க படங்களிலும் சண்டை காட்சிகள்ல வந்திருக்கார். சந்திரமுகி படத்தில, ரஜினியின் முதல் சண்டை ஸீன்ல வந்திருக்காராம். 

"நாம நினைக்கிறது கிடைக்கலேன்னா, கிடைக்கிறதை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான். அதுதான் புத்திசாலித்தனம். என் அனுபவம் அது"ன்னு மத்தவங்கட்ட சொல்லுவாராம், ரமேஷ்.


சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  213rki9
இப்போ தமிழகத்தில, அம்பதுக்கும் மேலான கராத்தே ஸ்கூல் நடத்திட்டு இருக்கார். இதுவரைக்கும் பத்தா.................யிரம் மாணவர்கள் பயிற்சி எடுத்திருக்காங்க. 

- ராஜசேகர்

Heezulia

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4141
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Mar 31, 2018 12:27 pm

31.03.2018

இசையமைப்பாளர் இளைய கங்கை


இளைய கங்கைங்கறது சினிமாவுக்கு வச்சுகிட்ட பேர். உண்மையான பேரு ஸ்டாலின். பாவலர் வரதராஜனின் மகன். பாவலர் யாருன்னு எல்லாருக்கும் தெரியும்ல? இளையராஜாவின் அண்ணன்.

1981ல நூலறுந்த பட்டம் படத்தின் மூலமா சினிமாவுக்குள்ள நுழைஞ்சார். விஜயகாந்த் நடிச்சது. ஸ்டாலின் இந்தப் படத்தின் எல்லா பாட்டுகளையும் ரெகார்ட் பண்ணிட்டார். தேனீ, கம்பம் பகுதிகளில் எடுக்கப்பட்ட படம். அதுக்கேத்த மாதிரி, க்ராமத்து பின்னணியில் இசையமைத்திருந்தார்.

நூலறுந்த பட்டம் படத்தில “வானுயர்ந்த சோலையிலே” ன்னு ஒரு பாட்டு. இந்தப் பாட்டை அப்பா பாவலர் எழுதி மகன் ஸ்டாலின் ம்யூசிக் போட்டது. இல்ல, இல்ல இந்தப் பாட்டு இந்த படத்தில் இல்லன்னு சொல்றவங்க கைய தூக்குங்க.

எனக்கு தெரியும், எல்லாருமே கைய தூக்குவீங்கன்னு. என்னது? இதயக்கோவில் படமா? இளையராஜா ம்யூசிக்கா? பாதி சரி, பாதி தப்பு.

நான் சொன்ன பாட்டு நூலறுந்த பட்டம் படத்தில் இருக்கு. நீங்க சொன்ன மாதிரி இதயக்கோவில் படத்திலும் இருக்கு.
ஏம்மா.................. இப்டி குழப்ற? சரியாத்தான் சொல்லேன்.
“வானுயர்ந்த சோலையிலே” பாட்டு ரெண்டு படத்திலேயும் இருக்குன்னு சொன்னேன்ல. ஆமா............... இருக்கு. பல்லவி மட்டும்தான். சரணங்கள் வேற வேற. இதுதான் நெஜம். 

நூலறுந்த பட்டம் படப்பாட்டு ஜெயசந்திரன் பாடியது

இதயகோயில் பாட்டு SPB பாடியது. ஆனா நூலறுந்த பட்டம் படம் ரிலீஸ் ஆகல. அப்புறமா நீறு பூத்த நெருப்பு [1983] படத்துக்கு ஸ்டாலின் ம்யூசிக் போட்டார். இந்தப் படமும் சுமாராத்தான் ஓடுச்சு. இசையமைக்க வாய்ப்புக்காக ஸ்டாலின் அங்க இங்க அலஞ்சிருக்கார். ஊஹும். வேஸ்ட்.

இளையராஜா இதையெல்லாம் பார்த்து, அண்ணன் மகனாச்சேன்னு, மதுரைல ஒரு ஆடியோ கேஸட் கடையை வச்சு கொடுத்தார். ஆனா கொஞ்ச நாள்லேயே அதை இழுத்து மூடிட்டார். என்னான்னு கேட்டதுக்கு, “நானே……………..  படங்களுக்கு இசை போடணும்னு கனவில இருக்கேன். அப்டி ஒரு ஆசையை வச்சுட்டு, நான் எப்படி இந்த கடைக்குள்ள முடங்கி கெடக்கிறது”ன்னு சொல்லிட்டார்.

விஜயகாந்த் ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் [1991]’ படத்தில நடிச்சிட்டு இருந்தார். அப்போ அவர்ட்ட போய் வாய்ப்பு கேட்டிருப்பார் போல ஸ்டாலின். ச்சான்ஸ் கெடச்சுது. இந்தப் படத்தில, சித்தப்பாக்கள் இளையராஜா பேர்லயும், கங்கை அமரன் பேரலையும் பாதி பாதி எடுத்து, தாம்பேரை இளைய கங்கைன்னு வச்சுகிட்டார்.

விஜயகாந்த் படத்தில இசையமைப்பாளர் பேரு இளைய கங்கை. இந்தப் படமும் ஓடல. சோதனை மேல சோதனை. இவர் ம்யூசிக் போட்ட இன்னொரு ஓடாத படம் மனதிலே ஒரு பாட்டு [1995]. காதலுக்கு தலை வணங்கு படம்தான் இவர் ம்யூசிக் போட்ட கடைசி படமாம். வாய்ப்பு கிடைக்காததால இளைய கங்கை குடிக்க ஆரம்பிச்சுட்டார். மஞ்சள் காமாலை வந்து இறந்துட்டார்.
இப்படி ஒரு இசையமைப்பாளர் இருந்தது யாருக்காச்சும் தெரியுமா?

- ராஜசேகர்

Heezulia 

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4141
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Apr 19, 2018 12:31 am

19.04.2018

கவிஞர் பரிணாமன்

வைரமுத்து, நா. முத்துகுமார் போன்ற கவிஞர்கள், எம்.ஏ. வரைக்கும் படிச்சுட்டு சினிமாவுக்கு பாட்டு எழுத வந்தவங்க. ஆனா வெறும்........................... அன்ஜாப்பு மட்..............டும் படிச்சிட்டு, ஒருத்தர் கவிஞர், இலக்கியவாதி, முற்போக்கு நெனப்பு இருக்கிறவர், சினிமாவுக்கு பாட்டு எழுதுறவரா இருக்கார். அவர்தான் இந்த கவிஞர் பரிணாமன்.

இவர் மதுரகாரரு. அங்க அவர் ஒரு கடை நடத்திட்டு இருந்தார். அந்த கடையில என்ன வித்துட்டு இருந்தார். உதிரி பாகங்கள். என்னது, சைக்கிளோடதா? இல்ல. பைக்கா? அதுவும் இல்ல. பின்ன என்ன, காரோடாதா? ஊ...................ஹும் 

அட, சொல்லேன். என்னத்ததான் வித்தாரு?

அது வந்து..................., பம்ப்பு செட்டு மோட்டார் இல்ல, அதோட உதிரிங்கதான். ஆனா பேருக்குதாங்க அந்த கடைல உக்காந்திருந்தாரு. எப்...............ப பாத்தா...............லும் புத்தகமும், கையுமாத்தான் இருப்பார். வண்ணநிலவன், வண்ணதாசன், இந்திரா பார்த்தசாரதி, தி.ஜானகிராமன் போல எழுத்தார்களின் புத்தகம்தான் அவர் கையில இருக்குமாம். அட, படிச்சிட்டு இருப்பார்னு சொல்ல வந்தேன்.

இவரோட சொந்த பேர் கிருஷ்ணன். ஆரம்பத்தில இவர் என்ன வேல பாத்தார் தெரியுமோ? கட்டட வேலை. அதாங்க, சித்தாளு, கொத்தனாரு, அப்புறமா காண்ட்ராக்டரு. அப்பவும் புத்தகங்களை படிப்பாராம். மு வரதராசனார், ஜெயகாந்தன், புதுமைப்பித்தன் இவங்கள போலவங்களின் புத்தகங்களை படிச்சுதான், அவருக்கு இலக்கியத்துல ஆர்வம் வந்துச்சாம். இவரோட முதல் கவிதை தொகுப்பு ‘ஆகஸ்ட்டும் அக்டோபரும்’.

மதிரையில கலை இலக்கிய மன்றத்தில் செயலாளராக இருந்தார். அப்போ ‘மகாநதி’ங்கற இலக்கிய பத்திரிக்கை வந்துட்டு இருந்துச்சு. அதுல பரிணாமன் ஆசிரியாராக இருந்தார். அப்புறம் சென்னைக்கு வந்துட்டார். ‘நவசக்தி’ங்கற பத்திரிகையில் ஜெயகாந்தன் ஆசிரியராக இருந்தாராமே. அங்ககூட உதவி ஆசிரியராக வேல செஞ்சிருக்கார்.

பரிணாமத்தின் ரெண்டாவது கவிதை தொகுப்பு ‘நெஞ்சில் ஆடும் கதிரும் நிஜம் விளையாத பூமியும்’. இவரோட எல்லா............. கவிதைகளையும் சேர்த்து, ‘பரிணாமன் கவிதைகள்’னு பேரு வச்சு, செண்பகா பதிப்பகம் வெளியிட்டுது.

இவரோட பாட்டுக்களில் “பத்து தலை ராவணனை ஒத்த தலை ராமன் வென்றான். மொத்தத்துல வீரம் வேணும் சுடலைமாடா” பாட்டும், “பாரதி பிடித்த தேர் வடம் நடு வீதியில் கிடக்கிறது, அதைப் பற்றி பிடித்து இழுப்பதற்கு ஊர் கூடி தவிக்கிறது” பாட்டும் பிரபலமாச்சாம். கம்யூனிஸ்ட் மேடைகள்ல, உணர்ச்சி பொங்க பாடுவாராம்.

பத்திரிக்கை, அரசியல்னு ஒரு சுத்து சுத்திட்டு, சினிமாவுக்கும் வந்துட்டார். சமீபத்தில ‘என் பெயர் இந்தியா’ன்னு ஒரு புத்தகத்தை எழுதியிருக்கார். இதுக்கு நல்ல வரவேற்பாம். இந்த புத்தகம் மலையாலத்ல மொழி பெயர்க்கப்பட்டு வெளி வர இருக்காம்.

கிருஷ்ணன் என்ற பரிணாமன், அஞ்சாப்பு படிச்ச ஒரு கொத்தனார். இவர் இந்த அளவுக்கு ஒரு படைப்பாளியாய் உருவானது ஆச்சரியம்தானே.

இவருக்கு ஒரு பொண்ணு, ரெண்டு பையங்க. பொண்ணு உஷா டாக்டர். ஒரு பையன் சரத்சந்திரன் ட்டி.வி.சீரியல்ல ஒளிப்பதிவாளர். இன்னொரு பையன் ஜெயகாந்தன் எஞ்சினியர்.


இவர் எழுதின சினிமா பாட்டூங்க :

"பொண்ணு சிரிக்குது பூவாட்டமா" [முதல் சினிமா பாட்டு] – நானும் இந்த ஊருதான் 1990 /  சங்கர் கணேஷ்  

என் பொட்டுக்கு சொந்தக்காரன் 1991
– எந்த பாட்டுன்னு தெரியல / தேவா 

"தென்பாண்டி சீமை தமிழ் கொடுத்த தாயே" – நாடோடி பாட்டுக்காரன் 1992 / இளையராஜா

"சத்திய வேள்வியில் சிந்திய குருதியில்" – ஊருக்கு நூறு பேர் 2001 / அரவிந்த் ஜெயசங்கர்

இவருக்கு பேர் வாங்கி கொடுத்த பாட்டு, "வாராது போல் வந்து வீழ்ந்தானடா" [ஜேசுதாஸ்] – ஈ 2006 / ஸ்ரீகாந்த் தேவா

பிரபலமான பாட்டு “ஆசப்பட்ட எல்லாத்தயும் காசிருந்தால் வாங்கலாம்" – வியாபாரி 2007 / தேவா



- ராஜசேகர்


Heezulia  மீண்டும் சந்திப்போம்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4141
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri May 11, 2018 10:56 am

11.05.2018

ராஜவர்மன் @ மதுரை ராஜ்

இவர் மதுரைல பிறந்தார். பெரியகுளம் விக்டோரியா மகாராணி ஹைஸ்கூல்ல படிச்சார். இத எதுக்கு சொல்ல வர்ரேன்னா, அந்த ஸ்கூல் பக்கத்தில ரஹீம் தியேட்டர்னு ஒரு தியேட்டர் இருந்துச்சு. இங்க ஓடின படங்களோட வசனம் எல்லாம் தியேட்டருக்கு வெளிய நல்...........................லாவே கேக்கும். இப்டி வசனங்களை கேட்டு கேட்டு தான் ராஜவர்மனுக்கு சினிமா மேல ஆசை வந்துருச்சு.

ஆமா......................... இவர் சினிமா பாடத்த படிச்சுட்டு இருந்துட்டாரே, ஸ்கூல் பாடங்களை படிச்சாரா இல்லியா?

ராஜவர்மனுக்கு வசனங்களை கேட்டுட்டே.................... சினிமா மேல மோகம் வந்துச்சா? வந்துச்சு. சிவாஜி கணேசனை அவருக்கு ரொம்.........................................ப புடிக்குமாம். அவரை மாதிரி சினிமாவுல எதையாவது செய்யணும், சாதிக்கணும்னு நெனச்சார்.

அப்டி செய்றதுக்கு மதுரைலியே இருந்துட்டா முடியுமா? சென்னைக்கு கெளம்பிட்டார். சென்னைக்கு போறதுக்கு பணம் வேணுமே. வீட்ல இருந்து திருடிட்டு போய்ட்டார். இல்ல இல்ல, ஓடிட்டார். எந்த பணத்தை திருடினார்னு தெரியுமா? பருத்தி வித்த பணம் வீட்ல இருந்துச்சு. அந்த பணந்தான்.

ராஜவர்மன் ஸ்கூல்ல படிச்சிட்டு இருந்தபோ, அவருக்கு ஒடம்பு சரியில்லாம போயிருச்சு. ஆண்டிப்பட்டீல சேவா நிலயம் ஒண்ணு இருந்துச்சாம். அதை ஒரு ஆங்கிலோ இந்திய பெண் நடத்திட்டு இருந்தார். அங்க போய் சேந்துட்டார், ராஜவர்மன். ஒடம்பு சரியாகிட்ட பிறகும் அந்த பெண் அவருக்கு ஜேம்ஸ்னு பேர் வச்சுட்டாராம். இந்த பேரோடதான் சென்னைல அலைஞ்சுட்டு, சுத்திட்டு  இருந்திருக்கார்.

சென்னைக்கு வந்து, ஒரு நண்பனின் ரூம்ல தங்கினார். அங்கிருந்துட்டு சினிமாக்காரங்க ஒவ்வொருத்தரையா............................ போய் பாக்க ஆரம்பிச்சார். யாரைல்லாம் பாத்தார்னு பாருங்க. இல்ல, படிங்க.

சித்ராலயா ஆபீஸ்க்கு போனார். அங்க யாரை பார்த்தார்? அங்க முக்கியமானவர்  கோபுதானே. அவரைத்தான் போய் பார்த்தார். K பாலசந்தரை அவர் வீட்லயே போய் பாத்தார். பாத்துட்டு சும்மாவா இருந்தார்? உதவி இயக்குனர் சான்ஸ் கேட்டார்.

ஊஹும். வேஸ்ட்.

அந்த சமயத்தில பாரதிராஜா ரஞ்சித் ஹோட்டல்ல இருந்தார். எதுக்கு? கல்லுக்குள் ஈரம் பட டிஸ்கஷனுக்கு அங்க தங்கி இருந்தார். ராஜவர்மன் அவரையும் போய் பார்த்திருக்கார். “இப்போதைக்கு எங்கிட்ட எந்த சான்ஸும் இல்ல. இன்னொரு தடவ பாக்கலாம்.”ன்னுட்டார். SP முத்துராமனை பார்த்தார். ஊ....................ஹும், ஒர்..........................ரு ப்ரயோஜனமும் இல்ல.

எப்படியோ ராண்டார் கை அறிமுகம் ராஜவர்மனுக்கு கெடச்சுது. அவருக்கு உதவியாளராக இருக்கிற சான்ஸ் கெடச்சுது. ராஜவர்மனின் வேல என்னான்னு தெரியுமா. ராண்டார் எழுதுறத எல்லாத்தையும், குங்குமம், அஸ்வினி போன்ற புத்தகங்க ஆபீஸ்ல போய் குடுக்கிறது.

ஆமா................ அஸ்வினினு பத்திரிக்கை வந்துச்சு?

ராஜவர்மன் பக்கம் கொஞ்.............சமா அதிர்ஷ்டக் காத்து அடிக்க ஆரம்பிச்சுது. அடைக்கலவன்னு ஒரு டைரக்டர். சந்திரசேகர் ஹீரோவா நடிச்ச ‘பூம்பூம் மாடு’ [1982] ன்னு ஒரு படம் டைரக்ட் செஞ்சுட்டு இருந்தார். அவர்ட்ட எப்டியோ உதவி இயக்குனரா வேல செய்ய ராஜவர்மனுக்கு சான்ஸ் கெடச்சுது.  அப்புறமா சுரேஷ், விஜி நடிச்ச வளர்த்த கடா [1983], பாண்டியன் நடிச்ச மண்சோறு [1984], பாண்டியன், ஜெயஸ்ரீ நடிச்ச கோயில் யானை  [1986]  இந்த படங்கள்ல அச்சிஸ்ட்டன்ட் டைரக்டரா வேல செஞ்சார்.

இதுக்கப்புறமா SS சந்திரன் அறிமுகம் ராஜவர்மனுக்கு கெடச்சுது. இவர் ராஜவர்மனை, ராம நாராயணனிடம் அசிஸ்டன்ட்டா சேத்து விட்டார். வீரன், வீரன் வேலுத்தம்பி படங்கள்ல ராமநாராயணனுக்கு உதவி செஞ்சுட்டு இருந்தார். ஆனா டைரக்ட் செய்றதுல இல்ல. திரைக்கதைல.

ராஜவர்மன், சங்கிலி முருகன்கிட்ட ஒரு கதையை சொல்லியிருக்கார். கேட்டவருக்கு அந்தக் கதை புடிச்சுபோச்சு. அந்தக் கதை ‘எங்க ஊரு காவல்காரன்’ பேர்ல படமாச்சு. ராமராஜன், கௌதமி நடிச்சாங்க. TP கஜேந்திரன் டைரக்ட் செஞ்சார். ராஜவர்மன் எழுதிய கதை அப்டீ இப்டீன்னு 1988ல படமா ரிலீஸ் ஆச்சு. இந்தப் படத்தோட டைட்டில்லதாங்க “கதை – ராஜவர்மன்”னு முதல் முதலா பேர் வந்துச்சு. 100 நாள் ஓடுச்சு இந்தப் படம்.

இவரோட மத்த படங்கள் :

பாண்டி நாட்டுத் தங்கம் 1989 -  கதை  
பெரிய வீட்டு பண்ணக்காரன் – 1990 – வசனம் [சங்கிலி முருகன் தயாரிச்சார்]
கும்பக்கரை தங்கையா 1991 – வசனம்  [சங்கிலி முருகன் கதை]
எங்க ஊரு சிப்பாய் 1991 – வசனம் [சங்கிலி முருகன் தயாரிச்சார்]

ராஜவர்மன் இந்தப் படங்கள்ல அசோஸியேட் டைரக்டராவும் இருந்திருக்கார். சக்க போடு போட்ட படங்கள்.

எத்தன நாள்தான் இப்டி கதை எழுதிட்டும், உதவி டைரக்டராவும் இருக்கிறது. டைரக்டராக வேணாமா? அந்த அதிர்ஷ்டம் ‘தங்க மனசுக்காரன்’ [1992] படத்துல கெடச்சுது. யாகவா ப்ரொடக் ஷன்ஸ் தயாரிச்ச படம். இந்தப் படத்ல ராஜவர்மன் டைரக்டர் ஆனார். அது மட்டுமில்ல, கதை, திரைக்கதை, வசனங்களையும் இவர்தான் எழுதினார். வெற்றிப்படம்.  

அதுக்கப்புறமா அதே நிறுவனம் தயாரிச்ச ‘மணிக்குயில்’ [1993] படத்துக்கு கதை, திரைக்கதை, டைரக் ஷன் ராஜவர்மந்தான். தங்கக்கிளி [1993] படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம், டைரக் ஷன் இவர்தான். இதுல பாருங்க, எங்க ஊரு சிப்பாய் படத்தை தவிர, எல்லா படத்துக்கும் இளையராஜா ம்யூசிக்.

அதுக்கப்புறம் பத்...............................து மாசமா சினிமா உலகத்ல ஏதோ ஸ்ட்ரைக் நடந்துச்சாம். அதனால சினிமா ராஜவர்மனை மறந்துருச்சு. அதுக்கப்புறமாவும் அவர் ஏதேதோ செஞ்சு பார்த்தார். எதுவும் சரிவர்ல. இருந்தாலும் ராஜவர்மன் சும்மா உக்காந்துரல. ‘ஓடி வந்த மாப்பிள்ளை’ அப்டீன்னு ரெண்டு மணி நேரத்துக்கான ஒரு டெலிஃபிலிம் டைரக்ட் செஞ்சார். அது ஸன் TVலகூட ஒளிபரப்பாச்சாம். அதுல ராஜவர்மனுக்கு நல்ல பேர். ‘பரிகாரம்’ னு ஒரு டெலிஃபிலிம் டைரக்ட் செஞ்சார். அதுவும் ரெண்டு மணி நேரத்துக்கானது.

மூங்கில் காடு, பாளையக்காரன் படங்கள் ராஜவர்மன் இயக்குறதா இருந்துச்சாம். ஆனா அத பத்தின தகவல்கள் எதுவும் கிடைக்கல.

- ராஜசேகர்

Heezulia


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4141
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Jul 17, 2020 8:23 pm

17.07.2020 

PV நரசிம்மபாரதி

அந்தக் கால நடிகர்களபோல இவரும் நாடக உலகத்ல இருந்து வந்தவர். 15 வயஸ்ல இருந்தே ஸ்த்ரீபார்ட் நடிச்சிட்டு இருந்தார். இவர் பெண் குரல்ல பேசி, ஆடி பாடி நடிக்கிறத பார்த்த ரசிகர்களுக்கு, அவர் பொம்பளயா ஆம்பளயான்னு சந்தேகம்கூட வருமாம்.

‘கிருஷ்ணலீலா’ நாடகத்ல, வாலிப கிருஷ்ணனாவும், ரெண்டாம் பாதியில் பெரிய கிருஷ்ணனுக்கு மனைவியாயும் நடிச்சாராம்.

1938ல ‘பக்தமீரா’ படத்தில ஒரு சின்ன ரோல்ல நடிக்கிறதன் மூலமா சினிமால நுழஞ்சார். அப்புறமா ஸ்திரீபார்ட்லேயிருந்து ராஜபார்ட்டுக்கு ப்ரமோஷன் கெடச்சுது.

மெதுவா மெதுவா முன்னேறி 1947ல கஞ்சன் படத்தில ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சார்.

திடீர்னுட்டு தெய்வ படங்கள் அலை வீசுச்சு. ராமர், விஷ்ணு, நாரதர் வேஷங்கள்ல நடிச்சார்.

NTRக்கு கிருஷ்ணன் வேஷம் நிரந்தரம்னு இருந்த காலத்ல, 1948ல ‘அபிமன்யூ’ படத்ல நரசிம்ம பாரதி கிருஷ்ணனாக நடிச்சார். 1950ல ‘கிருஷ்ண விஜயம்’ படத்ல ராதாகிருஷ்ணனாக நடிக்கும்போது, ராதாகிருஷ்ண லீலைக்கு, லவ் டூயட் பாடணும். ஆண் குரலுக்கு நரசிம்மபாரதியின் ரெக்கமெண்டேஷன்ல, அவர் நண்பனான TMS பாடினாராம். அதுதான் “ராதை நீ என்னை விட்டு போகாதேடி” பாட்டு.

வாய்ப்புக்காக யார்ட்டையும் போய் நிக்கமாட்டார். ஹீரோ சான்ஸ் கெடைக்கலேன்னா கூட, துணை நடிகரா நடிச்சிட்டு இருந்தார்.

என்ன காரணத்தாலோ அவர் சினிமாவிலிருந்து ஒதுக்கப்பட்டுவிட்டார். ஆனா அவர் கொஞ்சங்கூட கவலைப்படல. மறுபடியும் நாடகத்தில நடிக்க போயிட்டார்.

அப்போ இசையமைப்பாளர் கோவிந்தராஜுலு நாடகக்குழு நடத்தி வந்தாராம். அவருடன் சேர்ந்து 300க்கும் அதிகமான ஸ்பெஷல் நாடகங்களை நடித்தினார். அப்புறம் சொந்தமா ‘பாரதி நாடக மன்றம்’னு ஒரு குழுவை அமைத்தார்.

1977ல தமிழக ஆரசு அவருக்கு கலைமாமணி விருது கொடுத்து அவரை கௌரவிச்சதாம்.


இன்னும் வருது 

Baby Heerajan  

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81953
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 17, 2020 9:07 pm

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  103459460 சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  3838410834
-
சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  Pv-narasimha-bharathi-ka-thangavelu-k-sairam-naan-kanda-sorkam
-
நான் கண்ட சொர்க்கம் படத்தில் நாரதராக நரசிம்மபாரதி,
கே.ஏ.தங்கவேலு, கே.சாய்ராமன்
----
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4141
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Jul 17, 2020 11:56 pm

17.07.2020
சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  P9quMkTREq5PSQOZw9bg+NTR-shooting-Sampoorna-Ramayanam-771x573

சம்பூர்ண ராமாயணம் 1958 படத்ல.


Baby Heerajan



heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4141
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Jul 18, 2020 11:09 pm

18.07.2020

திரைப்படங்களுக்கு பாட்டு எழுதுற சில கவிஞர்கள், நல்ல பாட்டு எழுதினாலும் சீக்கிரமா காணாம போயிர்றாங்க. அப்படிப்பட்ட கவிஞர்களைப் பற்றி எழுதலாமேன்னு ஆரம்பிக்கிறேன்.

பாடலாசிரியர் மாயவநாதன் :

கண்ணதாசன் புகழ் பெற்றிருந்த காலம் அது. வேற கவிஞர்கள் எழுதியிருந்த பாட்டை கூட “இந்த பாட்டை கண்ணதாசன்தான் எழுதியிருப்பாரோ”ன்னு யூகத்துடன் பேசிகிட்டாங்களாம். அந்த மாதிரிதான் இந்த மாயவனாதனும் எட்டாத தூரத்தில் இருந்தார்.

நடிகை சந்திரகாந்தா நாடகக்குழு ஒண்ணை நடந்திட்டு இருந்தா. அந்தக் குழு நடத்திய நாடகங்களுக்கு மாயவநாதன் பாட்டுக்கள் எழுதி கொடுத்துட்டு இருந்தார். சினிமாக்காரங்க இதை கேள்விப்பட்டாங்க, கவனிச்சாங்க.

1960 முதல் 1971 வரை பாட்டு எழுதினார். 11 வருஷம்போல பாட்டு எழுதியிருக்கார். ஆனா சில பாட்டுதான் எழுதியிருப்பார் போல. தயாரிப்பாளர்கள் என்னவோ மாயவநாதன் கேட்ட பணத்தை கொடுக்க ரெடி................... யாதான் இருந்தாங்களாம். ஆனா பணத்தை மட்டுமே எதிர்பார்த்து பாட்டு எழுதுபவர் இல்ல மாயவனாதன்.

நா காமராசன் அப்டீன்னு ஒரு புதுபாடலாசிரியர். அவர்
‘சொர்க்க வசந்தத்தின் ஊமை குயில்கள் ’ னு ஒரு புத்தகத்தை எழுதினார். அதுல மாயவனாதனைப் பற்றி ஒரு வரி எழுதியிருந்தாராம்.

என்னது தெரியுமா?
“கண்ணதாசனின் செல்வாக்கை உடைத்த முதல் கவிஞன்”
மாயவநாதன் யாருக்கும் பயப்படமாட்டார், அடங்கி போகமாட்டாராம்.


- தொடரும்

பேபி



heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4141
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Jul 18, 2020 11:12 pm

18.07.2020

பாடலாசிரியர் மாயவநாதன் [தொடர்ச்சி]
சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்  UmV5XwXWQVqhdsFsjxdD+Mayavanathan
மறக்க முடியுமா படத்தை எடுத்துட்டு இருந்த நேரம். இவரை பாட்டு எழுத கூப்ட்டாங்க. இவரும் வந்தார்.

இசையமைப்பாளர்ட்ட “என்ன ட்யூன், சொல்லுங்க” ன்னு கேட்டாராம். நக்கல் பிடிச்ச இசையமைப்பாளர்போல. அவர் என்ன சொன்னார் தெரியுமா? ட்யூனை சொல்லல.

“மாயவநாதன் .... மாயவநாதன்” ன்னு போட்டு வச்சிருந்த ட்யூனை வச்சு கிண்டலா சொன்னாராம். பொறுமையா இருப்போம், கெடச்ச சான்ஸை விடக்கூடாதுன்னு நெனச்சாரா, இல்லியே. எந்திருச்சு போயிட்டாராம் மாயவநாதன்.

அப்புறமா அந்த ட்யூனுக்கு பாட்டு எழுதியது யார் தெரியுமா? கலைஞர்தான். என்ன பாட்டு தெரியுமா?

“காகித ஓடம் கடலலைமீது” பாட்டுதான்.

அந்த நக்கல் இசையமைப்பாளர் யார் தெரீமோ? மறக்க முடியுமா படத்துக்கு ட்யூன் போட்டது TK ராமமூர்த்தி.

மாயவநாதனின் கவித்தன்மையை பார்த்த கலைஞர் கருணாநிதி, தான் எழுதி தயாரிச்ச அனேக படங்களில், அவருக்கு சான்ஸ் கொடுத்தாராம்.

மாயவநாதன் கொஞ்சமா பாட்டு எழுதியிருந்தாலும், எழுதிய எல்லா பாட்டுமே சூப்பர் ஹிட்டு.


- தொடரும்

பேபி


heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4141
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Jul 18, 2020 11:13 pm

18.07.2020
பாடலாசிரியர் மாயவநாதன் [தொடர்ச்சி] 

மாயவனாதனின் ஒரு சில பாட்டுக்கள் இங்கே :

தண்ணிலவு தேனிரைக்க [அறிமுகப் பாடல்] – படித்தால் மட்டும் போதுமா
சித்திர பூவிழி வாசலிலே – இதயத்தில் நீ
கற்பூரக் காட்டினிலே கனல் விழுந்து – பூமாலை
பந்தபாசம் படத்துக்கு யார வச்சு பாட்டு எழுதுறதுன்னு ஆலோசனை நடந்துச்சாம். மாயவனாதனைத்தான் செலக்ட் செஞ்சாங்களாம்.
நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ – பந்தபாசம்

பாலும் பழமும் படத்ல இப்படி பாட்டு வருதாமே. நான் கேட்டதில்ல.
“பழுத்துவிட்ட பழமல்ல நீ விழுவதற்கு” ன்னு பாட்டு இருக்காமே. இந்தப் பாட்டைப் பத்தி தெரிஞ்சா சொல்லுங்க. மாயவநாதன் எழுதியதுதான்.
 
பாவியென்னை மறுபடியும் பிறக்க வைக்காதே – என்னதான் முடிவு
தத்துவப் பாடல்களை அட்டகாசமாய் எழுதுவாராம்.
இது தினமணி பேப்பர்ல வந்தது.

- தொடரும்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக