புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசிய செய்திகள் Poll_c10மலேசிய செய்திகள் Poll_m10மலேசிய செய்திகள் Poll_c10 
46 Posts - 47%
heezulia
மலேசிய செய்திகள் Poll_c10மலேசிய செய்திகள் Poll_m10மலேசிய செய்திகள் Poll_c10 
44 Posts - 45%
mohamed nizamudeen
மலேசிய செய்திகள் Poll_c10மலேசிய செய்திகள் Poll_m10மலேசிய செய்திகள் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
மலேசிய செய்திகள் Poll_c10மலேசிய செய்திகள் Poll_m10மலேசிய செய்திகள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மலேசிய செய்திகள் Poll_c10மலேசிய செய்திகள் Poll_m10மலேசிய செய்திகள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மலேசிய செய்திகள் Poll_c10மலேசிய செய்திகள் Poll_m10மலேசிய செய்திகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மலேசிய செய்திகள் Poll_c10மலேசிய செய்திகள் Poll_m10மலேசிய செய்திகள் Poll_c10 
327 Posts - 46%
ayyasamy ram
மலேசிய செய்திகள் Poll_c10மலேசிய செய்திகள் Poll_m10மலேசிய செய்திகள் Poll_c10 
308 Posts - 43%
mohamed nizamudeen
மலேசிய செய்திகள் Poll_c10மலேசிய செய்திகள் Poll_m10மலேசிய செய்திகள் Poll_c10 
26 Posts - 4%
T.N.Balasubramanian
மலேசிய செய்திகள் Poll_c10மலேசிய செய்திகள் Poll_m10மலேசிய செய்திகள் Poll_c10 
17 Posts - 2%
prajai
மலேசிய செய்திகள் Poll_c10மலேசிய செய்திகள் Poll_m10மலேசிய செய்திகள் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
மலேசிய செய்திகள் Poll_c10மலேசிய செய்திகள் Poll_m10மலேசிய செய்திகள் Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
மலேசிய செய்திகள் Poll_c10மலேசிய செய்திகள் Poll_m10மலேசிய செய்திகள் Poll_c10 
5 Posts - 1%
jairam
மலேசிய செய்திகள் Poll_c10மலேசிய செய்திகள் Poll_m10மலேசிய செய்திகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மலேசிய செய்திகள் Poll_c10மலேசிய செய்திகள் Poll_m10மலேசிய செய்திகள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
மலேசிய செய்திகள் Poll_c10மலேசிய செய்திகள் Poll_m10மலேசிய செய்திகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசிய செய்திகள்


   
   

Page 1 of 11 1, 2, 3 ... 9, 10, 11  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 16, 2016 7:42 pm

மீண்டும் புகைமூட்டம் பரவும் வாய்ப்பு!

கோலாலம்பூர் – இந்தோனிசியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ அணைக்கப்படவில்லை என்றால், அதன் அண்டை நாடுகளில் மீண்டும் புகைமூட்டம் (Haze) பரவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

“தற்போது, தென்கிழக்கு நோக்கி காற்று வீசுகின்றது. ஒருவேளை புகைமூட்டம் ஏற்பட்டால், அது காற்றின் மூலம் அண்டை நாடுகளுக்கு வர வாய்ப்புள்ளது” என்று வானிலை ஆய்வு, தட்பவெட்ப நிலை மற்றும் புவி இயற்பியல் முகமை தெரிவித்துள்ளது.

அம்முகமை நேற்று திங்கட்கிழமை செயற்கைக் கோளின் அடிப்படையில் வெளியிட்ட தகவலின் படி, ரியாவில் ரோகான் ஹிலிர் பகுதியில் சுமார் 54 இடங்களில் காட்டுத் தீ எரிவது கண்டறியப்பட்டுள்ளது.



மலேசிய செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 16, 2016 7:43 pm

ஒலிம்பிக்ஸ் : பூப்பந்து – ஆண்கள் இரட்டையர் பிரிவில் மலேசியா வெற்றி!

ரியோ டி ஜெனிரோ – (மலேசிய நேரம் இரவு 9.45 மணி நிலவரம்) சற்று முன் நடைபெற்று முடிந்த ஒலிம்பிக்ஸ் பூப்பந்து விளையாட்டுப் போட்டிகளில், ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் மலேசியாவின் கோ வி ஷெம் – டான் வீ கியோங் இணை வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து இறுதி ஆட்டத்தில் நுழையும் இவர்கள் தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கத்தை மலேசியாவுக்காகப் பெற்றுத் தருவது உறுதியாகியுள்ளது



மலேசிய செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 16, 2016 7:45 pm

ஊழல் விவகாரம்: ‘டிபிகேஎல்’ உயர் அதிகாரி “டத்தோஸ்ரீ” கைது!

புத்ராஜெயா – அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் லஞ்சம் பெற்று, அதிகார துஷ்பிரயோகம் செய்வதைக் கண்டறியும் விசாரணையில், கோலாலம்பூர் மாநகர சபையைச் (டிபிகேஎல்) சேர்ந்த “டத்தோஸ்ரீ” பட்டம் கொண்ட நிர்வாக இயக்குநர் ஒருவர் சிக்கியுள்ளார்.

இன்று செவ்வாய்கிழமை காலை புத்ராஜெயா குற்றிவியல் நீதிமன்றத்திற்கு, மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணைய (எம்ஏசிசி) அதிகாரிகளால், முகம் மறைக்கப்பட்ட நிலையில், அந்த 54 வயது உயரதிகாரி அழைத்து வரப்பட்டார்.

இந்நிலையில், அவரை 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிபதி நிக் இஸ்பஹானி தாஸ்னிம் அனுமதி வழங்கியுள்ளார்.

இந்த வழக்கு, மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் சட்டம், பிரிவு 17 (a), பிரிவு 23 ஆகியவற்றின் கீழ் விசாரணை செய்யப்படவுள்ளதாக எம்ஏசிசியைச் சேர்ந்த பேச்சாளர் தெரிவித்துள்ளார்.



மலேசிய செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 18, 2016 7:02 am

மலேசிய எண்ணெய் கப்பல், இந்தோனேசியாவுக்கு கடத்தல் சிப்பந்திகளின் கதி என்ன?

மலேசியாவுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல், ‘வியர் ஹார்மோனி’. இந்த எண்ணெய் கப்பல் மலேசியாவின் தாஞ்சுங் பெலேபாஸ் துறைமுகத்தில் இருந்து 9 லட்சம் லிட்டர் டீசலை எடுத்துக்கொண்டு, கடந்த திங்கட்கிழமை புறப்பட்டு சென்றது.

இந்த டீசலின் மதிப்பு சுமார் 3 லட்சத்து 92 ஆயிரத்து 795 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.2 கோடியே 63 லட்சத்து 17 ஆயிரம்) ஆகும்.

இந்த கப்பல், இந்தோனேசியா நாட்டுக்கு கடத்தப்பட்டுள்ளது. அங்குள்ள பாடாம் துறைமுகத்தில் அந்த கப்பல் நிற்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கப்பலை கடத்திச் சென்றவர்கள் யார், அவர்களது நிபந்தனைகள் என்னென்ன? சிப்பந்திகளின் கதி என்ன ஆனது என்பது தெரியவரவில்லை. இந்த தகவல்களை மலேசிய அரசு அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது.



மலேசிய செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 18, 2016 7:04 am

பூப்பந்து : கலப்பு இரட்டையர் – மலேசியாவுக்கு வெள்ளிப் பதக்கம் மட்டுமே!

ரியோ டி ஜெனிரோ – அவசரம், அவசரமான ஆட்டம், இடையிடையே காட்டிய பதட்டம் ஆகியவற்றால், ஒலிம்பிக்ஸ் பூப்பந்து போட்டிகளில் கலப்பு இரட்டையர் பிரிவில் மலேசியாவின் சான் பெங் சூன் – கோ லியு யிங் இணை இன்று தங்கப் பதக்கம் பெறும் வாய்ப்பினைக் கோட்டை விட்டது.

இன்று வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்ற போட்டியில் இந்தோனிசியாவின் எல்.நட்சிர் – டி.அகமட் இணைக்கு, கடுமையான போட்டியை மலேசிய இணை வழங்கினாலும், இறுதியில் தோல்வியைத் தழுவியது.

முதல் செட் ஆட்டத்தில் 21-14 புள்ளிக் கணக்கில் தோல்வியைத் தழுவிய மலேசிய இணை, இரண்டாவது செட் ஆட்டத்திலும் 21- 12 புள்ளிக் கணக்கில் தோல்வியைத் தழுவியது.

இதனைத் தொடர்ந்து மலேசியாவுக்கு ஒலிம்பிக்சில் மற்றொரு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. மலேசியா இதுவரை முக்குளிப்பு போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும், சைக்கிள் ஓட்டப் போட்டியொன்றில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளது.

பூப்பந்து போட்டிகளில் ஒலிம்பிக்ஸ் தங்கத்தை வெல்லும் மலேசியாவின் கனவு இன்னும் கலைந்துவிடவில்லை.

நாளை ஆண்கள் இரட்டையர் ஆட்டத்திலும் இறுதி ஆட்டத்தில் மலேசியா மோதுகிறது.

இதற்கிடையில், ஒற்றையர் ஆட்டத்தில் மலேசியாவின் லீ சோங் வெய் அரை இறுதி ஆட்டத்தை நோக்கி முன்னேறியுள்ளார். நாளை வெள்ளிக்கிழமை இரவு நடைபெறும் ஒற்றையருக்கான அரை இறுதி ஆட்டத்தில் அவர் சீனாவின் பலம் பொருந்திய முதல் நிலை ஆட்டக்காரர் லின் டான்’னை சந்திக்கின்றார்.



மலேசிய செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Thu Aug 18, 2016 12:12 pm

மலேசியத் துறைமுகத்திலிருந்து மாயமான 900,000 லிட்டர் டீசல் (1.57 மில்லியன் ரிங்கிட் மதிப்பு) கொண்ட எண்ணெய் கப்பலான வியெர் ஹார்மோனி, ‘வர்த்தகத் தகராறு’ காரணமாக கடத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், அக்கப்பலில் கேப்டன், “நிர்வாகத்தின் உள் பிரச்சினை” காரணமாகத் தான் கப்பலை இந்தோனிசியாவின் பாத்தாமிற்கு எடுத்துச் செல்வதாக, தனது நிர்வாகத்திடம், இரண்டு முறை கூறியதாக ஏஎப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
...........................
ஒலிம்பிக்ஸ் பூப்பந்து போட்டிகளில் கலப்பு இரட்டையர் பிரிவில் மலேசியாவின் சான் பெங் சூன் – கோ லியு யிங் இணை வெள்ளிப் பதக்கம் பெற்றதற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள மலாக்கா அரசு, அவர்களுக்கு 50,000 ரிங்கிட் ஊக்கத் தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது.

பினாங்கைச் சேர்ந்த அவர்கள் இருவருக்கும் அந்தத் தொகை சமமாகப் பிரித்து வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் இட்ரிஸ் ஹாரோன் தெரிவித்துள்ளார்.மேலும், அவர்களுக்கு கூடுதல் ஊக்கத்தொகை வழங்குவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 18, 2016 6:55 pm

குடிநுழைவுத்துறை மையங்களில் கொடுமையோ கொடுமை: கம்போடிய பணிப்பெண்கள் முறைப்பாடு

மலேசிய செய்திகள் 20fe

ஜூரு குடிநுழைவுத்துறை தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்படுவோர் கொடூரமாக நடத்தப்படுவதாகவும் அதன் விளைவாக சிலர் இறந்தும் போனார்கள் என்றும் இரு கம்போடிய பெண்கள் கூறிக்கொள்கின்றனர்.

அவ்விருவரும் மலேசியாவில் பணிப்பெண்களாக இருந்தவர்கள். கம்போடிய மத்திய தொழிலாளர் உரிமை அமைப்பின் முயற்சியின் பலனாக அவ்விருவரும் இப்போது கம்போடியாவுக்குத் திரும்பிச் சென்றிருப்பதாக கம்போடிய டெய்லி நாளேடு கூறியது.

அவர்களில் ஒருவர் சுமார் ஈராண்டுகளாக மலேசியாவில் பணிப்பெண்ணாக பனியாற்றியுள்ளார். இவ்வாண்டு தொடக்கத்தில் அவர் கைது செய்யப்பட்டு ஜூரு-வுக்கு அனுப்பப்பட்டார்.

பணி செய்த இடத்தில் கொடுமைப்படுத்தப்பட்டதால் தப்பியோடிய இவர் அதே கொடுமைகளைத் தடுப்பு முகாமில் அனுபவிக்க நேரிட்டது.

“சிறையில் அதிகாரிகள் சொல்வதைப் புரிந்து நடந்து கொள்ளாவிட்டால் அடி, உதைதான்”, எனக் கடந்த மாதம் அந்நாளேட்டுக்கு அளித்த நேர்காணலில் அப்பெண் கூறினார்.

“இரண்டு கம்போடியர்களும் ஒரு வியட்நாமிய பெண்ணும் திரும்பத் திரும்ப முகத்திலும் நெஞ்சிலும் குத்தப்பட்டு இறந்து போனதைக் கண்ணால் கண்டேன். நாங்கள் அனைவரும் ஒரே இடத்தில்தான் வைக்கப்பட்டிருந்தோம். அம்மூவரும் கடும் சித்தரவதைக்கு ஆளானார்கள்.

“விடிந்ததும் அவர்களை எழுப்பினேன். அவர்கள் உயிருடன் இல்லை”.

இவர் கடும் சித்திரவதைகளுக்கு ஆளாகவில்லை. ஓரளவுக்கு மலாய், ஆங்கில மொழிகள் பேசத் தெரியும் என்பதால் தப்பினார்.

அதன் காரணமாகவே, மற்ற தடுப்புக் கைதிகளை மருத்துவமனைகளுக்கு அனுப்பும்போது அவர்கள் சொல்வதை மொழிபெயர்ப்பதற்கு உதவியாக இவரையும் அனுப்பி வைப்பார்கள். அங்கு மூன்று கம்போடிய பெண்களும் ஒரு வியட்னாமியரும் இறக்கக் கண்டார்.

“ஆக மொத்தம் ஐந்து கம்போடியர்களும் இரண்டு வியட்னாமியரும் இறந்ததற்கு நானே சாட்சி”, என்றாரவர்



மலேசிய செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 20, 2016 4:32 pm

ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கை: போலீசிடமிருந்து தப்ப முயன்ற இருவர் சுட்டுக் கொலை

கெப்போங் நெடுஞ்சாலை அருகே நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை குண்டர் கும்பலைச் சேர்ந்த இருவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

‘ஓப்ஸ் சண்டாஸ் ஹாஸ் 2’ நடவடிக்கையின் படி, காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில், வந்த கார் ஒன்றைத் தடுத்த நிறுத்த முயற்சி செய்துள்ளனர்.

ஆனால் அதிலிருந்தவர்கள் காரை நிறுத்தாமல் தொடர்ந்து தடுப்பை மீறி வேகமாகச் செல்லவே, அவர்களைத் துரத்திக் கொண்டு சென்ற காவல்துறை வாகனம் செலாயாங் – கெப்போங் நெடுஞ்சாலையில், மலேசியக் காடுகள் ஆராய்ச்சி நிறுவனம் (Forest Research Institute of Malaysia) அருகே துரத்திப் பிடித்துள்ளது.

எனினும், அதிலிருந்த இருவர் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும், அதனால் வேறு வழியில்லாமல் காவல்துறையினர் திரும்பச் சுட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்மோதலில், சந்தேக நபர்கள் இருவரும் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரின் சடலமும் கோலாலம்பூர் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அவர்களிடமிருந்து கைத்துப்பாக்கிகளையும், 11 பாக்கெட்டுகள் போதைப் பொருட்களையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதாக சிலாங்கூர் குற்றப்புலனாய்வுத் துறை தலைவர் டத்தோ மொகமட் அட்னான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.



மலேசிய செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 20, 2016 4:36 pm

பூப்பந்து இறுதி ஆட்டம்: இதயம் பத்திரம் மலேசியர்களே – சுகாதாரத்துறை எச்சரிக்கை!

கோலாலம்பூர் – டத்தோ லீ சோங் வேய் பங்கேற்கும் ஒலிம்பிக் பூப்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் இன்று சனிக்கிழமை இரவு, மலேசிய நேரப்படி 8.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், விறுவிறுப்பான இந்த ஆட்டத்தை காண்பவர்கள் தங்கள் இதயத்தையும் பாதுகாத்துக் கொள்வது அவசியம் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

உயர் இரத்த அழுத்தமுள்ளவர்கள், இருதயக் கோளாறு உள்ளவர்கள், இன்றைய ஆட்டத்தின் போது தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செய்து கொள்ளும் படியும் சுகாதாரத்துறை ஆலோசனை கூறியுள்ளது.

“மலேசியர்கள், குறிப்பாக மூத்த குடிமகன்கள் இன்றைய தங்கப் பதக்கத்திற்கான ஆட்டத்தைக் காணும் போது தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளோடு பார்க்க வேண்டும்” என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால் உடனடியாக 999 என்ற எண்ணிற்கு அழைத்து மருத்து உதவி கோரும் படியும் கேட்டுக் கொண்டுள்ளது



மலேசிய செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Sat Aug 20, 2016 5:52 pm

மலேசிய நாட்டு நடப்பு உடணுக்குடன் நன்றி

Sponsored content

PostSponsored content



Page 1 of 11 1, 2, 3 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக