புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜி.எஸ்.டி. திருத்த மசோதா: லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_c10ஜி.எஸ்.டி. திருத்த மசோதா: லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_m10ஜி.எஸ்.டி. திருத்த மசோதா: லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_c10 
21 Posts - 66%
heezulia
ஜி.எஸ்.டி. திருத்த மசோதா: லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_c10ஜி.எஸ்.டி. திருத்த மசோதா: லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_m10ஜி.எஸ்.டி. திருத்த மசோதா: லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜி.எஸ்.டி. திருத்த மசோதா: லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_c10ஜி.எஸ்.டி. திருத்த மசோதா: லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_m10ஜி.எஸ்.டி. திருத்த மசோதா: லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_c10 
63 Posts - 64%
heezulia
ஜி.எஸ்.டி. திருத்த மசோதா: லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_c10ஜி.எஸ்.டி. திருத்த மசோதா: லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_m10ஜி.எஸ்.டி. திருத்த மசோதா: லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
ஜி.எஸ்.டி. திருத்த மசோதா: லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_c10ஜி.எஸ்.டி. திருத்த மசோதா: லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_m10ஜி.எஸ்.டி. திருத்த மசோதா: லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஜி.எஸ்.டி. திருத்த மசோதா: லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_c10ஜி.எஸ்.டி. திருத்த மசோதா: லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_m10ஜி.எஸ்.டி. திருத்த மசோதா: லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜி.எஸ்.டி. திருத்த மசோதா: லோக்சபாவில் நிறைவேற்றம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 09, 2016 7:07 am

புதுடில்லி:
திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி மசோதா லோக்சபாவில் ஒரு
மனதாக நிறைவேறியது.

ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை திருத்த
மசோதா குறித்து பார்லி. லோக்சபாவில் இன்று விவாதம்
நடந்தது. கடந்த சில தினங்களுக்கு முன் ராஜ்யசபாவில்
ஒரு மனதாக இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில்,
இன்று லோக்சபாவில் பிரதமர் மோடி மசோதா குறித்து
ரை ஆற்றினார்.

பின்னர் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ஜி.எஸ்.டி.
திருத்த மசோதா தொடர்பாக எதிர்க்கட்சியினரின்
கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார். இதையடுத்து
ஓட்டெடுப்பு நடப்பதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன்
அறிவித்தார். இதில் தமிழகத்தின் கோரிக்கைகள் நிறை
வேற்றப்பட வில்லை என கூறி அ.தி.மு.க. எம்.பி.க்கள்
வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் ஜி.எஸ்.டி. திருத்த மசோதா மீது லோக்சபாவில் நடந்த
ஓட்டெடுப்பு நடந்தது. இந்த விவாதத்தில் 443 எம்.பி.க்கள் கலந்து
கொண்டனர். இவர்கள் ஆதரவு தெரிவித்ததையடுத்து மசோதா
ஒரு மனதாக நிறைவேறியது.

அ.தி.மு.க வெளிநடப்பு:
லோக்சபாவில் ஜி.எஸ்.டி மசோதா தொடர்பான விவாதத்தின்
போது அ.தி.மு.க எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர். ஓட்டெப்பில்
பங்கேற்பதை தவிர்ப்பதற்காக அ.தி.மு.க வெளிநடப்பு செய்துள்ளது.
ராஜ்சபாவில் ஜி.எஸ்.டி மசோதா ஓட்டெடுப்பிலும் அ.தி.மு.க
பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து என்ன?

பெரிதும் எதிர்பாக்கப்பட்ட ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும
சேவை வரி தொடர்பான திருத்த மசோதா பார்லி. இரு
அவைகளிலும் ஒரு மனதாக நிறைவேற்றியது. இதையடுத்து,
இந்த மசோதா, மாநில சட்டசபைகளின் ஒப்புதலுக்கும் அனுப்பி
வைக்கப்படும். இறுதியாக ஜனாதிபதி ஒப்புதல் அளித்த உடன்
அமலுக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராகுல் கருத்து:

ஜி.எஸ்.டி மசோதா நிறைவேறியது நாட்டின் வளர்ச்சிக்கு உதவும்
என எண்ணுகிறேன். ஜி.எஸ்.டி மசோதாவில் எங்களுக்கும்
பா.ஜ. அரசிற்கும் இடையே 3 முக்கிய திருத்தங்களில் கருத்து
வேறுபாடு நிலவியது. அதனை விவாதித்து மாற்றம் செய்தோம்.
தற்போது 18 சதவீத வரி என்பதில் எங்களுக்கு முரண்பாடு உள்ளது.
அதை டிசம்பரில் நடக்கும் பார்லிமென்ட் கூட்டத்தொடரில்
விவாதிப்போம்.

——————————–
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 09, 2016 7:08 am

ஜிஎஸ்டி அமலுக்கு வருவதால் தமிழகத்துக்கு ஆண்டுதோறும் ரூ.9 ஆயிரம் கோடி இழப்பு: மக்களவையில் அதிமுக கவலை
-

சரக்கு, சேவை வரிகள் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்துவதால் ஆண்டுதோறும் மாநிலத்துக்கு ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்று மக்களவையில் அதிமுக கவலை தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, மக்களவையில் ஜிஎஸ்டி மசோதா மீது நடைபெற்ற வாக்கெடுப்பில் பங்கேற்காமல் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

மாநிலங்களவையில் கடந்த வாரம் ஜிஎஸ்டி மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட போது அதற்கு ஆட்சேபம் தெரிவித்து அதிமுக வெளிநடப்பு செய்தது. இந்நிலையில், மக்களவையில் திங்கள்கிழமை மாலையில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டது.

அலட்சியப் போக்கு:

முன்னதாக, இந்த மசோதா மீதான விவாதம் திங்கள்கிழமை மாலையில் தொடங்கியது. அப்போது அதிமுக சார்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் டாக்டர் பி. வேணுகோபால் பேசியது:

உற்பத்தி சார்ந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அந்த வகையில், ஜிஎஸ்டி சட்டம் அமலுக்கு வருவதால் உற்பத்தி மாநிலமான தமிழகத்தின் உழைப்பை விலையாகக் கொடுத்து, சரக்குகளின் பயனைப் பெறும் மாநிலங்கள் அதிகம் பலனடையும். ஜிஎஸ்டி வரைவு மசோதாவில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி பிரதமருக்கும் மத்திய நிதியமைச்சருக்கும் தமிழக முதல்வர் பல முறை கடிதங்கள் எழுதினார். ஆனால், அவற்றை மத்திய அரசு கவனத்தில் கொள்ளவில்லை.

கூட்டாட்சி முறையிலான நமது நாட்டில் மாநிலங்களின் நிதி சுயாட்சியை சமரசம் செய்து கொள்ளும் வகையிலும், மத்திய அரசுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கும் வகையிலும் ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்கும் முடிவை தமிழகம் எதிர்த்தது.

பெட்ரோலிய பொருள்கள் மீதான வரி விதிப்பு முறையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரக் கூடாது என்று தமிழகம் வற்புறுத்தியது.

ஆனால், ஜிஎஸ்டி கவுன்சிலை உருவாக்கும் போது அது பற்றி தீர்மானிக்கலாம் என்ற மத்திய அரசின் யோசனைக்கு தமிழகம் ஆட்சேபம் தெரிவித்தது. மக்களின் நலன் கருதி, புகையிலைப் பொருள்கள் மீது கூடுதல் வரி விதிக்கும் அதிகாரத்தை மாநிலங்களுக்கு தர வேண்டும் என்று தமிழகம் யோசனை கூறியது. அதையும் மத்திய அரசு ஏற்காமல் அலட்சியமாக இருந்தது.

கோரிக்கைகள் என்ன?: ஜிஎஸ்டி சட்ட அமலாக்கத்தால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீட்டை ஐந்து ஆண்டுகளுக்கு வழங்க மத்திய அரசு யோசனை கூறியது. ஆனால், உற்பத்தி மாநிலங்களின் நலன் கருதி இந்த இழப்பீட்டை நிரந்தரமாக வழங்க வேண்டும் என்று தமிழகம் கோரியது. ஆனால், அதை மத்திய அரசு ஏற்கவில்லை.

ஜிஎஸ்டி சட்டம் அமலுக்கு வருவதால் தமிழ்நாட்டுக்கு ஆண்டுதோறும் ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். மாநிலங்களுக்கு இடையே விநியோகிக்கப்படும் சரக்குகளுக்கு விதிக்கப்படும் மத்திய ஜிஎஸ்டியில் நான்கு சதவீதத்தை மாநிலங்களே வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.

அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுக் கூட்டத்தில் "ரூ.1.5 கோடி வரை வருவாய் ஈட்டும் தொழில் நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் உரிமை மாநிலங்களிடம் மட்டும் இருக்க வேண்டும்' என்று தமிழகம் வலியுறுத்தியது. ஆனால், அதை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை.

இதேபோல, ரூ.25 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ள விற்பனையாளர்கள் ஜிஎஸ்டி பதிவு வரம்புக்குள் வரக் கூடாது என்றும் தமிழகம் கூறியது. அது குறித்து மத்திய நிதியமைச்சர் தெளிவுபடுத்தவில்லை. மாநிலங்களவையில் முன்மொழிந்த திருத்தங்களை மக்களவையில் நிறைவேற்றுவதற்கு முன்பாக மாநிலங்களின் நிதி சுயாட்சியைப் பாதுகாக்க உரிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றார் வேணுகோபால். இதைத் தொடர்ந்து "உறுப்பினர்' என்ற முறையில் மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை பேசுகையில், "ஜிஎஸ்டி அமலாக்கத்தின் போது மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஐந்து ஆண்டுகளுக்கு மட்டும் அளிக்காமல் நிரந்தரமாக மத்திய அரசு வழங்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.

வெளிநடப்பு: இந்த விவகாரத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அளித்த பதில் அதிமுக உறுப்பினர்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை. இதையடுத்து, ஜிஎஸ்டி மசோதா தொடர்பான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Tue Aug 09, 2016 10:18 am

ஜி.எஸ்.டி. திருத்த மசோதா: லோக்சபாவில் நிறைவேற்றம் 103459460

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Aug 10, 2016 6:49 pm

நடமுறையில் வரும்போது அதன் நன்மைதனை பார்ப்போம். நாடுபூரா ஒரே விலை நிலை என கொண்டு வருவது வரவேற்க தக்கதே.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக