புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கூடு! Poll_c10கூடு! Poll_m10கூடு! Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
கூடு! Poll_c10கூடு! Poll_m10கூடு! Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
கூடு! Poll_c10கூடு! Poll_m10கூடு! Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
கூடு! Poll_c10கூடு! Poll_m10கூடு! Poll_c10 
4 Posts - 3%
Kavithas
கூடு! Poll_c10கூடு! Poll_m10கூடு! Poll_c10 
1 Post - 1%
bala_t
கூடு! Poll_c10கூடு! Poll_m10கூடு! Poll_c10 
1 Post - 1%
prajai
கூடு! Poll_c10கூடு! Poll_m10கூடு! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கூடு! Poll_c10கூடு! Poll_m10கூடு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூடு! Poll_c10கூடு! Poll_m10கூடு! Poll_c10 
293 Posts - 42%
heezulia
கூடு! Poll_c10கூடு! Poll_m10கூடு! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
கூடு! Poll_c10கூடு! Poll_m10கூடு! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
கூடு! Poll_c10கூடு! Poll_m10கூடு! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
கூடு! Poll_c10கூடு! Poll_m10கூடு! Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
கூடு! Poll_c10கூடு! Poll_m10கூடு! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கூடு! Poll_c10கூடு! Poll_m10கூடு! Poll_c10 
6 Posts - 1%
prajai
கூடு! Poll_c10கூடு! Poll_m10கூடு! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
கூடு! Poll_c10கூடு! Poll_m10கூடு! Poll_c10 
4 Posts - 1%
manikavi
கூடு! Poll_c10கூடு! Poll_m10கூடு! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூடு!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 16, 2015 6:34 pm

கம்ப்யூட்டரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் ரகு. அவனைத் தேடி மாடிக்கு வந்த உமா, அவன், 'லேப் - டாப்'யே பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, ''என்னத்த இப்படி சுவாரசியமா பாத்துக்கிட்டு இருக்கீங்க?'' என்று கேட்டவள், லேப் - டாப் திரையைப் பார்த்தாள்.

அதில் தெரிந்த படங்களைப் பார்த்ததும், ''இத எத்தனை தடவ தான் பாப்பீங்களோ...'' என அலுத்துக் கொண்டாள். ஆனால், புகைப்படங்களை பார்த்த ரகுவிற்கோ அப்பாவின் நினைவு, மனதை ஆக்கிரமித்தது.

கம்ப்யூட்டர் என்றாலே, காத தூரம் ஓடும் அப்பா, தன் வாழ்வின் கடைசி இரு ஆண்டுகளில் கம்ப்யூட்டரே கதி என்று இருந்ததை, எட்டாவது அதிசயமாக குடும்பத்தினரும், நண்பர்களும் வியந்த நாட்கள், ரகுவின் நினைவுக்கு வந்தது.

எத்தனையோ தடவை அப்பாவிடம் ரகு, 'அப்பா... கம்ப்யூட்டர ஆப்ரேட் செய்ய கத்துக்குங்க; இப்ப எல்லா பத்திரிகையும் அதுல வருது... செய்தி படிக்கலாம்; பாட்டு கேட்கலாம்; உலகத்தோட எந்த மூலையில் நடக்கற விஷயத்தையும் தெரிஞ்சுக்கலாம்...' என்று பல முறை சொல்லியும் அவர் கேட்டதில்லை.

சென்னையில் மூன்று தலைமுறைகளாய், கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்த தென்னையும், மாமரமும் சூழ்ந்த வீட்டை பராமரிக்க ஆளின்றி, வாடகைக்கு விட்டுப் பார்த்தும் திருப்தியில்லாததால், வீட்டை விற்று விட வேண்டும் என, அவருடன் பிறந்தவர்கள் நான்கு பேரும், அவர்களின் பிள்ளைகளும், ரகுவும் சேர்ந்து சொன்ன போது, வீட்டை விற்கக் கூடாது என்று ஒற்றைக் காலில் நின்றார் வீட்டுக்கு மூத்தவரான அப்பா.

அதன்பின், மொபைலிலும், மெயிலிலும் ஆளாளுக்கு இதைப் பற்றியே அப்பாவிடம் பேசிக் கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட, 100 ஆண்டுகளுக்கும் மேலாக தன் மூதாதையர் வாழ்ந்த வீட்டை விற்பது என்பது, அப்பாவுக்கு நினைத்துப் பார்க்க முடியாத விஷயமாக இருந்தது.
ஒரு ஞாயிற்றுக் கிழமை —

சொல்லி வைத்தது போல், அப்பாவின் உடன் பிறந்தோரும், அவர்களுடைய பிள்ளைகளும் ரகுவின் மும்பை வீட்டிற்கு அப்பாவை பார்க்க வந்தனர். அன்று, எல்லாரும் அவரைச் சுற்றி அமர்ந்து, 'ஒரு பார்ட்டி நல்ல ரேட்டுக்கு வாங்க காத்திருக்கு; முடிச்சுடலாம்...' என்று கூற, வீட்டை விற்கும் விஷயத்தில் தான் மட்டும் தனியாளாக நிற்பது அவருக்கு புரிந்தது. ஒரு நிமிடம் கண்ணை மூடி, அமைதியாக இருந்தவர் பின், 'சரிப்பா வித்துருங்க...' என்றார். அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி பிரவாகம்.

வீட்டை விற்பதற்கு முன், அதில் பங்குள்ள அனைவரும், ஒருவாரம் அவ்வீட்டில் தங்கி வரலாம் என்று போன போதுதான், அப்பாவின் நடவடிக்கைகளில் விசித்திரங்கள் தென்பட்டன. ஒரு வாரம் கழிந்த பின், அனைவரும் புறப்பட்ட போது, 'ரெண்டு நாள் தங்கிட்டு வரேன்...' என்று அப்பா சொன்னபோது எல்லாரும், 'வீட்டு மேல இத்தனை பாசம் கூடாது...' என்று கிண்டலடித்தனர்.
'ரகு...உன்னோட கேமராவ கொஞ்சம் கொடுத்துட்டுப் போ...' என்று, ரகுவின் கேமராவை வாங்கிக் கொண்டார் அப்பா.

ஒரு வாரம் கழித்து மும்பை வந்து சேர்ந்தவர், 'ரகு... என்னை கம்ப்யூட்டர் கிளாஸ்ல சேத்துவிடு...' என்றதும், ஆச்சரியத்தால் வாய் பிளந்த ரகு, அப்பா மனது மாறி விடக் கூடாதே என்று, அவசரமாய் அருகில் உள்ள கம்ப்யூட்டர் இன்ஸ்ட்டிடியூடில் அவரை சேர்த்து விட்டான்.

ஒரு முறை, இன்ஸ்ட்டிடியூட்டிலிருந்து அவரை அழைத்து வரப் போன ரகுவிடம், 'உங்கப்பாவுக்கு,70 வயசு மாதிரி தெரியல; கம்ப்யூட்டரில் ஏதோ சாதிக்கப் போறது போல வெறியோட கத்துக்கறார்...' என்று அந்த இன்ஸ்ட்டிடியூட் ஆசிரியை, மகிழ்ச்சியாய் சொன்ன போது, எத்தனையோ முறை தான் சொல்லிக் கேட்காத அப்பா, எப்படி சட்டென்று மாறினார் என்று புரியாமல் திகைத்தான் ரகு.
ஒரு மாதத்தில் கம்ப்யூட்டரை இயக்குவது குறித்த அடிப்படை விஷயங்களை தெரிந்து கொண்ட அப்பா, 'ரகு, விலை கம்மியா ஒரு கம்ப்யூட்டர் வாங்கிக் கொடு...' என்று சொன்ன போது, அவனின் ஆச்சரியம் பல மடங்கானது.

'விலை கம்மியா எதுக்குப்பா...' என்று கூறி, அடுத்த நாளே லேட்டஸ்ட் லேப் - டாப் ஒன்றை அவர் முன் வைத்தான்.

இதற்கு இடையில், வீடு பேசி முடிக்கப்பட்டு பத்திரம் பதிந்து, வீடு கைமாறும் நாளும் நெருங்கிய நிலையில், ஒருநாள், 'ரகு, ஒரு வாரம் மெட்ராஸ் போய் இருந்துட்டு வரேன்டா...' என்றார்.

சென்னை என்று பெயர் மாறிய பின்னும், அவர் மெட்ராஸ் என்று தான் சொல்வார். கேட்டால், 'மெட்ராசும், சென்னையும் எப்படிடா ஒண்ணாகும்...' என்பார். அதில் ஏதோ உள்ளர்த்தம் இருப்பது போல!

ரெஜிஸ்ட்ரேஷன் முடித்து விட்டு மும்பை திரும்பிய அப்பா, கம்ப்யூட்டரே கதி என்று இருந்தார். 'நம்ம வீட்டை வாங்கினவங்க அதை இடிச்சிட்டு பெரிய கடை கட்டப் போறாங்களாம்...' என்று உமா செய்தி சொன்னபோது, ஒரு வெற்றுச் சிரிப்பு மட்டுமே அவரிடமிருந்து வந்தது.

அதன் பின், 'பின்னாடி இருந்த மாமரத்த வெட்டிட்டாங்களாம்; கிணத்த மூடியாச்சாம்; வீட்டை முழுசா இடிச்சாச்சாம்; இடத்தசுத்தி பெரிய தகரம் போட்டு மறைச்சுட்டாங்களாம்...' என்று வந்து கொண்டே இருந்த செவி வழிச் செய்திகளை காதில் வாங்காதவர் போல் இருந்தார்.

'வாணம் தோண்டறாங்களாம், பெரிய கடையா வரும்போல...' என்று அவருடைய தங்கை பையன் போனில் சொன்ன போது, இரவு வெகுநேரம் பால்கனியில் அமர்ந்திருந்தார். அடுத்த சில நாட்களில், தன் அறையில், 'லேப் - டாப்'பையே பார்த்தபடி இருந்தார்.

ஒரு ஆண்டுக்கு பின், 'லீவுக்கு சென்னை போகலாம்; நம்ம வீடு இருந்த இடத்துல ஷாப்பிங் மால் கட்டியிருக்காங்களாம்... பாத்துட்டு வரலாமா...' என்று கேட்ட ரகுவிடம், தான் வரவில்லை என்று சொல்லிவிட்டார்.
...................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 16, 2015 6:36 pm

ரகுவும், உமாவும் சென்னை வந்திறங்கிய இரண்டாம் நாள் இரவே, பக்கத்து அபார்ட்மென்ட் நண்பரிடமிருந்து, 'உங்கப்பாவுக்கு சீரியசா இருக்கு; ஆஸ்பிட்டல்ல சேத்துருக்கோம்; உடனே கிளம்பி வாங்க...' என்று போன் வந்ததும், அடித்துப் பிடித்து பிளைட் பிடித்து வருவதற்குள் இறந்து விட்டார் அப்பா. 13 நாட்கள் உறவினர்கள் உடனிருந்ததால் உள்ளுக்குள் மெதுவாகவே இறங்கிக் கொண்டிருந்த இழப்பு, அனைவரும் கிளம்பி சென்ற பின், தனிமையில், அவரின் நினைவு ரகுவை வாட்டி எடுத்தது.

ஒரு நாள், அப்பாவின் நினைவுகள் மனதை அழுத்த, அவரின் அறைக்குச் சென்றான். அப்போது, அவரின், 'லேப் - டாப்'பை பார்த்ததும், அதை ஆன் செய்தான். 1950, 1960 மற்றும் 1970 என்ற ஆண்டுகளின் பெயரில் ஏராளமான, 'போல்டர்'கள் வைத்திருந்தார் அப்பா. அதன் ஒவ்வொன்றிலும் ஏதேதோ புகைப்படங்கள்.

சுவர் மூலை, மூலையில் பெயர்ந்த காரை, மரத்தில் செய்யப்பட்ட மாடிப்படி கைப்பிடி, அதிலிருக்கும் ஓட்டைகள், ஆண்டுகள் பல கடந்ததால், பளபளப்பு மறைந்து போன ரெட் ஆக்சைட் தரையின் வெவ்வேறு கோணங்கள், உடைந்து போய் ஓரத்தில் வைக்கப்பட்ட துளசி மாடம், பரணில் இருந்த பாதாளக் கரண்டி, மாமரத்தின் வேர் என பல படங்கள் இருந்தன.
வீட்டின் பல்வேறு பகுதியின் புகைப் படங்களை பார்த்துக் கொண்டே வந்த ரகுவுக்கு, ஏதோ புரிவது போலவும், புரியாதது போலவும் இருந்தது. எதற்காக இந்தப் படங்களை எல்லாம் அப்பா வைத்திருக்கிறார் என்ற கேள்வியுடனேயே நாட்கள் நகர்ந்தன.

அன்று அப்பாவின் பால்ய நண்பர் நாராயணன் வந்தார். இருவரும் பக்கத்து பக்கத்து வீடு என்பதுடன், ஒரே சமயத்தில் பிறந்து வளர்ந்தவர்கள்.

'மாமா... உங்ககிட்ட ஒண்ணு கேக்கணும்...' என்றபடி அவரை அப்பாவின் அறைக்குள் அழைத்துச் சென்று, 'லேப் - டாப்' பை ஆன் செய்தான். திரையில் தெரிந்த இடங்களை பார்த்துக் கொண்டே வந்த நாராயணனுக்கு கண்ணில் நீர் தளும்பியது.

'கணேசன் கொஞ்சம் வித்தியாசமானவன் தான்...' என்று சொன்னவர், 'நடந்து முடிஞ்சாச்சுன்னு நினைக்கற எதுவுமே, முழுசா முடியறது இல்ல; அழியறதும் இல்ல. காலத்தின் ஏதாவது ஒரு நுனியில் அது தொங்கிட்டேத்தான் இருக்கும். திடீர் திடீர்னு புதுப் புது ரூபம் காட்டும். ஒருவேளை காலம் தனக்காகவும், நமக்காகவும் வச்சிருக்கிற நியதியே இதுதானோ...நாம தாண்டி வர்ற நிமிஷங்களோட அடையாளங்கள, எந்த காலத்திலயும் அழிச்சிடக் கூடாது. அது, கால நியதியை அவமதிக்கிற மாதிரி. ஆனா, அது அத்தனை லேசுபட்ட விஷயமில்ல'ன்னு உங்க அப்பா சொல்வான்.

'உங்கப்பா பதிஞ்சு வச்சுருக்கிற இந்த புகைப்படங்கள்ல இருக்கிறது வீட்டோட சுவரோ, தரையோ இல்ல; உங்கப்பாவுக்குள்ள உறைஞ்சு போன நிமிஷங்களோட அடையாளம். மாடிப்படியில ஒரு நகக்கீறல் இருக்கே... அது உங்கப்பாவோடது. தெரு கடைசியில ராஜின்னு ஒரு பொண்ணு இருந்தா. உங்கப்பாவுக்கு அவளை கல்யாணம் செய்துக்கணும்ன்னு ரொம்ப ஆசை.

'இந்த காலம் போல அவ்வளவு சுலபமா இதையெல்லாம் அப்போ பேசிட முடியாது. எங்கிட்ட சொல்லிட்டே இருப்பானே தவிர, அவ கிட்ட சொல்ல தைரியும் இல்ல. ஒரு தீபாவளி அன்று, வீட்டுக்கு வந்திருந்த ராஜி, உங்க பாட்டிக்கிட்ட பேசிக்கிட்டு இருந்தா... அவ மாடிப்படிய கடக்கும் போது, அவ கிட்ட தன்னோட காதல சொல்லிடணும்ன்னு மாடிக்கு போற படியிலேயே நின்னுகிட்டு இருந்தான் உங்க அப்பா.

உங்க பாட்டிட்ட பேசிட்டு திரும்பி வரும் போது, அவகிட்ட சொல்ல வாயைத் திறக்கும் போது, பயத்துல பேச்சே வரல. அவ போன பின், நான் போய், 'என்னடா ஆச்சு'ன்னு கேட்டேன். மாடிப்படி கைப்பிடியை காட்டி, 'இதான் ஆச்சு'ன்னான்.
'ராஜிக்காக காத்திருந்த நேரத்துல, கையில எதையோ வச்சு நோண்டி நோண்டி அந்த மரக் கைபிடி பொத்தலா போச்சு. அப்பறம் உங்க அப்பா, உங்கம்மாவ கல்யாணம் செய்த பின், கிணற்றடியில கிடக்கிற இந்த சிமென்ட் பெஞ்சு மேல உட்கார்ந்து தான், தன்னோட ஒருதலைக் காதலை சொல்லியிருக்கான்.

'போட்டோவுல பாக்குறேயே பேந்து போன சுவர்... அது, எப்படி வந்ததுன்னு தெரியுமா... அப்ப உனக்கு ஏழெட்டு வயசு இருக்கும்; உங்க சித்தப்பா பிள்ளை கூட சேர்ந்து ஓடிப் பிடிச்சு விளையாடும் போது சுவத்தில மோதி, நெத்தியில வெட்டி ஒரே ரத்தம். உங்க அப்பாவும், அம்மாவும் ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு ஓடுனாங்க...'என்றவுடன் தன்னையறியாமல் நெற்றியை தடவிப் பார்த்தான் ரகு.

'அந்த வீடு எத்தனையோ பேரை வளர்த்து, வாழ வச்சு வழியனுப்பியிருக்கு தெரியுமா... உங்க கொள்ளுத் தாத்தா - பாட்டி, உங்க தாத்தா - பாட்டி, உங்க அம்மான்னு எல்லாரையுமே அந்தத் தரையில தான் கிடத்தி வச்சிருந்தாங்க. இது மாதிரி அந்த வீட்டப் பத்தின நினைவுகள் அவனுக்கு நிறைய இருந்திருக்கலாம்...' என்று பெருமூச்சு விட்டார் நாராயணன்.

'இதெல்லாம் அர்த்தமில்லாத பைத்தியக்காரத் தனம்ன்னு நீ நினைக்கலாம். நம்மால புரிஞ்சுக்க முடியாததை, புரிஞ்சுக்க விரும்பாததை அர்த்தமில்லாததுன்னு சொல்றது ஈசிதான்.

ஆனா, உங்கப்பா பாஷையில சொல்லணும்ன்னா, காலச் சூழல்ல விலகி போயிட்டு இருக்கிற அல்லது விலகிட்டதா நாம் நினைச்சுகிட்டது வேறொரு நிமிஷ ரூபத்துல, வேறொரு வழியா நம்ம பக்கம் வந்துகிட்டே தான் இருக்கு. இந்த ரெண்டுக்கும் உள்ள தூரம் தான் நம்ம வயசும், வாழ்க்கையும்.
'நம்ம எல்லாரோட வாழ்க்கையிலும் கடைசியில் நினைப்பைத் தவிர ஏதாவது மிஞ்சுமா என்ன... எல்லாமே ஒண்ணுமில்லாமப் போகும் வெறும் கனவு தானா அப்படிங்கற ஆதங்கத்துக்கும், எல்லாமே வெறும் கனவு தான் அப்படிங்கற தெளிவுக்கும், நடுவுல ஊசலாடுற நிலை தான் முக்கால்வாசி பேரோட முதுமை.

ஊசலாட்டம் என்றாலே பிடிமானத்துக்கான தேவை வந்துருதே... ஒவ்வொருத்தரோட பிடிமானத்துக்கு ஒவ்வொரு கைப்பிடி; நினைப்போட அடையாளங்களையும், அடையாளங்களோட நினைப்பையும் உங்கப்பா கைப்பிடியா வச்சுக்கிட்டார். உனக்கும் கூட வயசான பின் இப்படி ஒரு கைப்பிடி தேவைப்படும். அப்படி இல்லன்னா, தண்ணியிலே முக்கின துணிய, நெருப்பில போட்டு காய வச்ச கதையாயிரும், கைப்பிடி இல்லாத முதுமை...' என்று சொல்லி, ரகுவின் முதுகை தட்டிக் கொடுத்தார் நாராயணன்.

அவர் சென்னைக்கு சென்ற பின், அப்பா நினைப்பு வரும் போதெல்லாம், வீட்டு நினைப்பும் வரத் துவங்கியது ரகுவுக்கு. அப்படியே அப்பாவின் லேப்-டாப்பில் இருந்த அந்த புகைப்படங்களை பார்க்கும் பழக்கமும் துவங்கியது.

கம்ப்யூட்டரைப் பார்த்த உமா, ''வர வர உங்கப்பா மாதிரியே ஆயிட்டு வர்றீங்க,'' என்றாள்.
''நான் சென்னைக்கு போயிட்டு வரலாம்ன்னு இருக்கேன்,'' என்றான் ரகு.
''இப்போ எதுக்கு சென்னைக்கு?'' என்று கேட்டாள்.

''நம்ம வீடு இருந்த இடத்த பாத்துட்டு வரலாம்ன்னு இருக்கேன்,'' என்றவனை ஆச்சரியமாக பார்த்தாள் உமா.

''என்ன பேசறீங்க... வீடு மட்டுமில்ல, அந்த ஏரியாவே இந்த,10 ஆண்டுகள்ல அடையாளம் தெரியாம மாறிடுச்சாம்; அங்க போய் என்ன பிரயோசனம்,'' என்றாள்.
''எதுவும் எங்கேயும் போகல... நம்ம வீடு அங்கேயே தான் இருக்கு,'' என்று உரத்த குரலில் கூறியவனின் குரல் உடைந்திருந்தது.

குமரன் கிருஷ்ணன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக