புதிய பதிவுகள்
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Today at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 18:47

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 16:58

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:43

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 16:16

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 16:15

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:38

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:21

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:56

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:23

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 14:11

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:33

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10மனக்கதவை கவனியுங்கள்! Poll_m10மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10 
7 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10மனக்கதவை கவனியுங்கள்! Poll_m10மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10 
44 Posts - 64%
heezulia
மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10மனக்கதவை கவனியுங்கள்! Poll_m10மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10 
21 Posts - 30%
T.N.Balasubramanian
மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10மனக்கதவை கவனியுங்கள்! Poll_m10மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10மனக்கதவை கவனியுங்கள்! Poll_m10மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனக்கதவை கவனியுங்கள்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun 17 Apr 2016 - 12:40

அதிஷ்டம் எப்போது வேண்டுமானாலும் கதவை தட்டும் நாம்தான் திறக்கத் தயாராக இருக்க வேண்டும் என்ற பழமொழி உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

நான் சொல்லப் போகிற புதுமொழி என்ன தெரியுமா? வெற்றியை அடைய விரும்பினால், மனக்கதவை எப்போது திறக்கவேண்டும்? எப்போது மூடி வைக்க வேண்டும்? என்பதை நீங்கள் அவசியம் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள் என்பதுதான்.

அரசவை ஒன்றில் புத்திசாலியான அமைச்சர் ஒருவர் இருந்தார். மன்னருக்கு எல்லாவிதத்திலும் நல்ல ஆலோசனைகளை சொல்லக்கூடியவர் அவர். அந்த அமைச்சர் ஒருநாள், தனக்கு மிகவும் வயதாகிவிட்டதால் பணியிலிருந்து விலகி புனித யாத்திரை செல்ல விரும்புவதாக அரசரிடம் சொன்னார்.

மிகவும் அனுபவம் வாய்ந்த அமைச்சரை இழக்க விரும்பாத மன்னர், தயங்கினார். அதனைப் புரிந்து கொண்ட மந்திரி 'மன்னா, நான் புறப்படுவதற்கு முன், அறிவும் புத்திசாலித்தனமும் உள்ள இளைஞன் ஒருவனை உங்களுக்கு அமைச்சராக்கிவிட்டு போகிறேன்' என்று வாக்குறுதி தந்தார்.

மறுநாளே, 'அமைச்சர் பதவிக்கு தகுதியான இளைஞர்கள் தேவை' என்று அறிவிக்கச் செய்தார், மூத்த அமைச்சர். அந்த அறிவிப்பைக் கேட்டுவிட்டு, ஏராளமானோர் வந்தார்கள்.மூத்த அமைச்ர், அந்த இளைஞர்கள் மத்தியில் நின்று பேசத் தொடங்கினார்.

'வந்திருக்கும் உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். அமைச்சராகப் பொறுப்பேற்கும் தகுதி யாருக்கு இருக்கிறது என்பதை அறிந்திட, ஒரு போட்டி நடக்க இருக்கிறது. அதில் கலந்து கொள்வதற்கு எல்லோரும் பக்கத்தில் உள்ள பெரிய மைதானத்துக்கு வரவேண்டும். இதில் மிக முக்கியமான விஷயம், அந்த மைதானத்தின் வாசல் கதவு மிக மிக பிரமாண்டமானது.

பத்து வீரர்கள் சேர்ந்தாலும் திறப்பது மிகவும் கடினம். அதோடு, அந்தக் கதவை திறந்து பல ஆண்டுகள் ஆவதால், அது மிகவும் இறுகிக் கிடக்கிறது. அந்தக் கதவை திறந்தால மட்டுமே நீங்கள் அங்கே வரமுடியும்! எல்லோரும் தயாராகுங்கள்!

இன்னொரு முக்கியமான விஷயம். நீங்கள் அதைக் கூட்டாகச் சேர்ந்து செய்யக் கூடாது. தனித்தனியாகவே திறக்க முயற்சிக்க வேண்டும்! அப்படி யாரெல்லாம் வந்து சேருகிறீர்களோ, அவர்களுக்கு மட்டுமே போட்டி நடக்கும்'

அமைச்சர் சொன்னதையெல்லாம் கேட்ட இளைஞர்களில் சிலர், மாபெரும் கதவைத் திறப்பது தங்களால் முடியாது என்று அப்போதே தீர்மானித்து வெளியேறிவிட்டார்கள்.

மற்றவர்கள் மைதானத்துக்குச் செல்லும் வழியில் மன்னனின் வீரர்கள் அங்கும் இங்குமாக நின்று அந்தக் கதவின் பிரமாண்டம் பற்றியும் அதைத் திறப்பது எவ்வளவு கடினம் என்பதையும் பேசிக் கொண்டிருந்தார்கள். அதையெல்லாம் கேட்டதும் மேலும் நிறையப்பேர் விலகினார்கள்.

இப்படியே குறைந்து குறைந்து அந்த மைதானத்தின் அருகே போனவர்கள் பத்துப்பேர் மட்டும்தான். அவர்களில் ஐவர், அந்தக் கதவைப் பார்த்ததுமே மிரண்டு போய் திரும்பினார்கள். அந்தக் கதவுக்குப் பக்கத்தில் போய் நின்ற மூவர் யானைக்குப் பக்கத்தில் நிற்கும் சுண்டெலிபோல கதவுக்கு அருகே தாங்கள் இருப்பதாக உணர்ந்து பின்வாங்கினார்கள்.

கடைசியில் தைரியமாக இருந்த இருவரில் ஒருவன், கதவை நெருங்காமலே நின்று ஏதேதோ கணக்குகள் போட்டுக் குழம்ப ஆரம்பித்தான். எஞ்சிய ஒரே இளைஞன் நேராகக் கதவருகே சென்றான். கதவைத் திறக்கும் விதமாக அதைத் தள்ளினான். அவ்வளவுதான். சட்டென்று திறந்தது கதவு. அதன் மறுபக்கம், அரசனும் அமைச்சரும் நின்று கொண்டிருந்தார்கள்.

'மன்னா, இவன்தான் அமைச்சராக இருக்கத் தகுதியானவன்!' சொன்ன அமைச்சரிடம், 'எப்படித் தீர்மானித்தீர்கள்?' என்று கேட்டார் அரசர்.

'மன்னா, கேட்கவேண்டியதை கேட்காமல் இருப்பதும் தவறு கேட்கக்கூடாததை கேட்பதும் தவறு. அதேபோல, அவசியம் இல்லாததை நினைத்துக் குழம்புவதும், அவசியமானவற்றை கவனிக்காமல் இருப்பதும் தவறு.
மைதானத்தின் கதவைப் பற்றி கேட்டது, கண்டதை மட்டுமே வைத்து அதைத் திறக்க முடியாது என்று தாங்களாகவே தீர்மானித்து மிரண்டவர்கள் பின்வாங்கிவிட்டார்கள்.

நேரில் சென்றவர்களி்ல அதன் அளவைப் பார்த்துத் திகைத்தவர்களும் விலகிவிட்டார்கள். கடைசியாக இருந்த இருவரில் ஒருவன். கதவை எப்படி திறப்பது என்பதற்கு கணித அறிவைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டான். இவன் மட்டுமே கதவின் தன்மையை அறிந்து திறக்க வேண்டும் என்ற சரியான தீர்மானத்தை எடுத்து, கதவை நெருங்கித் திறப்பதற்காகத் தள்ளினான்.

எதைப் பற்றியும் முழுமையாகத் தெரியாமல் மற்றவர்கள் சொல்வதை வைத்தே தீர்மானிப்பது வெற்றிக்கு வழி செய்யாது. அதோடு, தன்னம்பிக்கையை இழக்கச் செய்யும் எந்த விஷயத்தையும் லட்சியப் பாதையில் செல்பவன் காதில் வாங்குவதோ, அதை மனதுக்குள் பதிப்பதோ கூடாது. முயற்சியில் மட்டுமே முழு கவனம் இருந்தால் எதிலும் வெல்லமுடியும். எந்த விஷயத்தையும் கவன் சிதறல் இல்லாமல் யோசிக்கவும் முடியும்.

இந்த எல்லா தகுதிகளுமே இவனுக்கு இருக்கிறது என்பதால்தான் இவனை அமைச்சனாக தேர்ந்தெடுத்தேன்'
மூத்த அமைச்சர் சொன்னது, அரசனுக்கு முழுமையாகப் புரிந்தது. உங்களுக்கும் புரிந்ததுதானே! தேவையான விஷயங்களை மட்டுமே மனக்கதவை திறந்து உள்ளே அனுப்புங்கள்.தேவையற்றவை என்றால் மனக்கதவைப் பூட்டியே வையுங்கள். அப்படிச் செய்தால், உங்கள் ஆழ்மனதின் ஆற்றல் உங்களது வெற்றிக்கான பாதையை தானே அமைத்துக் கொடுக்கும்.

விஜயலட்சுமி பந்தையன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82353
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 17 Apr 2016 - 14:26

மனக்கதவை கவனியுங்கள்! 4Q3o77k9Q2Gwq5umUL6L+SupperTamilreactionfbcomment

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக