ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 !
 seltoday

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 seltoday

வேடனின் வடிவில் முருகன்
 சிவனாசான்

உலக மசாலா: சுவாரசியமான காதல்!
 சிவனாசான்

உணவுக்கு மட்டுமா உப்பு…
 சிவனாசான்

பெண் கல்விகட்டண சலுகை:பா.ஜ., தீர்மானம்
 சிவனாசான்

* கடவுளின் திருவுள்ளப்படியே உலகம் இயங்குகிறது.
 சிவனாசான்

10 நாள் திருவிழாவில், 10 ஆயிரம் நாய் பலி!
 ayyasamy ram

உலக மசாலா: என்ன கொடுமை இது?
 ayyasamy ram

பெண்களை பெண்களாகவே வளர்க்க வேண்டும்…!
 சிவனாசான்

ஆசிய ஜூனியர் மல்யுத்தம் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு தங்கம்
 ayyasamy ram

மூளைக்கு தேவை பூண்டு
 ayyasamy ram

இது மாலை நேரத்து மயக்கம்
 ayyasamy ram

பண்ணாரி பொருள் என்ன?
 ayyasamy ram

ஆன்மாவை விடுவிக்கும் கழுகு
 பழ.முத்துராமலிங்கம்

உலகத்திலேயே மிக்க ஆற்றலுள்ள கருவி…!
 Mr.theni

முதியோர் காதல்
 பழ.முத்துராமலிங்கம்

அழிவை நோக்கி நியூட்டன் ஆப்பிள் மரம்
 ayyasamy ram

வேஷம் – கவிதை
 பழ.முத்துராமலிங்கம்

வெஜிடபிள் பிரெட்
 ayyasamy ram

ஆழ்கடல் அதிசயம் – ஹைக்கூ
 பழ.முத்துராமலிங்கம்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 Mr.theni

ஜோக்ஸ்
 பழ.முத்துராமலிங்கம்

பெற்றோர்கள்+குழந்தைகள்
 Mr.theni

பபுல் கம்மை விழுங்கினால்…!
 பழ.முத்துராமலிங்கம்

மகளிருக்கான டிப்ஸ்..
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமான விடுகதைகள்
 ayyasamy ram

வீட்டுக்குறிப்பு
 ayyasamy ram

ஹார்மோன் பிரச்சனையா? இதோ வந்தாச்சு தீர்வு!
 ayyasamy ram

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 Mr.theni

``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 SK

பூங்கொத்து விளையாட்டு
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ஜாஹீதாபானு

ஏழு தாளங்கள்
 SK

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சினி துளிகள்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தாயிற் சிறந்ததொரு கோயிலு மில்லை...!

View previous topic View next topic Go down

தாயிற் சிறந்ததொரு கோயிலு மில்லை...!

Post by சாமி on Mon May 20, 2013 10:29 pm

"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்'' என்றும்,

""தாயிற் சிறந்ததொரு கோயிலு மில்லை; தாய்சொல் துறந்தால் வாசக மில்லை'' என்றும் தாயின் பெருமை பேசியவர் ஒüவையார். தன் பிள்ளைக்காக தன்னையே முழுமையாக அர்ப்பணித்து, தியாகம் செய்யக்கூடியவள் தாய் ஒருத்திதான்.

÷ஒவ்வொரு தாயும் ஒரு மகவைப் பெறும்போது மரண வேதனையை அனுபவிக்கிறாள்; மறுபிறவி எடுக்கிறாள். தன் ரத்தத்தைப் பாலாக்கித் தரும் ஓர் உன்னதமான - அற்புதமான சக்தியை கடவுள் மனித உயிர்களில் தாய்க்குத்தான் வழங்கியுள்ளார்.

""மாதா உடல் சலித்தாள்; வல்வினையேன் கால்சலித்தேன்;
வேதாவும் கைசலித்து விட்டானே - நாதா
இருப்பையூர் வாழ்சிவனே! இன்னம்ஓர் அன்னைக்
கருப்பையூர் வாராமல் கா!''


எனக் கதறி அழுதவர் பட்டினத்தடிகள். காரணம், மறுபிறவி வாய்த்தால் அப்போதும் ஒரு தாய்க்கு (மரண வேதனை) வேதனை தரவேண்டுமே; அந்த வேதனையை, என்னைச் சுமப்பதால் ஒரு தாய்க்குத் தந்துவிடக்கூடாதே என்பததால்தான் மறுபிறவிக்கு அஞ்சினார். இப்பிறவி தாய்க்கு மட்டுமல்ல இனி அடுத்தடுத்த பிறவி வாய்த்தால் அந்தத் தாய்க்கும் நான் மரண வேதனையைத் தந்துவிடக்கூடாது; அதனால் எனக்குப் பிறவியே வேண்டாம்' என்று இருப்பையூர் சிவனை வேண்டிநின்றார்.

ஒவ்வொரு குழந்தையைப் பெறும்போதும் ஒவ்வொரு அன்னையும் ஒவ்வொரு மறுபிறவி எடுக்கிறாள். ஒரு பிள்ளையைப் பெற்றெடுக்க ஓர் அன்னை படும் துன்பம் சொல்லில் அடங்காதவை. கடவுள், தான் பூவுலகில் வந்து செய்ய முடியாத பல செயல்களை தாயின் மூலம்தான் நிறைவேற்றுகிறான் என்றுகூடக் கூறுவார்கள். ஒவ்வொரு நாளும் தன் தாயின் திருவடிகளை வணங்குபவரை எல்லாத் தேவதைகளும், தெய்வங்களும் ஆசீர்வதிக்கின்றனவாம். கடவுளை வணங்காதவராக - கடவுள் மறுப்பாளர்களாக இருந்தாலும்கூட அவர் தன் தாயின் திருவடிகளை வணங்கி, ஆசிபெற்றால் எல்லாத் தெய்வங்களும் அவர்களையும் ஆசீர்வதிக்கின்றனவாம் - இது இந்துமதம் கூறும் உண்மை.

சைவத் திருமுறை அருளாளர்களையும், வள்ளுவர், வள்ளலார், கிருபானந்தவாரியார், தாயுமானவர், பட்டினத்தடிகள், பாம்பன் சுவாமிகள் முதலிய (கூறினால் பட்டியல் நீளும்) பல அருளாளர்களையும் ஞானிகளையும், மேதைகளையும், இவ்வுலகுக்கு ஈந்த அன்னையர் போற்றப்பட வேண்டியவர்கள் அல்லவா? பெருமைக்குரியவர்கள் அல்லவா?

குமரகுருபர சுவாமிகள்,
""பாலூண் குழவி பசுங்குடர் பொறாதென
நோயுண் மருந்தைத் தாயுண் டாங்கு''


என்று பாடியுள்ளார். பட்டினத்தடிகளோ,
""முந்தித் தவங்கிடந்து முந்நூறு நாளளவும்
அந்திபக லாய்ச்சிவனை ஆதரித்துத் - தொந்தி
சரியச் சுமந்துபெற்ற தாயார்''
என்றும்,

""ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்துபெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் - செய்யஇரு
கைப்புறத்தி லேந்திக் கனகமுலை தந்தாள்''
என்றும்,

""வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து - முட்டச்
சிறலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டுந் தாய்''

என்றெல்லாம் தாயின் பெருமையைப் பாடியுள்ளார்.

"" பெண்ணின் பெருந்தக்க யாவுள'' என்றும்,
""ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்''

என்றும் போற்றினார் வள்ளுவப் பெருந்தகை.

தன் குழந்தைகள் எவ்வளவுதான் தவறுகள் செய்தாலும் அவற்றையெல்லாம் மன்னித்து, அரவணைத்து, அவர்கள் நன்மக்களாய் வளர வேண்டும்; அனைத்து நலன்களையும் பெற்று இன்புற்றிருக்க வேண்டும்; பேரும் புகழும் பெறவேண்டும் என்றெல்லாம் நினைப்பவள் அன்னை ஒருத்தி மட்டும்தான். இந்த உள்ளம் உலகில் வேறு எவர்க்கும் வாய்க்காதது.

""இந்த உலகில் முதலில் கண்கண்ட தெய்வமாக விளங்குபவள் மாதாதான். ஆசிரியரைவிடப் பத்து மடங்கு அதிகம் ஆசார்யன். (உயிர் மேற்கதியடைய தீட்சை தரும் சமய குருநாதர் ஆசார்யன்). ஆசார்யனைவிட நூறு மடங்கு அதிகம் தந்தை. தந்தையைவிட ஆயிரம் மடங்கு அதிக மகத்துவமும் பெருமையும் உடையவள் தாய். இணையில்லாத இன்ப அன்புக்கு உரியவள் மாதாவாகும்'' என்றார் கிருபானந்தவாரியார்.

தாயின் பெருமையை வள்ளலார் சுவாமிகள் பின்வருமாறு எடுத்தோதுகிறார்:
"வன்மை யறப்பத்து மாதஞ் சுமந்துநமை
நன்மை தரப்பெற்ற நற்றாய்காண் - மன்னுலகில்
மூளும் பெருங்குற்றம் முன்னிமேன் மேற்செயினும்
நாளும் பொறுத்தருளும் நற்றாய்காண் - மூளுகின்ற
வன்னெறியிற் சென்றாலும் வாவென் றழைத்துநமை
நன்னெறியிற் சேர்க்கின்ற நற்றாய்காண் -
காலம் அறிந்தே கனிவோடு நல்லருட்பால்
ஞால மிசையளிக்கும் நற்றாய்காண்
வெம்பிணியும் வேதனையும் வேசறிக்கை யுந்துயரும்
நம்பிணியும் தீர்த்தருளும் நற்றாய்காண்
வாடியழு தாலெம் வருத்தந் தரியாது
நாடி எடுத்தணைக்கும் நற்றாய்காண்''


இத்தகைய தாயைப் போற்றுவதே நமது முதற் கடமையாகும். அன்றி, அவள் மனம் நோக வேதனைப்பட வைப்பது தகாத செயலாகும். அன்னை சிந்தும் கண்ணீருக்கு இறைவன் உடனுக்குடன் பதில் தந்துகொண்டிருக்கிறான் என்பார்கள் ஆன்றோர்கள்.

""பெண்மைக்குள்ள பெருமை யாது? பெண்மையின் மாட்டு உலக வளர்ச்சிக்குரியதும் தொண்டுக்குரியதுமாய் "தாய்மை'
பொலிதலான். அது பெருமையுடையதாகிறது. பெண்மைக்குள்ள பெருமையெல்லாம் தாய்மையாலென்க. தாய்மையில் நிலவுவது இறைமை. அவ்விறைமை பெண்மையின் முடிந்த நிலையாகும்.

இறை எது? சமய நூல்கள் பலவாறு கூறும். அக்கூற்றுக்களை ஈண்டு ஆராய வேண்டுவதில்லை. பொய், பொறாமை, அவா, சீற்றம், தன்னலம் முதலியவற்றைக் கடந்த ஒன்று இறை என்பது. ஒருவர் உள்ளத்தில் அன்பு நிகழும்போது இப்பொய், பொறாமை முதலியன நிலவுமோ? பொய், பொறாமை, அவாவால் எரியும் ஒருவன் உள்ளத்தில் அன்பு ஒதுங்கி நிற்றல் ஒவ்வொருவர் அநுபவத்தால் உணரக்கூடியது. அன்பு என்பது பொய், பொறாமை முதலியவற்றைக் கடந்து நிற்பது என்று தெரிகிறது. பொய், பொறாமை முதலியவற்றைக் கடந்து நிற்கும் ஒன்றே இறை என்றுஞ் சொல்லப்படுகிறது. ஆகவே இறையே அன்பு; அன்பே இறையாதல் காண்க.

பெண், பிள்ளை பெற்றதுந் தாயாகிறாள். அத்தாய் பிள்ளையை வளர்க்கப் புகுங்கால் அவள் உள்ளத்தில் இறைமைக்குரிய நீர்மைகளெல்லாம் பதிகின்றன. தொண்டு, தியாகம், தன்னல மறுப்பு அவர் மாட்டு அரும்புகின்றன. கைம்மாறு கருதிக் குழந்தைக்குத் தாய் தொண்டு செய்வதில்லை. தனக்குள்ள எல்லாவற்றையும் சமயம் நேரின் உயிரையும் பிள்ளை நலத்துக்குக் கொடுக்கத் தாய் விரைந்து நிற்கிறாள். தன்னலங்கருதிக் குழந்தையை வளர்க்குந் தாய் யாண்டுமிராள். பயன் கருதாத் தொண்டு, தியாகம், தன்நல மறுப்பு முதலியன சேர்ந்த ஒன்றே "தாய்மை' என்க. இந்நீர்மைகள் உள்ளவிடத்தில் பொறாமை, அவா முதலியன இரும்புண்ட நீர் போல ஒடுங்கிப் போகின்றன. இந்நிலை பெற்ற தாயுள்ளத்தில் என்ன நிலவும்? அன்பாய் இறையன்றோ நிலவும்? தாயுள்ளத்தில் அன்பே ஊர்ந்து கொண்டிருத்தலால் அன்புக்கு எடுத்துக் காட்டாகத் தாயன்பையே கொள்வது ஆன்றோர் வழக்கம். தாய் எனினும் அன்பெனினும் ஒக்கும்'' என்றும், ""பெண்ணுக்கு மதிப்பு கொடுங்கள்; உரிமை கொடுங்கள்; வணக்கஞ் செலுத்துங்கள். பெண்ணை மதித்துப் போற்றலே நாகரிகம். அவளைக் கட்டுப்படுத்தல், அடிமைப்படுத்தல், கொடுமையாக நடத்தல் அநாகரிகம். பெண் மகளாகத் தோன்றினாள்; மனைவியாக வாழ்கிறாள்; தாயாகத் தொண்டு செய்தாள். இப்போது தெய்வமாகக் காட்சியளிக்கிறாள். உலகீர்! தெய்வம் தெய்வம் என்று எங்கு ஓடுகிறீர்? இதோ தெய்வம் - பெண் தெய்வம், காணுங்கள்; கண்டு வழிபடுங்கள்! என்கிறார் "தமிழ்த் தென்றல்' திரு.வி.க. (நூல்: பெண்ணின் பெருமை).

""தாயை அழவிடாதீர்கள்; ஏனெனில், அவள் கண்ணீரை ஆண்டவன் எண்ணிக் கொண்டிருக்கின்றான்'' என்று ஓர் அறிஞர் கூறியிருக்கிறார்.

""மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னவரும்
பண்கண்டளவிற் பணியச் செவ்வாய்ப்படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்டேனும் விளம்பிலுன்போற்
கண்கண்ட தெய்வ முளதோ சகலகலாவல்லியே''


என்று குமரகுருபரர் அன்னை கலைமகளை கூறிய இவ்வாக்கு, "கண்கண்ட தெய்வமாக' ஒவ்வொரு இல்லத்திலும் குடியிருக்கும் அன்னையர்க்கும் பொருந்தும்.

அன்னையைப் போற்றுவோம்... நம்மைப் பிறர் "சான்றோன்' எனக் கூறவைத்து பெற்ற அன்னைக்குப் பெருமை சேர்ப்போம்! எங்கும் பெண்மை பொலியட்டும்; எங்கும் தாய்மை ஓங்கட்டும்! எங்கும் இறைமை வாழட்டும்! இது அரசர்கள் ஆண்ட பூமி மட்டுமல்ல; அன்னையர் ஆண்ட - ஆட்சி செய்துகொண்டிருக்கும் புண்ணிய பூமியும்கூட! "எத்தனை கோடி அன்னையர் இந்தப் புண்ணிய பூமியில் பிறந்தனரோ, அனைவருக்கும் நம் சிரம்தாழ்ந்த வணக்கங்கள்!

( நன்றி-தினமணி)
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2398
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum