புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  Poll_c10ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  Poll_m10ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  Poll_c10 
68 Posts - 53%
heezulia
ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  Poll_c10ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  Poll_m10ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  Poll_c10ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  Poll_m10ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  Poll_c10ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  Poll_m10ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  Poll_c10ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  Poll_m10ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  Poll_c10ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  Poll_m10ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  Poll_c10ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  Poll_m10ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  Poll_c10ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  Poll_m10ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  Poll_c10ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  Poll_m10ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  Poll_c10ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  Poll_m10ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  Poll_c10ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  Poll_m10ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  Poll_c10ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  Poll_m10ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  Poll_c10 
15 Posts - 3%
prajai
ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  Poll_c10ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  Poll_m10ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  Poll_c10ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  Poll_m10ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  Poll_c10 
9 Posts - 2%
Jenila
ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  Poll_c10ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  Poll_m10ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  Poll_c10 
4 Posts - 1%
jairam

ஜாஹீதாபானு
ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  Poll_c10ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  Poll_m10ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 04, 2013 8:37 am

இராமாயணம் படித்தால் சகல நலன்களும் வந்து
சேரும் என்ற நம்பிக்கை நம்நாட்டில் உண்டு.
-
ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  JwvNBpqRkKq7olyhl56Q+sri-rama
---

மணமாகாத கன்னியர் சுந்தரகாண்டத்தைப்
பாராயணம் செய்தால் உடனே மணமாகும் என்பர்.

வேறு சில பரிகாரங்களுக்கும் சுந்தர காண்டத்தைப்
படிக்கச் சொல்வதுண்டு. இராமாயணத்தைப்
பாராயணம் செய்து தசமி அன்று பட்டாபிஷேகத்தைப்
படித்து முடிப்பது ஒரு வகை.

ஸ்ரீராமர் பிறந்த இந்த நவமியிலிருந்து பத்து
தினங்களுக்குப் பாராயணம் செய்து
பட்டாபிஷேகத்தைப் படித்து முடிப்போரும் உண்டு
.

இராமனின் கதையைக் கேட்டாலும் படித்தாலும்
புண்ணியம் சேரும் என்பது ஆன்றோர் கருத்து.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 04, 2013 8:41 am

அஷ்டமி, நவமி திதிகள் என்றால் எந்தக்
கார்யத்திலும் இறங்காமல் வெறுமனே
அமர்ந்திருக்கும் மக்களைப் பார்க்கும்போது
எனக்கு இந்த விஷயம்தான் தோன்றும்.

இந்தத் திதிகளை மக்கள் ஒதுக்கவே, அவை
இறைவனிடம் சென்று, "மக்கள் எங்களை
ஒதுக்குகின்றனரே'' என்று வருந்தினவாம்.
அதற்கு இறைவன் "உங்களுக்கு ஏற்றம்
தருகிறேன். மக்கள் உங்கள் இருவரையும்
கொண்டாடச் செய்கிறேன்'' என்று
வாக்களித்தாராம்.

பகவான் உறுதியளித்தபடி, நவமி திதியில்
ராமனாகவும், அஷ்டமி திதியில்
கிருஷ்ணனாகவும் அவதரித்து, மக்கள்
அவ்விரு திதிகளையும் கொண்டாடச் செய்தாராம்.
-

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Dec 04, 2013 10:58 am

தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி அய்யாசாமி

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Wed Dec 04, 2013 11:20 am

தமிழில் முழு ராமாயணத்தையும் விளக்கும் ஒரு அற்புதமான பாடல்

1963 ஆம் ஆண்டு வெளிவந்த ‘லவகுசா’ திரைப்படத்தில் முழு ராமாயணத்தையும் விளக்கும் வகையில் இராம புத்திரர்களான லவ குசர்கள் பாடிய பாடல். கவிஞர் மருதகாசி இயற்றி பி.சுசீலா அவர்களும் பி.லீலா அவர்களும் பாடியிருக்கும் இந்த அற்புத பாடலை படியுங்கள். கேளுங்கள்.

பாடலை கேட்கும்போதே உடல் சிலிர்த்து காதலாகி கண்ணீர் கசிந்தோடும் என்பது உறுதி. ஊனையும் உருக்கும் ஒரு உன்னத பாடல்.

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே

இகபர சுகமெலாம் அடைந்திடலாமே
இந்தக் கதை கேட்கும் எல்லோருமே
இனிக்குது நாவெல்லாம் உரைத்திடும் போதிலே
இனிக்குது நாவெல்லாம் உரைத்திடும் போதிலே
இணையே இல்லாத காவியமாகும்

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

அயோத்தி மன்னன் தசரதனின் அருந்தவத்தால்
அவன் மனைவி கௌசல்யா கைகேயி சுமித்திரை
கருவினிலே உருவானார் இராம லக்ஷ்மணர்
கனிவுள்ள பரதன் சத்ருக்னர் நால்வன்

நாட்டினர் போற்றவே நால்வரும் பலகலை
ஆற்றலும் அடைய மன்னன் வளர்த்து வந்தானே
காட்டினில் கௌசிகன் யாகத்தைக் காக்கவே
கண்மணி ராமலக்ஷ்மணரை அனுப்பினனே
கண்மணி ராமலக்ஷ்மணரை அனுப்பினனே
தாடகை சுபாஹுவை தரையினில் வீழ்த்தியே
தவசிகள் யாகம் காத்து ஆசி கொண்டனரே
தாடகை சுபாஹுவை தரையினில் வீழ்த்தியே
தவசிகள் யாகம் காத்து ஆசி கொண்டனரே
பாதையில் அகலிகை சாபத்தைத் தீர்த்தபின்
பாதையில் அகலிகை சாபத்தைத் தீர்த்தபின்
சீர்பெரும் மிதிலை நகர் நாடிச் சென்றனரே

வீதியில் சென்றிடும் போதிலே ராமன்
சீதையைக் கன்னிமாட மீதிலே கண்டான்
காதலினால் இருவர் கண்களும் கலந்தன
காதலினால் இருவர் கண்களும் கலந்தன
கன்னியை வில்லொடித்து சொந்தமும் கொண்டான்
ஆணவத்தால் அறிவிழந்த பரசுராமன்
அகந்தைதனை அடக்கி ராமன் வெற்றி கொண்டான்
அரும் புதல்வன் வீரத்தைக் கண்ட மன்னன்
அளவில்லா ஆனந்த நிலையைக் கண்டான்

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே

மன்னவன் தசரதன் கண்மணி ராமனுக்கு
மணிமுடி சூட்டவே நாள் குறித்தானே
மன்னவன் தசரதன் கண்மணி ராமனுக்கு
மணிமுடி சூட்டவே நாள் குறித்தானே
மக்கள் யாவரும் மகிழ்வுடன் நகரையே
மகர தோரணத்தால் அலங்கரித்தாரே
மந்தரை போதனையால் மனம் மாறிக் கைகேயி
மணிமுடி பரதன் சூடி நாட்டை ஆளவும்
வனத்தில் ராமன் பதினான்கண்டுகள்
வாழவும் மன்னனிடம் வரமது கேட்டாள்

அந்த சொல்லைக் கேட்ட மன்னர்
மரண மூர்ச்சை அடைந்த பின்னர்
ராமனையும் அழைக்கச் செய்தாள்
தந்தையுனை வனம் போகச் சொல்லி
தம்பி பரதனுக்கு மகுடத்தைத் தந்தார் என்றாள்
சஞ்சலமில்லாமல் அஞ்சலவண்ணனும்
சம்மதம் தாயே என வணங்கிச் சென்றான்
விஞ்சிய கோபத்தால் வெகுண்டே வில்லெடுத்த
தம்பி இலக்குவனை சாந்தமாக்கினான்

இளையவனும் ஜானகியும் நிழல் போல் தொடரவே
மரவுறி தரித்து ராமன் செல்வது கண்டு
இளையவனும் ஜானகியும் நிழல் போல் தொடரவே
மரவுறி தரித்து ராமன் செல்வது கண்டு
கலங்கி நாட்டு மக்கள் கண்ணீர் சிந்தியே

கலங்கி நாட்டு மக்கள் கண்ணீர் சிந்தியே
இதயங்கள் போவதென்று தடுத்தனர் சென்றே

ஆறுதல் கூறியே கார்முகில் வண்ணன்
அன்புடன் அவர்களிடம் விடையும் கொண்டானே
அன்னையும் தந்தையும் சொன்ன சொல் காக்கவே
அண்ணலும் கானகத்தை நாடிச் சென்றானே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்

செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்

செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே

கங்கைக் கரை அதிபன் பண்பில் உயர்ந்த குகன்
அன்பால் ராமபிரான் நண்பனாகினான்
கங்கைக் கரை அதிபன் பண்பில் உயர்ந்த குகன்
அன்பால் ராமபிரான் நண்பனாகினான்
பஞ்சவடி செல்லும் பாதையைக் காட்டினான்
பஞ்சவடி செல்லும் பாதையைக் காட்டினான்
அஞ்சனவண்ணன் அங்கு சென்று தங்கினான்
அஞ்சனவண்ணன் அங்கு சென்று தங்கினான்

ராவணனின் தங்கை கொடியவள் சூர்ப்பனகை
ராமபிரான் மீது மையல் கொண்டாள்
ராவணனின் தங்கை கொடியவள் சூர்ப்பனகை
ராமபிரான் மீது மையல் கொண்டாள்
கோபம் கொண்ட இளையோன் கூரம்பால் அவளை
மானபங்கம் செய்து விரட்டி விட்டான்
தங்கையின் போதையால் தசகண்ட ராவணன்
ஜானகி தேவியை சிறையெடுத்தான்
தங்கையின் போதையால் தசகண்ட ராவணன்
ஜானகி தேவியை சிறையெடுத்தான்
நெஞ்சம் கனலாகி கண்கள் குளமாகி
தம்பியுடன் தேவியைத் தேடிச்சென்றான்
ராமன் தேடிச் சென்றான்

வழியிலே ஜாடாயுவால் விவரமெல்லாம் அறிந்தான்
வாயு மைந்தன் அனுமானின் நட்பைக் கொண்டான்
ஆழியைத் தாண்டியே இலங்கை சென்ற அனுமான்
அன்னையை அசோகவனத்தில் கண்டான்

ராமசாமியின் தூதன் நானடா ராவணா என்றான்
ராமசாமியின் தூதன் நானடா ராவணா என்றான் அனுமான்
லங்காபுரியைத் தீக்கிரையாக்கி கிஷ்கிந்தை சென்றான்
கண்டேன் அன்னையை என்றே ராமனை சேவித்தே நின்றான்
கடலைக் கடந்து அண்ணல் வானர சேனையுடன் சென்றான்
வானர சேனையுடன் சென்றான்
விபீஷணனின் நட்பைக் கொண்டான் ராவணனை வென்றான்
வீரமாதா ஜானகி தேவியைத் தீக்குளிக்கச் செய்தான்

கற்பின் கனலைக் கனிவுடன் ஏற்று அயோத்தி நகர் மீண்டான்
கற்பின் கனலைக் கனிவுடன் ஏற்று அயோத்தி நகர் மீண்டான்
கலங்கிய மக்கள் களிப்புற ராமன் அரசுரிமை கொண்டான்
அரசுரிமை கொண்டான்

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே

ஸ்ரீ ராகவம் தசரதாத்மஜம் அப்ரமேயம்
சீதாபதிம் ரகுகுலான்மயரக்ஷமீயம்
ஆஜானுபாகும் அரவிந்த தளாய தாட்ச்ம்
ராமம் நிசாசர விநாசகரம் நமாமி

-- நன்றி திரு. சுந்தர்

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Wed Dec 04, 2013 11:33 am

எளிய வடிவில் ராமாயணம்…

ராமாயணக் கதை முழுதும் ‘’ என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைக் குமுதம் பக்தி ஸ்பெஷலுக்காகத் தொகுத்தவர் பெயர் : ஜானகி

அனந்தனே அசுரர்களை அழித்து,
அன்பர்களுக்கு அருள அயோத்தி
அரசனாக அவதரித்தான்!

அப்போது அரிக்கு அரணாக அரசனின்
அம்சமாக அனுமனும் அவதரித்ததாக
அறிகிறோம். அன்று அஞ்சனை அவனிக்கு
அளித்த அன்பளிப்பு அல்லவா அனுமன் ?
அவனே அறிவழகன், அன்பழகன், அன்பர்களை
அரவணைத்து அருளும் அருட்செல்வன்!

அயோத்தி அடலேறு, அம்மிதிலை அரசவையில்
அரசனின் அரிய வில்லை அடக்கி, அன்பும்
அடக்கமும் அங்கங்களாக அமைந்த அழகியை
அடைந்தான்!

அரியணையில் அமரும் அருகதை அண்ணனாகிய
அனந்த ராமனுக்கே! அப்படியிருக்க அந்தோ!
அக்கைகேயி அசூயையால் அயோத்தி அரசனுக்கும்
அடங்காமல் அநியாயமாக அவனை ஆரண்யத்துக்கு
அனுப்பினாள்!

அங்கேயும் அபாயம், அரக்கர்களின் அரசன்,
அன்னையின் அழகால் அறிவிழந்து அபலையை
அபகரித்தான்.
அத்தசமுகனின் அக்கிரமங்களுக்கு,
அட்டூழியங்களுக்கு,
அளவேயில்லை. அயோத்தி அண்ணல், அன்னை
அங்கிருந்து அகன்றதால் அடைந்த அவதிக்கும்
அளவில்லை.

அத்தருணத்தில் அனுமனும், அனைவரும் அரியை
அடிபணிந்து, அவனையே அடைக்கலமாக
அடைந்தனர்.
அந்த அடியார்களில் அருகதையுள்ள அன்பனை
அரசனாக அரியணையில் அமர்த்தினர்.

அடுத்து அன்னைக்காக அவ்வானரர் அனைவரும்
அவனியில் அங்குமிங்கும் அலைந்தனர். அலசினர்.
அனுமன், அலைகடலை அலட்சியமாக அடியெடுத்து
அளந்து அக்கரையை அடைந்தான்.

அசோகமரத்தின் அடியில், அரக்கிகள் அயர்ந்திருக்க
அன்னையை அடி பணிந்து அண்ணலின்
அடையாளமாகிய அக்கணையாழியை அவளிடம்
அளித்தான்.

அன்னை அனுபவித்த அளவற்ற அவதிகள்
அனேகமாக அணைந்தன. அன்னையின்
அன்பையும்
அருளாசியையும் அக்கணமே அடைந்தான்
அனுமன்.

அடுத்து, அரக்கர்களை அலறடித்து, அவர்களின்
அரண்களை, அகந்தைகளை அடியோடு
அக்கினியால்
அழித்த அனுமனின் அட்டகாசம், அசாத்தியமான
அதிசாகசம்!

அனந்தராமன் அலைகடலின் அதிபதியை
அடக்கி, அதிசயமான அணையை
அமைத்து, அக்கரையை அடைந்தான்.

அரக்கன் அத்தசமுகனை அமரில் அயனின்
அஸ்திரத்தால் அழித்தான்.

அக்கினியில் அயராமல் அர்ப்பணித்த அன்னை
அவள் அதி அற்புதமாய் அண்ணலை அடைந்தாள்.

அன்னையுடன் அயோத்தியை அடைந்து
அரியணையில் அமர்ந்து அருளினான்.

அண்ணல், அனந்தராமனின் அவதார
அருங்கதை அகரத்திலேயே அடுக்கடுக்காக
அமைந்ததும் அனுமனின் அருளாலே!

–நன்றி குமுதம் பக்தி ஸ்பெஷல்

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Wed Dec 04, 2013 11:37 am

ஸ்ரீராம நாம மஹிமை

“ராம” நாமம் ஒருமருந்து

"ராம” நாமம் அரு மருந்து

ஒரே ஒரு மருந்து ஒரு மருந்து

உலகத்தை உய்விக்க வந்த மருந்து

ராம ராம ராம ராம ராம ராம ராம்
ராம ராம ராம சீதா ராம ராம ராம்

“சொல்லின் செல்வன்” ஆஞ்சநேயன் தின்னும் மருந்து
சொல்லச் சொல்ல தித்திக்கும் அந்த மருந்து
அஞ்சனா பாக்கியம் என்னும் மருந்து
ஆர்வத்துடன் அசை போட்டு தின்னும் மருந்து
ராம ராம ராம ராம ராம ராம ராம்
ராம ராம ராம சீதா ராம ராம ராம்

“தாரக” மந்த்ரம் அந்த மருந்து
தாபம் மூன்றும் போக்கடிக்கும் அந்த மருந்து
தின்னத் தின்னத் திகட்டாது அந்த மருந்து
தேவர்களுக்கும் கிட்டாது அந்த மருந்து
ராம ராம ராம ராம ராம ராம ராம்
ராம ராம ராம சீதா ராம ராம ராம்

ஜானகிக்கு ஜீவன் தந்தது அந்த மருந்து
ஜாதி மத பேதமின்றி சொல்லும் மருந்து
மாருதிக்கு பெருமை தந்தது அந்த மருந்து
மாதேவன் பாராட்டிப் பேசும் மருந்து
ராம ராம ராம ராம ராம ராம ராம்
ராம ராம ராம சீதா ராம ராம ராம்

மங்காத செல்வம் தரும் அந்த மருந்து
மாயப் பிறப்பறுக்கும் அந்த மருந்து
பாமரர்க்கும் பண்டிதர்க்கும் ஒரே மருந்து
பாரபட்சமின்றி பலன் தரும் அந்த மருந்து
ராம ராம ராம ராம ராம ராம ராம்
ராம ராம ராம சீதா ராம ராம ராம்

துறவிகளும் யோகிகளும் தின்னும் மருந்து
துளசிதாசன் தேடித் தேடிக் கண்ட மருந்து
ஐந்தும் எட்டும் கூட்டிச் சேர்த்தது அந்த மருந்து
ஐந்து வித பாவங்களை போக்கும் அந்த மருந்து
ராம ராம ராம ராம ராம ராம ராம்
ராம ராம ராம சீதா ராம ராம ராம்

வைதேஹிக்கு வாழ்வளித்தது அந்த மருந்து
வையகத்தை வாழவைக்க வந்த மருந்து
இல்லறத்தில் வாழ்வு தரும் அந்த மருந்து
இறுதியிலே வீடு தரும் அந்த மருந்து
ராம ராம ராம ராம ராம ராம ராம்
ராம ராம ராம சீதா ராம ராம ராம்

பலவித நன்மைகளைத் தந்த மருந்து
பக்தர்களை பாடி ஆட வைத்த மருந்து
பலவித பயங்களைப் போக்கும் மருந்து
கேட்கக் கேட்கத் தெவிட்டாத “ராம” நாம மருந்து
ராம ராம ராம ராம ராம ராம ராம்
ராம ராம ராம சீதா ராம ராம ராம்

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Wed Dec 04, 2013 11:56 am

ஒரே பக்கத்தில் ராமாயணம்

தனியறத்தின் தாயான தசரத மாமன்னன், கொள்வாரும் கொடுப்பாரும் கள்வரும் காவலரும் அற்ற சமுதாய சமத்துவம் மிகு ந்த அயோத்தி நாட்டை ஆண்டு வந்தான். மன்னனது புத்திர சோகத்தைத் தீர்க்க ராம, இலக்குமண, பரத, சத்ருகனன் என் னும் அருந்தவப் புதல்வர்கள் அவதரித்தனர். நால்வரில் கரிய செம்மலான சுந்தரராமன் க்ஷத்திரிய கலைகளை நன்கு கற்ற, அரசனுக்குப் பிரியமான தசரத ராமனாகத் திகழ்ந்தான். விசுவாமித்ரருடன் கானகம் சென்று, தாடகை, சுபாகு ஆகிய அரக்கர்களைக் கொன்று, மாரீசனைக் கடலில் தள்ளி யாகத்தைக் காத்து, கோதண்ட ராமனாகக் காட்சி அளித்தான்.

மிதிலை செல்லும் வழியில் அகலிகையைத் தன் கால் வண்ணத்தால் பெண்ணாக்கி, பாபவிமோசன ராமனாக விளங்கினான். ஜனகனின் ராஜ மண்டபத்தில் சிவதனுசை ஒடித்து சீதையைக் கைப்பிடித்து ஜானகி ராமனாகத் தோன்றினான். அயோத்தி வ ரும் வழியில் பரசுராமனின் விஷ்ணு தனுசையும், அவன் கர்வத்தையும் ஒருங்கே வளைத்த ராஜா ராமனாக நின்றான்.

உள்ள நிறைவில் கள்ளம் புகுந்த கைகேயியின் விருப்பப்படி, ஓட்டையும் பொன்னையும் ஒக்கநோக்கும் அன்றலர்ந்த தாமலை மலர் போன்ற முகத்தை உடைய பரந்தாமன், தந்தை சொல் காக்கக் கானகம் ஏகி, குகனின் உதவியால் கங்கை இரு கரைகளை அவனது அன்பெனும் நாவாயால் கடந்து, சித்ரகூடத்தில் முனிவர்களுக்கு அபயம் அளித்து சபரியின் கனி உண்டு அவளுக்கு முக்திக்கனி அளித்து ஆனந்த ராமனாகக் காட்சி அளித்தான்.

பஞ்சவடியில் ராமபிரான் மீது மையல்கொண்ட சூர்ப்பணகையை இளவல் மூக்கறுத்து அவமதித்தபிறகு, ராமன் கரனின் சிரம் சாய்த்த அற்புத ராமனாகக் கோலம் பூண்டான். அண்ணல் பொன்மான் பின் சென்ற சமயம் ராவணன் சீதையைத் தூக்கிச் சென்ற பிறகு, ஜடாயுவிற்கு வீடுபேற்றைத் தந்து, சுக்ரீவனின் நட்பைப் பூண்டு, வாலியை வதம் செய்து சுக்ரீவனுக்குப் பட்டம் கட்டிய தூய நேய ராமனாகத் திகழ்ந்தான். ஐயனின் தூதனாக அனுமான் கடலைத் தாண்டி அன்னையைக் கண்டு, அண் ணலின் கணையாழியைக் கொடுத்து, அவளது சூடாமணியைப் பெற்று வந்ததும் ராமன் மன்மதரூபனாகக் காட்சி அளித்தான்.

கடலைத் தாண்ட முயற்சிக்கையில் கடல் அரசன் உதவ மறுக்க, ஐயன் வெகுண்டு பாணம் எடுத்து ஊழிக்கால உருத்திர சிவராமனாகத் தோன்றினான். இலங்காபுரியை அடைந்து விபீடணின் சரணாகதியை ஏற்றுக்கொண்டு, ராவணனுடன் போர் செய்து, அவனது கை சளைக்கையில் ‘இன்று போய் நாளைவா’என்று மொழிந்த பகைவனுக்கருளும் உத்தம ராமனாக நின்றான்.

ராவணனைக் கொன்று மீட்ட சீதையின் கற்பைக் கனலில் புடம் போட்டுப் பார்த்த சீதா ராமனாக, மனித ராமனாகத் தோன்றினான்.

நந்திக் கிராமம் வந்து, பரம பக்தனாக பரதனைக் காத்த பக்தி நேயனாகக் காட்சி அளித்தான். அயோத்தி மாநகரை அடைந்து, அன்னைமார் புடைசூழ, தேவி அருகிருக்க,ராஜ்ய பட்டாபிஷேகம் செய்துகொண்ட பட்டாபிராமனாக விளங்கிய ஐயன் பல தத்துவங்களைத் தன் வாழ்க்கையின் மூலம் விளக்கி நம் அனைவரது உள்ளங்களிலும் என்றும் முடிவில்லாத நிலைபெற்ற அனந்த ராமன் ஆவான்..

திருமதி எ ன். லலிதா

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Wed Dec 04, 2013 12:00 pm

ஒரே சுலோகத்தில் அமைந்த இராமாயணம்

தெள ராம தபோவனாதி கமனம் ஹத்வா ம்ருகம் காஞ்சனம்
வைதேஹி ஹரணம் ஜடாயு மரணம் சுக்ரீவ ஸம்பாஷனம்
வாலி நிக்ரஹனம் சமுத்ர தரணம் லங்காபுரி தஹனம்
பஸ்சாத் ராவண கும்பகர்ண ஹரணம் ஏததி ராமாயணம்

ஆதெள ராம தபோவனாதி கமனம் - இராமன் தபோவனங்களுக்குச் செல்வதும்

ஹத்வா ம்ருகம் காஞ்சனம் - பொன்மானைக் கொல்வதும்

வைதேஹி ஹரணம் - சீதை கடத்தப்படுவதும்

ஜடாயு மரணம் - ஜடாயு காலமாவதும்

சுக்ரீவ ஸம்பாஷனம் - சுக்ரீவனுடன் நட்பு கொண்டு ஆலோசிப்பதும்

வாலி நிக்ரஹனம் - வாலியைக் கொல்வதும்

சமுத்ர தரணம் - கடலைக் கடப்பதும்

லங்காபுரி தஹனம் - இலங்கையை எரிப்பதும்

பஸ்சாத் - பின்னர்

ராவண கும்பகர்ண ஹரணம் - இராவண கும்பகருணர்களை அழிப்பதும்

ஏததி ராமாயணம் - இவையே இராமாயணம்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 04, 2013 2:33 pm

ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  1571444738 
-
ஸ்ரீராமாயணக் கதையை மனம் லயித்துக் கேட்க வேண்டும்...  UeS5jEOJRsCxCRW8g9We+sri-rama

pkselva
pkselva
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 19/02/2013

Postpkselva Mon Dec 09, 2013 8:25 am

அருமையான தொகுப்பு.

நன்றி நண்பர்களே!

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக