புதிய பதிவுகள்
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Today at 5:32 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:19 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உசேன் போல்ட்  Poll_c10உசேன் போல்ட்  Poll_m10உசேன் போல்ட்  Poll_c10 
76 Posts - 51%
heezulia
உசேன் போல்ட்  Poll_c10உசேன் போல்ட்  Poll_m10உசேன் போல்ட்  Poll_c10 
59 Posts - 40%
T.N.Balasubramanian
உசேன் போல்ட்  Poll_c10உசேன் போல்ட்  Poll_m10உசேன் போல்ட்  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
உசேன் போல்ட்  Poll_c10உசேன் போல்ட்  Poll_m10உசேன் போல்ட்  Poll_c10 
3 Posts - 2%
Guna.D
உசேன் போல்ட்  Poll_c10உசேன் போல்ட்  Poll_m10உசேன் போல்ட்  Poll_c10 
1 Post - 1%
Shivanya
உசேன் போல்ட்  Poll_c10உசேன் போல்ட்  Poll_m10உசேன் போல்ட்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உசேன் போல்ட்  Poll_c10உசேன் போல்ட்  Poll_m10உசேன் போல்ட்  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
உசேன் போல்ட்  Poll_c10உசேன் போல்ட்  Poll_m10உசேன் போல்ட்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உசேன் போல்ட்  Poll_c10உசேன் போல்ட்  Poll_m10உசேன் போல்ட்  Poll_c10 
261 Posts - 48%
ayyasamy ram
உசேன் போல்ட்  Poll_c10உசேன் போல்ட்  Poll_m10உசேன் போல்ட்  Poll_c10 
217 Posts - 40%
mohamed nizamudeen
உசேன் போல்ட்  Poll_c10உசேன் போல்ட்  Poll_m10உசேன் போல்ட்  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
உசேன் போல்ட்  Poll_c10உசேன் போல்ட்  Poll_m10உசேன் போல்ட்  Poll_c10 
15 Posts - 3%
prajai
உசேன் போல்ட்  Poll_c10உசேன் போல்ட்  Poll_m10உசேன் போல்ட்  Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
உசேன் போல்ட்  Poll_c10உசேன் போல்ட்  Poll_m10உசேன் போல்ட்  Poll_c10 
9 Posts - 2%
jairam
உசேன் போல்ட்  Poll_c10உசேன் போல்ட்  Poll_m10உசேன் போல்ட்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
உசேன் போல்ட்  Poll_c10உசேன் போல்ட்  Poll_m10உசேன் போல்ட்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உசேன் போல்ட்  Poll_c10உசேன் போல்ட்  Poll_m10உசேன் போல்ட்  Poll_c10 
4 Posts - 1%
Baarushree
உசேன் போல்ட்  Poll_c10உசேன் போல்ட்  Poll_m10உசேன் போல்ட்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உசேன் போல்ட்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 10, 2015 9:29 pm

உசேன் போல்ட்  P88s

கரீபியன் தீவுவாசிகளுக்கு கிரிக்கெட்டும் தடகளமும் இரண்டு 'கால்கள்’. சிறுவன் உசேன் போல்ட்டுக்கு கிரிக்கெட் மீது காதல். எட்டு வயசுக்கு ஓங்குதாங்காக ஒரு தென்னைமரம்போல வளர்ந்திருந்த உசேன் வேகமாக ஓடி வந்து பந்து வீசினால், ஸ்டம்ப்கள் தெறிக்கும். ஆனால், போல்ட்டின் விக்கெட்டை அவனது பள்ளி ஆசிரியர் ஒருவர், 'சிக்கன்’ ஆசை காட்டிச் சாய்த்தார்.

'நீ பள்ளிகளுக்கு இடையிலான ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்’ என இழுத்தார். 'அதெல்லாம் எனக்குச் சரிவராது சார்’ என போல்ட் மறுக்க, 'பந்து வீசும்போது நீ ஓடிவரும் வேகம் பிரமாதம் போல்ட். ஓடினால் இன்று நீ ஜெயிப்பாய். ஜெயித்தால், உனக்கு அருமையான மதிய உணவு ஏற்பாடு செய்கிறேன்’ என ஆசிரியர் சொல்ல, போல்ட்டின் கண்களில் சிக்கன், வறுத்த உருளைக்கிழங்கு, அரிசிச் சோறு எல்லாம் மிதந்தன. அதே நினைப்புடன் பந்தயத்தில் கலந்துகொண்டான். முதல் வெற்றி. அடுத்தடுத்து பல பந்தயங்கள். ஒவ்வொன்றிலும் 'விளையாட்டாக’த்தான் ஓடத் தொடங்கினான் போல்ட். வீட்டில் சின்னச் சின்னதாக பரிசுப் பொருட்களும் கோப்பைகளும் குவிந்தன.

11 வயதிலேயே தடகளத்தில் அழுத்தமாகத் தடம்பதித்த பின்னரும், கிரிக்கெட் கனவு விடவே இல்லை. ஒருநாள் அவனது தந்தை வெல்லஸ்லி சொன்ன வார்த்தைகள் போல்ட் மனதை, 180 டிகிரி மாற்றிப்போட்டது. 'கிரிக்கெட் என்பது குழு விளையாட்டு.

நீ நன்றாக விளையாடினாலும் உன் டீம் தோற்றுப்போகலாம். அதில் நிறைய அரசியல் உண்டு. தேர்வாளருக்கு உன்னைப் பிடிக்காவிட்டால், நீ அணியிலேயே இருக்க முடியாது. ஆனால், தடகளத்தில் நீதான் எஜமான். உன் சாதனைகளே அனைத்தையும் தீர்மானிக்கும்.’

தடகளத்தில் 200 மீட்டர், 400 மீட்டர் பந்தயங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தான் போல்ட். இயற்கையிலேயே ஓட்டத் திறமை கொண்டிருந்ததால், பயிற்சிகள் குறித்து அதுவரை போல்ட் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால், மாநில அளவில் ஒரு பந்தயத்தில் கெய்த் ஸ்பென்ஸ் என்கிற சிறுவன் போல்ட்டை அசால்ட்டாகப் பின்னுக்குத் தள்ள, தோல்வி அதிகம் கசந்தது. 'இது மறுபடியும் நிகழக் கூடாது.’

அந்தச் சமயத்தில் 1996-ம் ஆண்டு ஒலிம்பிக்கின் தடகளப் போட்டியின் ஒளிபரப்பைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது போல்ட்டுக்கு. ஒலிம்பிக் என்பது எவ்வளவு பெரிய நிகழ்வு, அதில் ஜெயிப்பது எத்தனை அற்புதமான சாதனை. குறிப்பாக, அமெரிக்கத் தடகள வீரர் மைக்கேல் ஜான்சன், 200 மீட்டர் பந்தயத்தில் 19.32 விநாடிகளில் செய்த சாதனையைக் கண்ட போல்ட் சிலிர்த்தான்... 'அந்த இடத்தில் நானும் ஒருநாள் நிற்பேன்.’

14 வயதில் அயல்நாடுகளில் சர்வதேச ஜூனியர் லெவல் பந்தயங்களில் கலந்துகொள்ளும்போது போல்ட் தடுமாறினான். சர்வதேச சவாலைச் சமாளிக்க முடியாமல் கிடைத்த தோல்விகள் முதலில் பயமுறுத்தின. தன்னம்பிக்கையில் தடுமாற்றம். 2002-ம் ஆண்டு ஜமைக்காவில் கிங்ஸ்டன் நகரத்தில் உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டிகள் நிகழவிருந்தன. உள்ளூரிலேயே தோற்றுவிடுவோமோ எனப் பயந்த போல்ட், தன் வீட்டுக் கொல்லைப்புறத்தில் உட்கார்ந்து அழ ஆரம்பித்தான். தாய் ஜெனிஃபர் வந்து அரவணைத்தார். 'முயற்சியே செய்யாமல் ஒதுங்கிப்போகாதே. அதன் முடிவு என்னவென்றாலும் தைரியமாக ஏற்றுக்கொள்’ என அவர் சொன்ன வார்த்தைகள் போல்ட்டின் முதுகுத்தண்டை நிமிர்த்தின.

கிங்ஸ்டன் மைதானத்தில் 200 மீட்டர் ஃபைனல் பந்தயத்துக்காக காலடி எடுத்துவைத்தபோது, 'போல்ட்... போல்ட்... லைட்னிங் போல்ட்’ என மக்கள் உற்சாகப்படுத்தினார்கள். போட்டியில் 20.61 விநாடிகளில் கடந்து தங்கம் வென்ற போல்ட், 200 மீட்டரில் மிகக் குறைந்த வயதில் (15), உலக ஜூனியர் சாம்பியன் என்ற பெருமையை எட்டினான்.

சட்டென மாறியது வாழ்க்கை. ஒரே நாளில் நட்சத்திர அந்தஸ்து, மஞ்சள் வெளிச்சம், இளம்பெண்கள் தேடிவந்து பேசும் கிளுகிளுப்பு, பார்ட்டி, கொண்டாட்டம். கஞ்சா புகைக்கவும் வாய்ப்பு அமைந்தது. போல்ட் சும்மா ஓர் இழுப்பு இழுக்க, நுரையீரலில் ஏதோ ஒன்று அடர்த்தியாக நிரம்பி அழுத்தம் கொடுத்தது.ஆளைப் புரட்டியது. தன்னைத் தொலைத்த இடத்திலேயே, இழந்த கணத்திலேயே மீட்டெடுத்தான் போல்ட். 'இனி ஒருபோதும் இதைத் தொடவே கூடாது’ என்ற முடிவுக்கு வந்தான். 'கஞ்சாவைவிட, பந்தயத்தில் ஓடுவதும் அதில் வெல்வதும்தான் எனக்கு அதிக போதை கொடுக்கிறது’ எனப் பின்னர் சொன்னார் போல்ட்.

போல்ட்டின் புதிய பயிற்சியாளராக ஃபிட்ஸ் கோல்மென் வந்தார். களத்தில் ஓட்டப் பயிற்சிகளைவிட மற்ற பின்னணிப் பயிற்சிகளில் ஃபிட்ஸ் அதிகக் கவனம் செலுத்தினார். போல்ட்டால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. முதுகில், கால்களில் அதீத வலி. 2004-ம் ஆண்டு ஏதேன்ஸ். போல்ட்டுக்குக் கிடைத்த முதல் ஒலிம்பிக் வாய்ப்பு. ஆனால், ஃபிட்னெஸ் சரியாக இல்லாத போல்ட், 200 மீட்டரில் முதல் சுற்றோடு வெளியேறினார். அது காயத்தைவிட அதிகம் வலித்தது.

ஜெர்மானிய மருத்துவர் ஹேன்ஸ் முல்லர், போல்ட்டைப் பரிசோதித்தார். மருத்துவப் பதத்தில் 'Scoliosis’ என்றார். அதாவது, போல்ட்டின் முதுகெலும்பு நேராக இல்லை. S வடிவத்தில் சற்றே வளைந்திருக்கிறது. அதனால், அவரது வலது கால், இடது காலைவிட அரை இன்ச் உயரம் குறைவாக இருந்தது. முதுகு வலிக்கும் கால்களில் வலிக்கும் இதுவே காரணம். முறையான மருந்துகள், தொடர் பிசியோதெரபி சிகிச்சை மூலமாகக் குணப்படுத்த முயற்சி செய்யலாம். ஆனால், தடகள வீரர் என்பதால், மருந்துகளை எடுத்துக்கொள்ள முடியாது. பின்னாளில் ஊக்க மருந்துச் சோதனையில் 'பாசிட்டிவ்’ எனக் காட்டினால், லட்சியப் பயணம் அம்பேல். ஆகவே, ஹோமியோபதி மருந்துகள் மட்டுமே.

எதிரில் இருள் சூழ்ந்திருந்த தருணத்தில் போல்ட்டின் புதிய பயிற்சியாளராக ஜமைக்காவின் கிளென் மில்ஸ் பொறுப்பேற்றார். உடலளவிலும் மனதளவிலும் துவண்டிருந்த போல்ட், உடனடியாக எதிலாவது வென்றே ஆக வேண்டும் என வேகம் காட்ட, 'எந்த அவசரமும் இல்லை. நாம் 2008-ம் ஆண்டு ஒலிம்பிக்கை நோக்கிப் பயிற்சிகளை ஆரம்பிக்கலாம்’ என நிதானம் காட்டினார் மில்ஸ். தன் குறைகளை, ஆதங்கத்தை, வலிகளை மில்ஸ் காதுகொடுத்துக் கேட்டது போல்ட்டுக்குப் பெரும் ஆறுதல். மில்ஸின் புதிய பயிற்சிமுறைகள் போல்ட்டைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தேற்றின.

2005-ம் ஆண்டு பின்லாந்தில் உலகத் தடகள சாம்பியன்ஷிப். 200 மீட்டர் முதல் சுற்றிலிருந்து செமி ஃபைனல் வரை போல்ட்டின் வேகத்தில் குறைவில்லை. ஆனால், ஃபைனலில் ஓடும்போது முக்கால்வாசித் தூரத்தில் தொடையில் தசைப்பிடிப்பு. அந்தப் பந்தயத்தின் கடைசி மனிதன் போல்ட்!

2006-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிக்கான 4x100 தகுதிச் சுற்றில் கலந்துகொள்ள கிங்ஸ்டன் மைதானத்துக்கு வந்த போல்ட்டுக்கு, மீண்டும் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. போட்டியில் இருந்து விலகி, வெளியேறவேண்டிய சூழல். ஐமைக்கர்கள் பரிகசித்துக் கத்த ஆரம்பித்தார்கள். 'இனி எல்லாம் அவ்வளவுதானா? நிஜமாகவே நான் இந்த விளையாட்டுக்குத் தகுதியானவன்தானா?’ என போல்ட் புழுங்க, கோச் மில்ஸ் அமைதியாகச் சொன்னார். 'வெற்றியில் கொண்டாடுவதும், தோல்வியில் எட்டி உதைப்பதும் மக்களின் இயல்புதான். நீ அவர்களுக்காக ஓடாதே. உனக்காக ஓடு. உனக்கு என ஒரு லட்சியத்தை, இலக்கை உருவாக்கு. அதை நோக்கிச் செயல்படுவது எளிதாக இருக்கும்.’

புதிய கதவு திறந்ததுபோல் இருந்தது. சிறுவயதில் சிக்கன் தேவைப்பட்டது. இப்போது போல்ட்டுக்குப் பணத் தேவை. அம்மாவுக்கு, வாஷிங் மெஷின்; அப்பாவுக்கு, புதிய கார்; பிறகு ஒரு வீடு. புதிய லட்சியம். பழைய தோல்விகள், முதுகில் பிரச்னை, கால் வலி எல்லாவற்றையும் மூளையில் இருந்து தூக்கி எறி; ஓடு. உறுதியாக, வேகமாக... இன்னும் வேகமாக!

அதற்குப் பின் போல்ட் வாழ்க்கையில் நிகழ்ந்தது எல்லாம் தடதட மாற்றங்கள்; பளபள வெற்றிகள். எல்லாம் ஓர் உத்வேகப் பாடல் அவகாசத்தில் நிகழவில்லை. படிப்படியாக... ட்ராக் ட்ராக்காக. அதற்கு போல்ட் எடுத்த ஒரு புத்திசாலித்தனமான முடிவும் முக்கியக் காரணம். 200 மீட்டர் பந்தயத்தில் மட்டுமே கவனம் செலுத்திவந்த போல்ட், 100 மீட்டரிலும் கலந்துகொள்ள முடிவெடுத்தார். மில்ஸ் ஒப்புக்கொள்ள வில்லை. அவர் 400 மீட்டரில் ஓடச் சொல்ல, அதற்கான கடினமான பயிற்சிகளை நினைத்தாலே, போல்ட்டுக்கு கண்கள் செருகின.

2007-ம் ஆண்டு... ஜமைக்கன் சாம்பியன்ஷிப் 100 மீட்டர் பந்தயத்தில் 10.03 விநாடிகளில் கடந்து, தன்னை நிரூபித்தார் போல்ட். போல்ட்டின் 100 மீட்டர் முடிவுக்கு மில்ஸ் ஒப்புக்கொண்டார். நூறில் போல்ட் காட்டிய வேகம், அவரது இருநூறில் அதீத முன்னேற்றத்தைக் கொண்டுவந்தது. 2008-ம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த ரிபோக் கிராண்ட் பிரிக்ஸில், போல்ட் உலகின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பினார். 100 மீட்டரில் புதிய உலக சாதனை. 9.72 விநாடிகள்... உலகின் அதிவேக மனிதன்!




உசேன் போல்ட்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 10, 2015 9:29 pm

உசேன் போல்ட்  P88b
நினைக்கவே இனித்தது. அதே ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் போல்ட் தனக்குப் போட்டியாக நினைத்தது டைசன் கே என்கிற அமெரிக்க வீரரை. ஆனால், டைசன் 100 மீ அரை இறுதியிலேயே தோற்றுப்போக, போல்ட் இறுதிப் போட்டியில் எந்தவித இறுக்கமும் இல்லாமல் ஓடி மின்னலாக ஜெயித்தார்... லைட்னிங் போல்ட். கடைசி 10 மீட்டர் தூரத்தைக் கடக்கும்போதே, இரண்டு கைகளையும் பக்கவாட்டில் நீட்டிக் கொண்டாட ஆரம்பித்துவிட்டார். 9.69 விநாடிகள் என உலக சாதனை வேறு. இடது கையை மேலே சொர்க்கத்தை நோக்கி நீட்டி, வலது கையை மடக்கி அம்பு விடுவதுபோல ஸ்டைல் காட்ட, அந்த நொடியில் உலகத்துக்கு போல்ட் கிறுக்குப் பிடித்தது. அதுதான் போல்ட்டின் சிக்னேச்சர் போஸ்!

அடுத்து 200 மீட்டர் ஃபைனலில் 19.30 விநாடிகளில் கடந்து மைக்கேல் ஜான்சனின் 12 வருட சாதனையை ஓரம் கட்டினார். . குழுப் போட்டியான 4x100 மீட்டர் பந்தயத்திலும் 37.10 விநாடிகள் என புதிய உலக சாதனை. போல்ட்டுக்கு மூன்று ஒலிம்பிக் தங்கப் பதக்கங்கள்!

உலகம் போல்ட்டை உச்சத்தில் தூக்கிவைத்துக் கொண்டாடியது. மீடியா, வாயைப் பிடுங்கவும் தவறவில்லை. 'டைசன் கே தோற்றுப்போனதால்தான், நீங்கள் ஜெயித்தீர்களா?’ என ஒருவர் கேள்விகேட்க, போல்ட் எந்த அதிர்வும் இல்லாமல் சொன்ன பதில், 'டைசன் கேவை அடுத்த முறை தோற்கடிக்கிறேன்.’

சொன்னதையே செய்தார். 2009-ம் ஆண்டு பெர்லின் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் ஃபைனலில் புதிய உலக சாதனை நிகழ்த்தினார் போல்ட் - 9.58 விநாடிகள். இரண்டாம் இடத்தில் டைசன் கே - 9.71 விநாடிகள். அதே நிகழ்வில் 200 மீட்டரிலும் 19.19 விநாடிகளில் புதிய உலக சாதனையை போல்ட் படைத்தார்.

'ஒருமுறை போதாது. மீண்டும் ஒலிம்பிக்கில் 'டிரிபிள் கோல்டு’ மேஜிக்கை நிகழ்த்த வேண்டும்’ என்ற வெறியுடன் 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் போல்ட் களமிறங்கினார். தொடக்கம் தவறாக அமைந்துவிடுமோ என உள்ளுக்குள் உதறல் இருந்தாலும், எந்தத் தவறுக்கும் இடம் தரவே இல்லை. மீண்டும் மூன்று தங்கங்கள். 100 மீட்டர், 200 மீட்டர், 4x100 மீட்டர்.

2012-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் போல்ட்டுக்குத் தகுதிச் சுற்றில் சவால்விட்டவர் சக நாட்டைச் சேர்ந்த யோஹன் பிளேக். இருவருக்குமான மோதல், களத்தில் எதிரொலித்தது. 200 மீட்டர் ஃபைனலில் இறுதி 10 மீட்டரில் இரண்டாவதாக வந்துகொண்டிருந்த பிளேக்கை நோக்கி, போல்ட் தன் இடது கை ஆள்காட்டி விரலை வாயில் வைத்து 'உஷ்ஷ்ஷ்ஷ்’ என சைகை காட்டியபடி வெற்றிக்கோட்டைக் கடந்தார். மில்ஸ் அதற்காக உசேனைத் திட்டினார். 'சேட்டைகள் ஏதுமின்றி ஒரே ரிதத்தில் நீ ஓடியிருந்தால், இன்னொரு புதிய உலக சாதனை படைத்திருப்பாய்.’

2017-ம் ஆண்டு போல்ட் ஓய்வுபெறலாம். வரும் 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் அவருக்கு இறுதி வாய்ப்பு. மீண்டும் மூன்று தங்கங்கள் வாங்கி ஹாட்ரிக் சாதனை செய்யத் தயாராகிக்கொண்டிருக்கிறார். 100 மீட்டரில் 9.5 விநாடிகளுக்குக் குறைவாக, 200 மீட்டரில் 19 விநாடிகளுக்குக் குறைவாக ஓடி, தன் உலக சாதனையை தானே முறியடிக்க வேண்டும் என்பதே போல்ட்டின் கோல்டன் இலக்கு.

'I am a living legend'2 012-ம் ஆண்டு ஒலிம்பிக் வெற்றிகளுக்குப் பிறகு போல்ட் உதிர்த்த வார்த்தைகள் இவை. தன்னம்பிக்கையின் உச்சம் அல்லது தலைகனத்தின் மிச்சம் என எப்படி வேண்டுமானாலும் இதை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அது 100 சதவிகிதம் நிஜம்!



உசேன் போல்ட்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 10, 2015 9:31 pm

உசேன் போல்ட்  P88a
100 மீட்டரும்... 41 அடியும்...

100 மீட்டர் ஓட்டத்தில் போல்ட் ஸ்டைல் இதுதான்... 6 அடி, 5 அங்குல உயரத்தின் காரணமாக போல்ட்டின் தொடக்கம் எப்போதும் சற்று மந்தமாகவே இருக்கும். முதல் 30 மீட்டரில் உடலை முன்னோக்கிச் செலுத்தி, தலையைக் குனிந்தபடி நிலையான வேகம் எடுப்பார். 50 மீட்டரில் தன் வலமும் இடமும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என மைக்ரோ நொடியில் கணிப்பார். கடைசி 40 மீட்டரில் போல்ட்டின் வேகம் அசாத்தியமானதாக இருக்கும். பொதுவாக ஒரு வீரர் 45 அடி ஓடி 100 மீட்டரை அடைந்தால், போல்ட்டுக்குத் தேவைப்படுவது வெறும் 41 அடி மட்டுமே!

புல்லட் போல்ட்!

* ஜிம் பயிற்சி, எப்போதும் போல்ட் விரும்பாத ஒன்று. ஆனால், தவிர்க்கமுடியாதது. 'ஜிம்மில் இருக்கும்போது எல்லாம் அழகான பெண்களை நினைத்துக்கொள்வேன். நான் பீச்சுக்குச் செல்லும்போது அவர்களைக் கவரும் வகையில் என் உடல் இருக்க வேண்டும் என்ற நினைப்புடனேயே பயிற்சி செய்வேன்’ - இது போல்ட் ஸ்டேட்மென்ட்.

*2008-ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் போல்ட்டுக்குப் பெரிய பிரச்னையாக இருந்தது உணவு. சீன உணவுகள் சரிப்பட்டுவரவில்லை. பெய்ஜிங்கில் அவரது வயிற்றை நிரப்பியது சிக்கன் நட்ஜெட்ஸ் மட்டுமே. ஒரு நாளைக்கு நான்கைந்து பக்கெட் நட்ஜெட்ஸை அவர் விழுங்க, 'போல்ட் தங்கம் வாங்கியதன் பின்னணி ரகசியம், சிக்கன் நட்ஜெட்ஸ்தான்’ என்றுகூட செய்தி கிளம்பியது.

*2006-ம் ஆண்டு தொடங்கி இப்போது வரை ஜெர்மனி நிறுவனம் Puma, போல்ட்டின் பிரதான ஸ்பான்ஸர். வெர்ஜின் மீடியா, சுவிஸ் வாட்ச் நிறுவனம் Hoblot, மொபைல் கேம் நிறுவனம் Rock - live , நிஸான் மோட்டார்ஸ், விசா ஆகிய நிறுவனங்களுக்கும் மாடலிங் செய்கிறார். 2014-ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் வெளியிட்ட உலகின் அதிகம் சம்பாதிக்கும் 100 விளையாட்டு வீரர்களின் பட்டியலில் போல்ட்டுக்கு 45-வது இடம். அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே தடகள வீரர் போல்ட்!

*ஓய்வுக்குப் பிறகு, தனக்குப் பிரியமான மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியில் இணைந்து விளையாட வேண்டும் என்பது போல்ட்டின் ஆசை.

*போல்ட் பெயரில் வெளியிடப்பட்ட ஆப்பிள் கேம் அப்ளிகேஷன், ஜமைக்காவில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது.

* Tracks and Records என்ற பெயரில் உணவகம், ஆடை தயாரிக்கும் நிறுவனம் நடத்திவருகிறார் போல்ட். இரண்டு கைகளையும் வானத்தை நோக்கி நீட்டி போல்ட் கொடுக்கும் போஸ், வைரல் பிரபலம். அதை 'To Di World' என்பார்கள். போல்ட்டின் அந்த போஸ் கொண்ட ஆடைகள் உலக அளவில் செம ஃபேஷன்!

விகடன்
உசேன் போல்ட்  Redros10




உசேன் போல்ட்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 10, 2015 11:49 pm

//நீ நன்றாக விளையாடினாலும் உன் டீம் தோற்றுப்போகலாம். அதில் நிறைய அரசியல் உண்டு. தேர்வாளருக்கு உன்னைப் பிடிக்காவிட்டால், நீ அணியிலேயே இருக்க முடியாது. ஆனால், தடகளத்தில் நீதான் எஜமான். உன் சாதனைகளே அனைத்தையும் தீர்மானிக்கும்.’//

ரொம்ப நிஜம் புன்னகை....அற்புதமான பகிர்வு சிவா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 11, 2015 12:01 am

// ஜிம் பயிற்சி, எப்போதும் போல்ட் விரும்பாத ஒன்று. ஆனால், தவிர்க்கமுடியாதது. 'ஜிம்மில் இருக்கும்போது எல்லாம் அழகான பெண்களை நினைத்துக்கொள்வேன். நான் பீச்சுக்குச் செல்லும்போது அவர்களைக் கவரும் வகையில் என் உடல் இருக்க வேண்டும் என்ற நினைப்புடனேயே பயிற்சி செய்வேன்’ - இது போல்ட் ஸ்டேட்மென்ட்.//

ச்சே.....பாவம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82205
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 13, 2015 9:29 am

உசேன் போல்ட்  103459460

monikaa sri
monikaa sri
பண்பாளர்

பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Postmonikaa sri Mon Apr 13, 2015 10:07 am

உசேன் போல்ட் பற்றின பதிவு ...நல்ல பகிர்வு சார்!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 13, 2015 11:36 am

'I am a living legend'2 012-ம் ஆண்டு ஒலிம்பிக் வெற்றிகளுக்குப் பிறகு போல்ட் உதிர்த்த வார்த்தைகள் இவை. தன்னம்பிக்கையின் உச்சம் அல்லது தலைகனத்தின் மிச்சம் என எப்படி வேண்டுமானாலும் இதை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அது 100 சதவிகிதம் நிஜம்!
உசேன் போல்ட்  3838410834 சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக