புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியருக்கு அமைதிக்கான நோபல் பரிசு: Poll_c10இந்தியருக்கு அமைதிக்கான நோபல் பரிசு: Poll_m10இந்தியருக்கு அமைதிக்கான நோபல் பரிசு: Poll_c10 
21 Posts - 66%
heezulia
இந்தியருக்கு அமைதிக்கான நோபல் பரிசு: Poll_c10இந்தியருக்கு அமைதிக்கான நோபல் பரிசு: Poll_m10இந்தியருக்கு அமைதிக்கான நோபல் பரிசு: Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியருக்கு அமைதிக்கான நோபல் பரிசு: Poll_c10இந்தியருக்கு அமைதிக்கான நோபல் பரிசு: Poll_m10இந்தியருக்கு அமைதிக்கான நோபல் பரிசு: Poll_c10 
63 Posts - 64%
heezulia
இந்தியருக்கு அமைதிக்கான நோபல் பரிசு: Poll_c10இந்தியருக்கு அமைதிக்கான நோபல் பரிசு: Poll_m10இந்தியருக்கு அமைதிக்கான நோபல் பரிசு: Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
இந்தியருக்கு அமைதிக்கான நோபல் பரிசு: Poll_c10இந்தியருக்கு அமைதிக்கான நோபல் பரிசு: Poll_m10இந்தியருக்கு அமைதிக்கான நோபல் பரிசு: Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இந்தியருக்கு அமைதிக்கான நோபல் பரிசு: Poll_c10இந்தியருக்கு அமைதிக்கான நோபல் பரிசு: Poll_m10இந்தியருக்கு அமைதிக்கான நோபல் பரிசு: Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியருக்கு அமைதிக்கான நோபல் பரிசு:


   
   
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Fri Oct 10, 2014 4:46 pm

இந்தியருக்கு அமைதிக்கான நோபல் பரிசு: Gallerye_160255545_1089013

இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தான் பெண் மலாலாவுக்கு கப்படுகிறது. 2014ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அறிவிக்கப்பட்டது. இதன்படி, இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தான் பெண் மலாலா ஆகியோர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வாகியுள்ளனர். அமைதிக்கான நோபல் பரிசு பெறுவதில் அன்னை தெரசாவுக்கு பின்னர் அமைதி விருதை இந்தியர் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா மட்டுமல்லாமல், உலகளவில் குழந்தை தொழிலாளர்களே இருக்கக்கூடாது என்ற நோக்கத்துடன் அதனை ஒழிக்க பாடுபட்டு வரும் கைலாஷ் சத்யார்த்தி, 2014ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வாகியுள்ளார். இதன் மூலம் நோபல் பரிசு பெறும் 8வது இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அன்னை தெரசாவுக்குப்பின், அமைதிக்கான நோபல் பரிசு பெறும் இந்தியர் கைலாஷ் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மத்திய பிரதேசத்தின் விதிஷாவில் 1954 ஜன., 11ம் தேதி பிறந்தார். 1990ல் "பச்பன் பச்சாவோ ஆந்தோலன்' என்ற அமைப்பை நிறுவிய இவர், நாட்டில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க பாடுபட்டு வருகிறார். இதன் மூலம் இந்தியாவில் 80 ஆயிரம் குழந்தை தொழிலாளர்களை மீட்டு, கல்வி கற்க உதவியுள்ளார்.


இவர் இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் பல்வேறு நாடுகளில் குழந்தைகள் சந்திக்கும் மனித உரிமை மீறல்கள் பிரச்னைகள் பற்றி நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். குழந்தை தொழிலாளர் ஒழிப்பு நடவடிக்கை தவிர, வறுமை, வேலைவாய்ப்பின்மை, எழுத்தறிவின்மை, மக்கள் தொகை பெருக்கம் போன்ற சமூக பிரச்னைக்களுக்கு குரல் கொடுத்து வருகிறார். யுனஸ்கோ அமைப்பில் உறுப்பினராகவும் இருக்கிறார். இதன் மூலம் அனைத்து குழந்தைகளுக்கு கல்வி வழங்க வேண்டும் என வலியுறுத்து வருகிறார். தற்போது இவர் டில்லியில் வசித்து வருகிறார்.


விருதுகள்:


இவரது பணிகளை பாராட்டி ஏற்கனவே பல்வேறு நாடுகள் இவருக்கு விருதுகள் வழங்கியுள்ளன. இதில் ராபர்ட் எப்.கென்னடி மனித உரிமைகள் விருது (அமெரிக்கா) , அச்செனர் சர்வதேச அமைதி விருது (ஜெர்மனி), அல்போன்சா காமின் சர்வதேச விருது (ஸ்பெயின்), இத்தாலியன் செனட் விருது ஆகியவை குறிப்பிடத்தக்கது.

நோபல் பரிசு பெற்றது குறித்து கைலாஷ் வித்யார்த்தி கூறுகையில், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. குழந்தைகளின் உரிமைக்காக போராடி வருபவர்களுக்கு கிடைத்த அங்கீகாரம். எனக்கு அளிக்கப்பட்ட இந்த விருது, இந்திய மக்கள் அனைவருக்கும் கிடைத்த மரியாதையாக கருதுகிறேன். நாடு முழுவதும உள்ள குழந்தைகளுக்கு இந்தவிருதை சமர்ப்பிக்கின்றேன். சிறுவர்களின் நலனுக்கான எனது போராட்டம் தொடரும். தற்போது விருது பெற்றுள்ள மலாலாவுடன் இணைந்து போராட நான் தயாராக இருக்கிறேன் இவ்வாறு கைலாஷ் தெரிவித்தார்.


இந்தியருக்கு அமைதிக்கான நோபல் பரிசு: Gallerye_160326458_1089013

இதே போல், பாகிஸ்தானில் பெண் கல்விக்காக போராடி வருபவர் மலாலா (17). பெண் கல்விக்காக போராடியதால், தலிபான்களின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர் மலாலா. நோபல் பரிசு பெறும் மிகவும் குறைந்த வயது பெண் மலாலா என்பது குறிப்பிடத்தக்கது.

அமைதிக்கான நோபல் பரிசு வரும் டிசம்பர் 10ம் தேதி, நார்வே தலைநகர் ஆஸ்லோவில் வழங்கப்படுகிறது.
தலிபான்களை எதிர்த்து போராடிய மலாலா : மலாலா யூசப்சாய் பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள அங்கோராவில் 1997, ஜூலை 12ல் பிறந்தார். இவரது தந்தை ஜியாவுதின் யுசப்சாய், தாயார் தூர்பெகாய் யுசப்சாய். இவர் வசிக்கும் பகுதியில் பெண்கள் பள்ளிக்கு செல்லக்கூடாது என தலிபான்கள் தடை விதித்தனர். இதனை எதிர்த்து மலாலா பள்ளி சென்று வந்தார். பெண்களின் உரிமைகள் மற்றும் கல்விக்காக சிறுவயதிலேயே போராட துவங்கினார். தலிபான்களின் அடக்குமுறையை எதிர்ந்து இணையதளத்தில் கருத்துகள் வெளியிட்டு வந்தார். இதனால் 2012, அக்.9ல் துப்பாக்கிச்சூட்டுக்கு உள்ளானார். தலையில் குண்டடி பட்ட மலாலாவுக்கு இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்காமில் வசித்து வருகிறார்.


தலிபான் தாக்குதலுக்கு பின் இவரது போராட்டம் தீவிரமானது. இதனால் உலகின் பார்வை இவர் மீது திரும்பியது. உலக அரங்கில் பல்வேறு நாடுகள் இவருக்கு அமைதிப்பரிசை வழங்கியுள்ளன. கடந்த ஆண்டு பிறந்த நாளின் போது ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றினார். அப்போது உலகில் உள்ள அனைத்து குழந்தைளும் கல்வி கற்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இத்தினத்தை ஐ.நா., மலாலா தினமாக அறிவித்தது. பாகிஸ்தானின் தேசிய அமைதி விருது, வீரதீர விருது, சமூக நீதிக்கான அன்னை தெரசா நினைவு விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தியுடன் இணைந்து பெறுகிறார். இதன்மூலம் குறைந்த வயதில் (17) நோபல் பரிசு வென்றவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

-- தினமலர்

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Fri Oct 10, 2014 4:53 pm

எத்தனை அடி, எத்தனை போராட்டம்.. கைலாஷ் சத்யார்த்தியின் போராட்ட வாழ்க்கை!


பச்பன் பச்சாவ் அந்தோலன் அமைப்பின் தலைவரும், நோபல் அமைதிப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளவருமான கைலாஷ் சத்யார்த்தி, 2004ம் ஆண்டு உ.பி மாநிலத்தில் கொலை வெறித் தாக்குதலுக்குள்ளாகி உயிர் பிழைத்தவர் ஆவார். ரோமன் சர்க்கஸ் என்ற சர்க்கஸ் கம்பெனியிலிருந்து குழந்தைத் தொழிலாளர்களை மீ்ட்க அவர் முயன்றபோது சர்க்கஸ் நிர்வாகத்தைச் சேர்ந்த குண்டர்கள் அவரை சரமாரியாகத் தாக்கி ரத்தக்காயம் ஏற்படுத்தினர். துப்பாக்கியைக் காட்டியும் மிரட்டினர். ஆனாலும் உயிரைப் பொருட்படுத்தாமல் அவர்களிடம் நிராயுதபாணியாக மோதினார் சத்யார்த்தி. 2004ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி இந்த சம்பவம் நடந்தது.

தங்களது பிள்ளைகளை சர்க்கஸ் நிறுவனத்தார் குழந்தைத் தொழிலாளர்களாக வைத்திருப்பதாக 11 பேரின் பெற்றோர் சத்யார்த்தியிடம் குமுறினர். இதையடுத்து தனது இயக்கத்தாருடன் சேர்ந்து களத்தில் குதித்தார் சத்யார்த்தி.

கலெக்டருடன் ரெய்டு :

மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இதுகுறித்து அவர் புகார் கொடுத்தார். அவரது உத்தரவின் பேரில் சர்க்கஸில் ரெய்டு நடத்த உத்தரவிடப்பட்டது. கலெக்டரும் கூடவே வந்தார். கலெக்டர், சத்யார்த்தி மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பெற்றோர்கள் என சகலரும் சர்க்கஸ் நிறுவனத்திற்கு படையெடுத்தனர்.

இந்தியருக்கு அமைதிக்கான நோபல் பரிசு: 10-1412937979-kailash-satyarthi-a-life-full-of-battles2-600

துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய மேலாளர் :

ஆனால் சர்க்கஸ் கம்பெனிக்காரர்கள் குண்டர்களாக மாறினர். சர்க்கஸ் நிறுவன மேலாளர் சத்யார்த்தியை நோக்கி துப்பாக்கியைக் காட்டி மிரட்டினார். மற்றவர்கள், அனைவரையும் தாக்கத் தொடங்கினர். சத்யார்த்தியையும் தாக்கினர். இதில் அவரது தலையிலிருந்து ரத்தம் கொட்டியது. ஆனாலும் அவர் அசரவில்லை.

கால், தலையில் படுகாயம்:

இந்தியருக்கு அமைதிக்கான நோபல் பரிசு: 10-1412938090-kailash-satyarthi-a-life-full-of-battles11-600

தலையிலும், காலிலும் சத்யார்த்திக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரது குழுவில் இடம் பெற்றிருந்த அவரது மகன் உள்பட பலரும் காயமடைந்தனர்.

கேரளாவிலும் துணிகர மீட்பு

இதேபோல அதற்கு முன்பு ஏப்ரல் மாதத்தில் கேரளாவின் பிரபலமான தி கிரேட் இந்தியன் சர்க்கஸ் கம்பெனியில் பத்து வருடத்திற்கும் மேலாக கொத்தடிமைகள் போல வேலை வாங்கப்பட்ட பல சிறார்களையும் சத்யார்த்தி மீட்டிருந்தார்.

-- ஒன் இந்தியா

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Fri Oct 10, 2014 5:01 pm

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் இன்னும் குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பது வேதனை- கைலாஷ்


சிறு வயதிலேயே குழந்தைத் தொழிலாளர்களைப் பார்த்துப் பார்த்து மனம் வெதும்பிப் போய்த்தான் பச்பன் பச்சாவ் அந்தோலன் அமைப்பை ஆரம்பித்து குழந்தைத் தொழிலாளர்களைக் காக்கும் சேவையை தொடங்கினேன் என்று கூறியுள்ளார் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றுள்ள கைலாஷ் சத்யார்த்தி.

அவருக்கும் 2012ம் ஆண்டு தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டு உயிர் பிழைத்த பாகிஸ்தான் சிறுமியான மலாலா யூசபஸாய்க்கும் நோபல் அமைதிப் பரிசு இணைந்து அறிவிக்கப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளின் கல்வி உரிமைக்காக போராடியவர் மலாலா என்பது குறிப்பிடத்தக்கது.

30 வருடங்களுக்கு முன்பு எலக்ட்ரிகல் என்ஜீனியராக தனது வாழ்க்கையைத் தொடங்கியவர் சத்யார்த்தி. ஆனால் குழந்தைத் தொழிலாளர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக பச்பன் பச்சாவ் அந்தோலன் அமைப்பைத் தொடங்கினார். தனது என்ஜீனியர் வேலையை விட்டு விட்டார்.

இன்று இந்தியாவின் முன்னணி குழந்தைத் தொழிலாளர் மீட்பு இயக்கமாக பச்பன் பச்சாவ் அந்தோலன் உருவெடுத்துள்ளது. இதற்காக சத்யார்த்தி செய்த தியாகங்கள் மிகப் பெரியது. 2011ம் ஆண்டு அவர் கொடுத்த ஒரு பேட்டியிலிருந்து சில துளிகள் இங்கே.

பச்பன் பச்சாவ் அந்தோலன் அமைப்பைத் தொடங்க என்ன காரணம்...

சிறு வயதிலேயே எனக்கு குழந்தைத் தொழிலாளர்களின் நிலை குறித்த கவலை பெரிதாக இருந்தது. அவர்களது உரிமைகள் பறிக்கப்படுவதைப் பார்த்து வேதனைப்பட்டுள்ளேன். ஆனால் இதில் நாம் மட்டும் கவலைப்பட்டு ஆகாது, ஒரு இயக்கமாக இதற்காகப் போராட வேண்டும் என்று நான் பின்னர் உணர்ந்தேன்.

மக்களை இணைத்து போராட...

இதற்கான இயக்கத்தை உருவாக்கி அதில் மக்களையும் இணைத்து நீண்ட நெடிய போராட்டத்தை நடத்த வேண்டும் என்று நினைத்தேன். அப்படி உருவானதுதான் பச்பன் பச்சாவ் அந்தோலன் அமைப்பு.

சமூகப் பிரச்சினைகளின் கலவை...

குழந்தைத் தொழிலாளர்கள் என்பது சாதாரண பிரச்சினை அல்ல, பொருளாதாரப் பிரச்சினை மட்டும் அல்ல, சட்டப் பிரச்சினையும் அல்ல. அது பல்வேறு விதமான சமூகப் பிரச்சினைகளின் கலவையாகும்.

முக்கிய லட்சியம்...

சமூகத்தில் வேரோடிப் போயிருக்கும் மிக மோசமான விஷயமாகும். இதை முற்றாக அழிப்பதே எனது இயக்கத்தின் முக்கிய லட்சியம்.

மிகத்தீவிரமான பிரச்சினை...

இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் பிரச்சினை மிகத்தீவிரமாக உள்ளது. இதுவேகமாகப் பரவியும் வருகிறது. மாநிலங்களுக்கு இடையே குழந்தைகளை வேலைசெய்வதற்காக கடத்துவது அதிகரித்தபடி உள்ளது. இதைத் தடுக்கும் நடவடிக்கைகள் மிக மிக குறைவாக உள்ளன.

அதிகரிக்கும் குழந்தைகள் கடத்தல்...

பீகாரிலிருந்து டெல்லிக்கு குழந்தைகளை கடத்துகிறார்கள். மும்பைக்குக் கொண்டு செல்கிறார்கள். கொல்கத்தா கொண்டு செல்கிறார்கள். இது அதிகரித்தவண்ணம் உள்ளது.

கொத்தடிமைகளாகின்றனர்...

இப்படி நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான குழந்தைகளை கடத்துகிறார்கள். குழந்தைத் தொழிலாளர்களில் 20 சதவீதம் பேர் அதாவது 10 கோடி பேர் கொத்தடிமைகளாக உள்ளனர் என்பது அதிர்ச்சியான விஷயம்.

கொத்தடிமை பெற்றோரின் குழந்தைகள்...

பெரும்பாலான குழந்தைகள் கொத்தடிமைப் பெற்றோர்களுக்குப் பிறக்கின்றன. பிறந்ததுமே அதுவும் கொத்தடிமை முறைக்குள் வந்து விடுகிறது. இது மிகக் கொடுமையானது.

முக்கிய நகரங்களில்...

குழந்தைகள் கடத்தல் அதிகம் நடப்பது டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், அகமதாபாத் ஆகிய நகரங்களில்தான். இதேபோல பிற பெருநகரங்களிலும் உள்ளன.

விபச்சாரம், வீட்டு வேலைகள்...

பல பெண் குழந்தைகளைக் கடத்தி விபச்சாரத்திலும் ஈடுபடுத்துகிறார்கள். வீட்டு வேலைகளுக்கு பெருமளவில் குழந்தைகளை கடத்துகிறார்கள்,.

மும்பை செல்லும் குழந்தைகள்...

பீகாரில் இப்படி கடத்தப்படும் குழந்தைகள் அதிகம் உள்ளன. ஜார்க்கண்டிலும் அதே நிலைமைதான். சட்டிஸ்கர், மத்தியப் பிரதேசம், ஒரிசா, மேற்கு வங்கத்திலும் இதே நிலைதான். ராஜஸ்தானிலிருந்து கடத்தப்படும் குழந்தைகள் அகமதாபாத், மும்பைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

சோகமான விஷயம்...

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் இதுபோன்ற குற்றங்களை, சமூக அவலத்தை தடுக்க முடியாமல் இருப்பது மிகவும் சோகமான விஷயமாகும் என்றுகூறியுள்ளார் சத்யார்த்தி.

-- ஒன் இந்தியா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Oct 10, 2014 5:13 pm

வாழ்த்துகள் இருவருக்கும்

(வீட்ல அமைதியா இருக்கறதுக்கு எல்லாம் பரிசே தர மாட்டேங்குறாங்க) புன்னகை




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 10, 2014 5:50 pm

மிகவும் தகுதி ஆனவர்கள் .
வாழ்த்துகள் பல பல
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Fri Oct 10, 2014 6:04 pm

இந்தியருக்கு அமைதிக்கான நோபல் பரிசு: 103459460 இந்தியருக்கு அமைதிக்கான நோபல் பரிசு: 103459460 இந்தியருக்கு அமைதிக்கான நோபல் பரிசு: 3838410834 இந்தியருக்கு அமைதிக்கான நோபல் பரிசு: 3838410834 இந்தியருக்கு அமைதிக்கான நோபல் பரிசு: 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக