ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2)

View previous topic View next topic Go down

அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2)

Post by ராஜு சரவணன் on Fri May 17, 2013 9:42 pmபாகம் -1

விண்வெளியில் தற்போது ஆராய்சிகளை மேற்கொண்டு வரும் விண்தளம் தான் அனைத்துலக விண்வெளி நிலையம் இதை நம் தமிழில் அவிநி அல்லது அவிநியம் என்று அழைக்கலாம். சுமார் 15 நாடுகள் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன மேலும் இந்திய இந்த திட்டத்தில் இல்லை.

விக்கிபீடியா

சரி மேற்கொண்டு இந்த திட்டத்தை பற்றி விரிவாக பாப்போம்.

அமெரிக்கா தான் தனது கனவு திட்டமான அனைத்துலக விண்வெளி நிலையத்தை - அவிநியம் (ISS) உருவாக்க முதன் முதலில் அடிகோலியது.1984 ஆம் ஆண்டில், ரொனால்ட் ரீகன், அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி விண்வெளியில் மனிதர்கள் தங்கி ஆராய்ச்சி நடத்த ஒரு தளத்தை உருவாக்க தனது ஆதரவை அறிவித்தார். அவர் இந்த திட்டத்தை சர்வதேச நாடுகளும் புரிந்துகொண்டு ஒத்துழைப்பு நல்கவேண்டும் என்று அணைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுத்தார்.1985-ல் அமெரிக்காவின் அழைப்பு மூலம், ஐரோப்பிய நாடுகள், கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இந்த திட்டத்தில் இணைந்துகொள்ள முடிவு செய்தனர். 1993 இல், ரஷ்யாவும் இத்திட்டத்தில் தன்னையும் இணைத்து கொண்டது. இப்போது 15 நாடுகள் இத்திட்டத்தில் பங்கு வகுக்கின்றன. உண்மையிலேயே இது தற்போது ஒரு பெரிய உலக திட்டமாக மாறிவிட்டது.

அனைத்துலக விண்வெளி நிலைய (ISS) திட்டத்தில் பங்கேற்கும் 15 நாடுகளின் பிரதிநிதித்தும் பின்வரும் படத்தின் மூலம் அறியலாம்.

ஒவ்வொரு நாட்டின் பங்கு பற்றி மேலும் அறிய ஒவ்வொரு நாட்டின் கொடி மேல் கர்சரை நகர்த்துங்கள்.இது ஒரு விண்வெளி சோதனை தளம், எழு விண்வெளி வீரர்கள் விண்வெளியில் தங்கி தங்கள் சோதனைகளை பாதுகாப்புடன் மேற்கொள்ள சோதனை சாலைகள் உள்ளன. அவிநியில் இருவித தொகுதிகள் (Module) உள்ளன,.ஆராய்ச்சி மற்றும் பரிசோதனைகள் செய்ய "பரிசோதனை தொகுப்பு" , விண்வெளி வீரர்கள் தங்க "உறைவிட தொகுப்பு" உள்ளன. இந்த நிலையத்திற்கு வேண்டிய மின்சாரம் சூரிய சக்தி மூலம் பெறப்படுகிறது. மேலும் அவிநியில் உள்ள "தொலைமுக கையாளும் அமைப்பு (Remote Manipulator System) நிலையத்தின் வெளிப்புறத்தில் செய்ய வேண்டிய வேலைகளுக்காக பயபடுதப்படுகிறது.

கர்சரை கிழே உள்ள படத்தில் நகர்த்துவதன் மூலம் ஒவ்வொரு "தொகுப்பு(Module)" பற்றி பார்க்கலாம்.அவிநி எந்தளவிற்கு பெரியது எவ்வளவு எடையுள்ளது

கட்டுமானம் முடிந்தவுடன் அவிநி (ISS) 72,8 மீட்டர் X 108,5 மீட்டர் பரிமாணம்(Dimension) கொண்டதாக இருக்கும். முழு அளவிலான கால்பந்து மைதானத்தை விட சற்று பெரியதாக இருக்கும். எடை 450 டன் எடை கொண்டதாக இருக்கும் . ஒரு சிறிய பயணிகள் கார் சுமார் 1 டன் எடையுள்ளதென்றால், அது ஒரு காரை போல் 450 மடங்கு எடை கொண்டாதாக இருக்கும்.

அளவு

அனைத்துலக விண்வெளி நிலையம் (108.5m x 72.8m)
கால்பந்து மைதானம்(105m x 68m)எடை

அனைத்துலக விண்வெளி நிலையம் - 450 டன்
சிறிய கார் - 450 கார்கள்பாகம் -2

சர்வதேச நிலையம் தனி தனி பாகங்களாக செய்யப்பட்டு விண்வெளியில் ஒன்றிணைக்கப்படுகிறது.

அவிநி (ISS) யை ஒரே ராக்கெட் மூலம் பூமியில் இருந்து விண்வெளிக்கு கொண்டு செல்ல முடியாது. எனவே அது பல பிரிவுகளாக (தொகுதிகள்) பிரிக்கப்பட்டு மேலும் அந்த பிரிவுகள் ரஷ்சியவின் புரோட்டான் ராக்கெட்டுகள் மற்றும் அமெரிக்க விண்வெளி ஓடம் மூலம் பூமியில் இருந்து விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவை ஒன்றிணைக்கப்படுகிறது. மொத்தம் 40 விண்வெளி ஓடங்கள் இந்த பணியை செய்ய பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட பிரிவுகள் விண்வெளியில் ஒன்றிணைக்கப்பட்டு மாபெரும் விண்வெளி நிலையமாக உருவெடுக்கிறது .

1998 இல் இந்த பனி தொடங்கப்பட்டு மே 2011 இல் முடிவுற்றது .


ஒவ்வொரு பிரிவுகளின் பெயர்கள்:1) ஜர்யா கட்டுபாட்டு தொகுதி (Zarya Control Module)

2) கணு-1 (Node 1 - Unity)

3) அழுத்த இணைபொருத்தி ( Pressurized Mating Adapters - பம)

4) சவீஸ்ட சேவை தொகுதி ( Zvezda Service Module)

5) Z1-டிரஸ் (Z1-Truss)

6) விதி ஆய்வுகூட தொகுதி (Destiny Laboratory Module - U.S. Lab)

7) கனடா கரம்-2 (Canadarm2 -SSRMS)

8) வளிபுகா இணைப்பு (Joint Airlock - Quest)

9) வின்முக அறைகள் (Docking Compartment 1 - Pirs)

10) நகரும் அடியமைப்பு (Mobile Base System -MBS)

11) கணு-2 (Node 2 - Harmony)

12) கொலம்பஸ் ஆய்வகம் (Columbus Laboratory)

13) கிபோ ஆய்வகம் (Kibo laboratory)

14) சிறு ஆராய்ச்சி தொகுதி -2 (Mini Research Module-2 - Poisk)

15) கணு-3 (Node 3 - Tranquility)

16) குபோல - Cupola

17) சிறு ஆராய்ச்சி தொகுதி -1 (Mini Research Module-1 - MRM-1)

18) நிரந்தர பல்நோக்கு தொகுதி (Permanent Multipurpose Module (PMM)

ஜர்யா கட்டுபாட்டு தொகுதி (Zarya Control Module)
இது அவிநி திட்டத்தில் அனுப்பப்பட்ட முதல் தொகுதியாகும் (Module), மேலும் இது சரக்கு செயல்பாட்டு தடுப்பு (Functional Cargo Block - FGB) என்றும் அழைக்கப்படுகிறது.அமெரிக்கா இதற்கான நிதியை வழங்கியது, ரஷ்யா இதனை கட்டுமானம் செய்தது. இந்த தொகுதி அவிநியின் ஆரம்பக்கால கட்டுமானங்களுக்கு தேவையான மின்சாரம், மிதக்கும் கட்டுபாடு போன்றவைகளுக்கு பயன்படுத்தப்பட்டது. மேலும் அவிநிக்கு தொடர்ச்சியாக பூமியில் இருந்து கொண்டுவரப்படும் சரக்குகளை சேமிக்கும் இடமாகவும் பயன்படுத்தபடுகிறது.

அவிநி சேர்மான திட்டம் - 1 A/R
செலுத்து வாகனம் - ப்ரோடான் ராக்கெட்
செலுத்து நாள் - 20 நவம்பர் 1998
நீளம் - 41.2 அடி
குறுக்களவு - 13.5 அடி
எடை - 19.3 டன்

கணு -1 (ஐக்கியம்)
இந்த கனு(Node) ஐக்கியம்(Unity) என்றும் அழைக்கபடுகிறது. முதன்முதலில் அமெரிக்காவால் அவிநிகென்று தயாரிக்கப்பட்ட பாகமாகும், இது ஒரு அழுத்தமிகு தொகுப்பு (Pressurized Module).இந்த தொகுப்பில் ஆறு பொதுவுறக்க பொறியம் (Machanism) - CBM உள்ளது. இந்த ஆறு CBM களும் முனை மூலம் ஒன்றோடு ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது.

இரண்டு அழுத்தமிகு தொகுப்புகள் (PMA -1 மற்றும் PMA -2) கணு-1 டுடன் இயக்கப்படுகின்றது. PMA -1 ஆனது ஜர்யா கட்டுபாட்டு தொகுதியையும் கணு -1 தொகுதியையும் இணைக்கும் அழுத்தமிகு பாதையாக (pressurized tunnel) செயல்படுகிறது. PMA -2 வானது அமெரிக்க விண்வெளி ஓடத்தை நிறுத்தும் வின்முகமாக செயல்படுகிறது.கணு-1 நான்கு நிலையான பேலோடு அலமாரிகள் கொண்டுள்ளது.

அவிநி சேர்மான திட்டம் - 2A
செலுத்து வாகனம் - எண்டோவர் விண்வெளி ஓடம் - Space Shuttle Endeavour (STS-88)
செலுத்து நாள் - 4 டிசம்பர் 1998


பாகம்-3 தொடரும்...


(இந்த கட்டுரை குறிப்பாக மாணவ மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்)


Last edited by ராஜு சரவணன் on Fri Jun 07, 2013 10:35 am; edited 10 times in total

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2)

Post by யினியவன் on Fri May 17, 2013 9:46 pm

சூப்பருங்க - தொடருங்கள் ராஜூ - ஆனா நமக்கு தான் இதெல்லாம் விளங்காது புன்னகை

யாரையாவது கிழங்கு வகைகளை அவிக்க சொன்னா - எலே இதை அவிநீ ன்னு சொல்லத் தெரியும் - அவ்ளோதான்avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2)

Post by ராஜு சரவணன் on Fri May 17, 2013 9:52 pm

@யினியவன் wrote:சூப்பருங்க - தொடருங்கள் ராஜூ - ஆனா நமக்கு தான் இதெல்லாம் விளங்காது புன்னகை

யாரையாவது கிழங்கு வகைகளை அவிக்க சொன்னா - எலே இதை அவிநீ ன்னு சொல்லத் தெரியும் - அவ்ளோதான்

இனிமேல் அவிநின்னு சொன்ன எல்லாம் மேல பாபாங்க பாஸ் புன்னகை

மேலும் அவிநி (அ) அவிநியம் என்பது தமிழுக்கு கிடைத்திருக்கும் புதிய கலைச்சொல்.


Last edited by ராஜு சரவணன் on Fri May 17, 2013 10:01 pm; edited 1 time in total

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2)

Post by யினியவன் on Fri May 17, 2013 10:00 pm

அவிநியத்தில போயும் கிழங்கை அவிப்போம்ல புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2)

Post by ராஜு சரவணன் on Fri May 17, 2013 10:22 pm

உங்கள் துறை என்ன இனியவன் அது தொடர்பா ஓரு பயனுள்ள பதிவை நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து போடலாமுல்லா

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2)

Post by யினியவன் on Fri May 17, 2013 10:43 pm

நம்ம துறை இப்ப மேனேஜ்மன்ட் தான் ராஜூ - பெரிசா ஒன்னும் இல்லைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2)

Post by ராஜு சரவணன் on Fri May 17, 2013 10:53 pm

@யினியவன் wrote:நம்ம துறை இப்ப மேனேஜ்மன்ட் தான் ராஜூ - பெரிசா ஒன்னும் இல்லை

பாஸ் பெருசா ஒண்ணுமில்லை என்பது உங்க பெருந்தன்மை, ஆனா ஒரு நிறுவனத்தின் முதுகெலும்பே மேலாண்மை தான் , அது இல்லாட்டி எங்களுக்கு எப்படி வேலை கிடைக்கும். ஆடர் புடிக்கிறவங்குளும் நீங்கதான் காச வாடிகையாளர்களிடம் இருந்து வசூல் செய்வதும் நீங்கதான்.

மற்றவரை தட்டி கொடுத்து , உசுபேத்தி வேலை வாங்குவதும் நீங்கதான். என்னையும் தான்.....

புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2)

Post by யினியவன் on Fri May 17, 2013 11:01 pm

விஷயம் தெரிஞ்சிருச்சா - உசுப்பேத்தி வேலை வாங்குறோம்ன்னு புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2)

Post by ராஜு சரவணன் on Fri May 17, 2013 11:04 pm

@யினியவன் wrote:விஷயம் தெரிஞ்சிருச்சா - உசுப்பேத்தி வேலை வாங்குறோம்ன்னு புன்னகை

இந்த முதலாளிகளே இப்படி தான் புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2)

Post by யினியவன் on Fri May 17, 2013 11:06 pm

அட நீங்க வேற முதலாளி எல்லாம் இல்ல நாங்க - நாங்களும் கூலிக்கு தான் மாரடிக்கிறோம் புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2)

Post by ராஜு சரவணன் on Fri May 17, 2013 11:09 pm

ஒரு சூப்பரான மேலாண்மை பற்றிய தகவலை நிச்சயம் போடுவோம் பாஸ். அதற்க்கு உங்க உதவி தேவை. புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2)

Post by யினியவன் on Fri May 17, 2013 11:11 pm

பக்க வாத்தியம் நல்லாவே நாங்க வாசிப்போம் - ஆரம்பிங்க புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2)

Post by ராஜு சரவணன் on Fri May 17, 2013 11:45 pm

கட்டுரை புதுப்பித்தல் எண் -1


ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2)

Post by ராஜு சரவணன் on Sat May 18, 2013 11:28 am

SWF புதுப்பித்தல் செய்து விட்டேன்.

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2)

Post by யினியவன் on Sat May 18, 2013 11:30 am

அபாரம் பட்டய கெளப்புங்க ராஜூavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2)

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sat May 18, 2013 11:52 am

மிகவும் நல்ல அறிவியல் பதிவு.
வி. பொ. பா ...ராஜு மகிழ்ச்சி
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5301
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2)

Post by ராஜு சரவணன் on Sat May 18, 2013 12:09 pm

@Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நல்ல அறிவியல் பதிவு.
வி. பொ. பா ...ராஜு மகிழ்ச்சி

நன்றி அய்யா,

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த அனைத்துலக விண்வெளி நிலையம் பற்றி நானாகவே ஒரு கட்டுரை எழுதும் போது இதற்க்கு ஆங்கிலத்தில் உள்ளது போல் சவிநி (சர்வதேச விண்வெளி நிறுவனம்) என்று அழைக்கலாமா என்று யோசித்தேன். இப்போது விக்கிபிடியாவில் பார்த்த போது அதற்கு அவிநி என்ற பெயரை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைதேன்.

உண்மையில் நல்லதொரு கலைச்சொல் இது. நம் இலக்கண விதி படி அவிநி என்று ஒரு சொல்லாக அழைக்காலாமா அல்லது ஆவினி என்று அழைக்காலாமா?

அவிநி என்ற கலை சொல்லை பற்றிய தங்களின் கருத்து என்ன?

(கடைசியில் இந்த வி. பொ. பா பற்றி சொல்லுங்கள் இல்லை என்றால் இனியவன் இதை வைத்து புள்ளி கோலம் போட்டு விடுவார்)

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2)

Post by யினியவன் on Sat May 18, 2013 12:14 pm

விருப்பப் பொத்தானை பாவித்தேன்னு சொல்லுறார்.

கோலம் போடலேன்னா எப்படி?

விறு விறுன்னு பொழந்து பாட்டு கட்டிட்டேன்னு சொல்லுவோமா?avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2)

Post by ராஜு சரவணன் on Fri Jun 07, 2013 10:36 am

நண்பர்களே இந்த தொடரில் பாகம் -2 சேர்கப்பட்டுள்ளது.

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2)

Post by பூவன் on Fri Jun 07, 2013 10:59 am

தெரியாத அறியாத அறிவியல் தகவல்கள் , நன்றி நண்பரே ... சூப்பருங்க
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2)

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum