புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குற்றங்களும் காரணமும் Poll_c10குற்றங்களும் காரணமும் Poll_m10குற்றங்களும் காரணமும் Poll_c10 
11 Posts - 52%
ayyasamy ram
குற்றங்களும் காரணமும் Poll_c10குற்றங்களும் காரணமும் Poll_m10குற்றங்களும் காரணமும் Poll_c10 
10 Posts - 48%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குற்றங்களும் காரணமும் Poll_c10குற்றங்களும் காரணமும் Poll_m10குற்றங்களும் காரணமும் Poll_c10 
52 Posts - 59%
heezulia
குற்றங்களும் காரணமும் Poll_c10குற்றங்களும் காரணமும் Poll_m10குற்றங்களும் காரணமும் Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
குற்றங்களும் காரணமும் Poll_c10குற்றங்களும் காரணமும் Poll_m10குற்றங்களும் காரணமும் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
குற்றங்களும் காரணமும் Poll_c10குற்றங்களும் காரணமும் Poll_m10குற்றங்களும் காரணமும் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குற்றங்களும் காரணமும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 28, 2014 3:17 am


பொதுமக்களைக் கொந்தளிக்கச் செய்கின்ற மூன்று தீவிரமான சமூகப் பிரச்னைகள் அமெரிக்க ஊடகங்களில் அண்மைக்காலமாக அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன. துப்பாக்கியால் சுட்டுக் கொல்லுதல், கல்வி நிறுவனங்களில் பெண்களை மானபங்கம் செய்தல், மரண தண்டனை விதிக்கப்பட்டவரைக் கொடூரமாகக் கொல்லுதல் ஆகியவை. இவை ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை போன்று தோன்றலாம். ஆனால், இந்த மூன்றுக்கும் பொதுவானதொரு காரணம் உள்ளது.

அண்மைக்காலங்களில் கொடூரமாக நடைபெற்ற சில கொலைச் சம்பங்களைப் பார்ப்போம்.

(1) 2013 செப்டம்பர் 16ஆம் தேதி வாஷிங்டனில் உள்ள வாஷிங்டன் கடற்படை தளத்தில் புகுந்த 34 வயதான ஆரோன் அலெக்சிஸ் என்பவர் 12 பேரை சுட்டுக் கொன்றார். இந்த சம்பவத்தில் மேலும் 3 பேர் காயமடைந்தனர்.

(2) 2012 ஜூலை 20ஆம் தேதி, கொலராடோவில் ஆரோரா என்ற இடத்தில் உள்ள தியேட்டரில் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசிய மர்ம நபர் ஒருவர், துப்பாக்கியால் சுட்டதில் 12 பேர் இறந்தனர். 70 பேர் காயமடைந்தனர்.

(3) 2012 ஆகஸ்ட் 5ஆம் தேதி, விஸ்கான்சினில் உள்ள ஓக் கிரீக் என்ற இடத்தில் சீக்கிய குருத்வாராவில் புகுந்த வேட் மைக்கேல் பேஜ் (40) என்பவர் 6 பேரை சுட்டுக் கொன்றார். இந்த சம்பவத்தில் மேலும் 4 பேர் காயமடைந்தனர். ஒரு போலீஸ் அதிகாரி அவரை வயிற்றில் சுட்டவுடன், பேஜ் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.

(4) 2012 டிசம்பர் 14இல் கனெக்டிகட்டில் உள்ள சாண்டி ஹூக் தொடக்கப் பள்ளியில் புகுந்த ஆடம் லான்ஸா என்ற 20 வயது இளைஞர் துப்பாக்கியால் சுட்டதில் 20 குழந்தைகளும், 6 ஊழியர்களும் இறந்தனர். இதையடுத்து, அந்த இளைஞர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்தார். பள்ளிக்கு வருவதற்கு முன் தனது வீட்டில் அந்த இளைஞர் தாயை சுட்டுக் கொன்றுள்ளார்.

(5) 2012 டிசம்பர் 11இல் ஓரேகான் நகரில் போர்ட்லாண்ட் என்ற இடத்தில் ஒரு வணிக வளாகத்துக்குள் புகுந்த ஜேகப் டெய்லர் ராபர்ட்ஸ் என்ற 22 வயது இளைஞர் சரமாரியாக சுட்டதில் 2 பேர் இறந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார். இந்த சம்பவத்திலும் இளைஞர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.


நடந்த சம்பவங்களைப் பட்டியலிடுவது நோக்கமல்ல. பள்ளி, வழிபாட்டுத் தலம், திரையரங்கம், வணிக வளாகம், உணவு விடுதி என்று எங்கு வேண்டுமானாலும் இதுபோன்ற சம்பவம் நிகழலாம் என்பதை சுட்டிக் காட்டவே இந்த சம்பவங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஒவ்வொரு முறை இதுபோன்ற சம்பவம் நிகழும்போதும், துப்பாக்கிகளைக் கட்டுப்படுத்தும் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் கோரிக்கை எழுப்பப்படுகிறது. ஆனால், சிலர் துப்பாக்கியைக் கட்டுப்படுத்துவதால் மட்டுமே இதுபோன்ற சம்பவங்களைக் குறைக்க முடியாது என்று வாதிடுகின்றனர். நாட்டில் நடைபெறும் 60 சதவீத கொலைச் சம்பவங்களில் மட்டுமே துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது என்று "கார்டியன்' பத்திரிகையின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

உலகிலேயே அதிகம் பேர் துப்பாக்கி வைத்திருப்பது அமெரிக்காவில்தான். உலக மக்கள் தொகையில் அமெரிக்கர்கள் 5 சதவீதம் பேர் உள்ளனர். ஆனால், உலகில் தயாரிக்கப்படும் துப்பாக்கிகளில் 35 முதல் 50 சதவீதம் அமெரிக்கர் வசம் உள்ளன.

ஆனால், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படுபவர்களின் பட்டியலில் அமெரிக்கா 28-வது இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 2.98 கொலைகள் நிகழ்கின்றன. இந்தப் பட்டியலில் முதலிடத்தில் ஹோண்டுராஸ் (ஒரு லட்சத்துக்கு 68.43), இரண்டாம் இடத்தில் எல் சால்வடார் (39.9), அடுத்த இடத்தில் ஜமைக்கா (39.4) ஆகிய நாடுகள் உள்ளன. துப்பாக்கி வைத்திருப்பதற்கும், அதிக கொலைகள் நடப்பதற்கும் தொடர்பில்லை என்று வாதிடுவோருக்கு இந்தப் புள்ளிவிவரம் கைகொடுக்கிறது.

அமெரிக்க கல்லூரிகளிலும், பல்கலைக்கழக வளாகங்களிலும் நடைபெறும் மானபங்க சம்பவங்கள் அந் நாட்டு மக்களின் மனசாட்சியை உலுக்கி வரும் மற்றொரு விஷயமாகும். கல்லூரியில் பட்டம் பெற்று வெளிவருவதற்குள் ஐந்தில் ஒரு பெண் மானபங்கப் படுத்தப்படுகிறார் என்று அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடென் கூறுகிறார். ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்குள் 24 லட்சம் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள் என்பதே இதன் பொருள்.

துரதிருஷ்டவசமாக, பாதிக்கப்படும் பெண்கள் போலீஸில் புகார் செய்வதை கல்வி நிறுவனங்கள் ஊக்குவிப்பதில்லை. அவர்களுக்கு, பெண்களின் கண்ணியத்தைவிட தங்கள் கல்வி நிறுவனங்களின் பெயர்தான் முக்கியமாகத் தோன்றுகிறது.

மானபங்கத்தைக் கடுமையாக குற்றமாகக் கருதாமல், தங்கள் கல்வி நிறுவன வளாக விதிமீறல்களாகக் கருதி அதிகபட்ச தண்டனையாக கல்வி நிறுவனத்திலிருந்து அந்த மாணவரை நீக்குகின்றனர். அதன் காரணமாக அந்த மாணவர் மீண்டும் மீண்டும் அதே குற்றத்தை இழைக்கிறார். மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைச் சம்பவங்கள், மாணவிகளின் உரிமைகள் விதிமீறல் போன்றவற்றை தவறாக கையாளுதல் குறித்து 55 பள்ளிகள் மீது கல்வித் துறை விசாரணை நடத்தி வருகிறது.

அமெரிக்க மக்களை மன வேதனை அடையச் செய்யும் மற்றொரு விஷயம், மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு அதை நிறைவேற்றும் விதமாகும். ஓக்லஹாமாவில் கிளேட்டன் லாக்கெட் என்ற கைதிக்கு அண்மையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. உயிரை சிறிது சிறிதாக எடுக்கக்கூடிய 3 மருந்துகள் அவருக்கு அளிக்கப்பட்டன. அந்த மருந்துகள் காரணமாக அவர் வேதனையால் கதறி, உடல் நடுக்கம் ஏற்பட்டு, வாய் குழறி, துடிதுடித்து 43 நிமிடங்கள் கழித்து உயிரிழந்தார். லாக்கெட் கொள்ளையடிக்கப்போன இடத்தில் அதை 19 வயதான ஸ்டெபானி நெய்மன் என்ற பெண்ணும், அவரது தோழியும் தடுத்தனர். இதில் ஆத்திரமடைந்த லாக்கெட், நெய்மனை துப்பாக்கியால் சுட்டார். அப்பெண்ணை தனது நண்பர்கள் உயிருடன் புதைத்ததைப் பார்த்துக் கொண்டிருந்தார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு. லாக்கெட்டுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறைவேற்றும் முறைக்கு மக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதற்கு பதிலாக, வலியில்லாமல் உயிரை எடுக்கும் வகையில் தண்டனை விதிக்க வேண்டும் என்பதே பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

தனிநபராக இருந்தாலும் சரி, அரசாக இருந்தாலும் சரி, கொடூரமாக நடந்து கொள்வதை அமெரிக்க மக்கள் விரும்புவதில்லை என்பது இந்த விவகாரங்கள் தொடர்பாக நடக்கும் விவாதங்களில் தெரியவருகிறது.

ஆனால், துரதிருஷ்டவசமாக, இந்தக் கூக்குரல்களுக்கு இடையே இப் பிரச்னைகளுக்கான உண்மையான காரணம் குறித்து அலசப்படும் குரல் கேட்பதில்லை.

ஒன்றுக்கொன்று தொடர்பில்லாததாகத் தோன்றும் இந்த மூன்று விதமான விஷயங்களுக்கு இடையே பொதுவான ஓர் அம்சம் உள்ளது. இந்தக் குற்றங்களுக்கும், உணர்வுபூர்வமற்ற மனப்பான்மைக்கும் ஒட்டுமொத்த சமூக சூழ்நிலையே காரணமாகும்.

இந்த சூழ்நிலை குறித்து சுருக்கமாகச் சொல்வதென்றால், சமூகத்தின் ஒட்டுமொத்த சூழ்நிலையும், குடும்ப சூழ்நிலையும், குழந்தைகளின் மனத்தில் மனித மாண்புகளை விதைப்பதாக இல்லை. மக்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர் மத்தியில், கடந்த கால ஆணாதிக்க சமுதாயத்தின் சுவடுகள் இன்னமும் உள்ளன. அதனால், ஆண்கள் மத்தியில் வலிமையே சரி என்ற மனப்பான்மை உள்ளது. அதன் காரணமாக, மானபங்கம் உள்ளிட்ட கொடுமைகள் பெண்கள் மீது இழைக்கப்படுகின்றன.

ஆணாதிக்கம் நீடித்திருப்பதில் ஊடகங்களுக்கும், தொலைக்காட்சிகளுக்கும் பங்குண்டு. பெண்களை போகப் பொருளாக சித்திரிப்பதுடன், பின்விளைவுகளைப் பற்றிய கவலையில்லாமல் கொடூரமான வன்முறையையும், ஆபாசத்தையும் இளம் நெஞ்சங்களுக்கு தொலைக்காட்சிகள் வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன.

யாருமே குற்றவாளிகளாகப் பிறப்பதில்லை. சமூகத்தின் பொறுப்பற்ற தன்மையே மனிதனை குற்றம் செய்யத் தூண்டுகிறது. சமூக அறநெறிகள் குறித்து புகட்டுவதும், உணரச் செய்வதுமே இப் பிரச்னைகளுக்குத் தீர்வாகும். சக மனிதனின் வலியை ஒவ்வொருவரையும் உணரச் செய்ய வேண்டும். மரண தண்டனைக்கு உள்ளாக்கப்படுபவரின் வேதனையையும், வலியையும் மரண தண்டனையை செயல்படுத்துபவரோ, விதிப்பவரோ உணரும்போது, வலியில்லாமல் மரண தண்டனையை நிறைவேற்றுவது குறித்தோ, மரண தண்டனையையே ஒழிப்பது குறித்தோ எண்ணத் தோன்றும்.

ஆனால், இப்பிரச்னைக்கான தீர்வு ஓரிரு நாள்களில் நிறைவேற்றப்படக் கூடியது அல்ல. இலக்கை அடைய பல தலைமுறைகள்கூட ஆகலாம். ஆனால், ஏதாவதொரு நாளில் இது தொடங்கப்பட வேண்டும். நாகரிக சமுதாயம் என்று சொல்லிக் கொள்ளும் நாம், அதை உண்மையாக்குவதற்கு இப் பிரச்னைகளின் அடிப்படை காரணம் குறித்து தீவிரமாக சிந்திக்கத் தொடங்க வேண்டும்.

தினமணி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 28, 2014 3:18 am


அதிகரிக்கும் குற்றங்கள்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அண்மையில் இரண்டு சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்குள்ளாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த அதிர்வுகள் அடங்குவதற்குள்ளாக மற்றுமொரு கோரச் சம்பவம் தமிழகத்தில் அரங்கேறியுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் விடுதியில் தங்கியிருந்த பத்து வயதே ஆன இரண்டு சிறுமிகளை சிலர் கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளனர்.

இந்தியாவில் காலம் காலமாக சிறுவர், சிறுமியர் மீது பாலியல் வன்முறைகள் தொடுக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் சில சம்பவங்கள் மட்டுமே அத்திப் பூத்தாற்போல வெளிவருகின்றன.

இந்தியாவில் கடந்த 2007ஆம் ஆண்டு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வின்படி, நம் நாட்டில் 53 சதவீத குழந்தைகள் (5 வயது முதல் 12 வயது வரை) பாலியல் வன்முறைக்கு உள்ளாகின்றனர். அதாவது சராசரியாக மூன்றில் இரண்டு குழந்தைகள் இந்த கொடுமைக்கு ஆளாகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி இந்த எண்ணிக்கை அதிகரித்திருக்குமேயன்றி குறைய வாய்ப்பில்லை.

நாட்டின் நிலைமை இவ்வாறு இருக்க, பாலியல் வன்முறைக்குள்ளாகி நீதி கேட்டுச் செல்லும் சிறுமிகளும், அவர்களின் பெற்றோரும் எதிர்கொள்ளும் கொடுமைகளும், அவலங்களும் ஏராளம்.

பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி உள்ள சிறுமிகளின் பெற்றோர், நீதி வேண்டி முதலில் செல்வது காவல்துறையினரிடம்தான்.

ஆனால் உடலளவிலும், மனதளவிலும் காயப்பட்டு கண்ணீருடன் செல்லும் அவர்களிடம் போலீஸார் நடந்துகொள்ளும் முறை மிகவும் அநாகரிகமானது.

மேலும் புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கையை (ஊ.ஐ.த.) பதிவுசெய்யக் கூட போலீஸார் முன்வருவதில்லை.

இதுதவிர, கேட்கக்கூடாத கேள்விகளால் சிறுமியை துன்புறுத்தும் அவர்கள், பாலியல் வல்லுறவுக்கு சாட்சி இருந்தால் மட்டுமே புகார் எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கின்றனர்.

குற்றவாளி செல்வாக்கு மிகுந்தவராக இருக்கும்பட்சத்தில் போலீஸாரின் நடவடிக்கைகளைப் பற்றி கேட்க வேண்டியதே இல்லை.

இதனைத்தொடர்ந்து சாட்சியும், சிகிச்சையும் வேண்டி பாதிக்கப்பட்ட சிறுமியர், கொண்டு செல்லப்படும் மருத்துவமனைகளில் நடப்பதுதான் கொடுமையின் உச்சம்.

பாலியல் பலாத்கார விவகாரங்களில் போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாத காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட சோதனைதான் தற்போதும் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு மேற்கொள்ளப்படுகிறது.

இச்சோதனையை பாலியல் வல்லுறவுக்கு ஆளான சிறுமிகளிடம் மேற்கொள்ளக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும்கூட இம்முறை இந்தியாவின் பல அரசு மருத்துவமனைகளில் தொடர்வதுதான் வெட்கக்கேடானது.

இச்சோதனைக்கு முன்பே இதுகுறித்து முழுமையாக சிறுமியிடம் விவரிப்பார் மருத்துவர். இதற்கு அஞ்சியே பெரும்பாலான சிறுமிகளின் பெற்றோர் பின்வாங்கிவிடுகின்றனர்.

போலீஸ் - நீதிமன்ற விசாரணைகள் ஆகியவற்றை தவிர்ப்பதற்காக, மருத்துவமனைகள் கையாளும் சூழ்ச்சி இது.

இதுபோன்ற சோதனைகளையெல்லாம் எதிர்கொண்டு நீதி கேட்கச் செல்லும் மிகச் சிலரின் மன உறுதியும் நீதிமன்றங்களில் சிதைக்கப்பட்டு விடுகிறது.

நீதிமன்ற விசாரணையின்போது ஆண்டுக்கணக்கிலான வாய்தாக்கள், நா கூசும் கேள்விகள் போன்றவற்றையெல்லாம் கடந்து, தீர்ப்பு வெளியாக பல ஆண்டுகள் ஆகிவிடும். வாச்சாத்தி பாலியல் பலாத்காரச் சம்பவமே இதற்கு ஓர்

உதாரணம்.

அதிலும் இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணமான குற்றவாளிகளுக்கு பெரும்பாலான வழக்குகளில் குறைந்தபட்ச தண்டனையே கிடைக்க வழிச்செய்கிறது நமது நீதித்துறை. சில நேரங்களில் வெற்றுக் காரணங்களை முன்வைத்து வழக்கு தள்ளுபடியும் செய்யப்பட்டுவிடும்.

கொடூரமான குற்றங்களுக்கு காலம் கடந்து வழங்கப்படும் தீர்ப்பால் என்ன பயன்? குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை அதிகரித்திருக்கும் இந்த காலத்தில் பழங்காலச் சட்டங்களே நடைமுறையில் இருப்பதில் என்ன பிரயோஜனம்?

தில்லி நிர்பயா விவகாரத்துக்கு பின்னரும் இதே நிலைதான் நாடு முழுவதும் பரவலாக அமலில் உள்ளது.

இந்தியாவின் வருங்காலத் தூண்களை பிஞ்சிலேயே நசுக்கிவிடும் பாலியல் வன்முறைக்கு காரணமானவர்கள் மட்டுமே குற்றவாளிகளா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை!



குற்றங்களும் காரணமும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Jun 28, 2014 8:13 am

இவனுங்க எல்லாம் என்ன மனுசனுங்க தானா, வெட்ட வேண்டியது இப்பவே வெட்டி வீசிடனும். அப்பதான் மத்தவனுங்க திருந்துவானுங்க.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jul 05, 2014 10:02 am

குற்றங்களும் காரணமும் 103459460 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக