புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின் Poll_c10கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின் Poll_m10கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின் Poll_c10 
21 Posts - 64%
ayyasamy ram
கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின் Poll_c10கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின் Poll_m10கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின் Poll_c10 
10 Posts - 30%
Ammu Swarnalatha
கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின் Poll_c10கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின் Poll_m10கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின் Poll_c10 
1 Post - 3%
M. Priya
கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின் Poll_c10கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின் Poll_m10கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின் Poll_c10கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின் Poll_m10கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின் Poll_c10 
64 Posts - 70%
ayyasamy ram
கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின் Poll_c10கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின் Poll_m10கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின் Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின் Poll_c10கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின் Poll_m10கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின் Poll_c10 
4 Posts - 4%
Rutu
கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின் Poll_c10கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின் Poll_m10கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின் Poll_c10 
3 Posts - 3%
prajai
கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின் Poll_c10கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின் Poll_m10கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின் Poll_c10 
2 Posts - 2%
Jenila
கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின் Poll_c10கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின் Poll_m10கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின் Poll_c10 
2 Posts - 2%
Baarushree
கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின் Poll_c10கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின் Poll_m10கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின் Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின் Poll_c10கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின் Poll_m10கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின் Poll_c10கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின் Poll_m10கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின் Poll_c10 
1 Post - 1%
manikavi
கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின் Poll_c10கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின் Poll_m10கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 16, 2013 12:11 pm



மும்பை : இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தனது 200வது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச போட்டிகளில் இருந்து விடைபெற்றார். தனது கடைசி டெஸ்ட்டில் விளையாடிய சச்சின் முதல் இன்னிங்சில் 74 ரன்கள் விளாசினார். இந்திய அணி 2வது டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 126 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் மற்றும் இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. வெற்றியை கொண்டாடிய சச்சின், மைதானத்தில் ரசிகர்களை பார்த்து கையசைத்தார். ரசிகர்கள், இந்திய அணி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சச்சினுக்கு எழுந்து நின்று பிரியா விடை கொடுத்தனர்.

அப்போது சச்சின் கண்ணீருடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் 68 அரைசதம், 51 சதம் உட்பட 15,921 ரன்கள் விளாசியுள்ளார்.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Nov 16, 2013 1:16 pm

உணர்ச்சிபூர்வமான செய்தியைத் தந்த சிவா அவர்களே , உங்களுக்கு நன்றி ! சச்சின் ஒரு விளையாட்டு வீரர் என்பதையும் தாண்டி இந்தியத் தலைவர் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளர் ! ‘பொறுப்புணர்ச்சி’ என்றால் என்ன என்பதை இளைய சமுதாயத்திற்குச் சொன்ன மாமனிதன் சச்சின் ! சச்சின் இந்தியக் குடியரசின் தலைவராக ஒரு நாள் வருவார் என என் மகனிடம் நேற்றுச் சொன்னேன் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 16, 2013 1:17 pm

Dr.S.Soundarapandian wrote:சச்சின் இந்தியக் குடியரசின் தலைவராக ஒரு நாள் வருவார் என என் மகனிடம் நேற்றுச் சொன்னேன் !

உங்களின் எண்ணம் உண்மையாகட்டும்! சூப்பருங்க 

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 16, 2013 1:53 pm

பெற்றோர் கொடுத்த சுதந்திரமே கிரிக்கெட்டில் சாதனைகள் புரிய வைத்ததாக சச்சின் டெண்டுல்கள் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

463 ஒரு நாள் போட்டியில் விளையாடியுள்ள சச்சின், 49 சதமும், 96 அரை சதமும், 200 டெஸ்ட் போட்டிகளில் 51 சதமும், 67 அரை சதமும் அடித்துள்ளார். மொத்தம் 34,273 ரன்கள் சச்சின் குவித்துள்ளார்.

மும்பையில் இன்று நடந்த மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 126 ரன்கள் வித்தியாசத்தில் பெற்றி பெற்றது. தனது கிரிக்கெட் வாழ்க்கையை பெற்றியுடன் சச்சின் இன்று முடித்தார்.

வாங்கேடே மைதானத்தில் நடந்த வழியனுப்பி விழாவில் சச்சினுக்கு ஏராளமான நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து ரசிகர்களின் ஆரவாரத்துக்கு இடையே பேசிய சச்சின், 24 வருடங்கள் தொடர்ந்த எனது சிறப்பான கிரிக்கெட் பயணம் நிறைவு பெறுகிறது.

தனது வளர்ச்சிக்கு தந்தையின் வழிகாட்டுதல் பெரும் துணையாக அமைந்தது. 1999ஆம் ஆண்டு எனது தந்தை இறந்தார். இந்த நேரத்தில் அவர் இல்லாதது எனக்கு மிகப்பெரிய ஏக்கமாக இருக்கிறது. நான் இந்த அளவுக்கு உயர்ந்திருப்பதற்கு தந்தையே காரணம். அவர் தற்போது இல்லாதது எனக்கு வருத்தமாக உள்ளது.

அடுத்தது எனது தாய். அவரும் எனது ஆரோக்கியம், முன்னேற்றத்துக்கு உதவியாக இருந்தார். அஞ்சலியை திருமணம் செய்து கொண்டது எனது வாழ்க்கையில் நடந்த மிக முக்கியமான விஷயமாகும்.

11 வயதிலேயே கிரிக்கெட் ஆடத் தொடங்கிய எனக்கு சகோதரரே ஊக்கமளித்தார். எனது கிரிக்கெட் பயணம் நீண்ட நெடியது. எனக்கு ஆதரவாக இருந்த ரசிகர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். முன்னாள், இன்னாள் வீரர்கள், பத்திரிகையாளர்கள் உள்பட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி என்றார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 16, 2013 2:13 pm

கிரிக்கெட் இல்லாத சச்சினை நினைத்து பார்க்கவே முடியவில்லை: மனைவி அஞ்சலி

கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின் KXFvFI4Q8WDHqJYf0FMw+anjali(5)

மும்பை: கிரிக்கெட் விளையாட்டு இல்லாத சச்சினை நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்று சச்சினின் மனைவி அஞ்சலி டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கரின் 24 ஆண்டுகால கிரிக்கெட் சகாப்தம் இன்றுடன் முடிவுக்கு வந்தது. மும்பை வாங்க்டே மைதானத்தில் கண்ணீருடன் விடைபெற்ற அவருக்கு ரசிகர்கள் பிரியா விடை கொடுத்தனர்.

இந்நிலையில் சச்சினின் ஓய்வு குறித்து பேட்டியளித்துள்ள அவரது மனைவி அஞ்சலி டெண்டுல்கர், "ஓய்வுக்கு பிறகு சச்சனின் வாழ்க்கையை நினைத்து பார்த்தால் வித்தியாசமாக தோன்றுகிறது. அவரை பொறுத்த வரை கிரிக்கெட்தான் கடவுள், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அவருக்கு மட்டுமின்றி எங்களுக்கும் சற்று கடினமாக உள்ளது.

கிரிக்கெட் இல்லாத சச்சினை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. அவரது ஓய்வு பற்றி பல பேர் விமர்சனம் செய்தாலும், தன்னால் 100 சதவீதம் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த முடியும் என்று தன்னம்பிக்கையுடன் இருந்தார்.

தன்னுடைய மனம் எப்போது ஓய்வை பற்றி நினைக்கிறதோ அன்றைய தினம் தான் கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக என்னிடம் கூறினார். ஒருநாள் நானும் அவரும் பேசிக் கொண்டிருந்த போது, தன்னுடைய 200வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக என்னிடம் கூறினார். நானும் அவரது முடிவை மதித்தேன். அவரை உண்மையாக நேசித்த அனைத்து ரசிகர்களும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 16, 2013 2:26 pm

ஓய்வு அறையில் சச்சின் உறங்கும் காட்சி

கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின் 575346_570752462980346_126218845_n

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 16, 2013 2:35 pm

என் இறுதி மூச்சு வரை ரீங்காரமிடும் 'சச்சின் சச்சின்'

மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியதோடு, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர், மும்பை வான்கடே மைதானத்தில் உணர்ச்சி பொங்க பேசினார்.

'சச்சின் சச்சின்' என்று ரசிகர்கள் என்னை உற்சாகப் படுத்தியது என் இறுதி மூச்சு வரை என் காதுகளில் ரீங்காரமிடும் என தெரிவித்தார்.

சச்சின் பேச்சு - முழு விபரம்:

ரசிகர்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டுகிறேன். உங்கள் ஆரவாரம் என்னை மேலும் உணர்ச்சிவசப் படுத்தும். எனது கிரிக்கெட் பயணம் இன்றுடன் முடிவடைகிறது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இத் தருணத்தில் நான் பலருக்கு நன்றி கூற விரும்புகிறேன்.

தந்தை சொன்ன தாரக மந்திரம் :

முதலாவதாக என் தந்தைக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன். அவருடைய வழிநடத்தல் இல்லாவிட்டால், இன்று நான் உங்கள் முன் நின்று கொண்டிருக்க மாட்டேன். என் தந்தை எனக்கு சொன்ன தாரக மந்திரம் : "கனவுகள் கைகூடும் வரை அதை துரத்திக் கொண்டே இரு. இடையூறுகள் பல வரும், அப்போதும் தொடர்ந்து கனவுகளை நோக்கிச் செல்" என்பது தான். அவரை இல்லாததை இந்த வேளையில் உணர்கிறேன்.

என் தாய், என்னை எப்படித் தான் சமாளித்தாரோ தெரியவில்லை. நான் அவ்வளவு சுட்டிப் பையனாக இருந்தேன். நான் ஒவ்வொரு போட்டிக்குச் செல்லும் முன்னரும் அவர் எனக்காக பிரார்த்தனை செய்வார். பள்ளிப் பருவத்தில், 4 வருடங்கள் என் மாமா வீட்டில் தங்கியிருந்தேன். அவர்கள் என்னை சொந்தப் பிள்ளையைப் போல் பார்த்துக் கொண்டனர்.

என் மூத்த சகோதரர் நிதின் என் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்திருந்தார். நான் என்ன செய்தாலும், அதை 100% முழுமையாக செய்வேன் என நம்புவதாக சொல்வார். என் சகோதரி சவிதா என் கடைசி போட்டி வரை, நான் விளையாடும் நாட்களில் எனக்காக இறைவனை வேண்டி உண்ணா நோன்பு இருப்பார். எனக்கு முதல் பேட் பரிசளித்தவர் அவர் தான். என் மற்றொரு சகோதரர் அஜித், எனக்காக அவரது கனவுப் பணியை துறந்தார். என் குருநாதர் அச்ரேகரிடம் என்னை முதலில் அழைத்துச் சென்றது அவர் தான். நேற்று இரவு கூட நான் 74- ரன்களில் அவுட் ஆனது குறித்து என்னிடம் பேசினார். நான் விளையாடா விட்டாலும், போட்டியின் நுட்பங்கள் குறித்து ஆலோசித்துக் கொண்டிருப்போம். இவை எல்லாம் நடக்காமல் இருந்தால் நான் மிகப்பெரிய கிரிக்கெட் வீர்ராக சோபித்திருக்க மாட்டேன்.

என் வாழ்வின் அழகிய நிகழ்வு:

1990- ஆம் ஆண்டு அஞ்சலியை நான் சந்தித்தது தான் என் வாழ்வின் அழகிய நிகழ்வாகும். ஒரு மருத்துவராக இருந்த அவர் முன்னாள் மிகப்பெரிய கடமை இருப்பது எனக்குத் தெரியும். இருப்பினும், நான் தொடர்ந்து விளையாட வேண்டும் என்பதால் குடும்பத்தையும், குழந்தைகளையும் பார்க்கும் முழு பொறுப்பையும் அவர் ஏற்றுக்கொண்டார். என்னை பொறுத்துக் கொண்ட அவருக்க நன்றி தெரிவிக்கிறேன்.

என் வாழ்வின், இரு விலை மதிக்கமுடியாத வைரங்கள் என் குழந்தைகள், சாரா மற்றும் அர்ஜூன். கடந்த 16 வருடங்களில் அவர்களுடைய பிறந்தநாட்கள், விடுமுறை நாட்களில் நான் அவர்களுடன் இருந்ததில்லை. இனி வரும் 16 வருடங்களில் அவர்களுடன் இருப்பேன் என உறுதியளிக்கிறேன்.

என் மாமியார்- மாமனார் எனக்கு செய்த பெரிய நன்மை, அஞ்சலியை நான் திருமணம் செய்து கொள்ள அனுமதித்தது. அவர்களுடன் நான் நிறைய விசயங்களை பேசியிருக்கிறேன்.

கடந்த 24 ஆண்டுகளாக என் நண்பர்கள் எனக்காக நிறைய செய்துள்ளார்கள். நான் சோர்ந்திருந்த போதெல்லாம் அவர்கள் என்னுடன் இருந்துள்ளனர். எனக்காக என்னுடன் இருந்தமைக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

நான் என் 11-வது வயதில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தேன். எனக்காக என் குரு அச்ரேகர் மைதானத்தில் இருப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கும். அவருடைய ஸ்கூட்டரை எடுத்துச் சென்று ஒரு நாளில் 2 போட்டிகளில் கலந்து கொள்வேன். அவரும் என்னுடன் வருவார். என்னை ஒருபோதும் அவர் நன்றாக விளையாடினாய் என பாராட்டியது இல்லை. நானே என் விளையாட்டுத் திறன் பற்றி அதிகமாக நினைத்து விடக்கூடாது என்பதற்காகவே அவர் அப்படிச் சொன்னார் என்பதும் எனக்குட் தெரியும்.

நான் மும்பையில் தான் என் விளையாட்டை ஆரம்பித்தேன். எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. நியூசிலாந்து சென்று விட்டு காலை 4 மணிக்கு திரும்பினேன். அன்றே ரஞ்டி டிராஃபியில் விளையாடினேன். எனக்கு மிகப்பெரிய அறிமுகம் தந்த பிசிசிஐ-க்கும் என்னை தேர்வு செய்த தேர்வுக்குழுவினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடன் விளையாடிய மூத்த கிரிக்கெட் வீரர்கள் அனிவருக்கும் நன்றி. ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, அனில் கும்ப்ளே அனைவருக்கும் நன்றி.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Nov 16, 2013 2:48 pm

ஒரு நல்ல மனிதரின் ஓய்வு நம்மை பாதிப்பது உண்மைதான். மிக சிறந்த வீரர் மட்டுமின்றி, மிக சிறந்த பொறுமைசாலி. தன்னை கேலி பேசியவரையெல்லாம் திரும்ப தனது வாயால் எதுவும் பேசாமல் தனது மட்டையால் பதிலடி கொடுத்தவர்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 17, 2013 8:14 am

போய்வாருங்கள் சச்சின்...

மேட்ச் முடிந்து எல்லா வீரர்களும் பெவிலியனை நோக்கி சச்சினின் பின்னால் நடக்க, ஒரு பக்கமாக தன் கண்ணீரை மறைத்துக் கொண்டு, கையில் ஸ்டம்புடன் சச்சினும் நடந்தார். பெவிலியனுக்குள் போகும் முன், ஒரு முறை திரும்பிப் பார்த்து, ரசிகர்களுக்காக கை அசைத்துவிட்டு, உள்ளே சென்றார். சச்சின் சச்சின் என ரசிகர்கள் சொன்ன வார்த்தைகள், காற்றில் கரையவே சில மணி நேரங்கள் பிடித்தன.

5 நாள் நடக்க வேண்டிய டெஸ்ட் போட்டி 2.5 நாளில் முடிந்துவிட்டது. யாருக்கு என்ன அவசரமோ. வேகமாக வந்து, முடிந்தேவிட்டது சச்சினின் கடைசி போட்டி. சச்சின் சீக்கிரம் ஓய்வு பெற வேண்டும் என்று குரல் கொடுத்தவர்கள் கூட, இன்று ஏதோ ஒரு மன அழுத்ததில் இருக்கிறார்கள். “நாளையிலிருந்து நான் நடிக்க மாட்டேன்” என ரஜினிகாந்த் சொன்னால் எப்படி இந்திய சினிமா ரசிகர்கள் எல்லோரும் அதிர்ச்சிக்குள்ளாவார்களோ, அப்படி இருக்கிறது சச்சின் ரசிகர்களின் நிலைமை. பலருக்கு, சச்சின் ஓய்வு பெற்ற பிறகு, கிரிக்கெட்டே ஓய்வு பெற்றதைப் போல இருக்கிறது.

எந்த ஒரு விளையாட்டை சேர்ந்தவருக்கும் கிடைக்காத அன்பும் மரியாதையும் சச்சினுக்கு கிடைத்திருக்கிறது. ஏன்? அவரால் இரண்டு தலைமுறையைச் சேர்ந்த ஆட்கள், ஒரு விளையாட்டை கண்டு ரசித்திருக்கிறார்கள். சச்சின் அவுட் ஆகும் போதெல்லாம் பலருக்கு சிறிய அளவில் மாரடைப்பு வந்திருக்கிறது. சச்சினின் ஆட்டத்தைப் பார்த்தே, இந்தியாவில் பலர் தொழில்முறையாக கிரிக்கெட் ஆடும் கனவை கொண்டுள்ளார்கள். கிரிக்கெட் ஆடத் தெரியாதவர்கள் கூட, “சச்சின் அவுட்டா, இந்தியா வின் பண்றது சந்தேகம்தான்” என சொல்லும் அளவு தன் விளையாட்டில் ஆளுமை கொண்டிருந்தார். “சச்சின் ஆடும்போது கடவுளே அதைத்தான் பார்த்துக் கொண்டிருப்பார்”, “கிரிக்கெட் என் மதம் என்றால், சச்சின் என் கடவுள்” என விதவிதமாக இன்றும் அவரைக் கொண்டாடுபவர்கள் உண்டு.

24 வருடங்களாக கிரிகெட்டையே உயிராக மதித்து ஆடிய ஒரு வீரருக்காக தேசமே கண்ணீர் மல்க விடை கொடுத்துக் கொண்டிருக்கிறது. கிரிக்கெட்டே சச்சினின் காலடியில் இருக்கிறது என பலர் ட்வீட்டுகளை பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். பிரதமர் அலுவலகத்திலிருந்து, நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது, சச்சினுக்கு என செய்தி வந்திருக்கிறது. அதையும் தலைக்கு மேல் ஏற்றிக் கொள்ளாமல், ஏதோ பள்ளியில் கிடைத்துள்ள பரிசைப் போல், தன் அம்மாவிற்கு அதை சமர்ப்பணம் செய்வதாக சொல்லியிருக்கிறார் சச்சின். இந்த எளிமைதான், சச்சினை இமாலய உயரத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.

இனி கிரிக்கெட் விளையாட்டின் வரலாறு, சச்சினுக்கு முன், சச்சினுக்கு பின் என்றே எழுதப்படும்...

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sun Nov 17, 2013 8:24 am

சச்சினின் இழப்பு; பேரிழப்புத் தான். இந்திய வீரர்களுக்குப் பயிற்சி வழங்கி, பல சச்சின்களை உருவாக்கி
சச்சினின் நாடாம்
இந்திய நாட்டிற்கு
பெருமை சேர்த்திட
தன் பங்களிப்பைச் செய்வாரென
நம்புவோமாக...



உங்கள் யாழ்பாவாணன்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக