புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நம் மீது பழி கூறுபவருக்கு நாக்கு ஒன்றா? இரண்டா? பவானி சிங் பதில் கூறுவாரா? - கருணாநிதி Poll_c10நம் மீது பழி கூறுபவருக்கு நாக்கு ஒன்றா? இரண்டா? பவானி சிங் பதில் கூறுவாரா? - கருணாநிதி Poll_m10நம் மீது பழி கூறுபவருக்கு நாக்கு ஒன்றா? இரண்டா? பவானி சிங் பதில் கூறுவாரா? - கருணாநிதி Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram

59 Posts - 41%
mohamed nizamudeen

6 Posts - 4%
ஜாஹீதாபானு

4 Posts - 3%
bala_t

1 Post - 1%
prajai

rajuselvam

Kavithas

இந்த மாத அதிக பதிவர்கள்

290 Posts - 42%

287 Posts - 41%
Dr.S.Soundarapandian
நம் மீது பழி கூறுபவருக்கு நாக்கு ஒன்றா? இரண்டா? பவானி சிங் பதில் கூறுவாரா? - கருணாநிதி Poll_c10நம் மீது பழி கூறுபவருக்கு நாக்கு ஒன்றா? இரண்டா? பவானி சிங் பதில் கூறுவாரா? - கருணாநிதி Poll_m10நம் மீது பழி கூறுபவருக்கு நாக்கு ஒன்றா? இரண்டா? பவானி சிங் பதில் கூறுவாரா? - கருணாநிதி Poll_c10 
52 Posts - 7%

26 Posts - 4%
sugumaran

16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நம் மீது பழி கூறுபவருக்கு நாக்கு ஒன்றா? இரண்டா? பவானி சிங் பதில் கூறுவாரா? - கருணாநிதி Poll_c10நம் மீது பழி கூறுபவருக்கு நாக்கு ஒன்றா? இரண்டா? பவானி சிங் பதில் கூறுவாரா? - கருணாநிதி Poll_m10நம் மீது பழி கூறுபவருக்கு நாக்கு ஒன்றா? இரண்டா? பவானி சிங் பதில் கூறுவாரா? - கருணாநிதி Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%
manikavi

4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் மீது பழி கூறுபவருக்கு நாக்கு ஒன்றா? இரண்டா? பவானி சிங் பதில் கூறுவாரா? - கருணாநிதி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 11, 2014 3:52 am

பெங்களூரில் நடைபெற்ற சொத்துக் குவிப்பு வழக்கு பற்றி பல "உடன்பிறப்பு" மடல்களில், தொடர்ந்து பல தகவல்களை தீர்ப்பு வருவதற்கு முன்பு உனக்குத் தெரிவித்திருக்கிறேன். தீர்ப்பு வந்த பிறகு நான் எந்தக் கருத்தையும் தெரிவிக்க வில்லை, மௌனமாக இருக்கிறேன் என்ற கருத்து பரவலாகப் பேசப்படுகின்ற காரணத்தாலும், இன்று அரசு வழக்கறிஞர் பவானி சிங் அளித்த பேட்டி ஒன்றில் தி.மு. கழகத்தைக் குறை கூறியிருப்ப தாலும், அரசு வழக்கறிஞர்கள் பற்றியும், குறிப்பாக வழக்கறிஞர் பவானி சிங் அவர்களைப் பற்றியும் சில கருத்துகளைத் தெரிவிக்கின்றேன். ஏனென்றால் பவானி சிங் அளித்துள்ள பேட்டியில், "நான் குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல் பட்டேன் என்று எப்படி சொல்ல முடியும்? சட்டம் தெரியாதவர்கள் வேண்டுமானால் எனது நிலைப்பாட்டை விமர்சிக்கலாம். நான் மனசாட்சி யுடன் நடந்து கொண்டேன். இந்த வழக்கில் என்னை உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் கர்நாடக அரசு வக்கீலாக நியமனம் செய்யப்பட்ட நாள் முதல், குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக தி.மு.க.வினர் கூறினர். அதை தீர்ப்பின் மூலம் பொய்யாக்கினேன். இப்போதும் அதே விமர்சனம் வைக்கிறார்கள். இது சரியல்ல"" என்றெல்லாம் தெரிவித்திருப்பதால், அவரது செயல்பாடுகள் குறித்து விளக்குகிறேன்.

ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை முதலில் தமிழகத்தில் நடைபெற்ற போது, ஆளுங்கட்சியாக அ.தி.மு.க. இருந்தது. விசாரணை முறையாக நடக்கத் தவறியது கண்டும், ஏற்கனவே முறையாக சாட்சியம் அளித்தவர்களையெல்லாம் மிரட்டி மாறுபட்ட கருத்தினை வலியுறுத்தி வாங்கிய காரணத்தாலும், அந்த வழக்கினை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரி கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்கள் தொடுத்த வழக்கில் 2003ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதியன்று தீர்ப்பளித்த உச்சநீதி மன்ற நீதிபதிகள் எஸ்.என்.வரியவா, எச்.கே.சேமா ஆகியோர் கொண்ட பெஞ்ச்தான், வழக்கினை பெங்களூருக்கு மாற்றி தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த கருத்து என்ன தெரியுமா?

" “It does appear that the new public prosecutor is hand in glove with the accused thereby creating a reasonable apprehension of likelihood of failure of justice in the minds of the public at large. There is strong indication that the process of justice is being subverted.” " (புதிய அரசு வழக்கறிஞர்; குற்றவாளி களான ஜெயலலிதா குழுவினரோடு இணைந்து செயல்படுவது நன்றாகத் தெரிகிறது. அதன் காரணமாக பொதுவாக நீதி கிடைக்காது என்ற ஒரு நம்பத் தகுந்த ஐயம் மக்கள் மனதிலே எழுந்துள்ளது. நீதி திசை திரும்பிச் செல்வது நிச்சயமாகத் தெரிகின்றது.

313வது விதிப்படி நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்படும்போது, ஜெயலலிதா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாமல் இருக்க, அவர்கள் சார்பாக தாக்கல் செய்த தவறான மனுவிற்கு அரசு வழக்கறிஞர் எதிர்ப்பே தெரிவிக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது வருந்தத்தக்கது. (The conduct of the Public Prosecutor in not opposing such a frivolous application has to be deprecated)

ஜெயலலிதா நேரில் ஆஜராகாமல் இருக்க விசாரணை நீதிமன்றம் அனுமதி கொடுத்த தற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களுடைய கடுமையான எதிர்ப்பை இந்தத் தீர்ப்பிலே தெரிவித்திருப்பதோடு, "நீங்கள் எவ்வளவு பெரியவராக இருந்த போதிலும், உங்களை விட சட்டம் பெரியது. நேரில் ஆஜராகாமல் இருக்க விதிவிலக்கு கொடுக்கக்கூடிய அளவிற்கு அவரது மனுவிலே காரணங்கள் கூறப்படவில்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், நீதியின் பாதையிலே குறுக்கிட்ட செயல்தான் நடைபெற்றுள்ளது"" . The Judges took serious exception to the trial court dispensing with the personal appearance of Ms. Jayalalithaa and said “be you ever so high, the law is above you. The grounds cited by her in the application were not all mitigating circumstances to have granted dispensation of personal appearance. To say the least, that was a ploy adopted to circumvent the due process of law.

மேலும் அந்தத் தீர்ப்பில், "குற்றவாளிகள் அனைவரும் கேள்வி எழுப்பப்படும்போது நீதிமன்றத் தில் தவறாது ஆஜராவதுடன், இவ்வழக்கை தினமும் (Daily Basis) எடுத்து விசாரிக்க வேண்டும். வழக்கு தொடர்புடைய அனைத்து ஆவணங்களை யும் தமிழ்நாடு அரசு உடனடியாக சிறப்பு நீதி மன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்"" என்று உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்டது.

உச்ச நீதிமன்றம் இந்த வழக்கினை விரைவாக விசாரிக்க வேண்டுமென்றும், அன்றாடம் விசாரிக்க வேண்டுமென்றும் ஆணை பிறப்பித்து அது வெளிவந்தது

18-11-2003. அப்போது தமிழகத்தில் நடைபெற்றது அ.தி.மு.க. ஆட்சி. இந்த உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று, சென்னை தனி நீதிமன்றம், வழக்கை பெங்களூருக்கு மாற்றம் செய்வதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை எப்போது பிறப்பித்தது தெரியுமா? 10-9-2004. அதாவது பத்து மாதங்களுக்குப் பிறகுதான் அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இது அப்போதைய நிலைமை. தற்போது என்ன நிலை தெரியுமா? அரசு வழக்கறிஞர், குற்றஞ் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வாதாட வேண்டி யவர். ஆனால் தற்போது அரசு வழக்கறிஞராக உள்ள பவானி சிங் அவர்கள், அவ்வாறு வாதாடாமல் அரசு வழக்கையே குலைக்கும் வகையில், வழக்கின் புலன் விசாரணை அதிகாரியையே குற்றவாளிகள் தரப்புச் சாட்சியாக விசாரணை செய்ய அனுமதித்ததோடு, இவ்வழக்கில் கைப்பற்றப்பட்ட தங்க மற்றும் வைர நகைகளை, வழக்கை விசாரிக்கும் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வராமலே, வழக்கின் இறுதி வாதத்தை முடிக்க ஆர்வம் காட்டினார். இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், நம்முடைய பேராசிரியர் அவர்கள், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பவானி சிங்கை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்று ஒரு வழக்கினைத் தாக்கல் செய்தார். அதன் காரணமாக கர்நாடக மாநில அரசும் உடனடியாக செயல்பட்டு அரசு வழக்கறிஞர் பதவியிலிருந்து பவானி சிங்கை நீக்கி உத்தரவிட்டது. ஆனால் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா தரப்பினர் உச்ச நீதிமன்றம் வரை சென்று, தங்களுக்கு எதிராக வாதாட வேண்டிய அரசு வழக்கறிஞராக பவானி சிங் அவர்கள் நீடிக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்கள்.

குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயலலிதா தரப்பினருக்கு ஆதரவாகவும், அரசு தொடுத்துள்ள வழக்குக்குப் பாதகமாகவும் பவானி சிங், எந்தெந்த வகையில் நடந்து கொள்கிறார் என்பதற்கான பல சான்றுகளும் அப்போது உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட போதிலும், அரசு வழக்கறிஞரான பவானி சிங் அவர்களை கர்நாடக மாநில அரசே மாற்றிய நிலையில்கூட, உச்ச நீதிமன்ற நீதிபதி, திரு. சவுஹான் அவர்கள் இந்த வழக்கினை பவானி சிங் அவர்களே தொடர்ந்து அரசு சார்பில் நடத்தலாம் என்று முடிவு செய்து அறிவித்தார்.

27-1-2014 அன்று நடைபெற்ற விசாரணையின் போது, வழக்கிலே குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு நேரில் ஆஜராகாமல் இருப்பதற்காக விலக்களிக்க வேண்டுமென்று கோரி, அவர் களுடைய வழக்கறிஞர்கள் நீதிபதியின் முன்னால் மனுக்கள் தாக்கல் செய்திருக்கிறார்கள். அதில் ஜெயலலிதா, தமிழக முதல்வராக இருப்பதால் அரசுப் பணி இருப்பதாகவும், சசிகலாவுக்கு கண் வலி இருப்பதாகவும், சுதாகரனுக்கு மூட்டு வலி இருப்ப தாகவும், இளவரசிக்கு நீரிழிவு நோய் இருப்பதாக வும், அதனால் நீதிமன்றத்திற்கு வர இயலவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இதற்கு ஆட்சேபணை தெரிவிக்க வேண்டிய எதிர் தரப்பு வழக்கறிஞர், அதாவது அரசு வழக்கறிஞர் பவானி சிங் அவர்கள், எந்த விதமான ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை. அரசு வழக்கறிஞர் பவானி சிங் ஆட்சேபணை தெரிவிக்காத காரணத்தால், நீதிபதி அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார். அப்போதுகூட நீதிபதி, "நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்குக் கோரும் மனுவில் உரிய மருத்துவச் சான்றிதழ்கள் இணைக்கப்படவில்லை. இருப்பினும் இந்த முறை மட்டும் இம்மனுக்களை ஏற்றுக் கொள்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.

அடுத்து ஜெயலலிதாவின் வழக்கறிஞர், தங்கள் கட்சிக்காரர்களின் வீடுகளில் சோதனை செய்த போது கைப்பற்றப்பட்ட பொருள்களில் வழக்குக்குத் தொடர்பில்லாதவற்றை திரும்பக் கொடுக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு ஒரு மனுவினை புதிதாக தாக்கல் செய்தார். கைப்பற்றப்பட்ட பொருள்களைத் திரும்ப கொடுக்க வேண்டுமா, வேண்டாமா என்பதற்கு ஆட்சேபணையைத் தெரிவிக்குமாறு நீதிபதி அரசு வழக்கறிஞரைக் கேட்டால், அதற்கு அரசு வழக் கறிஞர் இரண்டு வார காலம் அவகாசம் வேண்டும், 2 வாரத்திற்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்று கேட்டார்.

அரசுத் தரப்பு வழக்கறிஞர் இவ்வாறு கால அவகாசம் கேட்டபோது, அதிருப்தி தெரிவித்த நீதிபதி, "இது குற்றவியல் நீதிமன்றமா அல்லது ஒத்திவைப்பு நீதிமன்றமா?" என்று முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்பியிருக்கிறார். மேலும் நீதிபதி அவர்கள், "இந்த வழக்கு விசாரணை கடந்த பதினைந்து ஆண்டுகளாக நடந்து வருகிறது. விசாரணை நடந்த நாட்களைக் காட்டிலும், ஒத்தி வைக்கப்பட்ட நாட்கள்தான் அதிகம் இருந்துள்ளது. தனி நீதிமன்றம் மற்றும் தனி நீதிபதி நியமனம் செய்ததின் நோக்கம், விசாரணை தினமும் நடந்து விரைவில் முடிக்க வேண்டும் என்பதற்காகத்தான். அந்த நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை. இனியாவது வழக்கு தடை இல்லாமல் நடக்க வேண்டும்" என்றெல்லாம் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா கருத்து தெரிவித்தார்.

ஜனவரி 20ஆம் தேதியன்று விசாரணை நடந்த போது, சென்னையிலிருந்து பெங்களூர் கொண்டு வரப்பட்ட அசையும் சொத்துக்கள் தொடர்பான அத்தனை விவரங்களையும், பரிசுப் பொருள் களின் பட்டியலையும் தங்களுக்கு வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்து, நீதிபதி அப்போது அதனைத் தள்ளுபடி செய்தார்.

மேலும் நீதிபதி அவர்கள், இந்த வழக்கை விரைந்து முடிக்க வசதியாக, வழக்கறிஞர்களின் இறுதி வாதம் பிப்ரவரி மாதம் 3ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்றும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தினமும் விசாரணை நடக்கும் என்றும், முதலில் அரசு தரப்பு வழக்கறிஞர் வாதம் செய்தபின், குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு வழக்கறிஞர் வாதம் செய்ய வேண்டும் என்றும், இறுதிக் கட்ட வாதம் தொடங்குவதை எந்த நிலையிலும் காலம் கடத்த முடியாது என்றும் தெரிவித்தார்.

ஏற்கனவே 15 ஆண்டுகளுக்கும் மேலாகத் திட்டமிட்டு, வழக்கு தாமதப்படுத்தப்பட்ட இந்த நிலையிலும் இந்த வழக்கினை மேலும் தொடர்ந்து தாமதப்படுத்த பல்வேறு தந்திரங்களும் உத்தி களும் கையாளப்பட்டன. அதிலே ஒன்றுதான் அரசு வழக்கறிஞர், பவானி சிங் அவர்களே சில நாட்களுக்கு முன் ஒரு மனுவினைத் தாக்கல் செய்தார். அதாவது சென்னையில் உள்ள பாஸ்கரன் என்பவரிடம் கொடுக்கப்பட்ட ஜெய லலிதாவுக்குச் சொந்தமான 1,116 கிலோ வெள்ளிப் பொருள்களை, பெங்களூர் நீதிமன்றத்துக்குக் கொண்டு வர வேண்டுமென்று ஒரு மனுவினை பவானிசிங் நீதிபதியிடம் தாக்கல் செய்தார். வழக்கு முடிகின்ற நேரத்தில், அரசு வழக்கறிஞர் இவ்வாறு ஒரு மனுவினைத் தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் என்ன? வழக்கினை தாமதப் படுத்த வேண்டுமென்ற எண்ணத்தோடு அந்த மனு, அரசு வழக்கறிஞரால் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், பேராசிரியர் சார்பில் ஒரு மனு மூலமாக அந்த பாஸ்கரன் ஏற்கனவே இறந்து விட்டார் என்ற விவரம் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுவினை தள்ளுபடி செய்துதான், சிறப்பு நீதிபதி 28-2-2014 அன்று தீர்ப்பு அளித்திருக்கிறார். அந்தத் தீர்ப்பில்தான்,
"இந்த வழக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக பெங்களூரில் நடந்து வருகிறது. நீதிபதி பி.ஏ. மல்லிகார்ஜுனையா, இந்த வழக்கினை விசாரித்தபோது, குற்றவியல் நடைமுறைச் சட்டம், 313இன் கீழ், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராகி, வாக்குமூலம் கொடுத்து விட்டனர். நீதிபதி பாலகிருஷ்ணா இந்த வழக்கினை விசாரித்த போது, சாட்சிகள் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டது. அரசு மற்றும் குற்றம் சாட்டப் பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர்களும் வாதத்தை முடித்து விட்டனர். இந்த வழக்கு தொடர்பாக அனைத்து விவகாரங்களும் முடிந்துள்ளதாக நீதிபதி பாலகிருஷ்ணா 14-8-2013 அன்றே குறிப்பிட்டிருந்தார். தற்போது வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 13 ஆண்டுகளாக அரசுத் தரப்பில் ஜெயலலிதா தரப்புக்குச் சொந்தமான இந்த வெள்ளிப் பொருள்களை பாஸ்கரனிடமிருந்து பெற்றுக் கொண்டு வந்து நீதிமன்றத்தில் ஒப்படைப்பது குறித்து எந்தவித மான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சார்பில் இதுபற்றி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்று, சென்னையில் இருந்த தங்க, வெள்ளி ஆபரணங் கள் பெங்களூருக்கு கொண்டுவரப்பட்ட நேரத்தில், பாஸ்கரனிடமிருந்து இந்த வெள்ளிப் பொருள் களைக் கொண்டுவர வேண்டுமென்று அரசு வழக் கறிஞர் பவானி சிங் ஏன் மனு தாக்கல் செய்ய வில்லை?அரசு வழக்கறிஞரான, பவானி சிங் கடந்த 2013ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து பணியாற்றி வருகிறார். அந்தக் கால கட்டங்களில் இதுபோன்ற மனு எதையும் அவர் தாக்கல் செய்ய வில்லை.

இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்டு மூன்று நாட்கள் வாதம் செய்ததாகச் சொல்லும் பவானி சிங்கிற்கு, முதல் குற்றவாளி யின் வெள்ளிப் பொருள்கள் சென்னையில் இருப்பது தெரியவில்லையா? வழக்கில் இறுதி வாதத்திற்காக ஆவணங்களைப் படித்த போது தான் வெள்ளிப் பொருள்கள் குறித்த விவரம் அவருக்குத் தெரிந்ததாகச் சொல்வது உண்மை யாகவும், நம்பும் வகையிலும் இல்லை. மேலும் வெள்ளிப் பொருள்களை வாங்கிச் சென்ற பாஸ்கரன் உயிருடன் இல்லை என்பது தெரிந்தும், அவரிடம் பொருள்களை கேட்கச் சொல்வதும், அவர் இறந்து விட்ட தகவல் நீதிமன்றத்தில் மரணச் சான்றிதழுடன் உறுதி செய்யப்பட்ட போதும், அரசு வழக்கறிஞர் அதனை ஏற்காமல், தனது கருத்தில் உறுதியாக இருந்து, தொடர்ந்து மனுவை வலியுறுத்துவதும் சட்டப்படி ஏற்கத்தக்கதல்ல.

இதனைப் பார்க்கும்போது, வழக்கைக் காலதாமதம் செய்யும் நோக்கத்தில் அரசு வழக்கறிஞர் பவானி சிங் நடந்து கொண்டார் என்றே கருதத் தோன்றுகிறது. கால நேரத்தை வீணாக்க வேண்டிய அவசியமில்லை. அந்த வாதமும் சரியானதல்ல. எனவே வெள்ளிப் பொருள்களைக் கொண்டுவர வேண்டுமென்ற அரசு வழக்கறிஞரின் மனுவில் எவ்வித முகாந்திரமும் இல்லை. இது தேவையற்ற மனு என்று கருதி தள்ளுபடி செய்கிறேன்"

- என்று அரசு வழக்கறிஞர், பவானி சிங் அவர்களின் மனு பற்றி சிறப்பு நீதிபதி அவர்கள் தன்னுடைய உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறார் என்றால், இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர், பவானி சிங் எவ்வாறெல்லாம் குற்றஞ்சாட்டப்பட்டவர் களுக்கு அனுசரணையாக நடந்து கொண்டார் என்பதைப் புரிந்துகொள்ள வேறு உதாரணம் வேண்டுமா?

நீதிபதி ஜான் மைக்கேல் டி. குன்கா 7-3-2014 அன்று இறுதி வாதம் தொடங்குமென்று அறிவித்தார். ஆனால் அன்றையதினம் அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜராகவே இல்லை. வழக்கு 10ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 10ஆம் தேதியன்றும் அரசு வழக்கறிஞர், பவானி சிங் ஆஜராகவில்லை. இதை அடுத்து வழக்கு 14-3-2014 அன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி இறுதி வாதத்தைத் தொடங்க உத்தரவிட்டார். அன்றைய தினம் பவானி சிங் நீதி மன்றத்தில் ஆஜராகி, உடல் நிலை சரி யில்லை என்று காரணம் கூறி, வழக்கு விசாரணை யைத் தாமதப்படுத்த அவர் மேற்கொண்டு வரும் முயற்சியின் தொடர்ச்சியாக பத்து நாட்கள் அவகாசம் கேட்டுக் கொண்டதோடு, அதற்கான மருத்துவச் சான்றிதழ்களையும் சமர்ப்பித்தார். நீதிபதி அந்தச் சான்றிதழ்களைப் பார்த்து அதிருப்தி அடைந்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜராகியும் வாதிடாத அரசு வழக்கறிஞர் பவானி சிங் அவரது ஒரு நாள் ஊதியமான 65 ஆயிரம் ரூபாயை அபராதமாக செலுத்த வேண்டுமென்று உத்தரவிட்டார். 15ஆம் தேதியன்றும் பவானி சிங் நீதிமன்றத்தில் எந்தவித அறிவிப்புமின்றியும், காரணத்தைத் தெரிவிக்காமலும் ஆஜராகவில்லை. அவரது உதவியாளர், முருகேஷ் அரசு வழக்கறிஞர் வராதது பற்றித் தனக்கு எதுவும் தெரியாது என்றார். எனவே அரசு வழக்கறிஞரின் அன்றைய நாள் சம்பளமான 65 ஆயிரம் ரூபாயையும் அபராதமாக செலுத்த நீதிபதி உத்தரவிட்டார்.

ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், அரசு வழக்கறிஞரின் வாதம் முடிந்த பிறகுதான் தங்கள் வாதத்தைத் தொடங்க முடியுமென்று கூறி விட்டார்கள். அதற்குப் பிறகு நீதிபதி அவர்கள் அரசு வழக்கறிஞர் 21-3-2014 அன்று வாதத்தைத் தொடங்க வேண்டுமென்று கண்டிப்பாக உத்தர விட்டார்.

இதற்கிடையே அரசு வழக்கறிஞர் பவானி சிங், நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாததற்காக சிறப்பு நீதிமன்றம் விதித்த அபராதத்தை ரத்து செய்ய வேண்டுமென்று கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண ராவ் தள்ளுபடி செய்தார்.

ஜெயலலிதாவுக்கு எதிராக வாதாடுவதற்காக அரசினால் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர், கடமை தவறி நடந்து கொள்கிறார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகி, கர்நாடக அரசே அவரை விலக்கிய நிலையில், ஜெயலலிதா தரப்பினர் உச்ச நீதிமன்றம் வரை அதே அரசு வழக்கறிஞரான பவானி சிங் அவர்களே நீடிக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்து, உச்ச நீதிமன்ற நீதிபதி சவுஹான் அவர்கள் தான் அப்போதும் பவானி சிங் தொடரலாம் என்று உத்தரவிட்டார். அந்த அரசு வழக்கறிஞர், சிறப்பு நீதி மன்றத்தில், தொடர்ந்து ஆஜராகாத காரணத்தால், சிறப்பு நீதிபதி அபராதம் விதித்தார். அதனை எதிர்த்து பவானி சிங் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து, அங்கேயும் அவருடைய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த வழக்கிலே சிறப்பாக வாதிட்டு குற்றவாளி களுக்குத் தண்டனை வாங்கித் தந்ததாக மார் தட்டிக் கொள்ளும் பவானி சிங்கைப் பற்றி நீதிபதி குன்ஹா அவர்கள், தனது தீர்ப்புரையில், "அரசு வழக்கறிஞர் பவானி சிங், அரசு சாட்சிகளின் முதல் விசார ணையை மட்டும் படித்துவிட்டு, தனது வாதங்களை முடித்துவிட்டார் என்று குறிப்பிட்டிருக்கிறார்" என்பதிலிருந்தே, இந்த வழக்கிலே அரசு வழக் கறிஞர் எவ்வாறு செயல்பட்டிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

இப்படிப்பட்ட "புகழ்"களுக்கு உரிய பவானி சிங் அவர்கள்தான் தி.மு.க. அவரைப் பற்றித் தவறாகக் குற்றஞ்சாட்டுவதாக பேட்டி கொடுத்துள்ளார். தற்போது கூட கர்நாடக உயர் நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு ஜாமீன் கொடுக்கலாமா என்று நீதிபதி கேட்டபோது, ஜாமீன் கொடுக்கக்கூடாது என்று கடுமையாக எழுத்து மூலமாக தனது எதிர்ப்பை காலையிலே தாக்கல் செய்து விட்டு, மாலையில் ஜாமீன் கொடுக்கலாம் என்று வாய்மொழியாகப் பரிந்துரை செய்து, இந்த  வழக்கு விசாரணையை உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தவர்களையெல்லாம் குழப்பத்தில் ஆழ்த்தியவர்தான் அரசு வழக்கறிஞர் பவானி சிங்! காலையிலே அவர் எழுதிக் கொடுத்ததற்கும், மாலையில் வாய்மொழியாகக் கூறியதற்கும் இடையிலே நடைபெற்றது என்ன? அவரைப் பற்றி தி.மு.க. அல்ல, ஜாமீன் வழக்கை விசாரித்த கர்நாடக மாநில உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித் துள்ள கருத்து என்ன தெரியுமா?

"சொத்துக் குவிப்பு வழக்கில் அரசின் சார்பில் ஆஜராகி வாதிட்டு, குற்றவாளிகளுக்கு சிறை தண்டனையும், அபராதமும் வாங்கிக் கொடுத்த அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானிசிங், கடந்த 30ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்சேபணை மனுவில், "குற்றவாளிகளை ஜாமீனில் விடுதலை செய்தால், அவர்கள் தப்பி விடுவார்கள். அதன் மூலம் நீதிமன்றத் தண்ட னையை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்படும்" என்று தெரிவித்திருந்தார். அதே வழக்கறிஞர், "குற்றவாளிகளை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யலாம்"" என்று மாற்றிக் கூறியுள்ளார். குற்றவாளிகளை ஜாமீனில் விடுதலை செய்ய அரசு விரும்பினாலும், அவர்கள் மீதான குற்றத்தைப் பார்க்கும்போது, அவர்கள் ஜாமீனில் விடுதலை யாகும் தார்மீக உரிமையை இழந்துள்ளதால், நீதிமன்றம் ஜாமீன் வழங்காது"" என்று கர்நாடக மாநில உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.வி. சந்திரசேகரா அவர்கள் தீர்ப்பில் குறிப்பிட்டிருப்பது பவானி சிங் அவர்களுக்கு அளித்த பாராட்டிதழா? பவானி சிங் பதில் கூறுவாரா?

நம் மீது பழி கூறுபவருக்கு நாக்கு ஒன்றா? இரண்டா? பவானி சிங் பதில் கூறுவாரா? - கருணாநிதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81958
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 11, 2014 7:33 am

இனி ஆக வேண்டுவது என்ன என்பதை
பார்க்க வேண்டும்...
-
குப்பையைக் கிளறுவதால் எந்த பயனும் இல்லை...!
-

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Oct 11, 2014 8:51 am

ஒன்றில் பெரியர் ஒன்றில் சிறியர்.....மனிதமனம் கணினி அல்லவே .....மனோவேகப்படி தான் செல்லும் அதில் ஏற்ற தாழ்வும் விருப்பு வெறுப்பும் கலப்பது இயற்கைதான்.. தீர்வும் கணினியில் @ ரோபோல வந்துவிட்டால் யார் யார்மீதும் குறை கூரா நிலை ஏற்படும் இதுசாத்தியமா....!!!!!! அப்போதுகூட (ரோபோ) கணினியை...............செய்வார்களோ....!!!!

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Oct 11, 2014 11:16 am

அரசு தரப்பிற்கு எதிராக வாதிடும் வழக்கறிஞர் அவருக்கு ஜெயலலிதா உச்ச நீதிமன்றம் வரை சென்று பவானி சிங் அவர்களை மீண்டும் வாதாட வைத்ததில் ஏதோ மர்மம் உள்ளது...

எது எப்படியோ தீர்ப்பு வந்துவிட்டது...
இதன் பிறகு மேல்முறையீட்டை பற்றி பேசுவோம்...

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

நம் மீது பழி கூறுபவருக்கு நாக்கு ஒன்றா? இரண்டா? பவானி சிங் பதில் கூறுவாரா? - கருணாநிதி W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக