புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் இலக்கியத்தில் அழகு ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10தமிழ் இலக்கியத்தில் அழகு ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10தமிழ் இலக்கியத்தில் அழகு ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
தமிழ் இலக்கியத்தில் அழகு ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10தமிழ் இலக்கியத்தில் அழகு ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10தமிழ் இலக்கியத்தில் அழகு ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
தமிழ் இலக்கியத்தில் அழகு ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10தமிழ் இலக்கியத்தில் அழகு ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10தமிழ் இலக்கியத்தில் அழகு ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 4%
Baarushree
தமிழ் இலக்கியத்தில் அழகு ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10தமிழ் இலக்கியத்தில் அழகு ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10தமிழ் இலக்கியத்தில் அழகு ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
தமிழ் இலக்கியத்தில் அழகு ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10தமிழ் இலக்கியத்தில் அழகு ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10தமிழ் இலக்கியத்தில் அழகு ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 3%
viyasan
தமிழ் இலக்கியத்தில் அழகு ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10தமிழ் இலக்கியத்தில் அழகு ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10தமிழ் இலக்கியத்தில் அழகு ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 3%
prajai
தமிழ் இலக்கியத்தில் அழகு ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10தமிழ் இலக்கியத்தில் அழகு ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10தமிழ் இலக்கியத்தில் அழகு ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 3%
Rutu
தமிழ் இலக்கியத்தில் அழகு ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10தமிழ் இலக்கியத்தில் அழகு ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10தமிழ் இலக்கியத்தில் அழகு ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
சிவா
தமிழ் இலக்கியத்தில் அழகு ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10தமிழ் இலக்கியத்தில் அழகு ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10தமிழ் இலக்கியத்தில் அழகு ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
manikavi
தமிழ் இலக்கியத்தில் அழகு ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10தமிழ் இலக்கியத்தில் அழகு ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10தமிழ் இலக்கியத்தில் அழகு ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் இலக்கியத்தில் அழகு ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10தமிழ் இலக்கியத்தில் அழகு ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10தமிழ் இலக்கியத்தில் அழகு ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
24 Posts - 77%
ரா.ரமேஷ்குமார்
தமிழ் இலக்கியத்தில் அழகு ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10தமிழ் இலக்கியத்தில் அழகு ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10தமிழ் இலக்கியத்தில் அழகு ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 6%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் இலக்கியத்தில் அழகு ! கவிஞர் இரா .இரவி !

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Jun 21, 2015 8:57 am

தமிழ் இலக்கியத்தில் அழகு !
கவிஞர் இரா .இரவி !
தமிழ் என்ற சொல்லே அழகு. தமிழ் இலக்கியம் என்றாலே அழகு தான். அழகு என்றாலே இயற்கை. இயற்கை என்றால் அழகு. சங்க இலக்கியம் என்பதே ஐந்திணைகளான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை போன்ற நிலங்களால் கட்டமைக்கப்பட்டவை. இளங்கோ அடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தில் வர்ணனை பாடல்கள் அழகையே படம் பிடித்தும் காட்டும்.
அழகு என்ற சொல்லை அனைவரும் விரும்புவர். நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று சொன்னால் அனைவரும் அதனை விரும்புவார்கள். அழகை விரும்பாதவர் யாருமில்லை. சங்க இலக்கியத்தில் இரண்டு மான்கள், தண்ணீர் கொஞ்சமாக இருப்பதால் ஆண் மான் குடிக்கட்டும் என்று பெண் மானும், பெண் மான் குடிக்கட்டும் என்று ஆண் மானும் தண்ணீரை குடிக்காமல் குடிப்பது போல பாவனை செய்யும் காட்சியே அழகு. விட்டுக் கொடுத்து வாழ வேண்டும் என்ற அக அழகை உணர்த்தும் உன்னத இலக்கியம் தமிழ் இலக்கியம்.
இறையனார் பாடிய புகழ்பெற்ற பாடலான திருவிளையாடல் படத்தில் இடம் பெற்ற பாடல் வரிகள் அழகை விவரிக்கும் பாடல் தான்.
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே.
(குறுந்தொகை-2; திணை : குறிஞ்சித்திணை )
பக்தி இலக்கியமான ஆண்டாள் பாடிய திருப்பாவை பாடல்கள் முழுவதும் அழகை உணர்த்தும் காட்சிகள் மிகுந்த பாடல்கள் உள்ளன.
மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் நாரா யணனே நமக்கே பறைதருவான்
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்!
மதி நிறைந்த என்று முழு நிலவை வர்ணிக்கும் அழகு மிக்க வரிகள்.
ஆறு வயது முதல் அறுபது வயது வரை அனைவரும் ரசிப்பது அழகு. அழகை வெறுப்பவர் உலகில் ஒருவரும் இல்லை.
மகாகவி பாரதியார் கவிதைகளில் அழகியல் ஆதிக்கம் அதிகம் என்றே சொல்லலாம். பல கவிதைகள் அழகையே பாடும்.
செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே
தமிழ் இலக்கியத்தில் உவமை அழகு, அணி அழகு, சொல் அழகு, பொருள் அழகு என்ற பலவகை அழகுகளின் சுரங்கம் தான். அள்ள அள்ளக் குறையாத அட்சயப் பாத்திரம் போல தமிழ் இலக்கியம், படிக்கப் படிக்க காட்சியில் வருவது அழகியலே!
சங்க காலம் மட்டுமல்ல, இக்காலக் கவிஞர்களும் அழகியலையே கவிதையாக்கி வருகின்றனர். நிலவு பற்றி பாடாத கவிஞர் இல்லை. நிலவு பற்றி பாடாதவர் கவிஞரே இல்லை என்பது உண்மை. எல்லாக் கவிஞர்களும் நிலவு பற்றி ஒரு கவிதையாவது எழுதி விடுவார்கள். நிலவு என்றாலே அழகு. அழகு என்றாலே நிலவு. நிலவை ரசித்தால் பசியும் பறந்து விடும்.
நிலவு குறித்து முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் எழுதிய கவிதையை இணையத்தில் வாசித்த போது பிரமித்தேன். வாசித்ததும் அப்படியே மனதில் பதிந்தது. திரு. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் நல்ல கவிஞர். அவர் கதை, கட்டுரை என்று தளம் மாறி முத்திரை பதித்து வந்தாலும் அவர் கவிதையில் இன்னும் முத்திரை பதிக்க வேண்டும் என்பதே எனது ஆசை.
இதோ அவர் கவிதை!
அமைதியாக வருகின்ற நிலவல்லவா
இரவெல்லாம் நிலைத்து நிற்கிறது
இடி எனும் தண்டோரா போட்டுக் கொண்டு
வரும் மின்னல் நொடியில் மறைந்து விடுகிறது!
நிறைகுடம் தளும்பாது என்ற பழமொழியை நினைவூட்டும் விதமாகவும், நிலவையும், மின்னலையும் காட்சிப்படுத்தும் விதமாகவும் அமைந்த கவிதை அழகோ அழகு. படித்ததும் மனதில் பதியும் கவிதையே சிறந்த கவிதை ஆகும்.
கவிஞர் வைரமுத்து அவர்கள் திரைப்படத்திற்காக எழுதிய முதல் பாடல் அழகியல் சார்ந்தது.
இது ஒரு பொன்மாலை பொழுது
வானமகள், நாணுகிறாள்
வேறு உடை, பூணுகிறாள்
இது ஒரு பொன்மாலை பொழுது
ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்கு பாலமிடும்
பாடும் பறவைகள் தாளமிடும்
பூமரங்கள், சாமரங்கள்... வீசாதோ
வானம் எனக்கொரு போதி மரம்...
நாளும் எனக்கது சேதி தரும்
ஒரு நாள் உலகம் நீதி பெறும்
திருநாள் நிகழும் தேதி வரும்
கேள்விகளால், வேள்விகளை. நான் செய்தேன்.
இப்படி பல பாடல்கள் அழகியல் தொடர்பாகவே எழுதி உள்ளார். மற்றொரு பாடல் ஒன்று.
பனி விழும் மலர் வனம்
உன் பார்வை ஒரு வரம்
இனிவரும் முனிவரும்
தடுமாறும் கனிமரம்
உன் பார்வை.. ஒரு வரம்.
சேலை மூடும் இளஞ்சோலை
மாலை சூடும் மலர்மாலை
இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளி விடும்.. இளமையின் கனவுகள் விழியோரம்
துளிர் விடும் கைகள் இடைகளில் நெளிகையில் இடைவெளி குறைகையில் எரியும் விளக்கும் சிரித்து கண்கள் மூடும்
. இப்படி அழகியல் தொடர்பான பாடல்கள் பட்டியல் இட்டால் அது நீளும்.
இனிய நண்பர் வித்தகக் கவிஞர் பா. விஜய் அவர்களுக்கு தேசிய விருது பெற்ற பாடலான்
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே! ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே!
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்,
இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!
மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ! அது பனியோ! நீ மோதிவிடு!
உள்ளம் என்பது எப்போதும்
உடைந்து போகக்கூடாது,
என்ன இந்த வாழ்க்கை என்ற
எண்ணம் தோன்றக்கூடாது!
எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயமில்லை சொல்லுங்கள்!
காலப் போக்கில் காயமெல்லாம்
மறைந்து போகும் மாயங்கள்!
உளி தாங்கும் கற்கள் தானே
மண் மீது சிலையாகும், வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்!
யாருக்கில்லைப் போராட்டம்!
கண்ணில் என்ன நீரோட்டம்!
ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்!
வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போல சுவாசிப்போம்!
இலட்சம் கனவு கண்ணோடு
இலட்சியங்கள் நெஞ்சோடு,
உன்னை வெல்ல யாரும் இல்லை
உறுதியோடு போராடு!
மனிதா! உன் மனதைக் கீறி
விதை போடு மரமாகும்
அவமானம் படு தோல்வி
எல்லாமே உரமாகும்!
தோல்வியின்றி வரலாறா!
துக்கம் என்ன என் தோழா!
ஒரு முடிவிருந்தால்
அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்!
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே!
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!
இந்தப்பாடல் தன்னம்பிக்கை விதைக்கும் பாடலாக இருந்த போதும், மனதை அழகாக்கும் பாடல்.
கவிஞர் நா. முத்துக்குமாருக்கு இரண்டாவது தேசிய விருது பெற்ற பாடலான முதல் வரியே அழகே என்று தான் தொடங்கும். சைவம் திரைப்படத்தில் இடம் பெற்றது.
அழகேஅழகே எதுவும் அழகே
அழகே அழகே எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே
மழை மட்டுமா அழகு ! சுடும் வெயில் கூட ஒரு அழகு !
மலர் மட்டுமா அழகு ! விழும் இலை கூட ஒரு அழகு !
புன்னகை வீசிடும் கார்முகில் அழகு !
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு !
நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு !
உண்மை அதுதான் நீதான் அழகு !
குயிலிசை அது பாடிட � ஸ்வர வரிசைகள் தேவையா?
மயில் நடனங்கள் ஆடிட � ஜதி ஒலிகளும் தேவையா?
நதி நடந்தே சென்றிட வழித்துணைதான் தேவையா ?
கடல் அலை அது பேசிட மொழி இலக்கணம் அது தேவையா?
இயற்கையோடு இணைந்தால் உலகம் முழுதும் அழகு !
கவலை யாவும் மறந்தால் இந்த வாழ்கை முழுதும் அழகு !
இந்தப் பாடல் பாடிய பாடகர் உன்னிகிருஷ்ணன் மகள் சிறுமி உத்ரா பாடிய முதல் பாடலுக்கே, தந்தையைப் போல தேசிய விருது வாங்கித் தந்த பாடல், அழகே ... அழகே ... பாடல் தான்.
கம்ப இராமாயணத்தில் ஆயிரக்கணக்கான வரிகள் இருந்தாலும் ஆயிரக்கணக்கானோரின் மனதில் பதிந்த இரண்டு வரிகள் உணர்த்துவதும் அழகு தொடர்பானவை தான்.
அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்
சங்க காலம் தொடங்கி, இன்றைய கணினி காலம் வரை கவிஞர்களின் பாடுபொருள் அழகு தான். என்னுடைய ஹைக்கூ கவிதைகளும் அழகை உணர்த்தி இருக்கின்றன.
( கவிஞர் இரா .இரவி ஹைக்கூ ) அமாவாசையன்று
நிலவு
எதிர் வீட்டு சன்னலில் !
வானவில்
நகர்வலம்
வண்ணத்துப் பூச்சி !
வனப்பு அதிகம்
வாழும் நேரம் குறைவு
வானவில் !
விடிய விடிய தவம்
விடிந்ததும் மரணம்
மலரில் பனித்துளி !
பூக்களைப் பறிக்காதீர்
படித்ததும் பறித்தனர்
படித்தவர்கள்?
என் போன்று பல ஹைக்கூ கவிஞர்கள் சப்பானிய ஹைக்கூ கவிஞர்களுக்கு சவால் விடும் வகையில் மிக அழகாக படைத்து வருகின்றனர்.
புற அழகு மட்டுமல்ல, அக அழகும் அழகு தான். காந்தியடிகளின் அக அழகை உணர்த்தும் திருக்குறள்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
தந்தை பெரியாரின் அக அழகை உணர்ந்தும் திருக்குறள்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
முதல்வரானதும் இந்த ஆட்சி பெரியாருக்கு காணிக்கை என்று சொன்ன அறிஞர் அண்ணாவின் மன அழகை உணர்த்தும் திருக்குறள்.
நன்றி மறப்பது நன்றுஅன்று நன்றுஅல்லது
அன்றே மறப்பது நன்று.
தமிழ் இலக்கியத்தில் அன்றும் இன்றும் அழகு கொட்டிக் கிடக்கின்றது .ரசிக்க வாருகள் .ரசித்தால் இதயம் இதமாகும். வாழ்க்கை வசமாகும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக