புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாப்பிள்ளையாகப் போகும் மகனுக்கு Poll_c10மாப்பிள்ளையாகப் போகும் மகனுக்கு Poll_m10மாப்பிள்ளையாகப் போகும் மகனுக்கு Poll_c10 
21 Posts - 66%
heezulia
மாப்பிள்ளையாகப் போகும் மகனுக்கு Poll_c10மாப்பிள்ளையாகப் போகும் மகனுக்கு Poll_m10மாப்பிள்ளையாகப் போகும் மகனுக்கு Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாப்பிள்ளையாகப் போகும் மகனுக்கு Poll_c10மாப்பிள்ளையாகப் போகும் மகனுக்கு Poll_m10மாப்பிள்ளையாகப் போகும் மகனுக்கு Poll_c10 
63 Posts - 64%
heezulia
மாப்பிள்ளையாகப் போகும் மகனுக்கு Poll_c10மாப்பிள்ளையாகப் போகும் மகனுக்கு Poll_m10மாப்பிள்ளையாகப் போகும் மகனுக்கு Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
மாப்பிள்ளையாகப் போகும் மகனுக்கு Poll_c10மாப்பிள்ளையாகப் போகும் மகனுக்கு Poll_m10மாப்பிள்ளையாகப் போகும் மகனுக்கு Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
மாப்பிள்ளையாகப் போகும் மகனுக்கு Poll_c10மாப்பிள்ளையாகப் போகும் மகனுக்கு Poll_m10மாப்பிள்ளையாகப் போகும் மகனுக்கு Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாப்பிள்ளையாகப் போகும் மகனுக்கு


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Fri Dec 11, 2009 5:56 pm

ண்ணா! ராஜா! மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நீ ஒரே பையனாகப் பிறந்து வளர்ந்து, படித்துப் பட்டம் பெற்று கைநிறையச் சம்பாதிச்சு... இப்படி ஒவ்வொர காலகட்டத்திலும் உன் வளர்ச்சியை, உயர்வைக் கண்டு பூரித்திருக்கிறோம்.
திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப் படட்டும் என்று நீ சொன்னதனால்தான் இந்த ஏற்பாடுகள். நல்ல பெண், நல்ல குடும்பம்.. நல்லதே எண்ணுவோம்...! நல்லதே நடக்கட்டும்.
உலக நடப்பினைக் கண்டு உன் அப்பாவும் நானும் நிறையப் பேசிய பிறகுதான், திருமணம் ஆவதற்கு முன்னால் உன்னிடம் சில விஷயங்களைச் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தோம்.
இது உனக்கு வியப்பாக இருக்கலாம்.
பெண்ணுக்குத்தானே இப்படிச் சொல்லுவார்கள் என்று நினைக்கிறாயா? இல்லை கண்ணா... நாங்கள் மனம் திறந்து சொல்வதைச் சொல்லி விடுகிறோம். காதில் போட்டு வைத்தால் சில விஷயங்கள் மனதிலும் இறங்கும் அதுவே தக்க சமயத்தில் உதவக்கூடும்!
பெஸ்ட் அம்மா பெஸ்ட்!
இதுவரையில் பெண்ணென்று வீட்டில் உன் அம்மாவை மட்டுமே பார்த்திருக்கிறாய். அவள் சமைப்பதையும், வீட்டை வைத்துக் கொள்வதையும், பாடம் சொல்லித் தருவதையும் பாடுவதையும்,கோலம் போடுவதையும், பண்டிகைகளை முழுமையாகக் கொண்டாடுவதையும் எதிலும் திறம்பட எடுக்கும் முடிவையும் பார்த்து என் அம்மாதான் பெஸ்ட் என்று எண்ணியதில் தப்பில்லை. உள்ளூர எனக்கு அது பெரிய கிரீடம்தான்!
இனிமேல் அதையே மனதில் அசைபோடாதே! அதைத் தாண்டி வா! அம்மா பெஸ்ட் என்ற உன் கருத்தை உள்ளத்தின் ஆழத்தில் மட்டும் வைத்துக்கொள். வார்த்தைகளில் உன்னவளுக்குத் தெரியப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. தாய் சொல்லைத் தட்டாதே! சிறிய முகமூடிதான். அதைத் திறம்படப் பயன்படுத்து! அது எல்லோரையும் மகிழ்விப்பதைப் புரிந்துகொள்வாய்.
தாய்க்குப் பின் தாரம்!
நலங்கு மஞ்சள் காயும் முன்பே பிரம்மதண்டத்தைத் தலையில் வைத்தது போல் எங்க அம்மா ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கிறார்கள்., அவர்களை அனுசரித்துக் கொண்டு போக வேண்டும் என்ற வசனங்களைப் பேசாதே! அப்படிச் சொன்னால் அவளுக்கு மனதில், அப்படியானால் அம்மா பிள்ளையாகவே இருக்க வேண்டியதுதானே. அப்புறம் எதுக்கு நான்? என்று சிறு கசப்பு உணர்வு தோன்றும். அவள்தான் உன் உலகம் என்பதை அவளுக்குப் புரியவை. அம்மாவும் அப்பாவும் சண்டை போட்டுக் கொள்வார்கள் என்றும் சொல்லாதே! அதையே என்றாவது உன் மீது திருப்பக் காரணமாக நீ இருக்கக்கூடாது. சண்டையில்லாவிட்டால் நீ கேட்டதெல்லாம் கிடைத்திருக்குமா?
காபியை சர், புர் என்று உறிஞ்சிக் குடிக்காதே. உனக்கொரு மனைவி வந்தால், நல்லா வளர்த்திருக்கா என்று என்னைக் குறை சொல்வாள் என்று அடிக்கடி சொல்வேனே. இன்று உன்னுடைய நடை உடை பாவனையில் உயர்வைக் கண்டு நான் பூரிக்கிறேன். வரப் போகிறவள் பெருமையடைவாள். நல்ல ஆசானாகப் பணி ஆற்றிய நிறைவு எனக்கு.
தாயா? தாரமா?
அம்மா சமையலைத் தவிர வேறொன்றும் நீ அறியாததால் அது மிக உயர்வாக உனக்குத் தோன்றுவதில் வியப்பில்லை. இருந்தாலும் வார்த்தைக்கு வார்த்தை, எங்க அம்மா செய்கிற மாதிரி சேப்பங்கிழங்கு ரோஸ்ட், முருங்கைக்காய் சாம்பார் மாதிரி வராது என்று ஒப்பிட்டுப் பேசாதே! உன் அம்மாவுக்கு உன் மனைவியாகப் போகிற பெண்ணைப் போலக் கார் ஓட்டவும், வங்கிப் பணி ஆற்றவும், டைம் மேனேஜ்மெண்ட்டும் தெரியாதப்பா! நான் அன்றைய கெட்டிக்காரி! இவள் இன்றைய மங்கை!
அம்மாவின் கட்டளைகள் ஆறு!
உனக்கு உன்னிடம் உள்ள பேரன்பை மனதில் கொண்டு நான் சொல்லும் அறிவுரைகள் ஆறு:
1. அம்மா புராணம் பாடாதே!
2. அம்மாவோடு ஒப்பிடாதே!
3. அம்மாக்கோண்டு என்ற பட்டம் பயன் தராது!
4. அம்மாவைக் கொஞ்சம் பீடத்திலிருந்து இறக்கிவை. அவளும் சற்று இளைப்பாறட்டும்!
5. அம்மா தேவைப்பட்டபோதெல்லாம் உதவிக்கு வருவாள் என்பதை மட்டும் சொல்லி வை! உன்னவளுடைய அம்மாவையும் மதிக்கக் கற்றுக் கொள்!

பி.கு.
மாமனாரை உயர்த்திப் பேசுவதால் மருமகளுக்கு எந்தவித கசப்பும் ஏற்பட்டதாகச் சரித்திரமே கிடையாது! ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி... நீடூழிவாழ வாழ்த்துக்கள்




[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Dec 12, 2009 5:30 am

நல்ல தக்வல் பலா... மாமனாரின் மனதில் அவர்கள் வீட்டில் இருப்பவரின் மனதில் இடம்பிடித்தால் நம்க்கு ராஜா யோகம் தான்... [You must be registered and logged in to see this image.]

நம்மலை அப்படிதான் தாங்குவங்க... இது என் அனுபவம்... [You must be registered and logged in to see this image.]

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Dec 12, 2009 5:41 am

இன்னோரு விஷயமும் சொலனும் பலா.... [You must be registered and logged in to see this image.]

வரும் மனைவியிடம் என் அம்மா, என் தங்கை, என் அண்ணி என புகழ்து தல்லுவதால் மனைவி மனதில் வெருப்பு வந்துவிடும் அவர் மீது... [You must be registered and logged in to see this image.]


அப்பரம் உனக்கு அவர்கலை கண்டால் ஆகாது என்று நாம் சொல்லுவது மிக மிக தவறு... இதுக்கு மூலக்காரனம் நாம்தான்... [You must be registered and logged in to see this image.]

அதோ போல் அம்மாவிடம் அவல் உசத்தி என்றும் பேசக்கூடாது அதுவும் ஸ்டவ் வெடிக்க காரணம்... [You must be registered and logged in to see this image.]

ஆண்கள் இருவரையும் சமாமாக சமளிப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம் தான்... [You must be registered and logged in to see this image.]

ஆனால் இதில் வெற்றி பெற்று விட்டால் அவன் வாழ்கை என்றும் ஜெயம்..... [You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக