புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியக் கல்வியின் அடுத்த சீரழிவு! Poll_c10இந்தியக் கல்வியின் அடுத்த சீரழிவு! Poll_m10இந்தியக் கல்வியின் அடுத்த சீரழிவு! Poll_c10 
21 Posts - 66%
heezulia
இந்தியக் கல்வியின் அடுத்த சீரழிவு! Poll_c10இந்தியக் கல்வியின் அடுத்த சீரழிவு! Poll_m10இந்தியக் கல்வியின் அடுத்த சீரழிவு! Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியக் கல்வியின் அடுத்த சீரழிவு! Poll_c10இந்தியக் கல்வியின் அடுத்த சீரழிவு! Poll_m10இந்தியக் கல்வியின் அடுத்த சீரழிவு! Poll_c10 
63 Posts - 64%
heezulia
இந்தியக் கல்வியின் அடுத்த சீரழிவு! Poll_c10இந்தியக் கல்வியின் அடுத்த சீரழிவு! Poll_m10இந்தியக் கல்வியின் அடுத்த சீரழிவு! Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
இந்தியக் கல்வியின் அடுத்த சீரழிவு! Poll_c10இந்தியக் கல்வியின் அடுத்த சீரழிவு! Poll_m10இந்தியக் கல்வியின் அடுத்த சீரழிவு! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
இந்தியக் கல்வியின் அடுத்த சீரழிவு! Poll_c10இந்தியக் கல்வியின் அடுத்த சீரழிவு! Poll_m10இந்தியக் கல்வியின் அடுத்த சீரழிவு! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியக் கல்வியின் அடுத்த சீரழிவு!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 06, 2013 10:28 pm


தாகூர் “இந்தியாவில் அனைத்துத் துயரங்களுக்கும் அடிப்படைக் காரணம் கல்வியறிவின்மை” என்றார். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஏற்பட்ட சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கும் ஜப்பான், தென்கொரியா, தைவான், சிங்கப்பூர், ஹாங்காங்கில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சிக்கும் கல்வியில் அரசின் முதலீடுகளே காரணம் என்கிறார்கள் பொருளாதார அறிஞர் அமார்த்தியா சென்னும் பொருளாதார வல்லுநர் ழான் டிரீஸும். பொருளியலின் தந்தை என்று போற்றப்படுகிற ஆடம் ஸ்மித்தும் “கல்விக்காகச் செலவிடும் ஒவ்வொரு சிறு தொகையும் கல்வியின் அத்தியாவசியக் கூறுகளை ஊக்குவிக்கும்” என்றுதான் சொல்கிறார்.

அரசுப் பள்ளிகளில் குறைபாடுகள் உண்டு. ஆனால், அவற்றை எல்லாம் சரிசெய்ய முடியும். தனியார் பள்ளிகளின் குறைபாடுகளோ சரிசெய்ய இயலாதவை. தனியாரிடம் கல்வி என்பது பண்டம். பொருளின் தரத்தை, சந்தையில் போட்டியே தீர்மானிக்கிறது. கல்வி வணிகப் போட்டியின் தன்மையே வேறு. சந்தை விதிகளும்கூட கல்வி என்னும் பண்டத்துக்குப் பொருந்தாது. எனவே, தனியாரால் தரமான கல்வியைத் தர முடியாது. ஆனால், அரசாங்கம் கல்வியைத் தனியாரிடம் ஒப்படைக்கத் துடிக்கிறது.

புதிய திட்டம்

பொதுப்பள்ளி முறையில் உள்ள குறைகளைக் களைந்து வலுப்படுத்தாமல் நட்டாற்றில் விட்டுவிட்ட அரசு, இப்போது தன் பணத்தில் ஒரு தனியார்மயக் கல்வித் திட்டத்தை வேகமாக நடைமுறைப்படுத்த இருக்கிறது. அதுதான் அரசு-தனியார் கூட்டுப் பங்கேற்பில் செயல்படுத்தப்படவுள்ள (பிபிபி) பள்ளிக்கூடத் திட்டம். கேந்திரிய வித்யாலயப் பள்ளிகளுக்கு நிகரான பள்ளிகள் என்ற பெயரில் கொண்டுவரப்பட உள்ள இந்தப் பள்ளிகளில், சி.பி.எஸ்.இ. கல்வி முறை, பயிற்றுமொழி ஆங்கிலம் என்கிறது அரசு.

இதில், 40% மாணவர்களை அரசு நுழைவுத்தேர்வின் மூலம் சேர்க்கும். 60% மாணவர்களைப் பள்ளி உரிமையாளர் தன் விருப்பம்போல் சேர்த்துக்கொள்ளலாம். அரசு சேர்க்கும் மாணவர்களுக்கும் எட்டாம் வகுப்புக்கு மேல் கட்டணம் உண்டு. 60 விழுக்காடு மாணவர்களின் கட்டணம், ஆசிரியர்களின் சம்பளம், இதர பணி நிலைகள் எல்லாம் தனியார் விருப்பப்படி அமைத்துக்கொள்ளலாம். பள்ளியைப் பள்ளிசாரா பணிக்கும் பயன்படுத்தலாம். மத்திய அரசின் மானியம் 10 ஆண்டுகள் மட்டுமே.

இப்போதைய நிலையில், மாநில அரசு களின் பணி, நிலம் ஒதுக்குதல் அல்லது ஏற்கெனவே இருக்கும் பள்ளியை ஒப்படைத்தல் மட்டுமே. பள்ளியின் முழுக் கட்டுப்பாடு, பள்ளியின் முழு நிர்வாக மேலாண்மை முழுவதும் தனியாருக்கே சொந்தம். நாடு முழுவதும் 3,162 பள்ளிகள் இப்படித் தொடங்கப்பட உள்ளன (தமிழ்நாட்டில் 355).

தனியார் தங்கள் இஷ்டம்போல் பள்ளிக்குப் பெயர் வைத்துக்கொள்ளலாம். பெயருடன் ராஷ்டிரிய ஆதர்ஷ் வித்யாலயா என்னும் பெயரையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.இதுவே அரசு-தனியார் பங்கேற்பு அடிப்படையில் தொடங்கப்படும் மாதிரிப் பள்ளிகளைப் பற்றிய சுருக்கம்.

பாதிப்புகள் என்ன?

இதனால் ஏற்படவிருக்கும் பாதிப்புகளைப் பட்டியலிட்டு கல்வியாளர்கள் மத்திய அரசுக்குக் குறிப்பு ஒன்றைச் சமர்ப்பித்துள்ளனர். அவை:

1. தனியார் துறை என்பது எல்லா விதத்திலும் பொதுத்துறையைவிட மேம்பட்டது என்பதை அரசே இத்திட்டத்தின் மூலம் ஒப்புக்கொள்கிறது.

2. அரசுப் பள்ளி முறையைவிட, தனியார் கல்விமுறையே சிறந்தது என அரசே முதல்முறையாக ஒப்புக்கொண்ட திட்டம் இது.

3. அனை வருக்கும் சமமான தரமான கல்வி தரப்படும் என்ற அரசியல் சாசனச் சட்ட விதி இதன் மூலம் அப்பட்டமாக மீறப்படுகிறது.

4. கல்வியின் நோக்கம், தேசத்தையும் சமூகத்தையும் ஆரோக்கியமானதாகக் கட்டமைக்கும் செயல்பாடு என்ற அரசியல் சாசனமும் கைவிடப்பட்டிருக்கிறது.

5. உலகில் எங்கெல்லாம் அரசின் கட்டுப்பாட்டில் கல்வி உள்ளதோ அங்கெல்லாம் எழுத்தறிவும் கல்வித்தரமும் அதிகமாக உள்ளது. அதே சமயம், எங்கெல்லாம் தனியாரிடம் கல்வி உள்ளதோ அங்கெல்லாம் எழுத்தறிவும் கல்வித்தரமும் குறைவாகவே உள்ளது.

6. இத்திட்டத்தில் தனியார் நிறுவனங்கள் பங்குபெறலாம் என்பது, இந்திய அரசின் அடிப்படைக் கல்விக் கொள்கைக்கும் ஆவணங்களுக்கும் எதிரானது. காரணம், கல்வி ஒரு வணிகப் பொருள் என எங்கும் சொல்லப்படவில்லை.

7. இத்திட்டமே லாபம் ஈட்டும் துறைகளுக்கானது. லாபம் வராத துறைகளுக்கு இவற்றைப் பொருத்துவதில் சிக்கல் உள்ளது.

8. கல்வியுரிமைச் சட்டம், தேசிய கலைத் திட்டம் ஆகியவற்றை மீறும் பல அம்சங்கள் இதில் உள்ளன.

9. சமூகப் பங்கேற்பும் சமூகக் கண்காணிப்பும் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.

10. தனியாரின் கல்வித் தரம், திறமை, சமூகப் பொறுப்பு போன்றவற்றைப் பற்றி அரசு மிகை மதிப்பீடு கொண்டிருக்கிறது.

11. தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைகளை மீறுவது என்பது மாநகரங்களில்கூட சர்வசாதாரண நிகழ்வு. இந்நிலையில், அரசுப் பணத்தையும் நிலத்தையும் கொடுத்துத் தனியாரை நிர்வகிக்கச் சொல்வது விதிமுறை மீறலே; நீதித் துறையில்கூட இவர்களது ஒழுங்குமுறை மீறல்களைக் கட்டுப்படுத்த முடியாது.

12. இத்திட்டம் கட்டற்ற லஞ்சலாவண்யத்தை ஊடுருவச் செய்து, மிக மோசமான விளைவுகளைச் சமூகத்தில் உருவாக்கும்.

13. ஜனநாயக நாடுகளில் தற்காலிக நிதிப் பற்றாக்குறை ஏற்படுவது இயல்பானதே. இதைப் பயன்படுத்திக்கொண்டு, கல்வித் துறையில் தனியார்மயத்துக்கு வித்திடுவது, அளவிட முடியாத, சரிசெய்ய இயலாத விளைவுகளை இந்தியக் கல்வி முறையில் உருவாக்கும். 30-க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் இப்படிச் சொல்லியிருக்கிறார்கள். இவற்றைப் புறம்தள்ளிவிட முடியாது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 06, 2013 10:28 pm


அவசரநிலைக் காலக் கோலம்

இந்தியாவில் அவசரநிலைக் காலத்தில் மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டுவிட்டதால் ஏற்பட்ட பல பாதகங்களில் ஒன்றுதான் இந்தத் திட்டம். மாநில அரசு என்பது மத்திய அரசின் உதவியாளர் என்ற பாணியில் மத்திய அரசு நடத்துகிறது. எனவேதான் மாநில அரசுகளின் கருத்தைப் பற்றி சிறிதும் கருத்தில் கொள்ளாமல், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பணியில் மத்திய அரசு வேகமாக இயங்குகிறது. மத்திய அரசு பள்ளிக்கல்வி வளர்ச்சிக்குச் செய்ய வேண்டியது எல்லாம் மாநிலங்களுக்கு நிதியைப் பகிர்ந்தளிப்பது மட்டுமே.

அதேபோல், பன்முகத்தன்மை, பல்வேறு மொழிகள், பல்வேறு கலாச்சாரம் கொண்ட நாட்டில் ‘சி.பி.எஸ்.இ.’ என்னும் ஒற்றைக் கல்விமுறையை நடைமுறைப்படுத்த முனைவது தவறு என மத்திய அரசு உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. இன்று இயங்கிவரும் எந்தப் பள்ளியும் பள்ளியல்ல, இனி வரவிருக்கும் பள்ளிகளே பள்ளிகள் என்னும் தொனியை மாதிரிப் பள்ளிகள் என்ற அறிவிப்பு தோற்றுவிக்கிறது. ஆண்டு ஒன்றுக்கு ஐந்து லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலு கையை அள்ளித் தருகிற அரசு, கனிமவள மேலாண்மையில் தனியார்மயமாக்கல் கொள்கை வழியாகச் சட்டரீதியாகவும், சட்டத்துக்குப் புறம்பான வழிகளிலும் பல லட்சம் கோடி ரூபாய்களை அதே கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கொட்டிக்கொடுக்கும் அரசு இப்போது கல்வித் துறையையும் முழுக்க தாரைவார்க்க நினைக்கிறது.

ஆப்பிரிக்காவுக்கும் பின்னே

உலகில் முன்னேறிய நாடுகள் மட்டுமல்ல, ஏழை நாடுகள்கூட நம்மைவிட அதிகமாகக் கல்வியில் முதலீடு செய்கின்றன. 16 ஆப்பிரிக்க நாடுகளைப் பட்டியலிட்டு, அந்த நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியும் தனிநபர் வருவாயும் நம் நாட்டைவிடப் பன்மடங்கு குறைவு எனக் கூறிவிட்டு, அந்நாடுகளின் சமூக வளர்ச்சிக் குறியீடுகளும் மனிதவள மேம்பாடும் நம்மைவிடப் பன்மடங்கு அதிகம் என்று சென்னும் டிரீஸும் சுட்டிக் காட்டுகிறார்கள். ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரம் என்னும் ஒரு அளவீட்டில்கூட நாம் இன்னும் எத்தியோப்பியாவைக்கூட எட்டிப்பிடிக்க முடியாது. இதெல்லாம் தற்போதைய மத்திய அரசின் அக்கறையில் இல்லை. கட்டற்ற தனியார்மயத்தில்தான் மக்கள்நலன் மலரும் என்ற மூடநம்பிக்கையில் மத்திய அரசு அது ஆழமாக மூழ்கியுள்ளது!

- நா. மணி, பேராசிரியர்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 06, 2013 10:38 pm

கல்வியறிவு பெறுவதினால் நாடு மேன்மை அடையும்
என்பதில் சந்தேகமில்லை...
-
அதே நேரத்தில் குடிசைத் தொழிலை ஊக்குவிக்க வேண்டும்...
ஒரு சைக்கிள் தயாரிப்புக்கு வேண்டிய பாகங்களை கிராம
மக்களிடம் கொடுத்து தயாரிக்க வேண்டும்...பின்னர் அவைகள்
கலெக்ட் செய்து முழுமையாக்கும் பணியை தொழிற்சாலையில்
செய்ய வேண்டும்...
-
ஜப்பானில் அனைத்து எலெக்ட்ரானிக் பொருட்களும் உதிரி
பாகங்களை பல்வேறு அமைப்புகள் செய்து கொடுக்க, அவைகளை
ஒருங்கிணைக்கும் பணி மட்டுமே தொழிற்சாலையில் செய்கிறார்கள்...
-
இப்படிப்பட்ட யுக்திகளை செய்தால் , கிராம மக்கள் குடிபெயர்ந்து
நகரங்களுக்கு படையெடுப்பதும் குறையும்...
-
அரசியல்வாதிகளுக்கு நேரமிருக்காது...
-
கல்வியறிவாளர்கள், லயன் & ரோட்டரி மாதிரியான சங்க
அமைப்புகள் அரசுக்கு யோசனை சொல்ல வேண்டும்...
-




avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Thu Nov 07, 2013 2:46 pm

கட்டற்ற தனியார்மயத்தில்தான் மக்கள்நலன் மலரும்
மக்கள் நலன் மலருமோ மலராதோ, அவர்கள் வங்கி கணக்கு முழுதாய் மலரது இருக்கும்.... இனி எந்த துறையும் நுளுமையாக  தனியார் மயமாக்குவதற்கு லஞ்சமாய் எப்படியும் 1லட்சம் கோடியாவது வாங்குவார்கள். அதிலும் ஒரு துறையை விட மற்றொன்றுக்கு போட்டி அதிகம் இருக்கும் இல்லையா??? மக்கள் நலனவது மண்னாங்கட்டியாவது...

அதிலும் கல்வி கேட்கவே வேண்டாம்... தமிழ் வழி கல்வி ஏற்கனவே சிக்கி சின்னபின்ன மாகி உள்ளது... முழுவதும் தனியார் மயம் என்றால்... பள்ளிகட்டணம், படிப்பு கட்டணம், நடந்து செல்லும் தரைக்கு கூட கட்டணம் என்று   தாக்கி விடுவார்கள்



அன்புடன் அமிர்தா

இந்தியக் கல்வியின் அடுத்த சீரழிவு! Aஇந்தியக் கல்வியின் அடுத்த சீரழிவு! Mஇந்தியக் கல்வியின் அடுத்த சீரழிவு! Iஇந்தியக் கல்வியின் அடுத்த சீரழிவு! Rஇந்தியக் கல்வியின் அடுத்த சீரழிவு! Tஇந்தியக் கல்வியின் அடுத்த சீரழிவு! Hஇந்தியக் கல்வியின் அடுத்த சீரழிவு! A
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Thu Nov 07, 2013 3:11 pm

என்னைப் பொறுத்தவரை அரசு பள்ளிகளுடன் ஒப்பிடும் போது தனியார் பள்ளி மாணவர்கள் சிறந்தே விளங்குகின்றனர்

நமது நாட்டில் இது சாத்தியமாகப்படலாம் ..ஆனால் ஒரு காரணம் பணம் விழுங்கும் தனியார் பள்ளி நிர்வாகம் தான்



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக