புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிதம்பரம் – நடராஜர் தாண்டவமாடும் தில்லை திருச்சிற்றம்பலம்! Poll_c10சிதம்பரம் – நடராஜர் தாண்டவமாடும் தில்லை திருச்சிற்றம்பலம்! Poll_m10சிதம்பரம் – நடராஜர் தாண்டவமாடும் தில்லை திருச்சிற்றம்பலம்! Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram

62 Posts - 42%
mohamed nizamudeen

6 Posts - 4%
ஜாஹீதாபானு

4 Posts - 3%
prajai

1 Post - 1%
rajuselvam

Kavithas

bala_t

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிதம்பரம் – நடராஜர் தாண்டவமாடும் தில்லை திருச்சிற்றம்பலம்! Poll_c10சிதம்பரம் – நடராஜர் தாண்டவமாடும் தில்லை திருச்சிற்றம்பலம்! Poll_m10சிதம்பரம் – நடராஜர் தாண்டவமாடும் தில்லை திருச்சிற்றம்பலம்! Poll_c10 
293 Posts - 42%

287 Posts - 41%
Dr.S.Soundarapandian
சிதம்பரம் – நடராஜர் தாண்டவமாடும் தில்லை திருச்சிற்றம்பலம்! Poll_c10சிதம்பரம் – நடராஜர் தாண்டவமாடும் தில்லை திருச்சிற்றம்பலம்! Poll_m10சிதம்பரம் – நடராஜர் தாண்டவமாடும் தில்லை திருச்சிற்றம்பலம்! Poll_c10 
52 Posts - 7%

26 Posts - 4%
sugumaran
சிதம்பரம் – நடராஜர் தாண்டவமாடும் தில்லை திருச்சிற்றம்பலம்! Poll_c10சிதம்பரம் – நடராஜர் தாண்டவமாடும் தில்லை திருச்சிற்றம்பலம்! Poll_m10சிதம்பரம் – நடராஜர் தாண்டவமாடும் தில்லை திருச்சிற்றம்பலம்! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சிதம்பரம் – நடராஜர் தாண்டவமாடும் தில்லை திருச்சிற்றம்பலம்! Poll_c10சிதம்பரம் – நடராஜர் தாண்டவமாடும் தில்லை திருச்சிற்றம்பலம்! Poll_m10சிதம்பரம் – நடராஜர் தாண்டவமாடும் தில்லை திருச்சிற்றம்பலம்! Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிதம்பரம் – நடராஜர் தாண்டவமாடும் தில்லை திருச்சிற்றம்பலம்!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 22, 2013 5:55 pm

சிதம்பரம் – நடராஜர் தாண்டவமாடும் தில்லை திருச்சிற்றம்பலம்!

தென்னாற்காடு மாவட்டம் என்ற பெயரில் முன்னர் அறியப்பட்ட - தற்போதைய கடலூர் மாவட்டத்தில் இந்த சிதம்பரம் எனும் பிரசித்தமான சோழர் கால கோயில் நகரம் வீற்றிருக்கிறது. நாற்திசையிலும் நான்கு பிரம்மாண்ட கோபுர வாசல்களுடனும் வெகு விரிவான கட்டிடக்கலை அம்சங்களுடனும் காட்சியளிக்கும் ஒரு அற்புதமான கோயில் வளாகம் நடுநாயகமாக வீற்றிருக்க - அதைச்சுற்றி இந்த சிறுநகரம் உருவாகியிருக்கிறது. இக்கோயிலில் நடராஜர் என்ற பெயருடன் சிவபெருமான் குடிகொண்டுள்ளார்.
சிதம்பரம் புகைப்படங்கள் - தில்லை நடராஜர் கோயில் - கோயில் குளம்
சிதம்பரம் – நடராஜர் தாண்டவமாடும் தில்லை திருச்சிற்றம்பலம்! _13606522555

தமிழ்நாட்டில் திராவிடபாணி கோயிற்கலை அம்சங்கள் நிரம்பிய கோயிலும் அதைச்சுற்றியுள்ள நகரமும் இப்படித்தான் இருக்கும் என்பதற்கான உதாரணமாக இந்த சிதம்பரம் நகரத்தை குறிப்பிடலாம்.

பரபரப்பு மற்றும் சந்தடி ஏதுமின்றி அமைதியான சூழலைக்கொண்டிருக்கும் இந்த கோயில் நகரம் ஆன்மீக யாத்ரீகர்களுக்கும், கோயிற்கலை ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்தமான யாத்ரீக சுற்றுலாஸ்தலமாக திகழ்கிறது.
பெயர்க்காரணம்

“செல்வ நெடுமாடஞ் சென்று சேண்ஓங்கிச்செல்வ மதிதோயச் செல்வம் உயர்கின்றசெல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேயசெல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே…”

என்று திருஞானசம்பந்தர் தில்லை என்றழைக்கப்பட்ட சிதம்பரம் நகரின் புகழ் பாடியுள்ளார்.

தில்லை மரங்கள் அடர்ந்த நந்தவனப்பகுதியாக இருந்த காரணத்தால் ஆதியில் ‘தில்லை’ என்ற பெயரால் இந்த ஊர் அழைக்கப்பட்டிருக்கிறது. இந்த தில்லையில் ‘திருச்சிற்றம்பலம்’ என்ற பெயரில் அழைக்கப்பட்ட பிரம்மாண்டமான ‘நடராஜப்பெருமான் கோயில்’ வீற்றிருந்த காரணத்தால், நாளடைவில் ‘திருசிற்றம்பலம்’ என்ற கோயிலின் பெயரே ஊரின் பெயராகவும் மாறியது.

காலப்போக்கில் இது ‘சிற்றம்பலம்’ என்று மருவியும் ‘சிதம்பரம்’ என்று திரிந்தும் வழக்கு மாறியதாக சொல்லப்படுகிறது. இப்பெயருக்கு வேறு சில விளக்கங்களும் தரப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. தில்லையம்பலம் என்ற பெயரிலும் புலவர்கள் இந்நகரத்தை தங்கள் பாடல்களில் குறிப்பிட்ட்டுள்ளனர்.

ஞானகாசம், பூலோக கயிலாயம், புண்டரீகபுரம், திருச்சித்திரகூடம் போன்ற பெயர்களாலும் இது ஆன்மீகரீதியாக அறியப்படுகிறது. பெறும்பொற்றப்புலியூர் எனும் ஆதிப்பெயரும் இந்த ஊருக்கு வழங்கிவந்திருக்கிறது.
வரலாற்றுப்பின்னணி

சோழபூமியின் மிக முக்கியமான குலக்கோயில் நகரமாகவும் சோழ ராஜ வம்சத்தினரின் அடையாளத்தலமாகவும் இந்த நகரம் திகழ்ந்திருக்கிறது. இந்த தில்லை எனப்படும் திருச்சிற்றம்பலம் சோழ சாம்ராஜ்ஜியம் ஆண்ட பூமியில், கடற்கரையை ஒட்டி கொள்ளிடம் என்ற பெயரில் அழைக்கப்படும் அகண்ட காவிரியானது வங்காள விரிகுடாவில் கலக்கும் கழிமுகத்திற்கு அருகில் வீற்றுள்ளது.

சிதம்பரம் நகரத்திலிருந்து தஞ்சை ஊடாக உறையூர் வரை காவிரியையும், கொள்ளிடம் ஆற்றையும் ஒட்டி அவற்றின் படுகைப்பகுதிகளில் சோழ ராஜ்ஜியத்தின் பாரம்பரிய தடயங்கள் ஒரு பாதை போன்று படிந்து கிடப்பதை இப்பிரதேசங்களிலுள்ள ஊர்ப்பெயர்கள், அவற்றின் அமைப்பு மற்றும் புராதன ஆலயங்கள் போன்றவற்றிலிருந்து எளிதாக புரிந்து கொள்ளலாம்.

சிதம்பரத்திலிருந்து கல்லணை வரையில் கொள்ளிட ஆற்றின் வடகரையானது அக்காலத்தில் ஒரு ராஜபாட்டையாக பயன்பட்டிருக்கக்கூடும் என்பதையும் ஊகிக்க முடிகிறது.

2ம் நூற்றாண்டு தொடங்கி 13ம் நூற்றாண்டு வரை இந்த தில்லை மாநகர் சோழர்களின் முக்கிய நகரமாகவும் பிற்காலச்சோழர் காலத்தில் மண்டலத்தலைநகராகவும் திகழ்ந்திருக்கிறது.

சிதம்பரத்தில் அமைந்திருக்கும் நடராஜர் கோயில் 5 முக்கிய சிவத்தலங்களில் ஒன்றாக புராணிக ரீதியாக அறியப்படுகிறது. அதாவது பஞ்சபூத ஸ்தலங்களில் இதுவும் ஒன்று என்பது ஐதீகம்.

நீர், நிலம், காற்று, நெருப்பு மற்றும் ஆகாயம் என்பவையே அந்த பஞ்சபூதங்கள் என்பது நாம் அறிந்த ஒன்றுதான். இவற்றில் நீருக்கான ஸ்தலமாக திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலும், நிலத்துக்கான ஸ்தலமாக காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயிலும், காற்றுக்கான ஸ்தலமாக காளஹஸ்தி சிவன் கோயிலும், நெருப்புக்கான கோயிலாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலும், ஆகாயத்துக்கான கோயிலாக இந்த சிதம்பரம் நடராஜர் கோயிலும் ஐதீக மரபில் இடம் பெற்றுள்ளன.

சிவபெருமான் நடன திருக்கோலத்தில் நடராஜ ரூபமாக சிதம்பரம் கோயிலில் குடி கொண்டுள்ளார். ஏனைய சிவத்தலங்களில் சிவலிங்கமாக மட்டுமே சிவன் வணங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்த கோயிலில் சிவனும் மஹாவிஷ்ணுவும் சேர்ந்தே வீற்றிருப்பது மற்றொரு சிறப்பாக சொல்லப்படுகிறது. எனவே சைவம் மற்றும் வைணவம் ஆகிய இரண்டு ஆன்மீகப்பிரிவுகளை சார்ந்தோரும் இந்த கோயிலுக்கு விரும்பி விஜயம் செய்கின்றனர். மஹாவிஷ்ணு இக்கோயிலில் கோவிந்தராஜப்பெருமாளாக வீற்றுள்ளார்.

நடராஜர் கோயில் மட்டுமல்லாமல் இளமையாக்கினார் கோயில், தில்லைக்காளியம்மன் கோயில் போன்றவையும் சிதம்பரத்தில் அவசியம் தரிசிக்கவேண்டிய ஆன்மீக அம்சங்களாக அமைந்துள்ளன.

சிதம்பரம் நகரின் மற்றொரு சிறப்பம்சம் அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகும். பிரசித்தமான இந்த தனியார் கல்வி நிறுவனம் சிதம்பரம் நகரின் மற்றொரு அடையாளமாகவே மாறியுள்ளது.

சிதம்பரம் நகருக்கு அருகில் ராமலிங்க அடிகள் என்று அறியப்படும் வள்ளலார் அவதரித்த மருதூர் கிராமம் மற்றும் அவர் நிறுவிய சமர சன்மார்க்க சத்திய ஞானசபை அமைந்துள்ள வடலூர் நகரம் போன்றவை அமைந்துள்ளன. வடலூருக்கு அருகிலேயே இந்தியாவின் மிகப்பெரிய நிலக்கரிச்சுரங்கம் அமைந்துள்ள நெய்வேலி நகரமும் அமைந்திருக்கிறது.

சிதம்பரத்திற்கு வருகை தரும் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் இந்நகரத்திற்கு அருகிலுள்ள சிவபுரி, திருநாரையூர், காட்டுமன்னார்கோயில், ஜயங்கொண்டசோழபுரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், திருவேட்களம், திருப்புன்கூர் போன்ற ஊர்களுக்கும் சிதம்பரத்தில் இருந்தபடி விஜயம் செய்யலாம். இந்த ஊர்களில் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆலயங்கள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு அம்சத்தை விரும்புகின்றவர்கள் சிதம்பரத்திற்கு அருகிலுள்ள பிச்சாவரம் எனும் உப்பங்கழி வனப்பகுதிக்கு விஜயம் செய்து அங்குள்ள கால்வாய்களில் படகுச்சவாரியில் ஈடுபடலாம்.

இந்தியாவிலுள்ள உப்பங்கழி வனப்பகுதிகளில் இந்த பிச்சாவரம் சதுப்புநிலக்காடு முக்கியமான இயற்கை அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், வீராணம் ஏரி எனும் மிகப்பெரிய ஏரி ஒன்றும் சிதம்பரத்திலிருந்து 12 கி.மீ தொலைவில் மேற்கே உள்ளது.

காட்டுமன்னார்கோயிலுக்கு சென்று திரும்பும் வழியில் பயணிகள் இந்த ஏரியை பார்த்து ரசிக்கலாம். இவை தவிர, சிதம்பரம் நகரில் ஷாப்பிங் அம்சங்களும் நிறைந்து காணப்படுகின்றன. தங்கப்பூச்சு நகைத்தயாரிப்பில் இந்நகரம் பாரம்பரியமாக புகழ் பெற்று அறியப்படுகிறது.

சந்தடியற்ற நகரம் என்பதால் கோடைக்காலத்திலும் கூட சிதம்பரத்திற்கு சுற்றுலா மேற்கொள்ளலாம். இருப்பினும் குளிர்காலப்பருவம் கோயிற்பகுதியை நன்றாக பார்த்து ரசிக்க உகந்ததாக இருக்கும்.

சென்னையிலிருந்து 250 கி.மீ தூரத்திலேயே உள்ளதால் போக்குவரத்து வசதிகளுக்கு குறைவில்லை. ரயில் போக்குவரத்து வசதிகளும் சிதம்பரத்திற்கு நல்ல முறையில் கிடைக்கின்றன. தமிழ்நாட்டின் எந்த பகுதியிலிருந்தும் சிதம்பரத்திற்கு சுலபமாக பேருந்துகள் மூலம் வரலாம்.

தமிழ் நாட்டிலுள்ள ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு வகையில் விசேஷ அம்சங்களை கொண்டவை என்றாலும் நடனக்கோலத்தில் நடராஜராக சிவபெருமான் வீற்றிருக்கும் இந்த சிதம்பரம் நகரம் தமிழ்நாட்டில் உள்ளோர் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டிய ஆலய நகரமாகும்.

ஆன்மீக அம்சங்களை கடந்து சிதம்பரம் கோயிலில் திராவிட வரலாற்று உன்னதங்களும், கலைப்பாரம்பரியமும் ஒளிர்வதை இங்கு ஒரு முறை விஜயம் செய்தால் உணர்ந்து ரசிக்க முடியும்.

சிரமத்தை பார்க்காமல் போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்து கொண்டு சிதம்பரத்திற்கு அருகிலுள்ள எல்லா கோயில் ஸ்தலங்களுக்கும் விஜயம் செய்வது மன அமைதியை தருவதோடு மட்டுமல்லாது மண்ணின் வரலாற்றுத்தடங்களை தரிசித்த ஒப்பற்ற நிறைவையும் அளிக்கும்.

நன்றி - nativeplanet

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 23, 2013 9:12 pm

ஸ்தல புராண பகிர்வு நன்று

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக