புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெ.வை வெளியே விட்டால் மீண்டும் பிடிக்க முடியாது.. அதிமுக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை கடும் எதிர்ப்பு.. Poll_c10ஜெ.வை வெளியே விட்டால் மீண்டும் பிடிக்க முடியாது.. அதிமுக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை கடும் எதிர்ப்பு.. Poll_m10ஜெ.வை வெளியே விட்டால் மீண்டும் பிடிக்க முடியாது.. அதிமுக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை கடும் எதிர்ப்பு.. Poll_c10 
21 Posts - 66%
heezulia
ஜெ.வை வெளியே விட்டால் மீண்டும் பிடிக்க முடியாது.. அதிமுக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை கடும் எதிர்ப்பு.. Poll_c10ஜெ.வை வெளியே விட்டால் மீண்டும் பிடிக்க முடியாது.. அதிமுக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை கடும் எதிர்ப்பு.. Poll_m10ஜெ.வை வெளியே விட்டால் மீண்டும் பிடிக்க முடியாது.. அதிமுக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை கடும் எதிர்ப்பு.. Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெ.வை வெளியே விட்டால் மீண்டும் பிடிக்க முடியாது.. அதிமுக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை கடும் எதிர்ப்பு.. Poll_c10ஜெ.வை வெளியே விட்டால் மீண்டும் பிடிக்க முடியாது.. அதிமுக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை கடும் எதிர்ப்பு.. Poll_m10ஜெ.வை வெளியே விட்டால் மீண்டும் பிடிக்க முடியாது.. அதிமுக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை கடும் எதிர்ப்பு.. Poll_c10 
63 Posts - 64%
heezulia
ஜெ.வை வெளியே விட்டால் மீண்டும் பிடிக்க முடியாது.. அதிமுக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை கடும் எதிர்ப்பு.. Poll_c10ஜெ.வை வெளியே விட்டால் மீண்டும் பிடிக்க முடியாது.. அதிமுக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை கடும் எதிர்ப்பு.. Poll_m10ஜெ.வை வெளியே விட்டால் மீண்டும் பிடிக்க முடியாது.. அதிமுக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை கடும் எதிர்ப்பு.. Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
ஜெ.வை வெளியே விட்டால் மீண்டும் பிடிக்க முடியாது.. அதிமுக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை கடும் எதிர்ப்பு.. Poll_c10ஜெ.வை வெளியே விட்டால் மீண்டும் பிடிக்க முடியாது.. அதிமுக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை கடும் எதிர்ப்பு.. Poll_m10ஜெ.வை வெளியே விட்டால் மீண்டும் பிடிக்க முடியாது.. அதிமுக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை கடும் எதிர்ப்பு.. Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஜெ.வை வெளியே விட்டால் மீண்டும் பிடிக்க முடியாது.. அதிமுக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை கடும் எதிர்ப்பு.. Poll_c10ஜெ.வை வெளியே விட்டால் மீண்டும் பிடிக்க முடியாது.. அதிமுக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை கடும் எதிர்ப்பு.. Poll_m10ஜெ.வை வெளியே விட்டால் மீண்டும் பிடிக்க முடியாது.. அதிமுக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை கடும் எதிர்ப்பு.. Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெ.வை வெளியே விட்டால் மீண்டும் பிடிக்க முடியாது.. அதிமுக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை கடும் எதிர்ப்பு..


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 03, 2014 2:49 am

ஜெ.வை வெளியே விட்டால் மீண்டும் பிடிக்க முடியாது.. அதிமுக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை கடும் எதிர்ப்பு.. 02-1412225682-jayalalitha824-600

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை ஜாமீனில் விடுதலை செய்வதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்து தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் டிவிஏசி எனப்படும் ஊழல் எதிர்ப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது அதிமுக வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாம்.

ஜாமீனில் விடக் கூடாது என்று கூறியதோடு நில்லாமல், ஜெயலலிதா பிரபலமான அரசியல் தலைவர். அவரை இப்போது வெளியே விட்டு விட்டால் மீண்டும் கைது செய்ய முடியாது. அவர் சாட்சிகளைக் கலைக்க முயலலாம் என்றும் டிவிஏசி கூறியுள்ளது அதிமுக தரப்பை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஜெயலலிதாவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான தமிழக அரசின் டிவிஏசி இப்படி ஒரு கடுமையான அபிடவிட்டைத் தாக்கல் செய்திருப்பதால் பரபரப்பும் கூடியுள்ளது. இந்த அபிடவிட்டானது ஜெயலலிதாவுக்கு எதிராக பாதகமான நிலையை ஏற்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.

நேற்று கர்நாடக உயர்நீதிமன்றத்தின் விடுமுறைக் கால நீதிபதி ரத்னகலா பெஞ்ச் முன்பு டிவிஏசி தனது அபிடவிட்டைத் தாக்கல் செய்தது. அதில், ஜெயலலிதாவுக்கு ஜாமீன் அளிக்கக் கூடாது. அவர் பிரபலமான அரசியல் தலைவர். அவரை வெளியே விட்டால் மீண்டும் கைது செய்ய முடியாது. மேலும் சாட்சிகள் கலைக்கப்படும் அபாயமும் உள்ளது. மேலும் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு அளிக்கப்பட்டுள்ள தண்டனையை சஸ்பெண்ட் செய்யவும் கூடாது என்று டிவிஏசி கூறியுள்ளதாம்.

அதை விட ஆச்சரியமாக கீழ் நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞராக செயல்பட்ட பவானி சிங்கை, தனது தரப்பு சிறப்பு அரசு வக்கீலாகவும், டிவிஏசி நியமித்துள்ளது. இதற்கான உத்தரவையும் அது வழங்கியுள்ளது. டிவிஏசியின் அபிடவிட்டையும் பவானி சிங்தான் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

ஜெயலலிதாவுக்கு எதிராக டிவிஏசி செயல்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும் கூட டிவிஏசி இப்படித்தான் செய்தாக வேண்டும். காரணம், இது தமிழக அரசின் கீழ் செயல்பட்டாலும் கூட இதன் கடமையிலிருந்து தவற முடியாது என்பதால், இந்த ஆட்சேபனை மனு எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என்று கூறுகிறார்கள்.

மேலும் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீது கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் டிவிஏசிதான் வழக்குகளைப் பதிவு செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தட்ஸ்தமிழ்



ஜெ.வை வெளியே விட்டால் மீண்டும் பிடிக்க முடியாது.. அதிமுக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை கடும் எதிர்ப்பு.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 03, 2014 2:50 am

ஜெயலலிதாவிற்கு எதுவுமே தெரியாதா? மூலாதாரமே அவர்தான்: குன்ஹா

பெங்களூர்: ஜெயலலிதாவிற்கு எதுவுமே தெரியாது என்பதை ஏற்கமுடியாது.ஏனென்றால் அவருடைய வீட்டில்தான் குற்றம்சாட்டப்பட்ட மற்ற மூன்று பேரும் இருந்துள்ளனர். இந்த குற்றத்திற்கு மூலாதாரமே அவர்தான் என்று நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

அதிமுக தலைவர் ஜெயலலிதா மற்றும் அவரது கூட்டாளிகள் 1991-1996 ஆட்சியின் போது சிலபல நிறுவனங்களைத் தொடங்கி அதன் மூலம் முறைகேடு செய்திருப்பதாக சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

சுமார் 3000 ஏக்கர்கள் நிலம் என்ற சொத்துகள் சட்டவிரோதமாக குவிக்கப்பட்டது, இந்த சொத்துக்கள் நிறுவனங்களின் பெயரில் பாதுகாக்கப்பட்டுள்ளது என்றும் நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

வங்கிக்கணக்குகள்

இது பற்றி நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பில், 1991ஆம் ஆண்டுக்கு முன்னரே நிறுவனங்கள் இருந்தன என்றாலும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் இந்த நிறுவனங்களில் கூட்டாளிகளாகச் சேர்ந்த பின்பே, வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன் பிறகு நிறுவனங்களின் முழு நிர்வாகக் கட்டுப்பாடு இவர்களிடம் வந்து சேர்ந்தது. "இந்த நிறுவனங்கள் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் இந்தக் கணக்குகள் வழியாகவே நடைபெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

18 நிறுவனங்களின் செயல்பாடுகள்

இருப்பினும், கூட்டுறவு நிறுவனங்கள் உட்பட இந்த 18 நிறுவனங்களும் 1991-96ஆம் ஆண்டுகளில் பெரிய அளவுக்கு வணிகம் செய்ததாகத் தெரியவில்லை. ஆனால் பெரிய அளவு சொத்துக்கள், அதாவது நிறைய நிலங்கள் இந்த நிறுவனங்களின் பெயரில் வாங்கப்பட்டுள்ளன.

பணம் வந்த வழி

வங்கி ஆவணங்களை ஆய்வு செய்ததில் இந்த நடவடிக்கைகளுக்கான தொகை ஜெயலலிதா கூட்டாளியாக இருந்த ஜெயா பப்ளிகேஷன்ஸ் கணக்கு மூலம் வந்துள்ளது என்று தெரியவந்துள்ளது என்று நீதிபதியின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவிற்கு தெரியாதா?

இந்த சொத்துக்கள் வாங்கும் நடவடிக்கை மற்ற மூவரையே சாரும் ஜெயலலிதாவுக்கு இந்த நடவடிக்கைகள் பற்றி எதுவும் தெரியாது என்று டிபன்ஸ் தரப்பினர் வாதிட்டனர். ஆனால் இந்த வாதத்தினை ஏற்காத நீதிபதி ஒரு மாநில முதல்வராக அவர் வீட்டில் வசித்தவர்கள் மூலம் நடைபெற்றுள்ள இந்த நடவடிக்கைகள் அவருக்குத் தெரியாது என்று கூறுவது நம்பும்படியாக இல்லை என்றார்.

நிருபிக்கப்பட்ட உண்மை

குற்றம்சாட்டப்பட்ட முதல் நபர் (ஜெயலலிதா) நிறைய தொகைகளை ஜெயா பப்ளிகேஷன்ஸ் கணக்கில் கொண்டு சேர்ப்பித்துள்ளதும், அங்கிருந்து பிற கணக்குகளுக்கு அது மாற்றப்பட்டுள்ளதும், இந்தத் தொகை பிறகு சொத்துக்களை வாங்குவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதும் சாட்சிபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது" என்று தனது தீர்ப்பில் கூறினார்.

ஆறு நிறுவனங்கள்

1991 மற்றும் 1996ஆம் ஆண்டுகளுக்கு இடையே, முக்கியமாக சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் லெக்ஸ் ப்ராப்பர்டீஸ் டெவலப்மெண்ட், மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ், ரிவர் வே அக்ரோ புராடக்ட்ஸ், ராமராஜ் அக்ரோ மில்ஸ், சிங்கோரா பிசினஸ் எண்டர்பிரைசஸ், இந்தோ-தோஹா கெமிக்கல்ஸ் அண்ட் பார்மசூட்டிக்கல்ஸ் ஆகிய 6 வேறுபட்ட நிறுவனங்களில் இணைந்துள்ளனர்.

சசி,இளவரசி, சுதாகரன் பின்னணி

இந்த நிறுவனங்கள் மேலும் சில நிறுவனங்களுடன் கூட்டுறவு மேற்கொண்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீண்டும் இந்த நிறுவனங்களிலும் கூட்டாளிகளாகச் சேர்ந்தனர். ஜெயலலிதாவைத் தவிர மற்ற மூவர்களின் பின்னணியைக் கணக்கில் எடுத்துக் கொண்ட நீதிபதி, அவர்களிடம் இது போன்ற பெரிய சொத்துக்களை வாங்குவதற்கான வருவாய் இல்லை என்றும் கூறினார்.

3000 ஏக்கர் நிலங்கள்

குற்றம் சாட்டப்பட்ட தரப்பினர் சட்டபூர்வமான இந்த நிறுவனங்களுக்கும், தனி நபர்களுக்கும் இடையேயான வித்தியாசத்தை வலியுறுத்தியதை நிராகரித்த நீதிமன்றம், "சுமார் 3000 ஏக்கர்கள் நிலம் என்ற சொத்துகள் சட்டவிரோதமாக குவிக்கப்பட்டது, இந்த சொத்துக்கள் நிறுவனங்களின் பெயரில் பாதுகாக்கப்பட்டுள்ளது. காரணம் என்னவெனில் நிறுவனங்களின் பெயரில் உள்ள சொத்துகளை ஒரு தீர்மானம் நிறைவேற்றி அப்புறப்படுத்திவிடலாம் என்ற வசதியைக் கருத்தில் கொண்டே நிறுவனங்களின் பெயர்களில் சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன" என்று கூறியுள்ளது.

ஆதாரங்கள் இல்லை

இந்த நிறுவனங்களுக்கென்று ஆடிட்டர்கள் இல்லை. சொத்துக் குவிப்பு வழக்கு தொடரப்பட்டவுடன் நிறுவனங்களின் சொத்துக்களை நீதிமன்றம் முடக்கிய பிறகு குற்றம் சாட்டப்பட்ட நால்வரின் சொந்த ஆடிட்டர்களே கணக்குகளை சமர்ப்பித்துள்ளனர்.

நிறுவனங்களின் பெயர்கள்

மேற்கூறிய நிறுவனங்களின் சொத்துக்களாக இவை நோக்க நிறைவேற்றம் பெறவில்லை, எந்த சமயத்திலும் இந்தச் சொத்துக்கள் நிறுவனங்களின் சொத்துகளாகக் கையாளப்படவில்லை, நிறுவனங்களின் பெயர் மட்டும் பயன்படுத்தப்பட்டதைத் தவிர வேறு எதுவும் அது தொடர்பாக நடக்கவில்லை" என்று நீதிபதி கூறினார்.

வங்கிக் கணக்குகளில் பணம்

மேலும் வங்கிக் கணக்குகளில் "விளக்கமுடியா" பெரும் தொகைகள் கிரெடிட் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கணக்குகளுக்கு பணத்தை கிரெடிட் செய்தவர்கள் ராம் விஜயன் மற்றும் ஜெயராமன் என்ற இருவர்தான். இவர்கள் இருவரும் போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் ஊழியர்கள் என்று நீதிபதி மேலும் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

சசிகலா அறிவுறுத்தல்

குற்றம்சாட்டப்பட்ட இரண்டாம் நபரின் (சசிகலா) அறிவுறுத்தலின் படி மேற்கூறப்பட்ட வங்கிக் கணக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட முதல் நபரின் (ஜெயலலிதா) ஊழியர்கள் பணத்தை செலுத்தியுள்ளனர்.

மூலாதாரம் ஜெயலலிதா

சசிகலாதான் ஜெயலலிதாவின் நிதிவிவகாரங்களை நிர்வகித்து வந்துள்ளார் ஆகவே இந்தப் பணத்திற்கு ஆதாரம் பப்ளிக் செர்வண்ட்தான் (ஜெயலலிதா) என்று நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.



ஜெ.வை வெளியே விட்டால் மீண்டும் பிடிக்க முடியாது.. அதிமுக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை கடும் எதிர்ப்பு.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 03, 2014 2:53 am

ஜெயலலிதா மனுவை விசாரிக்காமலேயே ஜாமீன் மறுப்பு

தண்டனை ரத்து மற்றும் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் சிறப்பு மனு மீதான விசாரணையை அக்டோபர் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து கர்நாடக ஐகோர்ட் நேற்று உத்தரவிட்டுள்ளது. இந்த மனுவை விசாரிக்காமலேயே விசாரணையை தள்ளிவைத்து விட்டதாக வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி நீதிபதி மீது குற்றம் சாட்டியுள்ளார். மேலும் ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அவசர மனுவையும் கர்நாடக ஐகோர்ட் ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து கோர்ட்டுக்கு வெளியே அதிமுக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஜெயலலிதாவின் புதிய மனுவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் அவர் உடனடியாக ஜாமீனில் விடுதலையாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா 5-வது நாளாக சிறையில் உள்ளார். தசரா விடுமுறை முடிந்து வழக்கமான அமர்வு ஜாமீன் மனுவை விசாரிக்கும் என நீதிபதி ரத்தினகலா தெரிவித்தார். வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதி விசாரணையை சிறப்பு அமர்வில் இருந்து வழக்கமான அமர்வுக்கு மாற்றுவதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் ஜாமீன் கோரியும் தங்களுக்கு வழங்கப் பட்ட தண்டனை, தீர்ப்பை ரத்து செய்யக்கோரியும் 4 மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி ரத்னகலா முன்பு 11-வது நீதிமன்ற ஹாலில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தன. காலை 9 மணிக்கு நீதிபதி ரத்னகலா தனது இருக்கையில் அமர்ந்து அவசர கால மனுக்களை விசாரிக்க ஆரம்பித்தார்.

காலை 10.30 மணிக்கு ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் பி.குமார், நவநீதகிருஷ்ணன் ஆகியோர் ஆஜராகினர். அவர்களைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அரசு வழக்கறிஞர்கள் பவானி சிங், முருகேஷ் எஸ்.மரடி ஆகியோர் வந்தனர். ஜெயலலிதா தரப்புக்காக மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியும் அவரது உதவி வழக்கறிஞர்கள் 3 பேரும் 10.52 மணிக்கு வந்தனர்.

ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நீதிபதி ரத்னகலா முன்பு காலை 11.05-க்கு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் ஜாமீன் மனு மீதான வாதத்தை தொடங்குவதற்கு முன்பாக அரசு வழக்கறிஞர் பவானி சிங் பேசினார்.

அப்போது,''ஜெயலலிதா மீதான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி கர்நாடக அரசு என்னை அரசு வழக்கறிஞராக நியமித்தது. இந்த வழக்கில் கடந்த 27-ம் தேதி தீர்ப்பு வெளியானதால் அன்றுடன் எனது பணி முடிந்துவிட்டது. என்னால் மேல்முறையீட்டு வழக்கில் ஆஜராகி வாதாட முடியாது. இது தொடர்பாக கர்நாடக அரசு அரசாணை வெளியிடவில்லை'' என்றார். இதனைத் தொடர்ந்து நீதிபதி ரத்னகலா, ''அரசு வழக்கறிஞர் இல்லாமல் மனுவை விசாரிக்க முடியாது. எனவே வழக்கை வரும் 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கிறேன்'' என்றார்.

இந்நிலையில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் நீதிபதி ரத்னகலா ஏற்காத அதே மனுவை மீண்டும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவசர கால சிறப்பு மனுவாக தாக்கல் செய்யும் முயற்சியில் இறங்கினர். இதற்காக அவரது வழக்கறிஞர்கள் பன்னீர் செல்வம், அன்புக்கரசு, அம்ஜத் பாஷா, மூர்த்தி ராவ் ஆகியோர் நீதித்துறை பதிவாளர் ஆர்.கே.தேசாயை சந்தித்துப் பேசினர். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வஹேலாவிடம் ஆலோசித்துவிட்டு பதில் அளிப்பதாக அவர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து ஜெயலலிதா வழக்கறிஞ‌ர்கள் புதிய மனுவை தட்டச்சு செய்து பிற்பகல் 1.30 மணிக்குள் அவசர கால மனுவாக தாக்கல் செய்தனர். இந்த மனுவில்,''குற்றவியல் நடைமுறை சட்டம் 389(1) பிரிவின்படி, 7 ஆண்டுகளுக்குள் தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் அரசு வழக்கறிஞர் இல்லாமலே வழக்கை விசாரிக்கலாம். இதற்காக நீதிபதி தனது சுய அதிகாரத்தை பயன்படுத்தலாம். எனவே புதிய மனுக்களை அவசர கால சிறப்பு மனுவாக உடனடியாக விசாரிக்க வேண்டும்''என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதனைத் தொடர்ந்து நீதித்துறை பதிவாளர் ஆர்.கே.தேசாய் இந்த மனு குறித்து விடுமுறை கால நீதிபதிகள் ரத்னகலா, அப்துல் நாஸர் ஆகியோரிடம் ஆலோசித்தார். டெல்லியில் இருந்த தலைமை நீதிபதி வஹேலாவிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். பிற்பகல் 3 மணி அளவில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரின் ஜாமீன் மனுவையும் அவசர கால சிறப்பு மனுவாக ஏற்பதாக பதிவாளர் தேசாய் தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று ஜெயலலிதா தாக்கல் செய்த அவசர கால சிறப்பு மனு மீதான விசாரணையும் அக்டோபர் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் அவர் விடுதலையாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது அவரது கட்சியினருக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. நேற்றே அவர் விடுதலையாகி விடுவார் என்று கட்சியினர் ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆனால் அவருக்கு ஜாமீன் கிடைக்காததால் கட்சியினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர். கர்நாடக ஐகோர்ட்டுக்கு வெளியே அதிமுக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையிலும் அதிமுக வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் ஜெயலலிதா விடுதலைக்காக அவரது கட்சியினர் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகளையும் ஆராதனைகளையும் நடத்தினர். ஜெயலலிதா விடுதலையாக இன்னும் 5 நாள் காத்திருக்க வேண்டுமா? என்று அவரது கட்சியினரும் பொதுமக்களும் வேதனையோடு கேள்வி எழுப்பினார்கள். ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அவசர மனு கூட நிராகரிக்கப்பட்டது தமிழக மக்கள் மத்தியில் சோக அலைகளை ஏற்படுத்தி உள்ளது.



ஜெ.வை வெளியே விட்டால் மீண்டும் பிடிக்க முடியாது.. அதிமுக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை கடும் எதிர்ப்பு.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Oct 03, 2014 2:57 am

பச்சிளம் குழந்தை இவர், பால் வடியும் முகம் - இதெல்லாம் தெரியாம பாவம் பழி வாங்கிவிட்டார்கள் நீதிமான்கள்!!!!!!!!!!!!!!!

கண்டிப்பாக விடக் கூடாது - இதேபோல் மற்ற கட்சிகளின் ஊழல் நிரூபிக்கப்பட்டு அவர்களையும் உள்ளே வைத்து அழகு பார்த்தால் தான் நாடு உருப்படும்.




அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Oct 03, 2014 3:03 am

ஜெ.வை வெளியே விட்டால் மீண்டும் பிடிக்க முடியாது.


நன்றாக படித்து வைத்திருக்கிறார்கள்.



நேர்மையே பலம்
ஜெ.வை வெளியே விட்டால் மீண்டும் பிடிக்க முடியாது.. அதிமுக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை கடும் எதிர்ப்பு.. 5no
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 03, 2014 3:13 am

யினியவன் wrote:பச்சிளம் குழந்தை இவர், பால் வடியும் முகம் - இதெல்லாம் தெரியாம பாவம் பழி வாங்கிவிட்டார்கள் நீதிமான்கள்!!!!!!!!!!!!!!!

கண்டிப்பாக விடக் கூடாது - இதேபோல் மற்ற கட்சிகளின் ஊழல் நிரூபிக்கப்பட்டு அவர்களையும் உள்ளே வைத்து அழகு பார்த்தால் தான் நாடு உருப்படும்.
நீதிபதிகள் இதற்கு முயற்சிக்கிறார்களோ இல்லையோ, ஜெ வெளியில் வந்ததும் இந்த வேலையைத்தான் பார்ப்பார்!



ஜெ.வை வெளியே விட்டால் மீண்டும் பிடிக்க முடியாது.. அதிமுக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை கடும் எதிர்ப்பு.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Oct 03, 2014 7:13 am

நிச்சியமா பிடிக்க முடியாது, சின்ன உருவமா அது.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 03, 2014 7:14 pm

//அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை ஜாமீனில் விடுதலை செய்வதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்து தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் டிவிஏசி எனப்படும் ஊழல் எதிர்ப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது அதிமுக வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாம்.//

சபாஷ் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 03, 2014 7:17 pm

சிவா wrote:
யினியவன் wrote:பச்சிளம் குழந்தை இவர், பால் வடியும் முகம் - இதெல்லாம் தெரியாம பாவம் பழி வாங்கிவிட்டார்கள் நீதிமான்கள்!!!!!!!!!!!!!!!

கண்டிப்பாக விடக் கூடாது - இதேபோல் மற்ற கட்சிகளின் ஊழல் நிரூபிக்கப்பட்டு அவர்களையும் உள்ளே வைத்து அழகு பார்த்தால் தான் நாடு உருப்படும்.
நீதிபதிகள் இதற்கு முயற்சிக்கிறார்களோ இல்லையோ, ஜெ வெளியில் வந்ததும் இந்த வேலையைத்தான் பார்ப்பார்!

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக