ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

செய்யத் தகாத 16.
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

குழந்தைகளுக்கான சிறந்த மசாஜ் எண்ணெய்கள்!!!

View previous topic View next topic Go down

best குழந்தைகளுக்கான சிறந்த மசாஜ் எண்ணெய்கள்!!!

Post by மதுமிதா on Fri May 24, 2013 12:58 pm

குழந்தைகளுக்கு மசாஜ் என்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில் குழந்தைகளுக்கு மசாஜ் செய்ய செய்யத் தான், அவர்களது எலும்புகள் வலுவடைவதோடு, வளர்ச்சியும் சீராக இருக்கும். எனவே பிறந்த குழந்தைக்கு தினமும் குளிப்பாட்டுவதற்கு முன் சிறிது நேரம் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும்.

பழங்காலத்தில் எல்லாம் குழந்தைகளுக்கு என்று எந்த ஒரு எண்ணெயும் இல்லை. அப்போது வீட்டில் இருக்கும் எண்ணெய்களைக் கொண்டு தான் மசாஜ் செய்தார்கள். ஆனால் தற்போது குழந்தைகளுக்கு என்று தனி எண்ணெய் வந்ததும், இயற்கை எண்ணெய்களை பயன்படுத்துவது குறைந்துவிட்டது. இதனால் குழந்தைகளுக்கு எந்த ஒரு நன்மையும் சரியாக கிடைப்பதில்லை. எனவே எப்போது குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதாக இருந்தாலும், இயற்கை எண்ணெய்களை பயன்படுத்துங்கள். இப்போது குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதற்கு எந்த எண்ணெய்களைப் பயன்படுத்தலாம் என்று சில எண்ணெய்களை பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போம்.

காய்கறி எண்ணெய்:

சில மருத்துவர்கள் குழந்தைகளுக்கு காய்கறி எண்ணெய்களைப் பயன்படுத்தினால், சருமத்துளைகளில் எண்ணெயானது நன்கு உறிஞ்சும். வேண்டுமெனில் சிலர் குழந்தைகள் கைகளை வாயில் வைப்பார்கள் என்று பயந்து பயன்படுத்தமாட்டார்கள். உண்மையில் அந்த எண்ணெய் குழந்தைகளது வயிற்றில் சென்றால், செரிமானம் நன்கு நடைபெறும்.

தேங்காய் எண்ணெய் :

பெரும்பாலானோர் உடல் மசாஜ் என்றால் தேங்காய் எண்ணெயைத் தான் பயன்படுத்துவார்கள். அதிலும் குழந்தைகளுக்கு இந்த எண்ணெயை வெதுவெதுப்புடன் சூடாக்கி, மசாஜ் செய்தால், சருமம் நன்கு மென்மையாகவும், எலும்புகள் வலுவுடனும் இருக்கும்.

கடுகு எண்ணெய்:

தற்போது நிறைய வீட்டில் கடுகு எண்ணெயின் பயன்பாடு அதிகம் உள்ளது. மேலும் உடலுக்கு மசாஜ் செய்யவும், பலர் இதனைப் பயன்படுத்துகிறார்கள். இதனைப் பயன்படுத்துவதால், உடல் வெதுவெதுப்புடனும், எலும்புகள் வலுவுடனும் இருப்பதோடு, சளி மற்றும் ஜலதோஷம் இருந்தால், நல்ல நிவாரணமும் கிடைக்கும். குறிப்பாக இந்த எண்ணெயை குளிர்காலத்தில் பயன்படுத்துவது நல்லது. அதிலும் வெதுவெதுப்பான எண்ணெய் கொண்டு உடலுக்கு மசாஜ் செய்தால், தேவையற்ற இடங்களில் வளரும் முடியை தவிர்க்கலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு ஆரம்பத்திலேயே இந்த மாதிரியான மசாஜ் செய்தால், தேவையில்லாமல் குழந்தை அழுவதைத் தடுக்கலாம்.

ஆலிவ் ஆயில்:

ஆலிவ் ஆயில் முடியின் வளர்ச்சிக்கு சிறந்தது. ஒருவேளை குழந்தைக்கு முடி வளர்ச்சி குறைவாக இருந்தால், ஆலிவ் ஆயில் கொண்டு மசாஜ் செய்தால், முடி வளர்ச்சியானது அதிகரிக்கும். அதிலும் இந்த எண்ணெயை உடல் முழுவதும் தடவி நன்கு மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து குளிப்பாட்டினால், எலும்புகள் வலுவடைந்து, உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

இவையே குழந்தைகளுக்கு மசாஜ் செய்யப் பயன்படுத்தும் எண்ணெய்கள். ஒருவேளை குழந்தைக்கு இந்த எண்ணெயால் அரிப்பு ஏற்பட ஆரம்பித்தால், இந்த எண்ணெய்களை பயன்படுத்துவதை நிறுத்திவிடவும். முக்கியமாக, குழந்தைக்கு எந்த எண்ணெயை பயன்படுத்த நினைத்தாலும், முதலில் அவர்கள் அணிந்திருக்கும் அனைத்து ஆபரணங்களையும் அகற்றிவிட்டு, பின் தொடர வேண்டும்.

(தட்ஸ்தமிழ்)
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

best Re: குழந்தைகளுக்கான சிறந்த மசாஜ் எண்ணெய்கள்!!!

Post by யினியவன் on Fri May 24, 2013 1:16 pm

எல்லா எண்ணையும் நல்லெண்ணெய் தானே மது?

நல்ல எண்ணைப் பகிர்வு



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

best Re: குழந்தைகளுக்கான சிறந்த மசாஜ் எண்ணெய்கள்!!!

Post by மதுமிதா on Fri May 24, 2013 1:24 pm

ஆமா எல்லா எண்ணையும் சுத்தமான நல்ல எண்ணை
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

best Re: குழந்தைகளுக்கான சிறந்த மசாஜ் எண்ணெய்கள்!!!

Post by யினியவன் on Fri May 24, 2013 1:27 pm

அப்படீன்னா நல்லெண்ணெய் தசாவதாரமா? இத்தனை பேர் வெச்சிருக்காங்க



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

best Re: குழந்தைகளுக்கான சிறந்த மசாஜ் எண்ணெய்கள்!!!

Post by மதுமிதா on Fri May 24, 2013 1:35 pm

@யினியவன் wrote:அப்படீன்னா நல்லெண்ணெய் தசாவதாரமா? இத்தனை பேர் வெச்சிருக்காங்க
நல்லெண்ணெய் நு சொன்னேனா? ம் இப்பிடிலாம் மசால் வடைய இருக்குரனல தான் வீட்டுல நல்ல வாங்குறிங்க போல
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

best Re: குழந்தைகளுக்கான சிறந்த மசாஜ் எண்ணெய்கள்!!!

Post by யினியவன் on Fri May 24, 2013 1:42 pm

எந்த எண்ணையா இருந்தாலும் அது நல்ல என்னையா இருக்கனும்ல



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

best Re: குழந்தைகளுக்கான சிறந்த மசாஜ் எண்ணெய்கள்!!!

Post by அசுரன் on Fri May 24, 2013 1:42 pm

குழந்தையா பொம்மையா? இத்தணை எண்ணையும் தேலையில்லையென்றே நினைக்கிறேன். ஆலீவ் மட்டுமே போதுமானது.
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11637
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

best Re: குழந்தைகளுக்கான சிறந்த மசாஜ் எண்ணெய்கள்!!!

Post by மதுமிதா on Fri May 24, 2013 1:47 pm

@யினியவன் wrote:எந்த எண்ணையா இருந்தாலும் அது நல்ல என்னையா இருக்கனும்ல
ஆமா ஆமா அது நல்ல என்னை தான் வெளக்கென்ன இல்ல சிரிப்பு சிரிப்பு
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

best Re: குழந்தைகளுக்கான சிறந்த மசாஜ் எண்ணெய்கள்!!!

Post by யினியவன் on Fri May 24, 2013 1:51 pm

அந்த வெளக்கெண்ணையாவே இருந்தாலும் அதுவும் நல்ல எண்ணையான்னு பார்த்து வாங்குங்க மது



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

best Re: குழந்தைகளுக்கான சிறந்த மசாஜ் எண்ணெய்கள்!!!

Post by அசுரன் on Fri May 24, 2013 1:59 pm

அண்ணே வெளக்கு எண்ணையும் குழந்தைக்கு நல்லது தான் ணே. எப்படி தெரியும்னு கேக்க கூடாது ஓகேவா! சிரி
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11637
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

best Re: குழந்தைகளுக்கான சிறந்த மசாஜ் எண்ணெய்கள்!!!

Post by மதுமிதா on Fri May 24, 2013 2:02 pm

@அசுரன் wrote:அண்ணே வெளக்கு எண்ணையும் குழந்தைக்கு நல்லது தான் ணே. எப்படி தெரியும்னு கேக்க கூடாது ஓகேவா! சிரி
அத வாங்கி தான் உங்க 2 பேரு வாயிலயும் ஊற்றனும் கோபம்


Last edited by MADHUMITHA on Fri May 24, 2013 2:06 pm; edited 1 time in total
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

best Re: குழந்தைகளுக்கான சிறந்த மசாஜ் எண்ணெய்கள்!!!

Post by யினியவன் on Fri May 24, 2013 2:04 pm

கோவத்துல ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணினா நல்லால்ல மது புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

best Re: குழந்தைகளுக்கான சிறந்த மசாஜ் எண்ணெய்கள்!!!

Post by ஜாஹீதாபானு on Fri May 24, 2013 2:35 pm

பகிர்வுக்கு நன்றி மது



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30292
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

best Re: குழந்தைகளுக்கான சிறந்த மசாஜ் எண்ணெய்கள்!!!

Post by யினியவன் on Fri May 24, 2013 3:09 pm

பகிர்வுக்கு நன்றி சொல்றீங்களே பானு - எல்லா எண்ணையிலும் ரெண்டு லிட்டர் குடுத்தாங்களா?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

best Re: குழந்தைகளுக்கான சிறந்த மசாஜ் எண்ணெய்கள்!!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum