புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அதர்வண் வேதம் பற்றி காஞ்சி பெரியவர் Poll_c10அதர்வண் வேதம் பற்றி காஞ்சி பெரியவர் Poll_m10அதர்வண் வேதம் பற்றி காஞ்சி பெரியவர் Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
அதர்வண் வேதம் பற்றி காஞ்சி பெரியவர் Poll_c10அதர்வண் வேதம் பற்றி காஞ்சி பெரியவர் Poll_m10அதர்வண் வேதம் பற்றி காஞ்சி பெரியவர் Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
அதர்வண் வேதம் பற்றி காஞ்சி பெரியவர் Poll_c10அதர்வண் வேதம் பற்றி காஞ்சி பெரியவர் Poll_m10அதர்வண் வேதம் பற்றி காஞ்சி பெரியவர் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
அதர்வண் வேதம் பற்றி காஞ்சி பெரியவர் Poll_c10அதர்வண் வேதம் பற்றி காஞ்சி பெரியவர் Poll_m10அதர்வண் வேதம் பற்றி காஞ்சி பெரியவர் Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
அதர்வண் வேதம் பற்றி காஞ்சி பெரியவர் Poll_c10அதர்வண் வேதம் பற்றி காஞ்சி பெரியவர் Poll_m10அதர்வண் வேதம் பற்றி காஞ்சி பெரியவர் Poll_c10 
1 Post - 1%
Kavithas
அதர்வண் வேதம் பற்றி காஞ்சி பெரியவர் Poll_c10அதர்வண் வேதம் பற்றி காஞ்சி பெரியவர் Poll_m10அதர்வண் வேதம் பற்றி காஞ்சி பெரியவர் Poll_c10 
1 Post - 1%
bala_t
அதர்வண் வேதம் பற்றி காஞ்சி பெரியவர் Poll_c10அதர்வண் வேதம் பற்றி காஞ்சி பெரியவர் Poll_m10அதர்வண் வேதம் பற்றி காஞ்சி பெரியவர் Poll_c10 
1 Post - 1%
prajai
அதர்வண் வேதம் பற்றி காஞ்சி பெரியவர் Poll_c10அதர்வண் வேதம் பற்றி காஞ்சி பெரியவர் Poll_m10அதர்வண் வேதம் பற்றி காஞ்சி பெரியவர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதர்வண் வேதம் பற்றி காஞ்சி பெரியவர் Poll_c10அதர்வண் வேதம் பற்றி காஞ்சி பெரியவர் Poll_m10அதர்வண் வேதம் பற்றி காஞ்சி பெரியவர் Poll_c10 
293 Posts - 42%
heezulia
அதர்வண் வேதம் பற்றி காஞ்சி பெரியவர் Poll_c10அதர்வண் வேதம் பற்றி காஞ்சி பெரியவர் Poll_m10அதர்வண் வேதம் பற்றி காஞ்சி பெரியவர் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
அதர்வண் வேதம் பற்றி காஞ்சி பெரியவர் Poll_c10அதர்வண் வேதம் பற்றி காஞ்சி பெரியவர் Poll_m10அதர்வண் வேதம் பற்றி காஞ்சி பெரியவர் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
அதர்வண் வேதம் பற்றி காஞ்சி பெரியவர் Poll_c10அதர்வண் வேதம் பற்றி காஞ்சி பெரியவர் Poll_m10அதர்வண் வேதம் பற்றி காஞ்சி பெரியவர் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
அதர்வண் வேதம் பற்றி காஞ்சி பெரியவர் Poll_c10அதர்வண் வேதம் பற்றி காஞ்சி பெரியவர் Poll_m10அதர்வண் வேதம் பற்றி காஞ்சி பெரியவர் Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
அதர்வண் வேதம் பற்றி காஞ்சி பெரியவர் Poll_c10அதர்வண் வேதம் பற்றி காஞ்சி பெரியவர் Poll_m10அதர்வண் வேதம் பற்றி காஞ்சி பெரியவர் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

5 Posts - 1%
Kavithas
அதர்வண் வேதம் பற்றி காஞ்சி பெரியவர் Poll_c10அதர்வண் வேதம் பற்றி காஞ்சி பெரியவர் Poll_m10அதர்வண் வேதம் பற்றி காஞ்சி பெரியவர் Poll_c10 
4 Posts - 1%
manikavi
அதர்வண் வேதம் பற்றி காஞ்சி பெரியவர் Poll_c10அதர்வண் வேதம் பற்றி காஞ்சி பெரியவர் Poll_m10அதர்வண் வேதம் பற்றி காஞ்சி பெரியவர் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதர்வண் வேதம் பற்றி காஞ்சி பெரியவர்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Nov 09, 2009 4:55 pm

அதர்வண் வேதம் பற்றி காஞ்சி பெரியவர் Mahaperiyava1
அதர்வன் என்றால் புரோஹிதர் என்று அர்த்தம். அந்தப் பெயரிலேயே ஒரு ரிஷி இருந்தார். அதர்வா என்ற அந்த ரிஷியின் மூலம் பிரகாசமானது அதர்வ வேதம். அதிலே பல விதமான ஆபத்துக்களைப் போக்கிக் கொள்வதற்கும் சத்துருக்களை அழிப்பதற்கும் மந்திரங்கள் இருக்கின்றன. ப்ரோஸ் பொயட்ரி இரண்டும் கலந்து இருக்கின்றன. மற்ற வேத மந்திரங்களுக்கும் இந்தப் பிரயோஜனம் உண்டு. ஆனால் மற்ற வேதங்களில் இல்லாத அனேக தேவதைகள், இன்னம் கோரமான பல வித ஆவிகள் இவற்றைக் குறித்தும் மந்திரங்கள் அதர்வத்தில்தான் இருக்கின்றன. மாந்திரீகம் என்று இப்போது சொல்கிற அனேக விஷயங்கள் அதர்வ வேதத்திலிருந்து வந்தவைதான்.

ரொம்ப உயர்ந்த தத்துவங்களைக் கொண்ட மந்திரங்களும் அதர்வத்தில் இருக்கின்றன. லோகத்தில் இருக்கப்பட்ட ஸ்ருஷ்டி விசித்திரத்தையெல்லாம் கொண்டாடுகிற ப்ருத்வீ ஸூக்தம் இந்த வேதத்தில்தான் வருகிறது.

யக்ஞத்தை மேற்பார்வை இடுகிற பிரம்மாவை அதர்வ வேதத்திற்குப் பிரதிநிதியாகச் சொல்லியிருப்பது இதற்கு ஒரு பெருமை. இதன் சம்ஹிதா பாகத்தின் அத்யயனம் வடக்கே ரொம்ப ரொம்பத் தேய்ந்து போய் தெற்கே அடியோடு இல்லாமல் போய்விட்டாலும், பிரசித்தமான பத்து உபநிஷத்துக்களுக்குள் பிரச்னம், முண்டகம், மாண்டூக்யம் என்ற மூன்று உபநிஷத்துக்கள் அதர்வ வேதத்தைச் சேர்ந்தனவாகவே உள்ளன.

முமுக்ஷுவானவன் (ஞான ஸாதகன்) மோக்ஷம் பெறுவதற்கு மாண்டூக்ய உபநிஷத் ஒன்றே போதும் என்ற வசனம் இருக்கின்றது. அப்படிப்பட்ட உபநிஷத் அதர்வத்தைச் சேர்ந்ததாகவே இருக்கிறது.

பிற்காலத்தில் அதர்வ அத்யயனம் விட்டுப் போனாலும், நீண்ட காலம் அது வழக்கில் இருந்திருக்கிறது என்பது கல்வெட்டுக்களிலிருந்து தெரிகிறது. திண்டிவனத்திற்குப் பக்கத்தில் பேரணிக்குக் கிட்டே எண்ணாயிரம் என்ற ஊரிலும், காஞ்சீபுரத்திற்குப் பக்கத்திலுள்ள வாலாஜாபாத் சமீபத்திலேயும் கிடைத்திருக்கிற கல்வெட்டுக்களில், ஆங்காங்கே இருந்த பெரிய வித்தியாசாலைகளைப் பற்றித் தகவல்கள் இருக்கின்றன. இவற்றைப் பார்த்தால் பிற்காலச் சோழர் ஆட்சிக் காலத்திலும் கூடத் தமிழ் தேசத்தில் அதர்வ வேத அத்யயனம் இருந்திருக்கின்றது என்று தெரிகிறது.

வடக்கே ஒரிசாவில் இருக்கும் பிராமணர்களில் பதினெட்டுப் பிரிவுகள் உள்ளன. அவர்களில் ஆதர்வணிகர் என்றே ஒரு பிரிவுக்குப் பெயர். அதர்வ வேதிகள் என்பதே இதற்கு அர்த்தம். இப்போதும் குஜராத், சௌராஷ்டிரம், கோசலம் முதலான தேசங்களில் ரொம்பவும் அபூர்வமாக அதர்வ வேதிகள் இருக்கிறார்கள்.

(ஸ்ரீ பெரியவர்கள் மேற்கொண்ட முயற்சிகளால் அதர்வ வேத அத்யயனம் மீண்டும் பொலிவு பெற வாய்ப்புள்ளது. தமிழக வித்தியார்த்திகளும் குஜராத்தில் உள்ள ஸினோருக்குச் சென்று அதர்வ வேதப் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.)

தெய்வத்தின் குரல் இரண்டாம் பகுதி 1978 – தொகுப்பாசிரியர் ரா.கணபதி வானதி பதிப்பகம் சென்னை)

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Nov 09, 2009 5:44 pm

வணக்கம்
தர்வ என்பதற்கு நிருக்தம் வழிதவறி போகிறவன் (eccentric)என்று பொருள் கொடுக்கப் பட்டிருக்கிறது. தறுதலை என்ற சொல் இதனடியாகப் பிறந்திருக்கலாம். அதர் என்பதற்கு வழி என்ற பொருள் உண்டு. இன்று நாம் சொல்லும் சன்னல் என்ற சொல் உருது மொழியிலிருந்து பெறப்பட்டது, அதற்குத் தக்க தமிழ்ச் சொல் காலதர் (கால் அதர்) காற்று வருவதற்கு உண்டான வழி. கூறை என்பது சீர என்றாகி சீலை என்றானாற்போலும் சேரலர் என்பது கேரளம் என்றானாற்போலும் காலதர் என்ற சொல்லாதனது சாலரம் என்றாகி விட்டது என்பர் மொழியில வல்லுநர்கள். மேலும் தைத்ரீய உபநிஷத் அறிவை பறவையாக வர்ணிக்கும். இதை விவரிக்கில் பெருகும் அதனை விடுத்து விடயத்துக்கு வருகிறேன். அறிவுக்கு யஜுர் வேதம் சிரஸ் ரிக் வேதம் வலது பக்கச் சிறகு சாமவேதம் இடது பக்கச் சிறகு என்று கூறி அதர்வ வேதத்தைப் பற்றிக் கூறுங்கால் அதர்வ அங்கீரஸ புச்சம்ப்ரதிஷ்டா என்றது, அதர்வனுக்கு புரோகிதன் என்ற பெயர் எனக்குப் புதியதாகத்தென்படுகிறது, அது ஆராய்ச்சிக்கு உட படுத்தப் படவேண்டிய விடயம் எல்லா இடங்களிலும் அதர்வ என்ற சொல் அங்கீரஸம் என்ற சொல்லுடன் பிணைந்து வருவது கண்கூடு. அதர்வன் என்றால் புரோஹிதன் என்றால் அங்கீரஸன் என்பவர் யார்? அதே நிருக்தம் அங்கீரஸம் என்பதற்கு அங்க ரஸா வை அங்கீரஸா; என்றது. அதாவது அங்கத்தில் ஏற்படும் மாற்றம் அங்கத்தை உடையவனிடம் பிரதிபலிக்கும் என்பதாம்,. ஆக நேர் வழியில் செல்பவனுக்கு உள்மாற்றம் (METABOLISM CHANGE) ஏற்படும் என்றாகிறது, ஆக அதர்வவேதம் மனோதத்துவம் பற்றியதாகத்தான் இருக்க வேண்டும் அதனைப் பில்லி சூனியத்துடன் தொடர்பு படுத்துதல் பொருந்தாக் கூற்று என்பதே என் சிற்றறிவுக்குப் படுகிறது, இறைவன் அவதாரம் செய்து அரக்கர்களை அழிக்கும் பொழுது கூட யுத்தம் தான் செய்திருக்கிறார்களே தவிர அதர்வண மந்திரத்தை உபயோகித்து தர்மத்தை நிலை நாட்டியதாகத் தெரியவில்லை, ஒருவேளை அந்த மந்திரங்கள் ஒருவன் தனக்குள் ஏற்படும் அசுர சக்திகளை அழிப்பதற்காக உண்டாவை ஆக இருக்கலாம். இது பற்றி என்னுடைய ஆய்வுகள் ஆரம்ப நிலையில் இருப்பதனால் இதற்கு மேல் ஒன்றும் சொல்ல இயலவில்லை. ஆய்ந்தவர்கள் அறிவுரை கூறினால் ஏற்கத்தயாராக உள்ளேன். எந்த வேதமும் அதனைக் கண்ட ரிஷியின் பெயரால் குறிப்பிடப்படவில்லை என்பதையும் நோக்குங்கள்
அன்புடன்
நந்திதா

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Nov 09, 2009 5:51 pm

மிக்க நன்றி 🐰

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Nov 09, 2009 5:57 pm

இதில் பல இடங்களில் அதர்வ வேதம் என்றே உள்ளது அப்படியானால் அதர்வண் வேதம் என்பது தவறான பெயரா???

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Nov 09, 2009 6:25 pm

வணக்கம்
வடமொழிச் சொல்லைத்தமிழில் கொண்டு வரும்போது சில சிக்கல்கள் ஏற்படுகின்றன. பொருத்துக்கொள்ள வேண்டும்
நி-நயி என்ற வடமொழி வேர்ச்சொற்களுக்கு நடத்திச் செல்லுதல் (TO LEAD) என்று பொருள். நேதாஜி என்ற சொலிலுள்ள நேதா என்ற சொல் இதன் அடியாகப் பிறந்தது தான். ந அல்லது ன (இந்த வேறுபாடு கிடையாது) ரகர ஒற்றுக்கு அடுத்தோ அல்லது அதற்கடுத்தோ வருமானால் ன கரம் ணகரம் ஆகி விடும், (எடுத்துக் காட்டு) தக்ஷிண அயனம் –தக்ஷிணாயனம், உத்தர அயனம் –உத்தராயணம், ராம அயனம் ராமாயணம் என்றாதலை நோக்கின் புலப்படும் அது போன்று அதர்வ என்ற சொல் குறிக்கும் நேர்வழியில் நிற்பவனை நடத்துதல் என்ற வகையில் சிற்சில இடங்களில் அதர்வண வேதம் என்று குற்ப்பிடப்பட்டிருக்கலாம், அவை எந்த எந்த இடத்தில் அவ்வாறு குறிப்பிடப் பட்டிருக்கிறது என்ற விவரம் தெரிந்தால் ஆய்ந்தோ அன்றிப் பெரியோரிடம் கேட்டோ விளக்க முயல்வேன்.எந்த வேதமும் அதனைக் கண்ட ரிஷியின் பெயரால் குறிப்பிடப்படவில்லை என்பதையும் நோக்குங்கள்
அன்புடன்
நந்திதா

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Nov 09, 2009 6:40 pm

nandhtiha wrote:வணக்கம்

நன்றி இது பற்றி வலைபுகளில் தேடும்பொழுது இந்த சுட்டி தென்பட்டது.
இதை பார்த்தால் அதர்வண வேதம் இயற்கையையும் இயற்கை வாழ்வியலையும் குறிப்பது போல் உள்ளது.
இது பற்றி தங்களின் கருத்தறிய விரும்புகிறேன்

வேதங்கள் மூன்று தான் என்று முதலில் வழங்கி வந்தனர். இதில் ரிக் வேதம் செய்யுள் நடையிலும், யஜுர் வேதம் உரை நடையிலும், சாம வேதம் பாடல் நடையிலும் எழுதப்பட்டு ஓதப் பட்டு வந்தன.

பிறகு மகரிஷிகள் அதர்வணராலும் ஆங்கீரசராலும் அவர்களுடைய சிஷ்யர்களுக்கு அளிக்கப் பட்டது தான் அதர் வண வேதம். குறிப்பாக அதர்வனரின் பெயரைக் கொண்டே வழங்கப் படுவது அதர்வண வேதம்.

மற்ற மூன்று வேதங்களை விடவும் மிகப் பெரியது அதர்வண வேதம். அது 20 காண்டங்களைக் கொண்டது.(ஒவ்வொரு காண்டமும் ஒரு புத்தகம் எனக் கொள்ளலாம்). இதில் மொத்தம் 5987 செய்யுள்கள் உள்ளன.

ஒவ்வொரு காண்டமும் ஒரு வகையான அறிவைக் குறித்து எழுதப்பட்டுள்ளது. உதாரணமாக மருந்துகளும், ஆரோக்கிய வாழ்வும் பற்றி ஒரு புத்தகம் உள்ளது. இதே போல
2. மன அமைதியும் வாழ்வு நெறிகளும்.
3.கடவுளர்களும் அவர்களது சக்திகளும்.
4.பூமித்தாயின் புகழ். (பூமி சுக்தம்)
5.அரசியலும் நிர்வாகமும் (சாணக்கியரின் அர்த்த சாஸ்த்திரம் என்ற புத்தகத்திற்கு இதுவே முன்னோடி)
6. மனோ தத்துவம்.
7.கலியாணம் மற்றும் மனையியல்
8. கட்டிடக்கலை / வாஸ்த்து சாஸ்த்திரம்
9.தொழிலும்தொழில் முறையான ஜாதிப் பிரிவுகளும்.
10. உணவு முறைகள். யார் என்ன உணவு உண்ணலாம் என்ற நெறி முறைகள்.
11. மழை பொழிய வைக்கும் மந்திரங்கள்.
12.நேரம், காலம், தசம அளவுகள்
இது போல இன்னும் பல அறிவு சார்ந்த தலைப்புகளில் இந்த செய்யுள்கள் உள்ளன.

இதில் மொத்தமாகப் பார்த்தால், முன்னே உள்ள மூன்று வேதங்களில் உள்ள ‘கடவுளைத் தேடும்’ மன விசாரம் இல்லை. உலகாதாய (Materilaisam) பருப்பொருள் சார்ந்த அறிவே அதர்வண வேதத்தில் இருப்பது கண்கூடு.

எனவேதான், ஒரு உண்மையான(?) பிராமணன் அதர்வண வேதத்தைத் தவிர்த்திருக்கலாம்.

ஆனால் பிற்காலத்தில் எழுதப் பட்ட மஹாபாரதம், முண்டக உபநிஷத் போன்றவற்றில் வேதம் நான்கு எனக் கூறப்படுகிறது. எனவே நாமும் வேதம் நான்கு என்று ஏற்றுக் கொண்டு விட்டோம்.

ஆனாலும், அதர்வண வேதம் அழிய வில்லை.

தேள்கடிக்கு மந்திரித்துக் கொண்டாலும், வாஸ்து நிபுணரின் ஆலோசனைப் படி உங்கள் பெட் ரூமை மாற்றியமைத்துக் கொண்டாலும், ஒரு ஜோசியர் உங்கள் ஜாதகத்திற்கு ஏற்ற பெண்ணைப் பார்த்துக் கொடுத்தாலும் அங்கே அதர்வண வேதம் உபயோகப் பட்டுள்ளது என்பதை அறியவும்.

ஆதாரம்: Essentials Of Atharva Veedha – By
R.L. Kashyap -Professor of Electrical and Computer Engg, Purdue University, USA.

Published by :
Sri Aurobindo Kapali Sastry Institute of Vedic Culture, Bangalore.

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Nov 09, 2009 7:17 pm

வணக்கம்
மகரிஷி வாசிஷ்ட கணபதி, மற்றும் கபாலி சாஸ்திரி முதலியவர்கள் வேத ஞானம் அதிகம் உடையவர்கள். வாழ்வியலைக்கூறும் அநேக விடயங்கள் அதர்வ வேதத்தில் உள்ளன என்பது உண்மை, வாஸ்து சாஸ்திரம் என்பது ஸ்தாபத்திய வேதம் என்ற தனிப்பகுதி, இது அதர்வ வேதத்தில் சிறிதளவே இடம் பெற்றிருக்கிறது, மகரிஷி மகேஷ் யோகியினால் இது அதிகம் விளக்கம் பெற்றது, கடவுளைத்தேடும் மனவிசாரம் இல்லை என்பதை ஏற்க முடியவில்லை, காரணம் முண்டக உபநிஷத்தில் உள்ள ஒரு ஸ்லோகத்தைத் தருகிறேன், இதற்கு ஆதி சங்கரர் ஸ்ரீ ராமானுஜர் மற்றும் ஸ்ரீமத்வாச்சாரியார் மூவரும் உரை எழுதி இருக்கின்றனர்,
அந்த சுலோகம் வருமாறு
யதா நத்ய ஸ்யந்தமானா: ஸமுத்ரே அஸ்தம் கச்சந்தி நாம ரூபே விஹாய
ததா வித்வான் நாம ரூபாத் விமுக்த: பராத்பரம் புருஷம் உபைதி திவ்யம்
பொருள்: யதா ஸ்யந்தமானா; நத்ய; பெருகுகின்ற நதிகள், நாம ரூபே விஹாய - பெயர் உருவமெல்லாவற்றையும் விட்டு விட்டு ,ஸமுத்ரே அஸ்தம் கஸ்சந்தி -மறைதலை அடைகிறதோ ததா- அது போன்று வித்வான் - அறிய வேண்டியதை அறிந்து கொள்ளும் பேரறிஞன், நாம ரூபாத் விமுக்த:- தன் பெயர் உருவம் முதலியவற்றை விட்டு விட்டு , பராத்பரம் புருஷம் உபைதி - எல்லாவற்றுக்கும் மேலான பரம்பொருளை அடைகிறான், என்பதாகும், கடவுளைத் தேடும் மனவிசாரமில்லாவிட்டால் இந்த சுலோகத்தின் அவசியம் என்ன? இதன் தாக்கத்தால் தான் " வள்ளுவப் பெருந்தகையும், உலகத்தில் வாழ வேண்டிய முறைப்படி வாழ்கின்றவன் வானத்தில் உறையும் தெய்வத்தோடு வைக்கப் படுவான் என்று எழுதினாரோ என்ற ஐயமும் ஏற்படும். பின்னால் வந்த ஆண்டாளம்மையும் வையத்து வாழ்வீர்காள் என்ற பாசுரத்தில் உலகத்தில் வாழ வேண்டிய முறை பற்றிக் கூறினார்.
அன்புடன்
நந்திதா

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Nov 09, 2009 7:29 pm

நன்றி

இது ஒரு துளிதான் இதை வைத்து ஒரு முடிவுக்கு வர இயல்லவில்லை.

இது பற்றி இன்னும் அறிய ஆவலாக உள்ளது.

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Nov 09, 2009 7:56 pm

வணக்கம்
தங்களின் ஆர்வம் என்னையும் சிந்திக்கத்தூண்டுகிறது, முயல்வோம். இறையருள் கிட்டும்
அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக