புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிக போனஸ் தரும் அஞ்சல் ஆயுள் காப்பீடு! Poll_c10அதிக போனஸ் தரும் அஞ்சல் ஆயுள் காப்பீடு! Poll_m10அதிக போனஸ் தரும் அஞ்சல் ஆயுள் காப்பீடு! Poll_c10 
30 Posts - 71%
heezulia
அதிக போனஸ் தரும் அஞ்சல் ஆயுள் காப்பீடு! Poll_c10அதிக போனஸ் தரும் அஞ்சல் ஆயுள் காப்பீடு! Poll_m10அதிக போனஸ் தரும் அஞ்சல் ஆயுள் காப்பீடு! Poll_c10 
11 Posts - 26%
mohamed nizamudeen
அதிக போனஸ் தரும் அஞ்சல் ஆயுள் காப்பீடு! Poll_c10அதிக போனஸ் தரும் அஞ்சல் ஆயுள் காப்பீடு! Poll_m10அதிக போனஸ் தரும் அஞ்சல் ஆயுள் காப்பீடு! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிக போனஸ் தரும் அஞ்சல் ஆயுள் காப்பீடு! Poll_c10அதிக போனஸ் தரும் அஞ்சல் ஆயுள் காப்பீடு! Poll_m10அதிக போனஸ் தரும் அஞ்சல் ஆயுள் காப்பீடு! Poll_c10 
72 Posts - 66%
heezulia
அதிக போனஸ் தரும் அஞ்சல் ஆயுள் காப்பீடு! Poll_c10அதிக போனஸ் தரும் அஞ்சல் ஆயுள் காப்பீடு! Poll_m10அதிக போனஸ் தரும் அஞ்சல் ஆயுள் காப்பீடு! Poll_c10 
32 Posts - 29%
mohamed nizamudeen
அதிக போனஸ் தரும் அஞ்சல் ஆயுள் காப்பீடு! Poll_c10அதிக போனஸ் தரும் அஞ்சல் ஆயுள் காப்பீடு! Poll_m10அதிக போனஸ் தரும் அஞ்சல் ஆயுள் காப்பீடு! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
அதிக போனஸ் தரும் அஞ்சல் ஆயுள் காப்பீடு! Poll_c10அதிக போனஸ் தரும் அஞ்சல் ஆயுள் காப்பீடு! Poll_m10அதிக போனஸ் தரும் அஞ்சல் ஆயுள் காப்பீடு! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிக போனஸ் தரும் அஞ்சல் ஆயுள் காப்பீடு!


   
   
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Oct 18, 2016 5:43 pm



தபால்களைக் கொண்டுவருவதும் கொண்டு செல்வதும்தான் அஞ்சல் அலுவலகங்களின் முக்கிய வேலை என்று நாம் நினைக்கிறோம். அஞ்சல் அலுவலகங்கள் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளையும் வழங்குவது பலருக்கும் தெரியாத உண்மை.

இன்று நேற்றல்ல,1884-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதலே ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை வழங்கி வருகின்றன அஞ்சல் அலுவலகங்கள். அஞ்சல் அலுவலகங்களில் எடுக்கப்படும் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்கு அதிக போனஸ் கிடைக்கும் என்பதால்தான் பலரும் இதில் சேர்ந்து பலனடைந்து வருகின்றனர். அஞ்சல் ஆயுள் காப்பீடு குறித்து முழுமையாக  தெரிந்துகொள்ள, சென்னை தலைமை அஞ்சல் அலுவலகத்தின் இயக்குநர் ஏ.சரவணனை சந்தித்தோம். அதுபற்றி விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.  

“அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களைப் பிரபலப்படுத்த ஆகும் செலவு குறைவு என்பதால், அந்தத் தொகை முழுவதும் பாலிசிதாரர்களுக்கு போனஸ் வழியாகச் சென்று சேர்கிறது.
தற்போது, அதிகபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.50 லட்சமாகவும், குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை 20,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இரண்டு வகைகள்!

அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் அரசு ஊழியர்கள், நகர்ப்புற, கிராமப்புற மக்களுக்கு பயனளிக்கக்கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு வகையான திட்டங்கள் உள்ளன. ஒன்று, அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் (PLI). இரண்டாவது, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் (RPLI). முதல் திட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவியுடன் நடைபெறும் நிறுவனங்களின் ஊழியர்களும், இரண்டாவது திட்டத்தில் கிராமப் பகுதிகளில் வசிக்கும் அனைவரும் எடுத்துக் கொள்ளலாம்.

பாலிசி வகைகள்!

அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு என்கிற இரண்டு திட்டங்களில் முழு ஆயுள் காப்பீடு, மாற்றத்தக்க ஆயுள் காப்பீடு, குறித்த கால காப்பீடு, குறித்த கால எதிர்பார்ப்பு காப்பீடு, கணவன் மனைவி குறித்த கால ஆயுள் காப்பீடு, குழந்தைகள் பாலிசி என 6 வகைகள் இருக்கின்றன.

சிறப்பம்சங்கள்!

மற்ற நிறுவனங்கள் அளிக்கும் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களைவிட அஞ்சல் அலுவலகங்களில் அளிக்கப்படும் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில் பல சிறப்பம்சங்கள் உண்டு.

* மற்ற இன்ஷூரன்ஸ் திட்டங்களைவிட குறைந்த பிரீமியம்.

* அதிக போனஸ் (ஒரு லட்சத்துக்கு, ஒரு வருடத்துக்கு சுமார் ரூ.1,500). கட்டும் பிரீமியத்துக்கு வருமான வரிச் சலுகை உண்டு. முதிர்வுத் தொகைக்கு முழு வரி விலக்கு உண்டு.

* மூன்று ஆண்டுகளுக்குப் பின் சுலபமான கடன் வசதி; வாரிசு நியமனம்; தேவைப்பட்டால் வாரிசை மாற்றிக் கொள்ளும் வசதி.  பணியிலிருந்து விலகி விட்டாலும் பாலிசியைத் தொடரலாம்.

* குறைந்தபட்ச காப்பீட்டு தொகை ரூ.20,000. அதிகபட்சம் ரூ.50 லட்சம் வரை ஒருவர் எத்தனை பாலிசிகள் வேண்டுமானாலும் எடுக்கலாம்.

* பிரிமீயத்தை இந்தியாவில் எந்த அஞ்சலகத்திலும் செலுத்தலாம். ஆன்லைன் மூலமாகவும் செலுத்தலாம்.  

அதிக போனஸ் தரும் அஞ்சல் ஆயுள் காப்பீடு! Paas273

கடன் வாங்கலாம்!

அஞ்சல் அலுவலகங்களில் எடுக்கப்படும் அனைத்து வகை பாலிசிகளையும் வங்கி, நிதி நிறுவனங்களில் பிணையமாக வைத்து கடன் பெறும் வசதி உள்ளது. காலவதியான பாலிசிகளை புதுப்பித்துக்கொள்ளலாம். 36 மாதங்கள் வரை பிரிமீயம் செலுத்தப்பட்ட பாலிசிகளுக்கு, அதனுடைய முழுமையான காலத்துக்கும் பிரிமீயம் செலுத்தப்படாவிட்டாலும் பணம் கட்டப் பட்டுள்ள வருடத்தைப் பொறுத்து முதிர்வுத் தொகை போனஸுடன் வழங்கப்படும்.

பிரீமியம் செலுத்தும் முறை!

இந்த காப்பீட்டுத் திட்டங்களுக்கு மாதா மாதம், காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு அடிப்படையில் பிரீமியம் கட்டலாம். பிரீ மியத்தை முன்னதாகவே கட்டும்போது அரை சதவிகிதம் முதல் இரண்டு சதவிகிதம் வரை தள்ளுபடி உண்டு. காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு பிரிமீய முறையில் பிரீமியம் செலுத்துபவர்களுக்கு தள்ளுபடி கிடையாது.

விதிமுறைகள்!

இந்த பாலிசிகளைக் குறைந்தபட்சம் 19 முதல் அதிகபட்சம் 55 வயதுள்ளவர்கள் எடுக்கலாம். பிறப்புச் சான்று இல்லை என்றால் அதிகபட்சம் 45 வயதுக்கு உட்பட் டவர்கள் மட்டுமே இந்த பாலிசியை எடுக்க முடியும். பிறப்புச் சான்று இல்லாதவர்கள் மருத்துவர்களிடம் தோராயமான வயதுச் சான்றிதழை வாங்கித் தரலாம்.  அதில் உண்மைத்தன்மை இல்லை என்று நிரூபணமானால் பாலிசி ரத்தாகும்.

யாருக்குப் பயன்படும்?

முழு ஆயுள் காப்பீடு : அதிக ஆதாயம் எதிர்பார்க்கிறவர்களுக்கும், ஒவ்வொரு மாதம் கட்டும் தொகை குறைவாகவும், முடிவில் கிடைக்கும் தொகை அதிகமாகவும் இருக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கும் இது உகந்தது.


குறித்த கால காப்பீடு : நிதித் திட்ட மிடலை அடிப்படை எண்ணமாக கொண்டவர்களுக்கும், குறுகிய கால சேமிப்பை போல் ஓர் ஆயுள் காப்பீட்டையும் பயன்படுத்த நினைப்பவர்களுக்கும், பணி ஓய்வுக்கு முன்பே பணப்பலன்களை மொத்தமாக அடையவேண்டும் என்று எண்ணுகிறவர்களுக்கும் பொருந்தும்.

எதிர்பார்ப்பு காப்பீடு : அஞ்சல் துறையில் இருந்து குறிப்பிட்ட கால அளவில் இடையிடையே பணம் வந்தால் வசதிப்படும் என நினைப்பவர்களுக்கும், 15/20 வருடங்கள் மட்டுமே முதலீடு செய்ய முடியும் என நினைப்பவர்களுக்கும் இது சரியாக இருக்கும்.

கணவன் மனைவி குறித்த கால ஆயுள் காப்பீடு!

கணவர் / மனைவி எவரேனும் ஒருவர் அரசு / அரசு சார்ந்த பணியில் இருந்தபோதும் இருவரையும் இணைக்கும் இன்ஷூரன்ஸ் பாலம் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும், ஒரு பிரீமியம் இரு காப்பீடு வேண்டும் என
கணக்கிடுபவர்களுக்கும், 5 ஆண்டில் தொடங்கி 20 ஆண்டுவரை எப்போது வேண்டுமானாலும் முதிர்வுத் தொகை வேண்டும் என திட்டமிடுபவர்களுக்கும் இது உகந்த திட்டமாக இருக்கும்.

தமிழகம் முதலிடம்!

அஞ்சல் ஆயுள் காப்பீட்டைப் பொறுத்தவரை கடந்த 2000-01-ம் நிதி ஆண்டிலிருந்து, 2015-16-ம் நிதி ஆண்டு வரை, ஒவ்வொரு நிதி ஆண்டிலும் பாலிசிகளின் எண்ணிக்கை, காப்பீட்டுத் தொகை மற்றும் முதன் முறையாக பாலிசி எடுப்பவர்கள்

செலுத்தும் பிரிமீயம் தொகை என மூன்று பிரிவுகள் அடிப்படையிலும் மற்ற மாநிலங்களைவிட தமிழகம் தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்து வருகிறது” என்று பெருமிதத்துடன் முடித்தார்.

இதுவரை ஆயுள் காப்பீடு பாலிசி எடுக்காதவர்கள் அஞ்சல் அலுவலகத்துக்குப் போகலாமே!
ந.விகடன்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82381
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 18, 2016 6:44 pm

அதிக போனஸ் தரும் அஞ்சல் ஆயுள் காப்பீடு! DnJhNCRfGi4ABybvjObQ+pa27-11
-
அதிக போனஸ் தரும் அஞ்சல் ஆயுள் காப்பீடு! 103459460

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Tue Oct 18, 2016 7:17 pm

அஞ்சல் ஆயுள் காப்பீடு -  இல்லை இதற்கு இணைஈடு.

முகவர்கள் இல்லாததால் பிரிமியம்  தொகையும் குறைவு.

மேலும்  அதிக வருடாந்திர போனஸ்

அவரவர்கள் அருகில் உள்ள எல்லா அஞ்சலகங்களிலும் பிரிமியம் செலுத்தலாம்
.
பிரிமியம் செலுத்திய விவரம்  பாஸ்புத்தகத்தில் குறித்துக் கொடுக்கப்படுகிறது.இது தவிற தனியாக ரசீதும் கொடுக்கப்படுகிறது.

நிறைந்த நம்பகத்தன்மை போன்ற ஏராளமான வசதிகள் இதில் உள்ளன.
Ramalingam K
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Ramalingam K



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Mon Oct 24, 2016 5:42 pm

இதற்க்கு இல்லை ஈடு இணை

SRINIVASAN GOVINDASWAMY
SRINIVASAN GOVINDASWAMY
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 06/09/2016

PostSRINIVASAN GOVINDASWAMY Mon Oct 24, 2016 7:17 pm

தகவலுக்கு நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக