புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குட்டிப் பாப்பாவுக்கு எது நல்லது, எது கெட்டது? Poll_c10குட்டிப் பாப்பாவுக்கு எது நல்லது, எது கெட்டது? Poll_m10குட்டிப் பாப்பாவுக்கு எது நல்லது, எது கெட்டது? Poll_c10 
42 Posts - 63%
heezulia
குட்டிப் பாப்பாவுக்கு எது நல்லது, எது கெட்டது? Poll_c10குட்டிப் பாப்பாவுக்கு எது நல்லது, எது கெட்டது? Poll_m10குட்டிப் பாப்பாவுக்கு எது நல்லது, எது கெட்டது? Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
குட்டிப் பாப்பாவுக்கு எது நல்லது, எது கெட்டது? Poll_c10குட்டிப் பாப்பாவுக்கு எது நல்லது, எது கெட்டது? Poll_m10குட்டிப் பாப்பாவுக்கு எது நல்லது, எது கெட்டது? Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
குட்டிப் பாப்பாவுக்கு எது நல்லது, எது கெட்டது? Poll_c10குட்டிப் பாப்பாவுக்கு எது நல்லது, எது கெட்டது? Poll_m10குட்டிப் பாப்பாவுக்கு எது நல்லது, எது கெட்டது? Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குட்டிப் பாப்பாவுக்கு எது நல்லது, எது கெட்டது?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 25, 2014 2:22 am

குழந்தை வளர்ப்பு, இன்றைய இளம் பெற்றோருக்கு ஒரு புதிர். அழும் குழந்தையைச் சமாதானப்படுத்த முடியாமல் பசிக்கு அழுகிறதா... தூக்கத்துக்கு அழுகிறதா? என்று தெரியாமல் விழிபிதுங்கிப் போகின்றனர்.

அம்மா, பாட்டி, அத்தை... போன்றோர் நிறைந்திருந்த கூட்டுக் குடும்பம் மறைந்து போனதன் விளைவுதான் இதற்குக் காரணம். பாட்டி, அம்மாவிடம் இருந்து குழந்தை வளர்ப்பு ரகசியங்கள் மகளுக்கு இயற்கையாகவே கடத்தப்பட்டன. ஆனால், இப்போது அப்படி இல்லை. நகர்புறங்களில், கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் குடும்பத்தில் இரண்டு வயது வரை குழந்தையை வளர்ப்பது என்பது மிகவும் கடினம். பொதுவாக, பச்சிளம் குழந்தை வளர்ப்பில் புதுப் பெற்றோர்கள் செய்யும் தவறுகள் பற்றி குழந்தைகள் நல மருத்துவர் எஸ்.பழனிச்சாமியிடம் கேட்டோம்.

பால் புகட்டுதல்

குழந்தைக்கு இரண்டு முதல் மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை பால் புகட்ட வேண்டும். இதனால், சில தாய்மார்கள் இரவிலும் குழந்தையை எழுப்பி பால் புகட்டுவார்கள். இது தேவையில்லை. பொதுவாக ஆறு வாரத்திலேயே குழந்தைக்கு, பால் அருந்தும் நேரம், தூங்கும் நேரம் என 'ரிதம் செட்’ ஆகிவிடும். எனவே இரவில் பசிக்கு அழுதால் மட்டும் பால் புகட்டினால் போதும். குழந்தைக்கு ஆறு மாதம் வரை தாய்ப்பாலே போதும். தனியாக தண்ணீர் தர வேண்டியது இல்லை. ஆறு மாதத்துக்குப் பிறகு பால் அருந்தியதும் சிறிது காய்ச்சி வடிகட்டிய தண்ணீர் குடிக்கச் செய்யலாம்.

அவ்வப்போது, குழந்தை நல மருத்துவரை அணுகி, குழந்தைக்கு அந்தந்த மாதத்துக்கான வளர்ச்சி இருக்கிறதா என்று பரிசோதித்துக்கொள்ளுங்கள். வளர்ச்சி குறைவாக இருந்தால் டாக்டரின் ஆலோசனை பெற்று அதன்படி செயல்படுவது நல்லது.

வாய் பராமரிப்பு

பச்சிளம் குழந்தைதானே என்று பெற்றோர்கள் குழந்தையின் வாய் பராமரிப்பைப் புறக்கணிக்கிறார்கள். பல் முளைக்காதபோதும் வாய் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். குழந்தைக்குப் பால் புகட்டியதும் மென்மையான துணியை வெதுவெதுப்பான நீரில் நனைத்து குழந்தையின் ஈறுகளையும், வாயை¬யும் துடைக்க வேண்டும். ஃபுளோரைட் குழந்தைக்கு மிக அவசியமான தாது உப்பு. அது நீரில் போதுமான அளவு இருக்கிறது.

தூக்கம்

இரவில் தூக்கம் கெட்டுவிடக்கூடாது என்பதற்காகக் குழந்தையின் தூக்கப் பழக்கத்தை மாற்றுகிறேன் என்று சில தாய்மார்கள், பகலில் நீண்ட நேரம் குழந்தையை விழித்திருக்க முயற்சிப்பார்கள். குறைந்தது, ஓராண்டு வரையில் இந்தப் பழக்கத்தை முயற்சிக்காதீர்கள். அதிகச் சோர்வும்கூட, குழந்தையின் தூக்கத்தைக் கெடுத்துவிடக்கூடும். குழந்தை எப்போதெல்லாம் தூங்க விரும்புகிறதோ அப்போது அதைத் தூங்க வைத்துவிடுங்கள்.

பேச அனுமதியுங்கள்

குழந்தைகள் வார்த்தைகளை பேச ஆரம்பிப்பதற்கு முன்னரே மொழியைக் கண்டறியவும், கற்கவும் முயற்சிக்கின்றன. அதனால் பெற்றோர்கள் பொருளற்ற ஓசைகளை எழுப்புவதைக்காட்டிலும் குழந்தைகளிடம் பேச வேண்டும். ஒன்றிரண்டு வார்த்தைகளைச் சொல்லச்சொல்ல அந்த வார்த்தைகளைப் பேச குழந்தை முயற்சிக்கும். நாம் பேசும்போது நம்முடைய வாய் அசைவு, முக அசைவுகளை குழந்தை உற்றுநோக்கும். இதன்மூலம் குழந்தையின் மொழி திறன் மேம்படும். எனவே, குழந்தைக்குப் புரியவில்லை என்றாலும்கூடத் தொடர்ந்து பேசுங்கள். குழந்தையின் கண்ணைப் பார்த்துப் பேசுவதும், அதன் கவனத்தை ஈர்த்து, பேசத்தொடங்கும்.

உறவுகளுடன் உறவாட விடுங்கள்!

வேற்று முகம் அறியாதாது மழலை. யார் கூப்பிட்டாலும், சிரித்தபடியே ஓடிவரும். ஆனால், வளர வளர, பெற்றோரைத் தவிர, வேறு யாரிடமும் ஒட்டாது. குழந்தைக்கு, சமூகத்துடனான உறவாடல் இல்லாமல் இருப்பது நல்லது அல்ல. இதனைத் தவிர்க்க, அக்கம்பக்கத்தினரிடம் பழக விடுங்கள். நிறையக் குழந்தைகளைப் பார்த்ததும் குழந்தை துள்ளிக் குதிப்பதைப் பார்க்க முடியும். பாட்டி, அத்தை, சித்தி என்று வாரம் அல்லது மாதம் ஒரு முறை உறவினர்களிடம் கொண்டுவிடுங்கள். உறவுகளின் உன்னதத்தை உணர்ந்து, குழந்தை பல நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள்ளும்.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Jun 25, 2014 11:08 am

உண்மையே, இன்று கூட்டு குடும்பம் என்பது காண்பதற்கு அரிய ஒன்றாகி விட்டது..



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக